அவள் தன்னை மிரட்டியதை பார்க்கும்போது அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
ஆனால் ஏற்கனவே அவனிடம் ராகுல் பிரியாவிற்கு கராத்தே, குங்ஃபூ எல்லாம் தெரியும் என்று சொல்லி இருந்ததால்;
அவள் தன்னை அடிப்பதாக சொன்னதை அவன் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.
இருப்பினும் அவள் தன் காதலை ஏற்றுக் கொண்ட பிறகு அவளிடம் அடி வாங்குவதைப் பற்றி எல்லாம் யோசித்து அவன் வருத்தப்படுவதாக இல்லை.
அவளது கைகள் இரண்டையும் பிடித்து அதன் ஒவ்வொரு விரல்களிலும் முத்தம் கொடுத்த இசை,
“நீ என்ன எப்படி வேணாலும் அடிச்சுக்கோ.
பட் நான் உன்னை திருப்பி இப்படி தான் இருப்பேன்.
நீ தாங்குவியா டி?” என்று கேட்டுவிட்டு அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
உடனே விளையாட்டாக அவன் கன்னத்தில் ஆடித்த பிரியா,
“சரியான பொறுக்கி பையன் டா நீ!” என்று வெட்கத்துடன் சொல்லிவிட்டு சிரிக்க,
“பொறுக்கி பையன் இல்ல டி திருட்டு பையன்..
உன் கிட்ட இருக்கிற எல்லாத்தையும் இப்ப திருட போறேன் பாக்குறியா?”
என்று கேட்டுவிட்டு குறும்பாக சிரித்த இசை தனது ஆள்காட்டி விரலால் அவளது முகம் முழுவதும் கோலம் போட்டுவிட்டு,
அப்படியே தன் விரலை கழுத்து வழியாக கீழே கொண்டு சென்றான்.
இந்த சீனில் அவள் தன் விரலை இப்போது தட்டி விடுவாள் என்று நினைத்து அவன் மெல்ல மெல்ல கழுத்தில் இருந்து அதற்கு கீழே தன் விரலை கொண்டு செல்ல,
அதற்கு மேல் செல்ல அவனுக்குத்தான் கூச்சமாகவும், தயக்கமாகவும் இருந்தது.
அதனால் அவன் அப்படியே அவளது கழுத்திற்கு பின் தன் கையை கொண்டு சென்று அவள் முகத்தை தன் அருகில் கொண்டு வந்து,
“என்ன டி எதுவும் சொல்ல மாட்டேங்குற?
அப்ப நான் என்ன பண்ணாலும் பரவாயில்லையா?” என்று கேட்டான் அவன்.
“அதான் ஆல்ரெடி நீ என்ன மொத்தமா திருடிட்டியே..
இதுக்கு மேல புதுசா திருடறதுக்கு என்ன இருக்கு?
எல்லாமே இந்த ஹார்ட்ல தான் இருக்கு இசை.
உன் மனசுல எப்பயும் நான் மட்டும் தான் இருக்கணும்.
நான் இருக்கிற இந்த ஹார்டிலையும், உன் லைஃப்லையும் எதுவும் மாறாம இருக்கிற வரைக்கும்,
நீயும் நானும் ஒன்னு தான்.
நமக்குள்ள இருக்கிற ரிலேஷன்ஷிப்பை வெளிய இருக்கிற மத்தவங்களோ, ஒரு பேப்பரோ, தாலியோ கல்யாணமோ எதுவும் டிசைட் பண்ணாது.”
என்று அவனது நெஞ்சில் கை வைத்து சொன்ன பிரியா அங்கே முகம் புதைத்து அப்படியே அவனை அணைத்துக் கொண்டாள்.
அவளது வார்த்தைகளால் உருகிப்போன இசை, “நீயும் என்ன மாதிரியே தான் யோசிக்கிற.
நான் யாழினிய லவ் பண்ணும் போது அவளை என் பொண்டாட்டியா தான் நினைச்சேன்.
இருந்தாலும் படிக்கிற வயசுல கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி தேவையில்லாம எதுவும் பண்ணிட்டு இருக்க கூடாதுன்னு நான் அவ கூட இருக்கும்போது ரொம்பவே கண்ட்ரோலா தான் இருந்தேன்.
