Chapter 25

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
“என்னடா காலையிலேயே ஃபோன் பண்ணி இருக்க?? இன்னிக்கி கிளாஸ் இல்லையா??” என்று பிரகாஷ் கேட்க, “இல்லப்பா இன்னிக்கு மதியம் தான் கிளாஸ் இருக்கு… சும்மா தான் பண்ணேன்” என்று கௌதம் கூறினான். “நீ சும்மா எல்லாம் பண்ற ஆள் இல்லையே…. என்ன வேணும் உனக்கு?” என்று பிரகாஷ் கேட்க, “சரி நான் உங்க கிட்ட சுத்தி வளைக்காம நேராவே கேட்கிறேன், சனாக்கு என்ன ஆச்சு??” என்று கௌதம் கேட்டான்.

பிரகாஷ் தன்னை சுதரித்துக் கொண்டு, “ஒன்னும் இல்ல ஆக்சிடென்ட் தான்” என்று கூறினார். கௌதம் சனந்தாவுடன் நடந்த உரையாடலை உறவும், “ஆமாண்டா அவளுக்கு கொஞ்சம் மாசம் முன்னாடி என்ன நடந்ததுன்னு தெரியல…. மறந்துட்டா” என்று பிரகாஷ் கூறினார்.

“சரி அதை கூட விடுங்க நீங்க கண்டிப்பா சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்…. சனாவ அங்க வாலன்டியரா அனுப்ப எப்படி அங்கிள் ஆன்ட்டி சம்மதிச்சாங்க??” என்று கௌதம் கேட்க, “அவங்க எங்க சம்மதிச்சாங்க…. சனா தான் சம்மதிக்க வெச்சா… நான் அவங்க வீட்டுக்கு போனப்போ சும்மா இந்த மாதிரி வாலன்டியர் தேடிட்டு இருக்காங்கன்னு சொன்னேன்…. அப்ப சனா தான் நான் போறேன்னு சொல்லி அவ தான் முந்திக்கிட்டா…. அவளுக்கு என்னன்னா வீட்டிலேயே அடைஞ்சு இருக்கா…. அம்மா அப்பா வெளியவே அனுப்ப மாட்டேங்கிறாங்கன்னு இந்த வாய்ப்ப பயன் படுத்திகிட்டா அவ….. அதுவும் இல்லாம அவளுக்கு இந்த மாதிரி பண்றது புடிக்கும் தானே அதான்” என்று பிரகாஷ் தட்டு தடுமாறி சமாளித்து முடித்தார்.

“சந்திரசேகர் அங்கிள் பத்தி எனக்கும் தெரியும் தான் பா…. ஆப்ரேஷன் எல்லாம் முடிஞ்சு வந்து மூணு மாசம் தான் ஆயிருக்கு அவளுக்கு, அதுக்குள்ள எப்படி அவர் அனுப்ப ஒத்துக்கிட்டாரு?” என்றும் கௌதம் துருவி துருவி கேட்க, “அவ நார்மல் ஆயிட்டா டா…. அதுக்கப்புறம் எல்லாமே அவளே செய்ய ஆரம்பிச்சிட்டா ரெண்டு மாசத்துக்குள்ள…. அதனால அனுப்பி இருப்பாங்க” என்று பிரகாஷ் கூறவும், “சரி நான் எவ்ளோ கேட்டாலும் நீங்க உண்மைய சொல்றதா இல்ல போல…. எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க” என்று கௌதம் கேட்டான்.

