மகேஷை அவளது அறையை விட்டு வெளியே அனுப்பிய தேன்மொழி சோகமாக சென்று சோஃபாவில் அமர்ந்தாள்.
ஒருபுறம் அர்ஜூனுக்கு என்ன ஆனதோ என்று நினைத்து அவள் மனம் அவனைப் நேராக சென்று பார்த்தால் நன்றாக இருக்குமே என்று அடித்துக்கொள்ள,
இன்னொரு பக்கம், “நான் என் ஃபேமிலிய பிரிஞ்சு அவங்க இல்லாம இப்ப கஷ்டப்பட்டு இருக்கிறதுக்கு காரணமே அவன் தானே!
அவன் மேல எனக்கு என்ன அக்கறை வேண்டி கிடைக்குது?
நான் போய் இப்ப எதுக்கு அவனை பாக்கணும்?” என்று நினைத்து முறுக்கிக் கொண்டாள்.
ஆனால் அப்போதும் “நம்மள கடத்தி இங்க கூட்டிட்டு வந்தது ஒன்னும் அர்ஜுன் இல்லையே..
அவன் கோமாவுல இருக்கும்போது தானே அது எல்லாமே நடந்துச்சு..” என்று அவள் மனசாட்சி அவனுக்காக பரிந்து பேச,
“அவன் கோமால இருக்கும்போது தான் அவனுக்கு எதுவும் தெரியலன்னு சொல்லலாம்.
நார்மல் ஆனதுக்கு அப்புறம் அவன் நல்லவனா இருந்திருந்தா,
என்னையும் என் ஃபேமிலியையும் பத்தி அவன் இந்நேரம் யோசித்து இருக்கனும் இல்ல!
அவன் சரியான செல்பிஷ். அவனைப் பத்தி மட்டும் தான் அவன் யோசிப்பான்.
அப்படி இருக்கிறவன பத்தி நான் மட்டும் எதுக்கு யோசிக்கணும்?”
என்று நினைத்து தன் மனசாட்சியை ஆஃப் செய்துவிட்ட தேன்மொழி எழுந்து வாஷிங் ஏரியாவிற்கு சென்று தன் முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தாள்.
அவள் அங்கே வரவும், அர்ஜுன் மெல்ல நடந்து உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அவனைப் பார்த்தவுடன் அவள் பார்வை தானாக அவன் கையில் இருந்த பெரிய கட்டை நோக்கி செல்ல,
“என்ன ஆச்சு உங்களுக்கு?
நீங்க வெளிய போயிட்டு வரும்போது எங்கிருந்து வரீங்க?
யார் கூடயாவது சண்டை போட்டுட்டு வந்தீங்களான்னு நான் அப்பவே கேட்டேன்.
ஆனா நீங்க அப்பயும் நான் கேட்டதுக்கு ஆன்சர் பண்ணல.
இப்ப மறுபடியும் உங்களுக்கு டாக்டர்ஸ் வந்து ட்ரீட்மென்ட் குடுத்திருக்காங்க..
அதை பத்தியும் என் கிட்ட சொல்லல.
நான் இங்க பேருக்கு தான் இருக்கிறேன் போல..
மத்தபடி என்ன சுத்தி இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு எதுவும் தெரிய மாட்டேங்குது.”
என்று என்னவோ அவன் உண்மையான மனைவி போல அவனை நினைத்து வருந்தி அவன் மீது இருக்கும் கோபத்தில் அப்படி கேட்டாள் தேன்மொழி.
அவள் தன் மீது உரிமை எடுத்துக் கொண்டு பேசுவது அவனுக்கும் பிடித்திருந்தது.
இருப்பினும் என்ன நடந்தது என்று அவளிடம் விளக்கி சொல்லி நடந்து அனைத்தையும் ஞாபகப்படுத்தி தனது நல்ல மூடை தானே கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்த அர்ஜுன்,
“நான் உன் கிட்ட எதையும் மறைக்கணும்னு நினைக்கல ஹனி.
நீ என்ன பத்தி யோசிச்சு கவலைப்படாத.
நீ என் கூட இருக்கிற வரைக்கும் நான் நல்லா தான் இருப்பேன்.
