“சரவணா வேற நம்பர் குடுத்துட்டு போயிட்டான்…. எப்படி அவளுக்கு மெசேஜ் பண்ணுறது…. பண்ணா தப்பா எடுத்துப்பாளா…. என் கிட்ட பேசுவாளா???” என்று விக்ரம் பெரும் மனப் போராட்டத்திற்கு பிறகு, “இல்ல ஒரு மெசேஜ் பண்ணுவோம்…. அவ பேசினா அப்போ பார்த்துக்கலாம்” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு விக்ரம், சனந்தாவிற்கு குறுஞ்செய்தியை தட்டி விட்டான்.
“நான் போய் முதல்ல பிரஷ் ஆகிட்டு வரேன்… இல்லன்னா அவளோட மெசேஜ்காக உட்கார்ந்திட்டே இருப்பேன்” என்று விக்ரம் அவனையே கடிந்து கொண்டு அவனுடைய கைபேசியை மாடியில் கட்டில் மீது வைத்து விட்டு ஃபிரஷ் அப் ஆக சென்றான்.
சனந்தா அவளது கைபேசியில் வண்ணம் கிராமத்தில் எடுத்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்க, சரவணன் மற்றும் விக்ரம் அவர்களது புகைப்படம் வரவும் அதை ஜூம் செய்து விக்ரமை ரசித்துக் கொண்டிருக்க, அவளது கைபேசியில் விக்ரம் அனுப்பிய குறுஞ்செய்தி வரவும் அவள் அதிர்ச்சியில் உறைந்து அக்குறுஞ்செய்தியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இவரா!!!! இவர் எனக்கு மெசேஜ் பண்றாரா???? எப்படியும் சரவணன் கிட்ட தான் நம்பர் வாங்கி இருப்பாரு…. இவர் வாங்கி இருப்பாரா??? ஒரு வேள சரவணன் கிட்ட இவரு ரீச் ஆயிட்டாரான்னு கேட்டதுனால இவரே எனக்கு மெசேஜ் பண்றாரா??” என்று குறுஞ்செய்தியை பார்த்து அவளுக்குள் நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டாள்.
“முதல்ல ரிப்ளை பண்ணுவோம்” என்று உற்சாகத்தில் விக்ரம் அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பினாள் சனந்தா. “இப்ப நான் மெசேஜ் பண்ணா அவரு திருப்பி எனக்கு மெசேஜ் பண்ணுவாரா?? அவர் தானே எனக்கு ஃபர்ஸ்ட் அனுப்பினாரு… அப்ப நான் மெசேஜ் அனுப்பினா எனக்கு பதில் அனுப்புவாரு தானே….. பேசுவாரு தானே என்கிட்ட” என்று கைபேசியை பார்த்துக் கொண்டே ஏக்கத்துடன் பல கேள்விகளை அவளுக்குள் கேட்டுக் கொண்டிருந்தாள் சனந்தா. பிறகு, “ஹாய் சனந்தா ஹியர்” என்று குறுஞ்செய்தியை அனுப்பினாள்.
“என்ன இவ்வளவு நேரம் ஆகுது ரிப்ளை பண்ணலையே இவரு…. இல்ல நம்மளே இன்னொரு மெசேஜ் அனுப்பி பார்க்கலாமா” என்று சனந்தா மனதில் நினைத்து கொண்டு, “நீங்க ரீச் ஆகிட்டீங்களா??” என்று மற்றொரு குறுஞ்செய்தியை தட்டி விட்டாள்.