ஆனா அவ இறந்ததுக்கு அப்புறம் எனக்கு வாழ்க்கையே முடிஞ்ச மாதிரி இருந்துச்சு.
எங்க அப்பா என்ன அவர் சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்ணிட்டே இருந்தாரு.
ஆனா எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட்டே இல்ல.
அந்த டைம்ல ரொம்ப தனியா இருந்தேன். நிறைய குடிச்சேன்.
இந்த வாழ்க்கை எனக்கு என்ன வச்சிருக்கு? முதல்ல வாழ்க்கைன்னா என்ன?
மேரேஜ்னா என்னன்னு நிறைய யோசிச்சேன். கடைசியில இது எதுவுமே ஒன்னுமே இல்லைன்னு தோனிறுச்சு.
கல்யாணம் ஆனதுக்கப்புறம் கூட இல்லீகள் ரிலேஷன்ஷிப்ல இருந்து தப்பு பண்றவங்க எவ்வளவோ பேர் இருக்காங்க!
அப்போ இந்த கமிட்மெண்ட், ரிலேஷன்ஷிப், ஃபேமிலி, மேரேஜ் இது எல்லாத்துக்கும் இங்க என்ன வேல்யூ இருக்கு?
நீ சொன்ன மாதிரி எல்லாமே மனசு சம்பந்தப்பட்டது.
இந்த மனசு எப்பயும் மாறாம ஒருத்தரை மட்டுமே கடைசி வரைக்கும் நெனச்சிட்டு இருக்கணும்.
அது மட்டும் தான் ரெண்டு பேரையும் எப்பயும் ஒன்னாவே வச்சிருக்கும்.” என்று தன் மனதில் இருப்பதை அவளிடம் சொன்னான்.
வசதியாக அவன் மீது சாய்ந்து நன்றாக அவன் மடியில் அமர்ந்துக் கொண்ட பிரியா அவனது தலை முடியை வருடியவாறு,
“எனக்கு உன்ன பார்க்கும்போது அப்படியே என்ன பாக்குற மாதிரியே இருக்கு.
உன்ன முன்னாடியே பார்த்திருந்தா என் லைஃப் இன்னும் நல்லா இருந்திருக்கும்னு தோணுது.
ஏன் டா என் லைஃப்ல லேட்டா வந்த?” என்று கேட்டுவிட்டு அவன் கன்னத்தில் அடித்தாள்.
அவளது கன்னங்களை பிடித்து இடவலமாக ஆட்டிய இசை “ஏன் நீ சீக்கிரமா வந்து இருக்கலாம் இல்ல?” என்று கேட்க,
“அதான் இப்ப வந்துட்டனே! நெக்ஸ்ட் என்ன பண்ண போற?” என்று குறும்பாக கேட்ட பிரியா லேசாக அவனது கழுத்தோரம் கடித்தாள்.
ஏற்கனவே அவளது நெருக்கம் கொடுத்த கதகதப்பில் வெந்து கொண்டு இருந்த இசை பிரியா தனது குறும்பான செயல்களால் மேலும் அவனது உணர்ச்சிகளை கிளர்ச்சி அடைய செய்ததால்,
அவளுடன் அப்படியே சோஃபாவில் சாய்ந்து அவள் மீது படுத்து “உனக்கு எந்த பிராப்ளமும் இல்லனா, நம்ம என்ன வேணாலும் பண்ணலாம்.
எல்லாத்துக்கும் நான் ரெடியா தான் இருக்கேன்.” என்று சொல்லிவிட்டு கண்ணடித்தான்.
அவனது ஆர்வமான முகத்தை பார்த்து வாய்விட்டு சத்தமாக சிரித்த பிரியா “ஒரு நிமிஷம்!” என்று சொல்லிவிட்டு தனது இதய வடிவிலான பெண்டன்ட் செயினில் உள்ள லாக்கெட்டை திறந்தாள்.
அதன் ஒரு பக்கம் அவளது குடும்ப புகைப்படம் இருக்க, அதன் மற்றொரு பக்கம் காலியாக இருந்தது.
அது இரண்டிற்கும் நடுவில் ஒரு அழகிய தங்க மோதிரம் இருந்தது.
