கல்யாண அலங்காரங்கார தோரணங்களுடன் விழா கோலமாய் ஜொலித்துக்கொண்டிருந்த அந்த வெள்ளை மாளிகை இப்போது பொலிவிழந்து கிடந்தது. அதனுள் அத்தனை விசாலாமான அந்த ஹாலில் நிறம்பி வழிந்திருந்த ஆட்கள் இப்போது யாருமே இல்லாதிருக்க, அதன் நடுவே அந்த கருகிய மணமேடையை சுற்றி போலீஸார் மற்றும் தடவியல் (Forensic) ஆய்வாளர்கள் தடையங்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்.
"ஸ்டேஜ் ஃபுல்லா சால்ஃபர் இருந்திருக்கு. ஓம குண்டத்தோட சூடுனாலயே தானா நெருப்பு புடிச்சிருக்கு சார்." என்று அந்த தடவியல் நிபுணர் கூற, குழப்பமாய் புருவத்தை சுழித்தார் இன்ஸ்பெக்டர்.
"என்ன யோசிக்கிறீங்க இன்ஸ்பெக்டர்?" என்றபடி அங்கு வந்தார் லிங்கா. அதில் அவர் திரும்பி அவரை பார்க்க, "இவ்ளோ செக்கியூரிட்டி அரேஞ்மண்ட்ஸையும் மீறி இவ்ளோ நடந்திருக்கு. இதுக்கு என்ன பதில் சொல்லலான்னு யோசிக்கிறீங்களா?" என்று இறுக்கமாய் கேட்டார் லிங்கா.
"எக்ஸ்ட்ரீம்லி சாரி சார். அந்த ஐயர அரேஞ் பண்ணது நீங்கதா. அதனாலதா நாங்க பெருசா செக் பண்ண முடியல. பட் குற்றவாளி உங்க ஆளையே வெலைக்கு வாங்கிருக்கான்னா, இன்னுமே நீங்க ஜாக்கரதையா இருக்கணும். ஒடனே உங்க ஃபேமிலிய வீட்டுக்கு அனுப்பி வெய்யுங்க. அதுதா நல்லது." என்றார் இன்ஸ்பெக்டர்.
அதற்கு லிங்கா கோவமாய் ஏதோ கூற வர, அவர் தோளில் கரத்தை பதித்தார் விக்ரமன். அதில் அவர் மெல்லியதாய் திரும்ப, "நா ஆல்ரெடி என் வொய்ஃப்கிட்ட சொல்லிட்டேன். மீராவ இப்பவே கூட்டிட்டு போறோம்." என்றார் விக்ரமன்.
அதில் யோசனையாய் புருவத்தை குறுக்கிய லிங்காவும், மெல்ல சரியென்று தலையசைத்தார்.
இங்கே அந்த மணமகன் அறை மெத்தையில் கால்களை மடக்கி சாய்ந்து அமர்ந்திருந்தவளின் கழுத்தில் அவன் கட்டிய கருப்பு மஞ்சள் தாலி ஈரம் காயாது தொங்கிக்கொண்டிருக்க, அப்படியே மேலே அவள் முகமோ உணர்வே இல்லாதிருந்தது.
அவளின் கண்கள் வெறுமையாய் தன் மருதாணியை பார்த்துக் கொண்டிருக்க, அடர் சிவப்பாய் சிவந்திருந்த அவள் உள்ளைங்கையினுள் மறைந்திருந்த அந்த எழுத்துக்கள்.
R.. U.. T.. H.. A.. N.. என்ற ஒவ்வொரு எழுத்தும் இப்போது தெளிவாய் அவள் விழியில் விழ, அவள் முகத்தில் ஒரு கசந்த புன்னகை.
இந்த மெஹந்தியை போட்டுவிட்ட தன் தோழி முதல் மண்டபத்தில் உள்ள அத்தனை பேருக்குமே தன் கணவன் யாரென்று தெரிந்துள்ளது, தன் ஒருவளை தவிர என்று விரக்தியாய் விரல்களை மடக்க, "அம்மாடி!" என்றார் விமலா.
அதில் அவள் திடுக்கிட்டு நிமிர, "உன் அப்பா கெளம்ப சொல்லிட்டாரும்மா. போய் குளிச்சு ரெடியாயிட்டு வா இந்தா."என்று ஒரு பாக்ஸை நீட்ட, அவளும் குழப்பமாய் அவரை பார்த்துவிட்டு தயக்கமாய் அதை வாங்கினாள்.
"உனக்கு புடிச்சிருக்கா பாரு." என்று அவர் புன்னகையுடன் கூற, அவளும் தயக்கத்துடனே மெதுவாய் அதை திறக்க, உள்ளே ஒரு முழு கருப்பு நிற டிசைனர் சேரி ஜொலித்தது.
"என் பையனுக்கு இந்த கலர் ரொம்ப புடிக்கும்." என்று அவர் கூற, அவளோ நிமிர்ந்து அவரை பார்த்தாள்.
