சந்ரா அபியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவிக்கு ஒருவரை அழைக்க, அதை கேட்டு பதறிய அவரும், "அப்பிடியா? வாமா. போலாம்." என்று அவளுடன் செல்ல, இருவரும் அபி இருக்கும் இடத்தை வந்தடைந்தனர்.
அப்போது அவர், "எங்கம்மா?" என்று கேட்க,
சந்ரா, "அதோ அங்க." என்று கை காட்டியபடி திரும்ப, அங்கு யாருமே இல்லை.
அதை பார்த்த அவர், "என்னம்மா, யாரோ அடிப்பட்டு கெடக்குறாங்கன்னு சொன்ன? ஆனா அங்க யாரையுமே காணோ?" என்று கேட்க, அதை பார்த்த சந்ராவோ அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தாள்.
அதை பார்த்த அவரும் அவள் தோள்களை பற்றி, "ஹலோ! எங்கம்மா உன் ஃபிரண்டு?" என்று கேட்க,
அதில் திடுக்கிட்ட சந்ரா, "இங்கதா அண்ணா இருந்தான்." என்று அவன் விழுந்து கிடந்த இடத்தை பார்த்தபடி கூற, அங்கு இரத்த அடையாளம்கூட இல்லாமல் இருந்தது.
"இப்போ எங்க?" என்று அவர் கேட்க,
சந்ரா, "சத்தியமா இங்கதா அண்ணா இருந்தான். இருங்க நா பாக்குறேன்." என்று கூறி அங்குள்ள எல்லா இடத்திலும் தேடி பார்த்தாள். ஆனால் அப்படி ஒருவன் இருந்தான் என்ற தடயமே இல்லாமல் இருந்தது.
அவள் இவ்வாறு தேடிக்கொண்டிருப்பதை பார்த்து சலிப்புடன் தலையில் அடித்துக்கொண்டவர், "என்னம்மா நீ. நடு ராத்திரில இங்க வந்து நின்னு எதயோ பாத்து பயந்திட்டன்னு நெனைக்கிறேன். ஒன்னு இல்ல போம்மா, போய் வேலய பாரு. வயசு பொண்ணு இப்பிடி தனியா நிக்குறது நல்லதில்ல. சீக்கிரமா வீட்டுக்கு போ." என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஆனால் அபியை காணாமல் குழம்பி தவித்த சந்ரா, தன் நடு நெற்றில் கை வைத்தபடி பதற்றத்துடன் யோசித்து, "அபி இங்கதான இருந்தான்? அதுக்குள்ள எங்க போயிட்டான்?
ஒருவேள நா கனவு கண்டனா?" என்று குழம்பி யோசிக்க, அவளுக்கு பைத்தியமே பிடிப்பதுப்போல் இருந்தது.
ஆனால் அவன் கூறிய வார்த்தைகள் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்க, "என்ன இப்பிடி பண்ணது அர்ஜுன்தா. அவன் நாம மெஹந்தி ஃபங்ஷன்ல பேசிகிட்டிருக்கும்போது பாத்துட்டான். அதோட அவனுக்கு எல்லாமே தெரிஞ்சிருச்சு. அதா அவன் என்ன இப்பிடி பண்ணிட்டான்." என்று கூறியவனின் வார்த்தைகள் மேலும் இறுகிய நிலையில், "உ..உன் முன்னாடி. உன் முன்னாடி அவன் நல்லவன் மாதிரி நடிக்கிறான் சந்ரா. அவன் உன்ன அடையறதுக்காக என்ன மறுபடியும் கொல்ல துணிஞ்சிட்டான்." என்று கூறி மூச்சை இழுத்தவன், "அவன விடாத." என்று இறுக்கமாக கூறிய அவன் வார்த்தைகளை மீண்டும் நினைவுப்படுத்தியவள், "இல்ல அது கனவு இல்ல. அபி எங்கிட்ட சொன்னதெல்லா எனக்கு ஞாபகம் இருக்கு. எல்லாத்துக்கும் காரணம் அந்த அர்ஜுன்தா. ஐயம் ஷ்யோர். அபியோட ஒடம்ப அர்ஜுன்தா எங்கயாவது மறச்சி வெச்சிருப்பான். அவன நா விடப்போறதில்ல. அவனோட சாவு இந்த ஜென்மத்துலையும் என் கையாலதா." என்று கொலைவெறியுடன் கூறியவள், அதே கோபத்துடன் அர்ஜுனை பார்க்க வீட்டிற்கு சென்றாள்.