என்ன பத்தி எதுவுமே தெரியாம, என் கூட வாழ்றது உனக்கு கஷ்டமா தான் இருக்கும். எனக்கு புரியுது.
பட் நான் இன்னைக்கு கொஞ்சம் நல்ல மூட்ல இருக்கேன்.
சோ நம்ம இத பத்தி எல்லாம் இப்ப பேச வேண்டாம்.
Please trust me, எப்போ எனக்கா எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லனும்னு தோணுதோ,
அப்ப கண்டிப்பா நான் எதயும் மறைக்காம உன் கிட்ட சொல்லுவேன்.
நாளைக்கு எனக்கு ஆபீஸ்ல ஒரு இம்பார்டன்ட் ஒர்க் இருக்கு.
சோ இன்னைக்கு ஃபுல்லா நான் உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நினைக்கிறேன்.
நீ சீக்கிரம் ரெடியாகு. நம்ம ரெண்டு பேரும் வெளிய போகலாம்.” என்றான்.
அவன் இப்போதும் தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவன் என்ன நினைக்கிறானோ அதை மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறான் என நினைத்து கோபப்பட்ட தேன்மொழி,
“எனக்கெல்லாம் எங்கயும் வெளிய போறதுக்கு இன்ட்ரஸ்ட் இல்ல.
உங்களுக்கு எங்கயாவது போகணும்னு தோணுச்சுன்னா நீங்க போங்க.
என்ன விட்டுருங்க.. நான் எங்கேயும் வரல.” என்று உர்ரென தன் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.
“இவ கிட்ட நல்ல மாதிரி பேசுனா வேலைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சும்,
ஏன் டா softஆ பேசி டைம் வேஸ்ட் பண்ற?” என்று நினைத்து மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட அர்ஜூன்,
“நான் உன்னை என் கூட வர சொல்லி உன் கிட்ட ரெக்வஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்னு நினைக்கிறியா?
it's an order. புரிஞ்சுதா? Night out போகிறதுக்கு suit ஆகிற மாதிரி நல்லா டிரஸ் பண்ணிட்டு நீ இன்னும் 30 மினிட்ஸ்ல ரெடியாகுற.
நான் வர்ற வரைக்கும் எப்பயும் போல இப்படி குர்தாவையும், பைஜாமாவையும் போட்டுட்டு ரெடியாகாம இப்படியே இருந்தினா..
நானே வந்து உன்ன ரெடி பண்ணி விட வேண்டியது இருக்கும், மைண்ட் இட்.”
என்றவன் அவளது பதிலுக்கு கூட காத்திருக்காமல் அவனது cupboard-ற்க்கு சென்று அதில் இருந்த ஆடைகளுள் துளவி ஒரு கேஷுவல் வியரை எடுத்துக் கொண்டு மீண்டும் கெஸ்ட் ரூமீற்க்கு சென்று விட்டான்.
அதனால் செல்பவனை பார்த்து “சரியான சிடு மூஞ்சிப்பையன்..
நானும் இங்க வந்ததில இருந்து இந்த பேலஸ்க்குள்ளேயே தானே அடஞ்சு கிடக்கிறேன்..
அதுவும் அந்த நான்சி வேற நாங்க இப்ப இருக்கிறது ரஷ்யான்னு சொன்னா.
இங்கே இருந்து சும்மா வெளியே எட்டிப் பார்த்தாலே எவ்ளோ அழகா இருக்கு..
நான் இதுவரைக்கும் சென்னையை தாண்டி எங்கேயும் போனதே இல்லை.
இப்ப எப்படியோ வெளிநாட்டுக்கு வந்திருந்தும், எங்கயும் வெளிய போகாம இத்தனை நாளா இங்கயே கைதி மாதிரி அடஞ்சு கடந்துவிட்டேன்.
இப்ப தான் இவனுக்கு என்னை வெளிய கூட்டிட்டு போகணும்னு தோனியிருக்கு.
அதையும் கொஞ்சம் அன்பா கேட்கிறானா பாரு.. பைத்தியக்காரன்..
நான் அவன் மேல இருக்கிற கோவத்துல தானே வர முடியாதுன்னு சொன்னேன்..
அதுக்கு அன்பா பேசி கெஞ்சி சமாதானப்படுத்தி என்னை கூட்டிட்டு போகணும்.
