CHAPTER-33

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
மீரா : நீ அர்ஜுன‌ காத‌லிக்க‌ ஆர‌ம்பிச்சிட்ட‌ ச‌ந்ரா. நீ அர்ஜுன‌ காத‌லிக்கிற‌.

ச‌ந்ரா : என்ன‌ சொல்றீங்க‌ மீரா அக்கா? நா எப்பிடி அர்ஜுன‌ காத‌லிப்பே?

மீரா : ஏ? ஏ காத‌லிக்க‌ முடியாது? உன்ன‌ எது த‌டுக்குது?

ச‌ந்ரா : அப்பிடியெல்லா ஒன்னும் இல்ல‌ மீரா அக்கா. என்ன‌ புரிஞ்சுக்கோங்க‌.



மீரா : மொத‌ல்ல‌ நீ புரிஞ்சுக்கோ. நீ அவ‌ன‌ ஏற்க்க‌ன‌வே காத‌லிக்க‌ ஆர‌ம்பிச்சிட்ட‌. அத‌ நீதா இன்னும் புரிஞ்சுக்க‌ல‌.

ச‌ந்ரா : த‌ய‌வுசெஞ்சு என்ன‌ கொழ‌ப்பாதீங்க‌ மீரா அக்கா. நா இத‌ ப‌த்தி யோசிக்க‌னும்.

மீரா : யோசி. ஆனா உன்னோட‌ ம‌ன‌சில‌ இருந்து யோசி. அப்ப‌தா உன‌க்கு உண்மை என்ன‌ன்னு தெரியும்.

மீரா அங்கிருந்து சென்றுவிட்டாள். ச‌ந்ரா அங்கேயே இருந்து யோசிக்க‌ ஆர‌ம்பித்தாள்.



ச‌ந்ரா : உங்க‌ளுக்கு ஒரு விஷியோ தெரியாது மீரா அக்கா. அர்ஜுன் பூர்வ‌ ஜென்ம‌த்துல‌ அப்பாவி அபிய‌ கொன்னிருக்கா. நீங்க‌ சொல்ற‌மாதிரி நா அர்ஜுன‌ காத‌லிக்க‌ற‌னான்னு என‌க்கு தெரிய‌ல‌. ஆனா அர்ஜுன‌ நா ஒவ்வொரு தெட‌வ‌ பாக்கும்போதும், என‌க்கு கொடும‌க்கார‌ உத‌யாவும் க‌ண்ணு முன்னாடி தெரியிறா. அதோட‌ அவ‌ செஞ்ச‌ அஞ்ஞாயமும் தெரியுது. அர்ஜுன் என்ன‌தா இந்த‌ ஜென்ம‌த்துல‌ ந‌ல்ல‌வ‌னா இருந்தாலும், என‌க்கு அவ‌னோட‌ பூர்வ‌ ஜென்ம‌ந்தா அவ‌னுக்குள்ள‌ தெரியுது. இதுக்கு அப்றோ நா எப்பிடி அவன‌ காத‌லோட‌ பாக்க‌ முடியும்?

ச‌ந்ரா அங்கிருந்து சென்று, அர்ஜுனை பார்க்க‌ அவ‌னுடைய‌ அறைக்கு சென்றாள். ஆனால் அர்ஜுன் அங்கு இல்லை. சந்ரா அவ‌னை வீடு முழுக்க‌ தேடினாள். ஆனால் அவ‌ன் எங்கும் இல்லை.

ச‌ந்ரா : அர்ஜுன் எங்க‌ போனா? என்னோட‌ மொக‌த்த‌க்கூட‌ பாக்க‌ புடிக்காம‌ வெளிய‌ போய்ட்டான்னு நெனைக்கிறே. செரி அவ‌ன‌ தொந்த‌ர‌வு ப‌ண்ண‌வேண்டா. அவ‌ த‌னியா இருந்திட்டு வ‌ர‌ட்டும்.

சிறிது நேர‌ம் க‌ழித்து, ச‌ந்ராவுக்கு ஒரு Call வ‌ருகிற‌து. ச‌ந்ரா அட்ட‌ன் செய்து.

ச‌ந்ரா : ஹ‌லோ, யாரு?

அந்த‌ ந‌ப‌ர் : ஹ‌லோ, உங்க‌ Husbandக்கு இங்க‌ ஏக்சிடன்ட் ஆயிரிச்சு. கொஞ்சோ சீக்கிர‌மா வாங்க‌.

ச‌ந்ரா : (ப‌த‌ட்ட‌த்துட‌ன்) ஏக்சிடன்ட்டா எங்க‌? எப்போ?



அந்த‌ ந‌ப‌ர் : (இட‌த்தை கூறினார்)

ச‌ந்ரா : (ப‌த‌ட்ட‌த்துட‌ன்) நா ஒட‌னே வ‌ர்றே.