அதே வெறி சற்றும் குறையாமல் வீட்டிற்குள் சென்றவள், "அர்ஜுன்!" என்று கத்தி அழைக்க,
அதை கேட்டு உடனே ஹாலுக்கு வந்த அர்ஜுன், "சந்ரா நீ எங்க போன? நா உனக்கு எவ்ளோ நேரமா கால் பண்ணிகிட்டிருக்கேன், ஸ்விட்ச்டு ஆஃப்னே வருது? எங்க போன? ஏ இவ்ளோ நேரம்?" என்று பதறி கேட்க,

அதற்கு சற்றும் பதிலளிக்காத சந்ரா கோபத்துடன், "மெகந்தி ஃபங்ஷன்ல அபிய பாத்தியா?" என்று கேட்க,
அதற்கு அர்ஜுன், "சந்ரா, நீ காணோன்னு நா எவ்ளோ பதறிப்போய் கேக்குறேன், நீ என்னடான்னா என் கேள்விக்கு பதில் சொல்லாம, என்னென்னமோ பேசிட்டிருக்க?" என்று கூற,
சந்ரா, "நா கேட்ட கேள்விக்கு பதில்." என்றாள் அழுத்தமாக மற்றும் கோபமாக.
அதற்கு அர்ஜுன், "ம்ம் பாத்தேன்." என்றான்.
சந்ரா, "எப்போ?" என்று கேட்க,
அர்ஜுன், "நீயும் அவனும் பேசும்போது. ஆனா எனக்கு தெரியும் சந்ரா, உனக்கு அவந்தா லிஃப்ட் குடுத்திருக்கான், கோவில்ல மீட் பண்ணியிருக்கீங்க. அதனால அவன நீ ஒரு ஃபிரண்டா ஃபங்ஷனுக்கு இன்வைட் பண்ணியிருக்க. ஆனா அவன் அப்பிடி நெனைக்கல சந்ரா. அவன் எங்கிட்டயே வந்து உன்ன காதலிக்கிறன்னு சொல்றான். அதோட நீயும் அவன காதலிக்கிறன்னு சொல்றான். பட் எனக்கு தெரியும் என்னோட சந்ராவ பத்தி. அதனால அவனோட பேச்ச நா பெருசா எடுத்துக்கல. அவன இந்த பக்கமே வந்திறாதன்னு சொல்லி அனுப்பிட்டேன்." என்றான்.
"அதோட யாரும் இல்லாத எடமா பாத்து, அவன நீ கொன்னுட்ட." என்றாள் சந்ரா.
அதை கேட்டு அதிர்ந்த அர்ஜுன், "என்ன?" என்று கேட்க,
சந்ரா, "நீ நடிச்சதெல்லா போதும் அர்ஜுன். நீ அவன கொன்னுட்டு அவனோட ஒடம்ப எங்கயோ மறச்சு வெச்சிருக்க." என்று கர்ஜித்தாள்.
அதை கேட்டு புரியாமல் விழித்த அர்ஜுன், சந்ரா! உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருச்சா? என்ன பேசுறன்னு தெரிஞ்சுதா பேசுறியா? நா யாரையும் கொல்லல." என்றான்.
அதற்கு சந்ரா கோபத்துடன், "நீதா கொன்ன." என்றாள் அழுத்தமாக.
அதை கேட்டு தன்னை நிதானப்படுத்திக்கொண்டு அவளை பார்த்தவன், "இங்க பாரு சந்ரா, நீ எதயோ பாத்து பயந்திருக்கன்னு நெனைக்கிறேன். அதனாலதா என்னென்னமோ ஒளரிகிட்டிருக்க. நடு ராத்திரில வெளிய போகாதன்னு சொன்னா கேக்கிறயா? போ போய் ரூமுல ரெஸ்ட் எடு. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்." என்றான்.
