Chapter-3

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அத்தியாயம் 3: கோச்சுக்காதீங்க மச்சான்



இசை பிரியனின் கண்களுக்கு பேரழகியாக, கடவுள் தனக்காக அனுப்பி வைத்த தேவதையாகவே தெரிந்தாள் பிரியா. இனி ஒரு நிமிடம் தான் தாமதித்தாலும், அவள் தன்னை விட்டு போய் விடுவாள் என்று இசை நினைத்தான் போல...

அதனால், சிறிதும் யோசிக்காமல்,

“ஹாய் பிரியா...!! ஐ அம் இசை பிரியன். வில் யூ மேரி மீ..??" என்றான்.

இதை கேட்ட பிரியா, வாயடைத்து போய் விட்டாள்.



இதை கேட்டு கடுப்பான ராகுல், “ஹலோ...!! என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல...??? என் முன்னாடியே என் அக்கா கிட்ட இப்டி எல்லாம் பேச உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும்..?? ஒழுங்கா என் அக்கா கிட்ட சாரி கேளுங்க. இல்லைன்னா என் கோபத்தை நீங்க பாரக்க வேண்டியது இருக்கும். நீங்க உங்க என்டர்டைன்மென்ட்க்கு ஃப்லிர்ட் பண்ண என் அக்கா தான் கிடைச்சாளா..??? " என்று பொரிந்து தள்ளினான் ராகுல்.



இசை பிரியன், தன் ஆழ் மனதில் இருந்து உண்மையாக தான் பிரியாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டான். ஆகையால் அவன் ராகுல் பேசியதற்கு எந்த கோபமும் படாமல், அவனை பார்த்து புன்னகைத்து கொண்டே, “கோச்சுக்காதீங்க மச்சான்." என்றான்.



இசை பிரியன் தன்னை “மச்சான்" என்று அழைத்தவுடன், ராகுலுக்கு கோபம் தலைக்கேறி விட்டது.

“இவ்ளோ நேரம் உன் கிட்ட டீசண்டா பேசிட்டு இருந்தன்ல அதான் டா நான் செஞ்ச தப்பு; நீ பேசுற இந்த வாய் மேலயே நாலு குத்து.. குத்துனா தான்.. நீ உன் வாய முடிவ." என்று சொல்லி கொண்டே இசையை அடிக்க சீறிப் பாய்ந்த ராகுலை தன் இரு கைகளால் பிடித்து இழுத்து தடுத்தாள் பிரியா.



ஒரு தம்பியாக அவன் தன் அக்காவின் மீது வைத்து இருக்கும் பாசம் அவனுக்கு புரிந்ததால், இசை பிரியன் அமைதியாகவே நிற்க; ராகுலை பார்த்த ஜீவா, “தம்பி...!! பெரியவங்க எல்லாம் பேசிட்டு இருக்குரோம்ல... கொஞ்ச நேரம் துள்ளாம அமைதியா இரு." என்று கண்டிப்பான குரலில் சொன்னான்.

இசை ராகுலை புரிந்து கொண்டே அவன் பேசியதற்கு ரியாக்ட் செய்யாமல் அமைதியாக இருந்தாலும், ஜீவாவால் தன் உயிர் நண்பனை ஒரு பொடி பையன் எல்லாம் இப்படி மிரட்டி கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை.



அப்போதும் அமைதி அடைந்திராத ராகுல் ஏதோ பேச வர... பிரியா, “ராகுல்..!!" என்று ஒரே வார்த்தை தனது பெயரை அவள் அழுத்தி சொன்னவுடன், அமைதியாகி விட்டான் அவன்.

பின் நான் பார்த்துகிறேன் நீ அமைதியா இரு என்பது போல ராகுலை ஒரு பார்வை பார்த்துவிட்டு; இசையை பார்த்து திருப்பிய பிரியா, “ஹலோ மிஸ்டர்..!!!! நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது. நீங்க யாருன்னு எனக்கும் தெரியாது.

அப்புறம் ஏன் என் கிட்ட இப்டி அன்வான்டெட் ஆ பேசிட்டு இருக்கீங்க..?? என்ன உங்க ரெஸ்டாரன்ட்க்கு வரவங்கள இப்படி தான் வெல்கம் பண்ணுவிங்களா?