“என்ன இவ்வளவு நேரம் ஆகுது எனக்கு ரிப்ளையே பண்ணலையே???” என்று அவளது கைபேசியை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் சனந்தா. “அவர் என்ன மெசேஜ் கூட பார்க்கலையே… ஒரு வேளை தூங்கிட்டு இருப்பாரோ??? சரவணன் எப்பயோ வந்துட்டாருன்னு சொன்னாருல அதான் தூங்கிட்டு இருப்பாரோ… இல்ல என்கிட்ட பேச பிடிக்கலையா….. ப்ச்…. அவர் அனுப்புன உடனே நான் அவருக்கு ரிப்ளை பண்ணி இருந்தா உடனே பேசி இருப்பாரோ…. நான் வேற கொஞ்ச நேரம் அதையே பார்த்துட்டு அதிர்ச்சியில ரசிச்சிட்டு இருந்து அதுக்கு அப்புறம் தான் ரிப்ளை வேற பண்ணேன்… ச்சே” என்று அவள் தாமதித்த ஒரு நிமிட இடைவேளையை நினைத்து அவளையே கடிந்து கொண்டாள் சனந்தா.
“ம்ம்…. இன்னொரு மெசேஜ் அனுப்பி பார்ப்போமா…. ஆனா என்ன அனுப்புறது??? இப்படி நான் சும்மா சும்மா அனுப்பினா அது தப்பா எடுத்துப்பாரா???” என்று அவளுக்குள் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, பின் குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ், மற்றும் ஒரு ஸ்மைலி என மூன்று தனித்தனி மெசேஜ் ஆக தட்டி விட்டாள் சனந்தா.
“நான் வேற அவ கிட்ட பெருசா பேசவே இல்ல…. கிளம்பறேன்னு சொல்லல அப்படியே வந்துட்டேன்… என்கிட்ட அவ பேசுவாளா…. அட்லீஸ்ட் மெசேஜ் அனுப்புனதுக்கு ஆவது ரிப்ளை பண்ணவாளோ இல்லையோ” என்று யோசனையுடன் விக்ரம் மாடிக்கு வந்து கைபேசியை எடுத்து பார்க்க, ஐந்து குறுஞ்செய்திகள் சனந்தாவிடமிருந்து வந்திருப்பதை பார்த்து உற்சாகத்துடன் அதை திறந்து பார்த்தான்.
சனந்தா அனுப்பிய குறுஞ்செய்திகளை பார்த்து புன்னகையுடன், “நான் ரீச் ஆகிட்டேன்” என்று அனுப்பினான் விக்ரம். “குட் நைட்னு அனுப்பி இருக்கா… நம்மளும் குட் நைட்னு சொல்லிருவோமா…. ஒரு வேலை அவ தூங்க போயிருப்பாளோ… சரி என்ன ரிப்ளை பண்ணலாம்” என்று யோசித்துக் கொண்டிருந்த, சில நொடிகளில், சனந்தா, “ஓகே குட்…. ம்ம்… எங்க வீட்டு சாப்பாடு உங்களுக்கு பிடிச்சிருந்துதா??” என்று கேட்டாள்.
“என்னை விட ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்காளே இவ” என்று விக்ரம் நினைத்துக் கொண்டு, “ரொம்ப நல்லா இருந்துது… நான் கிளம்பும் போது உங்க அம்மாவை பார்க்க முடியல நீ சொல்லிரு சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துது” என்று விக்ரம் பதில் அனுப்பினான்.
“ம்ம்…. கண்டிப்பா அம்மா கிட்ட சொல்றேன் சார்” என்று சனந்தா அனுப்ப, “ஓகே…. இன்னும் தூங்கலயா??” என்று விக்ரம் கேட்க, “இல்ல சார் மதியம் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் அதான் இப்ப தூக்கம் வரல” என்று சனந்தா அனுப்பினாள்.
“கேக்கலாமா வேணாமா…. சரி எதுக்கும் ஒரு மெசேஜ் அனுப்பவோம்” என்று விக்ரம் தைரியத்தை திரட்டி, “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்… எப்போ ஃப்ரீயா இருப்பன்னு சொல்லு உனக்கு ஃபோன் பண்ணுறேன்” என்று விக்ரம் குறுஞ்செய்தியை அனுப்பிய சில நொடிகளில் சனந்தா விக்ரமுக்கு ஃபோன் செய்தாள்.
