பிரம்மாண்டமாக தங்க எழுத்துக்களால் ஏ.கே பேலஸ் என்று எழுதப்பட்டு இருந்த ஆர்ச்சை பார்த்து வியந்த தேன்மொழி,
அவர்களது கார் முன்னே செல்ல செல்ல பிரம்மாண்டமாக தாஜ்மஹாலின் அமைப்பைப் போலவே தங்க நிறத்தில் அழகாக தகதகவென்று ஜொலித்துக் கொண்டு இருந்த அர்ஜுனின் தங்க மாளிகையை கண்டு வாயடைத்து போய்விட்டாள்.
இத்தனை நாட்களாக எதை அவள் ஜெயில் ஜெயில் என்று சொல்லி அவனை வெறுப்பேற்றிக் கொண்டு இருந்தாளோ,
இப்போது அவள் வசித்த அந்த அரண்மனையை அப்படி அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
உள்ளே இருந்து பார்ப்பதை விட வெளியே இருந்து பார்ப்பதற்கு சொர்க்கலோகத்தில் தேவர்கள் வசிக்கும் தங்கத்தாலேயே செய்யப்பட்ட அரண்மனையைப் போல இருந்தது அர்ஜுனின் மாளிகை.
அவள் உலகத்தின் மிகப்பெரிய அதிசயத்தை கண்டுவிட்ட ஆச்சரியத்தில் இருப்பதை கவனித்த அர்ஜுன்,
“இப்ப சொல்லுங்க மேடம் என் பேலஸ் நல்லா இருக்கா..
இல்ல இப்பயும் உன் கண்ணுக்கு இது பாக்குறதுக்கு prison மாதிரி தான் தெரியுதா?” என்று கேட்க,
சட்டென அவனை திரும்பிப் பார்த்த தேன்மொழி,
“இங்க இருந்து பாக்குறதுக்கு எல்லாமே கோல்டன் கலர்ல மின்னுதே..
இது எல்லாமே ரியல் கோல்ட்டா?” என்று நம்ப முடியாமல் கேட்க,
“ஆமா, ரியல் கோல்டு தான். இந்த awesome night view-காகவே 24 carat gold யூஸ் பண்ணி கோல்டு பிளேட்டிங் பண்ணி இருக்கோம்.
உனக்கு இதெல்லாம் புடிச்சிருக்கா?” என்று ஆர்வமாக கேட்டான் அர்ஜுன்.
அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல்,
“இது ரொம்ப பெரிய பேலஸ். நான் நினைச்சதை விட ரொம்ப பெருசு.
சுத்தி எத்தனை ஏக்கரை வளச்சி போட்டு கட்டி இருக்காங்களோ தெரியல..
இதுல மேல தாஜ்மஹால் மாதிரி டிசைன் பண்ணி அது ஃபுல்லா கோல்டு coating வேற பண்ணி இருக்காங்கன்னா..
எத்தனை கோடி செலவாகி இருக்கும்..
பணத்தை தண்ணியா செலவு பண்ணுவாங்கன்னு சொல்லுவாங்களே...
அந்த மாதிரி இவன் என்ன தங்கத்தை தண்ணியா செலவு பண்றான்?
ஒருத்தனால இவ்வளோ பண்ண முடியுதுன்னா,
கண்டிப்பா இந்த உலகத்துல இருக்கிற பணக்காரங்களிலேயே இவன் முக்கியமான ஆளா தான் இருக்கணும்.
அப்ப நான்சி சொன்னது எல்லாமே உண்மை தான்.”
என்று நினைத்து அவனைப் பார்த்த தேன்மொழிக்கு இப்போது வியப்பாகவும்,
அதேசமயம் அவன் அருகில் இப்படி அமர்ந்திருக்கவே பயமாகவும் இருந்தது.
அவனால் செய்ய முடியாதது என்று கண்டிப்பாக எதுவும் இருக்காது என்று அவளுக்கு இப்போது நன்றாக புரிய,
“இவன் இவ்ளோ பெரிய ஆளா இருப்பான்னு தெரியாம நான் வேற இருக்கிற கோவத்துல இவன் கிட்ட ஓவரா வாய் பேசிட்டனே..
அதனால கோபப்பட்டு இவன் பொண்டாட்டி சியாவை இவனே போட்டு தள்ளுன மாதிரி, என்னையும் ஏதாவது பண்றதுக்கு தான் இப்படி தனியா கூட்டிட்டு போறானா?”
