Chapter 24

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
“நீ இங்க லீவுக்கு வந்தப்ப தான் நீயும் நானும் ஊட்டிக்கு போனோம் கரெக்டா??” என்று சனா கேட்க, “ஆமாம் டி அதை கேட்கவா பண்ண??” என்று கெளதம் கேட்க, “நான் சொல்றத மட்டும் கேளு” என்று சனந்தா கூறவும், “சொல்லி தொல!!!” என்றான் கௌதம் கடுப்புடன்.

“அதுக்கப்புறம் நீ ஊருக்கு போயிட்ட… நீ போனதுக்கு அப்புறமா நான் திருப்பி இன்னொரு வாட்டி ஊட்டிக்கு வந்தேன் கரெக்ட்டா??” என்று சனா கேட்க, ஆமா!!! என்றான் கௌதம். “அப்ப தான் எனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு கரெக்ட்டா??” என்று சனா கேட்க, ஆன்….. ஆமாம்!! என்றான் கௌதம்.

“அந்த கணக்குப்படி பார்த்தா நான் ஊட்டி ஸ்கூலுக்கு போய் நாலு மாசம் தான் ஆகி இருக்கணும்…. ஆனா, இங்க ரம்யாவை வந்த புதுசுல பார்த்தப்பவே அஞ்சு மாசம் ஆச்சுன்னு சொன்னா அவ” என்று சனா கேட்க, அரை தூக்கத்தில் இருந்த கௌதம் தெளிந்து, “ஏதாவது தப்பா சொல்லி இருப்பா போல…. இல்ல நீ ஏதாவது தப்பா கணக்கு போட்டு இருப்ப” என்று கௌதம் தட்டு தடுமாறி சமாளிக்க முயற்சி செய்தான்.

“கௌதம்ம்ம்!!!!!! என் கிட்ட அடி வாங்கிறாத…. எனக்கு உண்மையை சொல்லு” என்று சனந்தா கோபத்தில் கத்தவும், “ஹய்யோ!!! இவளுக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சிருச்சே….. எப்படி சமாளிக்குறது இவள” என்று கௌதம் அவனுக்குள் யோசித்து, “உண்மை என்ன இருக்கு இதுல…. இவ்வளவு தான் டி உண்மை…. அப்ப தான் ஆக்சிடென்ட் ஆச்சு உனக்கு… அப்ப தான் நீ… இதுவா…. நான் அவ்வளவு….. தான்” என்று ஏதேதோ கௌதம் உளறினான். “ஹய்யோ!!! நானே உளறுறேனே!!! ப்ச்… இப்பன்னு பார்த்து விகாஷ் நல்ல தூங்கிட்டு இருக்கானே!!!” என்று கௌதம் அவனுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

“ஓ அப்படியா!!!! நான் ரோகிணி அக்காவ கடைசியா பார்த்தப்ப அவங்களுக்கு நிச்சயம் கூட ஆகல…. எங்கேஜ்மென்ட் ரொம்ப க்ளோஸ் ரிலேடிவ்ஸுக்கு மட்டும் தான் சொல்லி செய்ய போறோம்னு என்கிட்ட சொல்லி இருந்தாங்க… அதுக்கு அப்புறமா பார்ட்டி வேணா நம்ம அரேஞ்ச் பண்ணலாம்னு சொன்னாங்க…. இவ்வளவு தான் எனக்கு ஞாபகம் இருக்கு…. இன்னிக்கு அவங்க இங்க கல்யாண பத்திரிக்கையோட வந்திருந்தாங்க….. எங்கேஜ்மென்ட் ஆகலயேன்னு நான் அவங்க கிட்ட கேட்குறேன், “எங்கேஜ்மென்ட் பார்ட்டிக்கு வந்த… பார்ட்டில இருந்து கிளம்பி போனப்ப தானே உனக்கு ஆக்சிடென்ட் ஆச்சுன்னு” என்னை பார்த்து கேட்கிறாங்க” என்று சனந்தா ஒரே மூச்சில் பேசி முடித்தாள்.

