CHAPTER-32

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
ஐய‌ர் மாப்பிள்ளையை வ‌ர‌ கூற‌, இங்கே அந்த‌ பெரிய‌ க‌த‌வு திற‌க்க‌ப்ப‌ட்டு, உள்ளிருந்து கிள‌ம்பிய‌ புகையின் ந‌டுவே அவனின் முத‌ல் பாத‌த்தை வெளியில் எடுத்து வைத்தான். அந்த‌ க‌ருப்பு நிற‌ வேட்டைய‌ ராஜா ஷூவை அழுத்த‌மாய் ப‌தித்து வெளியில் வ‌ந்த‌வ‌னின் பின்னால் நீண்டு பறந்தது அந்த க‌ருப்பு பட்டு சால்வை.

அதில் அனைவ‌ரின் க‌ண்க‌ளும் அதிர்ச்சியில் அக‌ல‌ விரிய‌, "இவ‌ன் என்ன‌ க‌ல்யாண‌த்த‌ன்னிக்கு கூட‌ க‌ருப்புல‌ வ‌ர்றான்." என்று ஒரு பாட்டி ச‌த்த‌மாக‌வே முனுமுனுக்க‌, அவ‌ர் வாயை அழுத்தி மூடினான் அவ‌ளின் பேர‌ன்.

"பேசாம இரு. கேட்டா கொன்னிருவாரு" என்று இவ‌ன் ப‌த‌ற்ற‌மாய் திரும்பி அவ‌னை பார்க்க‌, அங்கே த‌ன் க‌ருப்பு ஷ‌ர்வானியின் கால‌ரை தூக்கிவிட்டு ச‌ரி செத்த‌வ‌ன், த‌‌ன் க‌ருப்பு த‌லைப்பாகையையும் ச‌ரியாய் அம‌ர‌ வைத்து, அப்ப‌டியே நிமிர்வாய் ப‌டிக‌ள் ஏற‌, அப்ப‌டியே அவ‌னின் முன்புற‌ம் ராஜ‌கும‌ரானாக‌ அல்ல‌, க‌ருப்பு உல‌கின் அர‌ச‌னாக‌வே காட்சிய‌ளித்தான்.

அவ‌னின் பார்வை த‌ன் ராணியிட‌மே ப‌திந்திருங்க‌, தன் கருப்பு காலணியை கழற்றாமலே அழுத்தி வைத்து அவ‌ளை நெருங்கி வ‌ந்தான். அதைய‌றியாம‌ல் குனிந்திருந்த‌ அவ‌ளோ உண‌ர்வ‌ற்ற‌ நிலையில் விழிகளில் நீரை தேக்க‌, "மாலைய‌ மாத்திக்கோங்கோ." என்றார் ஐய‌ர்.

அதில் அவ‌ளும் மெதுவாய் அவ‌ன் ப‌க்க‌ம் திரும்பி நிற்க‌, அவ‌ளையே பார்த்தப‌டி மெல்லிய‌தாய் இத‌ழ் வ‌ளைத்த‌வ‌ன் த‌ன் கையிலிருந்த‌ மாலையை மெதுவாய் உய‌ர்த்த‌, அவ‌ளும் மெதுவாய் நிமிர‌, ச‌ரியாக‌ அவ‌ன் முக‌த்தை ம‌றைத்து நின்ற‌ மாலையை மெதுவாய் விரிக்க‌ தெரிந்த‌து அவ‌ன் முக‌ம்.

அதில் ச‌ட்டென்று விழி விரித்த‌வ‌ளின் இத‌ய‌ம் துடைப்பையே நிறுத்த‌, அவனோ அப்படியே முகத்தை சாய்த்து கண்ணடித்தான்.

அதில் மொத்த‌மாய் உறைந்து நின்றிருந்தவளின் விழியில் கண்ணீர் நிரம்ப, வேக‌மாய் திரும்பி த‌ன் த‌ந்தையை பார்த்தாள்.

அவ‌ருமே சிறு க‌ர்வ‌த்துட‌ன் இத‌ழ் வ‌ளைக்க, நினைத்த‌தை அடைந்துவிட்ட‌ க‌ர்வ‌ம் அவ‌ர் க‌ண்ணில் தெரிந்த‌து.

அதே கர்வத்துடன் அன்று ஹாலில் கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்தவர், "க‌ல்யாண‌ம் அஞ்சு நாள்ல‌ ந‌ட‌க்கும். ப‌ட் மாப்ள‌ விராஜ் இல்ல‌. ருத‌ன்." என்றார் லிங்கா.

