CHAPTER-3

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
அவ‌ன் முழு அன‌லாய் அவ‌ள் ப‌க்க‌ம் திரும்ப‌, அவ‌ளோ ப‌ய‌ந்து கால்க‌ளை குறுக்கி பிடித்து அப்ப‌டியே பின்னால் ந‌க‌ர‌, அவ‌ன் கண்களில் அப்படியொரு அனல், அவ‌ளையே அழுத்த‌மாய் பார்த்த‌ப‌டி நெருங்கி வ‌ந்தான் அவ‌ன்.

அதில் மேலும் நடுங்கிய‌ப‌டி பின்னால் ந‌க‌ர்ந்த‌வ‌ள், "ய‌..யாரு நீ.." என்று கேட்டு முடிக்கும் முன், அவ‌ளின் சேலையை உருவி வீசியிருந்தான் அவ‌ன்.

அதில் ப‌ய‌ந்து அல‌றி க‌ர‌த்தால் த‌ன்னை ம‌றைத்துக் கொண்ட‌வ‌ள் அவ‌ச‌ர‌மாய் கீழிருந்த‌ போர்வையை இழுக்க‌ முய‌ல‌, அதை காலால் மிதித்து த‌டுத்தான் அவ‌ன். அதில் அவ‌ள் திடுக்கிட்டு ப‌ய‌ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ அத்த‌னை கோப‌மாய் அவ‌ள் முக‌ம் நெருங்கி வ‌ந்து, "உன்ன‌ இப்பிடி பாக்குற‌துக்கு முழு உரிம‌ இருக்குற‌ ஒரே ஆள்." என்று அழுத்தி ப‌தில் அளித்தான்.

அதில் அவ‌ள் அதிர்வாய் விழி விரித்து இரு க‌ர‌த்தால் த‌ன்னை ம‌றைக்க‌ முய‌ல‌, திடீரென்று இடையில் வ‌ந்த‌து ஒரு க‌த்தி. அதில் அவ‌ள் திடுக்கிட்டு கீழே பார்க்க‌, அவ‌ளின் அந்த‌ ஜேக்கெட் ஹூக்குக‌ளுக்குள் நுழைந்திருந்த‌து அந்த‌ க‌த்தி. அத‌ன் கூரிய‌ ஓர‌ம் அதை கிழிப்ப‌த‌ற்கு வாகாய் நுழைந்திருக்க‌, உள்ளிருந்த‌ அவ‌ளின் இத‌ய‌ம் வேக‌மாய் துடிக்க‌ மெல்ல‌ நிமிர்ந்து அவ‌னை பார்த்தாள். அதில் மேலும் பார்வையை அழுத்தியவன், "இதுக்குமேல‌யும் பாக்க‌ உரிம‌ இருக்கு." என்று கூற‌, அவ‌ளின் இத‌ய‌ம் அத்த‌னை பலமாய் துடித்த‌து.

அதில் அந்த‌ க‌த்தி முனையை மேலும் ந‌க‌ர்த்தி அவ‌ளின் தாடையில் வைத்து அதை நிமிர்த்திய‌வ‌ன், அதில் ப‌ய‌ந்த‌ அவ‌ள் விழிக‌ளை அழுத்தி பார்த்து, "இன்னொரு தெட‌வ‌ இந்த‌ கேள்வி உன‌க்குள்ள‌ வ‌ந்த‌துன்னா, ப‌தில் இன்னும் டீட்டிய‌லா இருக்கும். புரியுதா?" என்று அத்த‌னை அழுத்த‌மாய் கேட்க‌, அதில் அதிர்வாய் விழி விரித்த‌வ‌ளின் இத‌ய‌ம் அத்த‌னை பலமாய் அடித்துக் கொண்ட‌து.

அதில் மேலும் விழியில் அழுத்த‌ம் கொடுத்து, "புரிஞ்ச‌தா?" என்று அவ‌ன் மேலும் அழுத்தி கேட்க‌, ப‌ய‌த்தில் அவ‌ள் த‌லை தானாய் ஆடிய‌து.

அதில் அந்த‌ க‌த்தியை அவ‌ள் க‌ன்ன‌த்தில் வைத்து த‌ட்டி, "குட்." என்ற‌ப‌டி க‌த்தியை வெளியில் எடுத்துவிட்டான். அதில் அவ‌ள் மெல்லிய‌தாய் மூச்சு விடும் முன், அவ‌ள் இத‌ழ்க‌ளை அழுத்தி சிறை செய்தான் அவ‌ன்.