கௌதம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். “கௌதம் என்ன நடந்ததுன்னு எனக்கு மரியாதையா உண்மைய சொல்லு” என்று சனந்தா கேட்க, “என்ன நீ…. ஃபோன் பண்ணி லபலபன்னு கத்துற…. என்ன நினைச்சிட்டு இருக்க டி நீ??” என்று கௌதம் கோபத்தில் பேச, “அடி வாங்கிருவ என்கிட்ட நீ இங்க வரும் போது…. என்ன பண்ணுவ ஏது பண்ணுவன்னு தெரியாது… இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள எனக்கு ஃபோன் பண்ணி என்ன ஆச்சு எனக்குன்னு நீ உண்மைய சொல்லல நீ என்கிட்ட செத்த….. அங்கிளுக்கு ஃபோன் பண்ணி கல்யாணத்துக்கு நான் ரெடி அங்கிள்னு சொல்லிடுவேன் பரவாயில்லையா உனக்கு” என்று சனந்தா அவனை மிரட்டினாள்.

“என்ன மிரட்டுரியா உனக்கும் தானே என்னை கல்யாணம் பண்ணிக்க புடிக்கல அதனால தானே வீட்ல பெரியவங்க பேசும் போது ரெண்டு பேரும் சேர்ந்து, “வேணா நாங்க சின்ன வயசுல இருந்து ஒண்ணா பழகுறோம்…. நாங்க ஃபிரெண்ட்ஸ்…. அண்ணன் தங்கச்சி” அது இதுன்னு எல்லாம் சொல்லி சமாளிச்சோம்…. இப்ப எப்படி நீ போய் சொல்லுவ” என்று கௌதம் கேட்டான்.

“இப்போ உனக்கு நான் எப்படி போய் அங்கிள் கிட்ட சொல்லுவேன்னு தான் பிரச்சனையா…. நான் இவ்ளோ கேள்வி கேட்டு இருக்கேன் அது உனக்கு தெரியலையா??” என்று சனந்தா கேட்க, கௌதம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“என்ன கௌதம் பதிலே காணோம்??” என்று சனந்தா கேட்க, “இவ வேற சொன்னத செஞ்சிருவா… பேசாம நம்ம சரன்டர் ஆகுறது தான் சரி” என்று கௌதம் அவளுக்குள் கூறிக் கொண்டு, “எனக்கு தெரிஞ்சது இது மட்டும் தான் சனா, பார்ட்டிக்கு போயிட்டு வரும் போது ஆக்சிடென்ட் ஆச்சு…. நீ கொஞ்ச நாள் கோமால இருந்த…. இது மட்டும் தான் சனா தெரியும்…. அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு அப்பா எனக்கு விவரமா சொல்லல…. நான் வேணா அப்பா கிட்ட விவரமா கேட்டு சொல்றேன்…. அதே மாதிரி விகாஷ்க்கு கூட இதை பத்தி தெரியாதுன்னு தான் நினைக்கிறேன்…. தெரிஞ்சி இருந்தா என்கிட்டயாவது பேசி இருப்பான்…. அவனும் எதுவுமே பேசல அதனால அவனுக்கும் தெரியுமான்னு எனக்கு டவுட் தான்” என்று கௌதம் கூறினான்.

“உனக்கு எப்படி இத நான் சொல்லுவேன்னு தெரியல கௌதம்….. இங்க நான் ஒருத்தவங்கள பார்த்து, தலை எல்லாம் வலிச்சு எனக்கு என்னவோ யோசனை எல்வாம் வந்தது…. அதே மாதிரி இங்க மார்க்கெட்டுக்கு போனப்பையும் அப்படித் தான் ஆச்சு…. எனக்கு ரொம்ப ஒரு மாதிரி இருக்கு…. அது எல்லாத்தையும் தாண்டி தான் நான் இங்க வேலை பார்த்துட்டு இருக்கேன்…. இப்போ எனக்கு ரொம்ப தெரிஞ்ச அக்கா அவங்க வந்துட்டு இதெல்லாம் சொல்லும் போது எனக்கு அவ்வளவு தலை வலிக்குது…. என்னென்னமோ யோசனை வருது டா… ஆனா, அது என்னன்னு தெரியாம குழப்பத்திலேயே நான் வாழ்ந்துட்டு இருக்கேன்” என்று சனந்தா கண் கலங்க கூறினாள்.

