CHAPTER-31

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
நீருக்குள் மூழ்கிய‌ அமீராவோ க‌ண்க‌ளை மூடி த‌ன் வ‌ருங்கால‌ க‌ண‌வ‌னை எப்ப‌டி பார்ப்பது என்ற‌ சிந்த‌னையிலேயே சில‌ நொடிக‌ள் க‌ட‌ந்து மெதுவாய் மேலே வ‌ர‌ முய‌ல‌, அவ‌ள் கரத்தை அழுத்தி பிடித்‌து இழுத்தது ஒரு க‌ர‌ம்.

அதில் திடுக்கிட்டு கீழே வந்தவளின் விழிகள் பெரிதாய் விரிந்து திற‌க்க‌, நீருக்குள் அனைத்தும் ம‌ங்க‌ளாய் இருக்க‌வும் குனிந்து பார்த்தாள். இப்போது அவ‌ள் க‌ர‌ம் விடுப்ப‌ட்டிருக்க‌, மூச்சை பிடித்துக்கொண்டு புரியாது சுற்றி பார்த்தாள். அதில் அவ‌ளின் இடையிலிருந்த‌ சேலையை த‌ண்ணீர் முழுதாய் வில‌க்கியிருக்க‌, அதில் முழுதாய் வெளிப்ப‌ட்ட‌ அவ‌ள் வெண்ணிற‌ ம‌ணி வ‌யிற்றில் அழுத்த‌மாய் ப‌திந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள். அதில் திடுக்கிட்டு குனியும் நேர‌ம், அவ்விட‌த்தில் அழுத்தி க‌ர‌ம் ப‌தித்து வ‌ளைத்து அவ‌ள் கழுத்தில் முக‌ம் புதைத்தான் அவன். அதில் அவ‌ள் அதிர்வாய் விழி விரிக்க‌, அவ‌ள் காத‌ருகே உரசிய த‌ங்க‌ ஜிமிக்கியை மெதுவாய் அவ‌ன் மூக்கின் நுனியால் மெல்ல வில‌க்கி அங்கே முத்த‌மிட்டான். அதில் அவ‌ள் கூச்ச‌மாய் க‌ழுத்தை குறுக்க, அப்படியே அவளை தனக்குள் சுருட்டி அவள் கூந்தலுக்குள் விரல்களை நுழைத்தவன், அதை மெதுவாய் விலக்கி அவள் வெற்று முதுகில் இதழை படரவிட்டான். அதில் அவள் பதற்றமாய் அவ‌னை வில‌க்க‌ முய‌ல‌, அவள் கன்னத்தை உரசி விலகியது அவன் தாடி. அதில் அவள் முகத்தை குறுக்கி இமையை பிரிக்க, அதற்குள் மிதப்பிலிருந்த ரோஜா இத‌ழ் ஒன்று அவ்விமையில் வந்தமர மீண்டும் மூடியது. அதில் அவள் முக‌த்தை உத‌றி அதை வில‌க்க‌ முய‌லும் முன், அவன் முகம் நெருக்கமாய் அவள் முகத்தை உரச, பதற்றமாய் அப்படியே நிறுத்தினாள். அப்படியே அவள் கூந்தலுள் இருந்த தன் விரல்களை மேலும் நுழைத்து பிடித்தவன், மெதுவாய் அவள் இமையில் இதழ் வைத்து, அவ்விதழை அழகாய் கவ்வி மெதுவாய் வில‌க்கினான். அதில் அவ‌ள் கூச்ச‌மாய் விழியை குறுக்க, இப்போது அவ‌ன் இத‌ழ் அவ‌ள் முக‌மெங்கும் ப‌ட‌ர்ந்த‌து. அதில் உட‌ல் சிலிர்த்து மெதுவாய் அவள் இமை பிரிக்க‌, அத‌ற்குள் அவ‌ன் இத‌ழ் அவ‌ள் இத‌ழை அடைய, ச‌ட்டென்று வில‌க‌ முய‌ன்ற‌வ‌ளின் முந்தாணை இடையில் வர‌, அந்த‌ திரையோடே அவ‌ள் இத‌ழில் அழுத்தி ப‌திந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள். அதில் அவ‌ள் அக‌ல‌ விழி விரிக்க‌, அந்த‌ திரையுனுள்ளே இர‌ச‌னையாய் வ‌ளைந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள். அதில் முகம் சரியாக தெரியாமல் இவ‌ள் வேக‌மாய் அந்த‌ முந்தாணையை வில‌க்க‌ முய‌ல‌, அத‌ற்குள் அவ‌ளை வெளியே இழுத்திருந்த‌ன‌ர் அவ‌ள் தோழிக‌ள்.

