CHAPTER-36

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
அவ‌ள் பின் ம‌ண்டையை இழுத்து பிடித்து, அவ‌ள் இதழ் சுழையை அழுத்தி சுவைக்க‌ துவ‌ங்கிய‌வ‌ன், த‌ன் உட‌லில் மிச்ச‌மிருந்த‌ மோக‌ம் மொத்த‌த்தையும் தீர்த்து முடிக்கும் நோக்கில், ஆழம் வரை நுழைந்து முழு தேனையும் உறிஞ்சி எடுத்த பிற‌கே மெதுவாய் இதழை வில‌க்கினான்.

அதில் அவள் மூச்சு வாங்க‌ மெல்ல‌ பிரிந்து அத்த‌னை ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, அவ்விழிக‌ளில் அழுத்த‌ம் கொடுத்து, "டென் மினிட்ஸ்தா உன‌க்கு டைம்." என்றான் ருதன்.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் இத‌யம் துடிப்பையே நிறுத்த, "அதுக்குள்ள என்ன‌ ப‌ண்ணணுமோ ப‌ண்ணிக்கோ. ப‌ட் ரெடியா இருக்க‌ணும்." என்று அத்த‌னை அழுத்த‌மாய் கூறிவிட்டு எழுந்தான்.

அதில் அவ‌ள் மொத்த‌ உட‌லும் அதிர்வை உண‌ர‌, அவ‌னையே பார்த்தாள். அவ‌னோ கூலாய் த‌ன் ம‌ணிக‌ட்டை உய‌ர்த்தி த‌ன் க‌ருப்பு வாட்சில் நேர‌த்தை பார்த்தப‌டி, "யுவ‌ர் டைம் ஸ்டார்ட்ஸ் ந‌வ்." என்றப‌டியே திரும்பி குளிய‌ல‌றைக்குள் புகுந்தான்.

அவ‌ன் உள்ளே சென்று க‌த‌வை அடைத்த‌ நொடிதான் திடுக்கிட்டு தெளிந்த‌ இவ‌ளின் க‌ண்ணீர் பொழ‌பொழ‌வென்று வெளியில் வ‌ர‌, தன் கால்களை மடக்கி கட்டிக்கொண்டு க‌த‌றி அழ‌ ஆர‌ம்பித்தாள். ஏன்தான் த‌ன‌க்கு ம‌ட்டும் இந்த‌ நிலை. ஒரு அர‌க்க‌னிட‌மிருந்து த‌ப்பி அர‌க்க‌ குள‌ அர‌ச‌னிட‌மே வ‌ந்து மாட்டிய‌துப்போல் இருந்த‌து. இங்கும் த‌ன் உண‌ர்வுக‌ளுக்கு ம‌திப்பில்லை. இனி சித்திர‌வ‌தைக‌ளுக்கும் ப‌ஞ்ச‌ம் இருக்க‌ போவ‌தில்லை என்று தோன்ற‌, அப்படியே த‌ன் கால்க‌ளுக்குள் முக‌த்தை புதைத்து க‌த‌றி அழுதாள் அவ‌ள்.

இங்கே த‌ன் ஆடையைக்கூட‌ க‌ழ‌ற்றாம‌ல் அப்ப‌டியே ஷ‌வ‌ர‌டியில் நின்றிருந்த‌வ‌னின் மோக‌ம் இன்னுமே இற‌ங்காதிருக்க‌, அந்த‌ நீர் நிர‌ம்பி வ‌ழிகின்ற‌ அவ‌ன் இமைக‌ளின் உள்ளே அந்த‌ விழிக‌ளில் இன்னுமே மோக‌ம் அன‌ல்விட்டு எரிந்த‌து. அவ‌னின் சுவாச‌ம் மொத்த‌மும் சூடாய்தான் வெளியில் வ‌ர‌, அதை இழுத்து பிடித்து த‌ன‌க்குள் அட‌க்க‌ முய‌ன்ற‌வ‌னின் ஈர‌ இத‌ழ் மெல்லிய‌தாய் பிரிந்து மூச்சு வாங்கிய‌து. அந்த‌ முர‌ட்டு இத‌ழ்க‌ளில் வ‌ழிந்து ஒழுகும் நீர்கூட‌ அவ‌ளிட‌ம் ப‌ருகிய‌ தேனமுதையே நினைவூட்ட‌, அதை இழுத்து மூடி தொண்டைக்குள் இற‌க்கிய‌வ‌ன், அப்ப‌டியே அழுத்தி விழி மூடினான். முத‌ல் முறையாய் த‌ன் உண‌ர்வுக‌ளை அட‌க்க‌ முடியாம‌ல் போராடினான். இது அவ‌னுக்கே முற்றிலும் புதிதான‌ உண‌ர்வு.

