பாகம் -28

இரவு முழுவதும் மாறனுக்கு உறக்கமே வரவில்லை.
நடந்த சம்பவம் குறித்தே ஆலோசித்து கொண்டிருந்தான்.

நங்கையின் முகம் நோக்கி புரண்டு படுத்த மாறன். கொஞ்ச நேரத்துல என்ன பயமுறுத்திட டி. உசுறே போய்ட்டு திரும்ப வந்த மாதிரி இருக்கு உன்ன இனி பத்திரமா பாத்துப்பேன்.

அவளுக்கு இதெல்லாம் எங்கே கேக்க போகிறது. அவள் தான் எப்போதோ உறங்கி விட்டாளே.

அவ்வாறாக அந்த இரவும் ஒவ்வொருவற்கும் ஒவ்வொரு மறக்க முடியா தருணத்தை ஏற்படுத்த மெல்ல விடியலை நோக்கி நகர்ந்தது அவ்விரவு.


குட் மார்னிங் மாறா.

குட் மார்னிங் ஷ்யாம் மாமா.

நங்கைக்கு இப்போ எப்படி இருக்கு.

பரவா இல்லை மாமா,தூங்கரா டிஸ்டர்ப் பண்ண வேண்டானு எழுப்பல.

பிளட் ரொம்ப லாஸ் ஆய்ருக்கு சோ கொஞ்சம் டயார்ட் டா தான் இருக்கும். ரெஸ்ட் எடுக்கட்டும் மாறா.


ஓகே மாறா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. பிஸ்னஸ் விஷயமா ஒரு கிளைன்ட்ட மீட் பண்ணனும். அதுக்காக தான் இந்தியா வந்தேன் அப்படியே உன்னையும் பார்த்த மாதிரி இருக்கும்ல.

அம்மா தான் உன்ன நினச்சி ரொம்ப கவளப்பட்டாங்க.

பாட்டியயும் கூட்டிட்டு வந்து இருகலம்ல மாமா.

எங்க மாறா அவங்களால முன்ன மாதிரி எங்கேயும் வர முடியல .தனியா விட்டுட்டு வரவே பயம் தான். பட் என்ன பண்றது என் வேலை அப்படி.
அதுக்கு தான் ஒரு பெர்சனல் அசிஸ்டன்ட் அப்பாயிட்மென் பண்ணி இருக்கேன்.

என்ன ஷ்யாம் மாமா நீங்க.?

இதுக்குத்தான் அப்போதிலிருந்தே ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க நானும் பாட்டியும் சொன்னோம் நீங்க கேட்கவே இல்ல இப்ப பாத்தீங்களா.?

விடு மாறா! அத பத்தி பேசி இப்போ என்ன ஆகப்போகுது.

ம்... ஓகே மாறா நங்கைய பார்த்துக்கோ நான் கிளம்பறேன்.

சரி என்று கூறும் முன்னே சத்யா அங்கே வந்தாள்.

ஹாய் மாமாஸ்!

என்ன மேடம் மார்னிங்கே வந்து இருக்கீங்க என்ன விஷயம்.
நைட்டு எல்லாம் தூக்கமே வரல மாமா அதான் விடிஜதும் ஓடி வந்துட்டேன்.என்று கூறிய சத்யாவுக்கு பார்வை முழுவதும் ஷ்யாம் மேலே தான் இருந்தது.

அக்கா மேல அவ்வளவு பாசம்.

ஹா ஆமாம் மாமா.

அப்டியா? குட்டி சாத்தான்

ஐயோ மாமா இப்போ எல்லாம் சாத்தான் வேலை எல்லாம் செய்றது இல்ல என்று குளைந்தவள்

எப்போதிலிருந்து மா இந்த மாற்றம் என்றான் மாறன்.

நேத்துல இருந்து தான் மாமா!

ஓஹோ கத அப்படி போகுதா,என்று நிலையை புரிந்து கொண்ட மாறன். சரி நீ வந்த வேலைய கவனி நான் நங்கை எழுந்துடாலானு பாத்துட்டு வந்தறேன்.

சரிங்க மாமா.

மாறன் தன்னறைக்கு, மேலே சென்றிட ஓய் மாமா ஓகே சொல்லு என்று அஷ்க்கி வாய்ஸ் இல் கேட்க.