சந்ரா, "நா ஒன்னும் ஒளறல அர்ஜுன்." என்று கத்தியவள் மேலும், "உண்மையதா சொல்றேன். அது உனக்கும் நல்லாவே தெரியும். இதுக்கு மேலையும் நடிக்காத. அபி சாகறதுக்கு முன்னாடி எங்கிட்ட எல்லா உண்மையயும் சொல்லிட்டான்." என்றாள்.
அதை கேட்ட அர்ஜுன், "வாட்? என்ன பேசிகிட்டிருக்க நீ? நா எதுக்காக அவன.." என்று கூற வந்தவன், இவளுக்கு எப்படி புரிய வைக்க என்று தவித்தபடி, "நா யாரையும் கொல்லல சந்ரா, என்ன நம்பு." என்று கூற,
சந்ரா, "உன்மேல எனக்கு சுத்தமா நம்பிக்க வராது அர்ஜுன். நானே என் ரெண்டு கண்ணால பாத்தேன்" என்று கத்த,
அதில் அதிர்ந்த அர்ஜுன், "சந்ரா நீ ஏ இப்பிடி பேசிற? உனக்கு என்ன ஆச்சு? நீ எங்க போன? என்ன பாத்த? அத மொதல்ல சொல்லு." என்று கூற,
சந்ரா கோபத்துடன், "நா கோவிலுக்கு போயிட்டு வரும்போது, அபி உயிர் போற நெலமைல எங்கிட்ட, நீதா அவன இப்பிடி பண்ணதா சொன்னான். கண்டிப்பா அவன் சொன்னத நா நம்புவேன். ஏன்னா நீதா அவன கொன்னிருக்க." என்றாள்.
அதை கேட்டு அதிர்ந்து பிறகு குழம்பிய அர்ஜுன், "வாட்? நீ மொதல்ல வா. அந்த எடத்துக்கு போகனும். உண்மையிலையே அவனுக்கு என்ன ஆச்சுன்னு பாக்கலாம் வா." என்று அவள் கரம் பற்றி அழைத்து செல்ல, உடனே அவனின் கரத்தை உதறிவிட்ட சந்ரா, "போதும் நிறுத்து அர்ஜுன். நீ நடிச்சதெல்லா போதும். இதுக்குமேலயும் நடிக்காத. என்னோட அபிய கொன்னுட்டு, அவனோட ஒடம்ப எங்கயோ மறச்சு வெச்சிருக்க. இதெல்லா பன்றதால உனக்கு எனன கெடக்க போகுது?" என்று கோபமாக கத்த,
அதை கேட்டு அதிர்ந்த அர்ஜுன், "என்ன? உன்னோட அபியா?" என்று கேட்க, அதற்கு அவள் அசராமல் அவனை முறைக்க, "இதுக்கு என்ன அர்த்தம் சந்ரா?" என்று அவன் கேட்க,

"அபிய நா காதலிக்கிறன்னு அர்த்தம்." என்றாள் சந்ரா அசராமல். அதை கேட்ட அர்ஜுன் அதிர்ந்து நின்றான்.
ஆனால் சந்ராவோ அசராமல் அவனை முறைக்க, அதே அதிர்ச்சியுடன் அர்ஜுன், "என்ன?" என்று கேட்கும்போதே அவன் வார்த்தையில் வலி இருந்தது.
சந்ரா, "ஆமா." என்றாள் அசராமல். அதை கேட்டவனுக்கு மேலும் அதிர்ச்சி மற்றும் வலி கூடியது.
அது அவன் கண்களில் தெரிய, "அப்றம் எதுக்கு என்ன கல்யாணம் பண்ணணுன்னு அடம்புடிச்ச?" என்று வலியுடன் புரியாமல் கேட்க,
"உன்ன பழிவாங்க." என்றாள் கோவத்துடன், .