அதில் அதிர்ந்த‌ விக்ர‌ம‌ன், "வாட்?" என்று கேட்க‌, விம‌லாவும் புரியா அதிர்வாய் இருவ‌ரையும் பார்க்க‌, அவ‌ரோ கூலாய் கூல் ட்ரிங்ஸை சுவைத்த‌ப‌டி, "நா உன்ன‌ வ‌ர‌ சொன்ன‌து ருத‌ன‌ கேக்குற‌துக்காக‌தா. விராஜ‌ இல்ல‌." என்றார்.

அதில் இருவ‌ரும் குழ‌ம்பி ஒருவ‌ரையொருவ‌ர் பார்த்துவிட்டு அவ‌ரை பார்க்க‌, "என‌க்கு ருத‌ன்தா வேணும்." என்று அழுத்தி கூறிய‌ப‌டி க்ளாஸை இற‌க்கினார்.

"என்ன‌ வெளையாடுறியா? நாந்தா ஃபோன்ல‌யே தெளிவா சொன்ன‌னே நம்.." என்று அவ‌ர் கூற‌ வ‌ர‌, உட‌னே த‌ன் க‌ர‌ம் நீட்டி த‌டுத்தார் லிங்கா.

அதுல் அவ‌ர் நிறுத்தி புரியாது அவ‌ரை பார்க்க‌, "நேருல‌ பேசிக்க‌லான்னுதா சொன்னேன். என் முடிவ மாத்திக்குற‌ன்னு சொல்ல‌ல‌." என்றார் லிங்கா.

அதில் விக்ர‌ம‌ன் வேக‌மாய் ஏதோ கூற‌, அத‌ற்கு லிங்காவும் ப‌திலுக்கு ஏதோ கூற‌, இருவ‌ரின் வாக்குவாத‌ம் நீண்ட‌து. இறுதியில் பெருமூச்சாய் நிறுத்திய‌ விக்ர‌ம‌ன், "இதுதா உன் முடிவா?" என்று முறைத்து கேட்டார்.

அத‌ற்கு அவ‌ரும் அழுத்தமாய் ஆம் என்று த‌லைய‌சைக்க‌, "அப்ப‌டின்னா க‌ல்யாண‌த்த‌ த‌ள்ளிதா வெக்க‌ணும்." என்றார் விம‌லா.

அதில் இருவ‌ரும் அவ‌ர் ப‌க்க‌ம் திரும்ப‌, "ருத‌ன‌ ப‌த்தி உங்க‌ளுக்கே தெரியும், க‌ல்யாண‌த்த‌ ப‌த்தி பேசுனாலே அவ‌னுக்கு புடிக்காது. ஃபுல் டைம் பிஸ்ன‌ஸு, ரிச‌ர்ச்சுன்னு சுத்திட்டிருக்கவ‌ன். அவ‌ன‌ க‌ல்யாண‌த்துக்கு க‌ன்வ‌ன்ஸ் ப‌ண்ற‌தே க‌ஷ்ட‌ம். இதுல‌ அஞ்சு நாள்ல‌ க‌ல்யாண‌ம்னா க‌ண்டிப்பா ந‌ட‌க்காத‌ காரிய‌ம்." என்றார் விம‌லா.

"ந‌ட‌க்க‌ணும்." என்று அழுத்தி கூறிய‌வ‌ர், "அஞ்சு நாள்ல‌ இந்த‌ க‌ல்யாணம் க‌ண்டிப்பா ந‌ட‌ந்தாக‌ணும்." என்றார் லிங்கா.

"அதுக்கு ருத‌ன் ஒத்துக்க‌ணும்." என்றார் விம‌லா.

"ஒத்துக்குவான். நீங்க‌தா ஒத்துக்க‌ வெக்க‌ணும்." என்றார் லிங்கா அழுத்த‌மாக‌.

அதை நினைத்து பெருமூச்சுவிட்ட‌ விக்ர‌ம‌னின் முக‌த்தில் இன்று முழு நிறைவு புன்ன‌கை. அருகே விம‌லாவும் முழு புன்ன‌கையுட‌ன் இரு ஜோடிக‌ளையும் இர‌ச‌னையாய் பார்த்திருக்க‌, அங்கே அமீராவோ சுத்த‌மாய் ஒன்றும் புரியா நிலையில் தேங்கி நிற்க‌, அவ‌ள் க‌ழுத்தில் மாலையை போட்டான் ருத‌ன்.

அதில் திடுக்கிட்டு தெளிந்த‌வ‌ள், நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ புருவ‌த்தை நெளித்து கேள்வியாய் அவ‌ளை பார்க்க‌, "நாடியாகுது." என்றார் ஐய‌ர். அதில் திடுக்கிட்டு மாலையை இறுக்கி பிடித்த‌வ‌ள், அப்ப‌டியே உய‌ர்த்தி அவ‌ன் க‌ழுத்தில் போட‌, அவ‌னோ அவ‌ளையே பார்த்த‌ப‌டி இத‌ழ் வ‌ளைத்தான்.

