CHAPTER-27

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
அர்ஜுன் : இந்த‌ க‌ல்யாண‌ம் ந‌ட‌க்காது. ந‌ட‌க்க‌விட‌மாட்டே. ச‌ந்ரா ! நீ இந்த‌ தொட‌ப்ப‌ குச்சிய‌ ந‌ம்பாத‌ன்னு சொன்னா கேக்க‌வே மாட்டியா? .

அபி : டேய் தொட‌ப்ப‌ குச்சின்னு சொன்ன‌, அவ்ளோதா.

அர்ஜுன் : நிருத்துடா தொட‌ப்ப‌ குச்சி. நா உங்கிட்ட‌ ஒன்னும் பேச‌ல‌. நா என்னோட‌ ச‌ந்ராகிட்ட‌தா பேசிட்டு இருக்கே.

அபி : (சிரித்த‌ப‌டி) உன்னோட‌ ச‌ந்ராவா? அவ‌ எப்போ உன்னோட‌ ச‌ந்ராவானா? அவ‌ என்னோட‌ ச‌ந்ரா. புரியுதா?

அர்ஜுன் : டேய் சொல்லிகிட்டே இருக்கே.

அர்ஜுனுக்கு கோப‌ம் வ‌ந்த‌து. அபியும் அர்ஜுனும் ச‌ண்டை போட்ட‌ன‌ர். ச‌ந்ராவுக்கு பூர்வ‌ ஜென்ம‌த்தில் உதையாவும் ஆதியும் ச‌ண்டை போட்ட‌து ஞாப‌க‌ம் வ‌ருகிற‌து. அபிக்கு அதிக‌மாக‌ அடி விழுகிற‌து. அர்ஜுன் திரும்ப‌ அபியை அடிக்க‌ கையை கொண்டு செல்லும்போது, ச‌ந்ரா இடையில் வ‌ந்து நின்றாள். அர்ஜுன் கையை கீழே போட்டுவிட்டு, ச‌ந்ராவை பார்த்தான்.

ச‌ந்ரா : இன்னு ஒரு அடி இவ‌மேல‌ ப‌ட‌க்கூடாது.

அர்ஜுன் : ச‌ந்ரா நீ த‌ப்பு ப‌ன்ற‌. இவ‌ உன்ன‌ கொல்ல‌ பாத்த‌வ‌. இவ‌னையே நீ க‌ல்ய‌ண‌ம் ப‌ன்ன‌ போறியா?

ச‌ந்ரா : (கோபமாக) போது அர்ஜுன். உன்னோட‌ பொய்ய‌ கேக்க‌ என‌க்கு விருப்பமில்ல‌.

ச‌ந்ரா திரும்பி அபியிட‌ம்,

ச‌ந்ரா : அபி ! உன‌க்கு எதுவும் ஆக‌ல‌ல்ல‌? நீ ந‌ல்லா இருக்க‌ல்ல‌? உன‌க்கு காய‌ம் எதுவும் ப‌ட‌லையே.

அர்ஜுன் : (வேத‌னையுட‌ன்) காய‌ம் இங்க‌ ப‌ட்டிருக்கு ச‌ந்ரா.

ச‌ந்ரா திரும்பினாள்.

அர்ஜுன் : (வேத‌னையுட‌ன்) காய‌ம் இங்க‌ ப‌ட்டிருக்கு. (த‌ன் இத‌ய‌த்தில் கைவைத்து) என்னோட‌ இத‌ய‌த்துல‌ப்ப‌ட்டிருக்கு. நீ என்ன‌ க‌த்தியால‌ நெஞ்சுல‌ குத்துன‌ப்போகூட‌ என‌க்கு இப்பிடி வ‌லிக்க‌ல‌. ஆனா இப்போ நீ இன்னொருத்த‌னோட‌ இப்பிடி கைவெச்சு பேசும்போது வ‌லிக்குது.

ச‌ந்ரா : அவ‌ன‌தா நா காத‌லிக்கிறே.

அர்ஜுன் : என்ன‌ ஆனாலு செரி, உன்ன‌ அவ‌னோட சேர‌ விட‌மாட்டே. நீ என்ன‌ வேண்டான்னு சொன்னாலு ப‌ர‌வால்ல‌. ஆனா நீ இவ‌ன க‌ல்யாண‌ம் ப‌ன்னிக்காத‌. அவ உன்ன கொல்ல பாக்குறா.

ச‌ந்ரா : இத‌ சொல்ல‌ நீ யாரு.


அர்ஜுன் : நா உன்ன‌ காத‌லிக்கிறே.