“என்ன ஆச்சு??? என்ன விசாரிக்கணும் உனக்கு??” என்று பிரகாஷ் கேட்க, “சனா ரொம்ப உறுதியாக ஊட்டிக்கு போயிட்டு வரும் போது தான் அவளுக்கு ஆக்சிடென்ட் நடந்துச்சுன்னு சொன்னான்னு சொன்னீங்க இல்ல நீங்க அவ கண் முழிச்சப்போ…. எனக்கும் விகாஷுக்கும் ஒரே ஒரு சந்தேகம் தான் உண்மையிலேயே அவ தனியா ஊட்டுக்கு போயிட்டு வரும் போது ஏதாவது அந்த மாதிரி நடந்துதா… ஆக்சிடென்ட் பெருசா ஆகல அவ நல்லபடியா வந்துட்டா தான்… ஆனா, அந்த மாதிரி யாராவது மிரட்டினதோ இல்ல ஏதாவது வேற ஏதாவது நடந்திருக்குமோ அப்படின்னு எங்களுக்கு சந்தேகம் இருக்கு…. அத மட்டும் கொஞ்சம் விசாரிச்சுட்டு சொல்லுங்கப்பா” என்று கௌதம் கூறினான்.

“ஓ!!! ஆமால, அவளும் கண் முழிச்சு எப்போ என்ன ஏதுன்னு எதுவுமே கேட்கல…. ரொம்ப உறுதியா ஊட்டிக்கு போயிட்டு வரும் போது அப்ப தான் ஆச்சு அப்படின்னுட்டு அவளே சொன்னதுனால நாங்களும் ஆமா அப்ப தான் ஆமா அப்ப தான்னு சொல்லி சமாளிச்சுட்டோம்…. இப்ப நீ சொல்லும் போது தான் ஏதாவது நடந்திருக்குமோன்னு சந்தேகம் வருது…. நான் அதையும் விசாரிக்க சொல்றேன்…. பார்ட்டில இருந்து வரும் போது நடந்த ஆக்சிடென்டையும் விசாரிக்க சொல்லி இருக்கேன்…. ஏன்னா சனாவோட காரை வந்த இடிச்சுது அந்த ஏரியாவுல வர வண்டியே கிடையாது…. இது மட்டும் தான் இப்போதைக்கு சொல்லி இருக்காங்க…. நான் கூடவே இதையும் விசாரிக்க சொல்றேன்” என்று பிரகாஷ் கூறினார்.

“சரிங்கப்பா நீங்க எல்லாத்தையும் கேட்டுட்டு எனக்கு சொல்லுங்க… இன்னும் கொஞ்ச நாள்ல நான் இந்த எக்ஸாம் எல்லாம் முடிச்சுட்டு ஊருக்கு வந்திடுறேன்” என்று கௌதம் கூறி வீடியோ காலை துண்டித்தான்.

“என்னடா இது?? சனாக்கு இவ்வளவு சீக்கிரமே சந்தேகம் வந்துருச்சு?” என்று அருகில் அமர்ந்திருக்கும் சந்திரசேகர் கேட்க, “நல்லது…. அவளுக்கே ஞாபகம் வந்துட்டா கூட உண்மை என்னன்னு தெரிஞ்சிடும்…. இப்படி விசாரிச்சு நமக்கு எந்த விவரமும் வெளியே வராம இருக்குறது தான் நமக்கு ரொம்ப தலை வலியா இருக்கு” என்று பிரகாஷ் கூறினார்.

“அதுவும் சரி தான் டா….. நம்மளும் சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்தப்போ கூட சனா ஒரு மாதிரி போதையில தான் இருந்தா…. வலுக்கட்டாயமாக தான் அந்த பொண்ணையும் கார்ல ஏத்துனா… இதுவரைக்கும் மட்டும் தான் தெரிஞ்சுது…. அதுவும் இருட்டலன்றதுனால சனாவோட காரு சனா டிரஸ்னால தான் நம்மளே கண்டுபிடிச்சோம்” என்று சந்திரசேகர் கூறினார்.