அதை கேட்டு குழம்பிய அர்ஜுன், "என்ன எதுக்கு நீ பழி வாங்கனும்? அப்பிடி உனக்கு நா என்ன பன்னேன்?" என்று வலியுடன் கேட்க,
அதற்கு சந்ரா கோவத்துடன், "இன்னைக்கு எனக்கு நீ என்ன பண்ணி இருக்கியோ, அதேதா போன ஜென்மத்திலையும் பண்ண." என்றாள் கொலைவெறியுடன்.
அதை கேட்டு மேலும் குழம்பியவன், "போன ஜென்மமா?" என்று கேட்க,

அதற்கு சந்ரா கோவத்துடன், "ஆமா. போன ஜென்மத்துல என்ன நடந்ததுன்னு உனக்கு ஞாபகம் இல்ல. ஆனா நீ எனக்கு பண்ண அந்த அநியாயம், அந்த கொடும எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அதுக்கு நீ கண்டிப்பா அனுபவிப்ப அர்ஜுன்." என்று கர்ஜித்தாள்.
அதை கேட்ட அர்ஜுனுக்கோ வலி ஒரு புறம், வேதனை ஒரு புறம், இப்போது குழப்பமும் ஒரு புறம் என்று ஒரே நேரத்தில் சூந்துக்கொள்ள, அப்போது சந்ரா, "உனக்கு எதுவும் புரியல இல்ல? வா நா உனக்கு புரிய வெக்கிறேன்." என்று கோபத்துடன் அவன் கரம் பற்றி இழுத்து சென்றாள்.
அவனும் புரியாமல் அவளை பார்த்தபடியே வேதனை முகம் மாறாமல் அவளுடன் செல்ல, அவனை அங்கிருந்து அழைத்து வந்த சந்ரா, நேராக காட்டின் நடுவே உள்ள அதே சிவன் கோவிலுக்கு அழைத்து வந்தாள்.
அங்கு அவள் அவனை கோபத்துடன் உள்ளே அழைத்து செல்ல, அப்போது அர்ஜுன், "இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த சந்ரா?" என்று புரியாமல் கேட்க,
அதற்கு சந்ரா கோவத்துடன், "இந்த எடம் நியாபகம் இருக்கா உனக்கு? போன ஜென்மத்துல நம்ப ரெண்டு பேரோட கடைசி மூச்சு இந்த எடத்துலதா நின்னுப்போச்சு. ஞாபகம் வருதா?" என்று கத்தி கேட்க,
அவனுக்கே நியாபகத்திற்கு பதில் குழப்பமே சூழ, "எனக்கு நீ சொல்றது எதுவுமே புரியல. எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த? ஏ இப்பிடியெல்லா நடந்துக்குற சந்ரா?" என்று வலியுடன் கேட்க,
சந்ரா, "உனக்கு ஞாபகம் வரணுங்கிறதுக்காக நா உன்ன இங்க கூட்டிட்டு வரல." என்று கூற, அதை கேட்ட அர்ஜுன் கேள்வியுடன் அவளை பார்க்க,
மேலும் சந்ரா, "என்ன பாக்குற? உன்ன போன ஜென்மத்துல கொன்ன அதே எடத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்." என்று கூற, இவள் தன்னை கொன்றாளா என்று அதிர்ச்சியடைந்தான்.
மேலும் அவள், "இந்த ஜென்மத்திலயும் உன்னோட சாவு இங்கதா. அதுவும் என்னோட கையாலதா அர்ஜுன்." என்று கூறியவள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சற்றும் யோசிக்காமல் அவனின் இதயத்தில் இறக்கியிருந்தாள்..

அதில் மேலும் அதிர்ச்சியடைந்தவன், அவள் கத்தியால் குத்திய காயத்தைவிட அவளின் வார்த்தைகளால் ஏற்பட்ட காயமே அதிகம் வலித்திருக்க, நெஞ்சம் நிறைய குருதியும் வலியுமாய் அவளை பார்த்தவன், "ஏ சந்ரா?" என்று மட்டும் வேதனையுடன் கேட்டான். ஏனோ தன் முன் நிற்கும் இவள் தன்னுடைய சந்ராதானா என்ற சந்தேகமே புதிதாய் எழுந்தது.
