கெஸ்ட் ரூமில் படுத்திருந்த அர்ஜுன் சீலிங்கை பார்த்தபடி எந்த ஃபீலிங்கும் இல்லாமல்,
“அவ என்ன பத்தி என்ன நினைச்சுட்டு இருப்பா?” என்று தேன்மொழியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.
அவனை சுற்றி நின்று கொண்டிருந்த மருத்துவர்கள் குழு அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து அவனது காயத்தில் கட்டு போட்டுவிட்டு,
“எங்களால முடிஞ்சது எல்லாத்தையும் நாங்க செஞ்சிட்டோம் மேடம்.
நாங்க குடுக்குற டேப்லெட் எல்லாம் கொடுத்தாச்சு.
இதை அர்ஜுன் சார் கரெக்டா ஃபாலோ பண்ணி அடிக்கடி செக்கப் வர்றாரான்னு நீங்க தான் மானிட்டர் பண்ணனும்.”
என்று கிளாராவிடம் சொல்லிவிட்டு சென்றார்கள்.
அர்ஜுனை காண மருத்துவர்கள் வந்திருந்ததால் விஷயம் கேள்விப்பட்டு அவனது குடும்பத்தில் உள்ளவர்களும் உடனே அங்கே வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் பதட்டமாக செல்வதை கண்டு பயந்து போய் குழந்தைகளும் அங்கே ஓடி வந்தார்கள்.
அர்ஜுனை கட்டிப்பிடித்தபடி அவன் அருகில் படுத்துக் கொண்ட ஆருத்ரா,
“டாடி உங்களுக்கு என்னாச்சு?
மறுபடியும் உங்களுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சா?"
என்று கேட்டுவிட்டு அழத் தொடங்கி விட்டாள்.
அவர்கள் வரும்வரை தேன்மொழியை பற்றி யோசித்துக் கொண்டிருந்த அர்ஜுன் இப்போது தனது குடும்பத்தினர்களை பற்றி யோசிக்க தொடங்கினான்.
எழுந்து அமர்ந்தவன், ஆருத்ராவை தன் அருகில் அமர வைத்து,
“இங்க பாரு பேபி டாடி நல்லா தானே இருக்கேன்..
எதுக்கு அழுகிற நீ? டாடியோட லிட்டில் பிரின்சஸ் எப்பயும் ஸ்ட்ராங்கா இருக்கணும்னு நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..
மறந்துட்டியா நீ?” என்று அர்ஜுன் அவளிடம் பொறுமையாக கேட்க,
அவன் அருகில் தானும் சென்று அமர்ந்து கொண்ட சித்தார்த் அவன் மீது சாய்ந்து கொண்டு,
“நானும் உங்களுக்கு மறுபடியும் ஏதோ ஆயிடுச்சோன்னு நினைச்சு பயந்துட்டேன் டாடி.”
என்று தன் பங்கிற்கு சொல்ல, “நெஜமாவே எனக்கு எதுவும் இல்ல டா, நான் நல்லா தான் இருக்கேன்.”
என்று சொல்லி மாறி மாறி அவர்களை சமாதானப்படுத்தினான் அர்ஜுன்.
அர்ஜுன் தனக்கு எதுவும் இல்லை என்று பொய் சொல்லி அந்த குழந்தைகள் இருவரையும் சமாதானப்படுத்தினாலும்,
அவனது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் திடீரென்று எங்கேயோ சொல்லாமல் கொள்ளாமல் சென்ற அர்ஜுன் இப்படி காயப்பட்டு வந்து படித்திருக்கிறானே!
அப்படி என்றால் பெரிதாக ஏதோ ஒன்று நடந்திருக்கிறது.
அதை அவன் தங்களிடம் இருந்து மறைக்கிறான் என்று நினைத்து இனியாவது அர்ஜுன் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டுமே என்று நினைத்து கவலைப்பட்டார்கள்.
ஆனால் ஆருத்ரா, சித்தார்த் மகிழன் என குழந்தைகள் மூவரும் அவனை சூழ்ந்து கொண்டு அவனுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்ததால்,
தங்கள் மனதில் இருந்த பயத்தை யாரும் அப்போது வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
இப்படி அனைவரும் அர்ஜுனின் அறையில் நின்று கொண்டு அவனிடம் பிஸியாக பேசிக் கொண்டிருந்ததால்,
அந்த தருணத்தை பயன்படுத்தி யாருக்கும் தெரியாமல் தேன் மொழியைக் காண அர்ஜுனின் அறைக்கு சென்றான் மகேஷ்.
அங்கே வெளியில் நடக்கும் எதைப் பற்றியும் அறியாமல் தேன்மொழி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க,
“இங்க நான் தான் இவளை நினைச்சு ஃபீல் பண்ணி பாவம் இவ இங்க வந்து இப்படி மாட்டிக்கிட்டாளேன்னு இவளால சோகத்துல தூங்காம தவிச்சிட்டு இருக்கேன்..
