“என்ன சனா எப்படி இருக்க??” என்று மகேஷ் கேட்க, “நான் நல்லா இருக்கேன் சீனியர்…. உங்கள தான் என்னால பார்க்க முடியல… இந்த வாரம் தான் நான் கொஞ்சம் ஃப்ரீ ஆனேன்” என்று சனந்தா கூற, “ம்ம்… இப்ப உனக்கு ஹெல்த் எல்லாம் பரவால்லையா??” என்று மகேஷ் கேட்க, “இப்ப பரவாயில்ல ஆல் குட்” என்று சனந்தா கூறினாள்.
“சேஜ் ஹர்ப் ரிப்போர்ட்ஸ் எல்லாம் இப்ப தான் வந்துது… உனக்கு ஃபோன் பண்ணனும்னு நினைச்சுட்டு இருந்தேன் அதுக்குள்ள நீயே வந்துட்ட சனா…. இது எல்லாமே நேச்சுரல் அண்ட் ஒரிஜினல் சேஜ் தான்…. ஃப்ளவர்ஸ் எல்லாமே இம்போர்ட்டட் குவாலிட்டி நல்லா இருக்கு” என்று மகேஷ் கூறினான்.
“ஹப்பாடா என்னோட ரீசர்ச் பேப்பரே ஹர்ப்ஸ்ல தான் ஆரம்பிச்சேன்… எந்த பர்டிகுலர் ஹர்ப் பத்தி பண்ணலாம்னு குழப்பத்திலேயே தான் இருந்தோம் நானும் கௌதமும்….. எனக்கு அங்க இந்த சேஜ் செடிய பார்த்ததுமே இது ஒரிஜினலா இருந்துச்சுன்னா அதுல தான் ரீசர்ச் பண்ணலாம்னு உறுதியா இருந்தேன்…. இப்ப நீங்க ரிப்போர்ட் எல்லாமே பாசிட்டிவ்னு சொன்ன உடனே அதுல என் ரீசர்ச் முடிச்சிடுவேன் சீனியர்” என்று சனந்தா உற்சாகமாக கூறினாள்.
“ம்ம்… ஆல் த பெஸ்ட் சனா… அப்புறம், நீ போய் இருக்கல எங்க இருக்கு அந்த ஊரு?” என்று மகேஷ் கேட்க, “அது வண்ணம்னு ஒரு கிராமம்… ரொம்ப அழகா இருக்கும் ஃபோட்டோஸ் பாருங்க, ஊட்டிக்கு கொஞ்சம் மேல போகணும் ஒரு அரை மணி நேரம் டிராவல் பண்ற மாதிரி இருக்கும்” என்று சனா அவளுடைய கைபேசியில் இருந்த புகைப்படங்களை காட்டினாள்.
“ஏய் நல்லா இருக்கு சனா…. இங்க ஒரு வாட்டி நம்ம டீம்ல எல்லாரும் ட்ரிப் மாதிரி போலாம் நல்லா இருக்கும்ல” என்று மகேஷ் கூற, “ஆமா ரொம்ப நல்லா இருக்கும் நீங்களும் வாங்க” என்று சனந்தா உற்சாகத்துடன் கூறினாள். “நீ போறேன்னு சொன்னப்போ எங்களால எதுவும் பேச முடியல நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்…. என்ன ஆச்சு??” என்று மகேஷ் கேட்டான்.
“உங்களுக்கு தான் தெரியும்ல எனக்கு ஆக்சிடென்ட் ஆனதுனால வீட்ல, “நீ ஒன்னும் பண்ணத் தேவையில்லைன்னு” சொல்லிட்டே இருந்தாங்க… பிரகாஷ் அங்கிள் ஃபேமிலி பிரண்ட் அவர் தான் இந்த மாதிரி வாலண்டியர் வொர்க் இருக்குன்னு சும்மா வீட்ல வந்து சொல்லிட்டு இருந்தாரு… அப்போ இதை ஒரு ஆப்பர்சியூனிட்டியா யூஸ் பண்ணிகிட்டேன்…. வீட்டை விட்டு முதல்ல வெளியில போகனும் அதுக்கு அப்புறமா மீதி வேலையெல்லாம் பார்த்துக்கலாம் அப்படின்னு ஒரு நம்பிக்கைல தான் அங்க போனேன்…. இப்ப அங்க போனதுக்கு அப்புறம் எனக்கு அங்க புடிச்சும் இருந்தது… அதுவும் இல்லாம ஊட்டி ஸ்கூலோட வேலையும் இன்னும் பெண்டிங்லயே இருக்கு அதையும் சேர்த்து முடிக்கலாம்ன்னு நினைச்சேன் சீனியர்” என்று சனந்தா கூறினாள்.