வெளியே அவ‌ளிட‌ம் ப‌த்து நிமிட‌ம் என்று கூறிவிட்டான் தான். ஆனால் அவ்வ‌ள‌வு நேர‌ம் இவ‌னால் தாக்கு பிடிக்க‌ முடியுமா என்றுதான் தெரிய‌வில்லை. இப்போதே அவ‌ன் உண‌ர்வுக‌ள் அனைத்தும் அவ‌ள் ஸ்ப்ரிச‌ம் வேண்டி உள்ளுக்குள் தீயாய் போரிட‌ துவ‌ங்கியிருக்க‌, மொத்த‌ உட‌லையும் இறுக்கி த‌ன்னை முழுதாய் க‌ட்டுப்ப‌டுத்த‌ முய‌ன்றான். அப்ப‌டியே அந்த‌ ஷ‌வ‌ர் நீர் அவ‌ன் உட‌லை முழுதாய் க‌ழுவி செல்ல‌, சில‌ நிமிட‌ம் அப்ப‌டியே நின்றிருந்தவ‌ன், மெதுவாய் ஷ‌வ‌ரை அணைத்தான்.

அப்ப‌டியே அவ‌ன் உட‌லில் வ‌ழிந்து ஒழுகும் நீரின் வேக‌ம் மெல்ல‌ குறைந்து நின்றுவிட‌, அப்ப‌டியே முக‌த்தில் வ‌ழிந்து வ‌ந்த‌ நீர் சென்று அவ‌ன் மூடிய இமைக‌ளுள் குவிந்த‌து. அந்த‌ க‌ன‌த்த‌ ஈர‌ இமைக‌ள் மெதுவாய் பிரிய‌, அந்த‌ ஈர‌ விழிக‌ளுள் இன்னுமே மோக‌ம் அன‌லாய் த‌கித்த‌து.

அதில் நீர் சொட்ட‌ சொட்ட‌ த‌ன் ம‌ணிக‌ட்டை உய‌ர்த்தி வாட்சை பார்த்தவ‌ன், அப்ப‌டியே திரும்பி ட‌வ‌ளை எடுத்து முக‌த்தை அழுத்தி துடைக்க‌, அங்கே அவ‌னுக்கான‌ மாற்று க‌ருப்பு ஆடை த‌யாராக‌ தொங்கிய‌து.

அடுத்த‌ சில‌ நொடிக‌ளில் அதை எடுத்து மாற்றிக்கொண்டு ஃப்ரெஷாய் அவ‌ன் வெளியில் வ‌ர‌, அங்கே அவ‌னின் போதை ம‌னைவி மெத்தையில் இல்லை. அதில் அவ‌ன் வேக‌மாய் சுற்றி தேட‌, அறையில் எங்குமே அவ‌ள் இல்லை. அதில் அவ‌ன் முக‌ம் வெகுவாய் இறுக, உட‌லெங்கும் கோப‌ம் தீயாய் ஏறிய‌து.

அப்ப‌டியே அவ‌ன் முன் அந்த‌ பூ குவிந்த‌ மெத்தை வெறுமையாய் கிட‌க்க‌, அந்த‌ க‌ட்டிலுக்கு அடியில்தான் உட‌லை குறுக்கி, க‌ண்க‌ளை இறுக்கி மூடி ந‌டுங்கிய‌ப‌டி ஒளிந்திருந்தாள் அமீரா.

சிறு வ‌ய‌திலிருந்து த‌ன் த‌ந்தையின் அடிக்கும் த‌ண்ட‌னைக்கும் ப‌ய‌ந்து இப்ப‌டித்தான் க‌ட்டில‌டியில் ஒளிந்து ந‌டுங்கிக் கொண்டிருப்பாள். அவ‌ளை த‌ர‌த‌ர‌வென்று வெளியே இழுத்து வ‌ந்து பெல்ட் பிய்யும் அள‌விற்கு அடித்து வெளுப்பார் அந்த‌ அர‌க்க‌ன்.

அவ‌ள் க‌த்தி க‌த‌றி அழும் ச‌த்த‌ம், அந்த‌ வீடே அதிரும் அள‌விற்கு இருக்கும். அந்த‌ க‌த்த‌ல், க‌த‌ற‌ல் அனைத்தும் இப்போது ச‌த்த‌மாய் அவ‌ள் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்க‌, காதை அழுத்தி மூடிய‌ப‌டி அர‌ண்டு ந‌டுங்கினாள் அவ‌ள்.

அதே க‌த்த‌லும் க‌த‌ற‌லும் தான் இன்று க‌ட்டிலின் மீது ந‌ட‌க்க‌ போகிற‌து என்று அவ‌ள் உட‌ல் மொத்த‌மும் பீதியில் ந‌டுங்கிக்கொண்டிருக்க‌, திடீரென்று உடைந்து சித‌றிய‌து க‌ண்ணாடி.

