CHAPTER-25

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
அடுத்த‌ நாள் காலை....

அர்ஜுனின் வீட்டின் காலிங் பெல் அடிக்க‌, கிச்ச‌னில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த‌ வேலைக்கார‌ப்பெண் க‌ம‌லா, உட‌னே சென்று க‌த‌வை திற‌ந்து பார்க்க‌,

அங்கு நின்ற‌ போஸ்ட் மேன், "மேட‌ம் இங்க‌ ச‌ந்ரா இங்கிற‌வ‌ங்க‌ளுக்கு போஸ்ட் வ‌ந்திருக்கு." என்றான்.

க‌ம‌லா, "செரி எங்கிட்ட‌ குடுங்க‌. நா குடுத்த‌ர்றேன்." என்று கூற‌,

போஸ்ட் மேன், "இதுல‌ ஒரு கையெழுத்து போடுங்க‌ மேட‌ம்." என்று கூற‌, அவ‌ர் கொடுத்த‌ பேப்ப‌ரில் கையெழுத்து போட்டுவிட்டு அவ‌ற்றை வாங்கிய‌ க‌ம‌லா, க‌த‌வை சாற்றிவிட்டு, நேராக‌ ச‌ந்ராவின் அறைக்கு சென்றார்.

அங்கு அவ‌ளோ க‌ண்விழித்த‌தும் குளிக்க‌ கூட‌ செல்லாமால், மெத்தையில் அம‌ர்ந்த‌ப‌டி எதையோ தீவிர‌மாக‌ யோசித்துக்கொண்டிருந்தாள். அவ‌ளுக்கு அபி த‌ன் க‌ண் முன்னே இற‌ந்த‌தும், அத‌ற்கு அர்ஜுன்தான் கார‌ண‌ம் என்று அவ‌ன் கூறிய‌தும், திடீரென‌ எங்கிருந்தோ த‌ன்னை தாக்க‌ அம்பும், அதிலிருந்து காப்பாற்றிய‌ அர்ஜுனும், அவ‌ன் த‌ன்னை காத‌லிப்ப‌தாக‌ கூறிய‌தும், அவ‌னுக்காக‌ தான் ப‌த‌ற்ற‌ப்ப‌ட்ட‌தும் என்று அனைத்தும் அவ‌ள் மூளைக்குள் ஒரே நேர‌த்தில் ஓடிக்கொண்டிருக்க‌, அவ‌ளோ ஆழ்ந்த‌ குழ‌ப்ப‌த்துக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டாள். அப்போது உள்ளே நுழைந்த‌ க‌ம‌லா, "அம்மாடி ச‌ந்ரா!" என்று அழைக்க‌,

அதை கேட்டு அவ‌ரை பார்த்த‌வ‌ள், "சொல்லுங்க‌." என்றாள்.

அத‌ற்கு அவ‌ர், "உங்க‌ளுக்கு எதோ போஸ்ட் வ‌ந்திருக்கு." என்று கூற‌,

அதை கேட்டு கேள்வியுட‌ன் அதை வாங்கிய‌வ‌ள், "என‌க்கு யாரு போஸ்ட் அனுப்புன‌து?" என்ற‌ப‌டி அவ‌ற்றை முன்பின்னாக‌ திருப்பி பார்க்க‌, அதை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் க‌ம‌லா.

ஆனால் அந்த‌ போஸ்ட்டில் ஃப்ர‌ம் அட்ரெஸ் எதுவும் இல்லாம‌ல் இருக்க‌, அதை பார்த்து குழ‌ப்ப‌ம‌டைந்த‌ ச‌ந்ரா, "ஃப்ர‌ம் அட்ர‌ஸ்கூட‌ இல்ல‌?" என்ற‌ கேள்வியுட‌ன் அவ‌ற்றை பிரித்து பார்த்தாள்.

பிற‌கு அத‌னுள் இருந்த‌ க‌டித்த‌தை பிரித்து ப‌டிக்க‌, "நீ இப்போ ப‌ய‌ங்க‌ர‌ கொழ‌ப்ப‌த்துல‌ இருக்க‌. உன்னோட‌ எல்லா கேள்விக‌ளுக்கும் ப‌தில் வேணுன்னா, காட்டுக்குள்ள‌ இருக்கிற‌ சிவ‌ன் கோவிலுக்கு ஒட‌னே வா." என்று ம‌ட்டும் மொட்டையாய் எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து.