அதற்கு கொலைவெறியை கண்களில் கக்கிய சந்ரா, "உன்ன இனிமே உயிரோட வெச்சிருக்க கூடாது. நீ என்னோட அபிய கொன்னுட்ட." என்று கூற, அதை கேட்ட அவனுக்கு வலி இன்னும் அதிகமாக, அவள் கூறிய "என்னோட அபி" என்ற வார்த்தைதான் அவனை அதிகம் பாதித்தது. அந்த வலியுடன் சிவந்த கண்களில் வழிந்த கண்ணீருடன், தன் இதய பகுதியை பற்றியபடி தள்ளாடிய அர்ஜுன், "எங்கிட்ட இருந்து எல்லாத்தையும் பறிச்சிட்ட அர்ஜுன்." என்றாள் சந்ரா கொலைவெறியுடன்.

அதை கேட்ட அர்ஜுனுக்கோ அவள் மீண்டும் மீண்டும் வேறு ஒருவனை தன்னவன் என்று கூறியதை கேட்க கேட்க, இப்போதே இவள் கையால் இறந்தேவிடலாம் என்றுதான் தோன்றியது. ஏனோ இந்த வார்த்தைகளை கேட்பதைவிட மரணமே மேல் என்றுதான் அவனுக்கு தோன்றியது. ஏனோ அவள் தன்னை இந்த அளவு வெறுக்கிறாள் என்று எந்த உண்மையையும் தெரிந்துக்கொள்ள அவன் மனம் எண்ணவில்லை. ஏனெனில் இந்த உண்மைகள் தரும் வலியை அவனால் தாங்கவே முடியவில்லை. அவள் வேறு ஒருவனை காதலிப்பதாக கூறும் அவளின் வார்த்தைகள் மேலும் தன்னை கொல்லாமல் கொல்லும் என்று எண்ணியவன், எதற்கு யோசிக்காமல் சாவதற்கு தயாராக அவள் முன் நிற்க, அவன் பார்வை உடனே என்னை கொன்றுவிடு என்றுதான் கூறியது. அப்போதே சந்ராவும் அவனை கொல்ல தயாராக கத்தியை உயர்த்த, அப்போதே சந்ராவை கடந்து பின்னால் பார்த்த அர்ஜுன், அவள் கத்தியுடன் தன்னை நோக்கி வரும்போதே அவள் மீது பாய்ந்து, அவளை நோக்கி பாய்ந்த அம்பை தன் மார்பில் தாங்கி அவளை காப்பாற்றினான்.
அதில் திடுக்கிட்ட சந்ரா அதிர்ச்சியடைவதற்குள், அவளை மறைவான ஒரு பாதுக்காப்பான இடத்திற்கு இழுத்து சென்றிருந்தாள் அர்ஜுன்.
அப்போதும் அதே அதிர்ச்சியிலிருந்த சந்ரா, தன் மீது யார் அம்பு எய்தது என்பதை யோசிப்பதைவிட, தான் அவனை கொல்ல துணிந்தும், அவனின் உயிர் போகும் நிலையிலும்கூட அவன் தன்னை காப்பாற்றியது இது ஒன்றும் முதல் முறை அல்ல, ஏற்கனவே பூர்வ ஜென்மத்தில் இதேப்போல்தான் செய்திருக்கிறான் என்றாலும், இவனுக்குதான் பூர்வ ஜென்ம நினைவுகள் இல்லையே. பிறகு ஏன் உதயா செய்ததையே மீண்டும் செய்கிறான்? அதோடு உதயாவாவது அவளை காதலித்தான். ஆனால் அர்ஜுன்? ஏற்கனவே சத்தியத்திற்காக தன்னை ஒரு முறை காப்பாற்றியவன்தான். ஆனால் அப்போது இருந்த சூழ்நிலை இப்போது இல்லையே. இப்போது தானே அவனை கொல்ல முயன்றும், அவனை காயப்படுத்தியும் அர்ஜுன் ஏன் தன்னை காப்பாற்ற வேண்டும் என்றுதான் குழப்பத்தில் ஆள்தாள். அப்போதே அபி கூறிய "அவனுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சு." என்று கூறியது நினைவிற்கு வர, இப்போது வரை அபி தன்னை காதலிக்கிறேன் என்று அவனிடம் கூறியதால்தான் இவன் அவனை கொன்றிருப்பான் என்று நினைத்திருந்தாள். அதனால்தான் அபி கூறியும் நம்பாமல் அவனிடமே சென்று விசாரித்து, பிறகு அவன் அபியை பார்த்து பேசியது தெரிந்த பிறகே இவன்தான் கொன்றிருப்பான் என்று முடிவெடுத்தாள். ஆனால் அன்று உதையா செய்தைதையே இன்று அர்ஜுனும் செய்யும்போது மேலும் குழப்பமாக, "அப்பிடின்னா அர்ஜுனுக்கு எல்லாம் நியாபகம் வந்ததாலதா அபிய கொன்னானா?" என்ற குழப்பமும் சூழ, கேள்வியும் அதிர்ச்சியுமாக அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆனால் அர்ஜுனோ தான் செய்ததற்கு சிறிதும் வருத்தப்படாமல், அவளை காப்பாற்றிவிட்டோம் என்ற நிம்மதியுடன் வலியுடனும் குருதியுடனும் கீழே சரிந்தான் அர்ஜுன்.
