Chapter-32

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
தேன்மொழி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்க, தனக்கான உணவுகளை கிச்சனுக்கு கால் செய்து வரவழைத்த அர்ஜுன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.‌

பாத்ரூமில் குளித்துவிட்டு வெளியில் வந்த தேன்மொழி அவனைப் பார்த்தபடி உள்ளே செல்லாமல் பாத்ரூம் வாசலிலேயே நின்று கொண்டு இருந்தாள்.

அவனைப் பார்த்தாலே சற்று நேரத்திற்கு முன்பு அவள் அவனை முழுவதாக பார்த்து

அவன் உடல் முழுவதையும் தொட்டு அவளே அவனை குளிக்க வைத்தது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது.

அதனால் மீண்டும் அவள் முகம் வெட்கத்தில் சிவக்க,

அப்படியே சென்று அவன் முன்னே நின்று அவன் முகத்தை பார்க்கவே அவளுக்கு ஏதோ போல் இருந்தது.

அவள் நடந்து வரும்போது அவளது கால் கோலுசின் ஓசை லேசாக அவனுக்கு ‌கேட்டிருந்ததால்,

அவள் பக்கம் கேஷுவலாக திரும்பிப் பார்த்த அர்ஜுன்,

“ஏன் அங்கேயே நிற்கிற? நீ ஸ்கூல்ல டீச்சரா ஒர்க் பண்ணிட்டு இருந்த தானே...

அங்க இருக்கிற பசங்களுக்கு எல்லாம் இப்படி நிக்க வச்சு பனிஷ்மென்ட் கொடுத்து கொடுத்து உனக்கும் இப்படி யாரையாவது பார்த்து பயந்தா அப்படியே freezeஆகி நிற்கிறது பழகி போயிருச்சா?”

என்று கிண்டலாக கேட்டான். அதனால் அவனை முறைத்து பார்த்த தேன்மொழி,

“ஓஹோ.. அப்ப நான் யாரு, எங்க இருந்து வந்திருக்கேன்னு கூட இவனுக்கு ஞாபகம் இருக்கா?

அது எல்லாமே தெரிஞ்சு தான் இவன் என்னை இங்கயே இருக்கச் சொல்லிக் கொடுமை படுத்துரானா?”

என்று நினைத்தவாறு ‌ அவனிடம் எதுவும் பேசாமல் சென்று சோஃபாவில் அமர்ந்தாள்.

அவளை திரும்பி பார்த்தான் அர்ஜுன்.

இப்போது தான் குளித்துவிட்டு வந்திருந்ததால் முன்பு எப்போதும் இருப்பதை விட,

ஃப்ரெஷ் ஆக இருந்த தேன்மொழி ஒப்பனை இல்லா பேரழகியாக ஜொலித்தாள்.

அதனால் அர்ஜுன் ஆச்சரியமாக அவளிடம்,

“குளிச்சிட்டு வந்தா உனக்கு மேக்கப் போட்டுட்டு ரெடியாகுற ஹாபிட் எல்லாம் இல்லையா?” என்று சாதாரணமாகத்தான் கேட்டான்.

ஆனால் அவன் பேசியதை கேட்டு அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.

உடனே தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, “நீங்க அப்படியே என்னை இங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து ஃப்ரீயா ஹேப்பியா வாழ வச்சுட்டு இருக்கிறதா உங்களுக்கு நினைப்பா?

இந்த இடம் எனக்கு பெருசா இருக்கிற காஸ்ட்லி prison அவ்வளவு தான்.

ஜெயில்ல எல்லாமே இருந்தாலும், அங்க இருக்கிற கைதி யாராவது சந்தோஷமா மேக்கப் போட்டுக்கிட்டு ஜாலியா மினிகிக்கிட்டு இருக்கிறதை நீங்க பார்த்திருக்கீங்களா?

இங்கயே அடைஞ்சு கிடக்கிற எனக்கு அது ஒன்னு தான் இப்போ கொறச்சல்..

சும்மா இப்படி எல்லாம் பேசி என்னை கடுப்பேத்தாதீங்க சார் ப்ளீஸ்!”

என்று எரிச்சலுடன் சொன்னாள் தேன்மொழி.

அதைக் கேட்டு உடனே அவன் முகம் மாறிவிட்டது.

இதுவரை இப்படியெல்லாம் முகத்தில் அறைந்தார் போல் பேசி அவன் எத்தனையோ பேரை பயமுறுத்தி இருக்கிறான்.

ஆனால் அவன் வாழ்வில் முதல்முறையாக ஒரு சிறிய பெண் இப்படி சுலபமாக அவனை வாயடைத்து போய்விட செய்வாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

அவள் சொன்னதிலும் அவனுக்கு தவறு இருப்பதாகவும் தோன்றவில்லை.