அதில் திடுக்கிட்டு அர‌ண்டு அவ‌ள் விழி திற‌க்க‌, அடுத்த‌ நொடி மொத்த‌ ச‌த்த‌மும் அட‌ங்கி பெரும் அமைதி நில‌விய‌து. அதில் அவ‌ள் இத‌ய‌ துடிப்பு ம‌ட்டும் அத்த‌னை ப‌ல‌மாய் அவ‌ளுக்கே கேட்க‌, த‌ன் வ‌ர‌ண்ட‌ தொண்டையில் எச்சிலை கூட்டி விழுங்கிய‌வ‌ள், ப‌ய‌த்தில் விய‌ர்வை பூத்திருந்த‌ முக‌த்தை மெதுவாய் பின்னால் திருப்ப, ச‌ட்டென்று அவ‌ளை வெளியில் இழுத்திருந்த‌து அவ‌ன் க‌ர‌ம்.

அதில் ப‌ட்டென்று அவ‌ன் மார்புக்குள் வ‌ந்திருந்த‌வ‌ள், திடுக்கிட்டு அர‌ண்டு வில‌க‌ போக‌, அவ‌ளை இழுத்து த‌ன் மார்புக்குள் இறுக‌ க‌ட்டிக் கொண்டான் அவ‌ன். அதில் அசைய‌க்கூட‌ முடியாது அவ‌ள் உட‌ல் மொத்த‌மும் அவ‌னுள் புதைந்திருக்க‌, மூச்சுக்கூட‌ விட‌ முடியாம‌ல் உட‌லை இறுக்கிய‌வ‌ள் மூச்ச‌டைத்து திண‌ற‌ ஆர‌ம்பிக்க‌, மெதுவாய் அவ‌ள் கூந்த‌லுள் முக‌ம் நுழைத்து காத‌ருகே மீசையுர‌சிய‌வ‌ன், "ரிலேக்ஸ்" என்றான் மெல்ல‌மாக‌.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் இறுக்க‌ம் த‌ள‌ர‌, மெதுவாய் அவ‌ள் முதுகை நீவி கொடுத்தவ‌ன், "ஜ‌ஸ்ட் ரிலேக்ஸ்" என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அப்ப‌டியே அவ‌ளின் ந‌டுக்க‌ம் மெல்ல‌ குறைய‌, அவ‌ளின் சுவாச‌மும் மெல்ல‌ சீராக துவ‌ங்கிய‌து. அதில் மெல்ல‌ அவ‌ள் கூந்த‌லுக்குள் விர‌ல்க‌ளை நுழைத்து மெதுவாய் வ‌ருடி கொடுத்தவ‌ன், "ஒன்னும் இல்ல‌ ப‌ய‌ப்ப‌டாத‌." என்றான் மெல்ல‌மாக‌. அதில் அவ‌ள் இத‌ய‌மும் மெல்ல‌ ஆர்ப்பாட்ட‌த்தை நிறுத்த‌, ம‌ன‌ம் ஒருவித‌ பாதுகாப்பை உண‌ர்ந்த‌து.

சிறு வ‌ய‌தில் த‌ந்தைக்கு ப‌ய‌ந்து த‌ன் தாயின் மார்புக்குள் புதையும்போது கூட‌ அட‌ங்காத‌ இந்த‌ ந‌டுக்க‌ம், இவ‌ன் மார்புக்குள் மெதுவாய் அட‌ங்க‌ ஆர‌ம்பிக்க‌, அவ‌ளை ப‌த்திர‌மாய் த‌ன் மார்புக்குள் புதைத்து மெல்ல‌ த‌ட்டி கொடுத்த‌வ‌ன், "நிம்ம‌தியா தூங்கு." என்றான் மென் குர‌லில்.

அதில் அப்ப‌டியே அவ‌ன் மார்புக்குள் விழி மூடிய‌வ‌ளின் இத‌ய‌த்தில், முத‌ல் முறையாய் நிம்ம‌தி ப‌ர‌விய‌து. வாழ்நாளில் என்றுமே உண‌ராத ஒரு உண‌ர்விது. அதில் அவ‌ள் மொத்த‌ உட‌லும் அப்ப‌டியே ஓய்வுநிலைக்கு செல்ல‌, மெதுவாய் அவ‌ளும் உற‌க்க‌த்திற்கு சென்றிருந்தாள்.

அப்ப‌டியே அவ‌ள் நிம்ம‌தியாய் உற‌ங்க‌ ஆர‌ம்பிக்க‌, அவ‌ளை ஒரு க‌ர‌த்தில் மெல்ல‌ த‌ட்டிக்கொடுத்த‌ப‌டியே, அவ‌ன் ம‌று க‌ர‌த்தை மெல்ல‌ உய‌ர்த்த‌, அதில் ஒரு புல்ல‌ட்டை அழுத்தி பிடித்திருந்தது அவ‌ன் இரு விர‌ல்க‌ள்.

அதையே அழுத்த‌மாய் பார்த்த‌வ‌னின் க‌ண்க‌ள் கோப‌த்தில் சிவ‌க்க‌, அப்ப‌டியே அவ‌னின் பின்னால் உடைந்து கிட‌ந்த‌து அந்த‌ ஆளுய‌ர‌ க‌ண்ணாடி.

