பாகம் -27

இதோ பாரு அன்பரசு நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லே. இந்த கல்யாணம் நின்னு போனது உனக்கு பெரிய அவமானம் தான் நான் ஒத்துகறேன், ஆனா நீ இப்படி பண்றது உனக்கு சரின்னு படுதா.

நிச்சயம் கூட நடக்காத கல்யாணத்துக்கு நீ ஏன் இவளோ வருத்தபடற.அது மட்டும் இல்லே உன் பொண்ணோட சுயரூபம் எனக்கு தெரிஞ்சிருச்சு. என்கிட்ட மறைச்சு தான் இந்த காண்ட்ராக்டையே நீங்க போட்டு இருக்கீங்க.

சோ இதுக்கு மேல என் வழிலையோ என் பையன் மாறன் வழியலையோ குறுக்க வராத. அப்படி வந்தேனா எனக்கும் ஆள் பலம் இருக்கு உனக்கு புரியும் நினைக்கிறேன்.

என்று அழைப்பை துண்டித்தார் அஷோக்.

என்ன தான் அஷோக் கிற்கு பணம் முக்கியம் என்றாலும் தன் ஒற்றை மகனான மாறன் மீதும் அன்பு இருக்கிறது. அதை ஒருபொழுதும் மாறனிடம் காட்டிக்கொண்டதே இல்லை.

இன்று மாறனையும் நங்கையையும் கண்ட அஷோக் புரிந்து கொண்டார் இது நிச்சயம் அந்த அன்பரசன் வேலை தான் என்று.

என்ன மேடம் பேசாம வரீங்க?

அவன் புறம் திரும்பியவள்.....

முறைத்தாள்....

ஏன் என்ன முறைச்சிகிட்டே இருக்க நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் இப்படியே தான் பண்ற.நான் உனக்கு அப்படி என்ன பண்ணேன்.உனக்கு என்ன பிரச்சனை.

எனக்கு என்ன பிரச்சனை அன்ங்கிள் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

அன்ங்கிள்னு சொல்லாதடி.

இப்ப சொன்னா என்ன தப்பு நீங்க அன்ங்கிள் தானே.

அங்கிள் தான் ஆனா உனக்கு இல்ல மாறனுக்கு.

மாறன் மாமா எனக்கு அண்ணே மாதிரி அப்போ நீங்க எனக்கு யாரு.
அன்ங்கிள் தானே?

நான் மாமானு கூப்டறேன்

சரி உங்களுக்கு எத்தனை பசங்க.

என்ன பசங்களா ஐ யம் நாட் மேரிட்.

ஐ யம் முரட்டு சிங்கிள்.
😳
அடப்பாவி ஏழு கழுதை வயசாச்சு இன்னும் பேச்சுலரா நீ.

சுத்தம் ..... 🙆🏼‍♀️
அதானே உனக்கெல்லாம் யாரு பொண்ணு கொடுப்பா.

எனக்கு பொண்ணு கொடுக்க எல்லாரும் ரெடியா தான் இருந்தாங்க எனக்கு தான் பொண்ணுங்களே பிடிக்காது.

ஐயோ அவனா நீ.

அடிச்சி பல்ல கில்ல எல்லாம் கலட்டிடுவேன் என்றிட

கோப படாத மாமா.

உன்ன மாதிரி ஒருத்தன தான் நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்.

சத்யாவுக்கு ஷ்யாமை மிகவும் பிடித்து இருந்தது.அதனாலோ என்னவோ தான் ஜொள்ளு விடுவது வெளியே தெரிய கூடாது என்று முறைத்துக்கொண்டே இருந்தாள்.

என்ன?

ஆமா நான் முடிவு பண்ணிட்டேன்.

என்னனு?

நீங்கதான் என் பிரான நாதன்.

ஏதே........ ய்

என்ன விளயாடுறியா?

ஆமா இவர் சின்ன குழந்தை இவர் ட விலயாடுறாங்க.....போவீங்களா.... ளா

காரை இயக்கி கொண்டே உன் கூட வந்தேன் பாரு என்ன சொல்லணும்.என்று ஷ்யாம் கூற

கோச்சுக்காதீங்க அன்ங்கிள் கல்யாணத்துக்கு அப்புறம் உங்க கோபத்தை எல்லாம் நான் பாத்துக்குறேன்.

