வெண்ணிலவும் 🌕 வான் படுக்கையில்....ஓய்வெடுக்க.... மாறனின் மனமும் அமைதியாக துயில் கொள்ளட்டும்.....

அவன் தூக்கம் கலையா வண்ணம் அவ்விறவு அமையாகட்டும்.

அடுத்தநாள் காலை கதிரவன் சற்றும் தாமதிக்காமல் தன் கடமையை ஆற்ற துயிலெழுந்து வான் வீதியில் நடை போட துவங்கி விட்டான்.....🌥️..



கதிர் கைகள் தீண்டவே, மூடி கிடந்த🌷 மொட்டுக்கள் யாவும் மெல்ல🌻🌼 மலர தொடங்கியது

சுற்றி உள்ள பகுதிக்கு எல்லாம் சுகந்ததை காற்றோடு பரப்ப. வண்ண பறவைகளோ காதல் கதை பேசிக்கொள்ள அந்த காலை பொழுது அழகாக புலர துவங்கியது.


"அம்மாடி நங்க"... இன்னும் என்ன பண்ற
சீக்கிரம் வா என்று கத்திக்கொண்டே வந்தார் கோகிலா இந்த வீட்டின் ஹெட் குக்.....

"இதோ வந்துட்டேன்"...
தலையில் துண்டை கட்டியபடி பாவாடை தாவணியில் எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் நெற்றியில் கருப்பு வண்ண சிறிய ஸ்டிக்கர் பொட்டு அதற்கு மேலே சின்னதாக திருநீற்றையும் வைத்திருந்தாள்..... அது அவளின் ஈர முகத்திற்கு மேலும் அழகு சேர்த்தது 🧚🏻‍♀️


"சும்மா சொல்ல கூடாது நங்க நீ ரொம்ப அழகு தான்" டி என்றார் கோகிலா.


இதழோரம் சிறு புன்னகையை கொடுத்தால் பெண் அவள்...
அதை தாண்டி எதையும் எப்போதும் அதிகம் சந்தோசத்தையோ இல்லை தன் வலிகளையோ பகிர்ந்து கொள்ளாதவல்


ஆம்மாடி என்னமா நிக்கிற போ போய் கிச்சன் ல சமையலுக்கு ரெடி பண்ணனு

இன்னிக்கி வித்யா மேடத்தை பொண்ணு பாக்க வராங்க, காய்கறி எல்லாம் வந்துடுச்சு அதை கொஞ்சம் என்னன்னு பாருமா என்ற வாரே ஓடிவிட்டார் கோகிலா.

கோகிலாவிற்கு இது தான் வேலை சமையல் வேலைக்கு வந்தவர் என்றாலும் வீட்டையே நிர்வகிப்பார்.


ஒரு நாளும் அடக்கலையில் நின்றது இல்லை

இதோ இந்த நங்கையை தான் வேலை வாங்குவாள்.

நங்கை மட்டும் அல்ல அங்கிருக்கும் அனைத்து பணியாளர்களையும் சற்று ஆட்டி வைப்பவர் கொஞ்சம் சுயநலவாதியும் கூட...😯

இது அனைத்தும் அனைவருக்கும் தெரியும், ஆனாலும் எதிர்த்து ஏதும் சொல்ல முடியாது ஏனென்றால் கோகிலா முதலாளியம்மாளின் தோழியின் சிபாரிசு...
யாரும் பெரிதாக இவளை கண்டு கொள்வதில்லை.....

நங்கை அடக்கலை உள்ளே சென்ற வேகத்தில் காய்கறி எல்லாம் அறிந்து முடித்து சமைக்க துவங்கி விட்டாள், அனைவருக்கும் காபி போட்டு கொடுத்து காலை டிபன் பூரி கிழங்கு தயாரித்து டைனிங் டேபிள் வைத்து விட்டாள்....

பின் விருந்துக்கு சமைக்க தொடங்கினாள் நங்கை....
மாடியில் இருந்து அப்பொழுதுதான் தூங்கி எழுந்து வந்தால் வித்யா ,
நங்க காபி எங்க ஏன் ரூமுக்கு கொண்டு வரல... ஒரு காபிக்கு நாங்க உங்களை தேடி வரணுமோ என்று அதிகார தோரணையில் கூறினால் வித்யா.

