பாகம் -35
என்னங்க நீங்க?
இந்த நங்கைய இப்படியே விட்டுட்டு இருக்கீங்க?
அவ கிட்டே எப்படியாவது பேசணும் அதுக்கு ஏதாவது ஒரு ஏற்பாடு பண்ணுங்க.
கொஞ்சம் அவசர படாம பொறுமையா இரு மாதங்கி. எல்லாத்தையும் எடுத்தோம் கவ்தோம்னு செய்ய முடியாது. அது மட்டும் இல்லாம இது வெளிய தெரிஞ்சுச்சுனா நமக்கு ரொம்ப பெரிய பிரச்சனையில கொண்டு போயி முடிக்கும்.
ஆமாங்க நீங்க சொல்றதும் சரிதான் ஆனால் நாள் போய்க்கிட்டே இருக்கு நம்ம கிட்டே அவ்வளவு டைம் இல்ல அவளுக்கு வேற இப்போ கல்யாணம் ஆயிடுச்சு.
அதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன் உன் தம்பிய வர சொல்லு சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சிரலாமுனு நீ தான் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொன்ன இப்போ பாத்தியா விஷயம் நம்ம கையை மீறி போச்சு.
கவலைப்படாதீங்க அவளை எப்படி வழிக்கி கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் அவளை பார்க்கறதுக்கு மட்டும் எப்படி ஆச்சு ஏற்பாடு பண்ணுங்க.
சரி நீ கவலைப்படாத அதுக்கு நான் ஏதாவது ஒரு பிளான் பண்றேன்.
ம்ம் பார்க்கலாம்?
நம்ம பண்ற இந்த விஷயம் சத்யாவுக்கு தெரியவே கூடாது அவ நங்க மேல ரொம்ப அன்பா அக்கறையா இருக்கா.
பிறந்தது என்னவோ என் வயித்துல ஆனா கூட பிறந்த அக்காவை விட்டுட்டு இந்த நங்க பின்னாடி அக்கா அக்கான்னு சுத்திக்கிட்டு திரியுறா.
ஆமாம் மாதங்கி எப்படி இருந்தாலும் இந்த விஷயம் சத்யாவுக்கு தெரிஞ்சிடவே கூடாது.
ம்ம்.....
நல்ல வேலை அவ ஹாஸ்டல் போய்ட்டா இனி நமக்கு எந்த கவலையும் இல்லை.
என்ன?
சத்யா ஹாஸ்டல்க்கு போயிட்டாலா
என்றபடி மாடிப்படியில் இறங்கி வந்தால் வித்யா?
வா வித்யா சத்யா நேத்தே போயிட்டா ஏன் உன் கிட்ட சொல்லலையா?
இல்ல அவ எங்க என்ன அக்காவா மதிக்கிறா ஒரு மனுஷியா கூட மதிக்க மாட்டேங்குறா.
சிறு வயதிலிருந்து சத்யாவை வித்யாவிற்கு ரொம்ப பிடிக்கும். சத்யாவிற்கு ஒன்று வேண்டுமென்றால் அதை உடனே விட்டுக் கொடுத்து விடுவாள் வித்யா ஆனால் அதை வெளியே காட்டிக்கவும் மாட்டாள்.
எல்லா மனிதர்களிடத்திலும் இரண்டு பக்கங்கள் இருக்கும் அதில் ஒன்று நன்மையானதாகவும் மற்றொன்று தீமையானதாக இருக்கும் சிலருக்கு நன்மையின் முகம் மட்டுமே வெளியே தெரியும் சிலருக்கு தீமையின் முகம் மட்டுமே வெளியே தெரியும் அது போலவே வித்யா விற்கும்.
சத்யாவும் வித்யாவின் ஒரு பக்கத்தையே பார்க்கிறாள்.
என்ன ஷ்யாம் சத்யா என்ன சொன்னா?
என்னம்மா அவ இந்த மெசேஜ் க்கும் ரிப்ளை பண்ணவே இல்ல ஆனா எல்லா மெசேஜும் பாக்குறா.
உன் மெசேஜ் எல்லாம் பாக்குறா இல்ல அப்போ கண்டிப்பா அவ மனசுல இன்னும் நீ இருக்க.
நீ ஒன்னு பண்ணு ஷியாம் பேசாம கொஞ்ச நாளைக்கு நீ இந்தியாவிலேயே மாறன் வீட்டில ஸ்டே பண்ணு.
போ நேரா போய் சமாதானப்படுத்து.
அவளுக்கு உன் காதல உணர்த்து அவள புரிஞ்சுக்கவை. இத்தனை நாள் அவ உன் பின்னாடி வந்தப்ப நீ அவளை ஏத்துக்கல.