ச‌ந்ரா போனை கட் செய்துவிட்டு, அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ அங்கிருந்து கிள‌ம்பினாள்.

அந்த‌ ந‌ப‌ர் வேரு யாரும் அல்ல‌ அபிதான்.



அங்கு அபி : சீக்கிர‌மா வா ச‌ந்ரா, வா. உன்னோட‌ ம‌ர‌ண‌த்த‌ தேடி வா. இன்னிக்கு உன்ன‌ கொல்ல‌ப்போற‌து உறுதி ச‌ந்ரா.

ச‌ந்ரா அந்த‌ இட‌த்துக்கு வ‌ந்தாள். அழுதுக்கொண்டே தேடினாள்.



ச‌ந்ரா : எங்க‌? அர்ஜுனுக்கு ஏக்சிடன்ட் ஆயிரிச்சின்னு சொன்னாங்க‌?, ஆனா ஏக்சிடன்ட் ஆனமாதிரி எதுவுமே இங்க‌ தெறியல‌யே? இன்னு கொஞ்சோ தூரோ போய் பாக்க‌லா.

அழுதுக்கொண்டே தேடினாள்.

ச‌ந்ரா : அர்ஜுனுக்கு ஒன்னும் ஆயிரிக்க‌வே கூடாது.

ச‌ந்ரா அங்கு தேடும்போது அபி ம‌றைந்திருந்தான். கையில் பெரிய‌ துப்பாக்கி வைத்திருந்தான். ச‌ந்ராவின் த‌லையை குறிவைத்து, ம‌றைந்து நின்றுக்கொண்டிருந்தான். அங்கு ஒரு காரில் அர்ஜுன் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்தான். அங்கு அர்ஜுனின் ம‌ன‌சாட்சி தோன்றியது.

அர்ஜுனின் ம‌ன‌சாட்சி : நீ ஏ இப்பிடி ப‌ண்ற‌?

அர்ஜுன் : யார் நீ ?

ம‌ன‌சாட்சி : என்ன‌ தெரிய‌ல‌யா? நாந்தா உன்னோட‌ ம‌ன‌சாட்சி.

அர்ஜுன் : நானே வேத‌னையில‌ இருக்கே. இப்ப‌ நீ எதுக்கு வ‌ந்த‌?

ம‌ன‌சாட்சி : உன‌க்கு உண்மைய‌ உண‌ர்த்த‌ வ‌ந்தே?

அர்ஜுன் : என்ன‌ உண்ம‌?

ம‌ன‌சாட்சி : எதுக்காக‌ ச‌ந்ராவ‌ விட்டு வெல‌கி போற? அவ‌ள‌ நீ ரொம்ப‌ காத‌லிக்கிறல்ல‌?.

அர்ஜுன் : ஆனா அவ‌ என்ன‌ காத‌லிக்க‌ல‌. அந்த‌ அபிய‌தா காத‌லிக்கிறா.

ம‌ன‌சாட்சி : அத‌னால‌? அவ‌ள‌ நீ அந்த‌ அபிக்கு விட்டுக்குடுக்க‌ போறியா? அவ‌ள‌ ம‌ற‌க்க‌ போறியா?

அர்ஜுன் : இல்ல‌. அது என்னால‌ முடியாதுதா. ஆனா அவ‌ள‌ நா ரொம்ப‌ காத‌லிக்கிறே. அத‌னால‌ அவ‌ளோட‌ ச‌ந்தோஷ‌ந்தா என‌க்கு முக்கியோ.

ம‌ன‌சாட்சி : நீ அவ‌ள‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணும்போதும், அவ‌ளுக்கு அந்த‌ அபிய‌தான‌ புடிச்சிருந்த‌து? அப்போ ம‌ட்டு ஏ அவ‌ள‌ க‌ட்டாய‌ப்ப‌டுத்தி க‌ல்யாண‌ம் ப‌ண்ண‌? அவ‌ள‌ அடைய‌ற‌துக்காக‌வா?

அர்ஜுன் : (கோப‌த்துட‌ன்) இல்ல‌. ச‌ந்ராவ‌ அடைய‌ற‌துக்காக‌ இல்ல‌.

ம‌ன‌சாட்சி : அப்றோ?

அர்ஜுன் : ச‌ந்ராவோட‌ உயிர‌ காப்பாத்த‌ற‌துக்காக‌. அந்த‌ அபி ந‌ல்ல‌வ‌னே இல்ல‌. அவ‌ ச‌ந்ராவ‌ கொல்ல‌ பாத்த‌வ‌. சந்ராவ நா கல்யாணம் பண்ணலன்னா, அந்த அபி சந்ராவ ஏமாத்தி கல்யாணம் பண்ணி கொன்னிருப்பா.