அதை ப‌டித்த‌ சந்ரா, "என்ன‌ இது, ஃப்ர‌ம் அட்ரெஸ் எதுவுமே போட‌ல‌? ப‌ட் என்னோட‌ கேள்விக்கு ப‌தில் கெடைக்கும்னு போட்டிருக்கு? நா ப‌ய‌ங்க‌ர‌ கொழ‌ப்ப‌த்துல‌ இருக்க‌ன்னு இவ‌ங்க‌ளுக்கு எப்பிடியும் தெரியும்? யாரு இது? எதுக்காக‌ அதே சிவ‌ன் கோவிலுக்கு வ‌ர‌ சொல்லியிருக்காங்க‌?" என்று குழ‌ப்ப‌த்துட‌னும் ப‌த‌ற்ற‌த்துட‌னும் யோசித்த‌வ‌ள், "அது யாரா இருந்தாலும் செரி. அவ‌ங்க‌ளுக்கு என்ன‌ ப‌த்தின‌ நெறைய‌ விஷ‌ய‌ங்க‌ள் தெரிஞ்சிருக்கு. ஆனா அவ‌ங்க‌ யாருன்னு தெரிஞ்சுக்க‌ணுன்னா, அந்த‌ கோவிலுக்கு போனாதா தெரியும். ஆனா இது வேற‌ யாராவ‌தோட‌ சூழ்ச்சியா இருந்தா?" என்று யோசிக்க‌, "இல்ல‌. எதுவா இருந்தாலும்
ப‌ர‌வால்ல‌. எதையுமே ஃபேஸ் ப‌ண்ண‌ நா ரெடியாதா இருக்கேன். என்னோட‌ எல்லா கேள்விக‌ளுக்கும் என‌க்கு ப‌தில் க‌ண்டிப்பா வேணும். அதுக்கு நா அங்க‌ போய்தா ஆக‌ணும்." என்று கூறி முடிவெடுத்த‌வ‌ள், உட‌னே சென்று குளிய‌ல‌றைக்குள் நுழைந்தாள்.

பிற‌கு குளித்துவிட்டு த‌யாராகி வெளியில் வ‌ந்த‌வ‌ள், நேராக‌ அர்ஜுனின் அறைக்கு சென்று க‌த‌வை திற‌ந்து பார்க்க‌, அவ‌னோ மெத்தையில் ந‌ன்றாக‌ உற‌ங்கிக்கொண்டிருந்தான்.

அதை பார்த்து நிம்ம‌திய‌டைந்த‌ ச‌ந்ரா, "இதுதா ந‌ல்ல‌ ச‌ந்த‌ர‌ப்ப‌ம். அர்ஜுன் தூங்கி எந்திரிக்கிற‌துக்குள்ள‌ போய்ட்டு வ‌ந்த‌ர‌லாம். அவ‌னுக்கு ச‌ந்தேக‌ம் வ‌ந்தா எல்லாமே கெட்டிரும்." என்று கூறி, க‌த‌வை மூடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

பிற‌கு அங்கிருந்து அவ‌ச‌ர‌மாக‌ ஒரு ஆட்டோவில் ஏறி சிவ‌ன் கோவிலை வ‌ந்த‌டைந்தாள் ச‌ந்ரா. ஆனால் அங்கு யாருமே இல்லாம‌ல் இருக்க‌, "இங்க‌ யாருமே இல்ல‌யே. யாரு அந்த‌ போஸ்ட் அனுபியிருப்பா?" என்று யோசித்த‌ப‌டி நின்றாள்.

அப்போது, "நாந்தா ச‌ந்ரா" என்ற‌ப‌டி உள்ளே வ‌ந்தான் அபி.

அவ‌னை பார்த்த‌தும் அதிர்ச்சிய‌டைந்த‌ ச‌ந்ராவிற்கு, அவ‌ன் க‌டைசியாக‌ த‌ன்னிட‌ம் பேசிய‌ நினைவுக‌ளும் அவ‌ன் த‌ன் க‌ண்முன்னே இற‌ந்த‌தும்தான் நினைவிற்கு வ‌ர‌, அது அபிதானா என்று அதிர்ச்சியில் நின்ற‌வ‌ளுக்கு குழ‌ப்ப‌மும் ச‌ந்தேக‌மும் சேர்ந்து சூழ்ந்த‌து.

அப்போது அவ‌ளை நெருங்கி வ‌ந்த‌ அபி, "நா உன்னோட‌ அபிதா ச‌ந்ரா. உன்னோட‌ ஆதி." என்று கூற‌,

அத‌ன் பிற‌கே அவ‌ன் அபிதான் என்று முடிவு செய்த‌வ‌ள், அதிர்ச்சியுட‌ன் அவ‌ன் க‌ன்ன‌ம் ப‌ற்றி, "அபி! உன‌க்கு ஒன்னு ஆக‌லல்ல‌? நீ ந‌ல்லா இருக்க‌ல்ல‌?" என்று ப‌த‌ற்ற‌த்துட‌ன் அவ‌னை மேலும் கீழுமாக‌ பார்க்க‌, அவ‌னோ சாத‌ர‌ண‌மாக‌ அவ‌ள் முன்பு நின்றான்.