“இப்ப தானே மெசேஜ் அனுப்பினேன்… அதுக்குள்ள ஃபோன் பண்ணிட்டா” என்று விக்ரம், சனந்தா அழைத்ததை பார்த்து உற்சாகத்துடன் துள்ளி குதித்துக் கொண்டு, பின் தன்னை சமன்படுத்திக் கொண்டு, ஃபோனை அட்டென்ட் செய்து, ஹலோ!! என்றான்.
“ஐயோ நான் வேற அவர் மெசேஜ் அனுப்புனத பார்த்த உடனே ஃபோன் பண்றேனே” என்று சனந்தா அவளை கடிந்து கொண்டே இதயம் படபடக்க விக்ரமுக்கு ஃபோன் செய்தாள்.
விக்ரம், ஹலோ!!! என்று கூறவும், “சாரி சார் நீங்க மெசேஜ் அனுப்புனதும் ஃபோன் பண்ணிட்டேன்… எனக்கு தூக்கம் வரல அதான்… ஆனா, நீங்க டயர்டா இருப்பீங்கல நான் அதை மறந்துட்டேன்… நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க நான் நாளைக்கு வேணா கூப்பிடவா??” என்று சனந்தா படபடவென்று பேசி முடித்தாள்.
அவள் பேசியதை கேட்டு விக்ரம் ரசித்துக் கொண்டே, “இல்ல பரவால்ல நானும் தூங்க கொஞ்சம் லேட் ஆகும் தான்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன் அதனால” என்று விக்ரம் கூறினான்.
“ம்ம்…. ஓகே ஏதோ பேசணும்னு சொன்னீங்களே சார்.. ??” என்று சனந்தா கேட்க, “அது…. ம்ம்… வந்து…. நான்…. உன்கிட்ட நான் நிறைய வாட்டி காரணம் கூட சொல்லாம கோபப்பட்டு இருக்கேன்…. அதான்… அது… அதுக்கு என்னால இப்போதைக்கு உன்கிட்ட உண்மைய சொல்ல முடியாது… ஆனா, நேரம் வரும் போது கண்டிப்பா சொல்றேன்…. ஆனா, இத்தனை நாள் இந்த கோபத்த காட்டினதுக்கு ரொம்ப சாரி சனந்தா” என்று விக்ரம் ஒரு வழியாக கூறி முடித்தான்.
விக்ரம் அவளை முதன் முறையாக மனதார சனந்தா!!! என்று அழைத்ததும் அவளுக்குள் பட்டாம்பூச்சிகளை உணர்ந்தாள். அவன் இவ்வளவு நேரம் கூறிய எதுவும் அவள் நினைவில் இல்லாமல் அவளுடைய பெயரை அழைத்தது மட்டுமே அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அதை அவள் அனுபவித்துக் கொண்டிருக்க, “என்ன சத்தமே காணோம்??” என்று விக்ரம் கேட்டான்.
அதிலிருந்து சனந்தா மீண்டுக் கொண்டு, “நீங்க என்ன சொன்னீங்க இப்போ??” என்று சனந்தா கேட்க, “அதான் கோவப்பட்டதுக்கு நான்…” என்று விக்ரம் ஆரம்பிக்க, “அது இல்ல கடைசியா என்ன சொன்னீங்க??” என்று சனந்தா கேட்க, “ரொம்ப சாரின்னு சொன்னேன்” என்று விக்ரம் கூறவும், “ப்ச்…. அதுவும் இல்ல சார்…. லாஸ்ட்டா என்ன சொன்னீங்க??” என்று சனந்தா விடாமல் கேட்கவும், “ரொம்ப சாரி சனந்தான்னு சொன்னேன்” என்று விக்ரம் கூறினான்.
