பாகம் -30

உன்ன பிடிக்கலனு அர்த்தம்.

அத என் முகத்த பாத்து சொல்லுங்க.
ஷ்யாம் சத்யாவின் கண்களை பார்த்து

உன்ன எனக்கு பிடிக்கல சுத்தமா பிடிக்கல போதுமா?
என்றதும்

காரின் கதவை திறந்து குதிக்க முற்பட்டாள் சத்யா ,சுதாரித்துக் கொண்ட ஷ்யாம் சட்டென்று காரை நிறுத்தி அவள் கைகளைப் பற்றினான்.

என்ன பண்ற சத்யா?
எல்லாம் தெரிஞ்சி தான் பண்றியா?

நான் என்ன பண்ணா உங்களுக்கு என்ன? நான் கார்ல இருந்து குதிகிறேன் மலைல இருந்து குதிச்சி சாகரேன் உங்களுக்கு என்ன அக்கர,

சும்மா பைத்தியம் மாதிரி பேசாத சத்யா?

காரை விட்டு இறங்கிய சத்யா வேகமாக நடந்தாள்

ஹே சத்யா நில்லு எங்க போற இது ரோட் என்றபடி ஓடிச் சென்று அவள் கையை பிடித்தான் ஷ்யாம்.

விடுங்க என்ன! எனக்கு போய்க்க தெரியும்.
சத்யா பிளீஸ் நங்கையும் மாறனும் என்ன நம்பி உன்ன என் கூட அனுப்பி வச்சி இருக்காங்க. பிளீஸ் என்றிட
பெரு மூச்சு விட்டவள் நின்றாள்.

இதோ பாரு சத்யா நீ சின்ன பொண்ணு உனக்கு இப்போ ஏதும் புரியாது ?

என்ன சின்ன பொண்ணு எனக்கு 20 வயசு ஆயிடுச்சு.
என்றவளை,பார்த்து சிரிக்காமல் என்ன செய்வான் ஷ்யாம்.

அப்படி இல்லே சத்யா உன் வயசு என்ன? என் வயசு என்ன? உன்ன விட17 வயசு பெரியவன் எப்படி மா கொஞ்சம் புரிஞ்சிக்கோமா.

உங்களுக்கு தான் புரியல.
என்ன புரியல என் அன்பையும் புரியல.

அதற்கு மேல் பொறுமையை இழந்தவன்

சும்மா நிறுத்து சத்யா. கிளி பிள்ளைக்கு சொல்றா மாதிரி சொல்லிட்டு இருக்கேன் இப்படி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ற

ஐ லவ் யூ ஷ்யாம்.

ஜஸ்ட் சட் ஆஃப் சத்யா.

போகலாம் என்றவனை கையை பிடித்து இழுத்தாள்

சத்யா கைய விடு!

நீங்க எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போங்க!

உன்ன கைய விடுன்னு சொன்னேன்!

முடியாது!

நீங்க பதில் சொல்லாம இங்கிருந்து போக முடியாது.

உன்கிட்டே எத்தனை வாட்டி சொல்றது என்று திரும்பியவனை ஒரு நொடி கூட தாமதிக்காமல் தன் கால்களை எக்கி அவன் இதழ்ளில் தன் இதழை பதித்தாள் சத்யா.💋
சத்யாவின் செயலில் அதிர்ந்தவன் கண்கள் 😳 விரிய அதிர்ச்சியில் செய்வதரியா வண்ணம் திகைத்து நின்றான் .

சத்யாவோ கண்களை இறுக மூடி அவள் முத்தத்தில் மொத்தமாக மூழ்கியவள் அவன் கேசத்தை கைகளால் வருடி சற்று தலையை குனிய செய்து அழுந்த பிடித்து அவன் இதழில் கவி 💋படித்தால்.

பெண் அவளுக்கு பயத்தில் உடல் நடுக்கம் எடுக்க அதை மறைக்க மேலும் அவன் கேசத்தை அழுந்த பிடித்தவள் மற்றொரு கையால் அவன் அணிந்திருந்த கோட்டின் காலரை பிடித்தவளுக்கு மூச்சி விட கூட மறந்தது.