“ஏய் லூசு அழாத டி நான் கேட்டு சொல்றேன் அப்பா கிட்ட…. எனக்கும் இவ்வளவு தான் தெரியும், விவரமா எல்லாம் எனக்கும் தெரியாது” என்று கௌதம் கூற, “நீ நல்ல சமாளிக்கிறன்னு தெரியுது…. ஆனா, ப்ளீஸ்!! எனக்கு உண்மைய சொல்லு” என்று சனா கூறவும், “சரி நான் அப்பா கிட்ட முடிஞ்ச அளவுக்கு இதெல்லாம் கேட்டுட்டு நான் சொல்றேன்…. ஆனா நீ ஃபோன் பண்ணி ஃபோன் பண்ணி இம்ச பண்ணாத…. நான் சொல்றேன்னு சொன்னல நானே எல்லாத்தையும் கேட்டுட்டு நான் விவரமா உனக்கு சொல்றேன்” என்று கௌதம் கூறினான்.

“நீயே இன்னும் கொஞ்ச நாள்ல இங்க வர போற…. எல்லாம் தெரிஞ்சிட்டு எனக்கு சொல்லு அது இங்க வந்து சொன்னாலும் சரி எனக்கு ஃபோன் பண்ணி சொன்னாலும் சரி…. ஆனா, எல்லா உண்மையும் எனக்கு சொல்லணும் கௌதம்” என்று சனந்தா கூறி ஃபோனை வைத்தாள்.

இவை அனைத்தும் ஆஃபீஸ் ஜன்னல் வழியாக விக்ரம், அபிலாஷ் மற்றும் சரவணன் கேட்டுக் கொண்டிருந்தனர். “உண்மையிலேயே அவளுக்கு ஞாபகம் இல்ல தான் டா” என்று சரவணன் கூற, “அதுதான் நமக்கு அப்பவே தெரிஞ்சுதே” என்று அபிலாஷ் கூறினான்.

“அப்பவே தெரிஞ்சாலும் உங்க ரெண்டு பேருக்கும் சந்தேகம் இருந்துட்டே தான இருந்துது… இவ நடிக்கிறாளோன்னு…. அது கூட புரியாம எல்லாம் இல்லடா எனக்கு” என்று சரவணன் கூற, “இப்ப அதுவா முக்கியம் அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம இவ்ளோ கஷ்டத்துல இருக்கா” என்று விக்ரம் கூறினான்.

“இவன் ஆரம்பிச்சிடுவான் டா…. அவ சோகமா இருக்கா, அவ இப்படி இருக்கா அப்படி இருக்கான்னு… ஆனா, அவ கிட்ட போய் ஒரு வார்த்தை கூட பேச மாட்டான்…. அப்புறம் எப்படி அவ இவன பத்தி தெரிஞ்சுக்குவா” என்று சரவணன் கூற, அபிலாஷ் எதுவும் பேசாமல், “என்னவோ போங்க டா” என்று வேலையை காண சென்றான்.

“என்னாச்சு கௌதம்??? சீக்கிரம் எந்திரிச்சுட்டு இருக்க??? அதுவும் பேய் அரஞ்ச மாதிரி இருக்க??” என்று விகாஷ் கேலியாக கேட்க, “பேயெல்லாம் இல்ல… உன் அக்கா தான் காலைல ஃபோன் பண்ணி அரஞ்சு விட்டா” என்று கௌதம் கூறினான். “அப்ப பேய் தான்…. அவளுக்கு என்ன ஆச்சு??” என்று விகாஷ் கேட்க, சனந்தாவிடம் பேசிய அனைத்தையும் கூறினான் கௌதம்.

“என்னிக்காவது ஒரு நாள் அவளுக்கு உண்மை தெரிஞ்சே தான் ஆகும்” என்று விகாஷ் கூற, “அவளுக்கு உண்மை தெரியுது தெரியாம போது அதுக்கு என்னை ஏண்டா சாவடிக்கிறீங்க நீங்க எல்லாரும் சேர்ந்து” என்று கௌதம் கடுப்புடன் கூறினான்.