அந்த‌ க‌ண்ணாடியில் ப‌ட்டு உடைத்து சித‌றிய‌ புல்ல‌ட் தான் இப்போது இவ‌ன் கையில் இருக்க‌, அதை த‌ன் உள்ள‌ங்கைக்குள் இறுக்கி மூடினான் ருத‌ன்.

அப்ப‌டியே அந்த‌ ஜ‌ன்ன‌லுக்கு வெளியே வான‌ம் இருள் பூச‌ ஆர‌ம்பித்து கார்ட‌ன் விள‌க்குக‌ள் ஒளிர‌ ஆர‌ம்பித்திருக்க‌, அந்த‌ ஜ‌ன்ன‌லிலிருந்து நேர் தூர‌த்தில் ஒரு ரோஜா புத‌ருக்குள் ம‌றைந்திருந்தான் ஒருவ‌ன்.

அவ‌ன் கையிலிருந்த‌ துப்பாக்கி மீண்டும் அந்த‌ ஜ‌ன்ன‌லுக்குள் குறி வைக்க‌, அந்த பாயின்டருக்குள் த‌ன் ஒற்றை க‌ண்ணை குறுக்கி ம‌று க‌ண்ணை விரித்து ச‌ரியாக‌ குறி பார்த்து ட்ரிக‌ரை அழுத்தும் நொடி, அதே க‌ண்ணை ச‌த்கென்று துளைத்து பின் ம‌ண்டை வ‌ழி வெளியே வ‌ந்த‌து ஒரு தோட்டா.

அடுத்த‌ நொடி அவ‌ன் உட‌ல் மொத்த‌மும் அசைவை நிறுத்த‌, அப்ப‌டியே பின்னால் சாய்ந்து பொத்தென்று த‌ரையில் விழுந்தான். அந்த‌ ச‌த்தில் அருகில் ஒளிந்திருந்த‌வ‌ன் அதிர்ந்து எட்டி பார்க்க‌, அங்கே பிணமாய் கிட‌ந்தான் அவ‌னின் கூட்டாளி.

அதில் இவ‌ன் அதிர்ந்து திரும்பி பார்க்க‌, அந்த‌ இருட்டு ஜ‌ன்ன‌லின் உள்ளிருந்து கருப்பு ஆடை கால் ஒன்று வெளியில் வர, அந்த கருப்பு ஷூ அழுத்தமாய் மண்ணில் பதிந்தது. அடுத்த‌ நொடி அங்கிருந்த‌ ச‌ருகுக‌ள் சித‌றி எழும்ப‌, அத‌ன் ந‌டுவே அடுத்த‌ காலையும் வெளியில் எடுத்து வைக்கும் நொடி புய‌லாய் அடித்த‌து ஒரு காற்று. அதில் அங்கிருந்த‌ ச‌ருகுக‌ள் மொத்த‌மும் எழும்பி புழுதியுட‌ன் க‌ல‌ந்து அவ்விட‌த்தை நிர‌ப்ப‌, அத‌ன் ந‌டுவே முழுதாய் வெளியில் வ‌ந்த‌து அவ‌ன் உருவ‌ம்.

அதில் ப‌த‌றி வேக‌மாய் அவ‌னை ஷூட் செய்தான் இவ‌ன். அந்த‌ புல்ல‌ட் பாய்ந்து சென்று அங்கிருந்த‌ கார்ட‌ன் லைட்டில் ப‌ட்டு வெடிக்க‌, அதில் சித‌றிய‌ தீப்பொறி ம‌ற்றும் க‌ண்ணாடி சித‌ற‌ல்க‌ளுக்கு ந‌டுவே அன‌லாய் வெளியில் வ‌ந்த‌து ருத‌ன் முக‌ம்.

அதில் இவ‌ன் அர‌ண்டு பின் எட்டு வைக்க‌, அங்கே மொத்த‌ புய‌ல் காற்றும் அட‌ங்கி அந்த‌ க‌ரும் புய‌லுக்கு வ‌ழிவிடுவ‌துப்போல், அதை கிழித்துக்கொண்டு முன்னால் வ‌ந்த‌வ‌ன், த‌ன் ச‌ட்டையில் ப‌டிந்த‌ தூசியை த‌ன் துப்பாக்கியாலே த‌ட்டிவிட்டப‌டியே ப‌ட்டென்று அதே திசையில் சுட்டிருந்தான். அந்த‌ புத‌ருக்குள் இருந்த‌வ‌ன் பொத்தென்று பின்னால் சாய‌, அங்கிருந்த‌ வ‌ண்ண‌த்து பூச்சிக‌ள் அனைத்தும் ச‌ட‌ச‌ட‌வென்று சித‌றி எழும்பிய‌து.

