இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வேலண்டைன்ஸ் டே வரப்போவதால் அந்த நாளை தங்களது ரெஸ்டாரன்ட்டிற்க்கு வரும் ஒவ்வொருத்தருக்கும் ஸ்பெஷல் ஆன நாளாக மாற்ற வேண்டும் என்பதற்காக இசையின் ரெஸ்டாரன்ட் விழா கோலம் பூண்டு ஆட்டம் பாட்டம் என்று களைகட்டியது.
பார்க்கும் இடமெல்லாம் காதல் நிரம்பி வழியும் அளவிற்கு எல்லா இடங்களிலும் லைட் அலங்காரங்கள் மற்றும் இதய வடிவிலான பலூன்களை வைத்து அலங்காரங்கள் என்று ஏராளமானவை அங்கே காதலர் தினத்தை வரவேற்க தயாராக இருந்தது.
இசை டான்சர்களைக் கூட அரேஞ்ச் செய்து இருந்தான்.
அதனால் அந்த ரெஸ்டாரண்டின் ஒரு ஓரமாக அமைக்கப்பட்டிருந்த சிறிய ஸ்டேஜில் ஒரு ஆணும் பெண்ணும் ஜோடியாக சேர்ந்து டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க,
அவர்களின் இருபுறமும் நால்வர் கித்தார், டிரம்ஸ் போன்ற இசைவாத்தியங்களை வாசித்துக் கொண்டிருந்தார்கள்.
மொத்தத்தில் அந்த இடம் பார்க்க ரொமான்டிக்காக இருக்க,
அங்கே வழக்கத்தை விட இன்று ஏராளமானவர்கள் வந்து குவிந்தார்கள்.
அவர்களுக்கெல்லாம் அங்கே நிற்கக் கூட இடம் இருக்கவில்லை.
அதனால் “இன்னைக்கே இங்க இவ்ளோ கூட்டமா இருக்கு.
Valentine's day அன்னைக்கு இங்க வந்தா, பார்சல் வாங்கிட்டு போறதுக்கு கூட இடம் இருக்காது போல.
இதுல நம்ம எப்படி அன்னைக்கு ஈவினிங் நடக்கிற ஸ்பெஷல் கேண்டில் லைட் டின்னர்ல பார்ட்டிசிபேட் பண்ண முடியும்?” என்று தங்களுக்குள் ஏராளமானவர்கள் பேசியபடி இப்போதே அங்கே நிற்க இடம் இல்லாததால் பார்சல் உணவுகளை வாங்கிக் கொண்டு நடையை கட்டினார்கள்.
அவர்களை எல்லாம் பார்க்கவே இசைக்கும், பிரியாவிற்கும் மனநிறைவாக இருந்தது.
ஜீவா உடனே தன் காதலி நிஷாவிற்கு கால் செய்து,
“அடியேய் இங்க பாருடி இது தான் இங்க ரெஸ்டாரன்ட்.
இதுக்கு முன்னாடி நீ பார்த்த மாதிரி இல்ல இப்ப நாங்க எல்லாத்தையும் டோட்டலா மாத்திட்டோம்.
உங்க அப்பன் காட்ஜில்லா மூக்கன் கிட்ட இந்த வீடியோவை காமிச்சு சொல்லு.
எப்ப பாத்தாலும் அந்த ஆளு என்ன வெறும் பையன் வெறும் பையன்னு என்ன சொல்லிட்டே இருப்பானே!
இந்த ரெஸ்டாரன்ட் ஓட வொர்கிங் பார்ட்னர் டி நானு.
இன்னும் கொஞ்ச நாள்ல நானும் என் நண்பனும் கோடீஸ்வரனாக போறோம்.
அப்ப உங்க அப்பனே வந்து மாப்பிள்ளை என் பொண்ணு நீங்கதான் கல்யாணம் பண்ணி அவளுக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு என் கிட்ட கெஞ்சுவான் பாரு!”
என்று அவளிடம் உற்சாகமான குரலில் சொல்ல,
“டேய் அரை மெண்டல்! எங்க அப்பாவ மரியாதை இல்லாம பேசாதன்னு உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது?