ஏதே......ய்?

எல்லாம் குழந்தை பிறந்ததும் சரியாயிடும்.

கொழந்தயா.......?!!!!?

போங்க அன்ங்கிள் எனக்கும் வெக்கமா இருக்காதா சும்மா சும்மா கேட்டுகிட்டு.

அடியே பாத்து முழுசா 3 மணி நேரம் கூட ஆகல அதுக்குள்ள பிள்ளையே பெத்துட்ட.....

ஷ்யாம்மின் கன்னம் கிள்ளி கொஞ்சியவள் என் ராசா....

எத்தனையோ இளவட்ட பசங்க எல்லாம் என்ன லவ் பான்னானுங்க யாரையும் எனக்கு பிடிக்கல.

யாருக்கு உனக்கு....

ஆமாம். ஆன நீங்க ரொம்ப அதிஷ்ட சாலி.

ஏன்?

எனக்கு உங்களை பிடிச்சிருக்கே.என்று சினிமா பானியில் டயலாக்காகா அள்ளி விட்டாள்.

வசமா மாட்டிகிட்டேன் இவ கிட்டே.

அறைக்கு வந்த நங்கை ஷோபாவில் படுத்துக்கொள்ள மாறன்

எழுந்திரு ?

ஏன் சார் என்ன ஆட்சி.?!!!!!

பெட் ல வந்து படு.

வேண்டாம் சார்.

ஏன்?

நீங்க துங்கனும் ல ?

ஆமாம்! அதனால என்ன?

உங்களுக்கு டிஸ்டர்ப் ஆ இருக்கும்.

அவன் ஒன்றும் பேசாமல் நங்கை தூக்கி படுக்கையில் கிடத்தினான்.

நங்கை ஏழ போக...அழுத்தி மீண்டும் கிடத்தியவன் அவள் இதழ்லை மெல்ல நெருங்க.....

அவளுக்கு புரிந்து போனது.

கண்களை இறுக மூடிக் கொள்ள அவன் சுவாசம் அவளின் தேகம் தீண்ட பெண்ணவழின் இதய துடிப்பு அதிகரித்தது தன்னவனின் நெருக்கத்தில். தன் இதழ்களை விரைப்பாக்கி கொண்டாள் .

சட்டென்று மாறன். நம்ம 2 பேரும் புருஷன் பொண்டாட்டி சோ என்னோட எல்லா விசயத்திலும் உனக்கு உரிமை இருக்கு. இன்பேக்ட் என் மேலையும் தான்.

சோ உனக்கு எது எப்ப தேவ பட்டாலும் நீ அத எப்ப வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கலாம் என்றான் மாறன் கிறங்கடிக்கும் குரலில்.

கண்களை மெல்ல திறந்த நங்கை உடலை தளர்த்தி அவன் சொன்ன உள் அர்த்தத்தில் நானித்து தலை குனிந்தாள்.

சோ நீ இங்கே படு சரியா....

ம்ம் என்றவள் அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை பொங்கும் நாணத்தை கட்டி வைக்க தெரியாமல்.

அப்போ நீங்க ?

நானும் தான்.
உனக்கு எப்படி எல்லா உரிமையும் என் மேல இருக்கோ அதுபோல....எனக்கும் உன் மேல எல்லா உரிமையும் .......என்று வார்த்தையை இழுக்க...மெல்ல அவள் தேகம் ஊடுருவும் பார்வை பார்த்தான்.

நங்கைக்கு தேகம் சில்லிட்டது.

சட்டென்று சுதாரித்தவன்.

பயப்படாத என்றபடி நடுவில் தலையணைகளை கொண்டு பாலம் அமைத்தான்.

நங்கைக்கு சிரிப்பு தான் வந்தது.

ஓய் ஏன் சிரிக்கிற ஒன்னும் இல்லே.

சும்மா சொல்லு.

பெரிய சீன பெருஞ்சுவர்....
என்றிட

அவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது.

எப்படியோ இந்த விபத்து இருவரின் கோபத்தையும் குறைத்து நெருக்கத்தை சற்று கூட்டியது.