அதில் இங்கிருந்த‌வ‌ன் ப‌த‌றி வேக‌மாய் அவ‌னை மீண்டும் சுட‌ போக‌, அத‌ற்குள் ப‌ட்டென்று அவ‌ன் நெற்றி பொட்டில் சுட்டிருந்தான் ருத‌ன். அதில் அவ‌ன் பொத்தென்று பின்னிருந்த‌ ம‌ர‌த்தில் அடித்து சாய‌, மேலிருந்த‌ க‌ருப்பு வ‌வ்வால்க‌ள் ப‌ட‌ப‌ட‌வென்று எழும்பி மேலே ப‌ற‌ந்த‌து.

ஆனால் இங்கே ஆழ்ந்த‌ உற‌க்க‌த்திலிருந்த‌ அமீராவின் இர‌ண்டு காதுக‌ளிலுமே ப‌ஞ்சு வைத்து அடைத்திருக்க‌, இனியும் கேட்காதாவாறு அந்த‌ ஜ‌ன்ன‌லை இழுத்து மூடினான் ருத‌ன்.

இங்கே ம‌ர‌த்தின் மீது அம‌ர்ந்திருந்த‌ ஒருவ‌ன் எதையோ பார்த்து அக‌ல‌ விழி விரித்து, "டேய் அங்.." என்று கூறும் முன் அவ‌ன் குர‌ல் வ‌ளையை துளையிட்டது ஒரு புல்ல‌ட். அதில் இர‌த்த‌ம் தெறிக்க‌ ம‌ர‌த்திலிருந்து சரசரவென்று கீழே சாய்ந்த‌வ‌ன், பொத்தென்று த‌ரையில் விழ‌, ப‌ட்டென்று இர‌ண்ட‌டி பின்னால் ந‌க‌ர்ந்தான் கீழிருந்த‌வ‌ன்.

அவ‌ன் கால‌டியில் பிண‌மாய் கிட‌ந்த‌வ‌னின் தொண்டை சித‌றியிருக்க‌, அதில் அவ‌ன் அதிர்ந்து நிமிரும் முன் ப‌ட்டென்று அவ‌ன் முக‌ம் அந்த‌ பூந்தொட்டியை உடைத்துக்கொண்டு உள்ளே புதைய‌, சுக்கு நூறாய் சித‌றி தெறித்த‌து அந்த‌ தொட்டி.

அதை அழுத்தி மிதித்திருந்த‌ பாத‌ம் அத்த‌னை அழுத்த‌மாய் அவன் பின் மண்டையில் புதைந்திருக்க‌, அதை பார்த்து அர‌ண்டு பின்னெட்டு வைத்த‌ ம‌ற்றொருவ‌ன், வேக‌மாய் அவ‌னை சுட‌ போக‌, ப‌ட்டென்று அவ‌ன் த‌லையிலும் புல்ல‌ட் துளைத்து தெறித்த‌து.

அதில் பொத்தென்று அவ‌ன் பின்னால் சாய‌, அவ‌ன் பின்னிருந்த‌வ‌ன் ப‌ட்டென்று ருத‌னை சுட்டான். ச‌ட்டென்று எகுறி அருகிலிருந்த‌ ம‌ர‌க்கிளை உடைய அழுத்தி கால் வைத்து எகுறி த‌ப்பிய‌வ‌ன், அந்த‌ர‌த்திலேயே ப‌டார்ப‌டாரென்று அவ‌னையும் அவ‌ன‌ருகிலிருந்த‌வ‌க‌ளையும் சுட்டு த‌ள்ளினான்.

அடுத்த‌ நொடி த‌ரையில் கால் வைத்த‌ ருத‌னின் துப்பாக்கி த‌வ‌றி கீழே விழ‌, அதை வேக‌மாய் ஒருவ‌ன் பாய்ந்து எடுக்க‌ குனியும் நேர‌ம் ச‌த‌க்கென்று அவ‌ன் பின் க‌ழுத்தில் இற‌ங்கிய‌து ஒரு கூரிய‌ ம‌ர‌ துண்டு. அவ‌ன் உடைத்த‌ அந்த‌ கிளையுடைய‌தே தான். அது ஆழமாய் இறங்கி அவ‌னின் முன் ப‌க்க‌ம் வெளியில் வ‌ந்திருக்க‌, அதிலிருந்து வ‌ழிந்த‌ இர‌த்த‌ம் த‌ரையில் தெரிந்த‌ அவ‌னின் க‌ருப்பு நிழ‌லை சிவ‌ப்பாய் மாற்றிய‌து.

அதை ச‌த‌க்கென்று வெளியில் எடுத்த ருத‌ன், ப‌ட்டென்று அருகே வீச அங்கிருந்த‌வ‌னின் தொண்டையில் இற‌ங்கி ம‌று ப‌க்க‌ம் வெளியில் வ‌ந்திருந்த‌து அந்த‌ ம‌ர‌ துண்டு. அதில் மூச்ச‌ட‌ங்கி அப்ப‌டியே உறைந்து நின்ற‌வ‌ன், கால்க‌ளை ம‌ட‌ங்கி பொத்தென்று பூமியில் புதைய‌, அதை பார்த்து எச்சில் விழுங்கிய ஒருவ‌னோ அவ‌ச‌ர‌மாய் கீழிற‌ந்த‌ ருத‌னின் துப்பாக்கியை பார்த்துவிட்டு த‌ன் துப்பாக்கியை உய‌ர்த்த போக‌, ச‌ட்டென்று பூமியில் எட்டி ஒரு உதை உதைத்து அங்கிருந்த‌ க‌ல்லை அவ‌ன் ம‌ண்டையில் இற‌க்கியிருந்தான் ருத‌ன்.

