CHAPTER-32

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
ச‌ந்ரா : அர்ஜுன‌ புதுசா பாக்குற‌ மாதிரி இருக்கு. என்ன‌ மாதிரி உண‌ர்வு இது? இதுக்கு முன்னாடி இப்பிடி ஆன‌தே இல்ல‌யே? ஒருவேள‌ நேத்து அபி சொல்லிட்டு போன‌ மாதிரி, நா அர்ஜுன‌ காத‌லிக்க‌ ஆர‌ம்பிச்சிட்ட‌னா?



ச‌ந்ரா அர்ஜுனை பார்த்துக்கொண்டே அவ‌னுட‌ன் ந‌ட‌ந்த‌ அனைத்து நிக‌ழ்வுக‌ளையும்



நினைத்துப்பார்த்து பார்த்து, புன்ன‌கைத்தாள்.

ச‌ந்ரா : இல்ல‌ அதுக்கு வாய்ப்பே இல்ல‌. நா எப்பிடி அர்ஜுன‌ காதலிப்பே? அப்பிடியே காதலிச்சாதா என்ன‌ தப்பு? எங்களுக்கு கல்யாணம் ஆயிரிச்சில்ல?

என்று யோசித்துக் கொண்டிருந்த சந்ரா, திடீரென்று சுயநினைவிற்கு வந்து,

ச‌ந்ரா : என‌க்கு என்ன‌ ஆச்சு? நா ஏ இப்பிடியெல்லா யோசிக்கிறே? என‌க்கு என்ன‌மோ ஆயிருச்சு.

ச‌ந்ரா எழுந்து, குளித்துவிட்டு, கிச்ச‌னுக்கு சென்று, Coffee போட்டு கொண்டுவ‌ந்து, அர்ஜுன் அருகில் வ‌ந்து,

ச‌ந்ரா : அர்ஜுன் !

அர்ஜுன் திரும்பி ச‌ந்ராவை பார்த்தான்.

ச‌ந்ரா : இந்தா Coffee.

அர்ஜுன் அவ‌ள் முக‌த்தைக்கூடா பார்க்காம‌ல் திரும்பிக்கொண்டு,

அர்ஜுன் : No. Thank you. நா Already குடிச்சுட்டே.

ச‌ந்ரா : (சாத‌ர‌ண‌மாக‌) ஓ செரி.

ச‌ந்ரா கிச்ச‌னுக்கு சென்று, ச‌மைய‌லை முடித்துவிட்டு, ச‌மைத்த‌தை அனைத்தையும் Dianing Tableக்கு கொண்டு வ‌ந்து வைத்தாள். மீராவையும் அர்ஜுனையும் சாப்பிட‌ அழைத்தாள். அர்ஜுனும் மீராவும் சாப்பிட‌ வ‌ந்த‌ன‌ர். அர்ஜுன் அம‌ர்ந்தான். ச‌ந்ரா ப‌ரிமாரினாள். அர்ஜுன், ச‌ந்ராவின் முக‌த்தைக்கூட‌ பார்க்காம‌ல், அம‌ர்ந்திருந்தான். அதை க‌வ‌னித்த‌ ச‌ந்ரா,

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) என்ன‌ ஆச்சு அர்ஜுனுக்கு? ஏ வித்தியாசமா ந‌ட‌ந்துக்குறா? எப்ப‌வும் போல‌ இல்ல‌யே?

அர்ஜுன் : மீரா ! அந்த‌ ச‌ட்னி எடுத்துக்குடு.

ச‌ந்ரா : மீரா அக்கா நீங்க‌ இருங்க‌. நா எடுத்து த‌ர்றே.

ச‌ந்ரா எடுத்து த‌ந்தாள். அர்ஜுன் அதை வாங்காம‌ல், அவ‌ன் பாட்டுக்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். இவை அனைத்தையும் மீரா க‌வ‌னித்தாள்.

ச‌ந்ரா : அர்ஜுன் ! இந்தா ச‌ட்னி.

அர்ஜுன் : (அவ‌ள் முக‌த்தை பார்க்க‌ம‌லே) என‌க்கு ச‌ட்னி வேண்டா.