அதில் த‌ய‌க்க‌மாய் பார்வையை தாழ்த்திய‌வ‌ள் த‌டுமாறமாய் தன் க‌‌ர‌த்தை வில‌க்கிவிட‌, அதே க‌ர‌த்தை அழுத்தி பிடித்தான் அவ‌ன். அதில் திடுக்கிட்டு அவ‌ள் பார்வையை நிமிர்த்த‌, அவ்விழிக‌ளுள் இர‌ச‌னையாய் ஊடுறிய‌ப‌டியே அவ‌ள் முக‌ம் நெருங்கிய‌வ‌ன், "பியூட்டிஃபுல்." என்றான் மென்மையாக‌.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் ப‌த‌ற்ற‌ம் அதிக‌ரித்து அவ‌ன் விழிக‌ளையே பார்க்க‌, அவ‌னுமே அவ்விழிக‌ளையே பார்த்த‌ப‌டி அவ‌ள் இத‌ழ் நெருங்க‌, "உக்காருங்கோ." என்றார் ஐய‌ர்.

அதில் திடுக்கிட்டு அவ‌ள் வில‌க‌ போக‌, அவ‌ள் க‌ர‌த்தை அழுத்தி பிடித்து த‌ன் ப‌க்க‌ம் இழுத்தான் அவ‌ன். அதில் திடுக்கிட்டு அவ‌ன் மார்பில் வ‌ந்து மோதிய‌வ‌ள் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌ள் இடையில் அழுத்தி க‌ரம் கொடுத்து அப்ப‌டியே அவ‌ளுட‌ன் ம‌ணையில் அம‌ர்ந்தான் ருத‌ன்.

அதில் அவ‌ளும் த‌ய‌க்க‌மாய் த‌ன் ம‌ணையில் அம‌ர்ந்தப‌டி, மெல்லிய‌ நெளிவாய் த‌ன்னிடையிலிருந்த‌ அவ‌ன் க‌ர‌த்தை வில‌க்க‌ முய‌ல‌, அவ‌னோ மேலும் அழுத்த‌ம் கொடுத்து பிடித்தான். அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் அவ‌னை பார்க்க‌, அவ‌னோ இறுக்க‌மாய் திரும்பி கேம‌ரா மேனிட‌ம் அழுத்தி க‌ண்காட்டினான்.

அதில் அவ‌னும் வேக‌மாய் புகைப்ப‌ட‌ம் எடுக்க‌ த‌யாராக‌, அதை க‌வ‌னித்த‌ இவ‌ளும் வாட‌லாய் த‌லையை தாழ்த்திவிட்டாள். அக்காட்சி அப்ப‌டியே புகைப்ப‌ட‌மாய் எடுக்க‌ப்ப‌ட‌, அதுதான் இப்போது அமீராவின் முன்பு இருந்த‌து.

அதை மெதுவாய் அவள் கையில் எடுக்க‌, ம‌ண‌ம‌க‌ளாய் அம‌ர்ந்திருந்த‌ அவ‌ள் இடையில் அவ‌னின் க‌ர‌ம் ப‌திந்திருப்ப‌து இப்போதே தெளிவாய் தெரிந்த‌து.

அதில் ச‌ட்டென்று புருவ‌ம் விரித்த‌வ‌ள், அப்ப‌டியே விழியை ந‌க‌ர்த்தி அருகே அம‌ர்ந்திருந்த‌ அவ‌னிட‌ம் பார்வையை குவிக்க‌, அவ‌ன் முக‌ம் வெகுவாய் இறுகிதான் இருந்த‌து. ஆனால் அது அவ‌ள் வில‌க‌லில் வ‌ந்த‌ கோவ‌ம் என்ப‌து இப்போதே இவ‌ளுக்கு புரிய‌, மெதுவாய் இத‌ழ் வ‌ளைத்தாள் அமீரா. ஏனோ அது அவ‌ளுக்கு பிடித்திருக்க‌, அவ‌ன் உருவ‌த்தை இர‌ச‌னையாய் வ‌ருடியது அவள் விரல்கள்.

அவ‌னோ கேம‌ராவை பார்த்த‌ப‌டியே அவ‌ளுக்கு ம‌ட்டும் கேட்கும் குர‌லில், "டோன்ட் டூ திஸ் அகைன்." என்றான் அழுத்த‌மாக‌.