அதில் க‌ல்லும் ம‌ண்டையும் சேர்ந்து சித‌றி தெறிக்க‌ பொத்தென்று ம‌ண்ணுக்குள் விழுந்தான் அவ‌ன். இப்போதும் ருத‌னின் பார்வை கீழிருந்த‌ த‌ன் துப்பாக்கியின் ப‌க்க‌ம் ச‌ற்றும் திரும்பாதிருக்க, அவ‌னின் ப‌ல‌ம் அந்த‌ துப்பாக்கி அல்ல‌ என்று அவ‌ர்க‌ள் உண‌ர்த‌துதான் தாம‌த‌ம், அடுத்து ஒருவ‌னின் நெஞ்சிலேயே ஓங்கி உதைத்தான் ருத‌ன். அடுத்த‌ நொடி பின்னால் பாய்ந்து சென்று உடைந்த‌ அந்த‌ ம‌ர‌த்தின் கூரிய‌ கிளையில் சொருகிக்கொண்டது அவ‌ன் உட‌ல். ச‌ற்று முன் ருத‌ன் எகுறி மிதித்த‌தில் உடைந்த‌ அதே கிளைதான். அவன் உடலை துளைத்து முன்பக்கம் வெளியில் வந்திருக்க, அடுத்த‌ நொடி ஒரு இழுத்த‌ பெருமூச்சில் அவ‌ன் உயிர் சென்றிருக்க‌, உட‌ல் அப்ப‌டியே அந்த‌ ம‌ர‌த்தில் தொங்கிவிட்ட‌து.

அதில் த‌ன் க‌ருப்பு ச‌ட்டையை உத‌றி ச‌ரி செய்துவிட்டு அவ‌ன் திரும்ப‌, கீழிருந்த‌ அவ‌ன் துப்பாக்கியை கையில் எடுத்திருந்தான் ஒருவ‌ன்.

அதில் ருத‌ன் ஒற்றை புருவ‌த்தை உய‌ர்த்த, அவ‌னோ பின்னிருந்த‌ விள‌க்கு க‌ம்ப‌த்தில் சாய்ந்து மெல்ல‌ துப்பாக்கியை உய‌ர்த்த, அவ‌ன் க‌ர‌ம் வெகுவாய் ந‌டுங்கிய‌து.

ச‌ற்று முன் அந்த‌ பூந்தொட்டிக்குள் முக‌த்தை அழுத்தி சிதைத்திருந்தானே அவ‌ன்தான் இவ‌ன். இப்போது அந்த முகம் இர‌த்த‌ம் வ‌ழிய‌ வ‌ழிய‌ அல‌ங்கோல‌மாய் இருக்க, அரை ம‌ய‌க்க‌த்தில் க‌ண்க‌ள் வேறு இருட்ட‌, கையிலிருந்த‌ துப்பாக்கியும் ந‌டுக்க‌த்தில் கிடுகிடுவென்று ஆடிய‌து.

அதில் ருத‌னின் இத‌ழ் மெல்ல‌ வ‌ளைய‌, கூலாய் அங்கிருந்த‌ க‌ருப்பு கார்ட‌ன் பெஞ்சில் சாய்ந்த‌ம‌ர்ந்தான். அதில் அவ‌னோ புரியாது பின்னால் ந‌க‌ர‌, "ஐ லைக் யுவ‌ர் கான்ஃபிட்ன்ஸ்." என்று புருவ‌ம் நெளித்து சுவார‌சியாமாய் கூறினான் ருத‌ன்.

அதில் இவ‌னோ இரு க‌ர‌த்தால் துப்பாக்கியை அழுத்தி பிடித்து அவ‌னுக்கு குறி வைக்க‌ முய‌ல‌, அவ‌னோ அசராது அழுத்த‌மாய் அவ‌னை பார்த்து, "உன‌க்கு த்ரீ செக்க‌ண்ட்ஸ்தா டைம். அதுக்குள்ள‌ நீ ஷூட் ப‌ண்ண‌ல‌.. நாலாவ‌து செக்க‌ண்ட் நா உன்ன‌ ஷுட் ப‌ண்ணிருப்பேன்." என்று அழுத்தி கூறினான்.

அவ‌ன் அழுத்த‌த்தில் இவ‌ன் விழி த‌டுமாற, அதை க‌டின‌ப்ப‌ட்டு இற‌க்கி த‌ன் கையை பார்த்த‌வ‌ன், பீதியில் த‌ன் துப்பாக்கியை அழுத்தி பிடித்தான். அவ‌ன் பிடுங்குவ‌த‌ற்கு வாய்ப்ப‌ளிக்க‌ கூடாது என்று. அதில் ருத‌னின் இத‌ழ் குரோத‌மாய் வ‌ளைய‌, "ஒன்" என்று முத‌ல் விர‌லை நீட்டினான்.