நீ இப்படியே பேசிட்டு இருந்தீனா, எங்க அப்பா என்ன உன்ன வேணாம்னு சொல்றது?
எங்க அப்பாவ மதிக்காத நீ எனக்கு வேண்டாம்ன்னு நானே சொல்லிட்டு போயிட்டே இருப்பேன்.” என்று கோபமாக சொன்னாள் நிஷா என்ற நிசாந்தினி.
“சாரி செல்லம், சாரி செல்லம் இதுக்கெல்லாம் மாமா மேல கோவப்படலாமா?
ஏதோ ஆர்வக்கோளாறுல தெரியாம பேசிட்டேன்.
இருந்தாலும் உங்க அப்பா இதுக்கு முன்னாடி உன் முன்னாடியே என்ன எத்தனை தடவை மரியாதை இல்லாம பேசிருக்காரு?
அப்ப எல்லாம் என் டார்லிங்கை, என் மாமாவை அப்படி எல்லாம் நீங்க பேசக்கூடாது டாடினு நீ எப்பயாவது சொல்லி அவர் ஆஃப் பண்ணி இருக்கியா?
என்ன பாத்தா தாண்டி உனக்கு நல்லா இளிச்சவாயன் மாதிரி தெரியுது.” என்று ஜீவா தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்க,
“பெரியவங்கன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க.
நீ திடீர்னு போய் அவர் கிட்ட உங்க பொண்ண நான் லவ் பண்றேன்.
எனக்கு அவளை கல்யாணம் பண்ணி குடுக்குறீங்களான்னு கேட்டா,
உடனே அவர் ஓகே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு மரியாதையா சொல்லிடுவாரா?
எனக்கு நீ எவ்வளவு முக்கியமோ, அதைவிட எங்க அப்பா முக்கியம் ஜீவா.
அவர் எப்படி பேசினாலும் நீ அவர்கிட்ட ஒழுங்காக தான் பேசணும்.
புரியுதா உனக்கு? நீ எதுவுமே சொல்லலைன்னாலும், அப்பப்ப அவர்கிட்ட உன்ன பத்தி நான் பெருமையா ஏதேதோ சொல்லி அவரை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன்.
ஆனா நீயே என்கிட்ட இப்படி பேசினா எனக்கு கோபம் வருமா வராதா?” என்று தன் புருவங்களை சுருக்கி அவனைப் பார்த்து கேட்டாள் நிஷாந்தினி.
அது வீடியோ காலாக இருந்தாலும் கூட அவள் தன் மீது கோபமாக இருப்பதை தாண்டி,
தன் மீது இருக்கும் காதலில் அவள் தன்னை பிரிந்து இருக்க முடியாமல் உள்ளுக்குள் இருக்கும் சோகத்தை வெளியில் காட்டவும் முடியாமல் தவிப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
அதனால் ஏதேதோ பேசி அவளை சமாதானப்படுத்தி சிரிக்க வைத்த ஜீவா,
“ஓய் நிஷா மிஸ் யூ டி!
எனக்கு உன்னை நேர்ல பாக்கணும் போல இருக்கு.
நம்ம எத்தனை நாள் பிரிஞ்சி இருந்தாலும் அட்லீஸ்ட் லவர்ஸ் டே வரும்போது நம்ம ரெண்டு பேரும் எப்படியாவது ஒருத்தரை ஒருத்தர் மீட் பண்ணி பேசிடுவோம்.
இந்த வருஷமும் அது நடக்குமாடி?
என்னால ரெஸ்டாரன்ட்டை விட்டுட்டு எங்கேயும் வர முடியாது.
பட் நீ நெனச்சா எனக்காக வரலாம் இல்ல?
வருவியா? ப்ளீஸ் டி வரேன்னு சொல்லு.” என்று கலங்கிய கண்களுடன் கேட்டான்.
அவன் அப்படி பேசியவுடன் அவளது கண்களும் கலங்கிவிட,
“கண்டிப்பா வர ட்ரை பண்றேன் ஜீவா.
