Chapter-33

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அவனுக்கு எதுவும் ஞாபகம் இருக்காது என்ற நம்பிக்கையில் தேன்மொழி நிம்மதியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க,

அவளைப் பார்த்தவாறு நன்றாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த அர்ஜுன் ‌ அவன் கோமாவில் இருக்கும் போது தேன்மொழி அவனிடம் சொன்ன அனைத்தையும் நினைத்து பார்த்தான்.

அவனது கண்கள் மூடி இருந்த அந்த நிலையில், அவன் உடல் அசைவற்றி கிடந்த போது,.

மீண்டும் மீண்டும் அவன் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்த அவளது குரல் தான் இவளுடன் வாழ வேண்டும் என்ற ஆசையை அவனுக்குள் உண்டாக்கியது.

அப்படி பார்த்தால் தனக்கு மறுவாழ்வு கொடுத்தது தேன்மொழி தான் என்று நினைத்த அர்ஜுன் அவளை நன்றியுடன் பார்த்தான்.

அவள் சொன்ன ஒவ்வொரு சிறிய விஷயங்களும் அவனுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது.

குறிப்பாக அவள் அரை தூக்கத்தில் அவனிடம் “எப்ப தான்யா நீ கோமால இருந்து கண்ணு முழிப்ப?

நீ எந்திரிச்சு நார்மலாகி நடக்கிற வரைக்கும் உங்க அம்மா என்ன கொடுமை படுத்துளத நிறுத்த மாட்டாங்க.

உனக்கு என்னைய பார்த்தா பாவமாவே இல்லையா?

ஐயா ராசா.. சீக்கிரம் எந்திரியா!

எனக்கு தூக்கம் வருது. நான் இப்போ எவ்ளோ லேட்டா தூங்கினாலும்,

உங்க அம்மா அலாரம் வச்சு கரெக்டா நாளைக்கு காலைல 6:00 மணிக்கு எந்திரிச்சு வந்து இங்க என் பக்கத்துல உக்காந்துகிட்டு பேசு பேசுன்னு என்ன சாவடிப்பாங்க..!!”

என்று சொல்லி அவனிடம் அவள் புலம்பி கொண்டு இருந்ததெல்லாம் கூட அவனுக்கு ஞாபகம் வந்தது.

அது அவனது இதழ்களின் ஓரம் ஒரு சிறிய புன்னகையை வரவழைக்க,

“என்னை பிழைக்க வைக்கிறதுக்கு என் ஃபேமிலில இருக்கிறவங்க என்னென்னவோ பண்ணி பார்த்தாங்க..

பட் இந்த குட்டி பிசாசு பேசி பேசி என்ன டார்ச்சர் பண்ணியே கோமால இருந்து எந்திரிக்க வச்சிட்டா..

ஆனா சுத்தி என்ன நடக்குதுன்னு எதுவும் தெரியாம அவ பேசுறத மட்டும் அப்படி அமைதியா கேட்டுக்கிட்டே இருந்ததும் ஒரு மாதிரி நல்லா தான் இருந்துச்சு.

இப்போ நாங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ஆ ஒரே ரூம்ல ஒண்ணா இருக்கோம்.

ஆனா எங்களுக்குள்ள நிறைய கேப் இருக்கு.

என்னால அது எல்லாத்தையும் சீக்கிரமா Fill பண்ண முடிஞ்சா நல்லா இருக்கும்.

நீயும் நானும் ரொம்ப நேரம் நிறைய பேசி ஒருத்தர பத்தி ஒருத்தர் நல்லா புரிஞ்சுகிட்டு எப்பவும் ஹாப்பியா இருக்கணும்.‌

நீ சொன்னியே லவ் பண்ணி நம்ம ஒன்னும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு..

நான் உன்ன லவ் பண்ண ரெடியா இருக்கேனான்னு எனக்கு தெரியல.

பட் அப்படியெல்லாம் நடந்தா நல்லா இருக்கும்னு தோணுது.” என்று நினைத்துக் கொண்டான்.