உனக்கு எத்தன வாட்டி சொல்றது புரிஞ்சுக்கவே மாட்டியா?
என்று அதே போலே யார் காதிலும் கேட்காத வண்ணம் கூறினான் ஷ்யாம்.

யார் புரிஞ்சுக்க மாட்றா நீங்களா இல்ல நானா?

இதுக்கு மேல பேசி பயன் இல்லை. என்று எழுந்து சென்று விட்டான் ஷ்யாம்.

நில்லுங்க ஷ்யாம் பிளீஸ் என்றபடி பின்னே ஓடினாள் ஆனால் அவனோ எதற்கும் பிடி கொடுக்காமல் சென்று விட முகம் வாடி போய்விட்டது சத்யாவிற்க்கு.

சரண்யா காஃபி எடுத்துக்கொண்டு வந்தவர்.சத்யா நீ எப்போ வந்த ஷ்யாம் தம்பி எங்க

அவர் கிலம்பிட்டாரு ஆன்டி!

காஃபி கூட குடிக்காம போயிட்டாரு சரி மா இந்தா நீ குடி என்றிட அதை வாங்கி பருகினாள் சத்யா.

ஐயோ என்ன இவளோ நேரம் தூங்கிட்டேன்.என்று பதறி எழுந்தவளை ரிலெக்ஸ் நங்க என்றபடி அவள் எதிரேயே அமர்ந்திருந்தான் மாறன்.

சாரிங்க கொஞ்சம் அசதியா இருந்ததால நல்லா தூங்கிட்டேன்.

ம்ம் ஓகே இந்த ஒரு வாட்டி மன்னிட்சி விடறேன் நெக்ஸ்ட் டைம்,

நங்கை முந்தி கொண்டவள் கண்டிப்பா சீக்கிரம் எழுந்திடுவேன்.
என்ற நங்கையை கண்டு சிரித்தான் மாறன்.

அவள் அப்பாவி தனத்தை கண்டு ரசிக்காமல் யாரால் இருக்க முடியும் .
அப்படியொரு மங்கையை.

குழந்தை தனமும் குமரி குணமும் கொண்டவள். ரசிக்க மாறனுக்கு இந்த ஆயுள் போதாது.

போ போய் குளிச்சிட்டு வா டிஃபன் சப்டலாம்.

மேலே எடுத்துட்டு வரவா இல்லே டைனிங் ஹால்க்கு வரியா. நான் வரேன்க. ம்ம் ஓகே

நீங்கா ஆஃபீஸ் போகலையா ?

இல்லே நங்கை!

உன்ன பாத்துக்கணும் ல சோ அதுக்காக தான்.எல்லாம் அப்பா பாத்துப்பாரு நானும் இதோ லப் டப் இருக்கு சோ அதுலயே மெயின்டெய்ன் பண்ணிப்பேன்.

பரவா இல்லையே என் பொண்டாட்டிக்கு என் பிஸ்னஸ் மேல கூட அக்கர இருக்கே.என்று சிரித்துகொள்ள

அதெல்லாம் ஒன்னும் இல்லே ஏதாவது பிரட்சனனா அதுக்கும் என்ன தானே சொல்வீங்க.

என்னட்டி ... என்று பாவம்மாக கேட்க.

வாயில் கை வைத்து சிரித்தாள் நங்கை.

போடி.... என்று செல்லமாகா கூறியவனை கண் இமைக்காமல் ரசித்தாள்.

எவ்ளோ இனிமையானவர் . என் வாழ்க்கையில இப்படி யாரும் என்ன அக்கறையா பக்கத்தில இருந்து பாத்துகிட்டதே இல்லே.என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

நங்க! நங்க! என்ன அப்படி பாக்குற.என்று கையை அவள் முகத்தை நோக்கி அசைக்க.

ஹம்... ம் என்றவள் ஒன்னும் இல்லை.

சரி சரி போய் குளி.தலைக்கு குளிட்சிடாத மேல் மட்டும் வாஷ் பண்ணிக்கோ.

ம் ம்....

நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுமா என்று மயக்கம் கொண்டு கெட்டவனை.

அவன் கையில் இருந்த டவலை பிடுங்கி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க போங்க. என்ற நங்கையை
என் நல்ல மனச புறிஜிக்க மாட்றியே.