இல்ல மேடம் நீங்க தூங்கிகிட்டு இருக்கீங்க எழுந்ததும் கொடுத்துக்கலாம் என்று கோகிலா அக்கா சொன்னாங்க என்றபடி காபியை அவள் புறம் நீட்ட ☕ அதை வாங்கி நங்கை கைகளில் ஊற்றி விட்டால். வித்யா....

டேமிட்....நான் முதலாளியா இல்ல அவ முதலாளியா தூங்கிட்டு இருந்தா திரும்ப வந்து பாக்க மாட்டியா

இனிமே இப்படி பண்ணுன கையில ஊத்தின காப்பிய மூஞ்சில ஊத்திடுவேன். பாத்துக்கோ

காபி போட்டு ரூமுக்கு எடுத்துட்டு வா என் தகுதிக்கு உங்களை தேடி வந்து காஃபி குடிக்கணுமா நான்,என்று சொல்லிவிட்டு வேகமாக மாடி ஏறினால் வித்யா.

காபியின் சூடு பால்வண்ண கைகளை சிவந்த ரோஜாவை போல மாற்றியது

தன் கைகளை தண்ணீர் குழாயை திறந்து விட்டு அதன் அடியில் காட்டினாள் சற்று இதமாக இருந்தது அவளுக்கு.....

ஆனபோதும் எரிச்சல் மாறவில்லை அங்கே""நங்க எல்லாம் ரெடி பண்ணிட்டியா .... அவங்க இன்னும் ரெண்டு மணி நேரத்துல வந்துடுவாங்களாம் என்றவர் அப்பொழுதுதான் கைகளை கவனித்தார் 🤌🏻

ஐயோ என்னம்மா நங்கை சுட்டுகிட்டியா பார்த்து செய்ய கூடாதா என்ன பொண்ணு நீ கவனமே இல்ல போ உனக்கு என்றபடி காயத்திற்கு போடும் மருந்தை அடைக்கலை செல்ஃபிலிருந்து எடுத்து கைகளுக்கு போட்டு விட்டாள் கோகிலா


என்ன நங்கை ரொம்ப வலிக்குதா என்ற போது வலிக்குது தான் அக்கா ஆனா எனக்கு பழகிடுச்சு என்று சொல்லும்போது நங்கையின் கண்களில் இருந்து கண்ணீர் அமைதியாக அவள் கன்னங்களைக் நனைத்து கொண்டுதான் இருந்தது.l.

அக்கா போதும் நான் வித்யா மேடத்துக்கு காபி கொடுக்கணும் என்றபடி எழப்போனவளை தடுத்தால் கோகிலா...

நில்லு நான் போய் கொடுக்கிறேன் என்றார், வேணாம் அக்கா அதுக்கு ம் மேடம் கோபப்படுவாங்க நானே போறேன் என்று மீண்டும் காபியை போட்டு எடுத்துச் சென்றாரல் நங்கை....


கதவை தட்டியவள் மேடம் என்றதும் உள்ளே வா என்றால் வித்யா

உள்ளே சென்றதும் நங்கை சங்கோட்சபட்டு.... திரும்பிக்கொண்டால் ஏன் என்றால் வித்யா குளித்து முடித்துவிட்டு உள்ளாடையுடன் நின்று கொண்டிருந்தாள்

மேடம் காபி என்றதும்... காஃபியை கையில் வாங்கிக் கால் மேல் கால் போட்டுக்கொண்டு கட்டில் அமர்ந்தால் வித்யா 😈

வித்யாவை பார்க்கையில் நங்கைக்கு அருவருப்பாக இருந்தது.


காபியை கொடுத்துவிட்டு செல்ல முயல இத பாருடி இன்னைக்கு என்ன பொண்ணு பாக்க வரது உனக்கு தெரியும் இல்ல...

ஆம்பளைங்க முன்னாடி வந்து நின்னு அழகைக் காட்டி மயக்கலாம்னு நினைக்காத

நீயும் உன் மூஞ்சியும் உன்ன பார்த்தாலே பத்தி கிட்டு வருது டி .அதுளையும் என்ன விட இந்த அழகான மூஞ்ச பார்த்தாலே

அவள் முகத்துக்கு அருகே கைகளை அடிப்பதை போல் உயர்த்தி ஆசிட் ஊத்திருவேன்

அவங்க கண்ணுல பட்டுத் தொலைக்காத அவங்க போற வரைக்கும் இந்த பக்கம் எட்டி கூட பாக்கக் கூடாது.