இப்போ உனக்கு வலிக்கிற மாதிரி தானே அப்போ அவளுக்கு வலிச்சிருக்கும்.
நீ நேர்ல போனா கண்டிப்பா அவளால உன்ன வேணான்னு சொல்லவே முடியாது என்றார் ஷ்யாம்மின் அன்னை.
இல்லம்மா உங்கள தனியா விட்டுட்டு என்னால எப்படி போக முடியும் நீங்க தனியா இருக்க முடியாது அதுவும் இல்லாம இங்க நம்ம பிசினஸ் எல்லாம் என்ன ஆகிறது? எதையும் யோசிக்காமல் என்னால ஒரு முடிவுக்கு வர முடியாது மா.
என்னடா பிசினஸ் எனக்கு தெரியாதா உங்க அப்பா எனக்கு எப்பவுமே ஒரு சிறந்த நண்பர் ஆ தான் இருந்திருக்காரு.எல்லாம் சொல்லியும் தந்து இருக்காரு.
உங்க பிசினஸ் எல்லாம் நான் பார்த்துக்கிறேன் புரியுதா என்ன எனக்கு இப்போ கொஞ்சம் வயசாயிடுச்சு அவ்வளவுதான் உடம்புக்கு தான் வயசாகும் மூளைக்கு இல்லை.
நான் பாத்துப்பேன் நீ போய் உன் லைஃப்ஃப பாரு இனிமே ஆச்சும் உன் லைஃப் நீ வாழு.அடுத்தவங்களுக்காக உன் வாழ்க்கையை தியாகம் பண்ணுனது போதும்.
உன் வாழ்க்கையை இப்பயாச்சும் நீ வாழ கத்துக்கோ.
நா வாழ்ந்து முடித்தவ, நான் சாகறதுக்குள்ள என் மருமகளை பாக்கணும் பேர பிள்ளைங்க கூட விளையாடனும்.
எனக்கும் என் பேர பிள்ளைங்க கூட விளையாடனும் ஆசை இருக்காதா ஷியாம்.
அப்படி உனக்கு ஒரு துணையை அமைத்துக் கொடுக்காம நான் போயிட்டா என் ஆத்மா என்னைக்குமே என்னைய மன்னிக்காது சாந்தியும் அடையாது.
சரிங்கம்மா கண்டிப்பா நான் வரும்போது சத்யா ஓடத்தான் வருவேன்.
நானும் இந்தியா சீக்கிரமாவே கிளம்பறேன். இப்ப கொஞ்சம் அசைன்மென்ட் சைன் பண்ண வேண்டியது இருக்கு அந்த ப்ராஜெக்ட் எல்லாம் என்னன்னு பாத்துட்டு இந்த ஒன் வீக்குக்குள்ள நான் கிளம்புறேன்.
என்றபடி ஷாம் தன் அன்னையிடம் கூற,
ஷ்யாம் நீ நல்லா இருக்கணும் என்றபடி
மெலிதாக புன்னகைத்தார் ஷ்யாம்மின் நெற்றியை முத்தமிட்டு.
காலையில் வேலைகள் அனைத்தையும் முடித்த நங்கை வீட்டை சுத்தம் செய்வதற்காக ஒவ்வொரு அறையையும் சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.
அவள் இந்த வேலை எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை தான் ஆனாலும் அன்பரசன் வீட்டில் வேலை செய்து பழக்கப்பட்டவள் இங்கு அவளால் வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை அதற்காகவே ஏதாவது ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டே இருப்பாள் நங்கை.
அப்பாடா ஒரு வழியா எல்லா ரூமும் சுத்தம் செஞ்சாட்சி...
இது அத்தை ரூமுனு சரண்யா மா சொன்னங்களே.
பூட்டி இருக்கு?
என்றவள்.
மாறன் சார் வேற வீட்ல இல்ல சாவி எங்க வச்சிருக்காங்கன்னு தெரியலையே.
சரி நம்ம கிட்ட தான் ஹேர் பின் இருக்கே.
என்ன திறக்க மாட்டேங்குது.
நாக்கை இதழின் ஒரு ஓரத்தில் 😋 தள்ளி மேல்நோக்கி பார்த்துக் கொண்டே திறந்திடு திறந்திடு என்று சொல்லிக் திருக பூட்டு திறக்கப்பட்டது.
அப்பாடா ஒரு வழியா திறந்திருச்சசு.
உள்ளே நுழைந்தால் நங்கை.
அங்கே நுழைந்த உடன் ஏதோ இனம் புரியாத, அறியாத ஒரு நிம்மதி அவள் மனதில் பரவியது.
அறையை சுற்றும் மற்றும் பார்த்தவள்.
இவ்ளோ பெரிய ரூம்.