அவன் இப்படி அவளைப் பற்றி யோசித்து கொண்டு இருந்த கேப்பில்,

தன் முன்னே இருந்த உணவுகள் அனைத்தையும் சாப்பிட்டு காலி செய்து இருந்த தேன்மொழி சென்று கை கழுவி விட்டு வந்து சோஃபாவில் அமர்ந்தாள்.‌

அதில் அவள் நன்றாக சாய்ந்து அமர்ந்து ஏஏஏ..வ்வ் என்று ஏப்பம் விட,

அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. கலகலவென்று அவளைப் பார்த்து சிரித்த அர்ஜுன்,

“என்ன மேடம் நல்லா சாப்டீங்களா?

இனிமே உனக்கு மட்டும் தனியா இப்படி ஸ்பெஷலா குக் பண்ண சொல்லி கிச்சன் டீம்ல இருக்கிறவங்களுக்கு ஆர்டர் கொடுக்கவா?” என்று அன்புடன் கேட்டான்.

ஆனால் அவன் தன்னை கிண்டல் செய்து குத்தி காட்டுவதாக நினைத்துக் கொண்ட தேன்மொழி,

உடனே தன் உதட்டை சுழித்து “சாப்பாடு போட்டுட்டு அதை சொல்லி காமிக்கிறதுக்கு நீங்க எனக்கு இப்படியெல்லாம் எதுவும் பண்ணாமலே இருந்து இருக்கலாம்.

எனக்கு எதுவும் வேண்டாம். இனிமே நீங்களே எனக்காக போய் சமைச்சிட்டு வந்து ஏதாவது ஆசையா ‌குடுத்தா கூட நான் சாப்பிட மாட்டேன்.”

என்று சொல்லிவிட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“என்னது நான் உனக்கு சமைச்சுட்டு வந்து குடுக்கணுமா?

உன் மனசுக்குள்ள இந்த ஆசை எல்லாம் இருக்கா?”

என்று அவன் நக்லாக கேட்க, “நான் ஒன்னும் அப்படியெல்லாம் சொல்லலையே..

அப்படியே நீங்க எனக்கு சமைச்சு குடுத்தாலும் வேண்டாம்னு தான் சொன்னேன்.” என்று கடுகடுத்தாள் அவள்.‌

இப்படி அவளுடன் பேசிப்பேசி சண்டை போட்டு வார்த்தைகளால் விளையாடுவது கூட அவனுக்கு கொஞ்சம் பிடிக்கத்தான் செய்தது.

ஆனால் அவன் கோமாவில் இருந்து எழுந்ததில் இருந்து இப்போது வரை கிட்டத்தட்ட ஒரு வாரமாகியும் தூங்காமல் இருந்ததால்,

அவனது கண்களும் உடலும் ஓய்வுக்காக ஏங்கியது.

அதனால் அவளிடம் வாக்குவாதம் செய்யாமல் தன் கால்களை நீட்டி படுத்துக் கொண்ட அர்ஜுன்,

“நீயும் வா, வந்து படு. வெளிய போய் என்ன ஏதாவது வேலையா செய்ய போற?”

என்று அவளைப் பார்த்து கேட்க,

“இது என்ன என் வீடா? இந்த வீட்ல நான் எதுக்கு வேலை செய்யணும்?

அண்ட் moreover நான் உங்க பக்கத்துல எல்லாம் வந்து படுக்க மாட்டேன்.

மத்தியானத்துல தூங்குற ஹேபிட் எல்லாம் எனக்கு இல்லை.”

என்று முதலில் இருந்து ஆரம்பித்தாள் தேன்மொழி.

அதனால் “சப்பா.. இவள வச்சுக்கிட்டு ஒன்னும் முடியல..!!” என்று நினைத்து பெருமூச்சு விட்ட அர்ஜுன்,

“நான் வேற ரொம்ப நாளா கோபால இருந்து இருக்கேன்.

இப்ப நான் தனியா பக்கத்துல யாரும் இல்லாம ஒரு சோகத்துல அப்படியே தூங்கி மறுபடியும் எனக்கே தெரியாம கோமாவுக்கு போயிட்டா,

என் குடும்பத்தை யார் காப்பாத்துறது சொல்லு?

