Chapter-21

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
பிரியாவும் இசையும் தனியாக ரெஸ்டாரண்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது இன்னும் சில நிமிடங்களில் மழை வந்துவிடும் என்பதற்கு அறிகுறியாக அந்த இடம் முழுவதும் குளுமையான காற்று வீசியது.

அதை உணர்ந்த பிரியா தன் முகத்தில் விழுந்து வந்த முடியை தன் காதுக்கு பின்னே ஒதுக்கிவிட்டு,

“மழை வர்ற மாதிரி இருக்கு. சீக்கிரம் சாப்பிடு. டோரை லாக் பண்ணிட்டு மேல போலாம்.

வானம் இப்படி மின்றதை பார்த்தா நல்ல மழை வரும்னு நினைக்கிறேன்.

அப்புறம் படி ஏறி போறதுக்குள்ளேயே அன்னைக்கு மாதிரி நினைச்சிருவோம்.” என்று சொல்ல,

அவள் அந்த நாளில் ஞாபகப்படுத்தி விட்டதால் தானும் அதை நினைத்து பார்த்த இசை,

அவளுடன் சேர்ந்து அவன் மழையில் நனைந்து என்ஜாய் செய்த தருணங்கள் எல்லாம் மீண்டும் வராதா என்று எங்க தொடங்கினான்.

அதனால் அவன் கேஷுவலாக “மழை தானே வந்தா வரட்டும்.

அதுல நெனச்சு நம்ம என்ன கரைஞ்சு போய்டுவா போறோம்?" என்று கேட்க,

“உனக்கு என்னப்பா நீ ஸ்டில் பாடியா இருப்ப..

மழையில அடிக்கடி நெனச்சா கூட உனக்கு எதுவும் ஆகாம இருக்கலாம்.

ஆனா எனக்கெல்லாம் சுத்தமா சேராது.

அன்னைக்கு ஏதோ ஆசையா இருந்துச்சு அதான் நினைந்தேன்.

அதுக்குன்னு சும்மா சும்மா மழையில நினச்சு நைட்டு ஹேர் வாஷ் பண்ணிட்டு இருந்தா சேராது." என்ற ப்ரியா அவசரமாக சாப்பிட தொடங்கினாள்.

உடனே தன் உதட்டை சுழித்த இசை “என் ஆசையில மண்ணள்ளி போடுறதே இவளுக்கு வேலையா போச்சு!” என்று நினைத்து வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு கொண்டு இருந்தான்.

திடீரென அவன் முகத்தை உற்றுப் பார்த்த ப்ரியா, “என்னாச்சு உனக்கு? திடீர்னு ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க?" என்று சந்தேகமாக கேட்க,

“ம்ம்.. வடை போச்சேன்னு சோகத்துல இருக்கேன் டி.

அதையெல்லாம் உன்கிட்ட சொல்லவா முடியும்?” என்று நினைத்த இசை,

“அப்படியா? ஏன்னு தெரியலையே..

நான் நார்மலா இருக்கிற மாதிரி தான் எனக்கு தோணுது.” என்றான்.

சரி நிமிடங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தார்கள்.

இசை அந்த ரெஸ்டாரன்ட்டின் கதவை பூட்டிக் கொண்டு இருக்க,

அப்படியே வெளியில் இருந்த ஹெல்த்தி ஃபுட் ஸ்டால் பக்கம் ‌சென்ற பிரியா ஏதாவது வெளியில் இருக்கிறதா? என்று செக் செய்துவிட்டு வந்தாள்.

அவர்கள் இருவரும் அவரவர் வீட்டிற்கு செல்வதற்காக படிகளில் ஏறத் தொடங்கினார்கள்.

முதலில் சென்றது இசை தான். அதனால் அவன் தன் கால்களை ஒரு மாதிரி சாய்த்து சாய்த்து சிரமப்பட்டு நடந்து செல்வதை கவனித்தபடி அவன் பின்னே சென்ற பிரியா,

அவனுடைய வீடு இருக்கும் முதல் தளத்திற்கு வந்த பிறகு அவன் கையைப் பிடித்து,

“என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி நடக்கிற?