இல்லை இங்க வர்ற எல்லாரையும் வச்சு பிரான்க் ஷோ பண்ணிட்டு இருக்கீங்களா...??" என்று கம்பீரமாக கேட்ட பிரியா அதோடு நிறுத்தாமல், “அதுக்கு எல்லாம் நான் ஆள் இல்ல. புரிஞ்சுதா..??" என்று இசையின் கண்களை நேராக பார்த்துச் திமிராக கேட்டாள்.



இசை பிரியனோ, எந்த சலனமும் இல்லாமல் பிரியாவின் கண்களுடன் தன் கண்களை கலக்க விட்டவன்; “நான் ஒன்னும் ஜோக் பண்ணல. அண்ட் இது ப்ரன்க் ஷோவும் இல்ல.

நான் அத சீரியஸா தான் என் மனசுல இருந்து கேட்டேன்." என்று சொன்னவனின் கண்களில் உண்மை பிரகாசமாக மின்னிக் கொண்டு இருந்தது. பின் இடையில் யாரையும் பேச விடாமல் அவனே தொடர்ந்து பேசினான் இசை.



“எனக்கு புரியுது பிரியா. நான் திடீர்னு அப்டி கேட்டதுனால உங்களுக்கு குழப்பமா இருக்கும்.

நான் ஏன் இப்படி பேசுறேன்னு... நானே எல்லாத்தையும் எக்ஸ்பிளைன் பண்றேன்." என்று சொல்லிக்கொண்டே, தனது மொபைல் ஃபோனில் இருந்த யாழினியின் புகைப்படங்களை எடுத்து அவளிடம் காண்பித்தான்.

அந்த மொபைல் ஃபோனை இசையிடம் இருந்து வேகமாக பிடுங்கிய ராகுல், அதை பார்த்து ஷாக் ஆகி, “பிரியா.. இந்த போட்டோல இருக்க பொண்ணு ஏன் உன்ன மாதிரியே இருக்கா..??" என்று ஆச்சரியமான குரலில் கேட்டான்.

பிரியாவும் அவனைப் போல் ஆச்சரியம் நிறைந்த கண்களோடு, அந்த புகைப்படங்களை குழப்பமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.



இசை காட்டிய யாழினியின் புகைப்படத்தை பார்த்து முதலில் அது ஏதாவது எடிட்டட் ஃபோட்டோவாக இருக்கும் என்று நினைத்து சாதாரணமாக அந்த மொபைலை வாங்கி பார்த்த பிரியா; அந்த போட்டோவில் இருந்த பெண்ணை உற்று பார்த்தாள்.




ஆம் அதில் இருந்த முகம் அவளது முகத்தை போலவே தான் இருந்தது. ஆனால், அது அவள் இல்லை என்று அவளுக்கு நன்றாக தெரிந்தது.

அதில் இருந்த ஒவ்வொரு போட்டோவையும் தெளிவாக பார்த்தாள் பிரியா. அதில் இருந்த ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு காலகட்டத்தில், வேறு வேறு இடத்தில் எடுக்க பட்டதாக இருந்தது.



பிரியா, இசை பிரியன் மாற்றும் யாழினியின் புகைப்படங்களை பார்த்து கொண்டு இருந்த போது பேச தொடங்கினான் ஜீவா.



“இந்த போட்டோவ நல்லா பாருங்க பிரியா. இந்த போட்டோல இசை கூட இருக்கிறது யாழினி.

நாங்க காலேஜ் படிக்கிறப்ப யாழினியும், இசையும், லவ் பண்ணாங்க. ஆனா அந்த பொண்ணு ஒரு நாள் ஆக்சிடெண்டில இறந்துட்டா.

அப்போல இருந்தே இவன் ரொம்ப டிப்ரஷன்ல இருந்தான்.



யாழினி இறந்து இப்ப ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. ஆனாலும் இவன் அந்த டிப்ரஷன்ல இருந்து வெளிய வரல.

அவன் இன்னமும் யாழினிய மிஸ் பண்ணிட்டு தான் இருக்கான். அதான் யாழினி மாதிரியே இருக்க உங்கள பார்த்ததும், அவன் உங்கள கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டிருக்கான்.

ப்ளீஸ் பிரியா, இசைய தப்பா நினைக்காதீங்க." என்றான் ஜீவா.

ஜீவா பேசியதை பிரியாவால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும், அவள் எதையும் அப்படியே நம்பி விடவில்லை.