உடனே அவன் அருகில் சென்ற சந்ரா, "எதுக்காக என்ன காப்பாத்துன? நா உன்ன கொல்ல பாத்தேன். ஆனா நீ இந்த நெலமையிலயும் என்ன காப்பத்துற. ஏ? எதுக்காக?" என்று கேட்டாள். இதே கேள்வியை அன்று உதயாவிடமும் கேட்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் தன் உயிர் காதலனின் பிரிவு அவளை வேறு எதுவும் யோசிக்க விடாமல் செய்துவிட்டது. எனவே இன்று அவள் மனதில் உள்ள குழப்பத்திற்கு பதில் வாங்கும் உறுதியோடு இருந்தாள்.
ஆனால் அர்ஜுனோ அவளுக்கு பதிலளிக்காமல் வலியில் துடித்துக்கொண்டிருக்க, "எனக்கு பதில் சொல்லு. நா உன்ன காயப்படுத்துனேன், கொல்ல ட்ரை பண்றேன். ஆனா நீ ஏ என்ன காப்பத்தணுன்னே நெனைக்கிற?" என்று கேட்டாள் சந்ரா. இந்த கேள்வி உதயாவிற்கும் சேர்த்துதான்.
அதற்கு அர்ஜுன் இறுகிய குரலில், "ஏன்னா நா உன்ன காதலிக்கிறேன் சந்ரா." என்றான். அதை கூறும்போது அவன் கண்களோ சிவந்த நிலையில் கலங்கியிருக்க, வலியோ இதயத்தின் உள்தான் அதிகம் இருந்தது. அது அவன் கண்களிலும் பிரதிபலித்தது. அதை கேட்ட அடுத்த நொடியே அதிர்ந்து நின்ற சந்ராவிற்கு, இதை உதயா கூறிதான் கேட்டிருக்கிறாளே தவிர அர்ஜுனின் வாயால் இதுதான் முதல் முறை. அப்படியென்றால் அர்ஜுன் தன்னை காதலிக்கிறானா என்ற அதிர்ச்சியே அவளுக்கு அதிகம் தோன்ற, அவள் அதிர்ச்சியை பார்த்த அர்ஜுன், "பதில் கெடச்சதா?" என்றான் வலி நிறைந்த கண்களுடன்.
ஆனால் இங்கு தன் கையில் இருந்த ஏரோ கன் (Arrow gun) ஐ இறக்கியவனோ, சந்ரா தப்பியதை எண்ணி கோபத்துடன் கைகள் இறுகி, அருகில் உள்ள மரத்தில் குத்திக்கொண்டவன், "இந்த தெடவையும் இந்த பைத்தியக்கார அர்ஜுன் எதுக்காக குறுக்க வந்தான் ச்செ." என்று கூறி மெல்ல திரும்ப, அவனே இறந்துவிட்டதாக எண்ணிய நம் அபி.
- ஜென்மம் தொடரும்...

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-22
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.