கால் வலிக்குதா?” என்று அன்புடன் கேட்டாள்.

இது மாதிரியான சிறிய விஷயத்திற்கு எல்லாம் அவன் அவளிடம் பொய் சொல்ல விரும்பவில்லை.

அதனால் வெளியில் கிடந்த சேர் ஒன்றில் சென்று அமர்ந்த இசை,

“ஆமா, என்னன்னு தெரியல திடீர்னு ரொம்ப வலிக்குது.‌

நாங்க எப்பவுமே நின்னுகிட்டு தான் வேலை செய்வோம்.

அது எனக்கு பழகிருச்சு. நைட்டு சம்டைம்ஸ் இந்த மாதிரி கால் வலிக்கும்.

இருந்தாலும் அப்படியே மேனேஜ் பண்ணி தூங்கிடுவேன்.

பட் முன்னாடி இருந்ததைவிட இப்போ வொர்க் ஹெவியா இருக்குல்ல!

அதான் இன்னைக்கு கொஞ்சம் painம் ஹெவியா இருக்கு.

பெயின் கில்லர் ஸ்பிரே அடிச்சிட்டு தூங்கினா சரியாயிடும்.

அப்பவே மழை வர மாதிரி இருக்குன்னு சொன்னில..

நீ மாடிக்கு போ. திடீர்னு மழை வந்துட போகுது.” என்று சொல்ல,

அவளுக்கு அவனை அப்படியே விட்டு செல்ல மனம் வரவில்லை.

சில நொடிகள் அவனையே பார்த்தபடி நின்ற பிரியா,

“ஒரு 5 மினிட்ஸ் வெயிட் பண்ணு. நான் ஒரு பெயின் கில்லர் ஆயிலோட வரேன்.

அதை போட்டா கால் வலிக்கு நல்லா கேட்கும்.‌

பெயின் கில்லர் ஸ்பிரே எல்லாம் யூஸ் பண்ணாத.‌

அது ஹியூமன் ஸ்கின்னுக்கு நல்லது இல்ல.

அதுவும் ரெகுலரா யூஸ் பண்ணவே கூடாது.” என்று சொல்லிவிட்டு ‌ படிகளில் வேகவேகமாக ஏறி தன் வீட்டிற்கு சென்றாள்.

அவளது அக்கறையான கவனிப்பில் சிலாகித்துப்போன இசை,

“பரவாயில்லையே இவ நமக்காக இந்த அளவுக்கு யோசிக்கிறா!

ஆனா இதெல்லாம் சும்மா ஏதோ ஒரு அக்கறையில எல்லாரும் ஒன்னா வேலை பாக்குறமேன்னு‌ பண்றாளா?

இல்ல இவளுக்கும் என்ன புடிச்சிருக்கா?

அதான் புரிய மாட்டேங்குதே கடவுளே!

நீதான் எனக்கு ஒரு நல்ல வழி காட்டணும்.

என் பிரியா மட்டும் எனக்கு கிடைக்கட்டும்.. நான் கும்பிட எல்லா கடவுளையும் ஹெவியா கவனிச்சுடறேன்.” என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்தான்.

பிரியா இங்கே வந்தவுடன் அவளைப் பற்றி யோசிக்க தொடங்கியதில்,

யாழினி என்ற ஒருத்தி தன் வாழ்க்கையில் இருந்ததால் தான் அவளைப் போலவே இருக்கும் இந்த பிரியாவை தனக்கு பிடித்து போனது என்ற உண்மையைக் கூட மறந்துவிட்டு மொத்தமாக இசை அவள் பக்கம் சாயை தொடங்கி இருந்தான்.