அதான் ஒரு சேஃப்டிக்காக உன்ன வந்து என் பக்கத்துல படுக்க சொல்றேன்.

ஏன் இதுக்கு முன்னாடி நீ என் பக்கத்துல அடுத்து தூங்குனதே இல்லையா?

இப்ப எதுக்கு ஓவரா சீன் போடுற?” என்று சலிப்புடன் கேட்டான்.

“ம்ம்.. முன்னாடி நீங்க கோமாவுல இருந்தீங்க..

நீங்களே நினைச்சாலும் அப்ப உங்களால என்னை எதுவும் பண்ணியிருக்க முடியாது.

பட், இப்ப அப்படி இல்லல..

உங்களால எனக்கு ஏதாவது ஆகிட்டா நான் என்ன பண்றது?

சோ நம்ம சோசியல் டிஸ்டன்ஸ்லயே இருப்போம்.

அதான் எல்லாருக்கும் நல்லது.” என்று தேன்மொழி உறுதியாக சொல்லிவிட,

“நான் உன்னை ஏதாவது பண்ணனும்னு நினைச்சா, நீயே நினைச்சாலும் உன்னால என்னை ஸ்டாப் பண்ண முடியாது பேபி.

அண்ட் இப்போதைக்கு எனக்கு அந்த ஐடியா எல்லாம் இல்ல.

சோ நீ என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டேன்னு நினைச்சு சந்தோஷப்படு.

நான் பொறுமையா உன் கிட்ட ஆர்டர் பண்ணாம ரெக்வஸ்ட் பண்ணும் போதே கம்முனு இங்க வந்து படுத்துரு.

நீ இல்லைனா எனக்கு தூக்கம் வராது டி. சொன்னா கேளு..

நீ இப்படி வரமாட்டேன். தூங்க மாட்டேன்னு நான் சொல்றதுக்கு எல்லாம் ஆப்போசிட்ல பேசும்போது தான்,

உன்னை கண்ட்ரோல் பண்ணி நான் சொல்றது எல்லாத்தையும் கேட்க வைக்கிறதுக்கு ஏதாவது பண்ணனும்னு எனக்கு தோணுது.

உன் லைஃப்ல ஹீரோவா இருக்க ட்ரை பண்ற என்ன தேவை இல்லாம வில்லன் ஆக்கிடாத.”

என்று அவளை மிரட்டும் தோரணையில் சொன்னான் அர்ஜுன்.

அவன் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக அதை அவனால் செய்ய முடியும் என்று அவளுக்கு மட்டும் தெரியாதா என்ன??

அதனால் உடனே எழுந்து நின்ற தேன்மொழி “ஐயோ கடவுளே..

நான் யாருக்கு எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினோ தெரியல.

என் கூடவே இருந்து என்னை கொடுமைப்படுத்துவதற்குன்னே இப்படி ஒரு ராட்சசனை ரெடி பண்ணி எதுக்கு அனுப்பி வச்சிருக்க நீ?

இவன் என அநியாயத்துக்கு கொடுமை படுத்துறான்.

உனக்கு கண்ணு இல்லைன்னு எனக்கு தெரியும்.

நீ உன் கண்ணால எனக்கு நடக்கிறது எல்லாத்தையும் பாத்துட்டு இருந்திருந்தா இந்த ஜெயிலுக்கு என்னை அனுப்பி விட்டுருப்பியா?

ஆனா உனக்கு இப்ப மனசாட்சியே செத்துப் போச்சுய்யா.”

என்று மைண்ட் வாய்ஸில் புலம்பி விட்டு சென்று அவன் அருகில் இருந்த தலையணையின் மீது பொத்தென்று விழுந்தாள் தேன்மொழி.

அவள் இடுப்பில் கை வைத்து அவளை தன் பக்கம் இழுத்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்ட அர்ஜுன்,

“நல்லா சாப்பிட்டு இப்படித் தான் பொத்துன்னு வந்து விழுவியா?

வாமிட் வந்தா என்ன டி பண்ணுவ?

அப்புறம் கொஞ்ச நேரத்துக்கு பசிச்சாலும் சாப்பிடவே முடியாது.

