Chapter-31

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
தேன்மொழியிடம் அர்ஜுன் தனது ஷார்ட்ஸையும் கழட்ட சொல்கிறான்.

அதனால் அவள் வெட்கத்தில் சிவந்த முகத்துடன் அவன் அருகே சென்று அதை மெதுவாக கழட்ட,

அவள் தன் அருகில் வரும்போது அவளது உடலில் இருந்து வந்த அந்தப் பிரத்யேகமான நறுமணத்தை தன் நாசிகள் மூலமாக உள்ளிழுத்தான் அர்ஜுன்.

அது அவனுக்கு ஏதோ ஒருவித போதையை கொடுக்க, அவளை உற்றுப் பார்த்தான் அவன்.

அவளது குர்தா wide நெக்கை கொண்டதாக இருந்தது.

அதனால் அவள் குனியும்போது எல்லாம் அவளது மென்மைகள் அவன் கண்களுக்கு அருகே சென்று விருந்தாகியது.

என்னதான் நமக்கு மிகவும் பிடித்த படத்தை முழுவதுமாக நாம் பார்த்திருந்தாலும் கூட,

மீண்டும் அதன் சிறந்த காட்சி ட்ரெய்லர் போல காணக் கிடைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது?

இத்தனை நாட்களுக்கு பிறகு அவனது ஆண்மையை அந்த அழகிய காட்சி தூண்டிவிட,

இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் தேன்மொழி.

எப்படியோ அவள் தன் மனதை திடப்படுத்தி அவனது ஷார்ட்ஸை கழட்டிவிட்டாள்.‌

ஆனால் அவனது உள்ளாடையையும் அகற்றி அவனை முழுதாக பார்க்க அவள் விரும்பவில்லை.

அப்படி சொல்வதை விட அவளுக்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் இப்போது அதைப் பற்றி எல்லாம் நினைத்து கவலைப்படும் மனநிலையில் அர்ஜுன் இருக்கவில்லை.

ஏற்கனவே அவள் தனது ஆடைகளை கழட்டும்போது அவளது பூ போன்ற விரல்கள் தன் மீது பட்டதால்,

அதற்கே தீ பிடித்து எரித்துக் கொண்டு இருந்த தன் உடலை என்ன செய்து சமன்படுத்துவது என்று தெரியாமல் அவன் தவித்துக் கொண்டிருந்தான்.

இவள் வேறு அவளது காந்த கண்களால் அவனை குறுகுறுவென்று பார்க்க,

“இதுக்கு மேல நம்மளால முடியாதுடா சாமி..

எவ்வளவு நேரம் தான் நானும் நல்லவன் மாதிரியே பொறுமையா இருக்கிறது?

இந்த உலகத்துல இருக்கிற எந்த நல்லவனாலயும் கட்டுன பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு நல்லவனா எல்லாம் இருக்க முடியாது.

ஏன் அப்படி நடிக்கக்கூட முடியாது.”

என்று நினைத்த அர்ஜுன் சட்டென எழுந்து நின்றான்.‌

அதை எதிர்பார்த்து இருந்திருக்காத தேன்மொழி உடனே இரண்டடி பின்னே சென்று நின்றுக் கொள்ள,

அவளை கண் வாங்காமல் பார்த்தபடி தனது ஒரு கையை மட்டும் பயன்படுத்தி தானே அவனது உள்ளாடையை கழட்டி தூக்கி எறிந்தான் அர்ஜூன்.

அதனால் உடனே தேன்மொழி வெட்கம் கலந்த பயத்துடன் சட்டென திரும்பிக் கொள்ள,

“இப்படி நீ திரும்பி நின்னுக்கிட்டா என்னை யார் குளிக்க வைக்கிறது?”

என்று ஹஸ்கி வாய்ஸில் ஒருவித மோன நிலையில் ‌ அவளிடம் கேட்டான் அர்ஜுன்.

ஏற்கனவே அவனை அப்படி பார்த்ததில் தன் உடல் முழுவதும் ஏதோ மின்சாரம் பாய்ந்ததைப் போல

உணர்ந்த தேன்மொழி தன் கைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து இறுக்கி பிடித்துக் கொண்டு ஸ்டன்னாகி அப்படியே நின்று கொண்டிருக்க,

அவனது அந்தக் கவர்ச்சியான குரல் இன்னும் அவளை ஏதேதோ செய்து வாட்டி வதைத்தது.

