சனந்தா, கவிதா, வள்ளி, ஸ்ரீனிவாசன் அனைவரும் ஆத்தோரம் வந்து அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்க, சரவணன், விக்ரம் மற்றும் வேலையாட்கள் அனைவரும் வேலைகளை முடித்துக் கொண்டிருந்தனர்.
சனந்தா மற்றும் ஸ்ரீனிவாசன் ஊரை பற்றியும் எப்படி ஊருக்காக அனைத்து நலன்களையும் செய்தார் என்பதை பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். “இந்த ஊரு உனக்கு புடிச்சிருக்கா சனா” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “எனக்கு இங்க ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு…. விட்டா நான் இங்கேயே இருந்துருவேன் போல… அந்த அளவுக்கு எனக்கு பிடிச்சிருக்கு” என்று சனந்தா கூறினாள்.
“சும்மாவே உன்னை அனுப்ப மாட்டா போல வள்ளி… இத வேற நீ சொன்னேன்னு தெரிஞ்சா உன்ன கண்டிப்பா உங்க வீட்டுக்கே அனுப்ப மாட்டா மா” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், சனந்தா சிரித்து விட்டாள். “என்னை பத்தி தானே ஏதோ பேசுறீங்க நீங்க ரெண்டு பேரும்?” என்று வள்ளி போலியாக மிரட்ட, “எப்படியும் மோப்பம் புடிச்சிடுரா பார்த்தியா” என்று ஸ்ரீனிவாசன் கூற, “ஐயோ!! ஆன்ட்டி உங்கள பத்தி ஒன்னும் தப்பா எல்லாம் பேசல சும்மா சொல்லிட்டு இருந்தாரு அவ்வளவு தான்” என்று சனந்தா கூறினாள்.
“எப்படி இந்த பொண்ணு மட்டும் இவ்வளவு சீக்கிரம் வந்து இவங்களோட எல்லாம் சேர்ந்து பழக ஆரம்பிச்சிட்டா…. பெரும்பாலும் வாலன்டியரா வரவங்க எங்க கூட சேரவே யோசிப்பாங்க…. இவ ரொம்ப சீக்கிரம் எங்க கூட சேர்ந்தது மட்டும் இல்லாம இவங்க ரெண்டு பேரு வேற அவ கிட்ட ரொம்ப நல்லா பேசுறாங்க பழகுறாங்க… இதெல்லாம் போக விக்ரமுக்கும் இவளை புடிச்சிருக்கு தான் போல…. நம்ம தாமதிச்சிட்டே இருந்தோம்னா கஷ்டம் கவிதா” என்று அவளுக்குள் பேசிக் கொண்டிருந்தாள் கவிதா.
சனந்தாவின் கைபேசி ஒலிக்க, அதில் விகாஷ் அழைத்திருந்தான். சனந்தா உற்சாகத்துடன் அவனது வீடியோ காலை அட்டென்ட் செய்து, “நான் இப்ப தான் உன்ன நினைச்சேன் உனக்கு ஃபோன் பண்ணலாம்னு… காலையில நீ எந்திரிச்சு இருப்பியோன்னு வேற தெரியல… இங்க பாரு எவ்ளோ அழகா இருக்கோ” என்று சனந்தா அவளை சுற்றி உள்ள இயற்கை, ஆறு என அனைத்தையும் உற்சாகத்துடன் காட்டிக் கொண்டிருந்தாள்.
“இப்ப தான் எந்திரிச்சேன்…. சரி சும்மா உனக்கு ஃபோன் பண்ணலாமேனு தான் பண்ணேன்” என்று விகாஷ் கூற, “கௌதம் எங்க அவனுக்கும் காட்டு” என்று சனந்தா கூற, “இதோ இங்க தான் இருக்கான்… கௌதம் இங்க பாரு” என்று விகாஷ் அழைக்க, அவனும் வந்து அனைத்தும் பார்த்து, “என்ன மேடம் விட்டா அங்கேயே செட்டில் ஆயிருவீங்க போலயே??” என்று கேலியாக கௌதம் கூறினான்.