வாய் கசப்பாவே இருக்கும்.” என்று இப்போதும் அவன் அவள் மீது இருக்கும் அக்கரையில் தான் சொன்னான்.

ஆனால் ஏதோ ஒருவேளை தனக்கு பிடித்த உணவுகளை அரேஞ்ச் செய்து கொடுத்துவிட்டு,

அதை சொல்லி இந்த அர்ஜுன் ஓவராக பீத்தீக் கொள்வதாக நினைத்த தேன்மொழி,

“அச்சச்சோ ரொம்ப தான்.

ரொம்ப ‌உங்களுக்கு என் மேல அக்கறை இருக்கிற மாதிரி நீங்க சும்மா காமிச்சுக்க தேவையில்லை மிஸ்டர் அர்ஜுன்.

இந்த வீட்ல நான் யாரு, எனக்கு என்ன மரியாதைன்னு எனக்கு நல்லாவே தெரியும்.”

என்று சொல்லிவிட்டு அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து விட்டு வேறு புறமாக திரும்பி படுக்க முயற்சி செய்தாள்.

ஆனால் அவன் பிடி இரும்புப் படியாக இருந்ததால், அவளால் ஒரு இன்ச் கூட அசைய முடியவில்லை.

அதனால் வேறு வழியில்லாமல் அப்படியே படித்துக் கொண்ட தேன்மொழி,

“இந்த உலகத்துல என் கையில இருக்கிற ஒரே ஒரு விஷயம் தினமும் மூச்சு விடுறது மட்டும் தான்.

அதைத்தவிர மத்த எல்லாத்தையும் நான் எப்ப செய்யணும் எப்படி செய்யணும்னு இங்க இருக்கிறவங்க தான் கண்ட்ரோல் பண்றாங்க.

அந்தக் கடவுள் அதுக்கும் என்னைக்கி ஆப்பு வைக்க போறானோ தெரியல!”

என்று நினைத்து தன் கண்களை மூடி படுத்தாள்.

உண்மையில் அர்ஜுன் இல்லாத இந்த மூன்று நாட்களில் அவளுக்கும் தனியாக அந்த அறையில் படித்திருக்கும்போது தூக்கமே வரவில்லை.

முன்பு வெறும் ஜடம் போல தன் அருகில் அவன் படுத்திருந்தாலும் கூட,

அவனது அருகாமை அவளுக்கு பழகி இருந்தது.

இந்த மூன்று நாட்களும் அவன் எப்போது திரும்பி வருவான்?

அவனுக்கு ஏதேனும் தவறாக நடந்திருக்குமா? எங்கே சென்றான் அவன்? என்று அவனைப் பற்றியே தான் அவள் யோசித்துக் கொண்டே இருந்தாள்.

அதனால் இப்போது அவன் என்ன தான் அவளை force செய்து தன் அருகில் படுக்க வைத்துக் கொண்டாலும்,

அந்த நெருக்கத்தின் கதகதப்பு அவள் மனதிற்கு ஒரு புதுவித நிம்மதியை கொடுக்க,

தன் கண்களை மூடி அவனைத் திட்டுவதில் பிசியாக இருந்த தேன்மொழி அவளையும் மீறி எப்படியோ உறங்கி விட்டாள்.

குழந்தைகளை சாப்பிட வைத்து கார்டனில் சென்று விளையாடுங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்த ஜானகி,

அர்ஜுனை காண அவனது அறைக்கு சென்றாள்.

அங்கே இவர்கள் இருவரும் இப்படி ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டு உறங்குவதை பார்த்து,

முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் இதற்கு தானே ஆசைப்பட்டேன்! அது நடந்ததில் சந்தோஷம் என்று நினைத்து வந்த தடம் தெரியாமல் அப்படியே மெதுவாக டோரை லாக் செய்துவிட்டு வெளியே சென்று விட்டாள்.

பின் இப்போது அவர்களை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று மற்றவர்களிடமும் சொல்லி வைத்து விட்டாள் ஜானகி.

அதனால் கிட்டத்தட்ட யாருடைய தொந்தரவும் இன்றி இரவு 9 மணி வரையிலும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு நிம்மதியாக அவர்கள் இருவரும் உறங்கினார்கள்.

