பிரியா அப்படி கண்ணீருடன் இசை தன்னிடம் பொய்யாக பழகுகிறானா? என்று கேள்வி கேட்க,
தனது வார்த்தைகள் அவள் மனதை காயப்படுத்தி விட்டதை உணர்ந்து கொண்ட இசை அவனும் கண் கலங்கி அவள் அருகில் சென்று,
“இங்க பாரு.. உனக்கு என் மேல கோவம் வந்துச்சுன்னா நீ என்ன வேணாலும் சொல்லி என்னை திட்டு.
நீ அடிச்சா கூட நான் வாங்கிப்பேன்.
ஆனா நான் உன் கிட்ட பொய்யா பழகினேன்னு மட்டும் சொல்லாத பிரியா ப்ளீஸ்..
முன்னாடி ஒன்னு பேசிட்டு அப்புறம் வேற மாதிரி பேசுற அளவுக்கு நான் ஒன்னும் cheap ஆனவன் இல்ல ஓகேவா?
நான் இப்பயும் அதையே தான் சொல்றேன்.
உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.
நீயே வேண்டாம்னு சொன்னாலும் உன்ன பத்திரமா பாத்துக்குறதுக்கு எப்பயுமே நான் உன் கூடவே தான் இருப்பேன்.” என்று உணர்ச்சிகள் பொங்க சொன்னான்.
அவன் அருகில் சென்று தங்களுக்குள் இருந்த இடைவெளியை குறைத்த பிரியா அவனது தோள்களை பற்றி கொண்டு,
“அப்புறம் ஏன் திடீர்னு இப்படி பேசுற?
நான் அந்த பையன் கூட பேசிட்டு இருந்தத பாத்து தானே உனக்கு கோபம் வந்துருச்சு..
அதனால தானே நீ அங்க இருக்க பிடிக்காம கிளம்பி வந்த எனக்கு தெரியும்..
நீ அந்த பொண்ணு கூட சேர்ந்து குளோசா டான்ஸ் ஆடிட்டு இருக்கும் போது எனக்கும் அப்படித்தானே இருந்திருக்கும்!
அதான் சும்மா உன்னை வெறுப்பேத்தி பாக்குறதுக்காக நான் அவன் கூட நின்னு பேசிட்டு இருந்தேன்.
பட் அதுக்காக நீ என்ன எடுத்துருஞ்சு பேசலாமா?
அது மட்டும் கரெக்டா? நீயே சொல்லு!
உன்னை நான் care பண்ண கூடாதா டா?
எனக்கு அந்த உரிமை இல்லையா? சொல்லு..” என்று கேட்க,
அவளது தொடர் கேள்விகளும், அவளது நெருக்கமும், அவனுக்காக முதல் முறையாக அவள் சிந்தும் கண்ணீரும் அவன் இதயத்தை படபடக்க செய்தது.
அதனால் பேச்சாற்றுப் போன இசை தன் மீது இருந்த அவளது கைகளை எடுத்துவிட்டு,
“எனக்கு தான் உன்கிட்ட எந்த உரிமையும் இல்ல பிரியா.
உன் கிட்ட உரிமையா பேசி பழகுறதுக்கு நான் யாரு முதல்ல சொல்லு?
அதுக்கு எனக்கு தகுதி இருக்கா?
நீ பாக்குறதுக்கு அழகா இருக்க. ரொம்ப டேலன்ட் ஆன பொண்ணு.
முக்கியமா அவ்ளோ பெரிய richest familyயோட அடுத்த வாரிசு.
நான் யாரு பிரியா? என் கிட்ட என்ன இருக்கு.. உன்ன லவ் பண்றதுக்கு?
உங்க அம்மா நார்மலா இருந்தா, என்ன மாதிரி ஒருத்தன உனக்கு மாப்பிள்ளையா choose பண்ணுவாங்களா?