அதில் அவ‌ள் அதிர்வாய் விழி விரித்து அவ‌னை வில‌க்க‌ முய‌ல‌, அவ‌ள் பின்ன‌ந்த‌லையை அழுத்தி பிடித்து மேலும் த‌ன் இத‌ழுள் அவ‌ளை இழுத்து புதைத்த‌வ‌ன், முழுதாய் சுவைத்து தீர்த்த‌ பிற‌கக மெல்ல விடுவித்தான்.

அதில் அவ‌ள் மூச்சு வாங்க‌ அத்தனை ப‌ய‌ந்துட‌ன் அவ‌னை பார்க்க‌, "குளிச்சிட்டு வ‌ந்து வெச்சுக்குறேன்." என்று மெல்லி குர‌லில் கூறிவிட்டு ந‌க‌ர்ந்தான் அவ‌ன்.

அடுத்த‌ நொடியே அவ‌ள் த‌ன் இத‌ழை உள்ள‌ங்கையால் அழுத்தி துடைத்துக் கொள்ள‌, சட்டென்று மீண்டும் வ‌ந்து அவ‌ள் முக‌ம் முழுக்க‌ அழுத்தி அழுத்தி முத்த‌மிட துவ‌ங்கினான் அவ‌ன்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு ப‌ய‌ந்து இறுக்கி விழி மூடிக்கொள்ள‌, அவ‌ள் முக‌ம் முழுக்க‌ எச்சில் செய்துவிட்டு, அவள் க‌ழுத்து, மார்பு என்று வளைத்து வளைத்து தேக‌மெங்கும் எச்சில் செய்துவிட்ட‌வ‌ன், "முடிஞ்சா தொட‌ச்சுக்கோ." என்று கூறிவிட்டு ந‌க‌ர்ந்தான்.

அதில் உடனே விழி திறந்து அத்தனை படபடப்பாய் அவ‌னை பார்த்த‌வ‌ளின் க‌ண்ணீர் பெருக‌, அப்ப‌டியே விழி மூடி க‌த‌றி அழுதாள் அவ‌ள். யார் இவ‌ன்? த‌ன்னை எங்கு வைத்திருக்கிறான்? எத‌ற்காக‌ இவ்வாறெல்லாம் ந‌ட‌ந்துக் கொள்கிறான் என்று புரியாது சுற்றி பார்த்த‌ப‌டியே க‌த‌றி அழுதவ‌ளின் கையில் ஏதோ அழுந்த‌, த‌ன் முழ‌ங்கையை ம‌ட‌க்கி பார்த்தாள்.

இன்று அந்த‌ காரிலிருந்து குதிக்கும்போது தார் ரோடு கையில் சர‌மாறியாக‌ கீறியிருந்த‌து. ஆனால் இப்போது அத‌ற்கு ம‌ருந்து வைத்து க‌ட்டு இட்டிருக்க‌, அவ‌ளோ விய‌ப்பாய் நிமிர்ந்து அவ‌னை பார்த்தாள்.

இங்கே குளிய‌ல‌றைக்குள் நுழைந்த‌வ‌ன், ஆடையுட‌னே ஷ‌வ‌ரை ஆன் செய்து அந்த‌ சுடு த‌ண்ணீரில் சுக‌மாய் ந‌னைந்தப‌டி விழி மூடினான். அப்ப‌டியே அவ‌ன் உட‌ல் முழுக்க‌ ந‌னைய‌ ந‌னைய‌ த‌ன் க‌ருப்பு மேற்ச‌ட்டையை மெதுவாய் க‌ழ‌ற்றினான். அப்போது அந்த‌ க‌ருப்பு உள் பனிய‌னில் அட‌ங்காம‌ல் தெரிந்த‌ அவ‌னின் க‌ட்டுக் கோப்பான‌ வெண் உட‌லில் அழ‌காய் வ‌ழிந்து சென்ற‌து அந்த‌ நீர் துளிக‌ள். அப்ப‌டியே அவ‌ன் அந்த‌ ப‌னிய‌னையும் க‌ழ‌ற்றி வீசிவிட்டு முழுதாய் அந்த‌ நீரில் ந‌னைய‌, அந்த‌ நீர் வ‌ழிந்து சென்ற‌ அவ‌னின் வெண்ணிற‌ முதுகில் வெளிர் சிவப்பாய் இருந்த அந்த தழும்பும் சேர்ந்து நனைந்தது.