ச‌ந்ராவின் முக‌ம் சுருங்கிவிட்ட‌து.

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) க‌ண்டிப்பா அர்ஜுனுக்கு ஏதோ பிர‌ச்ச‌ன‌. அதா அவ‌ எப்ப‌வும்போல இல்லாம‌ வித்தியாசமா ந‌ட‌ந்துக்குறா.

ச‌ந்ரா, அர்ஜுனுக்கு இன்னும் 2 இட்லி வைத்தாள்.

அர்ஜுன் : (சிடுசிடுவென்று) என‌க்கு போதும்.

என்று கூறிவிட்டு சென்றுவிட்டான். கையை க‌ழுவிவிட்டு, Officeக்கு கிள‌ம்பினான்.

மீரா : எங்க‌ போற‌ அர்ஜுன்?

அர்ஜுன் : இது என்ன‌ கேள்வி மீரா? Officeக்குதா.

மீரா : இன்னிக்கு ஞாயித்துக்கிழம.

அர்ஜுன் : ம்ம்.

அர்ஜுன் ச‌ந்ராவின் ப‌க்க‌ம் முக‌த்தை திருப்பாம‌ல் அப்ப‌டியே ரூமுக்குள் சென்றுவிட்டான்.

ச‌ந்ரா : அர்ஜுனுக்கு Sundayக்கூட‌ ஞாப‌க‌ம் இல்லையா? அவ‌னுக்கு என்ன‌ பிர‌ச்ச‌ன‌ன்னு கேட்டே ஆக‌னும்.

ச‌ந்ராவும் ரூமுக்குள் சென்றாள். அர்ஜுன் கோப‌த்துட‌ன் lap topஇல் வேலை செய்துக்கொண்டிருந்தான். ச‌ந்ரா, அர்ஜுனின் அருகில் வ‌ந்தாள்.

ச‌ந்ரா : அர்ஜுன்!

அர்ஜுன் க‌ண்டுக்காம‌ல் வேலை செய்துக்கொண்டிருந்தான்.

ச‌ந்ரா : அர்ஜுன் !

அர்ஜுன் க‌ண்டுக்க‌வே இல்லை.

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) எப்ப‌வுமே நா கூப்ட்டா, அர்ஜுன் என்ன‌ Sweet heartனு கேப்பானே? ஆனா இப்போ ஏ க‌ண்டுக்க‌ல‌?

ச‌ந்ரா மீண்டும்,

ச‌ந்ரா : அர்ஜுன் நா உங்கிட்ட‌ பேச‌னும்.

அர்ஜுன் க‌ண்டுக்க‌வே இல்லை. ச‌ந்ரா அவ‌ன் முன்பே வ‌ந்து, அவ‌னுடைய‌ லேப் டாப்பை வேக‌மாக‌ மூடிவிட்டு,

ச‌ந்ரா : நா உங்கிட்ட‌ பேச‌னும்.



அர்ஜுன் கோப‌மாக‌ ரூமை விட்டு வெளியே சென்றுவிட்டான். ச‌ந்ரா அர்ஜுனை அதிர்ச்சியுட‌ன் பார்த்தாள். அர்ஜுன் ரூமைவிட்டு வெளியே சென்ற‌தும்,

மீரா : அர்ஜுன் !

அர்ஜுன் : சொல்லு மீரா.

மீரா : நீ எதுக்காக‌ ச‌ந்ராவ‌ Avoid ப‌ண்ற‌?

அர்ஜுன் : நா அவ‌ள‌ avoid ப‌ண்ல‌. அவ‌ள‌விட்டு வெல‌க‌ முய‌ற்ச்சி ப‌ண்றே.

மீரா : ஏ நேத்து அவ‌ உங்கிட்ட‌ ல‌வ்வ‌ சொல்ல‌லையா? அதுக்காக‌வா இப்பிடி ப‌ண்ற‌?