சனந்தா றெக்கை கட்டி பறப்பது போல் உணர்ந்தாள். அவன் அவளுடைய பெயரை கூறியதை நினைத்து ரசித்துக் கொண்டிருக்க, “என்ன ஆச்சு ஏதாவது தப்பா சொல்லிட்டேனா??” என்று விக்ரம் கேட்க, “அது….. ஒன்னும் இல்ல சார்… நீங்க ஃபர்ஸ்ட் டைம் என் பேரை சொல்லி இருக்கீங்க” என்று சனந்தா கூறினாள்.
“அப்படியா!!!! இது வரைக்கும் உன்னை கூப்பிட்டதே இல்லையா நானு?” என்று விக்ரம் யோசனையுடன் கேட்க, “என் கிட்ட பேசவே மாட்டீங்க… எங்க இருந்து என்னை நீங்க என் பேரை வெச்சு கூப்பிடுறது” என்று சனந்தா கேட்க, விக்ரம் எதுவும் கூறாமல் அமைதியாகி விட்டான்.
“சரி ஓகே சார் உங்க சாரிய நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன்…. உங்களுக்கு எப்போ சொல்லனும்னு தோணுதோ அப்போ அந்த கோபத்துக்கான காரணத்தை சொல்லுங்க, அத கண்டிப்பா நான் தெரிஞ்சுக்கணும்னு விருப்பப்படுறேன்” என்று சனந்தா கூறினாள்.
“கண்டிப்பா சொல்றேன்… ம்ம்…. அப்புறம் இன்னொன்னு சொல்லணும்…. அது வந்து…. அது… இன்னிக்கு பிரகாஷ் சார பார்க்குறதுக்கு மட்டுமே நான் உன் கூட வரல…. உன்ன கூட்டிட்டு போய் விடுறதுனால தான் நான் பிரகாஷ் சார மீட் பண்ணனும்னு முடிவு பண்ணினேன்” என்று விக்ரம் அவன் மனதில் இருந்ததை கூறவும், சனந்தா துள்ளி குதித்துக் கொண்டு ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.
“என்ன இவ திடீர் திடீர்னு அமைதியாகிடுறா” என்று விக்ரம் மனதிற்குள் நினைத்துக் கொண்டு, “ஹலோ லைன்ல இருக்கியா??” என்று விக்ரம் கேட்க, “இருக்கேன் சார்…. இருக்கேன்” என்று சனந்தா கூறி, “ஆமா… இது இப்ப என் கிட்ட எதுக்கு சொல்றீங்க” என்று எதுவும் தெரியாதது போல் சனந்தா கேட்க, “ம்ம்… இல்ல எனக்கு சொல்லனும்னு தோணுச்சு அதனால தான்” என்று விக்ரம் கூறவும், சனந்தா அவளுடைய மனப்பூரிப்பை சற்று கட்டுப்படுத்திக் கொண்டு, “ஓகே சார் எனக்கு புரிஞ்சது” என்று சனந்தா கூறினாள்.
விக்ரம் குறும்பாக, “அப்படி என்ன புரிஞ்சுது உனக்கு??” என்று கேட்க, “நீங்க சொன்னது தான் புரிஞ்சுது” என்று சனந்தா கூறினாள். “ஓஓஓ…. ம்ம்ம்…. சரி சாப்பிட்டியா?” என்று விக்ரம் கேட்க, “சாப்பிட்டேன் சார்” என்று சனந்தா கூறி அமைதியாகவும், “நான் கேட்டா திருப்பி என்னை கேட்க மாட்டியா??” என்று விக்ரம் கேட்க, “எனக்கு தான் பதில் தெரியுமே” என்றாள் சனந்தா.