"உனக்கு புடிச்சிருக்கா?" என்று அவர் கேட்க, அவளோ மீண்டும் குனிந்து அந்த சேலையை பார்த்தாள். அவளுக்கு சுத்தமாக பிடிக்காத கலர் என்றால் இது ஒன்றுதான். அதில் அவள் முகம் சுழிய, "என்ன ஆச்சும்மா?" என்றார் விமலா.
அதில் மெதுவாய் நிமிர்ந்து, "ம்ம் புடிச்சிருக்கு." என்றாள் உணர்வே இல்லாமல்.
அதில் புன்னகையாய் அவள் தலையை அழுந்த கோதிவிட்டு, "சரி போய் குளிச்சுட்டு சேஞ்ச் பண்ணிக்கோ. நா இப்ப வந்தர்றேன்." என்றபடி எழுந்தார்.
அதில் அவளும் வாடலாய் அந்த புடவையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
அடுத்த சில மணி நேரங்களில் அந்த வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு வெள்ளை கார் வெளியில் செல்ல, அதனுள்ளே ஓட்டுநர் அருகே மொபைலை பார்த்தபடி அமர்ந்திருந்தார் விக்ரமன்.
அப்படியே பின்னிருக்கையில் விமலா விழி மூடி சாய்ந்து அமர்ந்திருக்க, அவரின் அருகே சோர்வாய் ஜன்னலில் சாய்ந்து வேடிக்கை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் அமீரா.
அந்த ஜன்னல் காற்று அவள் முகத்தை தழுவ, அவள் மனதில் ஆழமான ஒரு அமைதி பரவியது. அந்த அமைதியின் நடுவே அவளின் கடந்து வந்த பாதைகள் ஒவ்வொன்றாய் அவள் கண்முன் வர, அதையெல்லாம் கடந்து இப்போது எங்கு பயணித்துக்கொண்டு இருக்கிறோம் என்று புரியாமலே அவளின் பயணம் தொடர்ந்தது.
அப்படியே வெகு நேரமாய் அந்த பயணம் தொடர, சோர்விலிருந்தவளின் விழிகள் மெதுவாய் மூடி உறக்கத்திற்கு சென்றிருந்தாள். அப்படியே ஒரு ஆழ்ந்த உறக்கத்திற்கு பிறகு திடீரென்று சடன் ப்ரேக் அடிக்க, திடுக்கிட்டு விழித்தாள்.
அப்படியே புரியாது விழியை குறுக்கி சுற்றியும் பார்க்க, அருகே அமர்ந்திருந்த விமலாவை காணவில்லை. அதில் வேகமாய் முன்னால் பார்க்க, முன்னிருந்த விக்ரமனும் ஓட்டுநரும் இருவருமே மாயமாகியிருந்தனர். அதில் அவள் பதறி திரும்பும் முன் பட்டென்று அவள் பக்க கதவு திறக்கப்பட, திடுக்கிட்டு திரும்பினாள்.
ஓட்டுநர்தான் கதவை திறந்தபடி, "வாங்க மேடம்." என்றான் தன்மையாக.
அதில் அவளோ பதற்றமாய் கீழிறங்கி, "அவங்க ரெண்டு பேரும்.." என்று கேட்க வர, "அவங்க இந்நேரம் வீட்டுல இருப்பாங்க மேடம்." என்றான்.
அதில் சட்டென்று அவளுள் பயம் தொற்ற, "எ..என்ன அப்போ நா.." என்று கேட்க வர, அப்படியே விலகி பின்னால் காட்டினான் அவன்.
அதில் அவளும் அப்படியே பார்வையை முன்னால் பதிக்க, சட்டென்று அவள் முகத்தில் தென்றல் அடிக்க, அகல விழி விரித்தாள்.
அந்த அந்தி வானம் தங்க மஞ்சள் நிறம் பூச ஆரம்பித்திருக்க, அப்படியே கீழே அந்த அகண்டு விரிந்த இடம் மொத்தமும் சிவந்த ரோஜாக்கள் நிறைந்த தோட்டம். அந்த கோடிக்கணக்கான சிவப்பு ரோஜாக்களின் நடுவே கம்பீரமாய் ஒரு கருப்பு மாளிகை. அதன் நடு கோபுரத்தின் பின்னால் பாதி வரை மறைந்திருந்த அந்த மாலை சூரியன் சிவப்பு இராட்சனாய் காட்சியளிக்க, அங்கே திடீரென்று எழும்பி பறந்தது கருப்பு பறவைகள்.
அதில் இவள் உடல் அப்படியே பிரம்மிப்பில் உறைய, "சார் உள்ள வெயிட் பண்றாரு மேடம்." என்றான் ட்ரைவர்.