கண்டிப்பா பண்ண மாட்டாங்க. என் பேருக்கு பின்னாடி இருக்கிற எங்க அப்பா பேர எடுத்துட்டா,
இந்த இசை ஜஸ்ட் ஜீரோ. நான் என்னமோ உன்ன பார்த்த உடனே நீ யாழினி மாதிரி இருந்ததுனால எத பத்தியும் யோசிக்காம என்ன கல்யாணம் பண்ணிக்கிறியாற்னு பெரிய ஹீரோ மாதிரி சீன் போட்டுட்டு உன் கிட்ட கேட்டேன்.
இப்ப உன்னையும் என்னையும் compare பண்ணி பார்த்தா நான் அப்படி உன் கிட்ட கேட்டத நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு.
உனக்கு ஏதோ டைம் சரியில்ல. அதான் இங்க வந்து வேலை செஞ்சு கஷ்டப்பட்டுட்டு இருக்க..
அப்படி நீங்க மட்டும் இங்க வரலனா, இந்த மாதிரி உன் பக்கத்துல நின்னு பேசுற தகுதி கூட எனக்கு இல்லாம போயிருக்கும்.
நான் எங்கயோ இருக்கேன். நீ எங்கயோ இருக்க!
படிப்பு, Personality, financial stabilityன்னு ஒன்னுல கூட நான் உனக்கு ஈகுவல்லா இல்ல.
அப்புறம் எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு என்ன உன் கிட்ட நார்மலா பழக சொல்ற?
உன்ன லவ் பண்ண சொல்ற?
நான் உன்ன லவ் பண்றேன்னு சொல்றதுக்கு கூட எனக்கு ஒரு மாதிரி இருக்கு.”
என்று துக்கம் தொண்டையை அடைக்க சொன்ன இசை அங்கே ஓரமாக கிடந்த சோபாவில் சென்று அமர்ந்து தலை குனிந்து தன் முகத்தை மூடிக் கொண்டு ஆற்றாமையில் கண்ணீர் சிந்தினான்.
“இவனுக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா? எதுக்கு இப்படி எல்லாம் லூசுத்தனமா உளறிட்டு இருக்கான்?”
என்று யோசித்து குழம்பிய பிரியா அவன் சொன்ன அனைத்தையும் ஒரு முறை நினைத்துப் பார்த்துவிட்டு சற்று முன் நடந்த சம்பவத்தை அதனுடன் ஒப்பிட்டு பார்த்தாள்.
அவன் அந்த guitarist உடன் இவள் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு அதனுடன் எத்தனையோ விஷயங்களை தொடர்பு படுத்தி ஓவர் திங்கிங் செய்து,
இப்போது inferiority complexல் இப்படி எல்லாம் பிதாற்றிக் கொண்டு இருக்கிறான் என்று உடனே அவளது மூளை அனைத்தையும் அனலைஸ் செய்து அவளிடம் சொன்னது.
அவனை புரிந்து கொண்ட பிறகு அவளுக்கு அவன் மீது கோபம் வருவதற்கு பதிலாக,
அவன் மீது இருந்த அன்பும் மரியாதையும் பல மடங்கு கூடியது.
உடனே அவள் மெல்ல நடந்து அவன் அருகில் சென்று தரையில் மண்டியிட்டு அவன் முகத்தை தன் கைகளால் ஏந்திக் கொள்ள,
அவளது முகத்தில் இருந்த கண்ணீர் கோடுகளை பார்த்த இசைக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.
அதனால் “உன்ன ஹர்ட் பண்ணனும்னு நினைச்சு நான் இப்படி எல்லாம் பேசல.
எனக்கு நிஜமாவே உன் கிட்ட என்ன சொல்றது, அடுத்து நான் என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல.
ஆனா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு டி.
உனக்கும் எனக்கும் நடுவுல இருக்கிற டிஸ்டன்ஸை யோசிச்சுப் பாக்கும்போது,
என் மனசுல இருக்கிறத உன் கிட்ட சொல்ற தைரியம் கூட எனக்கு வர மாட்டேங்குது.
ஆனா நீ எனக்கு கிடைக்காம போயிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சா,
நீ இல்லாத அந்த கொடுமையான வாழ்க்கையை வாழ்றதுக்கு பேசாம செத்தே போடலாம்னு தோணுது.
