CHAPTER-36

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
அர்ஜுன் : (சிரிப்புட‌ன்) அப்ப‌ ம‌ட்டு இல்ல‌. இப்ப‌வும் நா என்னோட‌ பொன்டாட்டிய‌ ரொம்ப‌ காத‌லிக்கிறே.



ச‌ந்ரா : (பொறாமை க‌ல‌ந்த‌ ப‌ய‌த்துட‌ன்) நீ யார‌ ப‌த்தி பேசுற‌? நாந்தா உன்னோட‌ பொன்டாட்டி. அதோட‌ என்ன‌தா நீ அப்பிடி கூப்பிடுவ‌.

அர்ஜுன் : (காத‌லுட‌ன்) ஆமா Sweet heart.



ச‌ந்ரா : (அதிர்ச்சியுட‌ன்) Sweet heartடா? அப்போ நீ எத‌யும் ம‌ற‌க்க‌லயா?

அர்ஜுன் : இல்ல‌.

ச‌ந்ரா : (அவ‌னை அடித்துக்கொண்டே அழுது) அப்றோ எதுக்கு இப்பிடி என்ன‌ ப‌ய‌முறுத்துன‌?

அர்ஜுன் : (சிரித்துக்கொண்டே) அப்றோ என்ன‌ Sweet heart? நீ வ‌ந்த‌தும், நா எப்பிடி இருக்க‌ன்னு கேக்காம‌, நா யார்னு தெரியுதான்னு கேட்ட, அதா நா கொஞ்சோ வெளையான்டே.

ச‌ந்ரா : நீ என்ன‌ ம‌ற‌ந்துட்ட‌ன்னு நென‌ச்சு நா எவ்ளோ ப‌ய‌ந்துட்ட‌ன்னு தெரியுமா?

அர்ஜுன் : ம்ம். பாத்தே. அது உன்னோட‌ க‌ண்ணுல‌ நல்லா தெறிஞ்சது.

ச‌ந்ரா : எது?



அர்ஜுன் : காதல்.

ச‌ந்ரா : என்ன?

அர்ஜுன் : நா உன்ன‌ ம‌ற‌ந்துட்டன்னு சொன்ன‌தும், நீ அழ‌வே ஆர‌ம்பிச்சிட்ட‌. ஆனா அந்த‌ க‌ண்ணீருக்கு கார‌ணோ என்ன?

ச‌ந்ரா : ஏன்னா நா

அர்ஜுன் : (மிகுந்த‌ எதிர்ப்பார்ப்புட‌ன்) ம்ம் சொல்லு.

ச‌ந்ரா : அது..... ஏன்னா நீ என்னோட‌ உயிர‌ காப்பாத்தியிருக்க‌.

அர்ஜுன் : இப்ப‌க்கூட‌ உண்மைய‌ சொல்ல‌மாட்ட‌ல்ல‌?

மீரா : அர்ஜுன் ! நீ ந‌ல்லா இருக்க‌ல்ல‌?

அர்ஜுன் : நா ந‌ல்லா இருக்கே மீரா.

சிறிது நேர‌ம் க‌ழித்து, அர்ஜுனை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்க்கு அழைத்து சென்ற‌ன‌ர். அர்ஜுனுடைய‌ அறைக்கு சென்று, மீராவும் சந்ராவும் அர்ஜுனை ப‌டுக்க‌ வைத்தார்க‌ள்.

மீரா : அர்ஜுன் நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நா என்னோட‌ ரூமுக்கு போறே. ச‌ந்ரா நீ எதாவ‌தின்னா என்ன‌ கூப்புடு.

ச‌ந்ரா : செரிங்க‌ மீராக்கா.

மீரா சென்றுவிட்டாள். ச‌ந்ரா அர்ஜுனின் அருகில் அம‌ர்ந்து, அர்ஜுனை பார்த்து,

ச‌ந்ரா : (மனதிற்க்குள்) டாக்ட‌ர் எங்கிட்ட‌, அர்ஜுனோட‌ த‌லையில‌ இருக்கிற‌ அந்த‌ புல்ல‌ட்ட‌ எடுத்த‌தும், அவ‌னுக்கு ப‌ழ‌செல்லா ம‌ற‌ந்திரும் இல்ல‌ன்னா, வாழ்க்கைல‌ ம‌ற‌ந்துப்போன‌ ஒரு விஷியோ ஞாப‌கோ வ‌ருன்னு சொன்னாரு. இதுல‌ ஏதாவ‌து ஒன்னு க‌ண்டிப்பா ந‌ட‌க்குன்னு சொன்னாரு. ஆனா அர்ஜுனுக்கு இதுல‌ ரெண்டுமே ந‌ட‌க்க‌லையே.

அர்ஜுன் : ச‌ந்ரா ! என்ன‌ யோசிக்கிற‌?