அப்போது ச‌ந்ரா, "நா நீ செத்துட்ட‌ன்னு நென‌ச்சேன்." என்று ப‌த‌ற்ற‌த்துட‌ன் கூற‌,

அத‌ற்கு த‌ன் க‌ன்ன‌த்தை ப‌ற்றியிருந்த‌ அவ‌ள் க‌ர‌த்தை ப‌ற்றிய‌ அபி, "இல்ல‌ ச‌ந்ரா. நா சாக‌ல‌. அன்னைக்கு நா அடிப்ப‌ட்டு கெட‌ந்த‌ப்போ, நா ம‌ய‌க்க‌ம் ஆயிட்டேன். க‌ண்ண‌ தெற‌ந்து பாக்கும்போது நா ஹாஸ்பிட்ட‌ல்ல‌ இருந்தேன். என்ன‌ யாரோ காப்பாத்திட்டாங்க‌. அவ்ளோதா என‌க்கு தெரியும். ஆனா அந்த‌ நேர‌த்துல‌ உன்ன‌தா தேடுனேன். அப்போ நீ எங்க‌ போன‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா, "நா உத‌விக்கு யார‌யாவ‌து கூப்ப‌ட‌லான்னு போயிருந்தேன். வ‌ந்து பாத்தா உன்ன‌ காணோ." என்று அதே ப‌த‌ற்ற‌த்துட‌ன் கூறிய‌வ‌ள், பிற‌கு ம‌கிழ்ச்சியுட‌ன், "தேங்க் காட்! உன‌க்கு ஒன்னும் ஆக‌ல‌." என்று நிம்ம‌திய‌டைந்தாள்.

அப்போது அபி முக‌ம் முழுக்க‌ கோப‌த்துட‌ன், "என்ன‌ கொல்ல‌ பாத்த‌ அந்த‌ அர்ஜுன‌ விட‌க்கூடாது." என்று கூற‌,

அதை கேட்டு யோசித்த‌ ச‌ந்ரா, "அபி! உண்மையிலேயே உன்ன‌ அர்ஜுன்தா கொல்ல‌ பாத்தானா?" என்று கேட்க‌,

அதை கேட்டு அதிர்ந்து த‌டுமாறிய‌வ‌ன், "எ..ஏ ச‌ந்ரா? எதுக்காக‌ இப்பிடியொரு கேள்வி கேக்குற‌? நா பொய் சொல்ற‌ன்னு தோனுதா?" என்று கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா, "இல்ல‌ இல்ல‌. நீ பொய் சொல்ற‌ன்னு சொல்ல‌ல‌. ஒருவேள நீ த‌ப்பா புரிஞ்சுகிட்டு இருக்க‌லால்ல‌? அர்ஜுன் அப்பிடி ப‌ண்ணுவான்னு என‌க்கு தோன‌ல‌." என்று கூற‌,

அதை கேட்டு மேலும் அதிர்ந்த‌ அபி, "என்ன‌?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "நீ செத்து போய்ட்ட‌ன்னு நென‌ச்சு, நா அர்ஜுன‌ கொல்ல‌ போன‌ேன். ஆனா அந்த‌ நெல‌மையிலையும் அவ‌ன் என்னோட‌ உயிர‌ காப்பாத்துனான்." என்று கூற‌,

அபி, "அதேதான‌ அன்னிக்கு உத‌யாவும் ப‌ண்ணான்? பிக்காஸ் அவ‌ உன்ன‌ காத‌லிக்கிறான். அப்போ உன்ன‌ காப்ப‌த்த‌தான‌ செய்வா? அதுக்காக‌ அவ‌ என்ன‌ கொல்ல‌ பாக்க‌ல‌ன்னு அர்த்த‌மா?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "இல்ல‌ அபி. நீ நெனைக்கிற‌ மாதிரி இல்ல‌. அவ‌னுக்கு ப‌ழ‌சு எதுவும் நியாப‌க‌த்துல‌ இல்ல‌. அப்பிடி இருந்தும் நா அவ‌ன‌ க‌த்தியால‌ குத்தும்போது, அதையும் அவ‌ன் தாங்கிகிட்டு, என்மேல‌ பாய‌ வ‌ந்த‌ அம்பையும் அவ‌னோட‌ நெஞ்சுல‌ வாங்குனான்." என்று கூற‌, அந்த‌ நிக‌ழ்வு அவ‌ள் க‌ண்முன் வ‌ந்து நின்ற‌து.