அந்த மோதிரத்தை சிரித்த முகமாக அதில் இருந்து எடுத்த பிரியா “உன் கைய காட்டு!” என்றாள்.
நடப்பது எல்லாம் கனவா நிஜமா? என்று நம்ப முடியாத நிலையில் இருந்த இசை அவர்கள் இப்போது படுத்திருப்பது சிறிய சோஃபா என்பதால்,
அவள் அதில் இருந்து கீழே விழுந்து விடக் கூடாது என்பதற்காக அவளை தனது ஒரு கையால் இறுக்கமாக பிடித்துக் கொண்டு,
மற்றொரு கையை அவள் முன்னே நீட்டினான்.
உடனே அவன் கையை பற்றி கொண்ட பிரியா அவனது லெஃப்ட் ஹாண்டில் மோதிர விரலில் தன் கையில் இருந்த மோதிரத்தை போட்டுவிட்டு,
“இனிமே ஹார்ட் டூ ஹார்ட் நம்ம கனெக்சன் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்.” என்று சொல்லிவிட்டு அவனது கைகளில் முத்தம் கொடுத்தாள்.
அதில் மொத்தமாக அவளிடம் விழுந்த இசை அவளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு தன் கையில் இருந்த மோதிரத்தை பார்த்துவிட்டு
“இதை எப்ப டி வாங்குன?
நீ இங்கயே தானே டி இருக்க!
எனக்கு தெரியாம நீ எங்கயும் வெளிய போன மாதிரியும் இல்லை..
அப்புறம் எந்த கேப்ல இதெல்லாம் யோசிக்கிற நீ? இது எனக்கு வேலன்டைன்ஸ் டே சர்ப்ரைஸா?
நான் தான் சரியான தத்தி. உனக்காக எதுவும் யோசிக்காம விட்டுட்டேன் சாரி.” என்றான்.
அந்த அழகிய தங்க மோதிரம் அவனது கைகளில் ஜொலிப்பதை பார்த்தபடி அவன் கைகளைப் பிடித்துக் கொண்ட பிரியா,
“நானே டிசைன் பண்ணி என் கையால செஞ்ச ரிங் இது.
இதை நான் செஞ்சு ரொம்ப நாள் ஆகுது இசை. ஆனா இத என்னால யாருக்கும் குடுக்க முடியாம போயிடுச்சு.
சோ பத்திரமா இது எப்பயும் என் கிட்டயே இருக்கட்டும்ன்னு இந்த லாகெட்ல போட்டு வச்சேன்.
ஒருவேளை நான் நம்பிக்கை வைக்கிற அளவுக்கு என் லைஃப்ல மறுபடியும் யாராவது வந்தாங்கன்னா அப்போ அவங்க கிட்ட இந்த ரிங்க குடுக்கணும்னு நினைச்சேன்.
இதுவரைக்கும் நிஜமா இவ்ளோ சீக்கிரம் நான் யாரையும் நம்புனதே இல்லை இசை.
அதுக்காகவே எப்பயும் உன்னை விட்டு இரண்டு அடி தள்ளி நிற்கிறதே நல்லதுன்னு நினைப்பேன்.
அது எல்லாத்தையும் தாண்டி நீ என்ன இம்ப்ரஸ் பண்ணிட்ட..
எதுக்காக எனக்கு உன்ன இவ்ளோ சீக்கிரம் இந்த அளவுக்கு புடிச்சிருக்குன்னு எனக்கே தெரியல..
ஆனா உன் மேல எனக்கு ஒரு கண் மூடித்தனமான நம்பிக்கை இருக்கு டா.
இது எனக்கு உன் மேல இருக்கிற நம்பிக்கையோட அடையாளம்.
Will you be mine forever and after?” என்று கண்களில் காதல் பொங்க அவனைப் பார்த்து கேட்டாள்.
அவளது வார்த்தைகளில் ஐஸ்க்ரீம் போல அவனது இதயம் அவளுக்காக உருகியது.
