Chapter-30

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
ச‌ந்ரா, அர்ஜுனை க‌ட்டிப்பிடித்துவிட்டாள்.




அர்ஜுன் அதிர்ச்சியில் அசையாம‌ல் நின்றான். ச‌ந்ரா, அர்ஜுனை க‌ட்டிப்பிடித்த‌ப‌டியே அழுதாள். அவ‌ளுடைய‌ க‌ண்ணீர் அர்ஜுன் கையில் விழுந்த‌து. அதிர்ச்சியில் மித‌ந்துக்கொண்டிருந்த‌ அர்ஜுன், அவ‌ளுடைய‌ க‌ண்ணீர் ப‌ட்ட‌தும், சுய‌ நினைவிற்க்கு வ‌ந்து,

அர்ஜுன் : Sweet heart ! நீ அழ‌றியா?

ச‌ந்ராவை குமிந்து பார்த்தான். ச‌ந்ரா அழுதுக்கொண்டிருந்தாள்.



அர்ஜுன் : ச‌ந்ரா அழாத‌ Please. என்ன‌ ஆச்சு? ஏ அழ‌ற‌?

ச‌ந்ரா அழுதுக்கொண்டே இருந்தாள். அர்ஜுன் திடீரென‌ அவ‌ளை இருக்க‌மாக‌ க‌ட்டிப்பிடித்து,



அர்ஜுன் : அழாத‌ அழாத‌. ஒன்னு இல்ல‌. அழ‌ற‌த‌ நிப்பாட்டு, Please.

ச‌ந்ரா : (க‌ட்டிப்பிடித்த‌ப‌டியே) ரொம்ப ரொம்ப Thank you அர்ஜுன். இத‌ நா ம‌ற‌க்க‌வே மாட்டே.



அர்ஜுன் : நீ இத‌ சொல்ல‌னுன்னுதா நா இதெல்லா செஞ்ச‌னா?

ச‌ந்ரா, க‌ட்டிப்பிடித்த‌திலிருந்து அர்ஜுனை விட்டுவிட்டு, அவ‌னை பார்த்து,

ச‌ந்ரா : அப்றோ எத‌ சொல்ல‌னுன்னு நீ ப‌ன்ன‌?

அர்ஜுன், ச‌ந்ராவின் அருகில் வ‌ந்தான். ச‌ந்ரா, ச‌ந்தேக‌மாக‌ஒன்றும் புரியாமல் பார்த்தாள். அர்ஜுன், அவ‌ள் அருகில் வ‌ந்து,



அர்ஜுன் : உன்னோட‌ Smileக்காக‌.

ச‌ந்ரா : என்ன‌?

அர்ஜுன் : ஆனா அத ம‌ட்டு காணோ.

ச‌ந்ரா சிரித்தாள்.

அர்ஜுன் : Good. இதுக்காக‌தா ப‌ன்னே. இப்போ நிம்ம‌தியா இருக்கு.

ச‌ந்ரா : செரி வா உள்ள‌ போலா.

அர்ஜுன் : ம்ம் வா போலா.

இருவ‌ரும் மீராவுட‌ன் சிறிது நேர‌ம் பேசிவிட்டு, சாப்பிட்டுவிட்டு, நேர‌ம் ஆன‌தும்,

அர்ஜுன் : Ok ச‌ந்ரா, ரொம்ப‌ லேட் ஆயிரிச்சு. வா கெள‌ம்ப‌லாமா?

ச‌ந்ரா : (வ‌ருத்த‌த்துட‌ன்) ம்ம் போலா அர்ஜுன்.

அர்ஜுன் ச‌ந்ரா முக‌த்தில் இருந்த‌ வ‌ருத்த‌தை க‌வ‌னித்தான்.

ச‌ந்ரா : மீரா அக்கா அடிக்க‌டி என்ன‌ பாக்க‌ வீட்டுக்கு வாங்க‌.

அர்ஜுன் : அதுக்கு அவ‌சிய‌மே இல்ல‌.

ச‌ந்ரா அர்ஜுனை திரும்ப‌ ச‌ந்தேக‌மாக‌ பார்த்தாள்.

அர்ஜுன் : உன்னோட‌ மீரா அக்காவும் ந‌ம்ப‌கூட‌வே ந‌ம்ப‌ விட்டுக்கு வ‌ர‌ப்போறாங்க‌.

உட‌னே ச‌ந்ராவின் முக‌த்தில் புன்ன‌கை ம‌ல‌ர்ந்த‌து. அதையும் அர்ஜுன் க‌வ‌னித்தான்.

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) அர்ஜுன், நா நென‌ச்ச‌த‌விட‌ ரொம்ப‌ ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌.

