Chapter-30

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அர்ஜுன் வரச் சொன்னதாக சொல்லி மகேஷின் அம்மா தன்னை அழைத்ததால்,

வேறு வழியில்லாமல் திக் திக் இதயத்துடன் தங்களது அறைக்கு சென்றாள் தேன்மொழி.

ஆனால் அவளுக்கு பயமாக இருக்க, அடிமேல் அடி வைத்து மெல்ல மெல்ல சென்றாள்.

ஆனால் அவள் அப்படி எவ்வளவு மெதுவாக நடந்தாலும்,

2 நிமிடத்திற்குள் அவளது கால்கள் அவளை அங்கே கூட்டிக் கொண்டு வந்துவிட்டது.

அதனால் கடுப்பான தேன்மொழி “என் சொந்த கால் கூட எனக்கு சதி பண்ணுதே...

ஹாலுக்கும் இந்த ரூமுக்கும் எவ்வளவு தூரம் இருக்கு..

மத்த நேரம் எல்லாம் ரொம்ப தூரம் நடந்து வர மாதிரி இருக்கும்..

இப்ப நான் பொறுமையா நடந்து வந்தாலும், ரொம்ப சீக்கிரமா வந்த மாதிரி இருக்கு..!!

என்ன பண்றது.. உள்ள அந்த டெரர் பீஸ் வேற வா வான்னு கூப்பிடுறான்..

போய் தானே ஆகணும்...!!”

என்று நினைத்து அழுவதைப்போல தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கதவை திறந்து உள்ளே சென்றாள் தேன்மொழி.

அவள் சுற்றி முற்றிப் பார்க்க, அர்ஜுன் அந்த அறையில் இல்லை.

அதனால் “பாத்ரூம்ல நமக்காக ரெடியா வெயிட் பண்ணிட்டு இருக்கான் போல!

இவனுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெக்கமே இல்ல..

ஒரு சின்ன பொண்ணுன்னு கூட பாக்காம எப்படி எல்லாம் டார்ச்சர் பண்றான்..!!”

என்று நினைத்த தேன்மொழி பாத்ரூம் ஏரியாவிற்கு செல்ல தயங்கிக் கொண்டு அங்கேயே நின்று இருந்தாள்.

அப்போது பாத்ரூமில் இருந்து சத்தமாக அர்ஜுன்,

“ஏய் தேன்மொழி உள்ள வந்தியா இல்லையா..??

உன்ன வர சொல்லிட்டு வந்து கால் மணி நேரத்துக்கு மேல ஆகுது..

இன்னும் என்னடி பண்ற?” என்று குரல் கொடுக்க,

அந்த கணீர் குரலைக் கேட்டு கதி கலங்கி நின்ற தேன்மொழி

“அட வந்து தொலையுறேன் யா கத்தாத..!!”

என்று முனுமுனுத்துவிட்டு மெல்ல நடந்து பாத்ரூம் ஏரியாவிற்குள் நுழைந்தாள்.

பாத்ரூம் கதவு திறந்திருக்க, உள்ளே எட்டிப் பார்த்தாள் அவள்.

ஒரு பெரிய பாக்கெட்டில் ஹீட்டர் போட்டு சுடுநீரை நிரப்பி அதை சரியான பதத்தில் விழாவி வைத்திருந்த அர்ஜுன் ஒரு chairல் அமர்ந்திருந்தான்.

அவனைப் பார்த்தாலே அவளுக்கு நெஞ்சமெல்லாம் பதறியது.

என்ன நினைத்து தன்னைத் தானே தைரியப்படுத்தினாலும் அவளால் உள்ளே செல்ல முடியவில்லை.

அதனால் உடனே தேன்மொழி தன் தலையை உடனே வெளியே எடுத்துக் கொள்ள,

அதை கவனித்துவிட்ட அர்ஜுன் “இவ்வளவு தூரம் வந்துட்டு மறுபடியும் எதுக்கு வெளிய போற?

எனக்கு கை ரொம்ப வலிக்குது டி.

இந்த டி-ஷர்டை கூட என்னால கழட்ட முடியல.

போடும்போது ஆகாஷ் எப்படியோ போட்டுவிட்டுட்டான்.

