பாகம் -26

சத்யா ஷ்யாம் மை முறைக்க யாரு மப்பிள இது. இந்த போடு போடறா.

இது நங்கையோட தங்கை. சத்யா

சத்யா....என்று ஒரு முறை சொல்லிக்கொண்டான் ஷ்யாம்.

சரி மாமா பேசிட்டு இருங்க நான் டிஸ்சார்ஜ் ஆகரதுக்கு எல்லா பார்மாலிட்டியும் முடிச்சிட்டு வந்தரேன்.

ம் ம்... சரி மாப்ளே என்றவன் பார்வை என்னவோ சத்யாவின் மேல் தான் இருந்தது.
அதை சத்யாவும் அறிந்தும் அறியாததை போலே இருந்தாள்.

சத்யா அக்கா இவரு தமிழ் மாமாக்கு மாமா முறையா?
ஆமாம் சத்யா.சொந்த அக்கா பாய்யன்னாம்.
ஓ...
ஆனா பார்த்த சின்ன வயசு மாதிரி தெரியுது.
அத அவர்கிட்டையே கேலன்.
அட போங்க அக்கா.என்று சிணுங்கினாள் சத்யா.

இதை காதில் வாங்கி கொண்ட ஷ்யாம்.

இப்போ யாருக்கு என்ன டவுட்.

எனக்கும் மாறணுக்கும் 10 வயசு தான் டிப்பிரண்ட் போதுமா.

அடேங்கப்பா.....

அப்ப ஓகே அங்கிள்.

என்ன அங்கிளா 😳

சிறிது நேரத்தில் அங்கே வந்துவிட்ட மாறன் நங்கையை தூக்கிக் கொண்டான்.

ஐயோ என்ன பண்றீங்க நீங்க.
என்ன இறக்கி விடுங்க,

ஷ்....சு 🤫 சத்தம் போடாத என்றபடி ஒரு பார்வை பார்த்தான்.

வேறேதும் எதிர்க்க வில்லை அவள்.

ஷ்யாம் மற்றும் சத்யா முன் இருக்கையிலும்

மாறன் மற்றும் நங்கை பின் இருக்கையில் அமர்ந்தான்.

ஷ்யாம் காரை இயக்கினாலும் பார்வை அவ்வப்பொழுது சத்யா மீதும் படர்ந்து கொண்டே தான் இருந்தது.

நங்கை வரும் வழிியிலேயே தூங்கி விட்டாள்.

மாறா இந்த ஆக்சிடென்ட் ட பத்தி நீ என்ன நினைக்கிற?

தெரியல மாமா! பிஸ்னஸ் ல யாராவது இப்படி பண்ணவும் சான்ஸ் இருக்கு ஒரு வேல அந்த ராஜேஷ் பண்ணி இருப்பானோ.

இல்லே மாறா எப்பவும் தொழில்ல போட்டினா அவங்களோட ரெபிடேஷன் தான் ஸ்பாயில் பண்ண நினைப்பாங்க அவங்களுக்கு உன்ன கொல்லனும்னு எந்த மோட்டிவ் இல்ல சோ இது வேற யாரோ தான் பண்ணி இருக்காங்க.

அப்படினா....?

இத்தனை வருஷம் இல்லாத எதிரிங்க இப்போ திடீர்னு முளைக்கிறாங்கன்னா யாருக்கோ நீ பண்றது பிடிக்கல அப்படித்தானே.

ஆமாம்!


எனக்கு என்னவோ அப்பா அம்மா மேல டவுட்டு இருக்கு ஏன்னா இப்ப நடக்குற பிரச்சனையை பார்த்தால் இதுவா தான் இருக்குமோ மாறன் மாமாவ பழிவாங்கறதுக்காக அவங்க கூட இப்படி பண்ணி இருக்கலாம் இல்ல. என்றால் சத்யா

ஆமாம் சத்யா அதுக்கும் சான்ஸ் இருக்கு என்றான் மாறன்.

ஒருவேளை அப்பாவா கூட இருக்கலாம் இல்ல மாமா. ஏன்னா நங்கைய கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால அவரோட பிசினஸ் காண்ட்ராக்ட் கேன்சல் ஆயிடுச்சு அந்த கோபத்தினால கூட இப்படி பண்ணி இருக்கலாம்ல.