நீ எனக்கு ஒரே ஒரு ப்ராமிஸ் மட்டும் பண்ணு பிரியா..
சத்தியமா நான் வேற எதுவும் உன் கிட்ட கேட்கவே மாட்டேன்!
நீ உனக்கு புடிச்ச மாதிரி யார வேணாலும் கல்யாணம் பண்ணிக்கோ.
நீ சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும். பட் எப்பயும் உன் கூடவே ஒரு நல்ல ஃபிரண்டா, அது கூட வேண்டாம்..
நீ ஜஸ்ட் உனக்கு ஒரு பாடிகார்ட் மாதிரி என்ன உன் கூட இருக்க அலோ பண்ணினா கூட போதும்.
நான் எப்படியோ உன்ன பாத்துக்கிட்டே வாழ்ந்துருவேன்.
ஆனா என்ன விட்டு தூரமா மட்டும் போயிடாத ப்ளீஸ்!
என்னால அது தாங்கவே முடியாது டி.” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது,
அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் கன்னங்களை கடந்து அவன் பிடித்திருந்த அவள் கையில் சென்று விழுந்தது.
அதனால் உடனே எழுந்து நின்ற பிரியா அவன் கைகளை பிடித்து இழுத்து அவனையும் நிற்க வைத்தாள்.
தான் கேட்ட கேள்விக்கு இன்னும் அவள் பதில் சொல்லவில்லை என்பதால் தன் முகத்தை சோகமாகவே வைத்திருந்த இசை,
“இப்ப நீ ஏன் சைலன்டா இருக்க? உனக்கு ஜஸ்ட் பாடிகார்டா இருக்கிறதுக்கு கூட எனக்கு தகுதி இல்லயா?
அதான் அதுக்கு கூட ஓகே சொல்ல மாட்டேங்கறியா?
நான் வேணா ஜிம் போய் என் பாடிய ரெடி பண்ணிட்டு எங்கயாவது நல்ல ட்ரெயினரா பார்த்து professional body guard training எடுத்துட்டு வரவா?
அப்பயாவது நீ ஓகே சொல்லுவியா?
உனக்கு ஒரு பிரச்சனைனா, என் உசுர குடுத்தாவது உன்ன காப்பாத்துவேன் டி! என்ன நம்பு ப்ளீஸ்!”
என்று அவன் பாட்டிற்கு சோகமே உருவாக ஏதேதோ பேசிக் கொண்டே சென்றான்.
அவனை முறைத்துப் பார்த்த ப்ரியா “இவன் கிட்ட பேசி எஸ்பிளைன் பண்றது எல்லாம் வேலைக்கே ஆகாது.
இந்த இசை சரியான லூசு பையனா இருக்கான்.” என்று நினைத்து அவனது சட்டை களரை பிடித்து அவனை தன் பக்கம் இழுத்தாள்.
அதில் அவன் முகம் அவளது முகத்திற்கு அருகில் வர, அவனை விட அவள் கொஞ்சம் குட்டையாக இருந்ததால் அவனது கால்களில் ஏறி நின்ற பிரியா,
அவனது கழுத்தில் தன் கைகளை மாலையாக போட்டு அவனது இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்தாள்.
அவள் தனக்கு மிக நெருக்கமாக வந்தவுடனேயே இசையின் மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது.
அதனால் என்ன நடக்கிறது என்று புரியாமல் அவன் அவளை குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்க,
அவள் இப்படி ஒரு எதிர்பாராத ஆழமான இதழ் முத்தத்தை கொடுக்கவும், அவனது சப்த நாடிகளும் அடங்கிவிட்டது.
விழிகள் விரிய ஒரு நொடி இவள் ஏன் இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறாள்? என்று புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்த இசையிடம்
“டேய் முட்டாள்! நீ கேட்ட கொஸ்டினுக்கு இது தான்டா ஆன்சர்.
அவ உன்ன பாடிகார்டா இல்ல.. life partnerஆ வர சொல்றா!
