CHAPTER-20

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
"அவரோட இன்டர்னல் ஆர்கன்ஸெல்லா பயங்கரமா டேமேஜ் ஆகிருக்கு. இந்த கன்டிஷன்ல எத சாப்புட்டாலும் ப்ளீட் ஆகும்னு படிச்சு படிச்சு சொன்னனா இல்லையா? அப்றம் எப்பிடி அவர சாப்பட விட்டீங்க?" என்று கேட்டார் மருத்துவர்.

"சாரி டாக்டர். அவரோட வொய்ஃப்க்கு அத பத்தியெல்லா தெரியாது. அவங்கதா தெரியாம குடுத்துட்டாங்க." என்றான் யோகி தயக்கமாக.

"அவருக்கு தெரியுந்தான? தெரிஞ்சுதான சாப்பிட்டிருக்காரு?" என்று அவர் கேட்க, யோகிக்குமே என்ன கூற என்று தெரியாமல் தலை குனிந்தான்.

"ரெண்டு வாய்க்கே இப்பிடின்னா, இன்னும் ரெண்டு வாய் சாப்பிட்டிருந்தா என்ன ஆயிருக்கும்னு யோசிங்க." என்று அவர் கூற, இவனோ தலையை தாழ்த்தியபடியே, "சாரி டாக்டர். இனிமே இப்பிடி நடக்காது." என்றான்.

"நடந்தா அவரோட உயிருக்கே ஆபத்தாதான் முடியும். அது உங்களுக்கும் தெரியும்." என்றார்.

"புரியுது டாக்டர். கண்டிப்பா நடக்காது." என்றான் த‌ய‌க்க‌மாக‌.

"சரி. இனிமேவாவது நா சொன்ன இன்ஸ்ட்ர‌க்ஷன்ஸ ஸ்டிட்டா ஃபாலோ பண்ணுங்க. காலையில வரைக்கும் அவரு அப்சர்வேஷன்ல இருக்கணும். சோ என் அசிஸ்டன்ட்ட இங்க விட்டுட்டு போறேன்." என்று கூற, "ஓகே டாக்டர். நா எல்லா அரேஞ்ச்மண்ட்ஸும் பாத்துக்குறேன்." என்றான் யோகி.

"ஓகே நா கெளம்புறேன்." என்றபடி காரில் ஏறி அமர, அந்த கார் கிள‌ம்பிய‌து.

அதில் அயர்வு மூச்சை வெளியேவிட்டவன், அப்ப‌டியே திரும்பி வீட்டிற்குள் நுழைந்து, "சொல்ல வேண்டியெதெல்லா மேடம்கிட்ட சொல்லியாச்சு. இனி அவர புரிஞ்சு நடந்துப்பாங்கன்னு நம்புறேன்." என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

இங்கே யோகி கூறிய வார்த்தைகள்தான் இவளின் காதில் ஒலித்துக்கொண்டிருக்க, இத‌ழ்க‌ளோ த‌ன்ன‌வ‌னின் வ‌ன்மைக்குள் மூழ்கியிருக்க‌, இறுக்கி பிடித்திருந்த‌ அவ‌ன் ச‌ட்டையை இழுத்து அவன் கழுத்தை கட்டிக்கொண்டு வேக‌மாய் அவ‌ளும் அவ‌னித‌ழை சுவைக்க ஆரம்பித்தாள். அதில் இவ‌னின் புருங்க‌ள் குறுகி நெற்றி சுழிய‌, மெதுவாய் அவள் இதழைவிட்டு பிரிந்தான்.

அதில் அவ‌ன் நெற்றியில் சாய்ந்து மூச்சு வாங்கிய‌வ‌ளின் இமை குடைக‌ள் மெல்ல‌ நிமிர்ந்து அவ‌ன் விழிக‌ளை ப‌த‌ற்ற‌மாய் ச‌ந்திக்க‌, அவ்விழிக‌ளுள் த‌ன் விழிக‌ளை சில‌ நொடி அமைதியாய் க‌ல‌க்க‌விட்ட‌வ‌ன், "இப்ப‌ என்ன‌ ப‌ண்ணிட்டிருக்க‌ன்னு தெரியுதா?" என்று மென்குர‌லில் கேட்டான்.