அத விட்டுட்டு எனக்கு ஆர்டர் போடுறானாமா ஆர்டர்..
மங்கூஸ் மண்டையன்..
நம்ம லைஃப் இப்படியே இருக்காது மிஸ்டர் அர்ஜுன்.
என்னைக்காவது ஒரு நாள் நான் உங்கள ஆர்டர் பண்ணி,
நீங்க அதை எல்லாம் ஃபாலோ பண்ற மாதிரி எல்லாமே மாறும்.
அன்னைக்கு இந்த தேன்மொழி உங்களை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ண போறான்னு பாருங்க..!!”
என்று நினைத்து உடனுக்குடன் ஒரு சபதத்தையும் எடுத்த தேன்மொழி அவன் சொன்னதைப் போலவே ஒரு hoodieயையும், ஜீன்ஸ் பேண்டையும் அணிந்து கொண்டு கண்ணாடி முன்னே நின்று தன் முகத்தை பார்த்தாள்.
பின்னலிட்டு இருந்த தனது கூந்தலை கவனித்த தேன்மொழி,
“இந்த காஸ்ட்யூமுக்கும் ஹேர் ஸ்டைலுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கே..!!”
என்று நினைத்தவள், டிரெஸ்ஸிங் டேபிளில் உள்ள கீழ் டிராயரை திறந்தாள்.
அவள் இங்கே வருவதற்கு முன்பாகவே அர்ஜுனனின் குடும்பத்தினர்கள் அவளுக்கு வேண்டிய நெயில் பாலிஷ் முதல் ஸ்லிப்பர் வரை அனைத்தையும் அங்கே வாங்கி வைத்திருந்தார்கள்.
ஆனால் அந்த வீன் ஆடம்பர அலங்கார பொருட்களை எல்லாம் பயன்படுத்த விரும்பாத தேன்மொழி,
முன்பு சென்னையில் இருந்ததைப் போலவே இங்கே அவள் வந்து இத்தனை நாட்கள் ஆகியும் சாதாரணமாகவே இருந்தாள்.
ஆனால் இப்போது என்னவோ அவளுக்கு முதல் முறையாக தன்னை கொஞ்சம் அழகுப்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
அதனால் அவளுக்கு தெரிந்த மாதிரி அங்கே இருந்த ஹேர் straightenerஐ வைத்து தன் தலை முடியை ஸ்டைல் செய்த தேன்மொழி,
லேசாக முகத்திற்கு மேக்கப்பும் போட்டுக் கொண்டாள்.
அனைத்தும் முடிந்த பிறகு அவள் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து திருப்தியாக புன்னகைத்த தேன்மொழி,
“பார்றா.. தேன்மொழி நீயாடி இது?
Self grooming பண்றதுக்கு டைம் இல்லாம அப்படியே ஏனோ தானோன்னு இருந்து இவ்ளோ அழகை இத்தனை நாளா உனக்குள்ளேயே ஒளிச்சு வச்சுக்கிட்ட பாத்தியா?”
என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
அப்போது அங்கே தயாராகி வந்த அர்ஜுன் “ஓய் ரெடியா இல்ல.. நான் தான் வந்து உனக்கு ஹெல்ப் பண்ணனுமா?” என்று கேட்டபடி உள்ளே வந்தான்.
சட்டென திரும்பி அவனை முறைத்து பார்த்த தேன்மொழி,
“நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல.
எனக்கு ரெடியாக தெரியும். நானே ரெடி ஆகிட்டேன்.” என்றாள்.
அவள் அப்படியே திரும்பும் போது அவளது நீண்ட கூந்தல் அழகாக காற்றில் பறக்க,
அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து வியந்து போன அர்ஜுனனின் உதடுகள் அவனையும் மீறி “சியா!” என்றது.
அவன் அதை மென் குரலில் சொன்னதால் அவன் என்ன சொன்னான் என்று அவளுக்கு சரியாக கேட்கவில்லை.
அதனால் தேன்மொழி “ஆஆங்.. என்ன சொன்னீங்க இப்ப?