ச‌ந்ரா : ஒன்னு இல்ல‌ அர்ஜுன். நீ ரெஸ்ட் எடு. நா மீரா அக்காவ‌ பாத்துட்டு வ‌ர்றே.

அர்ஜுன் : ம்ம்.

ச‌ந்ரா சென்றுவிட்டாள். அர்ஜுன் க‌ண்க‌ளை மூடினான். அவ‌னுக்கு அவ‌னுடைய‌ ஆப்ரேஷ‌னின் போது ஞாப‌க‌ம் வ‌ந்த‌து, திரும்ப‌ த‌ன் க‌ண் முன் தெறிகிற‌து. அர்ஜுன் ப‌த‌றி அடித்து எழுந்தான். எழுந்து,

அர்ஜுன் : என்ன‌ இது திரும்ப‌ அதுவே ஞாப‌கோ வ‌ருது. இதெல்லா என்ன?

அங்கு மீராவின் அறையில்,

ச‌ந்ரா : அந்த‌ டாக்ட‌ர் அவ்ளோ உறுதியா சொன்னாங்க‌ளே மீரா அக்கா?

மீரா : அவ‌ எதுவும் ம‌ற‌க்காத‌து ந‌ல்ல‌துதான‌ ச‌ந்ரா?

ச‌ந்ரா : அது ந‌ல்ல‌துதா மீரா அக்கா. ஆனா அவ‌னுக்கு ப‌ழ‌செல்லா ம‌ற‌க்க‌ற‌துக்கு ப‌திலா, ஏதோ ஞாப‌க‌ம் வ‌ந்திருக்கின்னு என‌க்கு தோனுது.

மீரா : ஏ உன‌க்கு அப்பிடி தோனுது ச‌ந்ரா?

ச‌ந்ரா : ஒன்னு அர்ஜுனுக்கு மெமரி லாஸ் ஆகும் இல்ல‌ன்னா, வாழ்க்கைல‌ ம‌ற‌ந்த‌ விஷியோ அவ‌னுக்கு ஞாப‌கோ வ‌ருன்னு டாக்ட‌ர் உறுதியா சொன்னாங்க‌. அர்ஜுனுக்கு எதுவும் ம‌ற‌க்க‌ல‌ன்னு அவ‌ங்கிட்ட‌ பேசுன‌வொட‌னே ந‌ம‌க்கு தெரிஞ்சிருச்சு. ஆனா அவ‌னுக்கு எதாவ‌து ஞாப‌கோ வ‌ந்திருந்தா நாம‌ எப்பிடி க‌ண்டுப்புடிக்கிற‌து?



மீரா : ஆமா ச‌ந்ரா. நீ சொல்ற‌தும் செரிதா. அப்பிடி எது அவ‌னுக்கு ஞாப‌கோ வ‌ந்திருக்கும்னு நீ
நெனைக்கிற‌?

ச‌ந்ரா : அர்ஜுனோட‌ பூர்வ‌ ஜென்ம‌ம்.

அங்கு அர்ஜுன்,

அர்ஜுன் : அன்னிக்கு ஞாப‌கோ வ‌ந்த‌து, திரும்ப‌ ஞாப‌கோ வ‌ருது? (ந‌ட‌ந்த‌தை நினைத்துப்பார்த்தான்.)

.....பிளாஷ் பேக்.....



அர்ஜுனுக்கு ஆப்ரேஷ‌ன் ந‌ட‌ந்துக்கொண்டிருந்த‌து. அப்போது அவ‌னுடைய‌ த‌லையில் இருக்கும் புல்ல‌ட்டை டாக்ட‌ர்கள் எடுத்த‌ன‌ர். எடுத்த‌வுட‌ன், அவ‌னுடைய‌ மூளையில் சில‌ மாற்ற‌ங்க‌ள் நிக‌ழ்கிற‌து. அவ‌னுடைய‌ மூளையின் ஒருப்ப‌க்க‌ம் விரிகிற‌து. அந்த‌ விரிவில், அவ‌னுடைய‌ பூர்வ‌ ஜென்ம‌ம் அனைத்தும் அவ‌னுக்கு தெளிவில்லாமல் தெறிகிற‌து. ம‌ய‌க்க‌த்தில் இருக்கும் அர்ஜுனுக்கு அனைத்தும் அரைகுறையாக‌ ஞாப‌க‌ம் வ‌ருகிற‌து.
.....பிளாஷ் பேக் முடிந்த‌து........



