CHAPTER-35

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
டாக்ட‌ர்ஸ், ஆப்ரேஷ‌னில் அர்ஜுனுடைய‌ த‌லையில் இருந்த‌ புல்ல‌ட்டை எடுத்த‌ன‌ர். எடுத்த‌வுட‌ன் அர்ஜுனின் மூளையில் சில‌ நினைவுக‌ள் பிரிந்து, ஒரு விரிவு உண்டாகிற‌து. அவ‌னுடைய‌ மூளையில் சில‌ மாற்ற‌ங்க‌ள் நிக‌ழ்கிற‌து.



டாக்ட‌ர் வெளியே வ‌ந்தார். ச‌ந்ராவும் மீராவும் டாக்ட‌ரிட‌ம் விசாரித்த‌ன‌ர்.

டாக்ட‌ர் : ஆப்ரேஷ‌ன் ந‌ல்ல‌ப‌டியா முடிஞ்ச‌து. அவ‌ரு இப்போ ஜெனரல் வார்டுல‌ இருக்காரு. இன்னும் கொஞ்ச‌ நேர‌த்துல‌ அவ‌ருக்கு சுயநினைவு வ‌ந்திரும். அப்ற‌மா நீங்க‌ போய் பாக்க‌லா.

ச‌ந்ரா : தேங்க் யூ சோ மச் டாக்டர்.

மீரா : தேங்க் யூ டாக்டர்.

டாக்ட‌ர் : இட்ஸ் ஓகே.

ச‌ந்ரா : டாக்ட‌ர், அர்ஜுனுக்கு ப‌ழ‌செல்லா ஞாப‌கோ இருக்கில்ல‌?

டாக்ட‌ர் : நா ஏற்க்க‌ன‌வே சொன்ன‌துதா Mrs. ச‌ந்ரா. அவ‌ருக்கு ப‌ழ‌செல்லா ம‌ற‌ந்திருக்கும், இல்ல‌ன்னா அவ‌ரு வாழ்க்கைல‌ ம‌ற‌ந்துப்போன‌து ஞாப‌க‌ம் வ‌ந்திருக்கும். இதுல‌ ஏதாவ‌து ஒன்னு க‌ண்டிப்பா ந‌ட‌க்கும். அத‌ மாத்த‌வே முடியாது.

டாக்ட‌ர் சென்றுவிட்டார்.

ச‌ந்ரா : க‌ண்டிப்பா அர்ஜுன் என்ன‌ ம‌ற‌க்க‌மாட்டால்ல‌ மீரா அக்கா?



மீரா : நீ ப‌ய‌ப்படாத‌ ச‌ந்ரா. அப்பிடி எதுவும் ந‌ட‌க்காது.

ச‌ந்ரா : நீங்க‌ சொல்ற‌மாதிரி ம‌ட்டு ந‌ட‌ந்தா ந‌ல்லா இருக்கும் மீரா அக்கா.

சிறிது நேர‌ம் க‌ழித்து அர்ஜுனுக்கு சுயநினைவு வ‌ருகிற‌து. உட‌னே டாக்ட‌ர் வெளியே சென்று,

டாக்ட‌ர் : Mrs.ச‌ந்ரா ! உங்க‌ Husband க‌ண்ண‌ முழிச்சிட்டாரு. நீங்க‌ போய் பாக்க‌லா.

ச‌ந்ரா : தேங்க் யூ டாக்டர். வாங்க‌ மீரா அக்கா.

டாக்ட‌ர் : ஒரு நிமிஷோ.

ச‌ந்ரா : சொல்லுங்க‌ டாக்ட‌ர்.

டாக்ட‌ர் : ஒருவேள‌ அவ‌ரு எல்லாத்தையும் ம‌ற‌ந்திருந்தா, எல்லாத்தையும் ஞாப‌க‌ப்ப‌டுத்த‌ முய‌ற்ச்சி ப‌ண்ற‌ன்னு சொல்லி, அவ‌ர‌ ரொம்ப‌ தொந்த‌ர‌வு ப‌ண்ணாதீங்க‌.

ச‌ந்ரா : அப்ப‌ அர்ஜுன் எல்லாத்தையும் ம‌ற‌ந்துட்டானா?

டாக்ட‌ர் : அர்ஜுன் இப்ப‌தா க‌ண்முழிச்சிருக்காரு. நீங்க‌ போய் அவ‌ர்கிட்ட‌ பேசுனாதா, உங்க‌ள‌ அவ‌ருக்கு ஞாப‌கோ இருக்கா இல்லையான்னு தெரியும்.

மீரா : அப்ப‌ அவ‌னுக்கு நாங்க‌ சொல்லி புரிய‌ வெக்க‌ முடியாதா டாக்ட‌ர்? நாங்க‌ யாருன்னு.

டாக்ட‌ர் : நீங்க‌ அப்பிடி ப‌ண்ற‌து அவ‌ரோட‌ உயிருக்கு ஆப‌த்தாக்கூட‌ முடிய‌லா. அத‌ ம‌ட்டு ப‌ண்ண‌ முய‌ற்ச்சி ப‌ண்ணாதீங்க‌.

ச‌ந்ரா : செரிங்க‌ டாக்ட‌ர். நாங்க‌ போய் மொத‌ல்ல‌ அர்ஜுன‌ பாக்குறோ. வாங்க‌ மீரா அக்கா.

மீராவும் ச‌ந்ராவும் அர்ஜுனை பார்க்க‌ சென்ற‌ன‌ர். ச‌ந்ரா அர்ஜுனிட‌ம் சென்ற‌தும்,

ச‌ந்ரா : அர்ஜுன் !