“அவளுக்கு நல்லா தெரியும் எனக்கு ஃபோன் பண்ணா நான் அவளை ஈஸியா மேனுபுலேட் பண்ணிடுவேன்னு…. அதனால தான் அவ என்கிட்ட கேட்கவே இல்ல பாரு” என்று விகாஷ் கூறவும், “இதெல்லாம் நல்ல பண்றீங்க டா….. சரி அதை விடு, உனக்கு உண்மை தெரியுமா?? என்ன ஆச்சு அவளுக்கு??” என்று கௌதம் கேட்க, “பார்ட்டில இருந்து வரும் போது ஆக்சிடென்ட் ஆச்சு… அட்மிட் பண்ணாங்க… பிழைக்குறதே கஷ்டம்னு சொன்னாங்க… அப்புறம் எப்படியோ பொழச்சி வந்தா… அதுக்கு அப்புறம் கோமால இருந்தா… கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்ததெல்லாம் மறந்துட்டா… இது மட்டும் தான் எனக்கு தெரியும் கௌதம்” என்று விகாஷ் கூறினான்.

“ஆமா என்கிட்ட பேசும் போது கூட ஊட்டிக்கு போயிட்டு வரும் போது தான் ஆக்சிடென்ட் ஆச்சுன்னு சொன்னா, அப்போ நானும் ஆமான்னு சொல்லிட்டேன்… அவளுக்கு அது தான் கடைசியா கார்ல டிராவல் பண்ணது அதனால அங்க தான் ஆக்சிடென்ட் ஆயிருக்கும்னு அவளே யோசிச்சு சொல்லி இருக்கா” என்று கௌதம் கூறினான்.

“எனக்கு அப்படி தோணல… ஏன்னா ஊட்டிக்கு அவ தனியா தான் போயிட்டு வந்தா…. போயிட்டு வரும் போது ஒரு வேள ஏதாவது ஆக்சிடென்ட் மாதிரி நடந்திருக்குமோ???? ஆக்சிடென்ட்னா இப்ப நடந்த மாதிரி இல்லனாலும் ஒரு வேலை ஏதாவது இடிச்சது, அந்த மாதிரி ஏதாவது நடந்திருக்குமோன்னு சந்தேகம் இருக்கு கௌதம்….. இல்லன்னா அவ எப்படி அவ்ளோ உறுதியா ஊட்டிக்கு போயிட்டு வந்த அப்ப தான் ஆக்சிடென்ட் ஆச்சுன்னு சொல்றா??” என்று விகாஷ் கேட்டான்.

“அட, ஆமால….. அப்படி ஒரு கோணத்துல யோசிக்கவே இல்லையே நானு…. ஆனா, அந்த ஊட்டி ஸ்கூல்ல பிரச்சனை இன்னும் அப்படியே தான் இருக்கு… அந்த ஆளு காண்ட்ராக்ட் எடுத்த ரெண்டு ஸ்கூலுக்கு இன்ஸ்பெக்சனுக்கு போய் ரெண்டு ஸ்கூலுக்கும் மாத்திட்டோம்…. இன்னும் ரெண்டு ஸ்கூல் இருக்கு அதுல ஒரு ஸ்கூலுக்கு போகும் போது தான் எங்களை உள்ளேயே விடல…. அந்த ஆளு வந்து கொஞ்சம் பிரச்சனை பண்ணாரு…. அதுக்கப்புறம் எனக்கு எக்ஸாம்ஸ் இருக்குன்னு வந்துட்டேன் இங்க… இவ மட்டும் தனியா போயிட்டு வரும் போது ஏதாவது அவங்க மிரட்டி இருப்பாங்களோ??? இல்ல தனியா வேற கார்ல போயிட்டு வந்து இருக்கா இல்ல அதனால ஏதாவது நடந்திருக்குமோ??? அத சனா நம்ம கிட்ட மறைச்சி இருப்பா போல…. ஏன்னா, அதுக்கு அப்புறமா அவ கார் எடுத்துட்டு வேற எங்கேயும் பெருசா போகவே இல்ல…. சும்மா டீமுக்கு போறது வரர்து அது மட்டும் தான் பண்ணா…. அதோட பார்ட்டிக்கு தான் போனா…. வேற எங்கேயுமே அவ போகல…. அப்ப ஊட்டிலிருந்து வரும் போது ஏதாவது நடந்திருக்குமோ??” என்று கௌதம் இதுவரை நடந்ததை அனைத்தும் விவரித்து கூறினான்.

“சரி இதையும் என்னன்னு அங்கிள் கிட்ட தான் சொல்லி பார்க்க சொல்லணும்…. அப்பா கிட்ட சொன்னா அவர் ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சுருவாரு” என்று விகாஷ் கூரவும், “சரி நான் அப்பா கிட்ட பேசுறேன்” என்று கௌதம் கூறினான்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Part 25
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 24
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.