அதில் அவ‌ள் விழிக‌ளுள் ப‌த‌ற்ற‌ம் அதிக‌ரிக்க‌ ச‌ட்டென்று இமைக‌ளை தாழ்த்தினாள். "ஓய்!" என்றான் அதைவிட‌ மென்மையாய்.

அதில் மெதுவாய் இமைக‌ளை நிமிர்த்திய‌வ‌ள், அதே ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை ச‌ந்திக்க‌, "ஒரு பேஷ‌ன்ட்மேல‌ ப‌டுத்திருக்க‌." என்றவ‌னின் குர‌ல் இறுகி சோர்வு க‌ல‌ந்த‌து.

அதில் இமை விரிய‌ ப‌த‌றி ச‌ட்டென்று அவனைவிட்டு சரிந்து மெத்தையில் விழுந்தவள், "சாரி வலிக்குதா?" என்று அவ‌ன் உட‌லை ஆராய‌, அவ‌னோ வ‌லியில் முக‌த்தை குறுக்கி, த‌ன் வ‌யிற்று ப‌குதி ச‌ட்டையை இறுக்கி பிடித்து நெளிந்து நேராய் ப‌டுத்தான். அதில் பதறி த‌வித்து, "என்ன‌ ஆச்சு?" என்று அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் க‌ர‌த்தை வில‌க்கி அங்கே ஆராய‌, "ஒன்னும் இல்ல‌." என்று சோர்வாய் அசைந்து ப‌டுத்த‌வ‌னின் ப‌ட்ட‌ன் வில‌கி அவ‌ன் வெற்று தேக‌த்தில் வித்தியாச‌மாய் ஏதோ தெரிந்த‌து. அதில் புரியாது விழி குறுக்கிய‌வ‌ள், அப்ப‌டியே அருகிலிருந்த‌ ப‌ட்ட‌ன்க‌ளையும் க‌ழ‌ற்ற‌ போக‌, ச‌ட்டென்று அவ‌ளின் பின்ச‌ட்டை கால‌ரை கொத்தாய் பிடித்து த‌ன் ப‌க்க‌ம் இழுத்தான் அவ‌ன்.

அதில் திடுக்கிட்டு அவ‌ன் மீதே விழ‌ வ‌ந்த‌வ‌ளை பிர‌ட்டி மெத்தையில் த‌ள்ளி அவ‌ள் மீது ப‌ட‌ர்ந்தான் ருத‌ன். அதில் மிர‌ண்டு விழித்தவ‌ள், ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை பார்க்க, அவ‌ன் விழிக‌ளோ புரியாது கீழிற‌ங்க, "இத‌ ஏ இன்னும் போட்டுட்டு இருக்க‌?" என்று அவ‌ள் ச‌ட்டையை க‌ழ‌ற்ற‌ போக‌, ச‌ட்டென்று அவ‌ன் க‌ர‌த்தை பிடித்து த‌டுத்தாள் அவ‌ள்.

அதில் அவ‌ன் மெல்ல‌ நிமிர்ந்து அவ‌ளை பார்க்க‌, அவ‌ளோ த‌டுமாறிய‌ த‌ன் இத‌ழ்க‌ளை பிரித்து, "நீ..நீங்க‌தான‌ போட்டுவிட்டீங்க‌?" என்றாள்.

அதில் மெல்லிய‌தாய் இத‌ழ் வ‌ளைத்தவ‌ன், "அது ம‌த்த‌வ‌ங்க‌ பாக்க‌ கூடாதுங்குற‌துக்காக‌. இப்ப‌ இது தேவ‌ இல்ல‌." என்ற‌ப‌டி க‌ழ‌ற்ற‌ போக‌, ப‌த‌றி மீண்டும் த‌டுத்து, "யாராவ‌து வ‌ந்.." என்று கூறும் முன் அவ‌ள் க‌ழுத்தில் இருந்த‌து அவ‌ன் க‌த்தி.