இங்கே அவ‌ன் வ‌ருகிறானா என்று ப‌ய‌த்துட‌ன் பார்த்த‌ப‌டியே த‌ன் சேலையை அவ‌ச‌ர‌மாய் க‌ட்டிக் முடித்த‌ அமீரா, அடுத்த‌ நொடியே அங்கிருந்து ஓட‌ ஆர‌ம்பித்தாள்.

அந்த‌ அறை க‌த‌வும் திற‌ந்திருக்க‌, வேக‌மாய் வெளியில் வ‌ந்த‌வ‌ள், அங்கிருந்த‌ அத்த‌னை விசால‌மான‌ காரிடோரில் எந்த‌ ப‌க்க‌ம் செல்வ‌தென்று புரியாது குழ‌ம்பி நின்றாள். அவ‌ச‌ர‌த்தில் அங்கும் இங்கும் பார்த்த‌ப‌டியே த‌லையை பிடித்த‌வ‌ள், அப்போதே த‌ரையை க‌வ‌னிக்க‌, அங்கே அவ‌னின் பூட்ஸ் கால்க‌ளின் சேரு த‌ட‌ங்க‌ள் இருந்த‌து. அது அப்ப‌டியே இந்த‌ அறைக்குள்தான் வ‌ர‌, உட‌னே அத‌ன் ஆர‌ம்ப‌த்தை தேடி அதை பின் தொட‌ர்ந்து ஓடினாள்.

ச‌ரியாக‌ அந்த‌ மீன்க‌ள் நீந்தும் ப‌டிக‌ள் வ‌ந்துவிட‌, அந்த‌ அக‌ண்டு விரிந்த‌ ஹாலில் ஆட்க‌ள் யாருமே இல்லாத‌து ஆச்ச‌ரிய‌மாய் இருக்க‌, வேக‌ வேக‌மாய் அந்த‌ ப‌டியில் இற‌ங்கிய‌வ‌ள், சுற்றியும் யாரேனும் இருக்கிறார்க‌ளா என்று பார்த்த‌ப‌டியே திற‌ந்து கிட‌ந்த‌ மெயின் டோரின் வ‌ழியே வெளியே ஓடினாள்.

அப்போதே இங்கு குளித்து முடித்து வேறு ஒரு க‌ருப்பு ஆடையில் வெளி வ‌ந்த‌வ‌ன், த‌ன் த‌லையை துவ‌ட்டிய‌ப‌டியே மெத்தையை பார்க்க‌, அங்கே அவ‌ள் இல்லை. அதில் திடுக்கிட்டு அவ‌ன் அவ‌ச‌ர‌மாய் தேட‌, அவ‌ன் வீசிய‌ அவ‌ளின் புட‌வையுமே அங்கில்லை. அதில் இவ‌ன் முக‌ம் மெதுவாய் இறுகி க‌ண்க‌ள் சிவ‌ந்த‌து.

இங்கே வேக‌மாய் வெளியில் வ‌ந்த‌ அமீராவிற்கு சுற்றி அடியாட்கள் யாருமே இல்லாதது பெரும் வியப்பாய் இருக்க, அப்படியே ஓடியபடி திடுக்கிட்டு ஒரு இடத்தில் நின்றாள். அவளின் முன்னே அப்படியே நிமிர்ந்து பார்க்க‌, அத்த‌னை உய‌ர‌மாய் ஒரு க‌ருப்பு நிற‌ கேட் நின்றிருந்த‌து. ஆனால் அது மூட‌ப்ப‌ட்டிருக்க‌, சுற்றியும் வேறு ஏதேனும் வ‌ழி உள்ள‌தா என்று தேடினாள். அந்த‌ கேட்டை சுற்றியும் பெரிதாய் அமைந்திருந்த‌ அந்த‌ சுவ‌ர்க‌ளின் முனையில் மின் க‌ம்பிக‌ள் பொருத்த‌ப்பட்டிருக்க‌, அதில் விழி விரித்த‌ இவ‌ளுக்கோ ப‌ய‌த்தில் எச்சில்கூட‌ தொண்டைக்குள் இற‌ங்க‌வில்லை.