ரொம்ப அழகா வச்சிருக்காங்க ஒரு தூசி கூட இங்க இல்ல.
வந்தது வேஸ்ட் போல இருக்கே.
மேசையில் மாறனின் பரிசுகள் மெடல்கள் சான்றிதழ்கள் என அவன் வெற்றி பெற்ற அனைத்து பரிசுப் பொருட்களும் அடுக்கப்பட்டு இருந்தது.
ஒவ்வொரு பொருளாக எடுத்து அதை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
பரவா இல்லையே?
மாறன் சார் ரொம்ப டேலண்ட் தான்.
அப்போது ஒரு அலமாரி மூடப்பட்ட நிலையில் இருக்க அதன் அருகில் சென்றவள் அதை திறந்தால் நங்கை.
கண்கள் விரிய😲
சந்தோஷத்துடன் என்ன இது
ஐ. நம்ம மாறன் சாரு....ஃபோட்டோ.
பிறந்தது முதல் பள்ளி பருவம் வரை வித வித மாக எடுக்கப்பட்ட மாறனின் சிறு வயது புகைப்படங்கள்.
ரொம்ப அழகா இருக்காரு சின்ன வயசுல. எண்ணி கொண்டவள் இப்ப மட்டும் என்ன ரொம்ப அழகாத்தான் இருக்காரு.☺️
எல்லா போட்டாலையும் ஏன் இப்படி மூஞ்ச உர்ருனு வச்சிருப்பாரோ என்றபடி மற்றொரு புகைப்படத்தை எடுத்து பார்க்க அதில் மட்டும் புன்னகைத்திருந்தான். மாறன்.
என்னடா இது எந்த ஒரு போட்டோல மட்டும் இப்படி சந்தோஷமா போஸ் கொடுத்திருக்காரு.
ஏனென்றால் அதில் அவள் என்னை சீத்தாவும் கூட இருந்தார்.
அப்பொழுதுதான் சீதாவை முதல் முறை பார்த்தால் நங்கை.
எவ்ளோ அழகா இருக்காங்க.
அண்ணாந்து பார்த்த நங்கை.
அம்மாடி!
எவ்ளோ பெரிய ஃபோட்டோ என்று வியப்பில் ஆழ்ந்தாள்
அங்கு வைக்க பட்டு இருந்த ஆள் உயர சீதாவின் புகைப்படம்.
நேருல இருக்கற மாதிரியே இருக்கு.
இத ஏன் இங்க வச்சிருக்காங்க?
ஹால்ல மாட்னா எவ்வளவு அழகா இருக்கும்.
அதுவும் இல்லாம அத்த போட்டோ இந்த வீட்ல எங்கேயும் இல்ல.
சரி இத நம்ம எடுத்துட்டு போய் மாட்டுவோம்.
என்றபடி புகைப்படத்தை தூக்க,
முடியாமல் தள்ளாடியபடி தூக்கியவள் பிடிமானம் இல்லாமல் போக
அது ஒரு கணத்தில் கீழே விழுந்து நொறுங்கியது .
கண்ணாடி துகள்கள் அறை முழுக்க தெறித்து சிதறியது.
அதே சமயம் வீடு வந்த மாறனும்
ஒசைக்கேட்டு ஓடி வந்தான் .
தன் தாயின் அறை திறந்திருக்க விழித்தவன்
அறைக்குள் நுழைந்தவன் பார்வை அங்கு தன் தாயின் புகைப்படம் சுக்குநூறாக உடைக்கபட்டிருப்பதை பார்த்து.
கண்கள் கலங்கி மா 🥺
மெல்ல அருகில் நடந்து சென்றான்.
தன் கையால் கண்ணாடி துண்டுகளை புகைப்படத்தின் மேல் இருந்து நீக்க
அவன் கைகளில் ஒருக்கண்ணாடி துண்டு கிழித்து ரத்தம் சொட்டு🩸 சொட்டாக வழிய துவங்கியது.
மாறன் சார்????!!!!!
என்று நங்கை அழைக்க திரும்பிப் பார்த்தவன்,
கண்கள் சிவக்க இருதுளி நீருடன் அவளை முறைதான்.
உன்ன யாரு இந்த ரூமுக்கு வர சொன்னது.
கர்ஜிக்கும் குரலில் கேட்க.
அது,
அது வந்து
என்று பயந்து நடுங்கிக் கொண்டே,
நான் இங்க கிளீன் பண்ண தான் வந்தேன் சார் அத்தை போட்டோவை பார்த்து ஹால்ல மாட்டலாமுனு எடுத்தேன்
அது கீழே தவறி விழுந்திருச்சு
நான்
வேணும்னு பண்ணல சார் என்று குரல் நடுங்க கண்ணீருடன் கூறினாள்.