“நீ இங்க வருவல அப்போ உனக்கும் இங்க புடிக்கும் பாரு” என்று சனந்தா கூறி, “சரி இருங்க நான் இங்க அங்கிள் ஆன்ட்டி எல்லாரையும் அறிமுகம் படுத்துறேன்” என்று கூறி, அருகில் அமர்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீனிவாசனை காட்டி, “அவர் பேரு ஸ்ரீனிவாசன் அங்கிள்… இந்த ஊருக்கு இவர் தான் ஹெட்… அவங்க வீட்டில தான் தங்கி இருக்கேன்” என்று சனந்தா கூறி அறிமுகம் செய்து வைக்க, விகாஷ், கௌதம் இருவரும் நல்லா இருக்கீங்களா?? என்று நலம் விசாரித்தனர்.
“நான் நல்லா இருக்கேன் பா.. நீங்க?” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “அங்கிள் இது விகாஷ் என் தம்பி… இவன் கௌதம் பிரகாஷ் அங்கிள் இருக்கிறாருல… இங்க வேலை செஞ்சாருல அவருடைய பையன்” என்று சனந்தா கூறவும், “அப்படியா!!! பிரகாஷ் சாரோட பையனா…. ரொம்ப சந்தோஷம் பா…. அப்பாவை ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க…. இப்ப வரைக்கும் அப்பா எங்களுக்கு நிறைய உதவி பண்ணிட்டு இருக்காரு ரொம்ப சந்தோஷம் உங்களை சந்திச்சதுல…. ஊருக்கு வாங்க ஒரு வாட்டி…. விகாஷ் தம்பி நீங்களும் கட்டாயம் ஊருக்கு வாங்க…. உங்க அக்கா இங்க ரொம்ப சந்தோஷமா இருக்காங்க” என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.
“ஐயோ!! ஆமா அங்க ரொம்ப சந்தோஷமா தான் இருக்கா போல…. எப்போ கேட்டாலும் இது நல்லா இருக்குன்னு அது நல்லா இருக்குன்னு ஃபோட்டோவா எடுத்து எங்களுக்கு அனுப்புறா…. அவ ரொம்ப ஹேப்பியா இருக்கா” என்று விகாஷ் கூறினான்.
“சரி சரி நான் ஆன்ட்டிய காட்டுறேன் வாங்க…. அவங்களும் சூப்பரா சமைப்பாங்க ஜாலியா பேசுவாங்க” என்று கூறிக் கொண்டே வள்ளியை அறிமுகம் செய்து வைத்தாள் சனந்தா. “இது என் தம்பி, இவன் கௌதம், பிரகாஷ் அங்கிளோட பையன்” என்று அறிமுகம் செய்து வைக்க, வள்ளியும் புன்னகையுடன், “உங்களை பார்த்துல ரொம்ப சந்தோஷம் தம்பி… ரெண்டு பேரும் ஊருக்கு வாங்க” என்று கூறி சிறிது நேரம் பேசினார் வள்ளி.
“உனக்கெல்லாம் எப்படி ஃபிரெண்ட்ஸ் அமைஞ்சங்கனே புரியலையே” என்று கௌதம் கேட்க, “நீ இதை கேட்பேன்னு எனக்கு தெரியும்…. நீ இங்க வருவல்ல அப்போ உனக்கும் தெரியும்” என்று சனந்தா கூற, “சரி ம்ம்… சரவணன் சார் இல்லையா??” என்று விகாஷ் கேட்க, சனந்தா அவனை கேலியாக பார்த்து சிரித்து, “இப்ப எதுக்கு அவர கேட்குற?” என்று கேட்கவும், “சும்மா தான் கேட்டேன் எல்லாரும் இருக்கீங்களே அவரும் இருக்காரோ என்னமோன்னு கேட்டேன் அவ்வளவு தான்” என்று சமாளித்தான் விகாஷ்.