அர்ஜுன் : (வேத‌னையுட‌ன்) இல்ல‌ மீரா. நீ என்ன‌ புரிஞ்சிகிட்ட‌து அவ்ளோதா. அவ‌ என்ன‌ வேண்டான்னு சொன்னாக்கூட‌ ப‌ர‌வால்ல‌. ஆனா நேத்து நா எத‌யெல்லா பாக்க‌ கூடாதோ அதையெல்லா பாத்துட்டே.

மிரா : (அதிர்ச்சியுட‌ன்) என்ன‌ ஆச்சு அர்ஜுன்?

அர்ஜுன் : ந‌ட‌ந்த‌வ‌ற்றை கூறினான்.

மீரா : நெஜ‌மாவா?



அர்ஜுன் : (மிகுந்த‌ வேத‌னையுட‌ன்) ஆமா மீரா. ச‌ந்ரா என்ன‌ காத‌லிக்க‌வே இல்ல‌. அதோட‌ அவ‌ வேற‌ ஒருத்த‌ன‌ காத‌லிக்கிறா. அத‌ நென‌ச்சாதா ரொம்ப‌ வேத‌னையா இருக்கு.

மீரா : நீ க‌வ‌லப்ப‌டாத‌ அர்ஜுன். நா ச‌ந்ர‌ாகிட்ட‌ பேசுறே.

அர்ஜுன் : (வேதனையுடன்) வேண்டா மீரா. இனிமே பேசி என்ன‌ ப‌ண்ற‌து? எல்லா முடிஞ்சு போச்சு. ச‌ந்ராக்கு அபிய‌தா பிடிச்சிருக்குன்னா, அவகிட்ட நீ என்ன பேசியும் பிரயோஜனமே இல்ல. அவளுக்கு என்மேல காதல் வராது. அவள கட்டாயப்படுத்தாத. அவ சந்தோஷமா இருக்கட்டும்.

மீரா : அவ சந்தோஷமா இருக்கட்டும்னு சொல்லிட்டு, இப்போ நீ உன்னோட‌ ச‌ந்தோஷ‌த்த‌யே எழ‌ந்துட்டு நிக்க‌ போறியா?

அர்ஜுன் : அதுக்குன்னு நா ச‌ந்ராவ‌ க‌ட்டாய‌ப்ப‌டுத்தி என்ன‌ காத‌லிக்க‌ வெக்க‌ முடியாதில்ல‌? விடு மீரா.

அர்ஜுன் வேத‌னையுட‌ன் அங்கிருந்து சென்றுவிட்டான். வெளியில் சென்று அம‌ர்ந்துவிட்டான்.

மீரா ச‌ந்ராவை பார்க்க‌ சென்றாள். மீரா ரூமுக்குள் சென்ற‌தும், ச‌ந்ரா வ‌ருத்த‌மாக‌ அம‌ர்ந்திருந்தாள்.

மீரா : ச‌ந்ரா !

ச‌ந்ரா : (வ‌ருத்த‌மாக‌) மீரா அக்கா ! நானே உங்க‌ள‌ பாக்க‌ வ‌ர‌லான்னு நென‌ச்சே. அர்ஜுன் இன்னிக்கு ரொம்ப‌ வித்யாச‌மா ந‌ட‌ந்துக்குறா. எங்கிட்ட‌ மொக‌ங்குடுத்துக்கூட‌ பேச‌மாட்டிங்குறா. என‌க்கு ஒன்னுமே புரிய‌ல‌. அவ‌னுக்கு என்ன‌தா பிர‌ச்ச‌ன‌?

மீரா : நீதா பிர‌ச்ச‌ன‌.

ச‌ந்ரா : (அதிர்ச்சியுட‌ன்) நானா? நா என்ன‌ ப‌ண்ணே மீரா அக்கா?

மீரா : ஆமா. நீ நேத்து ப‌ண்ண‌ காரிய‌த்தால‌தா அவ‌ உங்கிட்ட‌ பேச‌மாட்டிங்குறா. நீ எதுக்காக‌ அந்த‌ அபிய‌ அந்த‌ ராத்திரில‌ மீட் ப‌ண்ண‌ போன‌? அதுக்கான‌ அவ‌சிய‌ம் என்ன‌ இருக்கு ச‌ந்ரா?