அவள் தன்னை இதுவரை காதலிப்பதாக நேரடியாக ஐ லவ் யூ என்று சொல்லி உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் அதற்கும் ஒரு படி மேலே சென்று தன்னை முழுவதாக நம்பி அவளது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்வதாக சொல்கிறாளே! என்று நினைத்த இசைக்கு ஏதோ இந்த உலகத்தில் இருக்கும் பெரிய விஷயத்தை,
தன்னால் சாதிக்க முடியாதது என்று நினைத்த ஒரு பிரம்மாண்டத்தை சாதித்து காட்டியதைப் போல அவனுக்குள் அப்படி ஒரு ஆனந்தம்.
உடனே தன் விரலில் அவள் போட்ட மோதிரத்தை முத்தமிட்ட இசை அவளது நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து,
“நீயும் நானும் ஒன்னு தான். எப்பவுமே நான் உனக்கு மட்டும் தான்.
I love you Priya! I love you so much..
இப்படி எல்லாம் நடக்கும்னு நானே எதிர்பார்க்கல.. ஆனா இந்த நிமிஷம் எப்பயும் இப்படியே கன்டினியூ ஆயிட்டே இருக்கணும்னு தோணுது.
இதே மாதிரி இவ்ளோ பக்கத்துல நீயும், நானும் நமக்குள்ள கொஞ்சம் கூட கேப் இல்லாம nonstopஆ ரொமான்ஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும்.
அவ்ளோ தான் என் ஆசை. இது போதும் எனக்கு.” என்று தன் இதயத்தில் இருந்து சொன்னான்.
அவனது இனிமையான குரலில் அந்த வார்த்தைகளைக் கேட்கும்போது அவள் காதுகளில் வசீகரமாக தேன் வந்து பாய்வதைப் போல இருந்தது.
அழகு என்றால் அது பால் நிறத்தில் பார்ப்பதற்கு வெள்ளையாக இருப்பதுதான் என்று பலரும் சொல்வதுண்டு.
ஆனால் இயற்கையாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே உரிய மாநிறத்தில்,
பார்ப்பதற்கு ஒல்லியாக தனுஷ் போல இருந்த இசையை இன்ச் பை இன்சாக அவள் கண்கள் பார்த்து ரசித்தது.
அப்போது அவளுக்கு தனக்கு பர்சனாலிட்டி, படிப்பு, financial background என எதுவுமே உருப்படியாக இல்லை என்று அவன் சொன்னது அவளுக்கு ஞாபகம் வர,
தன் மீது இவ்வளவு நேரமாக படுத்துக் கொண்டு இருந்த இசையை கீழே தள்ளி இப்போது அவன் மீது எறி படுத்துக் கொண்ட பிரியா,
“இனிமே நீ எப்பயும் உன்னை மத்தவங்க கூட compare பண்ணவே கூடாது. ஓகேவா?
நீ சொன்ன மாதிரி தான்.. என் ஃபேமிலி நேமை என் பேர்ல எடுத்துட்டா நானும் உன்ன மாதிரி ஒரு சாதாரணமான ஹியூமன் பீயிங் தான்.
இதுக்கு மேல தான் பிரியா அவ சொந்த உழைப்பில இதெல்லாம் செஞ்சிருக்கான்னு மத்தவங்க சொல்ற மாதிரி நானும் ஏதாவது செய்யணும்.
நீயும் நானும் ஒரே இடத்துல தான் இருக்கோம்.
இப்போ எல்லாத்தையும் ஒன்னா சேர்ந்து செஞ்சி முன்னாடி போயிட்டு இருக்கோம்.
சோ நமக்குள்ள எல்லாமே ஈக்குவல்லா தான் இருக்கு. அண்ட் என் கண்ணுக்கு என் ஆளை விட வேற யாரும் handsomeஆ தெரியமாட்டாங்க.
உனக்குள்ள இருக்கிற டவுட்ஸ், inferiority complex எல்லாத்தையும் இப்பவே விட்டுறு.
உன் மைண்ட்ல
நீ ஞாபகம் வச்சுக்க வேண்டியது எல்லாம் இது மட்டும் தான்..!!
நான் உன்ன லவ் பண்றேன் இசை. நான் சந்தோஷமா நிம்மதியா வாழ நீ எனக்கு வேணும்.” என்று சொல்லிவிட்டு அவனது இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்தாள்.
-மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-26
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.