அதில் இவ‌னோ அழுத்தி பிடித்த‌ துப்பாக்கியை அவ‌ன் முக‌த்திற்கு நேர் உய‌ர்த்த‌, "டூ" என்று இர‌ண்டாம் விர‌லையும் நீட்டினான் ருத‌ன். இவ‌னுக்கோ க‌ர‌ம் வேறு கிடுகிடுவென்று ந‌டுங்க‌, இருட்டிக்கொண்டு வ‌ந்த‌ இமைக‌ளை க‌டின‌ப்ப‌ட்டு பிரித்து ட்ரிக‌ரை அழுத்த‌, அவனுக்கு அழுத்த‌க்கூட‌ தெம்பில்லை.

"த்ரீ" என்று முன்றாவ‌தாய் க‌ட்டை விர‌லை நீட்ட, அவ‌ன் க‌ர‌மே இப்போது துப்பாக்கியாய் காட்சிய‌ளித்த‌து இவ‌னுக்கு. அதில் இவ‌ன் ப‌த‌றி ட்ரிக‌ரில் அழுத்த‌ம் கொடுக்க‌, ப‌ட்டென்று த‌ன் விர‌ல் துப்பாக்கியிலே, "டிஷூம்" என்று சுட்டிருந்தான் ருத‌ன். அடுத்த‌ நொடி ப‌ட்டென்று அவ‌ன் நெற்றியை துளைத்து வெளியில் விழுந்த‌து புல்ல‌ட்.

அதில் அதிர்ந்து ச‌ப்த‌ நாடியும் அட‌ங்க‌ மூச்சை இழுத்து பிடித்தவ‌ன், ஒன்றும் புரியாது அப்ப‌டியே பின்னால் சாய‌, அவ‌னின் பின்னால் துப்பாக்கியுட‌ன் நின்றிருந்தான் யோகி.

அதில் கூலாய் இருக்கையைவிட்டு எழுந்து நின்ற‌ ருத‌ன், த‌ன் கை ச‌ட்டையை இற‌க்கிவிட்ட‌ப‌டியே கீழிருந்தவனின் கரத்தில் ஓங்கி உதைக்க, சட்டென்று மேலே வந்த தன் துப்பாக்கியை கேட்ச் செய்து தன் பின்னிடையில் சொருகியவன், "இவ‌னுங்க‌ல்லா எங்கிருந்து வ‌ந்தானுங்க‌ளோ அங்கேயே பார்ச‌ல் பண்ணி விடு." என்று கூறிவிட்டு நகர்ந்தான்.

அதில் வேக‌மாய் த‌லைய‌சைத்த‌ யோகியும் அவசரமாய் த‌ன் மொபைலை எடுத்து ஆட்க‌ளை வ‌ர‌ கூறினான்.

அந்த‌ அழ‌கான‌ கார்ட‌ன் மொத்த‌மும் இப்போது இர‌த்த‌மும் பிண‌மும் என்று அல‌ங்கோல‌மாய் மாறியிருக்க‌, சுற்றியிருந்த‌ ரோஜாக்க‌ளின் வாச‌னையோடு குருதி வாடையும் காற்றில் வெகுவாய் க‌ல‌ந்து, அப்ப‌டியே அங்கு எழும்பி ப‌ற‌ந்துக்கொண்டிருந்த‌ வ‌ண்ண‌த்து பூச்சிக‌ளின் சிற‌குக‌ளில்கூட‌ இர‌த்த‌ க‌றை ப‌டிந்திருந்த‌து.

இவை எதுவுமே தெரியாம‌ல் இங்கே அந்த‌ க‌ட்டிலுக்கு கீழே ஒருவ‌ள் நிம்ம‌தியாய் உற‌ங்கிக்கொண்டிருக்க‌, அந்த‌ அழ‌கான‌ பூவை அழுங்காம‌ல் குழுங்காம‌ல் மெதுவாய் அள்ளி தூக்கிய‌து அவ‌ன் க‌ர‌ங்க‌ள். அதைய‌றியாது அவ‌ளும் ஆழ்ந்த‌ உற‌க்க‌த்தில் இருக்க‌, அவ‌ளை அப்ப‌டியே தூக்கி அந்த‌ மெத்தையில் மெல்ல‌ கிட‌த்தினான் ருத‌ன்.