அதனால் உடனே பேச்சை மாற்ற நினைத்த அர்ஜுன் “நீ சாப்டியா?” என்று கேட்டான்.

“இன்னும் இல்ல. ஜெயில்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் அவங்க செத்துடக் கூடாதுன்னு கரெக்டா டைமுக்கு சாப்பாடு மட்டும் போட்டுருவீங்க இல்ல..!!”

என்று தேன்மொழி ஆற்றாமை உடன் கேட்க, உடனே அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

அதனால் இம்முறை கொஞ்சம் கோபமாக “நான் ஆசை ஆசையா பார்த்து பார்த்து கட்டின இந்த பேலஸ் உனக்கு ஜெயில் மாதிரி இருக்கா?

இன்னொரு தடவை நீ என் பேலசை ஜெயில்னு என் முன்னாடி சொன்னினா, எனக்கு கோபம் வந்துரும்.

அப்புறம் பதிலுக்கு நானும் ஏதாவது சொல்லிட்டா நீதான் அத நெனச்சு ஃபில் பண்ணிட்டு இருப்ப பாத்துக்கோ!”

என்று தன் குரலை உயர்த்தி சொன்னான் அர்ஜுன்.

உடனே தன் வாயை மூடிக்கொண்ட தேன்மொழி அவன் மீது இருந்த பயத்தால்,

அவனைப் பார்க்க தைரியம் இல்லாமல் ‌ தன் தலையை கீழே குனிந்து கொண்டாள்.

“குட், கொஞ்ச நேரத்துக்கு நீ இப்படியே இரு.

உன் வாய்க்கு லீவ் விட்டுடு. நான் உன்கிட்ட நல்ல மாதிரி நடந்துக்கணும்னு நினைக்கிறேன்.

நல்லா இருக்கிற என் மூடை நீயே ஏதாவது பேசி கெடுத்து விட்டிராத.”

என்ற அர்ஜுன் கிச்சனுக்கு கால் செய்து அவளுக்காக சில உணவுகளை கொண்டு வரச் சொன்னான்.

அவன் சொன்ன உணவு பட்டியலை கேட்டு அதிர்ந்து போன தேன்மொழி,

“இது எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ் ஆச்சே!

இத பத்தி இவருக்கு எப்படி தெரியும்?

ஏதாவது ஒன்னு மட்டும்ன்னா தெரியாம flowல சொல்லி இருப்பாருன்னு நினைச்சு கண்டுக்காம விட்டுடலாம்.

பட் இவர் சொன்ன சைட் டிஷ்ல இருந்து மெயின் டிஷ் வரைக்கும் எல்லாமே எனக்கு பிடிச்சது ஆச்சே..

இங்க இருக்கிற யாருக்கும் என்ன பத்தி அந்த அளவுக்கு தெரியாது.

அப்புறம் இவர் எப்படி இதையெல்லாம் கண்டுபிடிச்சாரு..??” என்று யோசித்துக்கொண்டு இருந்தாள்.

அவன் சொன்ன பெரிய லிஸ்ட்டை கிச்சனில் இருக்கும் சமையல்காரர்கள் ஏராளமானவர்கள் சேர்ந்து ஒரே நேரத்தில் சமைத்தாலும்,

அனைத்தையும் முடித்து கொண்டு வர எப்படியும் குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும் என்று நினைத்த அர்ஜுன்,

“நீ சும்மா தானே இருக்க.. இங்க வந்து எனக்கு ஊட்டி விடு.” என்றான் அவளிடம்.

“உங்களுக்கு லெஃப்ட் ஹேண்டில தானே அடிபட்டு இருக்கு..

ரைட் ஹேண்டு நல்லா தானே இருக்கு..

நீங்களே சாப்பிடுங்களேன்..

என்னை எதுக்கு ஊட்டி விட சொல்றீங்க?” என்று அவள் கேட்க,

“ம்ம்.. லெஃப்ட் ‍ handல pain இருக்கறதுனால கன்டினியூவர்ஸ்ஸா ரைட் ஹேண்ட்டையே யூஸ் பண்ணி

இப்ப எனக்கு ரைட் ஹாண்ட்லயும் பெயின் வந்துருச்சு.

அது சரி.. இவ்ளோ எக்ஸ்பிளனேஷன் குடுத்தா தான் மேடம் எனக்கு ஊட்டி விடுவீங்களா?”

என்று தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவளை பார்த்து கேட்டான் அர்ஜுன்.