அவள் இதயமும், மூளையும் வேண்டுமானால் அவனைக் கண்டு பயந்து நடுங்கலாம்.

அவன் அருகில் தானாக செல்ல விடாமல் அவளை தயங்கி நிற்க வைக்கலாம்.

ஆனால் அந்த கன்னியின் இளமையான உடல் இந்த கவர்ச்சியான கட்டுடல் ஆண்மகனுக்கு முன் எப்படி ரியாக்ட் செய்யாமல் இருக்கும்?

இருப்பினும் அந்த குரலை கேட்டு அவளால் அவன் பக்கம் திரும்பாமல் இருக்க முடியவில்லை.

அவள் தலை அவனை பார்த்து ரோபோ போல திரும்ப,

அதுவரை சீக்கிரம் குளித்துவிட்டு இந்த இடத்தை விட்டு முதலில் வெளியே செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அர்ஜூனிற்கு இப்போது ‌

“அவ கூட சேர்ந்து குளிச்சா நல்லா இருக்கும் இல்ல?” என்று தோன்றியது.

அதனால் அவன் தனது கைகளை லேசாக அவளை நோக்கி உயர்த்த,

அடிபட்டு கட்டு கட்டி இருந்த அவனது லெஃப்ட் ஹாண்டில் வலி உயிர் போனது.

உடனே அந்த எண்ணத்தை கைவிட்ட அர்ஜுன் மீண்டும் அவளை பார்த்தான்.

அவனை பார்க்க முடியாமல் அவள் தலை குனிந்தபடி நிற்க,

“என்ன மேடம் கூச்சமா?

அப்படி ஏதாவது இருந்தா சொல்லுங்க.‌..

இன்னைக்கே அது எல்லாத்தையும் மொத்தமா போக வச்சிடலாம்.

நீ சீக்கிரம் வந்து எனக்கு ஹெல்ப் பண்ணினா நான் குளிச்சிட்டு கம்முனு வெளியே போயிடுவேன்.

அத விட்டுட்டு, நீ இப்படியே நின்னு என்ன பாத்து வெட்கப்பட்டுட்டு இருந்தினா,

இந்த கூச்சத்தை போக வைக்கிறதுக்கு நீயும் நானும் சேர்ந்து கொள்கிறத தவிர வேற வழியில்லை.”

என்று கிண்டலாக சொன்னான் அர்ஜுன்.

உடனே திடுக்கிட்ட தேன்மொழி “ஐயையோ அதெல்லாம் வேண்டாம் சார்.

நான் மார்னிங்கே குளிச்சிட்டேன்.

இப்ப என்ன.. நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்.. அவ்வளவு தானே..

நான் பண்றேன்.” என்று சொல்லிவிட்டு அவனை மெதுவாக சேரில் அமர வைத்துவிட்டு

“என்ன ஆனாலும் கீழே மட்டும் குனிஞ்சு பாத்திரவே கூடாது.

கரெக்டா அங்க சோப்பு போடும்போது மட்டும் கண்ணை மூடிக்கலாம்.”

என்று நினைத்து பக்கெட்டில் இருந்த வெதுவெதுப்பான நீரை எடுத்து அவன் தலையில் ஊற்றினாள் தேன்மொழி.

தன் மீது தண்ணீர் பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவள் அவன் முன்னே கொஞ்சம் தள்ளி நின்று நன்றாக குனிந்து ஒரு mugல் carefulஆக தண்ணீர் மோந்து மிகுந்த அக்கறையுடன்

அவனது அடிபட்ட கையின் மீது தண்ணீர் படாமல் அவன் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றினாள்.

ஆனால் அப்படியும் அவள் மீது சில தண்ணீர் துளிகள் தெளித்து விட,

அவளது முகம் கழுத்து அதன் கீழே அவள் குனிந்ததால் வெளியே கொஞ்சமாக தெரிந்து கொண்டிருந்த அவளது மென்மைகள் என்று அனைத்தின் மீதும் தண்ணீர் துளிகள் பன்னீர் ரோஜாவின் மீது பூத்திருக்கும் பனி போல அழகாக அவள் மேனியின் மீது பூத்திருந்தது.

அதை பார்த்தவுடன் மீண்டும் அவனது ஆண்மை தூண்டப்பட்டுவிட,

அதை அவள் கவனித்துவிட்டால் தனக்கு அவமானமாக போய்விடும் என்று நினைத்த அர்ஜுன் தன் கைகளை வைத்து மறைத்துக் கொண்டான்.