சத்யா வை வீட்டு வாசலில் இறக்கி விட்டான் ஷ்யாம்.

காரை விட்டு இரங்கியவள் கார் ஜன்னலின் கண்ணாடி முன் நின்று உனக்கு வேற ஆப்ஷனே இல்லே அன்ங்கிள் எனக்கு ஓகே சொல்லிட்டு போ.

அன்ங்கிள்னு சொல்லாதடி

சரிங்க மாமோய்....

சும்மா லூசு மாதிரி பேசாத சத்யா.வாழ்க்கை ன விளையாட்டு இல்லே கொஞ்சமாவது சீரியஸ் சா இரு என்றான் ஷ்யாம்.

சரி நான் வேணும்னா ஐ சி யூ வார்ட்டுல போய் சேர்ந்துக்கவ?

உன் கிட்ட பேசி புரோஜனம் இல்லே.
என்று கிளம்ப போனவனை.

உன்ன போகவிட மாட்டேன்.என்றவள் 🚗 கார் சாவியை எடுத்து விட வேற வழி இன்றி காரை விட்டு இறங்கினான்.

சும்மா விளையாடாத சத்யா சாவி குடு .
லேட் ஆட்சி!
நீ போ யாரும் பார்க்க போறாங்க.

பார்த்த பார்கட்டும்.எனக்கென என்பவளை கையை கட்டி பார்த்து முறைத்தான்.

இப்போ கிளம்ப போறியா இல்லையா?

சரி சரி கத்தாத போறேன்.
என்றபடி

கன்னம் பிடித்து கிள்ளி கொஞ்சினாள் ,"அம்முல் பையன் "



சத்யாவின் சேட்டைகள் ஷ்யாம்மிற்கும் பிடித்துத்தான் இருந்தது.ஆனால் வெளிக்காட்டி கொள்ளவில்லை.

சரி பாய் டா மாமா...நாளைக்கு மீட் பண்ணலாம்.

என்று ஓடியே விட்டாள் சத்யா.

அவள் போகும் வரை பார்த்தவன் அவள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

சத்யா நில்லு.....

திரும்பி பார்க்க வித்யா நின்று கொண்டு இருந்தாள்.

எங்கடி போய்ட்டு வர இந்த நேரத்துல.
அவன் யாரு டி வீடு வரைக்கும் வந்து விட்டுட்டு போறான்.
யார் டி அவன் உன் பாய் ப்ரெண்ட் டா.

ஆமாம்!

அதுக்கு என்ன இப்போ?
அசால்ட்டாக கூற.

வர வர ரொம்ப ஓவரா பேசுற சத்யா.

நான் வீட்டு வாசல் வரைக்கும் தான் கூட்டிட்டு வந்தேன்.உன்ன மாதிரி ரூம்வரைக்கும் கூட்டிட்டு வரல.

வாய மூடு சத்யா,

இதோ பாரு வித்யா நீயும் நானும் பிறப்பாள வேணும்னா ஒன்னா பிறந்து இருக்கலாம்.
பட் எந்த வகையிலும் நீ எனக்கு , அக்காவா ஆக முடியாது.

என்றவளை ஆழ்ந்து பார்த்தாள் வித்யா.

அந்த பார்வையில் வேதனையும் குற்ற உணர்ச்சியும் நிறைந்து இருந்தது.

வித்யா அதற்கு மேல் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அங்கிருந்து தலையை குனிந்த படி சென்று விட்டாள்.

என்ன மன்னிட்சிரு வித்யா நான் இப்படி நடந்துகிட்டா தான் நீ உன் தப்ப உணருவ அதுக்காக தான் உன்ன தெரின்ஜே காயப்படுத்திட்டேன் என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள் சத்யா.


ஷாயாம் சத்யாவின் காதல் கை கூடுமா?
நங்கைக்கும் மாறனுக்கும் இடையே உண்டான மோதலும் காதலும் தொடருமா?

அஷோக் பணத்தை விட பாசம் தான் முக்கியம் என்று புரிந்து கொள்வா
ரா?

வித்யாவின் நிலை என்ன?
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -27
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.