“நீங்க குழந்தைகளை விட ரொம்ப மோசமா இருக்கீங்க மிஸ்டர் அர்ஜுன்..!!”

என்று முணுமுணுத்த தேன்மொழி எழுந்து ‌ அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.

இவ்வளவு நேரம் அர்ஜுன் தன்‌ கைகளால் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.‌

அதனால் அவன் சென்று கை கழுவிவிட்டு வந்து அமர,

தானே தன் கைகளால் அவனுக்கு உணவுகளை ஊட்டி விட தொடங்கினாள் தேன்மொழி.

அப்போது அவளது அழகான முகத்தில் அப்பட்டமாக சோகம் தெரிவதை கவனித்த அர்ஜுன்,

“நீ எப்பயாவது ஏதாவது செய்யணும்னு ஆசைப்பட்டு இருக்கியா?” என்று கேட்டவன்,

ஒரு நொடி இடைவேளைக்கு பிறகு,

“உடனே நான் இருக்கிறது ஜெயில்.. இங்க இருந்து என்னால என்ன பண்ண முடியும்?

அப்படி இப்படின்னு பேச ஆரம்பிச்சுராத..

இங்க வர்றதுக்கு முன்னாடி பொதுவா உன் லைஃப்ல ஏதாவது பண்ணனும்னு நீ யோசிச்சு இருப்பல்ல..

நான் அந்த மாதிரி கேட்கிறேன்.” என்று தன் வாயில் இருந்த உணவுகளை மென்றபடி கேட்டான்.

உடனே எரிச்சல் அடைந்த தேன்மொழி சாப்பிடாமல் அடம் பிடிக்கும் தன் குழந்தையின் மீது கடுப்பில் இருக்கும் அம்மா அதன் வாயில் இடித்து இடித்து

கையில் உள்ள உணவுகளை அதன் வாயில் திணித்து ஊட்டுவதைப் போல,

வெடுக்கென்று அவன் வாயில் உணவை வைத்து அழுத்திவிட்டு,

“எனக்குன்னு அப்படி எல்லாம் என் வாழ்க்கையை பத்தி தனியா எந்த ஆசையோ, எதிர்பார்ப்போ, எப்பயும் இருந்ததே இல்ல.

எனக்கு சரியா விவரம் தெரியறதுக்கு முன்னாடியே எங்க அப்பா இறந்துட்டாரு.

எங்க அம்மா தான் ரொம்ப கஷ்டப்பட்டு என்னையும் என் தம்பியையும் படிக்க வச்சாங்க.

அப்போ அவங்கள பார்க்கும்போது சீக்கிரமா நான் வளர்ந்து பெரியவளாகி நிறைய சம்பாதிச்சு என் குடும்பத்தை பார்த்துக்கணும்னு தோணும்.

அதத் தவிர வேற எதுவும் செய்யணும்னு நான் எப்பவும் நினைச்சதில்ல.

அதான் படிச்ச உடனே வேலைக்கு போயிட்டேன்.” என்று சோகமாக சொன்னாள் தேன்மொழி.

தன் குடும்பத்தை பற்றி பேச பேச அவள் கண்கள் கலங்கியது.

அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த அர்ஜுன் அதைப்பற்றி அவளிடம் மேலும் எதுவும் கேட்கவும் இல்லை.

அதற்கு மேல் சாப்பிடுவதற்காக தவிர வேறு எதற்கும் அவன் தன் வாயை திறக்கவும் இல்லை.

அதனால் தன் மனதிற்குள் “பெரிய இவன்.. என்னமோ என் ஆசை என்னன்னு தெரிஞ்சுகிட்டு அது எல்லாத்தையும் நிறைவேத்த போறவன் மாதிரியே ‌ எல்லாத்தையும் கேட்டுட்டு..

நான் என் மனசுல இருக்குறத சொல்லும்போது என்னமோ இவனுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற மாதிரி நல்லா திங்கிறதை பாரு..!!

சரியான சோத்துக்கு செத்தவனா இருப்பான் போல..

மாடு மாதிரி தின்கிறான்..!!” என்று அவனை திட்டியபடியே தன் முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு அவனுக்கு தொடர்ந்து ஊட்டி விட்டாள்.

நொடிக்கு நொடி அவளது முகத்தில் மாறிக் கொண்டே இருந்த எக்ஸ்பிரஸ்கள் அனைத்தையும் தவறாமல் கவனித்த அர்ஜுன்,

“எப்பா.. இவ சரியான கோவக்காரியா இருப்பா போலையே..!!