அதில் அதிர்ந்து தாடையை நிமிர்த்திய‌வ‌ளின் விழிக‌ள் விரிந்து வார்த்தை தொண்டையில் இற‌ங்க‌, அங்கே க‌த்தியை அழுத்தி பிடித்து அவ‌ள் முக‌ம் நெருங்கிய‌வ‌ன், "ச‌ட்ட‌ என்னுது, உள்ள இருக்குற‌ ஒட‌ம்பும் என்னுது." என்று அழுத்தி கூற‌, இவ‌ளோ அக‌ல‌ விழி விரிக்க‌, "என‌க்கு சொந்த‌மான‌த‌ நா என்ன‌ வேணாலும் ப‌ண்ணுவேன். புரியுதா?" என்று கூர் முனையை அவ‌ள் தாடையில் வைத்து அழுத்த‌, அதில் மேலும் முக‌த்தை நிமிர்த்திய‌வ‌ளின் இத‌ய‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடித்த‌து.

"ம்ம்?" என்று அவ‌ன் விழியில் அழுத்த‌ம் கொடுக்க‌, அவ‌ளும் ப‌த‌ற்ற‌த்தில் எச்சில் விழுங்க‌ ம்ம் என்று த‌லைய‌சைக்க‌, அப்போதே மெதுவாய் க‌த்தியை இற‌க்கிய‌வ‌ன், "குட்" என்ற‌ நொடியே ப‌ட்டென்று முத‌ல் ப‌ட்ட‌னை வெட்டியிருந்தான்.

அதில் திடுக்கிட்டு இறுக்கி விழி மூடிய‌வ‌ள், ப‌ய‌த்தில் மார்பை குறுக்க‌, அந்த குறுகிய குழியில் அவ‌ன் விர‌ல்க‌ள் நுழைந்த‌து. அதில் திடுக்கிட்டு அவ‌ள் விழி திற‌க்கும் முன், மொத்தமாய் பிடித்திழுத்து திற‌ந்திருந்தான் ச‌ட்டையை.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் இரு க‌ர‌மும் வேக‌மாய் த‌ன்னை ம‌றைத்துக்கொள்ள‌, அவ‌ள் நாபி குழியில் நுழைந்த‌து க‌த்தி நுனி. அதில் அவ‌ள் திடுக்கிட்டு குனியும் முன் ப‌ட்டென்று க‌டைசி ஒரு ப‌ட்டனையும் வெட்டி முழுதாய் திற‌ந்திருந்தான் அவ‌ன்.

அதில் த‌ன் உட‌லை இறுக்கி க‌ட்டிக்கொண்டு இறுக்கி விழி மூடியிருந்த‌வ‌ள், அடுத்த‌ சில‌ நொடிக‌ள் அமைதி நில‌வவும் மெதுவாய் விழி திற‌க்க‌, அத்த‌னை அருகில் அவ‌ன் முக‌ம். அதில் அவ‌ள் மிர‌ண்டு விழி விரிக்கும் முன், ச‌ட்டென்று அவ‌ள் கூந்த‌லுள் விர‌ல் நுழைத்து ப‌ட்டென்று மேலே தூக்கியிருந்தான். அதில் அவ‌ள் திடுக்கிட்டு அவ‌ன் தோள் ப‌ட்டைக்குள் வந்து புதைந்துவிட‌, அவ‌ளின் பின்ச‌ட்டைக்குள் நுழைந்த‌து அவ‌ன் க‌த்தி. அதில் அவ‌ள் திடுக்கிட்டு வில‌கும் முன், ப‌ட்டென்று அந்த‌ ச‌ட்டையை மேல்வ‌ழியே உருவியிருக்க‌, பொத்தென்று மெத்தையில் விழுந்த‌வ‌ளின் கையிலிருந்த‌ ச‌ட்டையும் விடுப்ப‌ட்டு முழுதாய் அவ‌ன் கைக்கு வ‌ந்திருந்த‌து.

ஒரு நொடி என்ன‌ ந‌ட‌ந்த‌தென்றே புரியாது விழியை உருட்டிய‌வ‌ள், அப்ப‌டியே விழியை நிமிர்த்தி அவ‌னை பார்க்க‌, அவ‌னோ கையிலிருந்த‌ ச‌ட்டையை சுருட்டி வீசிவிட்டு அவ‌ளை நெருங்கினான்.