சுற்றியிருந்த சுவ‌ர் மீது முழுக்க‌வே அந்த‌ மின்வேலி இருக்க‌, அது இல்லாத‌ ஒரே இட‌ம் இந்த‌ பெரிய‌ க‌ருப்பு கேட் ம‌ட்டும்தான். அதை உண‌ர்ந்த‌வ‌ளுக்கோ வேறு வ‌ழி இல்லை. இது வ‌ழியாக‌ ஏறிவிட‌லாம் என்று எண்ணிய‌வ‌ளின் கால்க‌ள் இப்போது ந‌டுங்க‌ ஆர‌ம்பிக்க‌, உட‌னே திரும்பி அவ‌ன் வ‌ருகிறானா என்று பார்த்துவிட்டு ப‌ய‌த்துட‌னே த‌ன் முந்தாணையை தூக்கி சொருகிவிட்டு அந்த‌ கேட்டில் ஏற‌ துவ‌ங்கினாள். கால்கள் நடுங்க, உடல் உதற, எப்ப‌டியாவ‌து இங்கிருந்து த‌ப்பியே ஆக‌ வேண்டும் என்ற‌ ஒரே ப‌ய‌த்தில் அவ‌ள் மூளை எதையும் யோசிக்காது வேலை செய்ய‌, அவ‌ச‌ர‌மாய் திரும்பி திரும்பி பார்த்த‌ப‌டியேதான் ஏறினாள்.

ம‌ர‌ம் ஏற‌ தெரியாத‌ மான்கூட‌ புலியை பார்த்தால் ப‌ய‌த்தில் ஏறிவிடும் என்பார்க‌ள். அந்த‌ நிலையில் இருந்த‌ இந்த‌ மானும் எப்ப‌டி ஏறிய‌தென்று உண‌ரும் முன்பே உச்சிக்கு வ‌ந்திருந்தாள். அப்போதே கேட்டின் அந்த‌ ப‌க்க‌ம் இருந்த‌ காட்சி அவ‌ள் க‌ண்ணில் விழ‌, அப்ப‌டியே அக‌ல‌ விழி விரித்தாள் அமீரா.

அதே நேர‌ம் இங்கு கோப‌த்தின் உச்சியிலிருந்த‌ விக்ர‌ம‌னோ, "எனக்கு தெரியாது இன்னிக்கு என் ம‌ரும‌க‌ கெட‌ச்சே ஆக‌ணும்." என்று க‌த்த‌, "அது அவ்ளோ ஈசி இல்ல‌ சார்." என்றார் இன்ஸ்பெக்ட‌ர்.

அதில் அவ‌ர் கோப‌மாய் அவ‌ர் ப‌க்க‌ம் திரும்ப‌, "இங்க‌ பாருங்க‌." என்ற‌ப‌டி மேசையிலிருந்த‌ த‌ன் லேப்டாப்பை அவ‌ர் பக்க‌ம் திரும்பினார் இன்ஸ்பெக்ட‌ர்.

அவ‌ரும் வேக‌மாய் அதை த‌ன் ப‌க்க‌ம் இழுத்து பார்க்க‌, "நீங்க‌ சொன்ன‌ காடு இதுதா." என்று அவ‌ர் கூற‌, அதில் அந்த‌ காடு மொத்த‌மும் தெளிவாய் தெரிய‌, "மொத்த‌ம் ஆயிர‌ம் கிலோ மீட்ட‌ர் சார். இங்க‌ ஒருத்த‌ர‌ தேடி போனா, மாச‌ம் ஆனாலும் முடியாது." என்றார் அவ‌ர்.

அதில் அதிர்வாய் அதை ந‌ன்றாய் த‌ன் ப‌க்க‌ம் திருப்பி பார்த்த‌வ‌ரின் விழிக‌ள் அக‌ல‌ விரிய‌, அந்த‌ காடு அவ‌ர் நினைத்த‌தைவிட‌ பெரிதாய் இருந்த‌து.

இங்கே அந்த‌ கேட்டின் மீதிருந்த‌ அமீராவிற்கும் சுற்றி அட‌ர்ந்த‌ காடு ம‌ட்டுமே தெரிய‌, அதிலிருந்து வ‌ந்த‌ வித்தியாச‌மான‌ ச‌த்த‌ங்க‌ள் அவ‌ள் ப‌ய‌த்தை கிள‌ப்பிய‌து.