அதை கேட்டு க‌டுப்பான‌ அபி ம‌ன‌திற்குள், "அதா த‌ப்பிச்சிட்டியே." என்று ப‌ல்லை க‌டித்த‌ப‌டி, பிற‌கு அவ‌ளை பார்த்து ப‌த‌றிய‌ப‌டி, "என்ன‌? உன்மேல‌ அம்பு பாய‌ வ‌ந்துச்சா? என்ன‌ சொல்ற‌? உன‌க்கு எதுவும் ஆக‌லல்ல‌ ச‌ந்ரா?" என்று போலியான‌ ப‌த‌ற்ற‌த்துட‌ன் கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா, "இல்ல‌ அபி என‌க்கு ஒன்னும் ஆக‌ல‌. அதுக்குள்ள‌தா அர்ஜுன் குறுக்க‌ வ‌ந்து காப்பாத்திட்டான்." என்றாள்.

அத‌ற்கு அபி, "யாரு அப்பிடி பண்ணதுன்னு தெரியுமா? நீ பாத்தியா?" என்று கேட்க‌,

அத‌ற்கு சந்ரா, "இல்ல அபி. நா பாக்கல. அதுக்குள்ள‌ அர்ஜுன் என்ன‌ இழுத்து சேஃபான‌ ப‌க்க‌த்துக்கு கூட்டிட்டு போயிட்டான்." என்றாள்.

அதை கேட்டு கோப‌ம‌டைந்த‌ அபி, "எல்லாத்துக்கும் கார‌ண‌ம் அவ‌ந்தா. மொத‌ல்ல‌ அவ‌ன‌ கொல்லணும் ச‌ந்ரா." என்றான் ப‌ல்லை க‌டித்த‌ப‌டி.

அத‌ற்கு ச‌ந்ரா, "இல்ல‌ அபி. மொத‌ல்ல‌ அவ‌ன‌ இல்ல‌, அவ‌ன் என்மேல‌ வெச்சிருக்குற‌ காத‌ல‌தா கொல்ல‌ணும். அப்ப‌தா அவ‌ன் அடுத்த‌ ஜென்ம‌த்துலையும் ந‌ம்ப‌ வாழ்க்கைக்குள்ள‌ வ‌ர‌ மாட்டான். அதோட‌ அவ‌ன‌ இந்த‌ தெட‌வ‌ வேற‌ மாதிரி ப‌ழி வாங்க‌ணும்." என்றாள்.

அபி, "வேற‌ மாதிரின்னா?" என்று புரியாம‌ல் கேட்க‌,

ச‌ந்ரா, "ந‌ம்ப‌ மொத‌ல்ல‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க்க‌லாம். அதுலையே அவ‌ன் பாதி செத்திருவான். அப்ற‌ம் அவ‌ன‌ கொல்ல‌லாம். அப்ப‌தா அவ‌னோட‌ வ‌லி அதிக‌மா இருக்கும். அதோட‌ அவ‌ன் க‌ண்ணு முன்னாடியே நாம‌ ஜெயிச்ச‌ மாதிரி இருக்கும்." என்றாள் குரோத‌த்துட‌ன்.

அத‌ற்கு அபி ம‌ன‌திற்குள், "கொல்லுடி கொல்லு. நீ அவ‌ன‌ கொல்லு. அப்ற‌ம் நா உன்ன‌ கொல்லுறேன். அப்ப‌தா நா முழுசா ஜெயிக்க‌ முடியும்." என்று எண்ணிக்கொள்ள‌, அவ‌ன் யோச‌னையை பார்த்த‌ ச‌ந்ரா, "அபி என்ன‌ யோசிக்கிற‌?" என்று கேட்க‌,

அபி, "ஒன்னும் இல்ல‌. நீ சொல்ற‌தும் செரிதா. நாம‌ மொத‌ல்ல‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌லாம்." என்று கூற‌,

"ந‌ட‌க்காது" என்று ஒரு குர‌ல் ச‌த்த‌மாக‌ ஒலிக்க‌, அது அந்த‌ கோவிலின் சுவ‌ரெங்கும் எதிரொலிக்க‌, அதை கேட்ட‌ அபியும் ச‌ந்ராவும் அதிர்ச்சியுட‌ன் திரும்பி பார்த்தார்க‌ள்.

அப்போது உள்ளே வ‌ந்த‌ அர்ஜுன், "இந்த‌ ல் க‌ல்யாண‌ம் ந‌ட‌க்காது. ந‌ட‌க்க‌ விட‌மாட்டேன்." என்று அழுத்த‌மாக‌ கூறினான்.

- ஜென்ம‌ம் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-25
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.