பாவ‌ம் அதுதான் அவ‌ள் காதில் விழ‌வில்லை. ப‌த‌ற்ற‌மாய் எதையோ யோசித்த‌ப‌டியே அவ‌ள் அம‌ர்ந்திருக்க‌, "ரெண்டு பேரும் கைய‌ நீட்டுங்கோ." என்றார் ஐய‌ர்.

அதில்தான் அவ‌ர் ப‌க்க‌ம் திரும்பிய‌வ‌ன், க‌டுப்பாய் அவ‌ள் இடையிலிருந்த‌ க‌ர‌த்தை வில‌க்கி முன்னால் நீட்ட‌, அத‌ன் மீது அவ‌ள் க‌ர‌மும் ப‌திந்த‌து. அப்போதே அவ‌ன் இத‌ழ் மெல்லிய‌தாய் வ‌ளைந்து ம‌றைய‌, அவ‌ள் க‌ர‌த்தை அழுத்தி பிடித்தான். அதில் அவ‌ள் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ எந்த‌ பாவ‌னையும் இன்றி ஐய‌ர் கூறிய‌வ‌ற்றையெல்லாம் செய்துக்கொண்டிருந்தான்.

அதில் அவ‌ளும் வாட‌லாய் திரும்பி அவ‌ர் கூறுவ‌தை செய்ய‌ ஆர‌ம்பிக்க‌, அத‌ற்குள் ம‌ஞ்ச‌ள் தாலி தேங்காயோடு அவ‌ர்க‌ளிட‌ம் வ‌ந்து சேர்ந்த‌து.

"அந்த‌ தாலிய‌ அவ‌ன் கையில‌ எடுத்த‌துமே சாக‌ணும். ந‌ம்ப‌ ஆள‌ ரெடியா இருக்க‌ சொல்லு." என்று இங்கே ஆர்.கே கூறிக்கொண்டிருக்க‌, இங்கே ருத‌னும் அந்த‌ தாலியை கையில் எடுத்தான்.

அந்த‌ ஈர‌ ம‌ஞ்ச‌ள் க‌யிற்றின் இர‌ண்டு நுனிக‌ளையும் பிடித்தவ‌ன், மெதுவாய் அதை தூக்கி எடுக்க‌, ட‌மாரென்று வெடித்த‌ ச‌த்த‌த்தில் அவ்விட‌மே புகைமூட்ட‌மான‌து.

அதில் திடுக்கிட்டு அனைவ‌ரும் எழுந்து நிற்க‌, அங்கே ஓம‌குண்ட‌த்தின் நெருப்பு அணைந்து உள்ளிருந்து புகையாய் வ‌ந்துக்கொண்டிருக்க‌, அந்த‌ வெள்ளை புகையில் ம‌ண‌மேடை மொத்த‌தும் மூடி ம‌றைந்த‌து.

அதில் ப‌த‌றிய‌ விக்ர‌ம‌ன், "டேய் யோகி!" என்று குர‌ல் கொடுக்க‌, அவ‌னும் ப‌த‌றிய‌டித்து வேக‌மாய் அந்த‌ புகைக்குள் நுழைய‌, திடீரென்று அவ‌ன் முக‌த்தில் தெளித்த‌து இர‌த்த‌ம். அதில் அவ‌ன் அதிர்ந்து அப்ப‌டியே நின்றுவிட‌, ம‌ண‌மேடையின் கீழிருந்த‌ அத்த‌னை பேருக்குமே அதிர்ச்சி.

அப்போதே அந்த‌ புகை மெதுவாய் வில‌க‌, அந்த‌ ஐய‌ரின் நெஞ்சில் இற‌ங்கியிருந்த‌து அவ‌ர் கையிலிருந்த‌ க‌த்தி. அதை அழுத்தி இற‌க்கியிருந்த‌வ‌னின் க‌ர‌த்தில் க‌ருப்பு க‌ல் மோதிர‌ம் மின்ன‌, அந்த‌ புகை வில‌க‌லில் அன‌லாய் தெரிந்தது ருதன் முகம்.

அப்போதே கரத்தை அசைத்து இருமிய‌ப‌டி விழியை சுருக்கி திற‌ந்த‌ அமீரா அடுத்த நொடி அதிர்ந்து, "அ..!" என்று ‌அலறியபடி பின்னால் ந‌க‌ர‌, அந்த‌ ஐய‌ரோ விழி பிதுங்கி அவ‌ன் க‌ர‌த்தை அழுத்தி பிடித்திருக்க‌, ச‌ட்டென்று அவ‌ர் க‌ழுத்தை அழுத்தி பிடித்து தூக்கி த‌ன் ப‌க்க‌ம் வீசிய‌வ‌ன், அடுத்த‌ நொடியே அந்த‌ தேங்காயை எடுத்து அவ‌ர் முக‌த்தில் உடைத்திருந்தான்.