“சனா அந்த ஊட்டி ஸ்கூல் பத்தி இப்போதைக்கு நீ எதுவும் பண்ணாத… அதிலிருந்து தான் நிறைய பிரச்சனைகள் நமக்கு வர ஆரம்பிச்சுது… இங்க பார் எத்தனை பேர் இருந்தாங்க நம்ம டீம்ல இப்ப நாலு பேர் விட்டு போயிட்டாங்க அதுக்கு முக்கிய காரணமே அந்த ஊட்டி ஸ்கூல்ல கை வெச்சது தான்…. ரெண்டு ஸ்கூல் முடிச்சிட்டோம் இன்னும் ரெண்டு ஸ்கூல் இருக்கு… அதுல ஒரு ஸ்கூல்ல உள்ள கூட போகாம பண்ணிட்டாங்க…. அதவும் இல்லாம அந்த ஸ்கூலுக்கு போகக்கூடாது என்றதுக்காக தான் நமக்கு வேற வேற வேலைகல வர வெச்சுட்டே இருந்தாங்க…. அதையும் மீறி தான் நீ அன்னிக்கு போன… உன்னை தனியா அனுப்ப இங்க யாருக்குமே விருப்பம் இல்ல இருந்தும் வேலை முடியணும்ன்றதுனால தான் உன்னை அனுப்புனோம் நாங்க…. ஆனா அது இவ்ளோ பெரிய தலைவலியை உருவாக்கும்னு நான் நினைக்கல” என்று மகேஷ் வருத்தத்துடன் கூறினான்.
“அதெல்லாம் ஒன்னும் பரவால்ல சீனியர், இதெல்லாம் நம்ம ஃபேஸ் பண்ணி தான் ஆகணும்…. இப்போதைக்கு நானும் முடிஞ்ச அளவுக்கு தகவல் தெரிஞ்சுக்க முடியுமான்னு மட்டும் பார்க்கிறேன்…. அது எல்லாத்தையும் கலெக்ட் பண்றேன் அதுக்கு அப்புறமா என்ன பண்ணலாம்னு நம்ம முடிவு பண்ணலாம்” என்று சனந்தா கூற, “சரி ஓகே அப்படியே பண்ணலாம் சனா” என்று மகேஷ் கூறினான்.
இப்படி சனந்தாவும் மகேஷும் பேசிக் கொண்டிருக்க, அவர்களின் டீமில் உள்ள ஆட்கள் வரவும் அவர்களிடமும் பேசி நேரத்தை செலவழித்து விட்டு மாலையில் வீடு திரும்பினாள் சனந்தா.
“என்னம்மா எங்க போன?? உனக்காக நான் வேலையெல்லாம் முடிச்சிட்டு சீக்கிரம் வந்துட்டேன் வீட்டுக்கு” என்று சந்திரசேகர் கேட்க, “இல்லப்பா எங்க டீம் அவங்கள பார்க்க போனேன்… ரொம்ப நாளாச்சுல அதனால பா” என்று சனந்தா கூற, “அப்படியா எல்லாரும் எப்படி இருக்காங்க??” என்று சந்திரசேகர் கேட்க, “எல்லாரும் நல்லா இருக்காங்க…. எல்லாரும் என்னை ரொம்ப மிஸ் பண்றேன்னு சொன்னாங்க தெரியுமா” என்று சனா கூற, சந்திரசேகர் புன்னகைத்து, “சரி வா நம்ம சும்மா எங்கேயாவது போயிட்டு வரலாம்” என்று சனந்தா மற்றும் லக்ஷ்மியை அழைத்துக் கொண்டு சந்திரசேகர் வெளியே சென்றனர்.
“என்ன இவ காலையில் குட் மார்னிங் மட்டும் அனுப்பிட்டு ஆளையே காணோமே??” என்ற விக்ரம் அவனது கைபேசியை அவ்வப்போது எடுத்து பார்த்துக் கொண்டிருக்க, சரவணன் அதை கவனித்து, “ரொம்ப பண்ணாத டா… அவ ஃப்ரீ ஆனா அவளே மெசேஜ் பண்ணுவா…. இன்னிக்கு செக்கப் இருக்குன்னு சொல்லி இருக்கா இல்ல… அது போக அவங்க ஃபிரெண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ணனும்னு சொல்லி இருக்கா… அவங்கள எல்லாம் மீட் பண்ணிட்டு ஃப்ரீ ஆயிட்டு உனக்கு மெசேஜ் பண்ணுவா டா… ஏன்டா இப்படி பண்ற” என்று சரவணன் கேட்க, “இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது மச்சான் நீ போ” என்று சலித்துக் கொண்டான் விக்ரம். “எங்க போறது வா சாப்பிட போலாம் அம்மா ஃபோன் பண்ணிட்டாங்க” என்று சரவணன் கூற இருவரும் மதிய உணவு அருந்த சென்றனர்.