எனக்கு மட்டும் உன்ன பாக்கணும்னு இருக்காதா என்ன?
லாஸ்ட் மினிட்ல கேட்டா லீவ் குடுக்க மாட்டாங்கன்னு தான் இந்த மந்த் ஸ்டார்ட் ஆகும்போதே எனக்கு லீவு வேணும்னு கேட்டு அப்ளிகேஷன் போட்டுட்டேன்.
ஆனா அந்த மேனேஜர் மாங்கா மடையன் இன்னும் அத அப்ரூவ் பண்ணாம வேணும்னே பெண்டிங்ல வெச்சி இருக்கான்.
இதுக்கு மேல நான் என்னடா பண்ண முடியும்?
அந்த ஆளுக்கு மனசு வந்து அவன் எனக்கு லீவு குடுத்தா தான் உண்டு.” என்று நிஷா தன் பங்கிற்கு சோகமாக சொன்னாள்.
“அவன் என்னடி லீவு கொடுக்கிறது உனக்கு?
நெனச்சா ஒரு நாள் லீவ் கூட எடுக்க முடியாதது எல்லாம் ஒரு வேலையா?
நீ இப்பவே அந்த வேலையை விட்டுவிடு. நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம்.
எனக்கு வர்ற சேலரி போதும். என்னால உன்னை பார்த்துக்க முடியும்.
உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா நீ கிளம்பி வா நான் உன்னை பார்த்துக்கிறேன்.” என்று ஜீவா உணர்ச்சி வசப்பட்டு சொல்ல,
“போடா லூசு சும்மா எமோஷனலாகி பேசாத.
நான் என்ன சாப்பிடுறதுக்கு வழியில்லாமையா வேலைக்கு வரேன்?
இவ்வளவு நேரம் எங்க அப்பாவை குறை சொல்லிட்டு நீயும் எங்க அப்பா மாதிரியே பேசுற!
நமக்கு எவ்ளோ கஷ்டமா இருந்தாலும் அது மனசுக்கு புடிச்ச வேலையா இருந்தா அதெல்லாம் பெருசாவே தெரியாது.
இந்த வேலை எனக்கு ரொம்ப முக்கியம். இதுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.
அப்படியெல்லாம் அசால்டா என்னால வேலையை விட முடியாது.
Work from home கேட்டிருக்கேன். அது கெடச்சா நல்லா இருக்கும். பார்க்கலாம்!” என்றாள் நிஷா.
இப்படியே அவர்கள் இருவரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க,
அந்த பக்கமாக வேலை செய்தபடி சென்று கொண்டிருந்த ப்ரியா அந்த அழகான காதல் காட்சியை பார்த்துவிட்டு,
“எப்படி தான் இப்படி வீடியோ காலிலேயே லவ் பண்ணிட்டு இருக்காங்களோ!
ஒருவேளை மறுபடியும் நான் யாரையாவது லவ் பண்ணா,
என்னால கண்டிப்பா அவன் இல்லாம ஒரு செகண்ட் கூட இருக்க முடியாது.
இப்படி இவங்கள மாதிரி என்னால வீடியோ கால்ல எல்லாம் அவன பாத்துகிட்டு வாழ்றதெல்லாம் என்னால முடியாத காரியம்.
ஆனாலும் இவங்கள இப்படி பார்க்கும்போது இன்னமும் இந்த உலகத்துல உண்மையான லவ் எல்லாம் சாகாம இருக்குன்னு ஒரு நம்பிக்கை வருது.” என்று நினைத்து கிச்சனை நோக்கி நடந்து சென்றாள்.
அப்போது கிச்சனில் இருந்து சரியாக இசை வெளியே வர,
அவர்கள் இருவரும் ஒருவரின் மீது ஒருவர் மோதி கொண்டார்கள்.
பிரியா இசையை விட கொஞ்சம் குட்டையாக இருந்ததால் அவள் அவன் நெஞ்சில் மோதி கால் தடுக்கி கீழே விழப்போக,
“ஏய் இப்படியா பார்த்து!” என்ற இசை அவள் இடுப்பில் கை வைத்து அவளை கீழே விட க்கூடாது என்பதற்காக தன் பக்கம் அவளை இழுத்தான்.