அதில் இழுத்து மூச்சுவிட்டு வெளியே வ‌ந்த‌வ‌ள், உட‌னே இருமிய‌ப‌டி த‌ன் முக‌த்தை அழுத்தி துடைத்து சுற்றி பார்க்க‌, "ஹேய் மீரா என்ன‌ ஆச்சு?" என்று அவள் தோளை உலுக்கினர் தோழிக‌ள்.

அதில் அவ‌ளோ பதற்றமாய் த‌ண்ணீருக்குள் தேடிய‌ப‌டி, "அ..அது இங்க‌.." என்று அவ‌ச‌ர‌மாய் உள்ளே போக‌, "ஹேய் ஹேய்!" என்று அவ‌ளை இழுத்து பிடித்து, "என்ன‌ ஆச்சு உன‌க்கு? சீக்கிர‌ம் வா." என்ற‌ப‌டி இழுத்து சென்ற‌ன‌ர்.

"இல்ல‌ உள்ள‌.." என்ற‌ப‌டி த‌ண்ணீரையே பார்க்க‌, "உன் ஜிமிக்கி எங்க‌?" என்று கேட்டாள் தோழி.

அதில் திடுக்கிட்டு த‌ன் இரு காதையும் தொட்டு பார்த்த‌வ‌ள், ஒன்று மட்டும் காணாமல் போயிருக்கவும் பட்டென்று புருவ‌ம் விரித்தாள். "ச‌ரி ச‌ரி வா. அத‌ அப்ற‌ம் தேடிக்க‌லாம்." என்று இழுத்து வ‌ந்திருந்த‌ன‌ர்.

அதில் அவ‌ளோ புரியாது த‌ன் காதையே வ‌ருடிய‌ப‌டி திரும்பி அந்த‌ குள‌த்தை பார்க்க‌, உள்ளே யாரும் இருப்பதற்கான அடையாளமே தென்ப்படவில்லை.

"இப்பிடி உக்காரும்மா" என்ற‌ விம‌லாவின் குர‌லில் ச‌ட்டென்று தெளிந்த‌வ‌ள் திரும்பி அவரை பார்க்க, அவரோ புன்னகையுடன் அவள் தோள்களை அழுத்தி அமர வைக்க, அவளும் கால்க‌ளை ம‌ட‌க்கி அந்த‌ ம‌ணையில் அமைதியாய் அம‌ர்ந்தாள்.

அத‌ன் பிற‌கு அவ‌ளுக்கு ம‌ஞ்ச‌ள் ச‌ந்த‌ன‌ம் பூச‌ ஆரம்பிக்க, அவ‌ள் நினைவுக‌ளோ இன்னுமே த‌ண்ணீருக்குள்ளே இருந்த‌து. யார் அவ‌ன்? எத‌ற்காக‌ அவ்வாறு... என்று யோசிக்கும்போதே அவ‌ள் உட‌லெல்லாம் குளிரெடுக்க‌, அப்ப‌டியே உட‌லை குறுக்கி த‌ன் கால்க‌ளை க‌ட்டிக்கொண்ட‌வ‌ள், யோச‌னையில் ஆழ்ந்தாள்.