அர்ஜுன் : என‌க்கு என்ன‌மோ ஞாப‌கோ வ‌ருது, ஆனா முழுசா ஞாப‌கோ வ‌ர‌மாட்டிங்குது. ஆப்ரேஷ‌னுக்கு அப்றோந்தா இந்த‌ மாதிரியெல்லா ந‌ட‌க்குது. அந்த‌ ஞாப‌க‌ங்க‌ள்ல‌ மொக‌ங்கூட‌ ஒழுங்கா தெறிய‌ல‌யே. என‌க்கே தெரியாம‌ என்னோட‌ வாழ்க்கைல‌ என்ன‌மோ ந‌ட‌ந்திருக்கு. அது என்ன‌ன்னு தெரிஞ்சுக்க‌னும்.

இங்கு மீரா : பூர்வ‌ ஜென்ம்மா?

ச‌ந்ரா : ஆமா மீரா அக்கா. பூர்வ‌ ஜென்ம‌த்துல‌யும் நீங்க‌ என்னோட‌ அக்காதா. உங்க‌ பேரு தாமிரா.

இவ்வாறு பூர்வ‌ ஜென்ம‌த்தில் ந‌ட‌ந்த‌ அனைத்தையும் கூறினாள்.

மீரா : நீ சொல்ற‌து எதுவுமே என‌க்கு புரிய‌ல‌ ச‌ந்ரா. ஆனா ஒன்னு புரியுது. போன‌ ஜென்ம‌த்துல‌ அர்ஜுன் கெட்ட‌வ‌, இந்த‌ ஜென்ம‌த்துல‌ ந‌ல்ல‌வ‌.

ச‌ந்ரா : அதேதா மீரா அக்கா.

மீரா : செரி, இது ஞாப‌கோ வ‌ர்றதால‌ என்ன‌ ந‌ட‌க்க‌ப்போகுது? ந‌ல்ல‌துதான‌?

ச‌ந்ரா : இல்ல‌ மீரா அக்கா. நீங்க‌ நெனைக்கிற‌ மாதிரி அது அவ்ளோ சாத‌ர‌ண‌மான‌ விஷியோ இல்ல‌. அத‌னால‌ அர்ஜுனோட‌ வாழ்க்கையே மாற‌லா.

மீரா : என‌க்கு புரிய‌ல‌.

ச‌ந்ரா : இப்ப‌ ந‌ல்ல‌வ‌னா இருக்கிற‌ அர்ஜுனுக்கு, அவ‌ உதையாவா வாழ்ந்த‌ அவ‌னோட‌ பூர்வ‌ ஜென்மோ ஞாப‌கோ வ‌ந்தா, அர்ஜுன் உதையா மாதிரி மாறுற‌து உறுதி.

மீரா : மாறுனா?

ச‌ந்ரா : அர்ஜுன் அந்த‌ கெட்டவ உதையாவா வாழ‌ ஆர‌ம்பிப்பா. அந்த‌ உதையா அர்ஜுனுக்கு அப்பிடியே ஆப்போசிட். ரொம்ப‌ ரொம்ப‌ கெட்ட‌வ‌. அர்ஜுன் உதையாவா மாறுற‌த‌ நா விரும்ப‌ல‌.

மீரா : அப்பிடின்னா, உன‌க்கு இந்த‌ அர்ஜுன‌ எவ்ளோ புடிக்குமோ, அதே அள‌வுக்கு அந்த‌ உதையாவ‌ பிடிக்காது. அப்பிடித்தான‌?

ச‌ந்ரா : ஆமா மீரா அக்கா. என‌க்கு அந்த‌ உதையாவ‌ சுத்த‌மா பிடிக்காது.

மீரா : ம்ம். அத‌னால‌தா நீ அர்ஜுன‌ காத‌லிக்கிற‌த ஒத்துக்க‌ மாட்டிங்குற‌யா?

ச‌ந்ரா : நா அர்ஜுன‌ காத‌லிக்க‌வே இல்ல‌ மீரா அக்கா.

மீரா : ஏ ச‌ந்ரா? அவ‌ன‌ உன‌க்கு புடிக்கும் இல்ல‌?

ச‌ந்ரா : ஆமா மீரா அக்கா. கெட்டவ அர்ஜுன என‌க்கு ரொம்ப‌ பிடிக்கும். ஆனா அர்ஜுன‌ பிடிச்ச‌ அதே அள‌வுக்கு உதையாவ‌ நா வெறுக்கிறே. நா அர்ஜுன பாக்கும்போதெல்லா, அர்ஜுன்க்குள்ள‌ அந்த‌ உதையா எப்ப‌வுமே தெறியிறா. அத‌னால‌ நானே நென‌ச்சாலு அர்ஜுன‌ காத‌லிக்க‌ முடிய‌ல‌.

மீரா : அப்போ அர்ஜுனுக்கு எல்லா ஞாப‌கோ வ‌ந்து, அவ‌ உதையாவா வாழ‌ ஆர‌ம்பிச்சா, நீ அர்ஜுன‌ வெறுத்திருவியா?

தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-36
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.