நான் மட்டும் எப்பயாவது வசமா இவ கிட்ட சிக்கினா என் மேல இருக்கிற கோபத்துக்கு அப்படியே என்னை கடிச்சு தின்னு முழுங்கிடுவா இவ..!!” என்று நினைத்தான்.

சில நொடிகளுக்கு பின் அர்ஜுன் அவளுக்காக ஆர்டர் செய்த அனைத்து உணவுகளும் அங்கே ஒரு பெரிய ட்ராலியில் வந்து சேர்ந்தது.

பின் Foldable dining table setஐ கையுடன் அங்கே கொண்டு வந்த சிலர் அதை அந்த அறையின் ஒரு ஓரமாக போட்டு அதில்

அவர்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அடுக்கி வைத்து விட்டு சென்றார்கள்.

பல நாட்களுக்கு பிறகு அவற்றை எல்லாம் பார்த்த தேன்மொழிக்கு இப்போது அதை சாப்பிட வேண்டும் என்று வாய் உரியது.

அதனால் அவசர அவசரமாக அர்ஜூனின் வாயில் அவனுக்கான உணவுகளை திணித்து தட்டில் மீதம் இருந்த உணவை காலி செய்தாள்.

பின் எழுந்து சென்று கை கழுவி விட்டு வந்து அந்த டெம்ப்ரவரி டைனிங் டேபிளில் அமர்ந்து அவற்றை ஒரு பிடி ‌பிடிக்க தொடங்கினாள் அவள்.

இதற்கு முன் இந்த வீட்டில் அவளுக்கு விதவிதமான உணவுகள் கிடைத்திருந்தது.

ஆனால் அங்கே இருந்த இட்லி, தோசை, பூரி, பொங்கல், பணியாரம் போன்ற டிபிக்கல் தமிழ்நாட்டு உணவுகளை அவள் மிகவும் மிஸ் செய்தாள்.

கட்டிலில் நன்றாக சாய்ந்து அமர்ந்து அவள் சாப்பிடும் அழகை கண்டு ரசித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

அதை கவனித்த தேன்மொழிக்கு “இந்த ஆளு என்ன தான் கொஞ்சம் கூறுக் கெட்ட குக்கரா இருந்தாலும்,

இவன் தான் என்ன பத்தி யோசிச்சு எனக்கு புடிச்ச மாதிரி சோறு போடணும்னு நினைச்சிருக்கான்.

அந்த ஒரு விஷயத்துக்காகவே இவன பாராட்டணும்.” என்று தோன்ற,

“ஆனா இவனுக்கு எப்படி எனக்கு இந்த ஐட்டம் எல்லாம் பிடிக்கும்னு தெரியும்?

எனக்கு முட்டையில இருக்கிற மஞ்சள் கரு புடிக்காதுன்னு அதக் கூட கரெக்டா தெரிஞ்சுக்கிட்டு எக் வைட்ஸ் மட்டும் வேகவைத்து கொண்டு வந்திருக்காங்களே..!!” என்று நினைத்து குழம்பினாள்.

இன்னும் அவன் வேறு அவளையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்ததால்,

” இங்க இருக்கிற எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ்.

எனக்கு இதெல்லாம் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”

என்று அவனிடமே நேரடியாக கேட்டாள் அவள்.

“நீதானே உனக்கு இதெல்லாம் பிடிக்கும்னு என்கிட்ட சொன்ன..!!" என்று அவள் கூலாகச் சொல்ல,

“என்னது நான் சொன்னனா? அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லையே..!!” என்று ஆச்சரியமாக கேட்டாள் தேன்மொழி.

“உனக்கு ஞாபகம் இல்லையா?

நான் கோமாவுல இருக்கும்போது நீதானே என் கிட்ட வாய் விடாம தொன தொனன்னு பேசிக்கிட்டே இருந்த..

அப்பதான் இதெல்லாம் நீ உனக்கு பிடிக்கும்னு என் கிட்ட சொன்னதா எனக்கு ஞாபகம் இருக்கு.”

என்று அவன் இப்போது தெளிவாக சொன்னவுடன்,

அதுவரை நிம்மதியாக சாப்பிட்டு கொண்டு இருந்த தேன்மொழி உடனே எழுந்து நின்று விட்டாள்.

அன்று கோமாவில் இருந்து எப்படிதாவது அர்ஜுனை எழுப்ப வேண்டும் என்பதற்காக அவனிடம் எதையாவது பேசு பேசு என்று ஜானகி இவளை டார்ச்சர் செய்தாள்.

அதனால் தேன்மொழியும் கிட்டத்தட்ட ஒரு வாரமாக அவனிடம் என்னென்னமோ பேசிக் கொண்டிருந்தாள்.