எனக்கு குளிக்கிறதுக்கு கூட ஹெல்ப் பண்ண மாட்டியா நீ?”

என்று கேட்டுவிட்டு வெளியில் எட்டிப் பார்த்தான்.

இப்போது அவன் குரலில் சோர்வு அப்பட்டமாக தெரிந்தது.

அதனால் “பாவம் போனா போகுது.. உடம்பு சரி இல்லாதவங்களுக்கு நம்ம ஹெல்ப் பண்றோம்னு நினைச்சுக்க வேண்டியது தான்.”

என்று நினைத்து மெல்ல அவள் நடந்து உள்ளே சென்றாள்.

அவள் முகத்தில் தெரிந்த கலவையான உணர்ச்சிகளைக் கண்ட அர்ஜுன் அவளை மேலும் கீழும் பார்த்தான்.

அவள் ஒரு சாதாரண சுடிதார் அணிந்து இருந்தாள்.

இதில் ஏதோ ஸ்கூலுக்கு செல்லும் சிறுமியை போல இரண்டு பக்கமும் தோள்களில் ஷாலை போட்டு அதைப் பின் குத்தி வைத்திருந்தாள்.

தனது நீண்ட கூந்தலை அழகாக வாரி பின்னலிட்டு இருந்தாள்.

அவள் நெற்றி வகுட்டில் குங்குமம் இருக்க, அவளது புருவங்களுக்கு நடுவில் கருப்பு நிறத்தில் ஒரு சிறிய ஸ்டிக்கர் போட்டு ஓட்ட வைக்கப்பட்டு இருந்தது.

அவன் அவளை முதன் முதலில் எப்படிப் பார்த்தானோ அதைவிட,

இப்போது அவள் கொஞ்சம் ஒல்லியாக இருப்பதைப் போல அவனுக்கு தோன்றியது.

அவன் இப்படி அவளை இன்ச் இன்ச்சாக தன் கண்களால் அவளை அளவெடுத்துக் கொண்டு இருக்க,

அவனது குறுகுறு பார்வையால் அவளுக்குள் ஒரு குறுகுறுப்பு ஏற்பட அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல்,

தன் கைகள் இரண்டையும் பிசைந்து கொண்டு பதட்டத்தில் நெளிந்து கொண்டு இருந்தாள் அவள்.

அவளை அப்படி ரசித்துப் பார்த்த அர்ஜூனிற்கு அவன் சியாவை நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அவள் இப்படி வீட்டில் இருக்கும்போது சாதாரணமாக டி-ஷர்ட், பைஜாமா பேண்ட் போன்று சிம்பிளாக ஏதாவது அணிந்து கொள்வாள்.

தேன்மொழி அளவிற்க்கு அவளுக்கு நீளமான கூந்தல் கிடையாது.‌

அதனால் பெரும்பாலான நேரத்தில் அதை விரித்துவிட்டு இருப்பாள்.

இல்லையென்றால் போனி டேயில் போட்டிருப்பாள்.

ஆனால் வீட்டில் இருந்தாலும், ஏன் தூங்க சென்றாலும் கூட கொஞ்சமாவது மேக்கப் போடாமல் சியா இருக்கவே மாட்டாள்.

“ஏன் டி வீட்ல தானே இருக்க..

இப்ப கூட எதுக்கு மேக்கப் உனக்கு?

நீ மேக்கப் போடலைன்னாலும் பாக்குறதுக்கு அழகா தான் இருப்ப..!!” என்று அர்ஜுன் சொன்னாலும் அதை கேட்காமல்,

“அட போ பேபி எனக்கு இப்படி இருந்து பழகிருச்சு.

வீட்ல இருந்தா என்ன? என்ன பாக்குறதுக்கு இங்க ஆளா இல்ல?

முக்கியமா நீ என்ன பார்க்கும்போது நான் உன் கண்ணுக்கு எப்பயும் presentableஆ இருக்கணும்னு நான் நினைக்கிறேன்.

அதான் இப்படி டெய்லியும் ஸ்கின் கேர் பண்ணி, ப்ராப்பரா மேக்கப் பண்ணி, டயட் மெயின்டைன் பண்ணி, எக்சர்சைஸ் பண்ணி என்ன அழகா வச்சிக்கிறேன்.” என்று அவனிடம் சொல்லிவிடுவாள் சியா.