சேலையில்லாம‌ல் அரைகுறை ஆடையாய் கிட‌ந்த‌வ‌ளை முழுதாய் விழியிலே விழுங்கிய‌ப‌டி அவ‌ள் மீது ப‌ட‌ர‌, இவ‌ள் ம‌ன‌மோ ப‌த‌ற‌ விழிக‌ளை விரித்து ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை பார்த்தவ‌ளின் இத‌ய‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடிக்க‌, அதை முழுதாய் அமுக்கி மூடிய‌ப‌டி அவ‌ள் மீது புதைந்த‌வ‌ன், ப‌த‌ற்ற‌த்தில் ந‌டுங்கிக்கொண்டிருந்த‌ அவ‌ள் கீழ் இத‌ழை இரு விர‌லால் அழுத்தி பிடித்தான்.

அதில் அவ‌ள் சுவாச‌ம் மொத்த‌மாய் உள்ளே செல்ல‌, அழுத்த‌த்தில் குழிந்த‌ அவ‌ள் இத‌ழ் குழியில் பார்வையை குவித்தவ‌ன், "என்ன‌ சொன்ன‌?" என்று மென்குர‌லில் கேட்க‌, அவ‌ளோ புரியாது ப‌த‌றி விழிக்க‌, "என்ன‌ மாதிரி உற‌வா?" என்று புருவ‌த்தை குறுக்கினான்.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் புருவ‌ங்க‌ள் விரிய‌, "இது எந்த‌ மாதிரி உற‌வு?" என்று அவ‌ள் கேட்ட‌ கேள்விதான் க‌ண்முன் வ‌ர‌, மெதுவாய் நிமிர்ந்து அவ‌ள் விழிக‌ளை பார்த்தான் இவ‌ன். அதில் அவ‌ள் விழிக‌ளில் நீர் துளிர்க்க‌, "அப்ப‌ என் க‌ண்ண‌ பாத்திருந்தாலே அது உன‌க்கு தெரிஞ்சிருக்கும்." என்றான் ருத‌ன்.

இப்போது அவ‌ன் விழிக‌ளையே பார்த்த‌வ‌ளின் க‌ண்ணீர் பெருக‌, அவன் விரல்களிடம் சிக்கியிருந்த அவ‌ள் உதடுகள் துடிக்க‌, "ஐய‌ம் சா.." என்று கூற‌ வ‌ந்த‌ இத‌ழை அழுத்தி சிறை செய்தான் அவ‌ன்.

அதில் அவ‌ன் க‌ன்ன‌த்தை பிடித்து விழியை அழுத்தி மூடிய‌வ‌ளின் க‌ண்ணீர் விழியோர‌ம் வ‌ழிய‌, முழுதாய் சுவைக்கும் முன்பே மெல்ல‌ இத‌ழை பிரித்தான் அவ‌ன். அதில் அவ‌ளின் ஈர‌ இமைக‌ளும் மெதுவாய் பிரிய‌, அவ‌ள் இத‌ழை த‌ன் க‌ட்டை விர‌லால் அழுத்தி துடைத்தவ‌ன், "என‌க்கு உன் சாரி இல்ல‌, வேற‌ ஒன்னு வேணும்." என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் புரியாது அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, அவ‌னுமே அவ‌ள் விழிக‌ளுள் ஊடுருவி, "என்ன‌ன்னு சொல்ல‌ட்டுமா?" என்று புருவ‌த்தை நெளிக்க‌, அதில் மெல்லிய‌தாய் இவ‌ளுள் ப‌த‌ற்ற‌ம் தொற்ற‌, "என்.." என்று கேட்க‌ வ‌ந்த‌வ‌ளின் இத‌ழில் ஒற்றை விர‌ல் வைத்து த‌டுத்தான்.

அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் நிறுத்தி அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, "ஷ்ஷ்.." என்று மெல்ல‌மாய் கூறிய‌வ‌ன், அந்த‌ விர‌லில் அழுத்த‌ம் கொடுத்து கீழே இற‌க்க‌, அதில் ர‌ப்ப‌ராய் கீழே வ‌ந்த‌ அவ‌ளின் கீழ் இத‌ழில் இர‌ச‌னையாய் ஒரு மெல்லிய‌ முத்த‌ம் வைத்தான். அதில் திடுக்கிட்டு அவ‌ள் இமை ப‌ட‌ப‌ட‌க்க‌, அடுத்த நொடி விடுப்ப‌ட்ட கீழித‌ழ் மேலித‌ழோடு சென்று ஒட்டிவிட, அப்ப‌டியே அதை க‌ட‌ந்து அவ‌ள் தாடையை தாண்டி கீழிற‌ங்கிய‌து அவ‌ன் விர‌ல். அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌ம் அதிக‌ரிக்க‌ மெதுவாய் தாடையை நிமிர்த்திய‌வ‌ளின் ச‌ங்கில் இற‌ங்கிய‌து அவ‌ன் ஒற்றை விர‌ல்.

ப‌த‌ற்ற‌த்தில் அவ‌ள் தொண்டை ஏறி இற‌ங்க‌, அங்கே மெல்லிய‌தாய் முத்த‌மிட்டு மெல்ல‌ க‌டித்தான். அதில் விழியை குறுக்கி, "ஸ்ஸ்" என்று முன‌ங்கிய‌வ‌ள், அடுத்த‌ நொடியே ச‌ட்டென்று விழி விரித்தாள். அவ‌ள் இத‌ய‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடிக்க‌, அந்த‌ இத‌ய‌த்தின் ந‌டுவே முத‌ல் ஹூக்கை க‌ழ‌ற்றியிருந்தது அவ‌ன் விர‌ல். அதில் அதிர்வாய் அவ‌ள் குனியும் முன் அங்கே அழுத்த‌மாய் ப‌திந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள். அதில் சிலிர்த்து விழி மூடிய‌வ‌ளின் மார்பு கூச்ச‌த்தில் குறுக‌, அடுத்த‌ ஹூக்கையும் க‌ழ‌ற்றி தாராளாமாய் இத‌ழை ப‌ட‌ர‌விட்டான் அவ‌ன். அதில் புருவ‌த்தை குறுக்கி அவ‌ன் தோளை இறுக்கி பிடித்த‌வ‌ள், அவ‌னை வில‌க்க‌ முய‌ல‌, மேலும் மொத்த‌மாய் அவ‌ள் மார்புக்குள் முக‌த்தை புதைத்தான். அதில் திடுக்கிட்டு சிலிர்வாய் மூச்சை இழுத்துவிட்ட‌வ‌ளின் மார்பில் அவ‌ன் தாடி மீசை புதைந்து குத்த, புருவ‌த்தை குறுக்கி கூச்ச‌த்தில் நெளிந்தாள். அவ‌ள் நெளிவிலேயே அடுத்த‌ ஹூக்கும் க‌ழ‌ன்றிருக்க‌, அங்கே அவ‌ன் இத‌ழ்க‌ள் எச்சில் செய்த‌து. அதில் சிலிர்வாய் அவ‌ன் நீண்ட‌ சிகையை இறுக்கி பிடித்த‌வ‌ள், முழுதாய் த‌லைய‌ணையுள் புதைய‌, அவ‌னும் முழுதாய் அவ‌ள் மார்புக்குள் புதைந்தான்.

அப்ப‌டியே சில‌ நொடிக‌ளுக்கு மேல் அவ‌ன் அசையாதிருக்க‌, ச‌ட்டென்று விழி திற‌ந்தவ‌ள், ப‌த‌றி அவ‌னை வில‌க்க‌ முய‌ல‌, த‌ன் இரு வ‌லிய‌ க‌ர‌ங்க‌ளால் அவ‌ளை இறுக‌ க‌ட்டிக்கொண்டவ‌ன், "இப்பிடியே இரு." என்றான் ருத‌ன். அதில் அவ‌ள் புரியாது அவ‌னை பார்க்க‌, அவ‌னோ அவ‌ள் வெற்று மார்புக்குள் முக‌த்தை தேய்த்து மேலும் புதைந்து, "ஐ வான்ட் யுவ‌ர் ப்ர‌ச‌ன்ஸ்" என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் புரியாது மெல்ல‌ அமைதியாக‌, அவ‌ளை மேலும் இறுக‌ க‌ட்டிக்கொண்டு, "ஐ வான்ட் டூ ஃபீல் இட்" என்றான் மெல்லிய‌ குர‌லில். அதில் மெதுவாய் புருவ‌த்தை விரித்த‌வ‌ளுக்கு "என‌க்கு உன் சாரி இல்ல‌, வேற‌ ஒன்னு வேணும்." என்ற‌வ‌னின் வார்த்தைக‌ள் க‌ண்முன் வ‌ர‌, அப்ப‌டியே தான் அணிந்திருந்த‌ ச‌ட்டையை அவன் அவ‌ச‌ர‌மாய் க‌ழ‌ற்றி வீசிய‌தும் க‌ண்முன் வ‌ந்து நின்ற‌து. அவ‌ன் ச‌ட்டையில் அவ‌ன் ஸ்ப‌ரிச‌ம்தானே இருக்கும்? அத‌னால் அதை அக‌ற்றிவிட்டு த‌ன் ஸ்ப்ரிச‌த்தில் முழுதாய் மூழ்கி புதைந்திருப்பவ‌னின் தேவை என்ன‌வென்று இப்போது தெளிவாய் புரிய‌, மெதுவாய் அவ‌னை அணைத்துக்கொண்டாள்.