ஏன் அவள் பள்ளியில் படிக்கும் போது ஒரு முறை அவளது சயின்ஸ் guideல் அவள் ஃபிரண்டு ஒருவன்

அவளிடம் இருந்து அவன் வாங்கிய guideடை திருப்பி கொடுக்கும்போது அதில் ஐ லவ் யூ தேனு என்று எழுதிக் கொடுத்ததையும்,

அதைப் பார்த்து பயந்து அழுத தேன்மொழி உடனே டீச்சரிடம் அதைக் காட்டி அவனை அடி வாங்க வைத்ததையும் கூட அவனிடம் சொல்லி இருந்தாள்.

அது மட்டும் இன்றி அந்தப் பையன் அப்போதே பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும்,

அவன் சில வருடங்களுக்கு பிறகு அவள் காலேஜ் படிக்கும் போது அவளுக்கு சீனியராக வந்ததும்,

காலேஜிலும் அவன் தன்னை லவ் டார்ச்சர் செய்தது பற்றியும் அவள் அவனிடம் ஏதேதோ கதை கதையாக சொல்லி இருக்கிறாள்.‌

என்னவோ தன் குடும்ப சூழ்நிலையை பற்றி யோசித்ததால் அவளுக்கு யார் மீதும் காதல் வரவில்லை.

அதைப் பற்றியும் சொல்லி அவள் பல முறை அவனிடம் புலம்பி இருக்கிறாள்.

இப்போது அவை அனைத்தையும் நினைத்துப் பார்த்த தேன்மொழி,

“ஜானகி மேடம் என்ன டார்ச்சர் பண்ணதுனால நான் என்னமோ இவருக்கு என்ன கேட்கவா போகுதுன்னு நெனச்சு அந்த தைரியத்துல என் மனசுல இருந்த எல்லாத்தையும் சொல்லிட்டேன்.

இதுவரைக்கும் நான் மத்தவங்க யார் கிட்டயும் சொல்லாம சீக்ரெட்டா வச்சிருந்ததை கூட இவர் கிட்ட சொல்லிட்டேன்.

ஆனா இந்த மனுஷன் கோமாவுல் இருக்கும் போது கூட அது எல்லாத்தையும் கரெக்டா கேட்டிருக்கானே..!!”

என்று தனக்குள் புலம்பி கொண்டு இருக்க,

“அடியேய்.. நீ ஒரு நாள் அவன் கிட்ட அவனோட கண்ணு எவ்ளோ அழகா இருக்கு.. மூக்கு எவ்வளவு அம்சமா ஷார்ப்பா இருக்கு..

அவனோட சிக்ஸ் பாக்ஸ் எல்லாம் இன்னும் எப்படி அப்படியே இருக்குன்னு கேட்டு கேட்டு இன்ச் பை இன்ச்சா அவன ரசிச்சு ரசிச்சு புகழ்ந்துட்டு இருந்தியே..

எல்லாத்தையும் அவன் கேட்டிருந்தா அதையும் தானே கேட்டு இருப்பான்...

அப்ப அவன் உன்ன பத்தி என்ன நெனச்சிருப்பான்?

அதை யோசிச்சு பாக்குறியா நீ?" என்று அவளிடம் கேட்டது அவள் மனசாட்சி.

அவ்வளவு தான், அன்று நடந்த அனைத்தும் அவளுக்கு ஞாபகம் வந்துவிட,

தன் காலுக்கு கீழே உள்ள பூமி நழுவுவதைப் போல உணர்ந்த தேன்மொழி,

“அப்ப நான் பேசுன எல்லாத்தையும் நீங்க கேட்டுட்டீங்களா?”

என்று பயத்துடன் திக்கி திணறி அவனிடம் கேட்டாள்.

“எல்லாத்தையும் கேட்டுட்டனான்னு எனக்கு தெரியல.

பட் நீ பேசறது மட்டும் எப்பயும் என் காதுல கேட்டுக்கிட்டே இருக்கும்.

அதுல ஓரளவுக்கு தான் இப்ப எனக்கு ஞாபகம் இருக்கு.”

என்று அர்ஜுன் சொல்ல, “அப்ப நான் அவன பத்தி சொன்னது எல்லாம் அவனுக்கு எப்படியாவது மறந்து போயிடனும் கடவுளே..!!”

என்று நினைத்துக் கொண்ட தேன்மொழி கண்டிப்பாக அப்படித்தான் நடந்திருக்கும் என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டு பெருமூச்சு விட்டுவிட்டு மீண்டும் அமர்ந்து சாப்பிட தொடங்கினாள்.

தொடரும்.

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-32
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.