ஸ்ரீனிவாசன் உணவருந்தி கொண்டிருக்க விக்ரம் மற்றும் சரவணன் வீட்டிற்கு வரவும் அவர்களும் அவருடன் சேர்ந்து உணவருந்தினர். “என்னங்க காலையில நான் சனாக்கு ஃபோன் பண்ணேன்” என்று வள்ளி கூறி ஒரு நொடி விக்ரமை பார்க்க, விக்ரம் வள்ளியை பார்த்தான்.
“என்ன ஆச்சு?” என்று வள்ளி கேட்க, ஒன்னும் இல்ல என்று தலையை அசைத்து மீண்டும் உணவருந்த ஆரம்பித்தான் விக்ரம். வள்ளி புன்னகைத்துக் கொண்டு, “நேத்து சாயந்திரம் போல ஃபோன் பண்ணா சனா, கொஞ்ச நேரம் பேசினேன் அவங்க அம்மா கிட்ட கூட பேசினேன்…. அதுக்கப்புறம் காலையில நான் ஃபோன் பண்ணும் போது அவ அப்ப தான் ஹாஸ்பிடல்ல இருந்தா செக்கப்க்கு போய் இருக்கேன்னு சொன்னா…. சரின்னு நானும் ஃப்ரீ ஆயிட்டு பண்ணுன்னு வெச்சுட்டேன்… இன்னும் அவ ஃபோன் பண்ணலைங்க ஒரு வேல அவளுக்கு எதுவும் உடம்பு பிரச்சனையா இருக்குமோ??” என்று வள்ளி கேட்டார்.
“நீ ஏன் தேவையில்லாதத எல்லாம் போட்டு குழப்பிக்கிற… ஏதாவது ஜெனரல் செக்கப்பா கூட இருக்கும்” என்று ஸ்ரீனிவாசன் கூறினார். “இவங்களுக்கு தெரியாதுல்ல சனாக்கு ஆக்சிடென்ட் எல்லாம் ஆகி இருக்குன்னு” என்று சரவணன் மனதில் நினைத்துக் கொண்டு, “அம்மா அவளுக்கு இங்க வர்றதுக்கு முன்னாடி ஒரு மூணு நாலு மாசத்துக்கு முன்னாடி ஆக்சிடென்ட் ஆச்சு… அந்த செக்கப்க்கு தான் போயிருப்பா வேற எதுவும் இருக்காது” என்று சரவணன் கூறினான்.
“அப்படியா என்னப்பா ஆச்சு??” என்று பதற்றத்துடன் வள்ளி கேட்க, “ஒன்னும் இல்ல மா… இப்ப பாருங்க நல்லா தானே இருக்கா… நம்ம கிராமத்தில் எத்தனை வாட்டி ஏறி இறங்கி எல்லாம் பண்றா…. நல்லா இருக்கா, நீங்க பதட்ட படுற அளவுக்கு ஒன்னும் இல்ல” என்று சரவணன் கூற, வள்ளி அமைதியாகிவிட்டார்.
“சரி, அப்ப எதுக்கும் நான் அவளுக்கு ஒரு ஃபோன் பண்ணி பார்க்கிறேன்” என்று வள்ளி கூற, “ஹாஸ்பிடல் செக்கப் எல்லாம் முடிச்சிட்டு அவங்க டீம் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பார்க்க போறேன்னு சொன்னா அதனால பிஸியா இருப்பா நீங்க பண்ணாதீங்க அவளே ஃப்ரீ ஆயிட்டு ஃபோன் பண்ணுவா” என்று விக்ரம் கூறவும், மூவரும் சட்டென்று விக்ரமை பார்த்தனர்.