அவ‌ள் குழ‌ப்ப‌த்திற்கு சொந்த‌க்கார‌னோ இங்கே குள‌த்தின் ம‌றுப‌க்க‌ம் சிகையை உலுக்கிய‌ப‌டி வெளியில் வ‌ர‌, அவ‌ன் உத‌ற‌லில் த‌ண்ணீர் மொத்தமும் சித‌றியது. அதன் நடுவே தன் ஈர சிகையை அழுத்தி பின்னால் கோதியபடி மெதுவாய் எழுந்த‌வ‌னின் முக‌மெங்கும் வ‌ழிந்த நீர் அவ‌ன் மீசையோர‌ம் குவிந்து ஒழுக, குறும்பாய் வ‌ளைந்த‌து அவன் இதழ்கள்.

அதில் அப்படியே திரும்பி பார்க்க, அந்த செடிகளுக்கு பின்னால் சற்று தொலைவில் தெரிந்தது சடங்கில் அமர்ந்திருந்த தன்னவளின் பின்புறம். அந்த கூட்டத்தில் அவள் ஒருவள் மட்டுமே இவன் ஈர விழிகளில் அழகாய் பதிய, மேலும் குறும்பாய் இதழ் வளைத்து அப்படியே அங்கிருந்து நகர்ந்தான்.

அதே நேர‌ம் இங்கே பரப்பரப்பிலிருந்த லிங்காவோ, "செக்கியூரிட்டி அரேஞ்ச்ம‌ண்ட்ஸெல்லா ஓகேதான‌?" என்று கேட்க‌, "அதெல்லாம் நீ ஒன்னும் க‌வ‌லப்படாத‌. நா பாத்துக்குறேன்." என்றார் விக்ர‌ம‌ன்.

"அந்த‌ ஆர்கே க‌ண்டிப்பா எதாவ‌து ப்ளான் ப‌ண்ணுவான். நாம‌ ரொம்ப‌வே உஷாரா இருக்க‌ணும்." என்றார் லிங்கா.

"அவ‌ங்க‌ எவ்ள‌வு உஷாரா இருந்தாலும், நா சொன்ன‌து ந‌ட‌க்க‌ணும்." என்று இங்கே ஃபோனில் அழுத்தி கூறினார் ஆர்.கே.

"க‌ண்டிப்பா சார்." என்று ம‌று ப‌க்க‌ம் குர‌ல் வ‌ர‌, "ம்ம்." என்றப‌டி இணைப்பை துண்டித்த‌வ‌ர், அப்ப‌டியே மொபைலை இற‌க்க அவ‌ர் முக‌ம் க‌டும்கோவ‌த்தில் சிவ‌ந்திருந்த‌து.

"என் பைய‌னுக்கு த‌குதியில்ல‌ன்னா சொல்ற? இன்னிக்கு உன் பொண்ணு க‌ழுத்துல‌ எப்பிடி தாலி ஏறுதுன்னு நானும் பாக்குறேன்." என்று ப‌ல்லை க‌டித்து அழுத்தி கூறினார் ஆர்.கே.

அப்ப‌டியே நேர‌ம் ந‌க‌ர‌, இங்கே அந்த‌ வெள்ளை மாளிகை முழுவ‌தும் க‌ல்யாண‌ அல‌ங்கார‌ங்கார‌ தோர‌ண‌ங்க‌ளுட‌ன் விழா கோலமாய் ஜொலித்துக்கொண்டிருந்த‌து. இரு கோடீஸ்வ‌ர‌ர்க‌ள் இணைந்து ந‌ட‌த்தும் திரும‌ண‌ம் என்ப‌தால் பிர‌மாண்ட‌த்திற்கு ப‌ஞ்ச‌மே இல்லாம‌ல், உள்ளே அத்த‌னை விசால‌மான‌ ஹால். அங்குதான் வ‌ந்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் வ‌ச‌தியாய் அம‌ர்ந்திருக்க‌, அவ‌ர்க‌ளை வ‌ர‌வேற்ப‌த‌ற்கும் க‌வ‌னிப்ப‌த‌ற்கும் குறையே இல்லாம‌ல் ஆட்க‌ள் இருந்த‌ன‌ர். அப்படியே சுற்றியும் மேள‌த்தாள‌ங்கள் முழ‌ங்கிய‌ப‌டியே இருக்க‌, அனைத்திற்கும் ந‌டுவே பிர‌மாண்ட‌மாய் ஒரு ம‌ண‌மேடை. அங்கு ஏற்க‌ன‌வே ஒமம் எழுப்பி ஐய‌ர் ம‌ந்திரங்க‌ளை ஜெபித்துக்கொண்டிருக்க‌, சுற்றி கேம‌ரா மேன்க‌ளும் ஃப்ரேம் வைத்து பார்த்த‌ப‌டி த‌யாராக‌ நின்றிருந்த‌ன‌ர்.