ஆனால் அவனுக்கு கைகளில் அடிபட்டிருப்பதால் பொறுமையாக ஷாம்பூ போட்டு கொண்டு இருந்த தேன்மொழி,

“கையில தண்ணிப்பட்டுட போகுது சார்.

இப்படியே தள்ளி கொஞ்சம் மேலே தூக்கி வைங்க.” என்று சொல்லி அவன் கையைப் பிடித்து நகர்த்தி வைத்தாள்.

அவள் அதை நல்ல எண்ணத்தில் தான் செய்தாள்.

ஆனால் அதன் விளைவாக அர்ஜுன் எதை அவளிடம் இருந்து மறைக்க வேண்டும் என்று நினைத்தானோ, அதை அவள் தெளிவாக க்ளோசபில் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனால் அவள் உடனே தன் கண்களை மூடிக் கொண்டு “நான் எதையும் பாக்கல.. நான் எதையும் பாக்கல.” என்று அவசரமாக கத்தி சொன்னாள்.

அவள் பார்க்கவில்லை என்று சொன்னதிலேயே அவள் தெளிவாக அவன் மறைக்க நினைத்ததை பார்த்துவிட்டாள் என்று அவனுக்கு புரிந்துவிட,

பாலைப்போல ‌ தூய்மையான வெள்ளை நிறத்தில் ‌ இருந்த அவனது உடல் தலை முதல் பாதம் வரை கூச்சத்தில் சிவந்து போனது.‌

அதை கவனித்த தேன்மொழி ‌ அவன் தலையில் அவள் ஷாம்பு போட்டுக் கொண்டிருப்பதை கூட மறந்துவிட்டு,

அவளையும் மீறி அவன் தலையில் இருந்த அவளது கைகளை அவனது தோள்களுக்கு கொண்டு வந்தாள்.

அதற்கு மேல் அவளது கட்டுப்பாட்டில் இல்லாத அவள் கைகள் மெல்ல அவனது கைகளையும் மார்பு பகுதியையும் வருடியது.

அவளது அந்த ஒரு செயல் அவனுக்கு இப்போதே அவள் வேண்டும் என்று நினைத்து வெறி பிடிக்க வைக்க போதுமானதாக இருந்தது.

அதனால் சட்டென எழுந்த அர்ஜுன் அவளை தனது ரைட் ஹாண்டால் தன் பக்கம் இழுத்து தனது மடியில் அமர வைத்தான்.

அவன் அடுத்து என்ன செய்யப் போகிறானோ! என்று நினைத்து பயத்தில் இருந்த தேன்மொழி கண்களில் மிரர்ட்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.

அவளது இதயம் அவனுக்கே கேட்கும் அளவிற்கு வேகமாக துடிக்க,

அவளது குட்டி பிங்க் நிற ‌ இதழ்களை பார்த்தவுடன் அவன் இதழ்கள் அவளை முத்தமிட துடித்தது.

அதற்கு மேல் ஒரு நொடி கூட தாமதிக்காமல் தனது இதழ்களால் அவளது இதழ்களை சிறை செய்தான் அர்ஜுன்.

அவனுக்கு எப்படியோ.. ஆனால் அவள் வாழ்வில் இப்போது தான் ஒருவன் முதல்முறையாக அவளை முத்தமிடுகிறான்.

அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அவள் அப்படியே ஷாக்காகி அசைவின்றி அவனை பார்க்க,

அவன் தன் கையில் இருந்த அவளது மெல்லிடையை நன்றாக இறுக்கிப்பிடித்து தன் முத்தத்தின் ஆழத்தை கூட்டிக் கொண்டே சென்றான்.

எந்த முன் அனுபவமும் இல்லாத தேன்மொழி அதை ஒழுங்காக பெற்றுக் கொள்ளவும் தெரியாமல்,

அழகாக அதேபோல அவனுக்கு திருப்பிக் கொடுக்கவும் தெரியாமல் ஏதோ உயிரற்ற ஜடம் போல அப்படியே freeze ஆகி நின்றாள்.‌

தனது ரைட் ஹேண்டை பயன்படுத்தி அவள் முகத்தை தனக்கு வாட்டமாக சாய்த்து கொண்ட அர்ஜுன் தொடர்ந்து அவளது இதழ்கள்,

மூக்கு, கண்கள், கன்னங்கள்‌‌ என்று அப்படியே அவளது காதுவரை சென்று முத்த மழையை பொழிந்து அப்படியே அவளது கழுத்து வளைவிற்குள் தஞ்சம் புகுந்தான் அர்ஜுன்.