ஆனா இவ என்னமோ அவளோட சொந்த வீட்டில ஜாலியா தூங்குற மாதிரி கொசு உள்ளக் போனா கூட தெரியாத அளவுக்கு வாயை திறந்து வச்சுக்கிட்டு நல்லா தூங்குறா!”
என்று நினைத்து சலித்துக் கொண்ட மகேஷ் அவள் அருகில் சென்று அவளது தோள்களில் தட்டி எழுப்பினான்.
அவன் எதுவும் பேசாததால் தன்னை அர்ஜுன் தான் எழுப்புவதாக நினைத்துக் கொண்ட தேன்மொழி
“இப்ப உங்களுக்கு என்ன பிராப்ளம் மிஸ்டர் அர்ஜூன்?
என்னமோ என் மேல உங்களுக்கு நிறைய லவ் அண்ட் கேர் இருக்கிற மாதிரி எனக்காக என்ன வேணாலும் செய்வேன்னு சொல்றீங்க..
ஆனா இப்ப என்னை நிம்மதியா தூங்கக்கூட விட மாட்டீங்களா?”
என்று தன் கண்களை மூடி இருந்த நிலையில் அப்படியே கேட்க,
மகேஷிற்கு எரிச்சலாக இருந்தது. இருப்பினும் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டவன்,
“அர்ஜுன் சார் இப்ப பக்கத்துல இருக்க கெஸ்ட் ரூம்ல இருக்காரு.
டாக்டர்ஸ் அவருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்காங்க.
இந்த ஃபேமிலில இருக்கிற எல்லாரும் அங்க தான் இருக்காங்க.
அதான் நீ எப்படி இருக்கன்னு நான் உன்ன பார்த்திட்டு போலாம்னு வந்தேன்.”
என்று கடுகடுவென்றே அவளிடம் சொன்னான் மகேஷ்.
அவன் அதை எந்த மாடுலேஷனில் சொல்கிறான் எல்லாம் கண்டுகொள்ளாத தேன்மொழிக்கு,
அவன் அர்ஜுனை டாக்டர்கள் எல்லாம் சேர்ந்து பரிசோதித்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னது மட்டும் தான் மண்டையில் ஏறியது.
அதனால் உடனே திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த “அவருக்கு என்னாச்சு?
இப்ப எப்படி இருக்காரு அவரு?” என்று அக்கறையுடன் விசாரித்தபடி அந்த அறையை விட்டு வெளியேறத் தொடங்கினாள்.
அவன் பெயரைக் கேட்ட உடனே இங்கே அவனுக்காக தேன்மொழி இப்படி பதறி அடித்துக் கொண்டு ஓடுவது மகேஷிற்கு பிடிக்கவில்லை.
அதனால் உடனே அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தியவன்,
“அவருக்கு ஒன்னும் இல்ல நல்லா தான் இருக்காரு.
ட்ரீட்மென்ட் எல்லாம் முடிஞ்சிடுச்சு.
ஆருத்ராவும் சித்தார்த்தும் அவர் கூட விளையாடிட்டு இருக்காங்க.
இப்போ நீ போய் அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.
ஏற்கனவே அவர் ஃபேமிலில இருக்கிறவங்க எல்லாரும் அவரை சுத்தி நின்னுகிட்டு என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு இருக்காங்க.
அந்த கேப்ல நான் உன் கிட்ட பேசிட்டு போலாம்னு தான் வந்தேன்.
ஆனா நீ என் கிட்ட பேச ரெடியா இல்ல போல..!!” என்று சொல்ல,
ஒரு முறை வாசலை எட்டிப் பார்த்த தேன்மொழி மீண்டும் உள்ளே வந்து,
“சேச்சே.. அப்படியெல்லாம் இல்ல மகேஷ்.
திடீர்னு அவர் கெஸ்ட் ரூம்ல இருக்குன்னு நீ சொன்னவுடனே நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.
அதான் இங்க அவர பார்த்துக்கிறதுக்கு நிறைய பேர் இருக்காங்களே..
நான் அங்க போய் என்ன பண்ண போறேன்?”
என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்ட தேன்மொழி தன் முகத்தை வெறும் கையால் அழித்தி துடைத்துவிட்டு சென்று சோஃபாவில் அமர்ந்தாள்.
எப்படியும் அர்ஜுன் இன்னும் கொஞ்ச நேரத்திற்கு இந்த பக்கம் வரமாட்டான் என்ற நம்பிக்கையில்,
தேன்மொழியின் அருகே சென்று சோஃபாவில் அமர்ந்தான் மகேஷ்.