இல்ல மாற சான்சே இல்ல

நங்க கூட கார்ல வரது நீயும் தான் அப்படின்னு அசோக் மாமாவுக்கு நல்லா தெரியும் சோ இந்த அளவுக்கு அவரு ரிஸ்க் எடுக்க மாட்டாரு.

அப்போ சத்யா சொன்ன மாதிரி சத்யாவோட அம்மா அப்பாவா தான் இருக்குமோ!

இருக்கலாம்.

ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியல.
இந்த சின்ன விஷயத்துக்கு போய் இப்படி உயிரை எடுக்கிற அளவுக்கு போவாங்களா?

அதான் மாமா எனக்கும் புரியல.

மாறா இதுல எதுவும் ரகசியம் இருக்கு அது என்னன்னு சீக்கிரமா கண்டுபிடிக்கணும்.


ஆமாம் ஷ்யாம் மாமா!

ம்ம்.....

இவர்கள் யோசிப்பது என்னவோ உண்மைதான்.



என்ன பண்ண சொன்னா என்ன பண்ணி வட்சிருகானுங்க.எல்லாம் கையால் ஆகாத பசங்க.இவங்களுக்கு தண்டமா சோறு போட்டுட்டு இருக்கேன். ஒரு புரோஜனம் இல்லே.


அன்பரசின் சப்தம் கேட்டு அங்கு வந்தார் மாதங்கி.

என்னங்க யார திட்டிட்டு இருக்கீங்க.
என்னாச்சு.

என்ன ஆகனும் அந்த மாறன காலிபண்ணிட்டு நங்கை ய தூக்கிட்டு வாங்கடானா
இப்படி சொதப்பி வட்சிருகாணுங்க. ஒரு ஆக்சிடென்ட் கூட ஒழுங்கா பண்ண தெரியல.

அல்லக்கை தண்டம்ங்க.?

இதுல பாதி பேரு ஹாஸ்பிடல் பில்லு வேற.

ஒருத்தன் இத்தனை பேத்த அடிச்சு இருக்கான் தடிமாடு மாதிரி இருந்துட்டு அடி வாங்கிட்டு வந்து இருக்காநுங்க.


நம்மகிட்ட நாள் ரொம்ப கம்மியா இருக்கு மாது இப்பவே ஏதாச்சும் பண்ணா தான் உண்டு இல்லைனா வெள்ளம் தலைக்கு மேல போயிடும் அதுக்கப்புறம் எதுவுமே செய்ய முடியாது.

சரி விடுங்க நீங்க டென்ஸ்சன் ஆகாதிங்க. இந்த வாட்டி தப்பிட்சா என்ன அடுத்தவாட்டி பக்காவா பிளான் பண்ணி போட்ரலாம்.

மாதங்கி கூறிட யோசனையுடன் ம்ம்...என்று
தலையாட்டினான் அன்பரசு.

சரண்யா மா!

இதோ வந்துட்டேன் தம்பி.

ஐயோ பாப்பா என்ன ஆட்சி உனக்கு
தலைல கட்டு போட்டு இருக்கு. என்ன ஆச்சி தம்பி உங்களுக்கும் உடம்பெல்லாம் காயம்.

ஒன்னும் இல்லே மா நீங்க பயப்படாதீங்க. சின்ன ஆக்சிடென்ட்.

என்ன ஆக்சிடென்ட் டா....

எப்படி தம்பி என்று பதறிட

அதெல்லாம் பெரிய கதை ஆன்ட்டி என்றபடி காரை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தார் ஷ்யாம்.

ஷாம் தம்பி நீங்க எப்ப வந்தீங்க.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

அதானே ஷ்யாம் மாமா அந்த இடத்துக்கு நீங்க எப்படி கரெக்டா வந்தீங்க.

நான் ஈவினிங்கே இந்தியா வந்துட்டேன் மாற நீங்க ஹோட்டல்ல சாப்டுட்டு இருக்கும்போது உங்களோட நேரு எதிர் சீட்டுல தான் நான் உட்கார்ந்து இருந்தேன். ஆனா நீங்க என்ன கவனிக்கல பில் கட்டிட்டு திரும்பறதுக்குள்ள ஆள காணோம்.