அதில் திடுக்கிட்டு தெளிந்து அவனை பார்க்க, அவனோ அப்படியே அவளுக்கு வழிவிட்டான். அப்போதே அவள் கீழே பார்க்க, தரையெங்கும் அதே சிவந்த ரோஜா இதழ்களாலே ஒரு நடைபாதை.
அதில் அவள் தயக்கமாய் தன் முதல் பாதத்தை பதிக்க, படபடவென்று ஒரு சத்தம். அதில் அவள் திடுக்கிட்டு திரும்ப, சடசடவென்று அவள் முகத்தை உரசி சென்றது வண்ணத்து பூச்சிகள். அதில் பயந்து முகத்தை மறைத்து திரும்பிக்கொண்டவள், பிறகு மெதுவாய் நிமிர்ந்து சுற்றி பார்க்க, இந்த இடம் முழுக்கவே Crimson Rose வகை வண்ணத்து பூச்சிகள் தாராளமாய் சுற்றி திரிந்தது.
அதில் அவள் புருவங்கள் வியப்பில் விரிய, அந்த தோட்டம் முழுக்க அந்த ஒரே வகை வண்ணத்து பூச்சிகள் மட்டுமே நிறைந்து இருப்பது ஆச்சரியமாக இருந்தது. அதில் வியப்பாய் சுற்றி பார்த்தபடியே முன்னால் நடக்க, திடீரென்று அவள் முகத்தில் தெளித்தது தண்ணீர். அதில் திடுக்கிட்டு முன்னால் பார்த்தவள், அடுத்த நொடி அரண்டு பின்னால் நகர்ந்தாள்.
அதுவோ ஒரு அலங்கார நீருற்று (Fountain). ஒரு கருப்பு இறக்கைகள் கொண்ட கருப்பு தேவ தூதன், அவன் கண்கள் இரத்த சிவப்பாய் மின்ன, அவன் கையிலிருந்து ஊற்றியது அந்த தண்ணீர். அதில் பயத்துடன் அகல விழி விரித்த அவளுக்கோ அது சாத்தானின் சிலை போல் தோன்ற, பயந்து வேகமாய் உள்ளே ஓடிவிட்டாள்.
பட்டென்று அந்த கதவை முட்டி திறந்துக்கொண்டு உள்ளே வந்திருந்தவள், அடுத்த நொடி பயத்துடன் சுற்றி பார்க்க ஒரே இருட்டாக இருந்தது. அதில் பதற்றமாய் அவள் தொண்டை ஏறி இறங்க, முகத்தருகே திடீரென்று பற்றியது ஒரு தீக்குச்சி.
அதில் அவள் திடுக்கிட்டு திரும்ப, அந்த தீ அப்படியே பெரிதாகி ஒரு சிவப்பு நிற மெழுகுவர்த்தியில் வந்தமர, அதில் ஒளிர்ந்த வெளிச்சத்தில் தெரிந்த அவன் முகம், அப்படியே நிமிர்ந்து அவளை பார்த்து, "வெல்கம் டூ மை டார்க் வேர்ல்ட்" என்றான் மெல்லிய குரலில்.
அதில் சட்டென்று அவள் இதயம் பதற்றத்தை கூட்ட, அவனோ அப்படியே அந்த மெழுகுவர்த்தியை சாய்த்து மற்ற மெழுகுவர்த்திகளையும் ஏற்ற ஆரம்பித்தபடி, "இங்க நீயும் நானும் மட்டுந்தா." என்று கூற, இவளுக்கோ இதயம் அத்தனை பலமாய் துடிக்க, வேகமாய் வந்த வழியே திரும்பி ஓட போக, பட்டென்று கதவு அடைக்கப்பட்டது. அதில் அவள் திடுக்கிட்டு அதிர்ந்து பின்னால் நகர, அவள் முதுகை உரசியது அவன் உருவம். அதில் அத்தனை பதற்றமாய் அவள் அசையாது நிற்க, அவள் காதோரம் படர்ந்தது அவனின் சூடான சுவாசம்.
அதில் இவள் சுவாச வேகம் அதிகரிக்க, பதற்றமாய் இறுக்கி விழி மூடினாள். அப்போது மெதுவாய் அவன் கரம் அவள் சேலை மறைக்கா வெற்றிடைக்குள் படர, அவள் விரல்கள் தன் முந்தாணை நுனியை இறுக்கி பிடித்தது. அப்படியே அவன் ஐவிரல்கள் அவள் நடுவயிற்றில் அழுத்தி பதிய, அவள் திடுக்கிட்டு சிலிர்க்கும் முன் அவளை அழுத்தி தன்னுள் புதைத்துக்கொண்டவன், அவள் கன்னத்தில் தன் இதழை அழுத்தி உரசி, "என்ன விட்டு நீ ஒரு இஞ்ச் நகரணுன்னாலும், அத நாந்தா முடிவு பண்ணனும்." என்றான் அத்தனை அழுத்தமாக.
- நொடிகள் தொடரும்...

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-34
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.