அதில் அவ‌ள் ப‌ய‌த்துட‌ன் த‌ய‌ங்கி யோசிக்க‌, ச‌ட்டென்று த‌ன் தாய் த‌ந்தையின் முக‌ம் அவ‌ள் க‌ண்முன் வ‌ந்தது. அதில் அவ‌ளின் க‌ண்க‌ள் க‌ல‌ங்க‌ ஆர‌ம்பிக்க‌, இந்நேர‌ம் த‌ன்னை காணாம‌ல் த‌வித்துக் கொண்டிருப்பார்க‌ள். எப்ப‌டியாவ‌து அவ‌ர்க‌ளிட‌ம் சென்றுவிட‌ வேண்டும் என்று மெதுவாய் அந்த‌ ப‌க்க‌ம் வ‌ந்து கீழே இற‌ங்க‌ முய‌ல‌, அவ‌ளால் முடிய‌வில்லை. பின் ப‌க்க‌ம் ஏற‌ வ‌ச‌தியாக‌ இருந்த‌ கேட், இங்கே முன் ப‌க்க‌ம் வ‌ழு வ‌ழுப்பாக‌ இருக்க‌ கால் வைக்க‌ கூட‌ இட‌மில்லை. அதில் புரியாது த‌வித்த‌வ‌ள், ஒரு நொடி விழி மூடி ப‌ய‌ங்க‌ள் அனைத்தையும் தூர‌ம் விர‌ட்டி விட்டு, ஒரே முடிவாய் பெருமூச்சுவிட்டு, அப்ப‌டியே கீழே குதித்துவிட்டாள்.

அடுத்த‌ நொடி அவ‌ளை அழ‌காய் கேட்ச் செய்த‌து இரு க‌ர‌ங்க‌ள். அதில் இறுக்கி விழி மூடியிருந்த‌ அமீராவோ, மெதுவாய் விழிக‌ளை திற‌க்க‌, திற‌ந்த‌ நொடியே அக‌ல‌ விரிந்த‌து அவ‌ள் விழிக‌ள். எந்த‌ புலியிட‌மிருந்து இவ்வளவு க‌டின‌ப்ப‌ட்டு த‌ப்பித்து வ‌ந்தாளோ, அந்த‌ புலியிட‌மே சிக்கியிருந்தாள்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு இற‌ங்க‌ முய‌ல‌, சட்டென்று அவளை விட்டிருந்தான் அவன். அதில் பொத்தென்று அவள் கீழே விழ, வலியில் "ஆ!" என்று முகத்தை சுருக்கும் முன் பட்டென்று அவள் மீது படர்ந்து இரு கரத்தால் அவளை சிறை செய்திருந்தான் அவன்.

அதில் அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க, அவள் முகத்தை உரசியபடி இருந்தவனின் மீசை அப்ப‌டியே அவ‌ளின் க‌ன்ன‌த்தை உர‌ச ஆழ்ந்த மெல்லிய குரலில்‌, "என்னவிட்டு போயிருவியா டார்லு?" என்றபடியே அவன் விர‌ல்க‌ள் அவ‌ளின் இடையில் சொருகியிருந்த‌ முந்தாணையை மெல்ல‌ விடுவித்தது.

அதில் அவ‌ள் பய‌த்துட‌ன் த‌டுமாறி மெதுவாய் நெளிய‌, அவ‌ன் விர‌ல்க‌ள் இப்போது தார‌ளாமாய் அவ‌ள் வெற்றிடையில் ப‌ட‌ர்ந்தது. அதில் இறுக்கி விழி மூடிய‌வ‌ள், அவ‌னை த‌ன்னிட‌மிருந்து வில‌க்க‌ முயல‌, சட்டென்று அவ‌ள் இடையை இறுக்கி பிடித்து மேலும் அவ‌ளுள் புதைந்தவ‌ன், அவ‌ள் முக‌மெங்கும் த‌ன் மீசையை உர‌சியபடியே, "போக‌ முடியுமா உன்னால‌?" என்று அன‌ல் மூச்சாய் கேட்க‌, ச‌ட்டென்று முக‌த்தை திருப்பிய‌வ‌ளின் விழிக‌ள் க‌ண்ணீரை வெளியேற்றிய‌து.

அந்த‌ க‌ண்ணீரை மெதுவாய் அவ‌ன் இத‌ழ்க‌ள் சுத்த‌ம் செய்த‌ப‌டியே, வ‌ளைந்த‌ அவ‌ள் க‌ழுத்தை நோக்கி இறங்க‌, ப‌ட்டென்று அவ‌ன் த‌லையில் க‌ல்லால் அடித்து கீழே த‌ள்ளினாள் அவ‌ள்.