அப்படியே அங்கிருக்கும் அனைவ‌ருமே ம‌ண‌ம‌க்க‌ளுக்காக‌ காத்திருக்க‌, திடீரென்று ஒரு பெரிய‌ க‌த‌வு இர‌ண்டாக‌ திற‌க்க‌ப்ப‌ட்ட‌து. அதில் அனைவ‌ரின் பார்வையும் அந்த‌ ப‌க்க‌ம் திரும்ப‌, அத‌னுள்ளே அழ‌காய் பொழிந்த‌ பூக்களின் ந‌டுவே ஒரு த‌ங்க‌ நிற துணியை விரித்த‌ப‌டி இருவ‌ர் வெளியில் வ‌ர‌, அருகே ம‌ற்றுமிருவ‌ர் பூக்க‌ளை தொட‌ர்ந்து தூவிய‌ப‌டியே இருக்க‌, தரையெங்கும் விழுந்த அந்த சிவந்த பூக்களின் நடுவே அழகாய் பதிந்தது அவளின் மருதாணியால் சிவந்த பூ பாதங்கள்.

அப்படியே அந்த தங்க நிற துணியை தூக்கி பிடிக்க, அதன் கீழே அந்த‌ சிவ‌ந்த‌ பூ சாரல்க‌ளின் ந‌டுவே, ப‌ச்சை நிற‌ ப‌ட்டு புட‌வையில், த‌ங்க‌ ஆப‌ர‌ண‌ங்க‌ளோடு தேவதையாய் நடந்து வந்தவளின் முக‌த்தில் ம‌ட்டும் உயிர் இல்லை. வாடிய‌ பூவாய் முக‌த்தை தாழ்த்திய‌ப‌டியே மெதுவாய் ப‌டிக‌ள் ஏறி அனைவ‌ரின் முன்பும் வ‌ந்து நின்றாள்.

"எல்லாருக்கும் ந‌ம‌ஸ்கார‌ம் சொல்லும்மா." என்று ஐய‌ர் கூற‌, அவ‌ளோ அப்போதும் நிமிராம‌ல், அப்படியே கைக‌ளை ம‌ட்டும் கூப்பி பொம்பை போல் வ‌ண‌க்க‌ம் வைத்தாள்.

"மாப்ளய வ‌ர‌ சொல்லுங்கோ." என்று ஐய‌ர் கூற‌, அந்த‌ ப‌க்க‌ம் இன்னொரு பெரிய‌ க‌த‌வு திற‌க்க‌ப்ப‌ட்ட‌து.