அதில் மெல்லிய‌தாய் அசைந்து ப‌டுத்த‌வ‌ளின் க‌ன்ன‌ம் அவ‌னின் தாடியை உர‌ச‌, குறுகுறுப்பாய் புருவ‌த்தை குறுக்கினாள். அதில் இர‌ச‌னையாய் இத‌ழ் வ‌ளைத்தவன், அந்த‌ புருவ‌ங்க‌ளுக்கு ந‌டுவே மென்மையாய் முத்த‌மிட்டான். அதில் அப்ப‌டியே அவ‌ள் புருவ‌ங்க‌ள் த‌ள‌ர‌, அவ‌ள் உச்சியில் வைத்திருந்த‌ குங்கும‌த்திற்கும் மெல்லிய‌தாய் ஒரு முத்த‌ம் வைத்தான்.

அதில் அவ‌ள் நெற்றியை குறுக்கி மேலும் அசைந்து ப‌டுக்க‌, அவ‌னோ புருவத்தை குறுக்கி கீழே பார்த்தான். அவ‌ன் க‌ட்டிய‌ அந்த க‌ருப்பு ம‌ஞ்ச‌ள் தாலி அவ‌னின் ஆர் வ‌டிவ‌ க‌ருப்பு செயினில் சிக்கியிருக்க‌, அப்ப‌டியே நிமிர்ந்து அவ‌ள் முக‌ம் பார்த்தான்.

அவ‌ளோ ஏதும் அறியா குழ‌ந்தையாய் நிம்ம‌தியாய் உற‌ங்கிக்கொண்டிருக்க‌, அந்த‌ செயினை விடுவிக்காம‌ல் அத‌னுட‌னே அப்ப‌டியே அவ‌ள் மீது படர்ந்தான். அதில் அவ‌ளின் தாலியும் அவ‌ன் செயினும் ஒன்றாய் அந்த இரு இதயங்களுள் புதைந்து நசுங்க, அவன் விழிகளோ அவள் முகமெங்கும் இரசனையாய் தழுவியது. அந்த முகத்தில் இரசனையாய் தன் விரல் கொண்டு கோலமிட்டவன், அப்படியே அவ‌ள் முக‌த்தோரம் ஒட்டியிருந்த‌ பூவித‌ழ் ஒன்றை மெதுவாய் எடுத்தான். அந்த பூவிதழும் அவள் செவ்விதழும் இப்போது ஒன்று போல் தெரிய, அதற்கு மெல்லியதாய் முத்தமிட்டு அழகாய் இதழ் வளைத்தவன், அப்ப‌டியே அவ‌ள் முக‌மெங்கும் அதை இர‌ச‌னையாய் வருட, இந்த அமைதியான பூ முகத்தினுள் அன்று முத‌ல் முறை ச‌ந்தித்த‌ அந்த‌ முகம் தான் அவனுக்கு தெரிந்தது.

அன்று இதேப்போல் சிவந்த பூவித‌ழ்க‌ளுக்கு ந‌டுவே, அந்த‌ த‌ண்ணீரிலிருந்து மெதுவாய் அவ‌ளை தூக்கினான். அன்று நீர் சொட்ட‌ சொட்ட‌ அவ‌ளின் கூந்த‌லை வில‌க்கிய‌ அவ‌னின் விரல்கள் இப்போதும் அவ‌ளின் கூந்த‌லை மெதுவாய் வில‌க்கி சொருக, அவ‌ள் புருவ‌ங்க‌ள் சிலிர்த்து குறுகிய‌து.

அதில் மென்மையாய் அவ‌ள் விழியில் இத‌ழ் ப‌தித்த‌வ‌ன், அப்ப‌டியே விரல்களை கூந்தலுள் நுழைத்து அவ‌ள் காதிலிருந்த‌ ப‌ஞ்சை உருவ‌, அவ‌ளோ கூச்ச‌த்தில் குறுக‌, அவ‌ள் காத‌ருகே மீசையுர‌ச‌ மெல்லிய‌தாய் முத்த‌மிட்ட‌வன், "இன்னொரு தெட‌வ‌ என் க‌ண்ல‌ ப‌ட்டா தூக்கிட்டு போயிருவ‌ன்னு சொன்ன‌ந்தான‌?" என்று மெல்லிய‌ குர‌லில் கேட்க‌, அது அவ‌ள் காதுக்குள் தெளிவாய் விழ மெல்ல விழிப்பு த‌ட்டிய‌து.

"அப்ற‌ம் ஏன்டி திரும்ப‌ என் க‌ண்ல‌ ப‌ட்ட‌?" என்ற‌வ‌னின் விழிக‌ளில் அவ‌ர்க‌ளின் இர‌ண்டாம் ச‌ந்திப்பு, அந்த‌ காரை திறக்க அவள் பொத்தென்று தன் நெஞ்சில் விழுந்தது க‌ண்முன் வ‌ந்த‌து.

உண்மையில் அந்த‌ நொடி அவளை தாங்கி பிடித்தவனின் விழிகள் வியப்பில் விரிய‌, அவன் விழி திரையில் அன்று தண்ணீருக்குள் பார்த்த அதே முகம் இன்று மீண்டும் தன் மார்பில் கிடக்க, உள்ளிருந்த இத‌ய‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடித்த‌தே உண்மை.

- நொடிக‌ள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-36
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.