ஐந்து நிமிடத்திற்கு பிறகு ‌ சுட சுட ‌ ஆவி பறக்க ஏதோ எண்ணெயை காய்சி கீழே கொண்டு வந்த பிரியா அதை தரையில் வைத்துவிட்டு,

“இந்த ஆயில் போட்டு மசாஜ் பண்ணா leg பெயினுக்கு நல்லா கேட்கும்.

எங்க வீட்ல எப்பயுமே இந்த ஆயில் இருக்கும்.

இப்போதைக்கு இதை யூஸ் பண்ணு. தீந்துருச்சுனா சொல்லு அப்பறமா காய்சி தரேன்.” என்று சொல்ல,

“தேங்க்ஸ் ப்ரியா” என்ற இசை அவனது பேன்டை மூட்டிக்கு மேலே ஏற்றிவிட்டு அவள் கொண்டு வந்த ஆயில் சூடு பறக்க இருந்ததால்,

லேசாக அதை தனது இரண்டு விரல்களில் தொட்டு மெல்ல தனது கால்களில் தடவினான்.

மார்புக்கு குறுக்காக தன் கைகளை கட்டிக் கொண்டு அவனையே குறுகுறுவென்று பார்த்தப்படி நின்ற பிரியா,

“என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்க,

“நீதானே இந்த ஆயில் அப்ளை பண்ண வலி குறையும்னு சொன்ன..

அதுதான் பண்ணிட்டு இருக்கேன்." என்றான் அவன்.

“இப்படித்தான் ஆயுள் அப்ளை பண்ணுவாங்களா?” என்று கேட்டுவிட்டு அவள் தன் ஒற்றை புருவத்தை உயர்த்த,

“வேற எப்படி பண்ணுவாங்க?" என்று சலிப்புடன் கேட்டான் இசை.

உண்மையில் வழக்கத்தை விட இன்று அவன் மிகவும் சோர்வாக இருந்தான்.

அதனால் அந்த ஆயிலை அப்ளை செய்வது கூட அவனுக்கு ஏதோ ஒரு பெரிய வேலையை செய்வதைப்போல சிரமமாக இருந்தது.‌

அவன் முகத்தை வைத்து அதை சுலபமாக கண்டுபிடித்துவிட்ட பிரியா அவன் அருகில் சென்று தரையில் அமர்ந்து அவன் ஒற்றை காலை தூக்கி தன் மடியில் வைத்தாள்.

அதை எதிர்பார்த்து இருக்காத இசை திடுக்கிட்டு தன் காலை அவள் மீது எடுத்துக்‌ கொண்டு,

“ஏய் இது என்னடி பண்ற?" என்று பதட்டமான குரலில் கேட்டான்.‌

‌“இப்ப எதுக்கு இப்படி பதர்ற..?? நான் என்ன உனக்கு ஆபரேஷனா பண்ண போறேன்?

ஜஸ்ட் ஆயில் தான் அப்ளை பண்ண போறேன்.

கம்முனு உட்காரு. ஒரு ஆயில் மசாஜ் கூட எப்படி பண்ணனும்னு தெரியல.

வாய் மட்டும் நல்லா பேச தெரியும்.” என்ற பிரியா மீண்டும் அவன் காலை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு அருகில் இருந்த ஆயுளை கை நிறைய எடுத்து அவனது கால்களில் ஊற்றி நன்றாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்தாள்.

அவள் தனது மிருதுவான கைகளில் அந்த ஆயிலை சூடு பறக்க தேய்க்க,

அதில் சிலிர்த்து அடங்கிய அந்த ஆண் மகனின் உடல் அவளால் இப்போது சூடாக தொடங்கியது.

அதை உணராத பிரியா கடமையை கண்ணாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க,

அவன் அங்கே ஒழுங்காக உட்கார முடியாமல் நெளித்தபடி,

“ஏய் போதும் டி விடு. நீ தொட்ட உடனே எனக்கு கால் வலியே சரியான மாதிரி இருக்கு.

உனக்கு கை வலிக்க போகுது விடு!” என்றான்.

