பாகம் -25

திடீரென காரின் முன் பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுக்கப்பட்டது. உடைந்த கண்ணடித்துண்டுகள் மாறன் மீதும் நங்கை மீதும் மலைத்துளிபோலே கொட்டியது.


என்ன நடக்கிறது என்பதை சுத்தாரிக்கும் முன் அதிவேகமாக நேர் எதிரே மாறனின் காரை நோக்கி வந்த லாரி
கண் இமைக்கும் நேரத்திற்குள்
பெருத்த சத்தத்தோடு

கார் சாலை ஓர மரத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
ஒரு நொடிக்கு முன்
லாரி தங்களை தான் குறிவைத்து வருகிறது என்று உணர்ந்த நேரம் சற்றும் எதிர் பாராத வகையில் காரை கண் இமைக்கும் நொடியில் திருப்பினான் மாறன் .
கார் சாலை ஓரம் இருந்த ஒரு மரத்தின் மீது வேகமாக மோதியது.

எதிரே இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி அதிவேகமாக அவர்களை கடந்து சென்று விட்டது.

கார் மரத்தில் மோதியதில் சிறு சிறு காயங்களுடன் மாறன் " நங்கை பயப்படாத " என்றபடி திரும்ப நங்கைக்கோ தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.மயக்க நிலையில் இருந்தால் நங்கை.
நங்க நங்க எழுந்திரு ட் டி....என்ற படி கன்னத்தை உழுக்கினான்.

மூச்சு பேட்சு இல்லை.

ஏய் எழுந்திரு ட் டி சும்மா பயம் காட்டாத என்று மிரட்ட அவளோ அசைவற்று கிடந்தாள்.

அவளை காரில் இருந்து இறங்கி தன் மடியில் போட்டுக் கொண்டவன்.

நங்க பிளீஸ் எழுதிரு டி.....

அவன் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது.

கைகால்கள் நடுங்கிற்று.

அவனால் எதையும் சிந்திக்க முடியவில்லை.

சற்று தொலைவில் சில நபர்கள் கையில் கட்டையுடன் இவர்களை நோக்கி ஒடி வர.

நங்க எழுந்திரு டி...கெஞ்சலாக

அவளுக்கு எங்கே கேட்க போகிறது.

நங்க........ என்ற அலரலில் அந்த பகுதியே அதிர்ந்தது.

அடியாட்கள் நெருங்கி வந்துவிட்டனர்.

அவர்களை தாக்க ஒரு நிமிடம் ஆகாது மாறனுக்கு,ஆனால் இப்போது நங்கையின் நிலை மிக மோசமாக இருக்க

விரைவாக அவளை அள்ளி துக்கியவன் தோளில் போட்டுக்கொண்டு ஓட ஆரம்பித்தான்.

அவர்கள் இருவரையும் துரத்த ஆரம்பித்தனர்.

மாறனின் கால்கள் தளர்ந்தன .

அவன் மனம் இரண்டாவது முறையாக பலவீனத்தை உணர்ந்தது.

கண்கள் கண்ணீரால் மறைய துவங்க...

ஓடி ஓடி தளர்ந்தான்.

அவர்களும் அருகில் நெருங்கிவிட

நங்கயை ஒரு ஓரமாக கிடத்தியவன் அவர்களை நோக்கி சென்றான்.
இனியும் அவர்களை விட்டு வைக்க கூடாது என்று

வந்த ஆத்திறதில் ருத்ரன்னாக காட்சி அளித்தான் மாறன். எங்கே அடிக்கிறான் எவ்வாறு அடி விழுகிறது என்றல்லாம் அவனுக்கு தெரியவில்லை.

அடியாட்கள் மாறனின் அடியில் சுருண்டு வில அதில் ஒருவன்

ஹே நீ போட...

ஏ அவன் கண்ணு மண்ணு தெரியாம அடிகராண்டா.ஏற்கனவே வாங்குனவங்களுக்கு எல்லாம் எத்தன தையலோ எத்தன பிராக்சரோ?


ச்சீ போடா பயந்ததாகோழி என்று

நானே போறேன் என்று பின்னே சென்று தாக்க முயல

திடீரென திரும்பிய மாறன்
அவன் கையில் இருந்த கட்டையை பிடுங்கி மண்டையை உடைத்து விட்டான், ஆத்திரம் அப்போதும் குறையாதவன்.


ஆ...........என்று கத்த அங்கிருந்த அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.


தன்னவலின் குருதி மாறனின் உடல் முழுக்க ஒட்டி இருக்க அதை பார்க்க பார்க்க அவனுக்கு பைத்தியம் பிடித்தது.