இப்போது அவள் அவனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால் இதுவரை அரைகுறையாக வெளியில் தெரிந்து கொண்டிருந்த அவளது மென்மையை அவனால் நேரடியாகவே குளோசப்பில் எந்த தடைகளும் இன்றி பார்க்க முடிந்தது.

அதனால் அவன் கைகள் ஆவலுடன் அதை நோக்கி செல்ல,

தேன்மொழி அவன் தலையில் போட்டு வைத்திருந்த ஷாம்பூ சரியாக வேலை பார்த்தது.

அவளை முத்தமிடுவதற்காக அவன் தன் தலையை அங்கும் இங்கும் சாய்த்ததால் அது வலிந்து ஏற்கனவே அவன்‌‌ கண்களை சென்றடைந்து இருக்க,

உடனே அவளை விட்டுவிட்ட அர்ஜுன் தன் கண்களை கைகளால் தேய்த்தவாறு “ஆஆஆ.. எரியுது..

ஆஆஆ.. ஏய் எரியுதடி ஏதாவது பண்ணு..!!” என்று கத்தினான்.

‌ அதுவரை அவன் கொடுத்த இதழ் முத்தத்தால் ஏதோ ஒரு மோன நிலையில் தன்னை மறந்து அவன் மடியில் அமர்ந்திருந்த தேன்மொழி

சட்டென அவனை விட்டு விலகி எழுந்து நின்றாள்.

பின் அவன் வலியில் துடிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தண்ணீரை கொண்டு வந்து அவன் கண்களை கழுவ உதவினாள்.

அப்போதும் அவன் தன் கண்களை அரைகுறையாக திறந்து வைத்துக்கொண்டு தொடர்ந்து

“ஆஆஆ.. எரியுது... எரியுது..!!” என்று மீண்டும் மீண்டும் புலம்பிக் கொண்டே இருக்க,

“நீங்க நல்லா கண்ண தொறந்தா தானே ஷாம்பூ நுரை வெளியே போகும்..

ஃபுல்லா கிளீன் பண்ணாம பெயின் குறையாது மிஸ்டர் அர்ஜூன்.”

என்ற தேன்மொழி அவன் கண்களை எப்படியோ கழுவிவிட்டு பின் சிவப்பாகி இருந்த அவன் கண்களில் லேசாக ஊதினாள்.

அதுவரை வலியில் உருத்தி கொண்டு இருந்த அவனது கண்கள் அவளது வாயில் இருந்து வந்த குளுமையான காற்று பட்டவுடன் சட்டென ஜில்லென்று மாறிவிட்டதைப் போல உணர்ந்தான் அர்ஜுன்.

அதனால் மீண்டும் அவனது ஆண்மை தூண்டப்பட்டு விட,

“டேய் உனக்கு ரொமான்ஸ் பண்றதுக்கு வேற இடமே கிடைக்கலையா?

கொஞ்ச நேரம் உன் சேட்டையை எல்லாம் ஸ்டாப் பண்ணி வை.

இன்னும் உன் தலையில சோப்பு நரை இருக்கு. அதை மறந்துடாத.” என்று உடனே அவன் மூளை எச்சரிக்கை மணி அடித்து அவனது ஹார்மோன்களை கொஞ்சம் அடக்கி வைத்தது.

அதனால் அவளை ஏதேதோ செய்ய துடித்த தனது என்ன ஓட்டங்களை கெட் போட்டு தடுத்த அர்ஜூன்,

“அம்மா தாயே நீ லேட் பண்ணதெல்லாம் போதும்.

நீ என் கண்ணுல இருக்கிற ஷாம்பூ நுரையை போக வைக்கிறதுக்குள்ள மறுபடியும் நீ தலையில ஆல்ரெடி போட்டு இருக்கிறது வழிஞ்சு என் கண்ணுல வந்து ஊத்திற போது.

முதல்ல இந்த வேலைய வந்து பாரு வா!” என்றான்.

சரி என்ற தேன்மொழி ஷாம்பு போட்டு அவனது தலை முடியை வாஷ் செய்தாள்.