அது சுக்குநூறாய் உடைந்து தெறிக்க‌, அதிலிருந்து இள‌நீரும் இர‌த்த‌முமாய் சித‌றி ருத‌னின் க‌ர‌த்தை ந‌னைத்த‌து. அதில் அல‌றிய‌ப‌டி எழுந்த‌ அமீரா அங்கிருந்து ஓட‌ போக‌, அவ‌ள் க‌ர‌த்தை அழுத்தி பிடித்தது அவனின் க‌ர‌ம். அதில் திடுக்கிட்டு நின்ற‌வ‌ள், அதிர்வாய் திரும்ப‌ அத்த‌னை அருகில் ருத‌ன் முக‌ம். அதில் அதிர்வாய் ப‌ய‌ந்து அவ‌ள் வில‌க‌ போக‌, அவ‌ளை இழுத்து பிடித்த‌வ‌ன், "இந்த‌ க‌ல்யாண‌ம் ந‌ட‌ந்தாகணும்." என்று அழுத்தி கூறினான்.

அவ‌ன் க‌ண்ணில் தெரிந்த‌ அழுத்த‌த்தில் இவ‌ள் இத‌ய‌ம் துடிப்பையே நிறுத்த‌, த‌ன் த‌ந்தையின் முக‌மே இவ‌னுள் தெரிந்த‌து அவ‌ளுக்கு. அதில் அவ‌ள் உட‌ல் ந‌டுங்க‌, திடீரென்று ப‌ற்றிய‌து ஓம‌ குண்ட‌ம். அதில் திடுக்கிட்டு அவ‌ள் திரும்ப‌, அவ‌னுமே அழுத்த‌மாய் அத‌ன் ப‌க்க‌ம் திரும்பி அதனருகே சென்றான். அதில் அவள் புரியா பதறலாய் அவனை பார்க்க, அவனோ அப்படியே குனிந்து அந்த‌ எரியும் நெருப்புக்குள் தன் கரத்தை நுழைத்தான்.

அதில் அவ‌ள் சட்டென்று பின்னால் ந‌க‌ர்ந்து வாயில் கை வைக்க‌, கீழே சுற்றியிருந்த‌ அத்த‌னை பேருமே அதிர்வாய் வாயில் கை வைத்திருக்க‌, "பாஸ்" என்று யோகி முன்னால் வ‌ர‌, ச‌ட்டென்று பார்வையாலே அவ‌னை அட‌க்கினான் ருத‌ன்.

அதில் அவ‌னும் அப்ப‌டியே நின்று ப‌த‌ற்ற‌மாய் நெருப்பை பார்க்க‌, அத‌னுள்ளிருந்து மெதுவாய் க‌ர‌த்தை வெளியில் எடுத்தான் ருத‌ன். ஏற்க‌ன‌வே இள‌நீரும் இர‌த்த‌மும் ந‌னைத்த‌ க‌ர‌ம் ஒரு பொட்டு காய‌ம் கூட‌ ஆகாது வெளியில் வ‌ர‌, அவ‌ன் விர‌ல்க‌ளின் பிடியில் சேர்ந்து வெளி வ‌ந்தது அந்த‌ மாங்க‌ல்ய‌ம். திடீரென்று வெடித்த‌ புகையில் அது த‌வ‌றி உள்ளே விழுந்திருக்க‌, இப்போது மெதுவாய் வெளி வ‌ந்த‌ அந்த‌ மாங்க‌ல்யத்தின் ஒரு ப‌க்க‌த்தில் நெருப்பு ப‌ற்றியிருந்த‌து.

அதை அசராது ஒரு உத‌று உத‌றி அணைத்துவிட்டு இர‌ண்டாய் விரிக்க‌, அதுவோ ஒரு ப‌க்க‌ம் க‌ருப்பாய் மாறியிருந்த‌து. ம‌று ப‌க்க‌மோ அதே ம‌ஞ்ச‌ளாயிருக்க‌, அதை அப்ப‌டியே உய‌ர்த்தினான். அந்த‌ ஒரு பக்க ம‌ங்க‌ள‌த்திற்கும் மறுபக்க இருளுக்கும் ந‌டுவே தெரிந்த‌து அவ‌ள் முக‌ம்.