ச‌ந்ரா : ஆனா நா உன்ன‌ காத‌லிக்க‌ல‌. அத‌னால‌ உன‌க்கு என்னோட‌ காத‌ல‌ன் அப்பிடிங்குற‌ உரிம‌ கூட‌ இல்ல‌.

அபி சிரித்தான்.

அர்ஜுன் : (யோசித்த‌ப‌டி) அப்பிடியா? அப்போ உரிம‌ய வாங்கிற‌வேண்டிய‌துதா.

ச‌ந்ரா : என்ன‌?

அர்ஜுன் : இப்போ பாரு.

அர்ஜுன் அங்கிருந்த‌ தீப்பெட்டியை எடுத்து, தீ குச்சியை உர‌சி அந்த‌ கோவிலின் ஓம‌குண்ட‌த்தில் போட்டான். ஓம‌குண்ட‌ம் எரிந்த‌து.

அபியும் ச‌ந்ராவும் அதிர்ச்சியில் நின்ற‌ன‌ர்.

அபி : நீ என்ன‌டா ப‌ன்ற‌?

அர்ஜுன் : கொஞ்ச‌ம் Wait ப‌ன்னி பாருடா தொட‌ப்ப‌ குச்சி.

அர்ஜுன் : Iam Sorry ச‌ந்ரா. இத‌ நா ப‌ன்னாதா, உன் வாழ்க்கைய‌ காப்பாத்த‌ முடியும். அவ‌ உன்னோட‌ வாழ்க்கைய‌ அழிச்சிருவா. நா உன்னோட‌ ச‌ந்தோஷ‌த்துக்காக‌, உன்ன‌ விட்டுக்குடுக்க‌ ரெடியா இருக்கே. ஆனா இவ‌ங்கிட்ட‌ உன்ன‌ விட‌மாட்டே. எனக்கு நீ உயிரோட இருக்குறதுதா முக்கியோ. அவ‌ங்கிட்ட‌ உன்ன‌ என்னால‌ த‌ர‌ முடியாது. Iam Sorry ச‌ந்ரா. இத தவர எனக்கு வேற வழி தெரியல.

என்று அடாவ‌டியாக‌ அவ‌ள் கையை பிடித்து இழுத்து செல்ல‌, அதை பார்த்த‌ அபியோ அவ‌னை த‌டுக்க‌ முய‌ல‌, அவ‌னைபொரே உத‌யால் கீழே த‌ள்ளிய‌வ‌ன், ச‌ராவின் கையை விடாம‌ல் ப‌ற்றிய‌ப‌டி அந்த‌ ஓம‌குண்ட‌த்தை சுற்றினான்.

அதில் ப‌ய‌ந்த‌ ச‌ந்ரா, "அர்ஜுன் என்ன‌ ப‌ண்ண‌ ப‌ண்ற‌, என்ன‌விடு." என்று கோப‌த்துட‌ன் திமிரினாள்.

ஆனால் அவ‌னோ எத‌ற்கும் அச‌ராம‌ல் அவ‌ளுட‌ம் ஓம‌குண்ட‌த்தை சுற்ற‌, கோப‌ம‌டைந்த‌ அபி உட‌னே எழுந்து வ‌ந்து அவ‌ற்றை த‌டுக்க‌ முய‌ல‌, ஒவ்வொரு முறையும் அடி முன்புவிட‌ ப‌ய‌ங்க‌ர‌மாவே அவ‌னுக்கு விழ‌, அதில் நிலைத்த‌டுமாறி ச‌ரிந்தான் அபி.

அதை பார்த்த‌ ச‌ந்ரா, "அபி..! என்று க‌த்த‌, அப்போதும்க்கூட‌ அவ‌ளின் கையை வுடாம‌ல் இறுதியாக‌ ஏழாவ‌து முறைய்ய்ம் அர்ஜுன் சுற்றும்போது, அவ‌ன் பின் புற‌மாக‌ வ‌ந்த அபி, க‌த்தியால் அவ‌னை குத்த‌ முற்ப‌டும்போது, ச‌ட்டென்று த‌ன் ம‌று கையால் அதை பிடித்து த‌டுத்தான் அர்ஜுன்.