சரின்னு நான் வெளிய வந்து பாக்குறதுக்குள்ள உங்க காரு ரொம்ப தூரம் போயிடுச்சு அதனாலதான் உங்க காரு போன வழியாவே உங்களை
ஃபாலோ பண்ணிக்கிட்டு வந்தேன்.

ரொம்ப தேங்க்ஸ் மாமா நீங்க மட்டும் கரெக்ட் டைமுக்கு வரலன்ன ரொம்ப சிரமப்பட்டு இருப்பேன்.

அதெல்லாம் விடு மாற இப்ப போய் ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க.

ஆமாம்! தம்பி நீங்க போங்க.

சரி அக்கா அப்ப நானும் கிளம்புறேன்.
என்று சத்யா கூற.

இந்த நேரத்துல எப்படி போவ சத்யா?

கேப் புக் பண்ணி போறேன் அக்கா.

கேப் எல்லாம் சேஃப்டி கிடையாது என்றான் மாறன்.

ஷாம் மாமா நீங்க போயி சத்யாவை ட்ராப் பண்ணிட்டு வந்திடுங்க.

சரி ஓகே மாறா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல அவங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனையான கேட்டு சொல்லு ஏன்னா என் டிரைவிங் சரியில்லைன்னு சொல்வாங்க.

வேண்டாம் சார் நான் கேப்பிலே போய்க்கிறேன் அடுத்தவங்க ஹெல்ப் எனக்கு தேவையில்லை.




அப்ப உன் விருப்பம். என்றான் ஷயாம்

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர்.

சத்யா நான் சொல்றதை கேளு ஷ்யாம் அண்ணா கூட நீ போ அதுதான் உனக்கு சேப் நான் சொன்னா நீ கேட்பே இல்ல. என்று நங்கை கூறிட

அதுக்கு இல்லக்கா....

ஸ்ஸ் பேசாத போ.....

சரி போறேன்.... என்று அழுத்திச் சொன்னால் சத்யா.

மனதிற்குள் சிரித்தான் ஷ்யாம்.

சரி தமிழ் மாமா நான் கிளம்புறேன் அக்காவை பார்த்து போங்க நீங்களும் பத்திரமா இருங்க.

சரி என்று தலை அசைத்தான் மாறன்.

ஆன்ட்டி நான் போயிட்டு வரேன்.
சரி மா.
சத்யாவும் ஷியாம் மும் கிளம்பிட

அசோக் உள்ளே நுழைந்தார்.
மாறன் நங்கையும் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்தனர்.

தலையில் கட்டுடன் நங்கையை பார்த்தவர் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை மாறனுக்கும் உடலில் காயம் இருப்பதை கண்டு கொண்டார். ஆனாலும் என்ன ஏது என்று மூச்சும் விடவில்லை.
ஒரு நிமிடம் இருவரையும் நேரிட்டுப் பார்த்தவர் ஒன்றும் பேசாமல் தன்னரைக்குள் புகுந்து கொண்டார்.

என்ன மனுஷன் இவர் மகனுக்கும் மருமகளுக்கும் இவ்வளவு அடிபட்டு இருக்கு என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கூட கேட்காமல் இப்படி போறாரு.
என்று புலம்பினாள் சரண்யா.

அவர் அப்படித்தான்!

சரி நங்க டயர்டா இருப்ப வா ரெஸ்ட் எடுத்துக்க என்றபடி நங்கையை தூக்கிக் கொள்ள.

சரிங்க தம்பி.
என்றபடி சரண்யாவும் அடக்கலைகுள் நுழைந்தார்.

மாறன் சார் எனக்கு தலையில தான் அடிபட்டு இருக்கு. கால்ல இல்ல அதனால என்னால நல்லாவே நடக்க முடியும் நீங்க இறக்கி விடுங்க.

அதுக்கு இல்ல நடந்தா தலைவலிக்கும் அதனாலதான் என்றிட

அதெல்லாம் வலிக்காது நான் நடந்தே வரேன் என்றாள் நங்கை.

தொடரும்
Shahiabi.writter ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -26
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.