அவ‌ளோ அதிர்வாய் க‌ர‌த்தை இற‌க்க‌, அவ‌னோ அழுத்த‌மாய் அவ‌ளை நோக்கி அடியெடுத்து வைத்தான். அடுத்த‌ நொடி அவ‌ன் கால‌ருகே தீ ப‌ர‌வ‌, அவ‌ளோ அதிர்ந்து பின்னால் ந‌க‌ர‌, "பாஸ் கீழ‌ ச‌ல்ஃப‌ர் ஸ்மெல் வ‌ருது." என்று க‌த்தினான் யோகி.

அதில் சிறிதும் அச‌ராது அந்த‌ நெருப்பை மிதித்து அவ‌ளை நெருங்க, பொத்தென்று சுவ‌ரில் சாய்ந்த‌வ‌ளின் மார்பில் புதைந்தான். அந்த‌ இரு இத‌ய‌ங்க‌ளின் ந‌டுவே அந்த‌ இருத‌லை தாலி முழுதாய் ந‌சுங்க‌, அப்ப‌டியே அவள் கழுத்தில் க‌ட்ட‌ ஆர‌ம்பித்தான் ருத‌ன். அதில் அவ‌ள் அதிர்வாய் அவ‌னை பார்க்க‌, அவ‌னோ அத்த‌னை இறுக்க‌மாய் மூன்று முடிச்சையும் போட்டு முடித்தான்.

அத‌ற்குள் த‌ரையெங்கும் தீ ப‌ர‌வி அவ‌ள் புட‌வைக்கு வ‌ர‌, அவ‌ளோ அல‌றிய‌ப‌டி வில‌க‌ போக‌, ச‌ட்டென்று அவ‌ளை தூக்கியிருந்தான் ருத‌ன். அவ‌ளோ அவ‌ன் மார்பு ச‌ட்டையை இறுக்க‌மாய் பிடித்து அத‌னுள் புதைந்துக்கொள்ள‌, அவ‌னோ நிமிர்ந்து யோகியை அழுத்த‌மாய் பார்த்தான்.

அதில் ப‌த‌ற்ற‌மாய் த‌லைய‌சைத்த‌ அவ‌னும் வேக‌மாய் அங்கிருந்து ந‌க‌ர‌, "டேய் ருத‌ன்!" என்று க‌த்திய‌ப‌டி விக்ர‌ம‌ன் மேலே வ‌ர‌ போக‌, ச‌ட்டென்று த‌ன் அன‌ல் பார்வையிலே அவ‌ரை த‌ள்ளி நிறுத்தினான் ருத‌ன்.

அதில் ச‌ட்டென்று அங்கேயே நின்ற‌வ‌ரின் இத‌ய‌ம் அத்த‌னை வேக‌மாய் ப‌த‌ற‌, விம‌லாவோ அவ‌ர் தோளை பிடித்து, "என்ன‌ங்க‌!" என்று ப‌த‌ற‌, அருகிலிருந்த‌ லிங்காவுமே ப‌த‌ற்ற‌மாய் த‌ன் ம‌க‌ளை பார்த்தார்.

அவ‌ளோ ப‌த‌ற‌லாய் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ த‌ரையெங்கும் ப‌ர‌வி கிட‌ந்த‌ நெருப்புக்குள் த‌ன் அடுத்த‌ அடியை அழுத்த‌மாய் எடுத்து வைத்து முன்னேறினான்.

"வேண்டான்டா ருத‌ன்!" என்று விக்ர‌ம‌ன் க‌த்த‌, அவ‌னோ யாரையும் க‌ண்டுக்கொள்ளாம‌ல் அந்த‌ அக்னிக்குள்ளே அக்னி ஓம‌த்தை சுற்ற‌ ஆர‌ம்பித்தான்.

"ருத‌ன் சொன்னா கேளுப்பா." என்று விம‌லா க‌த்திக்கொண்டிருக்க‌, "நா ஒட‌னே நெருப்ப‌ அணைக்குறேன்." என்ற‌ப‌டி அவ‌ச‌ர‌மாய் ஓடினார் விக்ர‌ம‌ன்.

ஆனால் அங்கே த‌ரையெங்கும் நெருப்பு அதிக‌மாகிக்கொண்டே போக‌, அத‌னுள் அந்த‌ க‌ருப்பு கால‌ணியை அழுத்த‌மாய் ப‌தித்து முத‌ல் சுற்ற‌ை ஆர‌ம்பித்த‌வ‌ன், "இந்த‌ நிமிஷ‌த்துல‌ இருந்து நீ என‌க்கு சொந்த‌ம். உன்னோட‌ எல்லாமே என‌க்கு சொந்த‌ம். என்னோட‌ எல்லாமே உன‌க்கு சொந்த‌ம்." என்று அழுத்தி கூற‌, அவ‌ன் வார்த்தைக‌ளில் கூட‌ அத்த‌னை அன‌ல் இருந்த‌து.