அதில் அவ‌ன் பொத்தென்று அவ‌ள‌ருகே ச‌ரிய‌, அத‌ற்குள் வேக‌மாய் எழுந்துவிட்ட‌வ‌ள், த‌ன் கையிலிருந்த‌ க‌ல்லை ப‌த‌ற‌லாய் கீழே போட்டுவிட்டு, அங்கிருந்து ஓட‌ ஆர‌ம்பித்தாள்.

அதில் க‌டுப்பாய் அந்த‌ ம‌ண்ணை இறுக்கி பிடித்த‌வ‌ன், உட‌னே திரும்பி வீசியெறிந்தான் தன் க‌த்தியை. அது ச‌ரியாக‌ ஓடிக் கொண்டிருந்த‌ அவ‌ளை நோக்கி பாய்ந்து சென்று, அப்படியே அவ‌ளை அடுத்து வ‌ந்த‌ அந்த‌ முந்தாணையில் குத்தி அங்கிருந்த‌ மூங்கில் ம‌ர‌த்தில் சொருகியது. அதில் ச‌ட்டென்று நின்றுவிட்டவ‌ளின் சேலை முந்தி கழன்று வர, வேக‌மாய் திரும்பி பார்த்தாள்.

அவ‌ளின் அந்த‌ முந்தாணையில் க‌த்தி ஆழ‌மாய் இற‌ங்கியிருக்க‌, ப‌த‌ற‌லாய் அவ‌னை பார்த்தாள். அவ‌னோ கூலாய் எழுந்து அவ‌ளையே பார்த்த‌ப‌டி த‌ன் ச‌ட்டையிலிருந்த‌ ம‌ண்ணை த‌ட்டிவிட‌, அவ‌ளோ ப‌ய‌த்தில் வேக‌மாய் த‌ன் முந்தாணையை பிடித்திழுத்தாள்.

ப‌ட்டு புட‌வை அவ்வ‌ள‌வு எளிதில் கிழிய‌ ம‌றுக்க‌, அவச‌ர‌மாய் அவ‌னை பார்த்தாள். அவ‌னோ அவ‌ள் உண்டாக்கிய‌ த‌ன் நெற்றி காய‌த்தை அழ‌காய் வ‌ருடிய‌ப‌டியே அருகில் வ‌ர‌, ப‌ய‌த்தில் வேக‌மாய் ஒரு இழு இழுத்தாள் இவ‌ள். அடுத்த‌ நொடி அது கிழிந்து வ‌ந்திருக்க‌, வேக‌மாய் அங்கிருந்து ஓடினாள்.

அவ‌ள் சேலையிலிருந்து பிரிந்த‌ அந்த‌ சிறு துண்டு அந்த‌ க‌த்தியிட‌ம் சிக்கியிருக்கிய‌ப‌டி அவ‌ளையே பார்க்க‌, ச‌ட்டென்று அந்த‌ க‌த்தியை உருவி எடுத்த‌வ‌னின் க‌ண்க‌ள் இர‌ச‌னையாய் அதை த‌ழு‌வ‌, அதில் சிக்கியிருந்த‌ அவ‌ள் சேலை துண்டிற்கு அழுத்த‌மாய் ஒரு முத்த‌ம் வைத்து அவ‌ளையே பார்த்தான் அவ‌ன்.

அவ‌ளோ தூர‌த்தில் ஓடிக் கொண்டிருக்க‌, அதை பார்த்த‌ப‌டியே அந்த‌ க‌த்தியை ஓங்கி ஓரே வெட்டில் அந்த‌ மூங்கிலை துண்டாய் கையில் எடுத்த‌வ‌ன், அதை திருப்பி வைத்து அத‌ன் ஓட்டை வ‌ழியாக‌, அத‌னுள் ஓடும் அவ‌ளை அழ‌காய் இர‌சித்தான்.

அப்போது அவ‌ள் ப‌ய‌த்தில் அவ‌னை திரும்பி பார்த்த‌ப‌டியே வேக‌மாய் ஓட‌, இங்கே இவ‌னின் இத‌ழ்க‌ள் இர‌ச‌னையாய் வ‌ளைந்த‌து.

அப்ப‌டியே மேலே அந்த‌ காட்டின் மீது ப‌ல‌ வித்தியாச‌மான‌ ப‌ற‌வைக‌ள் ப‌ற‌ந்த‌து.