எனக்கு உங்க நல்ல மனசு என்னானு தெரியும் நீங்க போகலாம்.
என்றிட தலையை குனிந்து சிரித்தான்.

போங்க போங்க!!

போறேன் .....போறேன் ....

ரொம்ப பண்ணாத ட் டி என்னைக்கு இருந்தாலும் நான் தான் உன்ன என்ற மாறனின் வாயை அழுத்தி கொண்டு பேச விடாமல் தடுத்தாள் நங்கை.

நீங்க என்ன சொல்லப் போறிங்க எனக்கு தெரியும்.
ஏதும் பேச வேண்டாம். என்றவளை இடையோடு வளைத்து பிடிக்க சிணுங்கி கொண்டே

ஐயோ விடுங்க பிளீஸ்.

ஷ்..... சத்தம் போடாதே அப்பா சத்யா சரண்யா மா எல்லாம் கீழ தான் இருக்காங்க அவங்ளுக்கு எல்லாம் கேட்ருட்சினா அவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க என்றதும் அமைதியாகி விட்டாள் நங்கை.

உனக்கு இப்போ என்ன ஏதும் நான் சொல்லக் கூடாது அவளோ தானே.

சரி நான் ஒன்னும் சொல்லல !

தியரி வேண்டாம் பிராக்டிகலா....லாவே
(என்று வார்த்தையை இழுத்து)
ஓகே வா என்றான் அவளை வளைத்து பிடித்து.

அது?

எது?

அது ! அது !? நான் அப்படி சொல்ல வரல....
பயத்தோடு கூறியவளை பார்த்து,
புன்னகைத்தான் மாறன்.

சிக்கிரம் குளிச்சிட்டு வாடி என் பொண்டாட்டி.

என்ற மாறன் புன்னகைத்துக் கொண்டே வர சரண்யா மற்றும் சத்யாவும் தனக்குள்ளே ஒருவருக்கு ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

என்ன மாறா நங்கை எழுந்துடாளா
ம்ம்...எழுந்துட்டா சரண்யா மா குளிச்சிட்டு இருக்கா.

ம்ம்... எப்போ ஹாஸ்பிடல் போறிங்க ?

வேண்டாம் சத்யா கொஞ்ச நாள் நங்கையை எங்கேயும் கூட்டிட்டு போக வேண்டாம்.அதுனால தான் நம்ம ஃபேமிலி டாக்டர் கிருஷ்ணாவை வர சொல்லி இருக்கேன்.

11 o clock வந்துடுவாங்க.

ஓகே மாமா.

வித்யா மேலும் மேலும் அதிகமாக மது அருந்த துவங்க அதை கண்டுக்கொள்ள தான்.அங்கு யாரும் இல்லை.

தன்னை தானே அழித்துக் கொண்டு இருக்கின்றாள் என்பது அவளுக்கு தெரிந்தும் தான் இதை செய்கிறாள்.

வித்யா பாரில் ஃபுல் போதையில் அமர்ந்து இருக்க

வித்யா?
வா பிரதாப்
ஏன் இப்படி? என்றபடி விலப்போனவளை பிடித்தான் பிரதாப்.

என்ன பிரதாப் நல்லவன் போல பேசற.
நீ தானே டா என்கேஜ்மென்ட் அன்னைக்கு மாறன் கிட்ட என்ன பத்தின உண்மைய சொன்னது. இப்போ ஏதோ ஒன்னும் தெரியாதது போல வந்து பேசுற.

ஐயோ வித்யா சத்தியமா நான் உன்ன பத்தின எந்த உண்மையையும் சொல்லல. அன்னைக்கு ஏதோ கோபத்துல உன்ன மிரட்டினேன் ஆனா நான் அப்படி பண்ணல என்னை நம்பு.

நடிக்காத பிரதாப்.

நான் ஏன் நடிகனும் வித்யா நான் சொல்றது நிஜம்.

என்ன சொல்றா பிரதாப்.

ஆமாம் இன்பேக்டு உன் கிட்ட பேசிட்டு போனதுக்கு அப்புறமா நான் எங்க சொந்த
ஊருக்கு போயிட்டேன்.

இன்னைக்கு தான் வந்தேன் உடனே உன்னை பார்க்க வந்துட்டேன்

தொடரும் ....
Shahiabi.writter
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -28
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.