“ஐயோ இப்ப என்ன சொல்லி சமாளிக்குறதுன்னே தெரியலையே” என்று விக்ரம் அவனுக்குள் நினைத்துக் கொண்டு, “நீ தானடா என் கிட்ட சொன்ன…. சொல்ல வேண்டியது தானே அம்மா கிட்ட” என்று சரவணனை பார்த்து விக்ரம் கேட்க, சரவணன் அவனைப் பார்த்து தலையை அசைத்து, “ஆமா மா!!! நான் தான் சொன்னேன்… நானே தான் காலையில கேட்டேன் அப்ப சனா ஹாஸ்பிடலுக்கு போயிட்டு ஃபிரண்ட்ஸ பார்க்க போறேன்னு சொன்னா… அது விக்ரம் கிட்ட பேசும் போது சொன்னேன்…. அத தான் இப்ப அவன் உங்க கிட்ட சொல்றான்” என்று சரவணன் சமாளித்தான். விக்ரம் செய்கையை கண்டு வள்ளி புன்னகைத்துக் கொண்டார்.
சரவணன் மற்றும் விக்ரம் அவர்களது வேலையை பார்த்துவிட்டு இரவு உணவு அருந்திவிட்டு மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தனர். “அடேய் நான் வேணா ஃபோன் பண்ணி பார்க்கவா அவளுக்கு?? என்ன ஆச்சு இவ்ளோ நேரம் ஆகுது??” என்று விக்ரம் பொலம்பிக் கொண்டிருக்க, “பண்ணு!! ஃபோன் பண்ணு!!! மெசேஜ் பண்ணு!!! என்கிட்ட ஏன் கேக்குற இதெல்லாம்” என்று சரவணன் கேலியாக கேட்க, “என்னடா இப்படி பேசுற” என்று விக்ரம் சலித்துக் கொண்டான்.
“மதியம் என்னை கோர்த்து விட்டல அப்பவே போட்டு உடச்சு இருப்பேன்… இவன் தான் ஏதோ சனா கிட்ட பேசிட்டு இருக்கான் பார்த்துக்கோங்கனு போட்டு குடுத்திருக்கணும்… போனா போதும்னு உன்னை காப்பாத்தி இருக்கேன்ல… அதோட சும்மா இரு இன்னிக்கு மட்டும் எத்தனை வாட்டி தெரியுமா என்கிட்ட கேட்ட, “என்ன ஆயிருக்கும்?? இந்நேரம் வீட்டுக்கு போயிருக்கனும் தானே??? எவ்ளோ நேரம் ஃபிரண்ட்ஸ் கூட இருப்பா??? ஒரு வேள ஹாஸ்பிடல்ல எதாவது பிரச்சனை இருக்குமா?? என்ன ஆச்சு ஏதாச்சுன்னு” நீ என் உயிரை எடுத்துட்டு இருக்க பார்த்தியா மவனே அவ்வளவு தான் உன்னை” என்று சரவணன் போலியாக மிரட்டினான்.
“என்னவோ போடா நீயும் என்னை திட்டிகிட்டே இருக்க” என்று விக்ரம் மாடியில் சிறிது நேரம் நடந்து கொண்டிருக்க, “மச்சான் இங்க பாரு அவ ஸ்டேட்டஸ் போட்டு இருக்கா” என்று சரவணன் கூறவும், விக்ரம் ஓடி வந்து கைபேசியை எடுத்து பார்க்க, “ஆஃப்டர் லாங் டைம்” என்று கேப்ஷன் போட்டு அவளது டீம் உடன் எடுத்த புகைப்படத்தை போட்டு இருந்தாள் சனந்தா. அதற்குப்பின் சனந்தா, லக்ஷ்மி மற்றும் சந்திரசேகர் மூவரும் கோயிலுக்கு சென்று அங்கே ஒரு புகைப்படம் எடுத்து அதையும் ஸ்டேட்டஸில் போட்டு இருந்தாள் சனந்தா.
விக்ரமின் கவனத்தை ஈர்த்தது டீமுடன் எடுத்த ஃபோட்டோ மட்டுமே, அதில் சனந்தா பக்கத்தில் நின்று கொண்டிருந்த மகேஷை பார்த்து, “யார்ரா இவன்??? இவ கூட இவ்ளோ க்ளோசா நின்னுட்டு இருக்கான்” என்று விக்ரம் கேட்க, “அடேய்… அவன் மட்டும் இல்ல இந்த பக்கம் பாரு ஒரு பொண்ணு நிக்குறா…. பின்னால இன்னொரு பொண்ணு நிற்குறா…. இந்த சைடு இன்னொரு பையனும் நிக்குறான்…. அவங்க எல்லாம் உன் கண்ணுக்கு தெரியலையா… அவ பக்கத்துல யாரு இருக்காங்களோ அவங்கள மட்டும் தான் நீ பார்ப்பியா??” என்று சரவணன் கேலி செய்ய, “எனக்கு அப்படி தான் பார்க்க தெரியும் நீ போ” என்று விக்ரம் சலித்துக் கொண்டான்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும் நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 32
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.