“அப்படியா!!! என்ன பதில் தெரியும் உனக்கு?” என்று விக்ரம் கேட்க, “நீங்க ஊட்டில ஆஃபீஸர பார்த்து அங்கேயே அவர் கூட சாப்பிட்டு தானே போனீங்க” என்று சனந்தா கூறினாள். “இது எப்படி உனக்கு தெரியும்??? சரவணன் சொன்னான்னா??” என்று விக்ரம் கேட்க, “இல்ல இல்ல சரவணன் சொல்லல…. ஆன்ட்டிக்கு ஃபோன் பண்ணேன் அவங்க தான் சொன்னாங்க” என்று சனந்தா கூறினாள்.
“ஓ அம்மா சொன்னாங்களா….. ஓகே… ஆமா ஒரு நிமிஷம் இரு, எங்க அம்மா கிட்ட எதுக்கு என்னை பத்தி கேட்ட??” என்று விக்ரம் குறும்பாக கேட்க, “ஐயோ சார்!!! நான் உங்கள பத்தி கேக்கல… ஆன்ட்டி கிட்ட பேசிட்டு இருந்தேன்… அப்போ, “இன்னும் விக்ரம் வரல மா ஆஃபீஸர பார்த்திட்டு அவர் கூட சாப்பிட்டு வரேன்னு சொல்லிட்டான்” அப்படின்னு சொன்னாங்க” என்று சனந்தா பதற்றத்தில் கூற, “நான் தான் ஆசைப்பட்டுட்டேனோ என்னை பத்தி அம்மா கிட்ட விசாரிச்சியோன்னு” என்று விக்ரம் கூறவும், சனந்தா அதிர்ச்சியில் உறைந்து என்ன கூறுவது என்று தெரியாமல் இருந்தாள்.
“இப்படி கேட்டா அந்த பொண்ணு என்ன நினைச்சிப்பா….ச்சே” என்று அவனையே கடிந்துக் கொண்டு, “சரி அது இருக்கட்டும் நாளைக்கு என்ன பிளான் உனக்கு??” என்று பேச்சை மாற்றும் விதமாக விக்ரம் கேட்க, சனந்தா தன்னை சுதாரித்துக் கொண்டு, “அம்… ஹாஸ்பிடல் போகணும் செக் அப் இருக்கு… அதை முடிச்சிட்டு எங்க டீம் அவங்கள பார்த்து ரொம்ப நாளாச்சுல அதனால எங்க டீம்ம பார்க்க போறேன்.. இப்போதைக்கு அது தான் பிளான்” என்று சனந்தா கூறினாள்.
“அப்போ நாளைக்கு ஃபுல்லா பிஸியா இருப்ப…. என் கிட்ட பேச மாட்ட அப்படித் தானே??” என்று விக்ரம் கேட்க, சனந்தா வெட்கத்தில் புன்னகைத்துக் கொண்டு கண்களை மூடி, “என்ன கேட்டீங்க??” என்று கேட்க, “உனக்கு புரிஞ்சுதுன்னு எனக்கு நல்லா தெரியும்…. நாளைக்கு எல்லா வேலையும் முடிச்சிட்டு நீ ஃப்ரீ ஆனதுக்கு அப்புறமே எனக்கு மெசேஜ் பண்ணு ஒன்னும் பரவாயில்ல” என்று விக்ரம் கூறினான்.
“என்னது இவரு இப்படி பேசுறாரு…. எனக்கும் அவர் என்ன பேசினாலும் பட்டாம்பூச்சி எல்லாம் வருது…. ரொம்ப கரைஞ்சிடுறேனே…. இவ்வளவு சந்தோஷமா இருக்கு அவர் இப்படி பேசினா… ஐயோ!!!” என்று அவள் மனதிற்கு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க, “என்ன நான் பேசினதுக்கு பதிலே வரல… தூங்கிட்டியா??” என்று விக்ரம் கேட்க, “ஐயோ!! அதெல்லாம் இல்ல… அதெல்லாம் இல்ல… தூங்கல… தூங்கல” என்று சனந்தா கூற, “சரி சரி ஏன் இவ்ளோ பதற்றம் உனக்கு” என்று விக்ரம் கேட்டான்.