“அவங்க அங்க வேலை பார்த்துட்டு இருக்காங்க… இரு நான் போய் ஃபோன் குடுக்கிறேன்” என்று சனந்தா கூறி பேசிக் கொண்டே செல்லவும், “ஒரு நிமிஷம் இரு… பின்னால யார் அந்த பொண்ணு??” என்று கௌதம் கேட்க, “அவங்க பேரு கவிதா இந்த ஊர்ல தான் இருக்காங்க உனக்கு எதுக்கு அந்த விவரம் எல்லாம்” என்று சனந்தா கேட்க, “ஆன்ட்டி அங்கிள் அவங்கள மட்டும் காட்டின அந்த பொண்ண காட்டவே இல்லையே?” என்று கௌதம் கேட்க, “கவிதா கிட்ட நானே பார்க்கும் போது ஒன்னு ரெண்டு வார்த்தை தான் பேசுறேன்… நான் என்னன்னு சொல்லி உங்கள காட்டுறது” என்று சனந்தா கூறினாள்.
“தேவையில்லாதது எல்லாம் செய்யுற தேவையானதை செய்ய மாட்டேன்றியே” என்று கௌதம் கூறவும், “எனக்கு தெரியும் நீ இந்த மாதிரி ஏதாவது பேசுவேன்னு சும்மா இரு” என்று சனந்தா மிரட்டினாள். “சரி நான் ஊருக்கு வருவேன்ல அப்ப அந்த பொண்ண பத்தி நான் தெரிஞ்சுக்கிறேன்” என்று கௌதம் கூற, “தெரிஞ்சுக்கோ… தெரிஞ்சுக்கோ… யாரு வேண்டான்னு சொன்னா” என்று சனந்தா கூறவும், “சரி நீங்க பேசிட்டு இருங்க நான் போய் குளிச்சிட்டு ரெடியாயிட்டு வரேன்” என்று கௌதம் சென்றான்.
சனந்தா, விக்ரம் மற்றும் சரவணனை நோக்கி செல்ல, “விக்கி அங்க பாரு, அங்க வேலை செஞ்சுட்டு இருக்காங்க” என்று சனந்தா, சரவணன் மற்றும் விக்ரம் அவர்களை காட்ட, “என்ன வேலை நடக்குது அங்க?” என்று விகாஷ் கேட்க, “ஒரு பாலம் ஒன்னு கட்டிட்டு இருக்காங்க இங்க இருக்கிற அவங்களுக்கெல்லாம் கொஞ்சம் காட்டுக்குள்ள போறதுக்கு இது வசதியா இருக்கும் அப்படின்றதுக்காக இதை பண்ணிட்டு இருக்காங்க” என்று சனந்தா கூறினாள்.
“என்ன மச்சான் விக்கின்னு கூப்பிட்டதும் பதறி அடிச்சு திரும்பி பார்க்குற…. உன்ன கூப்பிட்டான்னு நினைச்சியா?” என்று சரவணன் கேலியாக விக்ரமை பார்த்து கேட்க, “என்னை கேலி கிண்டல் செய்யணும்னா வந்துருமே உனக்கு வாய் நல்லா” என்று விக்ரம் கூறவும், “அவளோட தம்பி பேரு விகாஷ் அவன தான் விக்கின்னு கூப்பிடுறா சரியா… வேலைய பாரு டா” என்று சரவணன் கூறினான்.
சனந்தா சரவணனை பார்த்து கையசைக்கவும், “இரு மச்சான் வரேன்” என்று கூறி சனந்தாவிடம் சென்றான். “ஒன்னும் இல்ல சும்மா தான்… விக்கி நீங்க எங்கன்னு கேட்டான் அதுக்காக தான்” என்று சனா தயக்கத்துடன் கூற, “அதுல என்ன இருக்கு…. எங்க காட்டு ஃபோனை” என்று கூறி சரவணன் ஃபோனை வாங்கிக் கொண்டான்.
“என்ன விகாஷ் இப்ப தான் விடிஞ்சதா உங்களுக்கு??” என்று சரவணன் கேட்க, “ஐயோ!! ப்ளீஸ் சார்…. வாங்க போங்கன்னு எல்லாம் சொல்லாதீங்க…. என் பேரு வெச்சே கூப்பிடுங்க” என்று விகாஷ் கூறவும், “சரி சரி இப்ப தான் எந்திரிச்சியா?? காலேஜுக்கு கிளம்பலையா??” என்று சரவணன் கேட்க, “போகணும் ரெடியாகணும் என்னோட ரூம் மேட் குளிச்சிட்டு இருக்கான்… வந்ததும் ரெடி ஆகணும்…. உங்களுக்கு பிரகாஷ் அங்கிளை தெரியும்ல அவரோட பையன் கௌதம்….. நானும் அவனும் தான் ஒன்னா தங்கியிருக்கோம்” என்று விகாஷ் கூறினான்.