ச‌ந்ரா : அத‌னால‌தா கோவ‌மா இருக்கானா?

மீரா : இல்ல‌ ச‌ந்ரா. அவ‌ கோவ‌மா இருக்கான்னு நீ நெனைக்கிற‌. ஆனா அவ‌ வேத‌னையில‌ இருக்கா. அதுதா உண்ம‌.

ச‌ந்ரா : (அதிர்ச்சியுட‌ன்) வேத‌னையில‌ இருக்கானா? எங்கிட்ட கேட்டிருந்தா நேத்து என்ன‌ ந‌ட‌ந்த‌துன்னு நானே தெளிவா சொல்லியிருப்பே. ஆனா அவ‌ என்ன‌ த‌ப்பா புரிஞ்சுகிட்டு, நா பேசுற‌தையே கேக்க‌ மாட்டிங்குறா. இப்போ நா என்ன‌ ப‌ண்ற‌து?



மீரா : அவ‌னோட‌ வேத‌னைய நீதா போக்க‌னும். அவ‌ங்கிட்ட‌ப்போய் பேசு.

ச‌ந்ரா : செரி மீரா அக்கா. நா இப்ப‌வே போய் அவ‌ங்கிட்ட‌ பேசுறே.

மீரா : செரி ச‌ந்ரா. அவ‌ன‌ போய் ச‌மாத‌ன‌ப்ப‌டுத்து.

ச‌ந்ரா வெளியே அர்ஜுனிட‌ம் சென்றாள். அர்ஜுன் மிகுந்த‌ வேத‌னையுட‌ன் வெளியில் அம‌ர்ந்திருந்தான். ச‌ந்ரா, அர்ஜுனின் அருகில் வ‌ந்தாள்.

ச‌ந்ரா : அர்ஜுன் !

அர்ஜுன் உட‌னே க‌ண்க‌ளை துடைத்துக்கொண்டு, ச‌ந்ராவை திரும்பி பார்த்தான்.

அர்ஜுன் : என‌க்கு உங்கிட்ட பேச‌ விருப்ப‌ம் இல்ல‌. த‌ய‌வு செஞ்சு என்ன‌ Disturb ப‌ண்ணாத‌.

அர்ஜுன் அங்கிருந்து செல்ல‌ முய‌ன்றான். ச‌ந்ரா அவ‌னுடைய‌ கையை பிடித்துவிட்டாள்.



அர்ஜுன் சந்ராவை திரும்பிக்கூட‌ பார்க்காம‌ல்,

அர்ஜுன் : (வேத‌னையுட‌ன்) என்னோட‌ கைய‌ விடு.

ச‌ந்ரா : முடியாது. நா சொல்ற‌த‌ கேட்டிட்டு அப்றோ நீ எங்க‌வேணாலு போ.

அர்ஜுன் : (அவ‌ள் முக‌த்தை பார்க்காம‌லே) நா எதையும் கேக்க‌ விரும்ப‌ல‌.



ச‌ந்ரா : (கோப‌த்துட‌ன்) நீ மொத‌ல்ல‌ என்ன‌ பாரு. எதுக்காக‌ அந்த‌ ப‌க்க‌மா திரும்பியிருக்க‌? என்ன‌ பாரு.

அர்ஜுன் : (அதே வேத‌னையுட‌ன்) என‌க்கு உன்ன‌ பாக்க‌ விரும்ப்போ இல்ல‌.

ச‌ந்ரா : போது அர்ஜுன். நீ என்மேல‌ கோவ‌மா இல்ல‌ன்னு என‌க்கு தெரியும். உன்னோட‌ வேத‌னைய‌ ம‌றைக்க‌ கோவ‌மா இருக்கிற‌மாதிரி ந‌டிக்கிற‌.

அர்ஜுன் : அப்பிடியெல்லா இல்ல‌.

ச‌ந்ரா : அப்பிடியா? அப்போ என்னோட‌ மொக‌த்த‌ பாத்து ப‌தில் சொல்லு.

அர்ஜுன் : நீ மொத‌ல்ல‌ என்னோட‌ கைய‌ விடு.