“ம்ம்…. இப்ப கௌதம் வேற ஏதோ ஒன்னு சொல்றான்… ஊட்டிக்கு போயிட்டு வந்தப்போ என்ன ஆச்சுன்னு… அதையும் சேர்த்து நான் விசாரிக்க சொல்றேன்” என்று பிரகாஷ் கூறினார். “அவ ஹாஸ்பிடல்ல இருக்கும் போதே கூட சொன்னா டா… ஊட்டில அவர் கொஞ்சம் இன்ஃப்ளூயன்ஸ் ஆன ஆளு…. அதுல கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கன்னு கேட்டா டா சனா” என்று சந்திரசேகருக்கு கூற, “யாரு என்னன்னு தெரிஞ்ச அப்புறம் என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்” என்ற பிரகாஷ் கூறினார்.

“எல்லாமே ஒரே குழப்பத்திலேயே இருக்கு…. எங்களுக்கே இப்படி இருக்குன்னா பாவம் அவளுக்கு இன்னும் எவ்ளோ கஷ்டமா இருக்கும்ல” என்று சந்திரசேகர் வருத்தத்துடன் கூற, “ஒன்னும் ஆகாது… நீ தைரியமா இரு எல்லாம் உண்மை கண்டிப்பா ஒரு நாள் வெளியில வரும்” என்று பிரகாஷ் ஆறுதல் அளித்தார்.

பேச்சை மாற்றும் விதமாக, “சனா எப்போ வரா?” என்று பிரகாஷ் கேட்க, “இந்த வாரம் வரேன்னு சொல்லி இருக்கா போய் ஒரு மாசம் மேல ஆகுது அவங்க அம்மாவும் வா வான்னு கூப்டிட்டு இருக்கருதுனால இந்த வாரம் வரேன்னு சொல்லி இருக்கா டா” என்று சந்திரசேகர் கூறினார்.

“சரி முடிஞ்ச அளவுக்கு அவகிட்ட எதையும் காட்டிக்காத… ஏன்னா, இனிமே அவ என்ன நடந்ததுன்னு நம்ம கிட்டயும் போட்டு வாங்க பார்ப்பா, கொஞ்சம் உஷாராவே இரு… ஏன்னா நம்ப உண்மைய சொல்ல போய் அவ எப்படி அதை எடுத்துப்பான்னு நமக்கு தெரியாதுல அதுக்காக தான் சொல்றேன்…. இதுல அவளோட உடல் நிலையும் அடங்கி இருக்கு எல்லாத்தையும் நம்ம மனசுல வெச்சு தான் பொறுமையா இதை ஹேண்டில் பண்ணனும்” என்று பிரகாஷ் கூறவும், சந்திரசேகர் ஆமோதித்து, “சரி நான் கிளம்புறேன், உன்கிட்ட பேசிட்டு என்ன அப்டேட் இருக்குன்னு கேட்டுட்டு போலாம்னு தான் வந்தேன்” என்று சந்திரசேகர் கூறினார். “சரி சரி பத்திரமா வீட்டுக்கு போ எதையும் யோசிக்காத ரொம்ப வருத்தப்படாத தைரியமா இரு” என்று பிரகாஷ் கூறி அனுப்பினார்.

“ஹாய் விகாஷ்!!! உன் மெசேஜ் பார்த்தேன்…. ஆனா, இப்ப தான் நான் ஃப்ரீ ஆனேன்…. சாப்பிட்டுட்டு வீட்டுக்கு வந்து பொறுமையா உனக்கு கால் பண்ணலாம்னு தான் இப்ப பண்ணேன்” என்று சரவணன் கூறவும், “அது பரவாயில்ல சரவணன் உங்க கிட்ட கொஞ்சம் விவரம் மட்டும் கேட்கணும்…. முடிஞ்ச அளவுக்கு இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்ணி சொல்ல முடியுமா?” என்று விகாஷ் தயக்கத்துடன் கேட்க, “என்ன இன்ஃபர்மேஷன் வேணும்னு கேளு நான் முடிஞ்ச அளவுக்கு இங்க எல்லாம் விசாரிச்சுட்டு உனக்கு சொல்றேன் கண்டிப்பா” என்று சரவணன் கூறினான்.