உன்னை கொன்னு புதைச்சிடுவேன் போய் தொல என்றவள் காபியை குடிக்க தொடங்கினாள்...

நங்கைக்கு இந்த பேச்சும் ஏச்சும் புதிதல்ல சிறு குழந்தை முதலை இப்படித்தான் பல அவமானங்களையும் வலிகளையும் அனுபவித்து உள்ளாள்.

அதனால் நங்கையை இவளின் வஞ்சச் சொற்கள் பாதிக்கவில்லை.....

நங்கை மீண்டும் சாதாரணமாக அடக்கலைக்கு வந்து தன் வேலையை துவங்கினாள்....


சாதம் சாம்பார் ரசம் மோர் வத்தல் குழம்பு அவியல் இரண்டு வகையான பொறியல் அப்பளம் வடை இனிப்புக்காக பச்சை பயறு பாயசம் செய்து வைத்துவிட்டாள்.

வீட்டு வேலையையும் பார்த்துக் கொண்டு கோகிலாவின் சமையல் வேலையும் தானே பார்த்துக் கொள்வாள் நங்கை

ஏனென்றால் அவளுக்கு சமைப்பது பிடிக்கும் சமையலும் மிக நன்றாக சமைப்பாள் சமையலில் கெட்டிக்காரி தான்.....நம் நங்கை

மாறனின் தந்தை அசோக் அவசர அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தார் சரண்யாவிடம் , மாறன் எங்கே என்று கேட்க, தம்பி மேல தான் இருக்காரு ஐயா என்றதும் மேலே சென்றார்.

மாறா மாறா என்று அழைத்துக் கொண்டு கதவை தட்ட
வாங்க ப்பா உள்ள என்றான் மாறன்....
என்ன மாறா கிளம்பிட்டியா என்று உள்ளே நுழைய மாறன் ஃபுல் ஹேண்ட் கோட் சூட் பிளாக் கலர் அணிந்து தயாராகி இருந்தான் அது அவனுக்கு மிக பொருத்தமாக அமைந்தது..... யார் மாறனை பார்த்தாலும் மயங்கி விடும் அளவிற்கு அவன் தோற்றம் 🥰



அதை கண்ட அசோக் மாறா
எங்க என்மேல இருக்க கோபத்துல வரமாட்டேன்னு சொல்லுவேன்னு நினைச்சு ரொம்ப பயந்துட்டு இருந்தேன்,ஆனா நீ கிளம்பி இருக்க மாறா எனக்கு ரொம்ப சந்தோசம் என்றார் அசோக்...

மாறனுக்கு கோபம் கண்ணை மறைக்க இதோ பாருங்க நான் உங்களுக்காகவோ இல்ல உங்க சந்தோஷத்துக்காகவோ இப்ப நான் உங்க கூட வரல

என் அம்மா போறதுக்கு முன்னாடி சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் என்றான் தமிழ் மாறன்....🤰🏻

எப்படியோ ப்பா எனக்கு அந்த பிசினஸ் காண்ட்ராக்ட் கிடைத்தால் போதும் இந்த கல்யாணம் மட்டும் நல்ல படியா நடந்துடுச்சு அப்பறம் அந்த பல கோடி ரூபாய் காண்ட்ராக்ட் கிடைக்கும்

அதுக்காகத்தான்னே இந்த ஏற்பாடு என்றார் அசோக்.....📜

அதுதானே பார்த்தேன்.அப்போ இப்ப கூட இங்க ஏன் அப்பாவா வரல

பிசினஸ் மேன் பெரிய constriction கம்பனியொட ஓனர்

த ஒன் அண்ட் ஒன்லி தீ கிரேட்

அசோ
க் அவர்கலா தான் வந்து இருக்கீங்க ச்ச... உன்ன போய் எங்க அம்மா எப்படி தான் காதலிச்சாங்களோ...... என்று சலித்துக் கொண்டான் மாறன்....🎟️
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -3
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.