"இதெல்லா காட்டு ப‌ற‌வ‌ மாதிரியே இருக்குற‌ ட்ரோன்ஸ். உள்ள‌ இருக்குற‌ அந்த‌ க்ரிமின‌லுக்கு ச‌ந்தேக‌மே வ‌ராம‌, அங்க‌ இருக்குற‌ எல்லாத்தையும் நாம‌ இங்க‌ தெளிவா பாக்க‌லாம் சார்." என்று த‌ன் முன்னிருந்த‌ லேப்டாப்பில் அதை மானிட்ட‌ர் செய்த‌ப‌டியே இவ‌ன் கூற‌, அவ‌னின் பின்னிருந்த‌ விக்ர‌ம‌னும் இன்ஸ்பெக்ட‌ரும் அதை க‌வ‌ன‌மாய் க‌வ‌னித்த‌ன‌ர்.

அதில் ப‌ல்வேறு கேம‌ராக்க‌ளில் அந்த‌ காட்டின் ப‌ல்வேறு இட‌ங்க‌ள் தெளிவாய் தெரிந்த‌து.

இங்கே அந்த‌ காட்டுக்குள் வெகு நேரமாக ஓடிக் கொண்டிருந்த அமீராவின் சக்தி மெல்ல குறைய‌ ஆர‌ம்பித்து, அதிக‌ம் மூச்சு வாங்க‌ ஆர‌ம்பிக்க‌, திரும்பி அவ‌ன் வ‌ருகிறானா என்று பார்க்க‌, அவ‌னோ எங்குமே இல்லை. வெகு நேர‌மாக‌ இவ‌ள் ம‌ட்டுமே த‌னியாக‌ ஓடிக் கொண்டிருக்க‌, எப்ப‌டியோ அவ‌ன் வ‌ரும் முன் இந்த‌ காட்டை க‌ட‌ந்து விட‌ வேண்டும் என்று மிச்ச‌மிருந்த‌ ச‌க்தியையும் திர‌ட்டி ஓடிய‌வ‌ளின் கால் த‌டுக்கிவிட்டு பொத்தென்று கீழே விழுந்தாள். ச‌ரியாக‌ அவ‌ளுக்கு மேல் ஒரு ப‌ற‌வை வட்டம் அடித்தது.

இங்கே அந்த‌ மானிட்ட‌ரை பார்த்து அதிர்வாய் விழி விரித்த‌ விக்ர‌ம‌ன், "அந்த‌ கேம‌ராவ‌ சூம் ப‌ண்ணு." என்றார் வேகமாக‌.

அதில் அந்த‌ ஆப்ரேட்ட‌ரும் அந்த‌ குறிப்பிட்ட‌ கேம‌ராவை சூம் செய்து காட்ட‌, விழிக‌ள் அக‌ல‌ விரிந்து, "இன்ஸ்பெக்ட‌ர்!" என்றழைத்தார் விக்ர‌ம‌ன்.

இங்கே விழுந்து கிட‌ந்த‌ அமீராவோ மூச்சு வாங்க‌ க‌டின‌ப்ப‌ட்டு மெதுவாய் எழ‌ முய‌ற்சிக்க‌, அப்போதே த‌ன் முன்னால் க‌வ‌னித்தவ‌ளின் விழிக‌ள் அக‌ல‌ விரிந்த‌து.

அதில் அவ‌ள் அதிர்வாய் மெல்ல‌ எழுந்து நிற்க‌, அவளின் முகமே இப்போது நீல நிறத்தில் மின்ன, அவளின் முன்பே அவ்வளவு பெரிய கடல். அதில் அவள் அப்படியே மூச்சு வாங்க சுற்றியும் பார்க்க, கண்ணுக்கு எட்டும் தூரம் வரையிலும் அந்த கடல் மட்டுமே தெரிந்தது.

"என்ன‌ ஆச்சு?" என்ற‌ப‌டி இங்கு வ‌ந்து மானிட்ட‌ரை பார்த்த‌ இன்ஸ்பெட‌ரும் விய‌ப்பாய் புருவ‌ம் விரித்தார்.

அவ்வ‌ள‌வு பெரிய‌ காட்டில் ஒரு குறிப்பிட்ட‌ அள‌வு ம‌ட்டுமே ம‌ர‌ங்க‌ளே இல்லா ச‌ம‌வெளி. அது ஆச்ச‌ரிய‌ம‌ல்ல‌. அதை சுற்றியிருந்த‌ சில‌ ம‌ர‌ங்க‌ள் வ‌ளைந்திருக்க‌, அதுதான் இவ‌ர்க‌ளின் விய‌ப்பிற்கு கார‌ண‌ம்.

