சனந்தா, ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளி அவர்களுடன் அவர்களின் வீட்டில் ஒருத்தி ஆகவே கலந்துவிட்டாள். அங்கே பள்ளிக்கூடத்தில் வரும் பிள்ளைகளை நன்றாக கவனித்துக் கொண்டு அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பது மட்டுமில்லாமல் ஒழுக்கம், மரியாதை, தைரியம் என அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல தரங்களையும் சொல்லிக் கொடுத்தாள்.
அதனால், அம்மக்களுக்கு சனந்தாவை மிகவும் பிடித்தும் போனது. பாட்டியுடன் அவ்வப்போது சந்திப்பது சிறிது நேரம் அவருடன் நேரத்தை செலவழிப்பது, பின் மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் மூலிகைகள் மூலம் எண்ணெய், தயிலம் மற்றும் வேறு பொருட்களை தயார் செய்வதற்கு உதவுவது என அனைவரிடனும் சேர்ந்து சந்தோஷமாக இருந்தாள்.
என்ன தான் ஊருடன் ஒட்டி வாழ்ந்தாலும் விக்ரமுக்கும் இவளுக்கும் இடையே ஒரு பிளவு இருந்தது தான். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவும் மாட்டார்கள், விக்ரம் இருந்தால் பெரும்பாலும் சனந்தா அவ்விடத்தில் இருப்பதை தவிர்க்கவே முயற்சி செய்வாள். விக்ரம் எப்படியாவது அவளிடம் ஓரிரு வார்த்தைகள் அன்பாக பேச வேண்டும் என எண்ணினாலும் தோற்று தான் போனான். இப்படி அவளுடைய நாட்கள் வண்ணமையமாக சென்று கொண்டிருந்தது வண்ணம் கிராமத்தில்.
“என்ன இவ்ளோ பேக் பண்ணிட்டு இருக்க?? சனா ரெண்டு நாள் தானே ஊருக்கு போறா??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “அது இல்லைங்க அவங்க அப்பா அம்மாக்கு அப்புறம் நம்ம போலீஸாருக்கு கூட கொடுத்து விடலாம்னு கொஞ்சம் பலகாரம் பண்ணோம் நாங்க” என்று வள்ளி கூறினார்.
“ஆன்ட்டி நான் அப்பவே சொன்னேன் நீங்க ரொம்ப ஜாஸ்தி பண்றீங்கன்னு இப்ப பாருங்க அங்கிள் கூட சொல்லுறாரு” என்று சனா கூற, “அதெல்லாம் ஒன்னும் இல்ல சனா, வீட்டுக்கு எடுத்துட்டு போ… அவங்களுக்கு இந்த பலகாரம் எல்லாம் பிடிக்கும்…. இங்க கிடைக்குற இந்த மூலிகைகளை, எண்ணை இதெல்லாம் பெருசா அவங்க பயன்படுத்தி இருக்க மாட்டாங்க, அதுவும் இல்லாம பிரகாஷ் சார் இருக்காருல அவருக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்…. அதுவும் இல்லாம அவர் எங்களுக்கு எவ்வளவோ உதவி பண்ணிருக்காரு இப்பவும் பண்ணிட்டு தான் இருக்காரு இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும் போது தானே நாங்க திருப்பி அவருக்கு கொடுக்க முடியும்” என்று வள்ளி கூற, வேற எதுவும் பேச முடியாமல் அமைதியாகிவிட்டாள் சனந்தா.
“ஆன்ட்டி உங்களுக்கு ஏதாவது வேணுமா நான் ஊருக்கு போயிட்டு வரும் போது வாங்கிட்டு வரேன்” என்று சனந்தா கேட்க, வள்ளி புன்னகைத்து, “எதுவும் வேண்டாம்டா எனக்கு…. நீ சந்தோஷமா இருந்துட்டு வா அது போதும்” என்று கூறினார்.
“அங்கிள் உங்களுக்கு ஏதாவது வேணுமா?” என்று சனந்தா கேட்க, “எனக்கு எதுவும் வேணாம்மா… எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்லு அது போதும்” என்று ஸ்ரீனிவாசன் கூறினார். “ம்ம்… நீங்களும் வந்து இருக்கலாம்ல இப்போ என்கூட…. நான் உங்களை எவ்வளவு கூப்பிட்டேன் உங்க ரெண்டு பேரையும்” என்று சனந்தா முறையிட்டாள்.
“வரணும்னு தாண்டா எங்களுக்கும் ஆசையா இருக்கு…. நீயே வந்து இப்ப தான் முதல் வாட்டி வீட்டுக்கு போற… இப்ப நீ போயிட்டு வா மறுபடியும் இன்னொரு வாட்டி போகும் போது நாங்க கட்டாயம் உன் கூட வரோம்” என்று உறுதி அளித்தார் வள்ளி.