“சனா இன்ஸ்பெக்ஷன் போன ஸ்கூல் லிஸ்ட் எல்லாம் நான் உங்களுக்கு அனுப்புறேன்…. அங்க யாரு காண்ட்ராக்ட் எடுத்திருக்காங்கனு அவர் யாருன்னு எனக்கு விசாரிச்சுட்டு சொல்லுங்க” என்று விகாஷ் கேட்க, “அதுவா இங்க நம்ம ஊர்ல இருந்து ஒரு பொண்ணு கூட ஊட்டி ஸ்கூல்ல தான் படிக்கிறா…. அந்த ஸ்கூல்ல கான்ட்ராக்ட் எடுத்தவர் தான் மீதி இருக்கிற பெரிய ஸ்கூல்லயும் ஃபுட் காண்ட்ராக்ட் எடுத்து இருக்காரு… அவர் பேரு வேலுமணி…. கொஞ்சம் முரட்டு ஆள்னு மட்டும் கேள்விப்பட்டு இருக்கேன் மீதி விவரம் எல்லாம் நான் வேணா விசாரிச்சுட்டு உனக்கு சொல்றேன்” என்று சரவணன் கூறினான்.

“ம்ம்…. எனக்கும் ஒரு சின்ன சந்தேகம் தான் அது என்னன்னு தெரிஞ்ச அப்புறமா நான் விவரமா உங்க கிட்ட சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க” என்று விகாஷ் கூற, “அதெல்லாம் பரவாயில்லை நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்று சரவணன் கூறினான்.

இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க விக்ரம் ஃபோன் செய்யவும் சரவணன் வீடியோ காலை துண்டித்து, விக்ரமின் அழைப்பை எடுக்க, மச்சான்!!! என்று விக்ரம் ஆரம்பிக்கவும், “ஏன் டா காலையிலிருந்து நைட் வரைக்கும் உன் கூட தானே சுத்திக்கிட்டு இருந்தேன்… இப்ப எதுக்கு ஃபோன் பண்ணி இருக்க” இன்று சரவணன் கடுப்புடன் கேட்க, “நீ ஏன் இவ்ளோ கோவப்படுற புரியலையே எனக்கு” என்று விக்ரம் கூற, “அதெல்லாம் ஒன்னும் இல்ல என்னன்னு சொல்லு?? எதுக்கு பண்ண?” என்று சரவணன் கேட்டான்.

“அவ இந்த வாரம் வீட்டுக்கு போறேன்னு சொல்லி இருக்கா இல்ல நானே கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரேன்” என்று விக்ரம் கூறவும், “நீங்க ஏதோ சொன்னீங்க தம்பி… ஆனா, என் காதுல அது சரியா விழலையே” என்று சரவணன் கேலி செய்ய, “ப்ச்… என்னை ஓட்டுறதுன்னா வந்துருவடா நீ…. நானே அவளை கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரேன் சரியா அத தான் சொன்னேன்” என்று விக்ரம் கூறினான்.

“எவ??? என்று சரவணன் கேட்க, “ப்ச்…. ஏன் டா இப்படி பண்ணுற?? நம்ம ஊருக்கு வந்து இருக்குற வாலன்டியர் டீச்சர் சனந்தா, போதுமா??” என்று விக்ரம் கூற, “சரிங்க ஆஃபீஸர் அப்படியே பண்ணுங்க ஆஃபீஸர்” என்று சரவணன் கேலி செய்தான்.

“ப்ச்…. இவன் வேற… சரி அவ ஊருக்கு போயிட்டு வர்றர்துக்குள்ள அவளுடைய ரூம்ல லைட் மட்டுமாவது போட்டு விடலாம்” என்று விக்ரம் கூற, “ஹோ…. அது வேறயா அப்புறம் வேற என்ன என்ன எல்லாம் பண்ணலாம்” என்று சரவணன் கேட்க, “இப்போதைக்கு இது தான் வேற ஏதாவது பிளான் பண்ணா சொல்றேன் டா” என்று விக்ரம் கூறினான்.