அவள் அருகே சென்ற மாறன்

அடியே என்ன விட்டு போகனும் நெனட்ச ஒன்ன சும்மா விடமாட்டேன்
டி..பல்லை கடித்து சொன்னவன்,

திடீரென என்ன விட்டு போய்றாத டி நீயும் பாதிலே என்ன விட்டுப்
போய்ராதடி
சிறு குழந்தை போலே அழுதான்.


அப்போது ஒரு கை அவன் தோளை பின்னே இருந்து தொட்டது.

கையில் அருகில் இருந்த கட்டையை எடுத்தவன் ஓங்கி அடித்தான்.

ஐயோ........😖

மாமா நீங்களா?

அப்போது தான் முகம் பார்த்தான் மாறன்.

என்ன மாற இப்படி பண்ணிட்ட?

போனவனுங்க. திரும்ப வந்துடாங்கனு நினட்சி அடிட்சிட்டேன் மாமா.

அடபோட தலையை தேய்த்துக்கொண்டே...

நீங்க எப்டி இங்க

அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்


உன் ஒய்ஃப் அ மொதல்ல தூக்கு ஹாஸ்பிடல் போகலாம் என்ற உடன்

நங்கை அள்ளிக்கொண்டு
காரில் ஏறி மருத்துவமனைக்கு விரைந்தனர்.

போகும் வழியெல்லாம் அவன் நங்கை யை அழைக்காமல் இல்லை.

காரை அதிவேகத்தில் விரைவித்தான் மாறனின் தாய் மாமன் ஷ்யாம்.

கார் டயர்கள் தேய்க்க ஸ்சர்..... ர்ஸ் என்ற ஓசையுடன் சறுக்கி கொண்டு மருத்துவமனை முன்னே நிருத்தினார் ஷ்யாம்.

நங்கையை தூக்கிக்கொண்டு சென்ற மாறன்

டாக்டர் என்று அலற அங்கு வந்த மருத்துவர் எமர்ஜென்ஸி வார்டு குள் அழைத்து சென்றனர். நங்கையை

ஓரு மணி நேரத்திற்கு பின்பு....

இவங்க கூட வந்த ரிலேடிவ் யாரு.?

சொல்லுங்க டாக்டர்

நீங்க ?

நான் அவ

என் ஒய்ஃப் சார் அவ....

ஓ. ஓகே ஓகே...

இப்போ பயப்படற மாதிரி ஒன்னும் இல்லே ஷி இஷ் பர்பேக்ட்லி ஆல் ரைட்.

அவங்களுக்கு பிளட் லாஸ் ஆனது நாள வந்த மயக்கம் தான்.

மத்தபடி ஒன்னும் இல்லே நீங்க போய் பார்க்கலாம்.

தலைல ஸ்டிசெஸ் போட்டு இருக்கோம் 7 டேஸ் கழிச்சி வந்து
ஸ்டிசெஸ் கலட்டிகொங்க.

தேங்க் யூ டாக்டர்... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..என்றவன் நங்கை பார்க்க விரைந்தான்.

நங்கை அங்கே செடியில் இருந்து அவிழ்ந்த மலறைப் போல துவண்டு கிடந்தாள் 🥀இதை பார்த்த மாறன் இதயம் 💔 வெடிப்பதை போல் உணர்ந்தன்.


மெல்ல அருகினில் சென்றவன் நங்க

ஐ அம் சாரி நான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கும் என்று அவள் கையை பிடித்துக் கொண்டு அவள் கையில் தன் நெற்றியை வைக்க

மெல்ல கண் விழித்தாள் நங்கை.

சார் என்றிட எழுந்தவன்.

ஏதோ கூற போக அவள் ஒற்றை விரலைக்கொண்டு அவன் இதழை சொல்ல விடாமல் தடுத்தாள்.

உங்க மேல எந்த தப்பும் இல்லே நீங்க ஏதும் சொல்ல வேண்டாம் என்றிட்டு
மாறனின் கண்களை தான் பார்த்தாள் நங்கை.

அவள் கூறிய வார்த்தையில் அவளை மாறனும் கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருக்க க் கூ ம்..... என்று இரும்பிய படி அறைக்குள் நுழைந்த ஷயாமின் பக்கம் இருவரும் பார்வையை திருப்பினார்.

என்ன மாற என்ன சொல்றாங்க நங்கை.

என்றபடி வந்தவர். இப்போ எப்படி இருக்குமா.

கண்களை மெல்ல அசைத்தாள் நங்கை.

இவன் என்ன பத்தி ஏதும் சொல்லி இருக்க மாட்டானே என்றிட புன்னகைத்தாள் மெல்லியதாக.

நானே என்ன பத்தி சொல்றேன் நான் ஷ்யாம் மாறனோட தாய் மாமன் அதாவது மாறன் என் சொந்த அக்கா பையன் என்றான் ஷ்யாம்.

வணக்கம் அண்ணா....