அதில் அவ‌னும் வாகாய் அசைந்து அவ‌ளுள் புகுந்துக்கொள்ள‌, சிறு தவிப்போடு அவ‌ன் சிகைக்குள் விர‌ல்க‌ளை நுழைத்து த‌ன்னுள் புதைத்துக் கொண்ட‌வ‌ள், அவ‌ன் கூறாம‌லே அவ‌னுள் இருக்கும் வ‌லிக‌ளை உணர்ந்தாள்.

இங்கே வ‌லியில் நெற்றியை குறுக்கி க‌டின‌ப்ப‌ட்டு இத‌ழ்க‌ளை பிரித்த‌வ‌ன், "டேட்!" என்று மெல்ல‌ அழைக்க‌, அவ‌ன் க‌ர‌த்தை இறுக‌ ப‌ற்றி, "இங்க‌தா இருக்கேன்." என்றார் விக்ர‌ம‌ன்.

அதில் த‌டுமாறிய‌ த‌ன் விர‌ல்க‌ளை அசைத்து அவ‌ர் க‌ர‌த்தை ப‌ற்றிக்கொண்ட‌வ‌ன், "அ..வ‌ன் தி..ரும்ப‌ மீராவ‌.. என்கிட்ட‌..ருந்து.." என்று கூற‌ வ‌ர‌, ம‌று க‌ர‌த்தையும் அவ‌ன் க‌ர‌த்தில் ப‌தித்து த‌டுத்தவ‌ர், "ஸ்ட்ர‌யின் ப‌ண்ணிக்காத." என்றார் விக்ர‌ம‌ன்.

அதில் கடின‌ப்ப‌ட்டு த‌ன் க‌ர‌த்தை உருவிக்கொண்ட‌வ‌ன், "சொல்..லுங்க‌ டேட். மீரா என‌க்..குதான‌? அவ‌ன் திரும்..ப‌ அவ‌ள‌.. எங்கிட்..ட‌ருந்து பிரிக்..க‌ மாட்டான்..ல‌?" என்று க‌டின‌ப்ப‌ட்டு வார்த்தையை கோர்த்து கேட்க‌, விக்ர‌ம‌னோ ப‌தில் கூறாது அமைதியாயிருந்தார். நேற்றுவ‌ரை "மீரா உன‌க்குதான்" என்று உறுதியாய் வாக்க‌ளித்த‌வ‌ர‌லால், இப்போது வாய் வார்த்தையாய்கூட‌ அதை கூற‌ முடிய‌வில்லை.

அவ‌ர் அமைதியில் இவ‌ன் ம‌ன‌ம் ப‌த‌ற்ற‌த்தை கூட்ட‌, "டேட்.." என்று அழைக்க‌ முய‌ன்ற‌வ‌னின் நெற்றியில் அழுத்தி க‌ர‌த்தை ப‌தித்த‌வ‌ர், "அமைதியா ரெஸ்ட் எடு." என்றார்.