ம‌ன‌சாட்சி : அவ்ளோதா அர்ஜுன். இத‌ உன‌க்கு புரிய‌வெக்க‌தா நா வ‌ந்தே. இப்போ நா கெள‌ம்புறே.
(ம‌ன‌சாட்சி ம‌றைந்துவிட்ட‌து)



அர்ஜுன் : Ooh god. நா எப்பிடி இத‌ ம‌ற‌ந்தே? அந்த‌ அபி, ச‌ந்ராவ‌ காத‌லிக்க‌வே இல்ல‌. அவ‌ ச‌ந்ராவ‌ கொல்ல‌ முய‌ற்ச்சி ப‌ண்றா. அவ‌னால‌ ச‌ந்ரா உயிருக்கு ஆப‌த்து. ச‌ந்ராவ‌ நாந்தா காப்ப‌த்த‌னும். அவ‌ள‌விட்டு நா பிரிய‌வே கூடாது. ஒட‌னே நா வீட்டுக்கு போறே.

அர்ஜுன் காரை திருப்பினான். வீட்டுக்கு வந்துக்கொண்டிருக்கும்போது, வரும் வழியில் ரோட்டில் ச‌ந்ராவை பார்த்தான்.
அர்ஜுன் ச‌ந்ராவை பார்த்த‌தும் காரை நிப்பாட்டினான். அபி, ச‌ந்ராவை கொல்ல‌, துப்பாக்கியை அழுத்த‌ வ‌ரும்போது, அர்ஜுன், காரைவிட்டு இற‌ங்கி, ச‌ந்ராவை க‌த்தி கூப்பிட்டான்.

அர்ஜுன் : ச‌ந்ரா ..........!

திரும்பி பார்த்த‌ ச‌ந்ரா, அர்ஜுனை பார்த்த‌தும் அதிர்ச்சியுட‌ன்

ச‌ந்ரா : அர்ஜுன் !

ச‌ந்ரா அழுதுக்கொண்டே ஓடிவ‌ந்து அர்ஜுனை க‌ட்டிப்பிடித்தாள்.

அர்ஜுனுக்கு ஒன்றுமே புரிய‌வில்லை.

அர்ஜுன் : நீ இங்க‌ என்ன‌ ப‌ண்ற‌?

ச‌ந்ரா : (அழுகையுட‌ன்) உன‌க்கு ஒன்னும் ஆக‌ல்ல‌?

அர்ஜுன் : என‌க்கு என்ன‌ ஆக‌ப்போகுது?

ச‌ந்ரா : (அழுகையுட‌ன்) ந‌ல்ல‌வேள உன‌க்கு ஒன்னும் ஆக‌ல‌.

அர்ஜுன் : ச‌ந்ரா நீ எதுக்காக‌ அழ‌ற‌? என‌க்கு என்ன‌ ஆக‌ப்போகுது? நா ந‌ல்லாதான‌ இருக்கே.

ச‌ந்ரா : உன‌க்கு ஏக்சிடன்ட் ஆயிரிச்சுன்னு போன் வ‌ந்த‌தும், நா ரொம்ப‌ ப‌ய‌ந்துப்போய்ட்டே.

அர்ஜுன் : என‌க்கு ஏக்சிடன்ட்டா? நீ என்ன‌ சொல்ற‌?

அபி : இந்த‌ அர்ஜுன் இங்க‌ எதுக்காக‌ வ‌ந்தா? ச‌ந்ராவ‌ கொல்ல‌ நெனைக்கும்போதெல்லா, எப்பிடியாவ‌து வ‌ந்த‌ர்றானே. ஆனா நா இந்த‌ தெட‌வ‌ விட‌ போற‌தில்ல‌. ச‌ந்ராவ‌ கொல்லாம‌ இங்கிருந்து போக‌மாட்டே.

அபி மீண்டும் ச‌ந்ராவுக்கு குறிவைத்தான். துப்பாக்கியை அழத்தும்போது, அர்ஜுன் அதை பார்த்துவிட்டான். அபி துப்பாக்கியை அழுத்திவிட்டான். அர்ஜுன் உட‌னே த‌ன்னை க‌ட்டிப்பிடித்துக்கொண்டிருந்த‌ ச‌ந்ராவை த‌ள்ளிவிட்டான். அந்த‌ துப்பாக்கியிலிருந்த‌ குண்டு அர்ஜுனின் பின் ம‌ண்டையில் பாய்ந்துவிட்ட‌து. கீழே விழுந்த‌ ச‌ந்ரா திடீரென‌ எழுந்து பார்த்தாள்.

அர்ஜுன் குண்ட‌டிப்ப‌ட்டு கீழே விழுந்தான்.

அதை பார்த்த‌ ச‌ந்ரா,

ச‌ந்ரா : அர்ஜுன்ன்ன்ன்.........!

என்று க‌த்தினாள்.

தொடரும்....
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-33
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.