அதனால் அவள் அவனை திரும்பி பார்க்க, அவனும் அவளது கண்களையே உற்றுப் பார்த்தவாறு,
“நீ என்ன டிசைட் பண்ணி இருக்க தேன்மொழி?
நீ நடந்துக்கிறதை எல்லாம் பார்த்தா இங்கயே வேற வழி இல்லாம செட்டில் ஆகிடலாம்னு முடிவு பண்ணிட்ட மாதிரி இருக்கு..!!”
என்று அவளிடம் கூத்தலாக கேட்டான் மகேஷ்.
சில நொடிகள் அமைதியாக அவன் கேட்ட கேள்விக்கு பதிலை யோசித்துப் பார்த்த தேன்மொழியின் மன கண்களில்;
அர்ஜுன், ஆருத்ரா, சித்தார்த் என மூவரின் முகமும் மாறி மாறி வந்து சென்றது.
எது எப்படி இருந்தாலும் கண்டிப்பாக அவள் தன் குடும்பத்தினரை அதிகம் மிஸ் செய்கிறாள்.
ஆனால் அதைத் தாண்டி அவள் மனதில் என்ன இருக்கிறது? என்று அவளுக்கே தெரியாததால்,
“நெஜமாவே எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மகேஷ்.
நானே இங்க இருந்து போகணும்னு ஆசைப்பட்டாலும்,
அர்ஜுன் கைல கால்ல விழுந்து கேட்டாலும், என்னால இங்க இருந்து போக முடியாதுன்னு நல்லா தெரிஞ்சிருச்சு.
அப்புறம் நடக்காத விஷயத்துக்கு எதுக்கு ஆசை படனும் சொல்லு?
சோ இனிமே நான் எதை பத்தியும் யோசிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.”
என்று அவள் ஆற்றாமையுடன் சொல்ல,
“அப்ப உன் குடும்பத்தில இருக்கிறவங்களை நீ மறந்துட்டியா?
நீ இல்லாம அவங்க எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சு பாக்கலையா நீ?
அவங்களுக்காகவாவது இங்க இருந்து போகணும்னு உனக்கு தோணலையா?”
என்று அப்போதும் மடக்கி மடக்கி கேள்விகள் கேட்டான் மகேஷ்.
“என்ன கேக்குற நீ? மறுபடியும் என் வீட்டுக்கு போகணும்னு நான் எப்படி ஆசைப்படாம இருப்பேன்?
இங்கே நான் வாழ்றதுக்கு பேர் எல்லாம் ஒரு வாழ்க்கையா மகேஷ்?
இன்னைக்கு கூட நான் அர்ஜுன் சார் கிட்ட நேரடியா நீங்க என்ன ஜெயில்ல வச்சு கொடுமை படுத்திட்டு இருக்கீங்கன்னு சொல்லிட்டேன்.
அப்பயும் அந்த மனுஷனுக்கு என்ன இங்க இருந்து அனுப்பி வைக்க மனசு வரமாட்டேங்குது.
நீ என்ன வேணாலும் கேளு, உனக்காக எதுவா இருந்தாலும் பண்ண ரெடியா இருக்கேன்.
ஆனா உன்னை இங்கிருந்து மட்டும் என்னால அனுப்ப முடியாதுன்னு அவர் ஸ்ட்ராங்கா சொல்லும் போது,
என்னால என்ன பண்ண முடியும்?
நான் என்ன wonder womanஆ?
என் கிட்ட இருக்கிற சூப்பர் பவர்ஸ் எல்லாத்தையும் யூஸ் பண்ணி இங்க இருக்கிறவங்க எல்லாரையும் அடிச்சு போட்டுட்டு தப்பிச்சு போறதுக்கு?
நான் ரொம்ப சாதாரணமான பொண்ணு மகேஷ்.
எனக்கு இங்க வாழவே பிடிக்கல. ஆனா ஆருத்ராவையும் சித்தார்த்தையும் நினைச்சு பார்க்கும்போது,
எனக்கு செத்து தொலையலாம்னு பார்த்தா கூட மனசு வரமாட்டேங்குது.
அந்த புள்ளைங்க இரண்டையும் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு.
நான் என்ன பண்றதுன்னு நீயே சொல்லு.”
என்று பதிலுக்கு தேன்மொழி அவனிடமே கேள்வி கேட்க,
அவனுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
அதனால், “எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல.
பட் நான் உனக்கு ஏதாவது செய்யணும்னு ஆசைப்படுறேன்.
என்னால செய்ய முடிஞ்ச ஏதாவது ஒன்னு இருந்துச்சுன்னா கேளு.
கண்டிப்பா நான் உனக்காக அத செய்றேன்.” என்றான் மகேஷ்.
சில நொடிகள் அமைதியாக யோசித்த தேன்மொழி,
“எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு.
என் தலையெழுத்து இதுதான், என்னால இங்க இருந்து போக முடியாது என்றதை நான் ஏத்துக்கிட்டேன்.
இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுன்னா எனக்கு இந்த லைஃப் பழகிடும்.
ஆனா என் வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் எனக்கு என்ன ஆச்சோன்னு நினைச்சு ஒவ்வொரு செகண்டும் அங்க பயந்துட்டு இருப்பாங்க.
நான் கூட இங்க எப்பயாவது நிம்மதியா தூங்க சான்ஸ் இருக்கு.
ஆனா அவங்க என்ன பத்தி யோசிச்சாலே கண்டிப்பா எனக்கு ஏதாவது தப்பா நடந்திருக்கும்ன்னு தான் நினைச்சு பயப்படுவாங்க.
சோ நான் ஏதோ ஒரு இடத்துல நல்லா இருக்கேன்னு அவங்களுக்கு தெரியப்படுத்தினா போதும்.
எனக்கு வேற எதுவும் வேண்டாம்.
எங்க அம்மாவுக்கு என் தம்பி இருக்கான்.
எப்படியும் அவன் அவங்களை பாத்துக்குவான்.
என்ன பத்தி யோசிச்சு கவலைப்படாம அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்.
எனக்கு அதுதான் வேணும்.” என்றாள் உறுதியாக.
சிறிதும் தாமதிக்காமல், “என்னால உன்ன இங்க இருந்து வெளியே போக வைக்க முடியாது.
அப்படியே நீ இங்க இருந்து தப்பிச்சு போனாலும், இந்தியா வரைக்கும் எல்லாம் இவங்க கிட்ட மாட்டாம நீ டிராவல் பண்ணி போறது நடக்காத விஷயம்.
பட் நீ இங்க இருந்தே இந்தியால இருக்கிற உன் ஃபேமிலியை காண்டாக்ட் பண்ணி அவங்க கிட்ட நீ நல்லா இருக்கேனு சொல்றது அவ்ளோ கஷ்டம்ன்னு இல்லைன்னு நினைக்கிறேன்.
பட் நம்ம எது பண்ணாலும் யார் கிட்டயும் மாட்டிக்காம பண்ணனும்.
டைரக்டா நம்ம எதுலயும் இன்வால்வ் ஆக கூடாது.
இத பத்தி அவங்களுக்கு தெரிய வந்துட்டா, உன்னை கூட எதுவும் பண்ணாம போனா போகுதுன்னு அட்வைஸ் பண்ணி மன்னிச்சு விட்டுருவாங்க.
ஆனா என்னையெல்லாம் ஒரு செகண்ட் கூட யோசிக்காம போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பாங்க.
சோ எது பண்ணாலும் யோசிச்சு தான் பண்ணனும்.
எனக்கு கொஞ்சம் டைம் கொடு. நான் என்ன பண்ணலாம்னு யோசிச்சு சொல்றேன்.”
என்று மகேஷ் சொல்ல, அவள் கேட்டவுடனே அவன் தனக்கு உதவி செய்ய முன் வந்ததால் மகிழ்ந்த தேன்மொழி,
“தேங்க்ஸ் மகேஷ்!" என்றாள்.
பின் எப்படியும் அவன் இங்கே வந்து ஐந்து நிமிடத்திற்கு மேலாகி இருக்கும் என்பதால், அர்ஜுன் இங்கே திரும்பி வந்தால் என்ன செய்வது என்று நினைத்து பயந்த தேன்மொழி,
“ஓகே மகேஷ், அத எப்படி பண்றதுன்னு நம்ம அப்புறமா டிஸ்கஸ் பண்ணிக்கலாம்.
நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு.
யாராவது உன்னை பார்த்துட்டா பிரச்சனையாயிடும்." என்று சொல்லியும்,
அவன் வெளியே செல்ல மனம் இல்லாமல் தொடர்ந்து அவளிடம் பேசிக் கொண்டு இருந்தாலும்,
“நான் சொல்றதை கேளு மகேஷ்.
முதல்ல நீ இங்கிருந்து வெளியே போ.” என்று சொல்லி வலுக்கட்டாயமாக அவனது தோள்களில் கை வைத்து அவனை அந்த அறையை விட்டு வெளியே தள்ளி கதவை சாத்தினாள் தேன்மொழி.
மகேஷ் வெளியே சென்ற பிறகு தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
அர்ஜுனின் அறையில் இப்போது கேமரா இல்லை என்றாலும்,
மற்ற இடங்களில் இருக்கிறது என்பதால் அவன் இங்கே வந்து இவ்வளவு நேரம் இவளிடம் பேசிவிட்டு செல்வதை மற்றவர்கள் பார்த்தால்,
அவர்களுக்கு வேறு பதில் சொல்லி சமாளிக்க வேண்டுமே என்று நினைத்து பயந்தாள் தேன்மொழி.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-34
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.