இசை பிரியனின் முகத்தை பார்த்த படி, “இவன பாத்தா பொய் சொல்ற ஆள் மாதிரியும் தெரியலை, கெட்டவன் மாதிரியும் தெரியல, ஆனாலும் தெரியாத ஊர்ல தெரியாதவர்களை நம்பவும் கூடாது.

நல்லவங்கல கெட்டவங்கன்னு நினைச்சு இக்னோர் பண்ணி கஷ்ட படுதிரவும் கூடாது." என்று தனக்குள்ளேயே பேசி கொண்டு இருந்த பிரியா ஜீவாவை பார்த்து, “நீங்க சொல்றது எல்லாம் உண்மையாவே இருக்கட்டும்.

அதுக்கு நான் என்ன பண்ண முடியும்...?? இவர் கேட்டா நான் உடனே இவர கல்யாணம் பண்ணிக்வா முடியும்..???” என்று கேட்டாள்.

“அவன் கேட்டது நான்சென்ஸ் ஆ தான் இருக்கு. எனக்கு புரியுது. ஆனா நீங்க அட்லீஸ்ட் அவனுக்கு ஒரு ‌ஃப்பிரென்ட் ஆ வாச்சும் இருக்கலாம்ல...??" என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டான் ஜீவா.



ஒரு நிமிடம் யோசித்து பார்க்கும்போது, இந்த தெரியாத ஊரில் யாரும் இன்றி தனியாக இருப்பதர்க்கு ஒரு ஃப்பிரண்ட் இருந்தால், நன்றாக தான் இருக்கும் என்று நினைத்த பிரியா; ஜீவாவின் ஃப்ணபிரண்ட் ரெக்வஸ்ட் ஐ அக்சப்ட் செய்தாள்.

பின் அப்போதும் “ஓகே... பட் நான் உங்க கூட ஃப்பிரண்டா இருக்கிறதா சொல்லிட்டேன்னு எங்க கிட்ட உடனே நீங்க அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது.. புரிஞ்சுதா..??" என்று அவர்களை மிரட்டும் தோரணையில் கேட்டாள் பிரியா. அதற்கு ஜீவாவும், இசையும், கோரசாக “சரிங்க மேடம்" என்றனர்.



“நாங்க இங்க பசிக்குதுன்னு சாப்பிட தான் வந்தோம்.

எங்களுக்கு சாப்பாடு குடுக்குர ஐடியா இருக்கா இல்லையா உங்களுக்கு..??" என்று இசையை பார்த்து கேட்டான் ராகுல்.

அதை கேட்டவுடன், “சாரி மச்சான்...!! உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. நானே செஞ்சி தரேன்." என்று சிரித்துக் கொண்டே சொன்னான் இசை.

தன்னை மீண்டும் இசை, “மச்சான்” என்று அழைத்ததற்காக அவனை பார்த்த முறைத்த ராகுல், அவனுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

இவர்களை பார்த்து கொண்டு இருந்த பிரியா, “புதுசா எங்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம்; என்ன இருக்கோ கொண்டு வாங்க போதும்." என்றாள்.

அதனால் ஏற்கனவே தயாராக இருந்த உணவுகளை இசையும், ஜீவாவும் கொண்டு வந்து அவர்களுக்கு பரிமாற.. பிரியாவும், ராகுலும் அந்த உணவுகளை சாப்பிட்டனர்.



சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, இசையை பார்த்த பிரியா, “இங்க பக்கத்துல ஏதாச்சும் மொபைல் ஷோரூம் இருக்கா..?? நான் நியூவா மொபைல் ஃபோன் ஒன்னு வாங்கணும்." என்றாள் பிரியா.

“ஏன்.. உங்க கிட்ட ஃபோன் இல்லையா..??" என்று சந்தேகமாக ஜீவா கேட்டான்.

“கரூர் எங்களுக்கு சொந்த ஊர் இல்ல. எங்க அம்மாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. சோ அவங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ண தான் அவங்களை கூட்டிக்கிட்டு நானும், என் தம்பியும், இங்க வந்தோம்.

நேத்து நைட் பஸ்ல வர்றப்ப என் ஃபோன் மிஸ் ஆயிடுச்சு. சோ நியூ மொபைல் வாங்கணும்.

அண்ட் எங்க அம்மாவுக்கு சரியாக அட்லீஸ்ட் ஒரு ஆறு மாசம் ஆச்சு ட்ரீட்மென்ட் போகும்ன்னு நினைக்கிறேன்.