உடனே தன் தலையை உயர்த்தி அவனை முறைத்து பார்த்த ப்ரியா,

“ஷூ வாய மூடு. உனக்கு தான் மசாஜ் பண்ணவே தெரியலல்ல..

போதும்னு மட்டும் சொல்ல தெரியுமா?

இந்த ஆயிலை ரெடி பண்ண தெரிஞ்சா எனக்கு, இதை வைத்து எப்படி மசாஜ் பண்ணனும், எவ்வளவு நேரம் மசாஜ் பண்ணனும்னு தெரியாதா?

நான் பண்ணி முடிக்கிற வரைக்கும் கம்முனு இரு.” என்று அவனை அதட்டிவிட்டு அவனது ஒற்றை காலை தூக்கி தன் முகத்திற்கு நேராக வைத்து பிடித்துக் கொண்டு,

மற்றொரு கையால் அவனது கால் விரல்களுக்கு நடுவில் தன் விரல்களை செலுத்தி மசாஜ் செய்து கொண்டிருந்தாள்.

தன் காதலி நிஷாவிடம் பேசிவிட்டு தூங்கலாம் என நினைத்து படிகளில் இறங்கி கீழே வந்த ஜீவா,

அந்த காட்சியை பார்த்து ஷாக்காகி அப்படியே நின்று விட்டான்.

சைடில் கிடைத்த கேப்பில் பிரியா யார் என்ற உண்மையைப் பற்றி ஜீவாவிடம் இசை சொல்லி இருந்தான்.

எப்படி பார்த்தாலும் பிரியாவின் குடும்பத்தை ஒப்பிடும்போது இசை எதுவும் அற்றவன்.

ஆனால் அப்படியெல்லாம் கொஞ்சம் கூட நினைக்காமல் பிரியா அவன் கால்களை பிடித்து இப்படி மசாஜ் செய்வதை கண்ட ஜீவாவிற்கு,

“இசை அடிக்கடி ப்ரீயா மாதிரி ஒரு பொண்ண பார்த்ததே இல்லைன்னு சொல்லிட்டே இருப்பான்.

இப்ப எனக்கும் அதுதான் தோணுது.

இவள மாதிரி ஒரு பொண்ண பார்க்கவே முடியாது.

இந்த காலத்துல இருக்கிறவங்க எல்லாம் கொஞ்சம் காசு பணம் கையில சேர்ந்தாலே உடனே ஆளே மாறிடுவாங்க.

ஆனா இவ எவ்ளோ பெரிய குடும்பத்தில இருந்து வந்தவ!

நடேசன் அப்பாவே வீட்டுக்கு வர சொல்லியும் கேட்காம,

இங்க வந்து இப்படி எல்லாம் இருந்து கஷ்டப்பட்டுட்டு இருக்கா..

இதுல இசைக்கு இப்படி எல்லாம் இவள் செய்யணும்னு அவசியமே இல்ல.

அதுக்குள்ள இவளுக்கு அவன் மேல ஃபீலிங்ஸ் வந்து இருக்குறதுக்கும் வாய்ப்பில்லை.

அப்படி இருந்தும் கொஞ்சம் கூட கூச்சம் பாக்காம கௌரவத்தை விட்டுக்குடுத்து பிரியாவல இத செய்ய முடியுதுன்னா,

இதுக்கெல்லாம் அவ நல்ல மனசு தான் காரணம்.

இதே மாதிரியே இவங்க ரெண்டு பேரும் ஹாப்பியா இருக்கணும்.

நடுவுல நம்ம கரடி மாதிரி போய் இவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.” என்று நினைத்து மீண்டும் சத்தம் எழுப்பாமல் மேலே சென்று விட்டான்.

பிரியா மசாஜ் செய்து முடித்தவுடன் தன் கையில் இருந்த ஆயுள் பாட்டிலை ஓரமாக வைத்துவிட்டு எழுந்து நின்றாள்.