அவள் இந்திய வம்சாவளியை சேர்ந்த வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த மாடர்ன் மங்கை.

ஆனால் தேன்மொழி அப்படி இல்லை.

என்ன தான் அவர்கள் இருவருக்கும் உருவ ஒற்றுமை இருந்தாலும்,

நடத்தையிலும் தோற்றத்திலும் அவர்கள் இருவருக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருந்தது.

அதை எல்லாம் நினைத்து பார்த்த அர்ஜுனிற்க்கு,

“என் சியா எப்படி எல்லாம் இருக்கணும்னு நான் எதிர்பார்த்தேனோ இவ அப்படியே இருக்கா..!!” என்று தோன்றியது.

அவளைப் பார்த்தபடியே அவன் “இங்க வா.. பக்கத்துல வந்து நில்லு..!!” என்று அவன் சொல்ல,

தயக்கத்துடன் அவன் அருகில் வந்தாள் தேன்மொழி.

“உன் ஏஜ் என்ன?” என்று அவன் அவளிடம் அதட்டலாக கேட்க,

“25 சார்.” என்று பயத்தில் உடனே வேகமாகச் சொன்னாள் தேன்மொழி.

உடனே அவன் அவள் முகத்தை உற்றுப் பார்த்து ‌“என் ஏஜ் என்னன்னு தெரியுமா உனக்கு?” என்று கேட்க,

தெரியும் என்று தலையாட்டினாள் அவள்.

அவனுக்கும் அவளுக்கும் இடையில் இருக்கும் வயது வித்தியாசத்தை யோசித்துப் பார்க்கும்போது அவனுக்கு ஏதோ போலத்தான் இருந்தது.

அவன் தங்கை ஜனனியை விட இந்த தேன்மொழி மிகச் சிறிய பெண்ணாக இருக்கிறாள் என்று நினைத்த அர்ஜுன்,

“ஐ அம் சாரி தேன்மொழி. நீ இவ்ளோ சின்ன பொண்ணா இருப்பன்னு நான் எதிர்பார்க்கல.

இந்த மேரேஜ் நடந்தது சரியா தப்பான்னு எனக்கே தெரியல.

பட் என்னால உன்னை விட்டு கொடுக்க முடியல.

இவனுக்கு ரொம்ப வயசாயிடுச்சு.. இவன் செத்துட்டா நம்ம நிலைமை என்ன ஆகும்னு எல்லாம் யோசிக்காத.

நான் இருக்கும்போதே உனக்கு என்னென்ன செய்யணுமோ அது எல்லாத்தையும் செஞ்சுட்டு தான் போவேன்.

You are my responsibility. நான் இருந்தாலும், இல்லாம போனாலும் நீ இருக்கிற வரைக்கும் பத்திரமா, உனக்கு தேவையான எல்லா வசதிகளோட சந்தோஷமா இருக்குறதுக்கு என்னென்ன தேவையோ அது எல்லாத்தையும் நான் உனக்கு அரேஞ்ச் பண்ணி கொடுக்கிறேன்.‌

கண்டிப்பா இந்த மேரேஜ் நடந்திருக்கக்‌ கூடாதுன்னு நீ நினைப்பன்னு எனக்கு தெரியும்..

என்னால முடிஞ்ச வரைக்கும், உன் மனசுல இருக்கிற அந்த எண்ணத்தை மாத்துறத்துக்கு நான் ட்ரை பண்றேன்.” என்றான் அவன் உறுதியாக.

அதனால் அமைதியாக ஷாக்காகி அவனைப் பார்த்த தேன்மொழி,

“என்ன பத்தி எல்லாம் இவனுக்கு எந்த கவலையும் இல்லைன்னு அப்ப சொன்னான்..

இப்ப இவனா எனக்காக யோசிச்சு ஃபீல் பண்ணி என் கிட்ட சாரி எல்லாம் கேட்கிறான்..??” என்று நினைத்தவள்,

அவன் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்ததால் தான் ஏதாவது அவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் போல என நினைத்து,

“நீங்க என்ன பத்தி யோசிக்கிறதுக்கு தேங்க்ஸ் சார்.