அதில் அனைவ‌ரின் பார்வையும் அந்த‌ ப‌க்க‌ம் திரும்ப‌, உள்ளிருந்து கிள‌ம்பிய‌ புகையின் ந‌டுவே அவனின் முத‌ல் பாத‌த்தை வெளியில் எடுத்து வைத்தான். வேட்டைய‌ ராஜா ஷூப்போல் ம‌ண‌ம‌க‌னுக்கான‌ பிர‌த்தியேக‌ கால‌ணியில் வெளி வந்தவனின் பின்னால் நீண்டு பறந்தது அந்த பட்டு சால்வை. அது அலையாய் மடங்கி கீழே வர, அதை அழகாய் சுருட்டி பிடித்து முன்னால் நடந்தவனின் மறு கரம் கரம் த‌ன் ஷ‌ர்வானி கால‌ரை தூக்கிவிட்டு ச‌ரி செய்ய‌, அவ‌ன் விரல்களில் மூன்று மோதிர‌ங்க‌ள் பளிச்சென்று மின்னிய‌து. அதே விர‌ல்க‌ளை தூக்கி த‌ன் த‌லைப்பாகையையும் ச‌ரியாய் அம‌ர‌ வைத்து, அப்ப‌டியே நிமிர்வாய் ப‌டிக‌ள் ஏறியவ‌னின் பின்புற தோற்றம் ராஜகுமாரனைப்போல் காட்சியளித்தது.

அப்ப‌டியே காலணிகளை கழற்றிவிட்டு தன் முதல் பாதத்தை மேடையில் பதித்தவன், அடுத்தடுத்த அடிகள் அழுத்தமாய் பதித்து அவளை நோக்கி அருகில் வர, அவ‌ளோ உண‌ர்வ‌ற்ற‌ நிலையில் நிமிர‌க்கூட‌ இல்லை. இந்நொடி எல்லாம் முடிந்த‌து. என் வாழ்வே இனி அவ்வ‌ள‌வுதான் என்று கைவிடப்பட்ட நிலையில் அவள் விழிகளில் நீர் தேங்க, "மாலைய‌ மாத்திக்கோங்கோ." என்றார் ஐய‌ர்.

அதில் அவ‌ளும் மெதுவாய் அவ‌ன் ப‌க்க‌ம் திரும்பி நிற்க‌, அவ‌னுமே த‌ன் கையிலிருந்த‌ மாலையை மெதுவாய் உய‌ர்த்த‌, அவ‌ளும் மெதுவாய் நிமிர‌, ச‌ரியாக‌ அவ‌ன் முக‌த்தை ம‌றைத்து நின்ற‌து அவ‌ன் மாலை.

அதில் அங்கேயே குத்தி நின்ற‌ இவ‌ள் பார்வையில், சட்டென்று அந்த புகைப்ப‌ட‌த்தில் பார்த்த‌ முக‌ம் க‌ண்முன் வ‌ந்து நிற்க‌, ச‌ரியாக‌ அவ‌னும் மாலையை விரிக்க‌, பிரிந்த‌ இருப‌க்க‌ மாலையின்னுள்ளே முழுதாய் தெரிந்தது ருதன் முகம்.

அதில் ச‌ட்டென்று விழி விரித்த‌வ‌ளின் இத‌ய‌ம் துடைப்பையே நிறுத்த‌, அவனோ அப்படியே முகத்தை சாய்த்து கண்ணடித்தான்.

அதில் மொத்தமாய் விரிந்து நின்ற இவள் இமை நுனியில் விழ‌ துடித்த‌ அந்த‌ ஒரு துளி நீர் பொத்தென்று அவ‌ள் உள்ள‌ங்கையில் விழ, அவ‌ள் சிவ‌ந்த உள்ள‌ங்கைக்குள் ஆர் என்ற‌ எழுத்து நனைந்து குளித்தது. அப்படியே பின்னால் அந்த‌ மேடை சுவ‌ரில் ருத‌ன் வெட்ஸ் அமீரா என்ற‌ எழுத்துக்க‌ள் த‌ங்க‌மாய் மின்னிய‌து.

அதன் முன் முழுதாய் உறைந்து நின்றிருந்தவளின் விழியில் கண்ணீர் நிரம்ப, அதனுள் முழுதாய் முழ்கியது அவன் பிம்பம்.

அன்றுதான் அவனை மீண்டும் பார்த்தேன்!
என்னுடைய மணவாளனாக!


- நொடிக‌ள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-31
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.