அர்ஜுன் ச‌ந்ராவை பார்த்தான். ச‌ந்ரா மிகுந்த‌ எதிர்ப்பார்ப்புட‌ன்,

ச‌ந்ரா : அர்ஜுன் உன‌க்கு என்ன‌ தெரியுதா?

அர்ஜுன் : நீ.......

ச‌ந்ரா : சொல்லு அர்ஜுன். நா...



அர்ஜுன் : நீ யாரு?

ச‌ந்ரா : (ப‌ய‌த்துட‌ன்) அர்ஜுன் நா உன்னோட‌ ம‌னைவி ச‌ந்ரா. என்ன‌ ஞாப‌கோ இல்லையா?

அர்ஜுன் : இல்ல‌ என‌க்கு தெரில‌. என‌க்கு க‌ல்யாணோ ஆயிரிச்சா? எப்போ? உன்ன‌ நா பாத்த‌தே இல்லையே?

ச‌ந்ரா : அர்ஜுன் உன‌க்கு எதுவுமே ஞாப‌கோ இல்லையா? என்ன‌ ந‌ல்லா பாரு அர்ஜுன். அப்றோ இவ‌ங்க‌ள‌ பாரு, இவ‌ங்க‌ என்னோட‌ அக்கா மீரா. இவ‌ங்க‌ளையும் உன‌க்கு தெரிய‌லையா?

அர்ஜுன் : இப்போ தெரிஞ்சிருச்சு.

ச‌ந்ரா : ஞாப‌கோ வ‌ந்திரிச்சா? என்ன‌ன்னு சொல்லு?

அர்ஜுன் : உன‌க்கு த‌லையில‌ அடிப்ப‌ட்டிருச்சுதான‌?

ச‌ந்ரா : என‌க்கு இல்ல‌. உன‌க்குதா அடிப்ப‌ட்டிருக்கு.

அர்ஜுன் : அப்றோ நீ ஏ இப்பிடி பைதிய‌ம் மாதிரி பேசுற‌?

ச‌ந்ரா : நானா?

அர்ஜுன் : ஆமா. என‌க்கு உன்னையே யாருன்னு தெரில‌, இதுல‌ நீ உங்க‌ அக்காவ‌ தெரியுதான்னு கேக்குற‌. அப்போ நீ பைதியோ தான‌?

மீரா : அர்ஜுன், கொஞ்சோ ந‌ல்லா யோசிச்சு பாரு அர்ஜுன். உன‌க்கு உண்மையில‌யே நாங்க‌ யாருன்னு தெரிய‌லையா?

அர்ஜுன் : ஐயோ! நாந்தா சொல்ற‌ல்ல‌, உங்க‌ள‌ நா இதுவ‌ரிக்கும் பாத்த‌தே இல்ல‌. பிலீஸ் என்ன‌ கொஞ்சோ நிம்ம‌தியா இருக்க‌விடுங்க‌.

ச‌ந்ரா : (அழுதுக்கொண்டே) ஆனா அர்ஜுன், நீ எப்பிடி என்ன‌ ம‌ற‌ந்த‌? நீ என்ன‌ எவ்ளோ காத‌லிச்ச‌? கொஞ்சோ யோசிச்சு பாரு.



மீரா : ச‌ந்ரா! நீ அவ‌ன‌ தொந்த‌ர‌வு ப‌ண்ணாத‌. வா ந‌ம்ப‌ வெளிய போலா.

ச‌ந்ரா : (அழுதுக்கொண்டே) மீரா அக்கா, அர்ஜுனுக்கு என்ன‌ யாருன்னே தெரிய‌ல‌.

மீரா : டாக்ட‌ர்தா சொல்லியிருக்காங்க‌ல்ல‌? ஒருவேள‌ அவ‌னுக்கு எல்லாமே ம‌ற‌ந்துப்போனா, நாம‌ அவ‌னுக்கு புரிய‌ வெக்க‌க்கூடாது. அது அவ‌னுக்கு உயிருக்கே ஆப‌த்தா முடியும்.

ச‌ந்ரா : (அழுகையுட‌ன்) இல்ல‌ மீரா அக்கா. நா வ‌ர‌ மாட்டே. அர்ஜுன் நீ எப்பிடி என்ன‌ ம‌ற‌ந்த‌? சொல்லு. என்ன‌க் காப்பாத்த‌தா நீ அந்த‌ குண்ட‌ உன்னோட‌ த‌லையில‌ வாங்குன‌. நீ அப்போ என்ன‌ அவ்ளோ காத‌லிச்ச‌. ஆனா,



அர்ஜுன் : இப்ப‌வும் காத‌லிக்கிறே.

ச‌ந்ரா ப‌ய‌ங்க‌ர‌ அதிர்ச்சியுட‌ன் அர்ஜுனை பார்த்தாள்.

ச‌ந்ரா : என்ன‌?



அர்ஜுன் : (சிரிப்புட‌ன்) நா அப்போ ம‌ட்டு இல்ல‌, இப்ப‌வும் என்னோட‌ பொன்டாட்டிய‌ காத‌லிக்கிறே.

ச‌ந்ரா : (பொறாமை க‌ல‌ந்த‌ ப‌ய‌த்துட‌ன்) நீ வேற‌ யார‌ ப‌த்தி பேசுற‌? நாந்தா உன்னோட‌ பொன்டாட்டி. நீ என்ன‌தா அப்பிடி கூப்புடுவ‌?

அர்ஜுன் : (காத‌லுட‌ன்) நா உன்னதா சொல்றே ஸ்வீட் ஹார்ட்.

தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-35
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.