அர்ஜுன் : ம‌ன‌சுக்குள்ள‌ என்ன‌ புக‌ழ்ந்த‌தெல்லா போது, வா. இப்போ ச‌ந்தோஷ‌மா கெள‌ம்புவ‌ல்ல‌?

ச‌ந்ரா : (சிரித்துக்கொண்டே த‌லையாட்டினாள்) ம்ம்ம்ம்.

அர்ஜுன் : மீரா ! உங்க‌ளுக்கு எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்ல‌யே?

மீரா : எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்ல‌ அர்ஜுன். உண்மையிலேயே என‌க்கு ரொம்ப‌ ச‌ந்தோஷ‌மா இருக்கு.

அர்ஜுன் : உங்க‌ ல‌க்கேஜ் எல்லா எடுத்திட்டு வாங்க‌.

மீரா ல‌க்கேஜ் ஐ எடுத்துக்கொண்டு வ‌ந்தாள். அனைவ‌ரும் காருக்கு செல்லும் போது, ச‌ந்ரா, அர்ஜுனை பார்த்துக்கொண்டே வ‌ந்தாள். அர்ஜுன் அதை க‌வ‌னிக்க‌வில்லை. ச‌ந்ரா, அர்ஜுனை பார்த்துக்கொண்டே வ‌ந்து, வாச‌லில், ப‌டி இருந்த‌தை க‌வ‌னிக்காம‌ல் தடுக்கி விழுந்துவிட்டாள். அர்ஜுன் திடீரென‌ ப‌ய‌ந்து, அவ‌ளை தூக்கினான்.



அர்ஜுன் : என்ன‌ பொன்டாட்டி, பாத்து வ‌ர‌மாட்டியா? அடிப்ப‌ட‌லையே?

ச‌ந்ரா : ஒன்னு ஆக‌ல‌. Iam ok அர்ஜுன்.

அர்ஜுன் : பாத்து வ‌ர‌லால்ல‌? உன‌க்கு எதாவ‌து ஆயிருந்தா அப்றோ நா



ச‌ந்ரா எதிர்ப்பார்ப்புட‌ன் பார்த்தாள்.

அர்ஜுன் : ஒன்னு இல்ல‌.

மிரா : (கேளியாக‌) வேற‌ யார‌யாவ‌து பாத்துட்டே வ‌ந்தா.... இப்பிடி எதாவ‌து ந‌ட‌க்க‌த்தான‌ செய்யும்? கவனம் இங்க இருக்கனுல்ல?

ச‌ந்ரா அதிர்ச்சியில் மீராவை பார்த்தாள். மீரா சிரித்த‌ப‌டி,

மீரா : என்ன‌ ச‌ந்ரா, நா சொல்ற‌து செரிதான‌?

ச‌ந்ரா : (மெதுவாக‌)மீரா அக்கா சும்மா இருங்க‌.

அர்ஜுன் : என்ன‌ சொல்றீங்க மீரா? என‌க்கு புரிய‌ல‌.

ச‌ந்ரா : (மெதுவாக‌) வேண்டா மீராக்கா பிலீஸ்.

அர்ஜுன் : சொல்லுங்க மீரா.

மீரா : அது ஒன்னுல்ல‌ விடு அர்ஜுன்.

அர்ஜுன் : Ok. வா ச‌ந்ரா. மெதுவா மெதுவா. பாத்து.

அர்ஜுன், ச‌ந்ராவின் கையைப்பிடித்துக்கொண்டே காருக்கு அவ‌ளை அழைத்து சென்றான். அழைத்து செல்லும்போது, ச‌ந்ரா மீண்டும் அர்ஜுனை பார்த்துக்கொண்டே வ‌ந்தாள். அர்ஜுன் திடீரென‌ ச‌ந்ராவை பார்த்தான். ச‌ந்ரா உட‌னே திரும்பிக்கொண்டாள். அதை அர்ஜுன் பார்த்துவிட்டான்.

அர்ஜுன் : (ம‌ன‌திற்க்குள்) ஓ.... என்னோட‌ பொன்டாட்டி என்ன‌ பாத்திட்டே வ‌ந்துதா கீழ‌ விழுந்திருக்காளா? ப‌ர‌வால்லையே Sweet heart, நீ என்ன‌ காத‌லிக்க‌ ஆர‌ம்பிச்சிட்ட‌ போலயிருக்கே. அத‌ நீ எப்போ எங்கிட்ட‌ சொல்ல‌ போறன்னு நா காத்திடிருக்கே.

காரில் மீராவும் ச‌ந்ராவும் பின்னாடி அம‌ர்ந்துக்கொண்ட‌ன‌ர். காரில் அம‌ர்ந்து, ச‌ந்ரா அர்ஜுனை க‌ண்ணாடியில் காத‌லுட‌ன் பார்த்துக்கொண்டே வ‌ந்தாள்.