மூச்சி இரைக்க தொண்டைக் குழி அடைத்த போதும் இடைவிடாது அவள் தன் முத்தத்தை 💋 தொடர்ந்தாள்.

சில வினாடியில் தன்னிலை உணர்ந்தவன் சத்யாவை தள்ளி

ஓங்கி கன்னத்தில் அறைந்தான்.

கன்னத்தில் கை வைத்தபடி நின்றிருந்த சத்யாவை,

என்ன பண்ற சத்யா?🤨

எல்லாம் தெரிஜி தான் பண்ட்ரியா?

ச்சீ நீ எல்லாம் எந்த மாதிரியான பொண்ணு ?😡


உனக்கு வெக்கமா இல்ல?

எப்படி உன்னால இப்படி கேவலமா நடதுக்க முடியுது. உன்ன நினைச்சாலே எனக்கு அசிங்கமா இருக்கு. இப்படி ரோடுணு கூட பாக்காம ச்சீ,

தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

என் அன்ப ❤️ உங்களுக்கு புரிய வைக்க எனக்கு வேற வழி தெரியல ஷ்யாம்.

சட்டென்று முன்னோக்கி திரும்பியாவன் கண்களை சுருக்கி

அதுக்காக இவளோ கேவலமா நடந்துபியா.

சின்னச் பொண்ணு சொன்னா புறிஜிபணு பார்த்த இவளோ கீழ்த்தரமாக நடந்துகுற.

இல்ல ஷ்யாம் நான் உங்கள உண்மையாவே விரும்புகிறேன்.

ச்சீ நிறுத்து!

என்ன எத்தன நாளா தெரியும். நான் வந்த இந்த 3 நாலைக்குள்ள உனக்கு என் மேலே லவ் வந்துடுச்சா ?

அப்படி என்ன நான் பெருசா இம்ரஸ் பண்ணிட்டேன்.
நமட்டு சிரிப்பு சிரித்தவன்.😏

அதுக்கு பேரு காதல் இல்லே டமிட் காமம். இப்போ உனக்கு என் மேலே இருகறதும் அது தான், ஜஸ்ட் செக்ஸுவல் அட்ராக்சன்.
அதுக்கு நிறைய பேர் கிடைபாங்க.

அதுக்கு நான் ஆள் இல்லே.

ச்சீ என்று திரும்பிகொள்ள,

அவள் அவமானத்தில் தலை குனிந்தாள்.

ஷ்யாம் பிளீஸ் ச்சீ ன்னு மட்டும் சொல்லாதீங்க. என் காதல இப்படி கொட்சை படுத்தாதிங்க ஷ்யாம்.

போதும் 🖐🏻சத்யா இனி ஓரு வார்த்த கூட நீ என்கிட்ட பேச கூடாது.

போய் வண்டில ஏறு.🤨

சத்யா காரில் ஏறியதும் காரை வேகமாக இயக்கியவன் சீட் பெல்ட் அணிய கூட நேரம் கொடுக்கவில்லை.

அவள் கார் போகும் வேகத்தில் நாலாபுறமும் இடித்துக்கு கொள்ள ,அவள் புறம் முகத்தை மறந்தும் திருப்ப வில்லை. அவன் கவனம் முழுவதையும் சாலையிலே பத்திதான் ஷ்யாம்.

ஷ்யாம் பிளீஸ்!


வேகம் அதிகரித்தது.

மீண்டும் பிளீஸ் ஷ்யாம் நான் சொல்றத கேளுங்கள்

வண்டியை தாரு மாறாக ஓட்டினான்.

தன் கைகளில் முகத்தை புதைத்து அழுதவள் அதோடு ஒரு வார்த்தையும் கூறவில்லை.

வீடும் வந்தது.

பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்து இருந்தவளை சத்யா வீடு வந்துருச்சு.

என்றவன் அப்பொழுதும் அவள் முகத்தை பார்க்கவே இல்லை.

அவனை ஒரு முறை ஆள பார்த்தவள்,

Sorry 😔

என்று விட்டு இறங்கி மெதுவாக அடிமேல் அடிவைத்து நடந்தாள்.சற்று தூரம் சென்று ஒருமுறை திரும்பி பார்க்க,

அப்பொழுது தான் கவனித்தான்

அவன் அடியின் தாக்கம்,ஒருபக்க அவள் கன்னம் வீங்கி சிவந்து கோவை 🍓கனி போலே இருந்தது .