என்று ஏதேதோ யோசித்து பயந்த தேன்மொழி அவனைப் பார்த்து திருத்திருவென்று விழித்தாள்.
அவள் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை கவனித்த அர்ஜுன்,
“ஒய்.. குட்டி பிசாசு.. என்ன யோசிச்சிட்டு இருக்க?
உனக்கு இந்த பேலஸ் புடிச்சிருக்கான்னு கேட்டேன்..
நான் பேசுறது உன் காதுல விழுகுதா இல்லையா?”
என்று கொஞ்சம் தன் குரலை உயர்த்தி கேட்க, அவள் பயந்து விட்டாள்.
“ஐயையோ.. நல்லா இருக்கு.. நல்லா இருக்கு.. ரொம்ப நல்லா இருக்கு..!!
இவ்ளோ அழகான பேலசை யாராவது நல்லா இல்லைன்னு சொல்லுவாங்களா?
அப்படி சொன்னாங்கன்னா அவங்களுக்கு தான் அறிவே இல்லைன்னு அர்த்தம் மிஸ்டர் அர்ஜுன்.” என்று தேன்மொழி அவசரமான குரலில் சொல்ல,
“பரவால்ல உனக்கு அறிவு இல்லைன்னு நீயே தெரிஞ்சு வச்சிருக்க..
அட்லீஸ்ட் அந்த அளவுக்கு உனக்கு அறிவு இருக்கேனு நெனச்ச சந்தோஷப்பட்டுக்கலாம்.” என்ற அர்ஜுன் லேசாக அவளை பார்த்து புன்னகைத்தான்.
அப்போது அவன் கன்னத்தின் ஓரம் க்யூட்டாக குழி விழ,
அதை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்த தேன்மொழி அவர்கள் வெளியில் இப்போது காரில் வேகமாக சென்று கொண்டு இருப்பதாலும்,
கார் கண்ணாடி திறந்திருந்ததால் ஜன்னல் வழியாக வந்த குளிர்ந்த காற்று அவன் மீது பட்டதாலும் சிவந்து போயிருந்த அவனது முகத்தை பார்த்தாள்.
பிறந்த குழந்தை அழும்போது அதன் முகம் குங்குமமாக சிவந்திருப்பதைப் போல,
அவனது மாசு மறுவற்ற மென்மையான வெள்ளை நிற தோள் கொண்ட முகம் அந்தக் கண்ண குழியுடன் அத்தனை அழகாக தெரிந்தது.
அதனால் சற்று முன்பு வரை அவனைப் பார்த்து பயந்து கொண்டிருந்த தேன்மொழி இப்போது தன்னையும் அறியாமல்,
தனது ஆள் காட்டி விரலை அவன் முகத்தின் அருகே கொண்டு சென்று அவன் கன்னக்குலியை தொட்டுப் பார்த்து,
“நீங்க சிரிச்சா ரொம்ப ஹாண்ட்ஸாமா இருக்கீங்க..
அதுவும் இந்த டிம்பிள்.. செம அழகா இருக்கு.
நீங்க சரியான டெரர் பீஸுன்னு நெனச்சேன்.
பட் இப்ப உங்கள பாக்க அப்படியே பாலிவுட் மூவிஸ்ல வர்ற சாக்லேட் ஹீரோ மாதிரி இருக்கீங்க!
எப்படி பொண்ணுங்க மாதிரி இவ்ளோ அழகா க்ளியர் ஸ்கின்னை மெயின்டைன் பண்றீங்க?”
என்று தன்னையும் அறியாமல் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து அனைத்தையும் சத்தமாக அவனிடமே சொல்லிவிட்ட தேன்மொழி,
அவளையும் மீறி அவன் கன்னத்தைப் பிடித்து நறுக்கென்று கிள்ளி வைத்து விட்டாள்.
அதனால் அவன் சட்டென அவள் கையைப் பிடித்துக் கொள்ள,
அப்போது தான் அவள் என்ன செய்தாள் என்று அவளுக்கே புரிய,
உடனே தன் நாக்கை கடித்த தேன்மொழி “அச்சச்சோ..
சாரி சார், தெரியாம பண்ணிட்டேன்.
இந்த சின்ன விஷயத்துக்காக எல்லாம் என் மேல கோவப்பட்டு என்னை கொன்னுடாதீங்க.