அதை அர்ஜுன் பார்த்துவிட்டு, க‌ண்ணாடியில் தெரியும் ச‌ந்ராவை பார்த்து உட‌னே க‌ண் அடித்தான். ச‌ந்ரா உட‌னே திரும்பிக்கொண்டாள். அர்ஜுன் அதை பார்த்து சிரித்தான். மீரா அனைத்தையும் க‌வ‌னித்தாள்.

மீரா : ம்ம் ம்ம், வீட்டுக்கு போய் பாக்க‌ற‌துக்கு கொஞ்ச‌ம் மிச்ச‌ம் வெய்ங்க ரெண்டு பேரும்.

ச‌ந்ரா : மீராக்கா சும்மா இருங்க‌.



இதை கேட்ட‌ அர்ஜுன், சிரித்துக்கொண்டே காரை ஓட்டினான்.

வீட்டிற்க்கு சென்ற‌ன‌ர். அங்கு, அர்ஜுன், மீராவை அழைத்து சென்று,

அர்ஜுன் : இதுதா உங்க ரூம்.

மீரா : எதுக்கு இன்னும் வாங்க‌ போங்க‌ன்னு கூப்புட்டுகிட்டு?

அர்ஜுன் : (சிரித்தபடி) செரி. இங்க‌ உன்னோட‌ things எல்லா வெச்சிக்கோ.

மீரா : Thank you அர்ஜுன்.

அர்ஜுன் : ப‌ர‌வால்ல‌. செரி நா கெள‌ம்புறே.

மீரா : அ.... அர்ஜுன் !

அர்ஜுன் : சொல்லு மீரா.

மீரா : இல்ல‌, நா கேக்க‌ற‌ன்னு த‌ப்பா எடுத்துக்காத‌,

அர்ஜுன் : ப‌ர‌வால்ல‌ சொல்லு.

மீரா : ச‌ந்ரா, உன்ன‌ புடிக்காம‌தா க‌ல்யாண‌ம் ப‌ன்னிக்கிட்டாளா?

அர்ஜுன் : (சோக‌மாக‌) ஆமா. ச‌ந்ரா எல்லாத்தையும் சொல்லிட்டாளா?

மீரா : இல்ல‌ இல்ல‌. அவ‌ சொல்ல‌ல‌.

அர்ஜுன் : அப்றோ எப்பிடி க‌ண்டுப்பிடிச்ச‌?

மீரா : இன்னிக்கு ச‌ந்ரா உன்ன‌ பாத்த பார்வயில‌ காத‌ல் தெரிஞ்ச‌து. அதுவும் இப்ப‌தா அவ‌ளுக்குள்ள‌ காத‌ல் உண்டான‌ மாதிரி, அவ‌ உன்ன‌ பாத்த‌த‌ நா பாத்தே.

அர்ஜுன் : Smart. அப்பிடின்னா, அவ என்ன காதலிக்கிறான்னு உனக்கும் தோனுதா?

மீரா : அதத்தா வர்ற வழியில பாத்தனே. இப்பக்கூட வெக்கப்பட்டுகிட்டே ரூமுக்கு போனா. கண்டிப்பா இன்னிக்கு உன்கிட்ட அவ காதல சொல்லுவா.

அர்ஜுன் : நீ சொன்னது மட்டும் நடந்தா, உனக்கு நா கோவிலே கட்டுவே. செரி நா போய் என்னோட‌ பொன்டாட்டிய‌ பாக்குறே.

மீரா : Ok All the best.

அர்ஜுன் : Thank you. Bye.

அர்ஜுன் அவ‌னுடைய‌ அறைக்கு சென்றான். க‌த‌வை திற‌ந்தான். அங்கு, ச‌ந்ரா அர்ஜுனுக்காக‌ காத்துக்கொண்டிருந்தாள்.

அர்ஜுன் : (ம‌ன‌திற்க்குள்) ச‌ந்ரா என‌க்காக‌தா காத்திட்டிருக்கா. இன்னிக்குதா என்னோட‌ வாழ்க்கையிலேயே ம‌ற‌க்க‌முடியாத‌ நாள். என்னோட‌ ச‌ந்ரா எங்கிட்ட‌ அவ‌ளோட‌ காத‌ல‌ சொல்ல‌ போற‌ நாள்.

அர்ஜுன், ச‌ந்ரா அருகில் சென்று, அவ‌ள் அருகில் அம‌ர்ந்தான்.



அர்ஜுன் : பொன்டாட்டி !என‌க்காக‌தா வெய்ட் ப‌ன்றியா?

ச‌ந்ரா : ஆமா அர்ஜுன்.

அர்ஜுன் : அப்போ சொல்லு.

ச‌ந்ரா : அது......

அர்ஜுன் எதிர்ப்பார்ப்புட‌ன் பார்த்தான்.

தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: Chapter-30
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.