நான் தாண்டா உன் பொண்டாட்டின்னு உன் மரமண்டைக்கு உறைக்கிற மாதிரி பச்சாக்குனு இப்படி ஒரு லிப் லாக் அடிச்சு ஒரு பொண்ணு தைரியமா சொல்லும்போது,
அது கூட புரிஞ்சுக்கிற அறிவு இல்லையா உனக்கு? இப்படி மண்ணு மாதிரி நின்னுட்டு இருக்க?” என்று கேட்டு அவனை அசிங்கப்படுத்தியது அவன் மனசாட்சி.
அதனால் உடனே அவனும் அவளது வழியிலேயே சென்று தனது காதலை அவளிடம் வெளிப்படுத்த நினைத்து அவளது இடுப்பில் கை வைத்து அவளை தன் பக்கம் இழுத்து அவள் ஆரம்பித்த முத்த வேட்டையை சூடு பிடிக்கச் செய்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றான்.
அவன் அப்படியே அவளை தூக்கிக் கொண்டு அப்போதும் முத்தம் கொடுப்பதை நிறுத்தாமல் அவளுடன் சென்று சோஃபாவில் அமர்ந்தான்.
இப்போது பிரியா அவன் மடியில் அமர்ந்திருக்க, அவர்கள் இருவரும் உணர்ச்சிகள் பொங்க ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொண்டிருந்தார்கள்.
வெகு நேரமாக அவர்கள் இதழ்கள் நான்கும் ஆழம் வரை சென்று இதழ் தேனை பருகியதால் இருவருக்கும் மூச்சு வாங்கியது.
அதனால் இருவரும் தங்களது இதழ்களைப் விளக்கினார்கள். அப்போதும் பிரிய மனமில்லாமல் அவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு அமர்ந்திருக்க,
அவள் இடுப்பில் கை வைத்து இன்னும் அவளை தனக்கு நெருக்கமாக இழுத்து பிடித்துக் கொண்ட இசை மூச்சு வாங்கியப்படியே அவளது கழுத்து வளைவில் முத்தமிட்டவாறு அவளது சிவந்திருந்த காது மடல்களை லேசாக கடித்தான்.
அதில் வெட்கத்தில் அவள் முகம் குங்குமமாக சிவந்தது.
அதனால் அவள் அவனது இடுப்பையும் தோள்களையும் தனது இரு கைகளால் பற்றிக்கொள்ள,
அவளது முகம் அவனது கழுத்தோரம் புதைந்திருந்ததால் அவளுடைய சூடான மூச்சுக்காற்று அவனது கழுத்தில் பட்டுக் கொண்டிருந்தது.
பிரியாவின் காதோரம் “நிஜமாவே உனக்கு என்ன புடிச்சிருக்கா?” என்று அவன் நம்ப முடியாமல் கேட்க,
சட்டென தன் முகத்தை திருப்பி அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்த ப்ரியா அவனது தலை முடியை கொத்தாக இறுக்கி பிடித்து,
திடீரென வந்த கோபத்தில் சிவந்த கண்களோடு அவனைப் பார்த்து,
“என்ன பாத்தா கண்டவன் கூட எல்லாம் இப்படி ரொமான்ஸ் பண்ற பொண்ணு மாதிரி தெரியுதா உனக்கு?
இன்னொரு தடவை இப்படி கேட்ட கொன்றுவேன் உன்ன!
என்னை விட உனக்கு கொஞ்சம் அறிவு கம்மின்னு எனக்கே தெரியும்.
அதான் நீ எவ்ளோ லூசுத்தனமா பேசி என்ன கடுப்பேத்துனாலும் நான் உன்னை போனா போகுதுன்னு விட்டுடறேன்.
இல்லைனா எனக்கு இவ்ளோ நேரமா நீ பேசுனதை கேட்டு வந்த கோபத்
துக்கு உன்னை தூக்கிப்போட்டு அடிச்சி மிதிச்சிருப்பேன்.
உன்னால என் அடியெல்லாம் தாங்கவே முடியாது. So be careful.” என்று அவனை மிரட்டும் தோரணையில் சொல்லிவிட்டு பிடித்திருந்த அவன் தலை முடியை விட்டாள்.
-மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-25
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.