உங்களுக்கு நான் உங்கள கிள்ளி வச்சதுனால, வலிச்சிருந்தா பதிலுக்கு நீங்களும் வேணா என்னை கிள்ளிருங்க.
நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்..
இதெல்லாம் ஒரு விஷயம்னு இதுக்காக டென்ஷனாகி எந்த தப்பான முடிவும் எடுத்துடாதீங்க..!!”
என்று சொல்லிவிட்டு தன் இரு கண்களையும் மூடிக் கொண்டு அவன் தன்னை கிள்ள விரும்பினால் கிள்ளி கொள்ளட்டும் என்று நினைத்து,
தன் முகத்தை அவன் முகத்திற்கு அருகில் கொண்டு சென்று காட்டினாள்.
தன் புருவங்களை உயர்த்தி அவளை பார்த்த அர்ஜுன் அவனது இரு கைகளாலும் அவள் கன்னங்களை ஏந்தி,
அவள் நெற்றியில் முத்தமிட்டு, “என் உசுரு டி நீ! உன்ன கொன்னுட்டு நான் மட்டும் எப்படி வாழ்வேன்?”
என்று உணர்ச்சிகள் பொங்க கேட்டான்.
அவன் பேசியதைக் கேட்டு வியந்த தேன்மொழி பயத்தில் இறுக்கமாக மூடி இருந்த தன் கண்களை திறந்து அவனை பார்க்க,
அதுவரை தன் கண்களை மூடி இருந்த அர்ஜுனும் கண்ணை திறந்து அவளை பார்க்க,
அவர்கள் கண்கள் நான்கும் மோதிக் கொண்டது.
அவன் கண்கள் குளமாக, அதிலிருந்து வடிந்த நீர் அவன் கன்னத்தை தொட்டது.
அந்த ஒரு சொட்டு கண்ணீர் பேச்சுக்கு கூட அவன் அவளை விட்டு பிரிய விரும்பவில்லை என்று சொல்லாமல் அவளிடம் சொல்லியது.
அந்த நொடி தனது வார்த்தைகள் அவனை எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கிறது என்று புரிந்து கொண்ட தேன்மொழி,
“என்ன நான் சும்மா ஒரு பேச்சுக்கு என்னை கொன்னுடாதீங்கன்னு சொன்னதுக்கு இவன் இப்படி ஃபீல் பண்றான்..!!
அப்புறம் எப்படி இவன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட சியாவை இவனே கொன்றுப்பான்?
என்னால இப்ப வரைக்கும் அதைத்தான் நம்பவே முடியல.
ஆனா அதை வேற யாராவது சொல்லி இருந்தா கூட சந்தேகப்படலாம்.
அத பத்தி என் கிட்ட சொன்னதே அர்ஜுன் தானே..
உண்மையாவே சியாவுக்கு என்ன நடந்துச்சுன்னு எதுவும் புரிய மாட்டேங்குது.
நம்மளே இவன் கிட்ட டைரக்டா ஏதாவது கேட்டாலும்,
எனக்கு தோணும்போது நானே சொல்றேன்னு சொல்லி சமாளிச்சுடுறான்.
என்னமோ போ.. இவனும் சரி..
இவன் வாழ்க்கையும் சரி..
எனக்கு மிஸ்ட்ரியா தான் இருக்கு.”
என்று நினைத்தவள் பெருமூச்சு விட்டுவிட்டு, அவனை விட்டு பிரிந்து நேராக அமர்ந்து கொண்டாள்.
அவர்கள் இருவருக்கும் நடுவிலான காதல் காட்சியை கண்டு லவ் மோடிற்க்கு சென்று இருந்த பிரிட்டோ,
தன் அருகில் அமர்ந்திருந்த கிளாராவை பார்த்தான்.
வழக்கம்போல அவள் இவனை கண்டு கொள்ளாமல் வெளியில் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்க,
ஹான்ட் பிரேக்கை பயன்படுத்துவதைப் போல, வேண்டுமென்றே அவள் கையை பிடித்தான் பிரிட்டோ.
அதனால் கிளாரா அவனை திரும்பிப் பார்த்து முறைக்க,
“சாரி.. சாரி.. தெரியாம பட்டுடுச்சு.” என்று சொல்லி அவன் சமாளிக்க,
“அப்படி தெரியாம கூட படக்கூடாது.