இசை குனிந்திருக்க, வேகமாக அவன் இழுத்ததில் அவன் பக்கம் வந்த பிரியா அவனது குடைமிளகாய் மூக்கின் மேலே முத்தமிட வேண்டியதாக போய்விட்டது.
அதனால் ஷாக் ஆகி “ஐயோ ஜஸ்ட் மிஸ்! டு
குத்ததும் குடுத்தா கொஞ்சம் கீழே கொடுத்திருக்கலாம்.
ஆனா அவ மூக்குல கொடுத்திருந்தாலும் இதுவும் நச்சுன்னு தான் இருந்துச்சு.” என்று நினைத்து அவன் அவளை பார்க்க,
“ஐயோ கடவுளே என்ன நடக்குது இங்க?
இதெல்லாம் தானா நடக்குதா, இல்ல இவனே வேணுன்னு இப்படி எல்லாம் நடக்கணும்னு பிளான் பண்ணி ஏதாவது பண்றானா?
ஆனா அதுக்கெல்லாம் எதுவும் சான்ஸ் இருக்கிற மாதிரி தெரியலையே!
எனக்கு தெரிஞ்சு அந்த கடவுள் தான் சதி பண்றான்னு நினைக்கிறேன்.
எனக்கு என்னமோ நடக்கிறது எல்லாத்தையும் வச்சு பார்த்தா,
வாலண்டியரா விதி கிடைக்கிற ஒவ்வொரு opportunityலயும் எண்ணையும் இவனையும் சேர்த்து வைக்கிற மாதிரி இருக்கு.
என்னமோ இதெல்லாம் எங்க போய் முடிய போகுதுன்னு எனக்கு புரியல.” என்று நினைத்த பிரியா அதற்கு மேல் அவன் அருகில் நின்று அவன் முகத்தை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது என்று நினைத்து வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.
இரண்டு நாட்களுக்கு பிறகு காதலர் தினத்தன்று அவர்கள் நினைத்ததை போலவே அனைத்தையும் பக்காவாக செய்து முடித்து இருந்த பிரியாவும் இசையும் வரும் கஸ்டமர்களை கவனித்து அனுப்புவதில் பிஸியாக இருந்தார்கள்.
அப்போது டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த இளைஞன் அவனுடைய அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி பாதியில் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.
அதனால் ஒரு இளம் பெண் மட்டும் அங்கே தனியாக டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க,
இத்தனையும் பிளான் செய்துவிட்டு இந்த ஒரு பிரச்சனை வந்ததால் அது ஒரு பெரிய குறையாக மாறிவிட்டதே!
இப்போது இதை என்ன செய்து சரி செய்வது? என்று புரியாமல் பிரியாவும், இசையும், யோசித்துக் கொண்டு இருந்தார்கள்.
அப்போது எதைச்சையாக அங்கே வந்த ஜீவா அதை பார்த்துவிட்டு,
“இதுக்காக எதுக்கு இவ்ளோ யோசிக்கிறீங்க?
அந்த பையன் போனா போயிட்டு போறான். அதான் இசை இருக்கானே!
இவன் நல்லா டான்ஸ் ஆடுவான் பிரியா.
இசைன்னு பெயர் வச்சுக்கிட்டு இவனுக்கு மியூசிக் நாலேஜ் இல்லாம எப்படி?
என் நண்பன் ஆடல், பாடல் இசைன்னு எல்லாத்துலயும் ஆல் ரவுண்டரா கலக்குவான்.
உனக்கு தெரியாதா? இவன் உன்கிட்ட சொன்னதில்ல?” என்று கேட்க,
இசையை திருப்பி பார்த்துவிட்டு அங்கே தனியாக அரைகுறை ஆடையில் தனது கவர்ச்சியான உடலை வளைத்து நெளிதது டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த ஸ்டைலான இளம் பெண்ணை பார்த்தால் பிரியா.