ச‌ந்ரா : நீ எதுக்காக‌ இப்பிடி ந‌ட‌ந்துக்கிற‌ அர்ஜுன் ? அப்பிடி என்ன‌ ந‌ட‌ந்த‌து? நா அபிக்கூட‌ பேசுற‌த‌ பாத்தா உன‌க்கு ஏ இவ்ளோ வேத‌னையா இருக்கு? எதுக்காக‌ நீ இவ்ளோ எமோஷ்னல் ஆகுற‌? என்ன‌ பாரு. ப‌தில் சொல்லு.



அர்ஜுன் : (வேக‌மாக‌ திரும்பி) என‌க்கு எப்பிடி வேத‌னையில்லாம‌ இருக்கும் ச‌ந்ரா? என‌க்கு வேத‌னையாதா இருக்கு. ஏன்னா நா உன்ன‌ காத‌லிக்கிறே. (ச‌ந்ராவின் இதய‌ம் வேக‌மாக‌துடித்த‌து) புரியுதா உன‌க்கு? நா உன்ன‌ காத‌லிக்கிறே. நா உன்ன எந்த‌ அள‌வுக்கு காத‌லிக்கிற‌னோ, அதே அள‌வுக்கு நீ என்ன‌ வெறுக்கிற‌. இனிமே நா என்ன‌ ப‌ண்ண‌ முடியும்? மீரா சொன்ன‌துக்காக‌ல்லா நீ என்ன‌ ச‌மாத‌ன‌ப்ப‌டுத்திற‌ மாதிரி ந‌டிக்க‌ வேண்டா. நீ நீயாவே இரு.

என்று கூறிவிட்டு ச‌ந்ராவின் கையை உத‌றிவிட்டு சென்றுவிட்டான். ச‌ந்ரா மிகுந்த‌ வேத‌னையுட‌ன் அங்கேயே அம‌ர்ந்துவிட்டாள். அழுதுக்கொண்டே,



ச‌ந்ரா : எதுக்காக‌ என்ன‌ புரிஞ்சிக்க‌வே மாட்டிங்குற‌ அர்ஜுன்? நா உன்ன‌ வெறுக்குற‌ன்னு நீ எப்பிடி நென‌ச்ச‌? நா ஆர‌ம்ப‌த்துல‌ உன்ன‌ வெறுத்த‌து உண்ம‌தா. ஆனா நீ என்ன‌ இவ்ளோ காத‌லிக்கும்போது நா எப்பிடி உன்ன‌ வெறுக்க‌ முடியும்? என்னோட‌ ம‌ன‌சுல‌ இப்போ உன்மேல‌ எந்த‌ வெறுப்பும் இல்ல‌ அர்ஜுன்.

மீரா அங்கு வ‌ந்து,

மீரா : அப்போ உன்னோட‌ ம‌ன‌சுல‌ என்ன‌தா இருக்கு ச‌ந்ரா?

ச‌ந்ரா : (க‌ண்ணீரை துட‌த்துவிட்டு) மீரா அக்கா நீங்க‌ எப்ப‌ வ‌ந்திங்க‌?

மீரா : நா எப்ப‌வோ வ‌ந்துட்டே. நீ சொல்லு. அர்ஜுன் மேல‌ உன‌க்கு வெறுப்பு இல்ல‌ன்னா, இப்போ உன்னோட‌ க‌ண்ல‌ தெரியுற‌ இந்த‌ க‌ணீருக்கு என்ன‌ அர்த்தோ? அவ‌ உங்கூட‌ பேசாம‌ இருந்தா உன‌க்கு ஏ இவ்ளோ வேத‌னையா இருக்கு?

ச‌ந்ரா : அது......

மீரா : என்ன‌ ஆச்சு? சொல்ல‌ முடிய‌ல‌யா? அதுக்கு பேருதா காத‌ல். நீ அர்ஜுன‌ காத‌லிக்க‌ ஆர‌ம்பிச்சிட்ட‌ ச‌ந்ரா. புரியுதா உன‌க்கு? நீ அர்ஜுன‌ காத‌லிக்கிற‌.

தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-32
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.