அவள் கூறியதை அவன் சற்றும் பொருட்படுத்த வில்லை.
தெரியாம நடந்துருட்சி என்று சொல்லிக்கொண்டே புகைப்படத்தை தொட
டோண்ட் டச்.....
எங்க அம்மாவ நீ தொடாத.
என்று கத்தியவன்.
உனக்கு நான் ரொம்ப இடம் கொடுத்துட்டேன் டி.
அதுதான் ரொம்ப எள்ள மீறி உரிமை எடுத்துக்கற.
என் அனுமதி இல்லாமல் எப்படி நீ எங்க அம்மா ரூம்குள்ள வரலாம்?
இது என்ன உங்க அப்பன் வீடா?
என்றதும் தலை குனிந்து நின்று கொண்டு இருந்தவள் சடாரென்று நிமிர்ந்து கண்கள் விரிய மாறன் வழிகளை நேருக்கு நேர் பார்த்தாள்.
கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க அதை அழுந்த துடைத்தவள்
என்ன மன்னிச்சிடுங்க சார்.
இனி உங்க பர்மிஷன் இல்லாம நான் எதையும் செய்ய மாட்டேன்.
இந்த ரூமுக்கு நான் இனி எப்பயும் வர மாட்டேன்.
என்ன மன்னிச்சிடுங்க சார்.
என்று அழுது தேம்ப
இங்கிருந்து போ என் கண்ணு முன்னாடி நிக்காத.
கைகளில் இருந்து வழிந்த ரத்தம் சீதாவின் புகைப்படத்தில் சொட்டு சொட்டாக விழ
இதை கவனித்தவள்
மாறன் சார் பாருங்க ரத்தம் வருது என்று பதறி கொண்டு கைகளை பற்றினாள்.
கண்ணீர் நில்லாமல் அருவி என பெருக்கெடுக்க தன் துப்பட்டாவை கிழித்து மாறன் கைகளில் கட்டு போட்டு விட கைகளை எந்தியவள்
வழியும் இரத்தத்தை பார்த்து துடித்து போனாள்.
ஆனால் அவள் உதவி எதையும் ஏற்காமல் கைகளை இழுத்து அவளை பின்னோக்கி தள்ளினான் மாறன்.
அவன் தள்ளி விட்டதில் பின்னே விழ அதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் எழுந்து
பயத்தை தன் மனதிற்குள் வைத்துக் கொண்டு வெளியே காட்டாமல்
அழுதபடி சார் பிளட் ரொம்ப அதிகமா போகுது இப்படியே போனா ரொம்ப கஷ்டமா போயிடும் ப்ளீஸ்.
காயம் ரொம்ப ஆழமா இருக்கும் போலே.
ஜஸ்ட் ஸ்டாப் இட்
லீவ் மீ அலோன்....
கெட் அவுட்
சார் நான்
போ......
கத்திகொண்டே பக்கத்தில் இருந்த மேசையை நோக்கி குத்த மீண்டும் கைகள் கிழிந்து இரத்தம் வர தொடங்கியது .
அதைக் கண்டவழுக்கு உடல் வெட வெடத்து வியர்த்துக் கொட்ட
அவன் கர்ஜனைக்குரல் வீடு முழுவதும் ஒலித்தது. அங்கு வேலை செய்யும் அனைவரும் கீழே கூடி விட்டனர்.
அபொழுதும் அவள் மனம் கேட்கவில்லை,
மாறனை கண்டு அவள் மனம் வலிக்க
சத்தம்போட்டு அழுதாள்.
நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க சார் என்று கைகளை தொடப் போக
என் கண்ணு முன்னாடி நிக்காத என்று கையை
தொட அனுமதிக்கவிடாமல்
பிடிவாதம் பிடிதான்.
சார் என்ன மன்னிச்சிடுங்க நான் வேணும்னு இது செய்யல. புரிஞ்சுக்கோங்க!
உன்ன யாருடி இந்த ரூம்க்கு வர சொன்ன.
🥺இந்த சின்ன விஷயத்துக்காக ஏன் சார் இப்படி கோபப்படுறீங்க?
வந்ததே அவனுக்கு கோபம்.
எதுடி சின்ன விஷயம்?
என்று கூறி நங்கை சுவற்றோடு அழுத்தி அவள் கழுத்தை இறுக பிடித்து அழுத்தினான்.
பாவம் நங்கைக்கு ஒன்றுமே புரியவில்லை.
எது டி சின்ன விஷயம்.
எங்க அம்மா போட்டோவ நீ ஒடச்சிருக்க அது உனக்கு சின்ன விஷயமா டி.
தொடரும்
Shahiabi.writter ✍🏻

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -35
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.