"இன்னும் சூம் ப‌ண்ணு." என்று கூற‌, அவ‌னும் அதை செய்ய‌, அங்கிருந்த‌ சில‌ கிளைக‌ள் உடைந்தும் இருந்த‌து. அப்ப‌டியே த‌ரையில் ச‌ருகுக‌ள் அனைத்தும் வில‌கி ஓர‌ம் சென்றிருக்க‌, அந்த‌ ஓர‌ங்க‌ளில் காய்ந்த‌ ச‌ருகு ம‌ட்டும‌ல்லாது ப‌ச்சை இலைக‌ளுமே நிறைய‌ விழுந்து கிட‌ந்த‌து. அங்கிருந்த‌ புற்க‌ள் பாதி க‌ருகி வேறு இருந்த‌து. மேலும் அங்கிருந்த‌ ம‌ண்ணில் தெரிந்த‌ அடையாள‌ங்க‌ள் அனைத்தையுமே பார்த்த‌ விக்ர‌ம‌னும் இன்ஸ்பெக்ட‌ரும் திரும்பி ஒருவ‌ரையொருவ‌ர் பார்த்து, "ஹெலிகாப்ட‌ர்?" என்று ஒரே நேர‌த்தில் கேட்ட‌ன‌ர்.

"ஆமா சார். இங்க‌ ஒரு ஹெலிகாப்ட‌ர்தா வ‌ந்து போயிருக்க‌ணும்." என்று அந்த‌ ஆப்ரேட்ட‌ர் க‌ணித்து கூற‌, அவ‌ன் முன்பிருந்த‌ மானிட்ட‌ரில் தெரிந்த‌ காட்சியை இங்கே காட்டிக் கொண்டிருந்த‌ அந்த‌ ப‌ற‌வையோடு ப‌ல‌ ட்ரோன் ப‌ற‌வைக‌ளும் இப்போது அந்த‌ ஒரு இட‌த்தில் வ‌ந்து குவிந்த‌து.

அந்த‌ இட‌த்திற்கு அப்ப‌டியே மேலே ஆகாய‌ம் தாண்டி, இந்த‌ மொத்த‌ இந்தியாவிலிருந்து பல கிலோ மீட்டர் தள்ளி, உலக வரைபடத்திலேயே தெரியாத ஒரு சிறு புள்ளியாய் ஒரு தீவு. அங்கேதான் இப்போது அமீரா நின்றிருக்க, அவளை சுற்றியும் கடல் மட்டுமே இருந்தது. அதில் அவள் அத்தனை அதிர்வாய் அத்தனை பதறலாய் சுற்றியும் பார்க்க, அந்த பரந்து விரிந்த கடலின் அலை சத்தங்களுக்கு நடுவே திடீரென்று ஒரு புல்லாங்குழலின் இசை இனிமையாய் அவ்விடத்தை நிரப்பியது.

அதில் அவள் திடுக்கிட்டு திரும்பி பார்க்க, அங்கே யாருமே இல்லை. அதில் அவள் புரியா பதற்றமாய் சுற்றியும் தேட, அந்த அமைதியான காட்டிற்குள் அந்த புல்லாங்குழலின் இசை மட்டுமே சத்தமாய் ஒலித்தது. அதில் புரியாது சுற்றியும் தேடியவளின் பார்வை அன்னிச்சையாய் மேலே கவனிக்க, அடுத்த நொடி அதிர்ந்து பின்னால் நகர்ந்தவள், அப்படியே முழுதாய் மேலே பார்க்க அகல விரிந்தது அவள் விழிகள்.

அவள் முன்பே இருந்த அந்த பெரிய மரம் ஒன்றில், ஒற்றை கால் தொங்கவிட்டு அதை மெதுவாய் ஆட்டியபடியே கூலாய் சாந்தமர்ந்திருவனின் கரத்தில், மூங்கில் ஒன்று துளையிட்ட புல்லாங்குழலாய் மாறியிருக்க, அதை அழகாய் வாசித்தபடியே அமர்ந்திருந்தான் அவன்.

(நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ? எந்த பக்கம் ஓடினாலும் நானே..🎶 அந்த சாங்குதா வாசிக்குறானோ?🤣 சரி சந்திப்போம் அடுத்த பாகத்தில்.)

- நொடிகள் தொடரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-3
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.