பின் மெல்ல அவள் அவன் உடல் முழுவதும் சோப்பு போட்டு குளிக்க வைக்க,

அவளது ஒவ்வொரு தொடுகைக்கும் அவனது உச்சி முதல் பாதம் வரை ரியாக்ட் செய்தது.

அவன் உடலை தொடும்போது அவளுக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் அதை அவள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க,

தனது தொடுகைகளால் அவன் படும் அவஸ்தைகளை நேருக்கு நேராக கண்ட தேன்மொழிக்கு ஏதோ போல இருந்தது.

அவளுக்கு இந்த மாதிரியான விஷயங்களை பற்றி எல்லாம் முழுவதாக எதுவும் தெரியாது என்றாலும்,

அவள் வயது அவளுக்கு சிலவற்றை எந்த அனுபவமும் இன்றி புரிய வைத்தது.

அதனால் கொஞ்சம் வெட்கத்துடன் தலை குனிந்தவாறு கடமையே கண்ணாக ஒருவழியாக அவனை குளிக்க வைத்து முடித்தாள் தேன்மொழி.

பின் பஞ்சு போன்று softஆக இருந்த ப்ரீமியம் குவாலிட்டி டவல் ஒன்றை எடுத்து அவன் உடல் முழுவதும் ஒற்றி எடுத்து,

அங்கே தயாராக அவனுக்காக எடுத்து வைக்கப்பட்டு இருந்த ஆடையை எடுத்து அவன் அணிந்து கொள்ள உதவினாள்.

இடையிடையில் பார்க்கக் கூடாததை பார்த்து விடக்கூடாது என்று நினைத்து தன் கண்களையும் அவ்வப்போது மூடிக்கொண்டாள்.

இதற்கு மேலே அங்கே நின்று இவள் முகத்தை தன்னால் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்று நினைத்த அர்ஜுன்

வேகவேகமாக விட்டால் போதும் என்று அந்த பாத்ரூமை விட்டு வெளியேறினான்.

அவனை குளிக்க வைக்க நடத்திய போராட்டத்தில் தேன்மொழியும் பாதி குளித்து முடித்து இருந்தாள்.

அவள் ஆடைகள் தொப்பலாக நனைந்து இருந்தது.

அதனால் வெட்கத்துடனே வெளியில் சென்று தெரியாமல் கூட அவன் இருக்கும் திசை பக்கம் திரும்பாமல்,

வேகமாக அவளது ஆடைகளை எடுத்துக் கொண்டு தனது கபோர்டை அரைகுறையாக சாற்றிவிட்டு நேராக பாத்ரூமிற்க்கு ஓடிச் சென்று விட்டாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் தனக்குள்,

“இவ என்ன பண்ணாலும் பாக்குறதுக்கு ரொம்ப க்யூட்டா இருக்கே..

அது கூட பரவால்ல.. பட் அதையே அவ கொஞ்சம் குளோசப்ல வந்து பண்ணா ஹாட்டா இருக்கு..

அதைத்தான் என்னால தாங்க முடியல..

நானும் இந்த பொண்ணுக்கு என் மேல ஃபீலிங்ஸ் வர்ற வரைக்கும் எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு மூடிட்டு இருக்கலாம்ன்னு தான் பார்க்கிறேன்..

ஆனா எங்க.. இவ என் கண்ட்ரோலையே கொலாப்ஸ் பண்ற அளவுக்கு மெனக்கெட்டு எதுவும் பண்ணாம கூட அசால்ட்டா என்ன டெம்ப்ட் பண்றா...!!

இத்தனை வருஷத்துல இதுவரைக்கும் நான் எத்தனை பொண்ணுங்கள பார்த்திருப்பேன்..

என்ன மயக்குறத்துக்கு அவங்க எல்லாரும் என்னென்னமோ பண்ணி இருக்காங்க..

பட் இவ எதுவுமே பண்ணலைனாலும் நான் சும்மாவே இவளை பார்த்து மயங்குறேன்.

இதெல்லாம் நல்லதுக்கு இல்ல.

நல்லதுக்கே இல்ல அர்ஜுன்..!!” என்று நினைத்தவன் அவனுக்கு மிகவும் பசியாக இருந்ததால் இன்டர்காம் மூலமாக கிச்சனுக்கு கால் செய்து தனக்கான உணவுகளை கொண்டு வரச் சொன்னான்.
‌- மீண்டும் வருவாள்.. ❤️
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-31
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.