இன்னொரு தடவை இப்படி பண்ண, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” என்று கோபமாக சொன்னாள் கிளாரா.
அவளைப் பாவமாக பார்த்த பிரிட்டோ,
“இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படியே நடிச்சிட்டு இருக்கலாம்னு இருக்க?” என்று உடைந்த குரலில் கேட்க,
“எனக்கு உன் மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல.. அதுதான் உண்மை.
இந்த விஷயத்துல நடிக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.
அன்னைக்கு நான் இங்கிருந்து போகும்போது சீஃப் மட்டும் என்னை ஸ்டாப் பண்ணாம இருந்திருந்தா,
நான் எப்பயும் உன் கண்ணுல பட்டிருக்கவே மாட்டேன்.
நீயே நினைச்சாலும் என்னால உன்ன கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எங்கயாவது தூரமா போயிருப்பேன்.
எனக்கு அவர் மேல இருக்கிற மரியாதையும், அக்கறையும் மட்டும் தான் இன்னும் என்னை இங்க பிடிச்சு வைத்திருக்கு.”
என்று தன் இதயத்தை கல்லாக்கி கொண்டு அவன் முகத்தை பார்க்காமல்,
ஜன்னல் பக்கமாக திரும்பிக் கொண்டு கோபமாக சொன்னாள் கிளாரா.
அவளது வார்த்தைகள் தான் கடுமையாக இருந்ததே தவிர,
அதை சொன்ன அவளது முகத்தில் தெரிந்ததெல்லாம் சோகமும், ஆற்றாமையும் மட்டுமே.
அவள் அப்படி சொன்னவுடன், ஏங்கே தன் மீது இருக்கும் கோபத்தில் இவள் தன்னை விட்டு விலகி சென்று எங்காவது தூரமாக விடுவாளோ!
என்று நினைத்து பயந்த பிரிட்டோ அதற்கு மேல் அவளிடம் ஒரு வார்த்தையும் பேச துணியவில்லை.
என்னதான் அவர்கள் இருவரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டாலும்,
அவர்களது வார்த்தையில் இருந்த கோபத்தையும், வலியையும் புரிந்து கொண்ட தேன்மொழி,
“இதுவரைக்கும் இவங்க எல்லாரையும் நான் என்ன இங்க கடத்திக் கொண்டு வந்த வில்லன்கலா தான் பார்த்தேன்.
ஆனா இன்னைக்கு என்னமோ இவங்களும் என்ன மாதிரி ஒரு சாதாரண மனுஷங்களா என் கண்ணுக்கு தெரியுறாங்க.”
என்று நினைத்து அர்ஜுனை பார்த்தவள்,
பணக்காரங்களா இருந்தா என்ன?
இவங்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு.
பாஸ் என்ன சொன்னாலும் அதைக் கேட்டு செய்ற அடிமை மாதிரி இங்க வேலை பாக்குற இவங்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு.” என்று நினைத்து கிளாராவையும் பிரிட்டோவையும் பார்த்தாள்.
அப்போது காருக்குள் முன்னே இருந்த சிறிய கண்ணாடியில் அவள் முகம் தெரிய,
அதில் தெரிந்த தனது அழகிய முகத்தை பார்த்து தனக்குள் விரக்தியுடன் சிரித்து கொண்ட தேன்மொழிக்கு,
“உங்க எல்லாரையும் மாதிரி தான் எனக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு.
ஆனா அதைப்பத்தி தான் நீங்க யாரும் கவலைப்பட மாட்டேங்கறீங்க.” என்று தோன்ற,
அங்கே இருக்கும் அனைவரையும் விடவும் அவளது வாழ்க்கை தான் கவலைக்கிடமாக இருப்பதாக நினைத்தாள் அவள்.
அப்போது அவர்களது கார் சிட்டிக்குள் நுழைந்திருந்ததால்,
வானளாவிய கட்டிடங்களும், அதில் இருந்த ஜொலி ஜொலிக்கும் பலவண்ண லைட்டுகளால் செய்யப்பட்ட அலங்காரங்களும் அவளது கண்களை பறிக்க,
தனது என்ன ஓட்டங்களில் இருந்து வெளி வந்த தேன்மொழி மீண்டும் வெளியில் தெரிந்த காட்சிகளை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-36
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.