இங்க இருக்கிறவங்க எல்லாரும் செல்பிஷ். யாருக்கும் என்ன பத்தி கவலை இல்லைன்னு நினைத்தேன்.”

என்று நக்கலாக சொல்லிவிட்டு லேசாக அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

தன் ஒற்றைப் புருவத்தை தூக்கி அவளை பார்த்த அர்ஜுன்,

“நான் கோமால இருக்கும்போது என் கிட்ட பேசிகிட்டே இருந்ததுனால..

உன் மனசுல இருக்கிற எல்லாத்தையும் என் கிட்ட சொல்ற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சு போல..!!” என்று கேட்க,

உடனே வேகமாக இல்லை என்று இடவலமாக தலையாட்டிய தேன்மொழி,

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார்.

எனக்கு இந்த வீட்ல இருக்கிற குழந்தைகளை தவிர மத்த யாரை பார்த்தாலும் பயமா தான் இருக்கு.

யார் எப்ப என்ன பண்ணுவாங்கன்னே தெரியல..!!” என்றாள்.

“அப்படியெல்லாம் யாரும் உன்னை எதுவும் பண்ணிட மாட்டாங்க.

நீ வந்த வேலையை பாரு..

இவ்ளோ நேரம் நீ பேசி பேசி டைம் வேஸ்ட் பண்ணதுல அந்த சுடு தண்ணி ஆரியே போயிருக்கும்.” என்ற அர்ஜுன் அவள் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான்.

அதில் அவன் மீது விழுந்த
தேன்மொழி அவனது தோள்களில் கை வைத்து எப்படியோ கீழே விழாமல் பேலன்ஸ் செய்து நின்று கொண்டாள்.

” அடப்பாவி உள்ள வந்தவ கிட்ட கொஸ்டின் மேலே கொஸ்டினா கேட்டு நீதானே அப்புறம் ஃபீல் பண்ணி சாரி கேட்ட..

இப்ப கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம நான் பேசி லேட் பண்ணிட்டேன்னு சொல்ற..!!” என்று நினைத்த தேன்மொழி அவனைப் பார்த்து முறைக்க,

“இப்படி என்ன பார்த்து முறைக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத.

கண்ண நோண்டிடுவேன்.” என்று அவளை பார்த்து வேண்டுமென்றே மிரட்டும் தோரணையில் சொன்ன அர்ஜுன்,

பின் அடுத்த நொடியே மென் குரலில், “எவ்வளவு நேரம் தான் டி நான் இங்கயே உட்கார்ந்திருக்கிறது?

சீக்கிரம் டிரஸை கழட்டு..!!” என்றான்.‌

அவன் பொதுவாக டிரஸ் என்று குறிப்பிட்டதால் அவன் தன்னுடைய ஆடைகளை தான் அவிழ்த்து போடச் சொல்கிறான் என்று நினைத்துக் கொண்ட தேன்மொழி‌‌,

உடனே‌ பயத்தில் தன் இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக வைத்துக் கொண்டு

“என்னை எதுக்கு இப்ப டிரஸை கழட்ட சொல்றீங்க?” என்று திக்கி திணறி கேட்க,

தன் பொறுமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருந்த அர்ஜுன்

“ஏய் லூசு நான் என் டிரஸை கழட்ட சொன்னேன்.” என்று கத்தினான்.

உண்மையில் அவனது கணீர் குரலில் பயந்துப்போன தேன்மொழி அவசரத்தில் வேகமாக அவன் டி-ஷர்ட்டை பிடித்து மேலே தூக்கினாள்.

அப்போது அவள் கை அவனது அடிபட்டு இருந்த கையின் மீது மோதிவிட,

“ஆஆஆ.. அம்மா வலிக்குது டி..

லூசு.. லூசு.. உனக்கு ஒரு டி-ஷர்ட்டை கூட கழட்ட தெரியாதா..??

என்னமோ வெறித்தனமா புடிச்சு இழுக்கிற?

உனக்கு என்னை பழி வாங்கணும்னா வேற ஏதாவது பண்ணு.

நான் ஆல்ரெடி செம டென்ஷன்ல இருக்கேன்.

இப்ப இந்த மாதிரி லூசு தனமா ஏதாவது பண்ணி வாங்கி கட்டிக்காத..!!” என்று வந்த கோபத்தில் அவளை திட்டினான் அர்ஜுன்.