அவ‌ளோ பயத்தில் உடல் விரைக்க சுற்றியும் பார்க்க‌, அந்த‌ தீ அவ்விட‌ம் முழுக்க‌ ப‌ர‌வியிக்கொண்டிருக்க‌, அவ‌னோ இர‌ண்டாவ‌து சுற்றை ஆர‌ம்பித்திருந்தான்.

"உன்னோட‌ ச‌ந்தோஷ‌த்துலையும் ச‌ரி. துக்க‌த்துலையும் ச‌ரி. எல்லாத்துலையும் நா ம‌ட்டுந்தா இருக்க‌ணும்." என்று அழுத்தி கூற‌, திடுக்கிட்டு அவ‌னை பார்த்தாள் அவ‌ள்.

அதில் இரு விழிக‌ள் ச‌ந்திக்க‌, அவ்விழியை அழுத்த‌மாய் பார்த்த‌வ‌ன், "உன் க‌ண்ணுல‌ தெரியுற‌ இந்த‌ ப‌ய‌ம், அது என‌க்காக‌ ம‌ட்டுந்தா வ‌ர‌ணும். அதுல‌ க‌ண்ணீர் வ‌ந்தாலும் அதுல‌ என் மொக‌ம் ம‌ட்டுந்தா தெரிய‌ணும்." என்று அழுத்தி கூறி அந்த‌ சுற்றை முடித்தான்.

அவ‌ளுக்கோ இத‌ய‌ம் வெகுவாய் ப‌த‌ற‌, "உன் நெஞ்சுல‌ ம‌ட்டும் இல்ல‌. நென‌ப்புல‌க்கூட‌ நா ம‌ட்டுந்தா நெற‌ஞ்சிருக்க‌ணும்." என்று அவ‌ன் முன்றாம் சுற்றை ஆர‌ம்பிக்க‌, இவ‌ளுக்கோ இதெல்லாம் வாக்குக‌ள் அல்ல‌ க‌ட்ட‌ளைக‌ளாக‌ தெரிந்த‌து.

அத‌ற்குள் தீயும் அதிக‌ரிக்க‌, அந்த‌ ச‌ல்ஃப‌ரின் அதிக‌ப்ப‌டியான‌ வெப்ப‌ம் அவ‌ன் க‌ருப்பு கால‌ணியையும் தாண்டி அவ‌ன் கால்க‌ளை சுட‌ ஆர‌ம்பித்திருக்க‌, அதை வெகுவாய் தாங்கிக்கொண்டு அடுத்த‌ சுற்றை ஆர‌ம்பித்த‌வ‌னின் க‌ண்க‌ளெல்லாம் வ‌லியில் சிவ‌க்க‌ ஆர‌ம்பிக்க‌, "ந‌ம‌க்கு எடையில‌ எவ‌னும் வ‌ர‌மாட்டான். வ‌ர‌ணுன்னு யோசிச்சாலே பொத‌ச்சிருவேன்." என்று அழுத்தி கூற, அவ‌ளோ அதிர்வாய் விழிக‌ளை விரித்தாள்.

அந்த‌ ச‌ல்ஃப‌ரின் ந‌ச்சு புகை அவ‌ள் விழிக‌ளில் நீரை தேக்க‌, அத்த‌னை எரிச்ச‌லிலும் அவ‌ள் இமைக‌ள் மூட‌ ம‌ற‌ந்து விரிந்து நிற்க‌, "என்னோட‌ உல‌க‌த்துல‌ இன்னொருத்த‌ர் நொழைய‌ முடியும்னா அது நீ ம‌ட்டுந்தா. நீயே நென‌ச்சாலும் அதுல‌ இருந்து வெளிய‌ போக‌ முடியாது." என்றான் அழுத்தமாக.

அதில் அதிர்வை உண‌ர்ந்த‌ அவ‌ளுக்கோ த‌ன் த‌ந்தையின் கொடுமைக‌ள் க‌ண்முன் வ‌ந்து நிற்க‌, இவ‌னும் அதேப்போல் ஒரு அர‌க்க‌னாய் காட்சிய‌ளித்தான்.

கீழே சூடு வெகுவாய் அதிக‌ரிக்க‌ உடலை நிமிர்த்தி வெகுவாய் தாங்கிக்கொண்டவ‌னின் விழி ந‌ர‌ம்புக‌ள் இர‌த்த‌மாய் புடைக்க‌, க‌டைசி சுற்றை ஆர‌ம்பித்தான்.