“நீ பிளான் பண்ணுவ அதெல்லாம் செய்யறதுக்கு நான் தான் கிடச்சனா உனக்கு” என்று சரவணன் கேட்க, “உன்னை தவிர வேற யார் இருக்கா டா…. ஆங்… அதை விடு எனக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் கொஞ்சம் கேட்டு சொல்லேன் அவளோட தம்பி கிட்ட…. பிரகாஷ் சாரோட பையனுக்கும் இவளுக்கும் தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணி இருக்காங்களான்னு??” என்று விக்ரம் கேட்டான்.

“ஏன் டா சனா ஆரம்பத்தில இருந்து கடைசி வரைக்கும் பொலம்பி அழுததெல்லாம் உனக்கு ஞாபகம் இல்ல…. நடுவுல அவ, “நீ எனக்கு சொல்லலன்னா வீட்டில சம்மதம்னு சொல்லிருவேன்னு” சொன்னது மட்டும் தான் உன் மனசுல நின்னு இருக்கா டா??” என்று சரவணன் கேட்க, “என் பிரச்சனை எனக்கு டா என்ன பண்ண சொல்ற” என்று விக்ரம் கூறினான்.

“கேட்குறேன் அதையும் கேட்டு சொல்றேன்… ஆனா, அந்த பையன் கௌதம் சொன்னான்ல, “நம்ம தான் பெரியவங்க கிட்ட வேண்டாம்ன்னு சொல்லிட்டோம்னு” சொன்னான்ல இருந்தும் உனக்கு இப்போ அது தான் டவுட்டா?” சரவணன் கேட்க, “என் பயம் எனக்கு என்ன பண்றது??? ஒரு வாட்டி கேட்டு சொல்லேன் கன்ஃபார்ம் பண்ணிக்கிலாம்னு தான்” என்று விக்ரம் கூறினான்.

“நீயே தெளிவில்லாம தான் சுத்திட்டு இருக்க…” சரவணன் கூற, “இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும் டா நான் ஆக்சிடென்ட் பத்தி விசாரிக்கிறேன்னு சொல்லி இருந்தேன்ல…. நான் அத பத்தி கோயம்புத்தூர்ல நமக்கு தெரிஞ்ச போலீஸ் கிட்ட தான் கேட்டேன்.. ஆல்ரெடி அதை பத்தி பிரகாஷ் சார் விசாரிக்க சொல்லி இருக்காருன்னு சொன்னாங்க” என்று விக்ரம் கூறினான்.

“ஆமா நம்ம பாட்டுக்கு இஷ்டத்துக்கு சனா மேல பழிய போட்டுட்டு கோபத்தை காட்டிட்டு வந்துட்டோம்… ஆனா, உண்மை என்னன்னு அவங்களுக்கும் தெரியாதுல அதனால அவங்களும் விசாரிக்க சொல்லி இருப்பாங்க” என்று சரவணன் கூறினான்.

“எனக்கு இப்போ உண்மை தெரிஞ்சுக்கணும்னு இருக்கு தெரிஞ்சதுக்கு அப்புறம் என்னோட முடிவு எப்படி மாறும்னு தெரியல… அந்த பயமும் வேற இருக்குடா” என்று விக்ரம் கூற, “எதுவா இருந்தாலும் சரி நம்ம அத ஃபேஸ் பண்ணி தான் ஆகணும் சரியா…. பார்த்துக்கலாம் தைரியமா இரு” என்று சரவணன் கூறினான்.

“ம்ம்…. சரி ஓகே நான் போய் தூங்குறேன் நீயும் தூங்கு நாளைக்கு பார்க்கலாம்” என்று விக்ரம் கூறி ஃபோனை வைத்தான்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல.
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 25
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.