அடுத்த நொடி கார் அங்கு இல்லை .


போகும் வழி எல்லாம் சத்யாவின் கண்ணீர் தோய்ந்த முகமும். பிளீஸ் என்ற கெஞ்சல் வார்த்தையும் தான் நினைவுக்கு வர காரை சட்டென்று நிறுத்தினான்.

கண்களை மூடி மெல்ல திறந்தவன், பெரு மூச்சு விட்டு

Sorry சத்யா எக்ஸ்டிரிமிலி சாரி.

சத்யா நீ நல்லா இருக்கணும், நீ நல்ல பொண்ணு உன் லைஃப் என்னால கேட கூடாது, என்றவன் காரையை மீண்டும் இயக்கினான்.

சத்யா தன் அறைக்கு சென்றவள் அழுது அழுது தோய்ந்து அப்படியே உறங்கியும் போனாள்.

அண்ணா சத்யா வா விட்டுடிங்களா?

ம்ம் என்றவன் சத்யாவை அடித்ததை நினைத்து கவலைக் கொண்டான்.

அண்ணா என்ன ஆட்சி

ஒன்னும் இல்லே மா?

என்னவோ போல இருக்கீங்க?

சத்யா ஏதும் வால் தனம் பனாளா?

அப்படி எதாவதுனா எனக்காக அவல மணிட்சிடுங்க அண்ணா.அவ சின்ன பொண்ணு கொஞ்சம் வாலு மனசுல ஒன்னும் வச்சிக்க மாட்ட, சின்ன வயசுல இருந்தே மனசுல பட்டத ஓடனே பட்டுனு கேற்றுவா?

அதனாலேயே அவள யாரும் சரியா புறிஜிக்க மாற்றங்க ம் .....
என்று பெருமூச்சு விட்டவள் திரும்பி பார்க்க

ஷ்யாம் எப்போதோ அங்கிருந்து சென்று இருந்தான்.

தன் அறைக்கு சென்றவன் தன் உடமைகளை அவசர அவசரமாக பேக்கிங் செய்து கொண்டிருக்க.
பின் தொடர்ந்து வந்தவள்,

அண்ணா ஏன் இப்பவே எல்லாம் எடுத்து வைக்கிரிங்க.

ஆமாம் மா நாளைக்கு 8 மணி ஃப்ளைட் மா அதனாலே தான்.

அண்ணா ஒரு வாரம் இருந்துட்டு போக கூடாதா.

இல்லே மா நான் போகனும்,

அறைக்குள் நுழைந்த மாறன்

மாமா என்னாட்சீ?

உங்களுக்கும் சத்யாவுக்கும் ஏதும் பிறட்சனையா?

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லே மாறா.

மாமா நடிக்காதிங்க?

சத்யா உங்களை லவ் பண்றா அதுக்கு தானே இப்படி கோல மாதிரி பயந்து ஒட்ரிங்க?

😳
என்ன சத்யா லவ் பண்றாள?என்றாள் நங்கை வியப்பின் உட்சத்த்தில் பிரமித்து நின்றாள்.

உங்கள நீங்களே எமாத்திகாதிங்க மாமா?

ஹே என்ன பேசற மாறா நீ?

சத்யா யாரு ?

இன்பாக்ட் அவள பாத்து முழுசா 3 நாள் ஆகல அதுக்குள்ள லவ் வா?

அர் யூ கிரேசி என்றிட

அப்படி பார்த்தா நானும் நங்கைய பார்த்ததும் தான் லவ் பண்ணினேன், அவளுக்காக பசி தூக்கம் இல்லாம அவளை ஒரு முறை பாக்க மா
டேனானு ஏங்கி இருக்கேன்.

அப்போ என் லவ் பொய்யா?

😳

நாளை பார்க்கலாம் சத்யாவின் காதல் பயணம் தொடருமா இல்லை முடியுமா என்று.


தொடரும் ...
Shahiabi.writter ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -30
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.