அதற்குள் அவள் தொண்டையெல்லாம் நச்சு புகை நிரம்பி மூச்சு திணற ஆரம்பிக்க, "அந்த‌ ம‌ர‌ண‌த்தால‌க்கூட‌ உன்ன‌ எங்கிட்ட‌ இருந்து பிரிக்க‌ முடியாது. நா அந்த‌ ம‌ர‌ண‌த்த‌விட‌ மோச‌மான‌வ‌ன்." என்று அத்தனை அழுத்த‌மாய் கூற‌, ச‌ட்டென்று இவ‌ள் மூச்சே நின்றுவிட்ட‌து.

அப்ப‌டியே அவ‌ன் கால்க‌ளும் நின்றுவிட‌, அப்ப‌டியே அவ‌ளையும் இற‌க்கினான். அதில் திடுக்கிட்டு குனிந்தவள், நெருப்பென்று துள்ளும் முன் அது தரை அல்ல தரை மீதிருந்த, அந்த‌ ஈர ம‌ஞ்ச‌ள் பூசிய‌ அம்மி க‌ல்லில் ம‌ல‌ராய் அவ‌ளை இற‌க்கினான்.

அப்போதும் சுடுமோ என்று இறுக்கி விழி மூட‌, அங்கிருந்த‌ பூ த‌ட்டை காலாலே த‌ட்டிவிட்டு, அந்த‌ பூக்குவிய‌லின் மேல் அவ‌ள் பாத‌ங்க‌ளை பூவாய் இற‌க்கினான் அவன். அதில் ஜில்லென்று அவ‌ள் உள்ள‌ங்கால்க‌ள் ஜில்லிட‌, அவ‌ன் தோள்ச‌ட்டைக‌ளை இறுக்கி பிடித்து விழி திற‌ந்தாள்.

அவ‌னோ ச‌ட்டென்று கீழிருந்த‌வ‌னை ஓங்கி மிதிக்க‌, அந்த‌ ஐய‌ரின் நெஞ்சிலிருந்த‌ க‌த்தி பட்டென்று அவன் கைக்கு வந்தது. அதை அழுத்தி பிடித்து அதே காலில் இரத்தத்தை துடைத்துக்கொண்டவ‌ன், வேக‌மாய் அவ‌ள் முக‌த்தில் வீசி கிழிக்க, அல‌றிய‌ப‌டி இறுக்கி விழி மூடினாள். அடுத்த‌ நொடி அவ‌ள் கால‌டியில் விழுந்த‌து அவ‌ளின் நெற்றி சுட்டி. அதில்தான் மெல்ல‌ ப‌த‌ற்ற‌த்தை குறைத்தவள், எரிகின்ற தொண்டையை ஈரமாக்கி விழுங்கி மெதுவாய் விழியை திற‌க்க‌, ச‌ட்டென்று அவ‌ள் முக‌த்தில் தெளித்த‌து இர‌த்த‌ம். அதில் திடுக்கிட்டு அதிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ த‌ன் உள்ள‌ங்கைக்குள் க‌த்தி முனையை இறுக்கி பிடித்து இழுத்திருந்தான்.

அதில் அவ‌ள் அதிர்வாய் விழி விரித்து அந்த‌ க‌த்தியை பார்க்க‌, அந்த கத்தியில் அவ‌னின் குருதி வ‌ழிய‌ வ‌ழிய‌ தூக்கி அவ‌ள் உச்சியில் வைத்து அழுத்தி பூசி, த‌ன் குருதியை அவ‌ளுக்கு குங்கும‌மாய் மாற்றினான்.

அதில் மொத்தமாய் இவ‌ள் உதிர‌ம் உறைந்திருக்க‌, அவ‌ள் உச்சியில் அவன் பாவ‌க்க‌றையோடு பூச‌ப‌ட்ட‌ அந்த‌ இர‌த்த‌ குங்கும‌ம், அப்ப‌டியே வ‌ழிந்து அத‌ன் ஒரு துளி அவ‌ள் ந‌டு நெற்றிக்கு வ‌ர‌, அங்கே அழுத்த‌மாய் இத‌ழ் ப‌தித்து பொட்டு வைத்தவன், அப்ப‌டியே அவ‌ள் நெற்றியில் சாய்ந்து அவள் விழிக‌ளை பார்த்து, "க‌ன்க்ரேஜுலேஷ‌ன்ஸ் மிச‌ஸ் ருத‌ன்." என்றான் மெல்லிய‌ குர‌லில்.

உலகில் எந்த ஒரு பெண்ணிற்கும் இப்படியொரு திருமணம் நடந்திருக்காது என்று அப்படியே மயங்கி அவன் மீதே சாய்ந்தாள் அமீரா.

- நொடிக‌ள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-32
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.