“ம்ம்… கண்டிப்பா அப்போ வரனும் நீங்க” என்று சனந்தா கூறி உற்சாகத்துடன் அவளின் உடைமைகளை எடுத்துக் கொண்டு புறப்படவும், வெளியே விக்ரம் பைக்கில் காத்துக் கொண்டிருந்தான். “ஐயோ!!! இவரா!!!! இவர் ஏன் இங்க இருக்காரு… சரவணனை கணோமே” என்று பயத்தில் அடி மீது அடி வைத்து மெதுவாக சனந்தா நடக்கவும், விக்ரம், சனந்தாவின் முகத்தில் இருக்கும் குழப்பத்தை கண்டு ரசித்துக் கொண்டு புன்னகைத்தான்.
“என்ன இவர் சிரிக்கிறாரு??? ப்பா…. சிரிச்சா அழகா இருக்குல்ல… கண்ணு கூட சேர்ந்து சிரிக்குது இவருக்கு” என்று சனந்தா ரசித்து கொண்டிருக்க, பின் சுயநினைவுக்கு வந்து “அடச்சே எனக்கு இதே வேலையா போச்சு…. அவர எப்ப பார்த்தாலும் என்னையே அறியாம அவர ரசிக்கிறேன்… என்ன தான் நடக்குதோ எனக்குள்ள” என்று அவளையே கடிந்து கொண்டாள்.
“இந்தா டா இதெல்லாம் முன்னாடி வெச்சுக்கோ” என்று வள்ளி கொடுக்க, “போதுமா லக்கேஜ்??” என்று விக்ரம் கேட்டான். “இதெல்லாம் பிரகாஷ் சாருக்கும் சனாவோட அப்பா அம்மாவுக்கும் தான்டா… நீ சும்மா பேசாத… எடுத்துட்டு போ நீயா சுமக்க போற வண்டி தானே சுமக்க போகுது” என்று வள்ளி கேட்க, “நீங்க பேசுவீங்க தான், நீங்க ஏன் பேச மாட்டீங்க மா” என்று விக்ரம் கூறினான்.
“ப்ச்… பத்திரமா கூட்டிட்டு போ சரியா என்று வள்ளி கூறவும், “கூட்டிட்டு போவா??? இவரா வீடு வரைக்கும் கூட்டிட்டு போக போறாரு!!!” என்று குழப்பத்தில் சனந்தா இருக்க, “ஒன்னும் இல்லடா சரவணன் காட்டுக்குள்ள போய் இருக்கான் அவனுக்கு வேலை இருக்குன்னு… அதனால தான் விக்ரம் உன்னை கூட்டிட்டு போவான்” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், வேற எதுவும் பேச முடியாமல் புன்னகையுடன் தலையை மட்டும் அசைத்தாள் சனந்தா.
“சரி நீங்க கிளம்புங்க இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும் நீ திரும்பி வர” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், சரி என்று இருவரும் புறப்பட்டனர்.
சனந்தாவின் கைபேசி ஒலிக்க, சரவணன் என்று இருக்கவும், “ஓய் சரவணா!!!! எங்க போனீங்க??? நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்று சனந்தா கூற, “சாரி சனா, கொஞ்சம் வேலை வந்துருச்சு அதான் காலையிலயே சீக்கிரமாகவே கிளம்பிட்டேன் உன்கிட்ட சொல்ல கூட முடியல” என்று சரவணன் கூற, “நீங்க வருவீங்கன்னு நினைச்சேன்… ஆனா…” என்று சனந்தா மெல்லிய குரலில் கூற, “அடுத்த வாட்டி கட்டாயமா நான் கூட்டிட்டு போறேன்” என்று உறுதி அளித்தான் சரவணன்.
“ம்ம்… சரி ஓகே” என்று ஃபோனை வைத்தாள் சனந்தா. “ம்க்கும்!!!’ என்று தொண்டையை செருமி கொண்டு, “ஏன் நாங்க கூட்டிட்டு போனா வர மாட்டீங்களா??” என்று விக்ரம் கேட்க, சனந்தா என்ன கூறுவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்க, “பதிலே வரவில்லையே???” என்று விக்ரம் கேட்டான்.
சனந்தா ஒரு நொடி கண்களை மூடி திறந்து, “அது…. அப்படி இல்ல சார்…. சரவணன் வரேன்னு சொல்லியிருந்தாரு அதான் வரலையான்னு கேட்டேன்… அவ்வளவு தான் வேற எதுவும் இல்ல” என்று சனந்தா சமாளித்தாள். விக்ரம் கண்ணாடி வழியாக அவளின் செயலை பார்த்து சிரித்துக் கொண்ட, தலையை அசைத்தான்.