எனக்கு ஒண்ணுமே கேக்கல. சத்தமா பேச தெரியாதா உங்களுக்கு?” என்று கேட்க,
கலங்கிய கண்களுடன் அவளை பார்த்துக் கொண்டு இருந்த அர்ஜுன் அவன் சியாவை நினைத்து வருத்தப்படுவதை தேன்மொழி கவனிக்க கூடாது என்று நினைத்து,
அவன் அவளுக்காக கொண்டு வந்த ஸ்வட்டரை தூக்கி அவள் மீது எரிந்து,
“எங்க ஹீட்டர்லையே இருந்து உனக்கு பழகி இருக்கும்.
பட் வெளிய ரொம்ப ஜில்லுனு இருக்கும்.
இத போட்டுட்டு வா. நான் ஹால்ல இருக்கேன்.” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
“கொஞ்சம் கூட பேசிக் மேனர்ஸ்ன்னா, என்னன்னு தெரியாது போல இவனுக்கு...
இவனெல்லாம் என்ன பிசினஸ்மேனோ..!!
இவனோட இந்த worst பிஹேவியர் எல்லாத்தையும் பார்த்தும், எப்படித்தான் இவன் கூட சேர்ந்து இவன் கிளைன்ட்ஸ் எல்லாம் பிசினஸ் பண்றாங்களோ தெரியல!”
என்று முணுமுணுத்த தேன்மொழி அவன் தூக்கி எறிந்து விட்டு சென்ற ஸ்வெட்டரை அணிந்து கொண்டு வெளியே சென்றாள்.
அங்கே சியாவை நினைத்து சோகமாக இருந்த அர்ஜுன் தேன்மொழியை பார்த்துவிட்டு,
“என் மனசுல இருக்கிற உன்னை இவள மாதிரி எத்தனை தேன்மொழி வந்தாலும் தூக்கி போட முடியாது சியா.
ஆனா நான் அவளுக்காகவும் ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன்.
அது என் கடமைன்னு தோணுது.
நீ எப்படி எனக்கு ஒவைஃப்பா இருந்தியோ, அதே மாதிரி தான் இப்ப இவ எனக்கு ஒய்ஃப்பா இருக்கா.
நீயும் அவளும் ஒன்னான்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியல.
பட் எனக்கு உங்க ரெண்டு பேரையும் பிரிச்சு பார்க்க தோணல.
You both are beautiful and impressive in two different aspects.” என்று நினைத்தான்.
அப்போது அங்கே பிரிட்டோ உடன் வந்த கிளாரா,
“நாங்க ரெடி பாஸ். மேடமும் வந்துட்டாங்க.
கிளம்பலாமா? ஆல்ரெடி நம்ம 10 மினிட்ஸ் லேட்.” என்று சொல்ல,
தன் கையை தேன்மொழியின் கையோடு கோர்த்துக் கொண்ட அர்ஜுன்,
“ம்ம்.. கிளம்பலாம்.” என்று சொல்லிவிட்டு அவளுடன் வாசலை நோக்கி முன்னே நடந்தான்.
தேன் மொழியுடன் சென்ற அர்ஜுன் அவன் காரின் பின் சீட்டில் அவளுடன் அமர்ந்து கொள்ள,
பிரிட்டோ டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்ய,
கிளாரா அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
அவர்களது பாதுகாப்பிற்காக சென்ற மற்ற பாடிகார்டுகள் அனைவரும் அவர்களது காருக்கு முன்னேயும் பின்னையும் அணிவகுத்து சென்றார்கள்.
ஜன்னல் ஓரமாக அமர்ந்து இருந்த தேன்மொழி வெளியில் எட்டிப் பார்த்தபடி வர,
AK Palace என்று தங்க எழுத்துகளால் பிரம்மாண்டமாக பொறிக்கப்பட்டு இருந்த பெரிய archஐ அவர்களது கார் கடந்து செல்வதை தன் தலையை வெளியே நீட்டி வாயை பிளந்து கொண்டு பார்த்தாள்.
அந்த இரவு நேரத்தில் அதில் இருந்த பெரிய பெரிய தங்க எழுத்துக்கள் மினுமினுக்க,
அதை சுற்றி அலங்கரிக்கப்பட்டு இருந்த தங்க நிற அழகிய லைட்டுகளால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் அந்த இரவு நேரத்தில் அதை இன்னும் அழகாக ஜொலிக்க வைத்தது.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-35
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.