இதற்கு முன் அந்த பெண்ணும், அவளுடன் டான்ஸ் ஆடிய இளைஞனும் எப்படி எல்லாம் ஆடிக் கொண்டிருந்தார்கள் என்று நினைத்து பார்த்த பிரியாவிற்கு,
“இவனும் அந்த பொண்ணு கூட சேர்ந்து அப்படியெல்லாம் டான்ஸ் ஆடுவானா?” என்று யோசிக்கவே எரிச்சலாக இருந்தது.
அதனால் அவள் இவனை ஆட வேண்டாம் என்று சொல்ல தன் வாயை திறப்பதற்குள்,
“நான் கடைக்கு வர்றவங்க முன்னாடி எப்படி ஆடுறதுன்னு நெனச்சு நானும் கொஞ்சம் யோசிச்சிட்டு இருந்தேன்.
பட் நம்ம இடத்துல நம்மளே ஆடுறதுக்கு யோசிச்சா, இப்ப லாஸ்ட் மினிட்ல இன்னொரு டான்ஸரை நம்ம எங்க போய் தேட முடியும்?
பரவால்ல எனக்கு தெரிஞ்ச மாதிரி நானே டேன்ஸ் ஆடுறேன்.
அந்த பொண்ணு என் காலேஜ் ஜூனியர் தான் நல்ல டான்சர்.
நான் மொக்கையா ஆடினாலும் அவ எப்படியும் மேனேஜ் பண்ணிடுவா.” என்று சொன்ன இசை ஜீவாவிடம் அவனிடத்தில் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு பிரியாவிடம் ஒரு வார்த்தை கூட எதுவும் கேட்காமல் அந்த பெண்ணுடன் டான்ஸ் ஆடுவதற்காக சென்றுவிட்டான்.
அதனால் தன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு மார்புக்கு குறுக்காக தன் கைகளை கட்டிக் கொண்டு பிரியா நடப்பதை பார்த்தபடி நிற்க,
இசை அந்தப் பெண்ணுடன் டான்ஸ் ஆடுவதை பார்த்தபடி பிரியாவின் அருகில் சென்ற ராகுல்,
“என்ன சிஸ்டர் ஜலஸ் ஆகுதா?” என்று கிண்டலாக கேட்டான்.
“எனக்கு எதுக்கு ஜெலஸ் ஆகணும்?
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே!” என்று உடனே அவள் அதை மறுக்க,
“இங்கே இருக்கிற மத்தவங்க எல்லாரையும் விட எனக்கு உன்ன பத்தி நல்லா தெரியும் பிரியா.
உனக்கு அந்த அண்ணாவை பிடிச்சு இருந்துச்சுன்னா நீ கண்டிப்பா அவர லவ் பண்றது பத்தி யோசிக்கலாம்.
அவர் உன்ன டிசப்பாய்ண்ட் பண்ண மாட்டாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
இவர் நல்ல சாய்ஸ் தான். உனக்கே எல்லாமே தெரியும்.
நல்லா யோசிச்சு பார்த்து டிசைட் பண்ணு.” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து சிரித்த ராகுல் சாதாரணமாக அந்த இடத்தை விட்டு நடந்து சென்று விட்டான்.
ஆனால் இப்போது பிரியாவிற்கு நடப்பதை நினைத்து பைத்தியம் பிடிப்பது போல இருந்தது.
அவளுக்கு இசையின் மீது ஒரு ஈர்ப்பு இருப்பது அவளுக்கே தெரியும் தான்.
ஆனால் அவள் அவனை காதலிக்கும் அளவிற்கு எல்லாம் யோசி
க்கிறாளா? இல்லையா?
அந்த கேள்விக்குத்தான் அவளுக்கு விடை தெரியவில்லை.
ஆனால் இப்படி அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கே இசை தன் காலேஜ் ஜூனியர் பெண்ணுடன் சேர்ந்து இயல்பாக ஜாலியாக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான் இசை.
- மீண்டும் வருவாள் 💞

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-23
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.