“என்ன அண்ணா?? விக்ரம் தானே வரேன்னு சொன்னாரு காட்டுக்குள்ள போறதுக்கு… இப்ப நீங்க வந்து இருக்கீங்களே??” என்று கவிதா முறையிட, “அப்படி இல்லம்மா அவனை கோயம்புத்தூர்ல ஆஃபீஸர் கூப்பிட்டு இருக்காங்க அவன் போய் தான் ஆகணும்… அதனால, அப்படியே சனாவ கூட்டிட்டு போறான்” என்று சரவணன் சமாளித்தான்.
என்ன தான் சரவணன் காரணத்தை கூறினாலும் அது என்னவோ கவிதாவுக்கு உறுத்தலாகவே தான் இருந்தது, விக்ரம் மற்றும் சனா ஒன்றாக சென்றிருப்பதை நினைத்து.
“சனா, என்ன நடந்தாலும் சரி எதுவும் பேச்சுக் கொடுத்து இவர் கிட்ட திட்டு வாங்கிடாத” என்று அவளுக்குள் பேசி உறுதிப்படுத்திக் கொண்டே கோயம்புத்ததூருக்கு புறப்பட ஜீப்பில் ஏறினாள் சனந்தா.
விக்ரம் வழக்கத்துக்கு மாறாக உரையாடலை தொடங்கினான். “எங்க ஊரு உங்களுக்கு புடிச்சிருக்கா??” என்று விக்ரம் கேட்க, “என்னது இவரே பேசுறாரா… அய்யோ!! இப்படி ஆரம்பிச்சு கடைசில திட்டுவாரோ??” என்று நினைத்துக் கொண்டு, “ம்ம்… ரொம்ப பிடிச்சிருக்கு சார்” என்று பட்டும் படாமலும் கூறினாள் சனந்தா.
“ஊரு மட்டும் புடிச்சிருக்கா?? இல்ல இங்க இருக்குற ஆட்கள் எல்லாரையும் பிடிச்சிருக்கா??” என்று விக்ரம் கேட்க, “எல்லாரையும் தான் சார் புடிச்சிருக்கு” என்று சனந்தா கூறினாள். “எல்லாரையுமா??” என்று விக்ரம் அழுத்தி கேட்க, சனந்தாவுக்கு அவனையும் சேர்த்து கேட்கிறான் என்பது புரிய, என்ன கூறுவது என்று தெரியாமல் அமைதியாகிவிட்டாள் சனந்தா.
“என்ன பதிலே காணோம்??” என்று விக்ரம் கேட்க, “அதான் சொன்னேனே சார், எனக்கு இந்த ஊரு, அங்க இருக்குற மக்கள் எல்லாருமே தான் பிடிச்சிருக்கு” இன்று சனந்தா கூறினாள். “ம்ம்… சரி நம்ம ரெண்டு பேரும் சரியாவே அறிமுகம் ஆகல அதனால இப்ப நம்ம அறிமுக படுத்திக்கலாம்…. என் பேரு விக்ரம்” என்று விக்ரம் கூறி சனந்தாவை பார்க்க, அவள் அதை புரிந்து கொண்டு, என் பேரு சனந்தா!! என்றாள்.
“எங்க ஊரு ஊட்டிய தாண்டி கொஞ்சம் மேலே, வண்ணம் கிராமம்” என்று விக்ரம் கூற, “எங்க ஊரு கோயம்புத்தூர்” என்றாள் சனந்தா. “நான் ஊட்டியில தான் படிச்சது எல்லாமே” என்று விக்ரம் கூற, “நான் கோயம்புத்தூரில ஸ்கூல், காலேஜ் படிச்சேன்…. அதுக்கப்புறம் ஒரு கோர்ஸ் நியூயார்க்ல பண்ணேன்” என்று சனந்தா கூறினாள்.
“எங்க ஊருக்கே நான் வேலை செய்யணும் அப்படிங்கறதுக்காகவே காலேஜ் படிக்கும் போதே சர்வீஸ் எக்ஸாம்ஸுக்கு எல்லாம் ப்ரிபேர் பண்ணி எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி எங்க ஊர்ல ஃபாரஸ்ட் ரேஞ்ச் ஆஃபீஸ்ர் ஆனேன்” என்று விக்ரம் கூறவும், “அப்பா ஹோட்டலியர் அதனால எனக்கு ஃபுட் சார்ந்து படிக்கணும்னு ஆசை, அதுல நிறைய ஆர்வம் இருந்ததுனால எங்க சீனியர்ஸ் கூட அவங்க டீம்லயே சேர்ந்து நிறைய வேலைகளை பார்க்க ஆரம்பிச்சான்… அப்போ இன்னும் நிறைய கத்துக்கணும்னு ஆசைப்பட்டதுனால திருப்பி படிச்சுட்டு வந்து அவங்க கூட வேலை பார்த்துட்டு இருக்கேன்” என்று சனந்தா கூறினாள்.