சிறிது நேரம் சரவணன் மற்றும் விகாஷ் பேசிக் கொண்டிருந்தனர். சனந்தா அருகில் இருந்த ஒரு செடியின் பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு அச்செடியின் இலையை பறித்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தாள். “ஆமா, ஃபோன் உங்க கிட்ட கொடுத்துட்டு எங்க போனா அவ?” என்று விகாஷ் கேட்க, “இதோ இங்க தான் ஏதோ இலையை பறிச்சிட்டு உட்கார்ந்திட்டு இருக்கா” என்று சரவணன் கூறினான்.
“இதே வேலையா போச்சு இவளுக்கு… எதையாவது ஒன்னு பண்ணிக்கிட்டு இருக்கா” என்று விகாஷ் கேலியாக கூறினான். “விக்கி… விக்கி… கௌதம கூப்பிடு” என்று சனந்தா கத்தவும், “ஏன் டி கத்துற இவன் இப்ப தான் குளிக்க போயிருக்கான் வருவான் இரு” என்று விகாஷ் கூறினான்.
“சீக்கிரமா வர சொல்லுடா அவன” என்றாள் சனந்தா இலையை ஆராய்ச்சி செய்து கொண்டே. விக்கி என்று அழைத்ததனால் விக்ரம் அவளருகில் வந்து நின்று கொண்டிருக்க, சரவணன் அதை பார்த்து சிரித்து விட்டான்.
“விகாஷ் உனக்கு இன்னொருத்தர அறிமுகம் பண்றேன்…. என்னோட ஃபிரண்ட் இந்த கிராமத்தை சேர்ந்தவன் தான்…. இங்க தான் பிறந்து வளர்ந்தது எல்லாமே…. அவனுடைய பேர் விக்ரம்… இதோ இவன் தான்” என்று சரவணன் விக்ரமை அறிமுகப்படுத்தி வைக்க, விக்ரம் அவனை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
சனந்தா எழுந்து ஃபோனை வாங்கிக் கொண்டு, “முதல்ல கௌதம கூப்பிடு டா எவ்வளவு நேரம்” என்று சனந்தா கேட்க, “இதோ வந்துட்டான் நீயாவது அவனாவது போ” என்று விகாஷ் தயாராக சென்றான்.
“கௌதம் இங்க பாரு என்னன்னு தெரியுதா??” என்று சனந்தா கேட்க, “இது சேஜ் தான??” என்று கௌதம் கேட்டான். ஆமாண்டா!!! என்று சனந்தா ஆச்சரியத்துடன் கூறினாள். “அங்க விளையுதா இது?” என்று கௌதம் அதிர்ச்சியுடன் கேட்க, “ஆமா நான் இப்ப தான் கவனிச்சேன்… பூ கூட இருக்கு… நான் எதுக்கும் பூவையும் இலையையும் நம்ம சீனியர்ஸ்க்கு அனுப்பி வைக்கிறேன்…. அவங்க பார்த்து செக் பண்ணிட்டு சொல்லுவாங்கல” என்று சனந்தா கூறினாள்
“ஆமாண்டி…. இது மட்டும் ரியல் சேஜ் செடியா இருந்துச்சுன்னா செமல” என்று கௌதம் கூற, “ஆமாண்டா நான் முதல்ல அதை செய்றேன்” என்று சனந்தா கூறினாள்.
“யாரு மச்சான் அவன்…. வாடி போடின்னு பேசிட்டு இருக்கான்” என்று விக்ரம் சரவணனின் காதை கடிக்க, “பிரகாஷ் சாரோட பையன் டா” என்றான் சரவணன். “அதுக்குன்னு அப்படி பேசலாமா?” என்று விக்ரம் கேட்க, “போ போய் கேளு போ… ஃபோன்ல தான் இருக்கான் போய் கேளு போ” என்று சரவணன் கேலி செய்ய, “நீ என்னையே எதையாவது ஒன்னு சொல்லிட்டு இருப்ப போ” என்று விக்ரம் அமைதியாகி விட்டான்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 21
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.