அது வரைக்கும் நாங்க இங்க தங்குறதுக்கு வீடு பாக்கணும்." என்றாள் பிரியா.



அதுவரை பொறுமையாக கேட்டு கொண்டு இருந்த இசை; “இப்போ உங்க அம்மா எப்டி இருக்காங்க...?? எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கீங்க..??” என்று அக்கறையுடன் கேட்டான்.

“நாங்க இன்னைக்கு தான் அவங்கள அட்மிட் பண்ணோம்.

அவங்களுக்கு பெராலிசிஸ் இருக்கு. சோ, சரியாக கொஞ்சம் லேட் ஆகும். இங்க பக்கத்துல இருக்க டாக்டர் சுவாமிநாதன் சித்த வைத்திய சாலையில தான் அட்மிட் பண்ணி இருக்கோம்." என்றாள் பிரியா.

இதையெல்லாம் தேவை இல்லாமல் எதர்க்கு இவனிடம் போய் சொல்லிக் கொண்டு இருக்கிறாள் இவள்..?? என்று நினைத்த ராகுல் கேள்வியாக பிரியாவை பார்த்தான்.‌ ஆனால் அவளோ இவனை எல்லாம் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை.



இசைக்கு, “ஏன் உங்க அப்பா உங்க கூட வரலையா...?? உங்க அம்மாவுக்கு எதுனால பெராலிசிஸ் வந்துச்சு..??” என்றெல்லாம் அவளிடம் கேட்க தான் தோன்றியது.

ஆனால் அப்படி கேட்டால், அவள் எங்கே கோபப்படுவாளோ என்று நினைத்து அவன் கேட்கவில்லை.

“ஓகே பிரியா.. புரியுது. அம்மா சீக்கிரம் சரி ஆயிடுவாங்க. கவலை படாதீங்க.

நீங்க எல்லாத்தையும் ஏன் தனியா செஞ்சி கஷ்டப்படணும்..?? எல்லாத்தையும் நான்.. இல்லை" என்று நிறுத்தியவன், ஜீவாவின் தோள்களில் கையை போட்டுவிட்டு , “நாங்க பாத்துக்குறோம்” என்றான் இசை.

அவன் சொன்னதை கேட்ட ஜீவா பதிலுக்கு, “ஆமா மா. நாங்க இருக்கோம். எல்லாத்தையும் நாங்க பாத்துகிறோம். இனிமே நீ என் தங்கச்சி மாதிரி.. மாதிரி என்ன நீ என் தங்கச்சியே தான். அண்ட் அவங்க இனி உன் அம்மா இல்ல; நம்ம அம்மா. ஓகே வா...??" என்று மனதார கேட்டான் ஜீவா.



“ஓகே அண்ணா..!!" என்ற பிரியா, ஜீவாவை பார்த்து ‌மெலிதாக புன்னகைத்தாள்.

பின் “இப்ப புரியுதா..!! இத எல்லாம் நான் எதுக்கு அவங்க கிட்ட சொன்னேன்னு..??" என்று கேட்பதை போல ராகுலை பார்த்தாள் பிரியா.

இப்ப புரியுது என்பதை போல தலையை மெதுவாக ஆட்டினான் ராகுல்.

சிறிது நேரத்திற்கு முன்பு அடுத்து நாம் என்ன செய்ய போகிறோம்..?? என்று தெரியாமல் இருந்த பிரியாவிற்கு, இப்போது ஏதோ புரிவது போல் இருந்தது.

இனி எல்லாமே சரியாகிவிடும் என்று அவளுக்குள் ஒரு நம்பிக்கை மலர்ந்தது. ஒருவேளை அவள் இசையின் உதவியை நிராகரித்தாலும்..



அவள் இனி இங்கு தங்குவதற்கும், ஒரு நிலைக்கு வந்து செட்டில் ஆவதற்கும், யாரையாவது அவள் நம்பி தான் ஆக வேண்டும். அந்த யாரோ ஏன் இந்த இசையாக இருக்க கூடாது? என்று நினைத்தாள் பிரியா அவ்வளவு தான்.

அதை தவிர பெரிதாக அவள் மனதில் வேறு எதுவும் தோன்றவில்லை. அப்படியே தங்களுக்குள் பேசியபடி அவர்கள் நால்வரும் சாப்பிட்டு முடித்தார்கள்.

தொடரும்..

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-3
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.