“என்னோட ஃப்ரெண்ட்ஸ்னு பார்த்தா சரவணன் அப்புறம் அபிலாஷ் இவங்க மட்டும் தான், அதுலயும் ரொம்ப க்ளோஸ் சரவணன்” என்று விக்ரம் கூற, “எனக்கு ஃபிரண்ட்ஸ்னு பெருசா யாரும் இல்ல… காலேஜ்ல என் கூட படிச்சவங்க ரெண்டு பேர் இருக்காங்க அவங்க கூட தான் எப்பயாவது வெளியில போறது வரர்து…. மத்தபடி ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாம் யாரும் இல்லை” என்று சனந்தா கூறினாள்.
“எனக்கு எப்பவும் டீ குடிக்க தான் பிடிக்கும்” என்று விக்ரம் கூற, “என்ன இதையும் சொல்றாரு…. இப்ப நானும் இதுக்கெல்லாம் பதில் சொல்லனுமா??” என்று சனந்தா அவளுக்குள் புலம்பிக் கொண்டு, “எனக்கு அப்படி இல்லை என்ன கிடைக்குதோ அதை சாப்பிட்டுக்குவேன்” என்று சனந்தா கூறினாள்.
“நான் தலைவர் ரஜினி சாரோட ஃபேன்” என்று விக்ரம் கூற, “எனக்கு அப்படி இல்ல எல்லாரையும் பிடிக்கும்…. பெருசா படங்கள் பார்க்க மாட்டேன்…. பார்க்குறத ரொம்ப தேர்ந்தெடுத்து தான் பார்ப்பேன் அதனால எனக்கு எல்லாரையும் பிடிக்கும்” என்று சனந்தா கூறினாள்.
“எனக்கு எங்க ஊரு தான் எல்லாமே… என் உசுரேன்னு கூட சொல்லலாம்” என்று விக்ரம் கூற, சனந்தா புன்னகைத்து, “எனக்கு அப்படி எதுவுமே இல்லைன்னு உங்களை பார்க்கும் போது ஒரு சின்ன பொறாமை வருது” என்று கூறினாள். “இவளுக்குனு தனிபட்ட விருப்பம் எதுவும் இல்லையா… எதுவா இருந்தாலும் ஓகே, எல்லாமே பிடிக்கும்னு சொல்லுறா” என்று விக்ரம் மனதில் ஆராய்ந்தான்.
இப்படி இருவரும் அவர்களை பற்றி பேசிக் கொண்டே போக, “நான் சிங்கள் தான்” என்று விக்ரம் கூறவும், சனந்தா அவளையும் மீறி, “நானும் சிங்கிள் தான்” என்று கூறினாள். அவள் கூறிய பின், “ப்ச்… நான் ஏன் இதை சொன்னேன்… அவர் சொன்னாருன்னா எல்லாத்துக்கும் நானும் பதில் சொல்லிட்டு இருக்கேன்… ப்ச்” என்று அவளையே கடிந்து கொண்டாள்.
அவளின் முகம் போன போக்கை கவனித்த விக்ரம் அவளை பார்த்து சிரிக்க அவனது சிரிப்பில் அவள் சொக்கி தான் போனாள். சனந்தா அவனையே பார்த்துக் கொண்டிருக்க, என்ன?? என்று இரு புருவங்களை உயர்த்தி விக்ரம் கேட்க, சனந்தா அவளை சுதாரித்துக் கொண்டு, ஒன்னும் இல்லை என்பது போல் தலையை அசைத்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.
கோயம்புத்தூரில் இருந்து வண்ணம் கிராமத்திற்கு புறப்படும் போது நிறைய கேள்விகளுடனும் குழப்பத்துடன் ஆரம்பித்த பயணம் இப்பொழுது விக்ரமுடன் கிராமத்தில் இருந்து திரும்பி கோயம்புத்தூருக்கு வரும் போது சனந்தாவின் மனதில் அத்தனை குழப்பங்கள் இருந்தாலும் அனைத்தும் மறந்து மனசு லேசாகி சந்தோஷமாக உணர்ந்தாள்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 26
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.