ஷ்யாம்கு நங்கையின் அண்ணன் என்ற வார்த்தை மிகவும் பிடித்து போனது நங்கையையும் தான்.

சரி மாலா நீ போய் முதல்ல காயத்துக்கு எல்லாம் ட்ரெஸ்ஸிங் பண்ணிட்டு வா.

அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா தானா சரியாயிடும்.

சொன்னா கேளு மாறா போய்ட்டுவா. நான் நங்கைய பத்திரமா பாத்துக்கரேன் உன் பொண்டாட்டிக்கு ஒன்னும் ஆகாது நீ பயப்படாம போயிட்டு வா.

சரி ஓகே.....

பத்தரம் மாமா....

அடேய் போடா....

அங்கிருந்து திரும்பி திரும்பி பார்த்த படி சென்றான் மாறன்.

அடேங்கப்பா எங்க மாறனா இது.
என்று புன்னகைத்தார்.

அப்பொழுது திடீரென கதவு உடைவதை போல சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அங்கே சத்யா தான் புயல் வேகத்தில் வந்தாள்.

யோ யார் யா நீ......?

ஒனக்கு ஒழுங்கா வண்டி ஒட்ட தெரியலனா வீட்லயே இருந்து தொலைய வேண்டியதுதானே,

கார் எடுத்துட்டு ரோட்டுக்கு வந்துட்டு எதுக்கு இப்படி எங்க உசுர வாங்கற மூஞ்ச பாரு மூஞ்ச

பனைமரத்துல பாதி வளந்து இருக்க உனக்கு எல்லாம் அறிவே இல்லையா.

உனக்கெல்லாம் எவன்யா லைசன்ஸ் கொடுத்தது.

ஹலோ மேடம் யார் நீங்க லூசு மாதிரி பேசுறீங்க.

யார்யா லூசு? யாரு லூசு?நீ லூசு உங்க அம்மா லூசு உங்க அப்பா லூசு உன் குடும்பமே லூசுக்க்க் ...... குடும்பம்.

ஷ்யாம்க்கு தான் ஒன்றுமே புரியவில்லை.🙄

நங்கையும் சத்யா நான் சொல்றத கொஞ்சம் கேளு என்றும் கூற அது எங்கே அவள் காதில் விழுந்தது.

நீ சும்மா இருக்கா.



அழுகையும் கோபமுமாக பாரியா பாரு எங்க அக்காவுக்கு எப்படி அடிபட்டு இருக்கு உன்னை நான் சும்மா விட மாட்டேன் என்றவள் திட்டாத வார்த்தை இல்லை.

மேடம் ப்ளீஸ் அழுகாதீங்க....

நீ யாருயா என்ன அழாதே சொல்ல.

அதற்குள் அங்கே வந்தான் மாறன்

என்ன இங்க ஒரே சத்தம்

என்ன தமிழ் மாமா இந்த ஆளை நீங்க உயிரோட விட்டு இருக்கீங்க.
அக்காவை இப்படி பண்ணிட்டு கூழா நிற்கிறான். அடிச்சு மூஞ்ச பேத்து விடுங்க.

ஏய் ஆர்வக்கோளாறு இது எங்க மாமா .


மாமா வா அப்போ இவரு அக்கா மேல வண்டி ஏத்தலையா.
என்று அசடு வலிய கூறினாள் சத்யா...

இல்லே என்பதை போல் மாறன் தலையாட்ட

ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ....... என்று இழிக்க

சத்யாவை முறைத்துக் கொண்டு இருந்தான் ஷ்யாம்.

ஐயோ முறைக்குறானே!

சமாளி சத்யா சமாளி....

அத சொல்லி இருக்க வேண்டியது தானே வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்காரு என்று ஷ்யாம்யை திட்டினாள்.

அடி பாவி
அதை எங்க சொல்ல விட்ட

நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற வாய் இருக்குன்னு.

அவனைப் பார்த்து முறைத்தவள்

சத்யா என்று நங்கை அழைக்க அவளிடம் அவனை கடந்து ஓடிச் சென்று கைகளை பிடித்து அக்கா இப்ப பரவாயில்லையா என்று கேட்க பரவாயில்ல சத்யா நீ பயப்படாதே என்றாள் நங்கை.

உனக்கு எப்படி விஷயம் தெரியும்?

மாமா தான் அக்கா போன் பண்ணாரு

என்னை பார்த்தா நீ கொஞ்சம் ஆறுதல் அடைவேன் தான்.

நன்றி
யோடு நங்கை மாறனை பார்த்தாள்.

மாறனும் மெல்ல பரவாயில்ல என்பதை போல் கண்களை மூடி திறந்தான்.

அங்கே ஷ்யாம் மும் சத்யாவும் இன்னும் முறைத்துக்கொண்டே தான் நின்று இருந்தனர்.

தொடரும்

Shahiabi. writter ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -25
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.