“ஐயோ.. சாரி.. சாரி சார்.. நான் தெரியாம பண்ணிட்டேன்.

இனிமே பொறுமையா பண்றேன்.” என்ற தேன்மொழி இப்போது நிதானமாக அவனது டி-ஷர்ட்டை பிடித்து அவனது கையில் மோதாமல் அதை கழட்டி ஓரமாக இருந்த ஹேங்கரில் மாட்டினாள்.

அப்போது அவள் குனிந்தவாறு அவன் அருகில் செல்லும்போது எல்லாம் அவளுடைய துப்பட்டா அவன் முகத்தில் சென்று விழ,

அது அவனுக்கு எரிச்சலாக இருந்தது.

உடனே “ஒரு நிமிஷம்!” என்ற அர்ஜுன் அவள் கைகளைப் பிடித்துக் கொள்ள,

“என்னாச்சு? இப்ப பொறுமையா தானே பண்ணேன்..

இதுலையும் இவன் என்ன குறை கண்டுபிடிச்சானோ தெரியலையே..!!” என்று நினைத்து குழப்பமான முகத்துடன் அவனை கேள்வியாக பார்த்தாள் அவள்‌.

“நீ பக்கத்துல வந்து குனியும் போது எல்லாம் இந்த ஷால் வந்து என் மூஞ்சிலயே விழுகுது.

முதல்ல இத கழட்டி எறி.” என்று அவன் தன் முகத்தை சுழித்துக் கொண்டு செல்ல,

உடனே திடுக்கிட்ட தேன்மொழி “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார்.

என் ஷால் உங்க மேல படாம நான் பாத்துக்குறேன்.” என்றாள் அவசரமாக.

அவளை முறைத்துப் பார்த்த அர்ஜுன்,

“அதான் முழுசா நான் உன்னை எப்பவோ பாத்துட்டேனே...

இப்ப இந்த ஷாலை போட்டு தான் நீ எனக்கு தெரியாம மூடி மறைக்க போறியா?

உன் கிட்ட பேசிப்பேசியே எனக்கு எனர்ஜி எல்லாம் போயிடும் போல.

ஆல்ரெடி செம டயர்டா இருக்குடி..

குளிச்சிட்டு நான் தூங்கி ரெஸ்ட் எடுக்கணும். என்ன பேச வைக்காத..

சொல்றதை மட்டும் செய்.” என்று சலிப்புடன் சொன்னான்.‌

என்ன தான் அவன் அப்படி சொன்னாலும் அவளுக்கு கூச்சமாகத் தான் இருந்தது.

இருப்பினும் அவன் சொல்வதும் உண்மை தானே என்று நினைத்த தேன்மொழி,

அவள் அணிந்து இருந்த துப்பட்டாவை கழட்டி ஹேங்கரில் போட்டாள்.

ஒரு பக்கம் அவளுக்கு அவன் முன்னே அப்படி நிற்க வெட்க்கமாக இருக்க,

அவனோ அவள் முன்னே இப்போது மேலே எதுவும் அணியாமல் இருந்ததால் தனது கவர்ச்சியான கட்டுடலை காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அது இன்னும் அவளுக்கு ஏதோ போல இருக்க, அந்த கன்னியின் மனம் பதைபதைத்தது.

தனது ஷார்ட்சை கை காட்டிய அர்ஜுன்,

“சும்மா வேடிக்கை பார்த்துட்டு அப்படியே நிக்காத.

இதையும் சீக்கிரம் கழட்டு. உனக்கு எதுவுமே தெரியாதா?

எல்லாத்துக்கும் உனக்கு
இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்துக்கிட்டே இருக்கணுமா?” என்று மீண்டும் தன் குரலை உயர்த்தி கேட்க,

வேகமாக அவன் அருகில் சென்ற தேன்மொழி அவன் ஷார்ட்சை கழட்டினாள்.

அப்போது அவளது முகம் முதல் காதுவரை வெட்கத்தில் குங்குமம் போல சிவந்திருந்தது.

அதை கவனித்த அர்ஜுனனின் இதழ்கள் ஓரம் ஒரு குறும்பு புன்னகை தவழ்ந்தது.

தொடரும்..

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-30
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.