தன் கைகளில் அடிபட்டிருந்ததால் ஒரே இடத்தில் வெகு நேரமாக படித்திருந்த அர்ஜுன் அவனது லெஃப்ட் ஹேண்டில் கடும் வலியை உணர்ந்தான்.

அதனால் அவன் தூங்கிக் கொண்டு இருந்த தேன்மொழியை தன்னை விட்டு கொஞ்சம் நகர்த்தி படுக்க வைத்து விட்டு நேராக படுத்தான்.

அவன் தனது லெப்ட் ஹேண்டில் அந்த குண்டடி பட்டு சில நிமிடங்களுக்கு பிறகு தானாக அதற்கு கட்டு போட்டுக் கொண்டதோடு சரி,

அதன் பிறகு அவன் முறையாக மருத்துவரிடம் சென்று தன் காயத்தை காட்டி அதற்கான ட்ரீட்மெண்ட் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.

அதன் விளைவாக இப்போது கடும் வலியில் அவதிப்பட்ட அர்ஜூன்,

தன் அருகில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த தேன்மொழியை திரும்பிப் பார்த்தான்.

அவள் தூக்கத்தை கெடுக்க அவனுக்கு விருப்பமில்லை.

அதனால் அந்த வலியை பொறுத்துக் கொண்டு மெல்ல எழுந்து நடந்து அருகில் இருந்த கெஸ்ட் ரூமிற்கு சென்று படுத்துக் கொண்டான்.

பின் அங்கே இருந்த இன்டர்காம் மூலமாக கிளாராவிற்கு கால் செய்து,

தனது அறைக்கு மருத்துவர்களின் குழுவை அனுப்பி வைக்க சொன்னான் அர்ஜுன்.

அவள் அடுத்த இரண்டு நிமிடத்தில் அவர்களை ‌ அழைத்துக் கொண்டு நேராக அங்கே வந்து சேர்ந்தாள்.

அவர்கள் இங்கே வந்த உடனேயே அர்ஜுனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டும் ‌ என்று தான் நினைத்தாள்‌ கிளாரா.

ஆனால் அதைப்பற்றி அவள் அவனிடம் கேட்கும்போது,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.‌

இதெல்லாம் எனக்கு ஒரே பெரிய விஷயமே இல்ல.

நீ போய் தேன்மொழிய வர சொல்லு. நான் இப்ப அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நினைக்கிறேன்.

என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க.” என்று சொல்லி அர்ஜுன் அவளை வெளியே அனுப்பி வைத்து விட்டான்.

அதன் விளைவாக இப்போது‌ சரிவர ட்ரீட்மென்ட் செய்யாததால் அவன் கைகளில் இருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் அர்ஜுன் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

அவன் பாட்டிற்கு விட்டத்தை பார்த்தபடி கட்டிலில் படித்திருக்க,

கிட்டத்தட்ட 7, 8 டாக்டர்கள் அவனை சுற்றி நின்று கொண்டு அவனது உடலை ஆராய்ச்சி செய்து அவனுக்கு இருந்த அத்தனை காயங்களையும் குணமாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள்.

அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல படுத்து கிடந்த அர்ஜூன்,

“இந்த ஹனி பேபி நம்மள பத்தி என்ன நினைக்கிறான்னு தெரியலையே..

என்ன புருஷனா நினைக்கலேன்னாலும் ஒரு மனுஷனாவாவது நினைப்பாளா?

எனக்கு அடிபட்டதனால அவளுக்கு கொஞ்சமாவது என்னை நினைச்சு ஃபீல் ஆகி இருக்குமா?

ஆனா அவ
என்னை பார்க்கும் போது எல்லாம் சான்ஸ் கிடைக்கிற எல்லாத்துக்கும் ஏதாவது சொல்லி திட்டுறதை எல்லாம் பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே..!!

அவ என்ன விட சரியான கல் நெஞ்ச காரியா இருக்கா..!!” என்று அவளைப் பற்றி யோசித்து தனக்குள் புலம்பி கொண்டிருந்தான்.

- மீண்டும் வருவாள் ❤️
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-33
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.