உடனே தானும் அவசரமாக எழுந்து நின்ற இசை அவனது கால்களில் என்னை இருந்ததால் தன் கால்களை அசைந்தவுடன் நிலை தடுமாறி கீழே விழப் போனான்.

அதனால் உடனே ப்ரியா அவசரமாக அவனது இடுப்பில் தன் இருக்கைகளையும் வைத்து அவனை கீழே விழாமல் பிடிக்க,

அவள் அவசரத்தில் அவன் கால் மீது தன் காலை வைத்து அவள் காய்களிலும் என்னை ஒட்டிக் கொண்டதால் தரையில் சிந்திக்கிடந்த எண்ணெயில் வேறு கால் வைத்து வழுக்கி அவனை இறுக்கி பிடித்தவாறு அவனுடன் சேர்ந்து கீழே விழுந்தாள்.

அவர்கள் இருவரும் அப்படியே தரையில் படுத்து உருள,

அப்படியே போய் எதிரில் இருந்த சுவற்றில் மோதி நின்றார்கள்.

அப்போது இசை வேகமாக தன் தலையை அசைக்க,

அவனுக்கே தெரியாமல் எதைச்சையாக அவனது இதழ்கள் அவளது இதழ்களை தொட்டுவிட்டது.

அதனால் அப்படியே ஸ்டன்னான இசை அசைய மறந்து விழிகள் விரிய அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளும் அதே நிலையில் தான் இருந்தாள்.‌ எப்போதும் வேகமாக சிந்தித்து செயல்படும் அவளது மூளை இப்போது பிரேக் எடுத்துக் கொண்டு அவளுக்கு சதி செய்தது.

அவனது ஊடுருவும் பார்வையில் தன்னையே ஒரு நொடி தொலைத்துவிட்ட பிரியா அவளையும் மீறி அவன் தோள்களில் இருந்த தன் கையில் ஒரு அழுத்தத்தை கொடுக்க,

அவளது அந்த ஒரு செயலில் சுதாரித்துக் கொண்ட இசையின் மூளை பிரியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று உணர்ந்து நரம்புகள் வழியாக அவன் உடல் முழுவதும் அவளை இன்னும் ஆழமாக முத்தமிடச் சொல்லி கட்டளை பிறப்பித்தது.

தலைவனே கட்டளை கொடுத்த பிறகு அவன் எப்படி சும்மா இருப்பான்?

உடனே தன் ஒரு கையால் அவளது முகத்தை பிடித்து தனக்கு வாட்டமாக திருப்பி,

தன் மற்றொரு கையை அவளுக்கு அடியில் கொடுத்து அவளது மெல்லிடையை இறுக்கிப்பிடித்த இசை அவளை உணர்ச்சிகள் பொங்க ஆழமாக முத்தமிடத் தொடங்கினான்.

அவனது அந்த ஆழமான இதழ் முத்தம் பெண்ணவளின் ‌ ஹார்மோன்ஸ்களை தூண்டிவிட,

தன்னையும் மீறி கண்களை இறுக்கமாக மூடி மற்றொரு கையால் அவனது தலைமுடியை கொத்தாக பற்றி கொண்ட பிரியா அவனுக்கு இசைந்து கொடுக்க தொடங்கினாள்.

அவள் ஏன் இப்படி செய்கிறாள்? என்று அவளுக்கும் தெரியவில்லை.

இவன் ஏன் அவள் என்ன நினைப்பா
ள் என்று கூட யோசிக்காமல்,

ஆக்சிடென்ட்டாக நடந்த விஷயத்தில் அவளிடம் அட்வான்டேஜ் எடுத்துக்கொள்கிறோம்? என்று அவனுக்கும் விளங்கவில்லை.

ஆனால் மொத்தத்தில் அவர்கள் இருவரும் தவறாது அந்த அழகிய தருணத்தை என்ஜாய் செய்ய தொடங்கினார்கள்.

-மீண்டும் வருவாள் 💕 ‌
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-21
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.