“இல்ல அது… சொல்லலாமான்னு தெரியல” என்று சனந்தா கைகளை பிசைந்து கொண்டு இருக்க, “பரவால்ல சொல்லு நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்” என்று விக்ரம் கூறவும், “உங்களை இந்த மாதிரி நான் பார்த்ததே இல்ல எப்பவுமே என்னை திட்டிட்டு தான் இருப்பீங்க…. அதனால எனக்கு ரொம்ப ஷாக்கா இருக்கு” என்று சனந்தா கூறவும், “எப்படி பார்த்ததில்லை… இப்படி அன்பா பேசி பார்த்ததில்லன்னு சொல்றியா??” என்று விக்ரம் கேட்க,
“அம்…. ஆமா அது எனக்கு புதுசா இருக்கு… இன்னிக்கு காலையில என்னை கூட்டிட்டு வரும் போதும் நீங்க ரொம்ப அமைதியா பேசுனீங்க…. அப்படி உங்கள முதல் தடவ பார்க்கிறேன்… அதே மாதிரி மெசேஜ் பண்ணது எனக்கு ரொம்ப ஷாக்… என்கிட்ட பேசணும்னு சொன்னது எனக்கு அதை விட ஷாக்கா இருந்துது… அதனால தான் நான் உடனே ஃபோன் பண்ணிட்டேன்…. இப்ப நீங்க பேசுறது எல்லாம் பார்க்கும் போது, இப்படி ஒரு வர்ஷன் உங்களுக்குள்ள இருக்கான்னு எனக்கு தெரியல…. எனக்கு புதுசா இருக்கு இது” என்று சனந்தா கூறவும், “இந்த வர்ஷன எல்லார் கிட்டயும் காட்ட முடியாது” என்று விக்ரம் கூறினான்.
“அப்படியா!!! ஏன் அப்படி சொல்றீங்க??” என்று சனந்தா புரியாமல் கேட்க, “அது அப்படி தான் இந்த வர்ஷன் உனக்காக மட்டும் தான்” என்று விக்ரம் கூறி, தன்னை சுதாரித்துக் கொண்டு, “சரி ஓகே நான் தூங்க போறேன் எனக்கு காலையில வேலை இருக்கு குட் நைட் சனந்தா” என்று கூறி ஃபோனை வைத்தான்.
“இந்த வர்ஷன் உனக்காக மட்டும் தான்” என்று கூறியதிலே உறைந்திருந்தாள் சனந்தா. அதிலிருந்து அவள் மீண்டு வருவதற்குள் குட் நைட் சனந்தா என்று கூறி விக்ரம் ஃபோனை துண்டித்து விட்டான். “என்ன சொல்ல வர்றாரு அவரு எனக்கு… எதுவுமே புரியலையே” என்று சனந்தா தலை கால் புரியாமல் அவளது அறையிலேயே சுற்றித் தெரிந்து கொண்டு, விக்ரம் பேசியதை நினைத்து மீண்டும் மீண்டும் அவளுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டே இருந்தன. உறக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்து அதிகாலை நாலு மணி அளவில் தான் உறங்கிப் போனாள்.
“என்னமோ தோணுச்சு எல்லாம் பேசி வெச்சுட்டேன்…. எனக்கு என்ன இப்படி படபடக்குது…. அவகிட்ட நான் பேசினா எனக்கு அவ்வளவு சொல்ல தோணுதா…. இன்னும் நிறைய சொல்லணும்னு ஆசையாவும் இருக்கே…. விக்ரம் உன்னை கட்டுப்படுத்திக்கோ டா” என்று அவனுக்கு அவனே அறிவுரை கூறிக் கொண்டு சிறிது நேரத்தில் உறங்கியும் போனான் வண்டியை ஓட்டி வந்த களைப்பில்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 30
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.