அதில் அபி ம‌ட்டும‌ல்ல‌, ச‌ந்ராவுமே அதிர்ச்சியுட‌ன் அவ‌னை பார்க்க‌, அவ‌னோ அந்த‌ க‌த்தியால் கிழிந்த‌ த‌ன் க‌ர‌த்துட‌னே அந்த‌ க‌த்தியை பிடுங்கி ஓம‌ குண்ட‌த்தில் போட்டுவிட்டு, அவ‌னையும் அடி வ‌யிற்றில் எட்டி உதைத்தான். அதில் அவ‌னோ ப‌த்து அடி த‌ள்ளி சென்று விழ‌, ஏழாவ‌து சுற்றையும் சுற்றி முடித்த‌ அர்ஜுன், த‌ன் இர‌த்த‌ம் வ‌ழியும் க‌ர‌த்தாலேயே அவ‌ள் நெற்ரி வ‌குட்டில் குங்குமமாக‌ த‌ன் இர‌த்த‌த்தையே வைத்துவிட்டான்.



"அவ்ளோதாம்மா. ந‌ம்ப‌ க‌ல்யாண‌ம் முடிஞ்ச‌து." என்றான் அர்ஜுன்.

அதில் அவ‌ளோ மிகுந்த‌ அதிர்ச்சியுட‌ன் அவ‌னை பார்க்க‌, அத‌ற்குள் எழுந்து அவ‌ன் அருகில் வ‌ந்த‌ அபி, "ச‌ந்ரா எதாவ‌து பேசு. இவ‌ன் என்ன‌ க‌ல்யாண‌ம் முடிஞ்ச‌துன்னு சொல்லிகிட்டிருக்கான்?" என்று ப‌த‌றி கூற‌, அவ‌ளோ ஆயிர‌ம் குழ்ப்ப‌மும் பூர்வ‌ ஜென்ம‌ உத‌யாவின் நினைவுக‌ளும் ஒரு சேர‌ அவ‌ளை சூழ‌ ம‌ய‌ங்கி அர்ஜுனின் மார்பில் விழுந்தாள்.

அவ‌ளை தாங்கி பிடித்த‌ அர்ஜுன் ப‌த‌றி அவ‌ளை தூக்கி, "ச‌ந்ரா என்ன‌ ஆச்சு?" என்று ப‌த‌ற‌, அப்போது அபியும் அவ‌ளை தொட‌ வ‌ர‌, அவ‌ன் கையை பிடித்து த‌டுத்த‌வ‌ன், "டோன்ட் ட‌ச் மை வொய்ஃப்" என்று அவ‌னை தீயாக‌ முறைக்க‌, ஒரு நிமிட‌மே த‌ன்னையே அறியாம‌ல் அசையாது நின்றான் அபி.

அவ‌ன் க‌ண்க‌ளில் தெரிந்த‌ அந்த‌ அன‌லான‌து பூர்வ‌ ஜென்ம‌ உத‌யாவின் க‌ண்க‌ளில் தெரிந்த‌ அதே அன‌ல் என்று அறிந்துக்கொண்டான். அவ‌ன் அதிர்ச்சியிலிருக்கும்போதே அர்ஜுனும் ச‌ந்ராவை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டான்.

வீடு வ‌ந்த‌டைந்த‌தும் அவ‌ளை த‌ன் அறையில் உள்ள‌ மெத்தையில் ப‌டுக்க‌ வைத்த‌ அர்ஜுன், "இனிமே இதுதா உன்னோட‌ ரூம் ஸ்வீட் ஹார்ட்." என்று கூறி அவ‌ள் நெற்றியில் முத்த‌மிட‌, அவ‌ன் இத‌ழ் ப‌ட்ட‌தும் திடுக்கிட்டு எழுந்த‌ ச‌ந்ராவிற்கு என்ன‌ ந‌ட‌ந்த‌தென்று நினைவூட்ட‌வே சிறிது நேர‌ம் தேவையாக‌ இருந்த‌து.

அவ‌ள் எழுந்த‌தை பார்த்த‌ அர்ஜுன், "ச‌ந்ரா ஆர் யூ ஓகே?" என்று கேட்க‌, அபோதே ச‌ற்று முன் அவ‌ன் செய்த‌ காரிய‌ம் நினைவிற்கு வ‌ர‌ கோபத்துட‌ன் க‌த்த‌ வ‌ந்த‌வ‌ள், ச‌ட்டென்று பூர்வ‌ ஜென்ம‌த்தில் சிவ‌ன் அளித்த‌ வாக்கை நினைவூட்டினாள். அனைவ‌ரும் மீண்டும் பிற‌ப்பீர்க‌ள் ஆனால் கதை மாறும் என்ற‌ வார்த்தைக‌ள் அவ‌ள் நினைசவ‌டுக்கில் ஓட‌ அமைதியாக யோசித்தவளுக்கு இப்போதுதான் அனைத்தும் புரிந்தது.

- தொடரும்....
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-27
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.