அதில் இய‌லாமையாய் அழுத்தி விழி மூடிய‌வ‌னின் க‌ண்முன் ருத‌னின் உருவ‌ம் ம‌ட்டுமே வ‌ந்து நிற்க‌, அவ‌ன் உள்ள‌ம் கொழுந்துவிட்டு எரிந்த‌து.

"இல்ல‌. நீ எத்த‌ன‌ தெட‌வ‌ திரும்பி வ‌ந்தாலும் அவ‌ உன‌க்கு கெடையாது." என்று ம‌ன‌திற்குள் அழுத்தி கூறி விழி திற‌ந்த‌வ‌ன், "இப்ப‌ இருக்குற‌வ‌ உன்னோட‌ அம்மு இல்ல‌. என்னோட‌ மீரா. நீ என்ன‌ ப‌ண்ணாலும் திரும்ப‌ அவ‌ ம‌ன‌சுல‌ நொழைய‌வே முடியாது. இந்த‌ தெட‌வ‌ அவ‌ என‌க்கு ம‌ட்டுந்தா." என்று அழுத்தி த‌ன‌க்குள் கூறிக்கொண்டான்.

இங்கே அவ‌ளின் ம‌ன‌திற்குள் நுழைந்துவிட்டானோ தெரியாது, அவ‌ள் மார்புக்குள் புதைத்து கிட‌ந்த‌வ‌னின் விழிக‌ள் க‌ண்ணீரை வெளியேற்ற‌, அவ‌ள் மார்பு ந‌னைந்த‌து.

அதில் அவ‌ள் புரியாது புருவ‌த்தை நெளித்து விழிக‌ளை திற‌க்க‌, அவ‌ள் ஜேக்கெட்டும் சேர்ந்து ந‌னைந்த‌து. அதில் ப‌த‌றிய‌வ‌ள் மெதுவாய் அவ‌னை வில‌க்க‌ முய‌ல‌, அவ‌ளை இறுக‌ க‌ட்டிக்கொண்டு அசைய‌ ம‌றுத்தான் அவ‌ன்.

அதில் ப‌த‌ற்ற‌மாய் புருவ‌த்தை குறுக்கிய‌வ‌ளுக்கோ, இவ‌ன் அழுகிறானோ என்று ம‌ன‌ம் ப‌த‌ற‌, அவ‌ளே குனிந்து பார்க்க‌ முய‌ன்றாள். ஆனால் அத‌ற்கும் முடியாம‌ல் அவ‌ன் வ‌லிய‌ க‌ர‌ங்க‌ள் அவ‌ளை இறுக‌ க‌ட்டியிருக்க‌, "டார்லு!" என்றான் மெல்ல‌மாக‌.

அதில் முய‌ற்சியை விட்டு அமைதிய‌டைந்த‌வ‌ள், பார்வையை ம‌ட்டும் இற‌க்கி அவ‌னை பார்க்க‌, அவ‌னோ அவ‌ள் மார்புக்குள் இருந்த‌ப‌டியே, "நா உன்ன‌ விட்டு போயிட்டா என்ன‌ மிஸ் ப‌ண்ணுவியா?" என்று கேட்க‌, அவ‌ன் குர‌லில் ஏக்க‌மோ வ‌லியோ எந்த‌ ஒரு உண‌ர்வும் இல்லை.

அதில் இவ‌ள் ம‌ன‌ம் குழ‌ம்பி, "ஏ இப்பிடி.." என்று கேட்க வர, "நீ ப‌ண்ண‌ மாட்ட." என்று பதிலையும் இவனே கூறிவிட்டு, "ப‌ட் நா ரொம்ப‌ மிஸ் ப‌ண்ண‌ போறேன்." என்றான்.

அதில் ச‌ட்டென்று புருவ‌த்தை விரித்த‌வ‌ளின் இத‌ய‌ம் நின்று துடிக்க‌, அவ‌ளை மேலும் இறுக்கி கட்டிக்கொண்டவன், "ரொம்ப‌ மிஸ் ப‌ண்ண‌ போறேன்." என்றான்.

அதில் அவ‌ளின் இத‌ய‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடிக்க‌, புருவங்கள் தவிக்க, "அப்டின்னா?" என்று கேட்ட‌வ‌ளின் விழிகள் நீரில் மூழ்கிய‌து.

- நொடிக‌ள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-20
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.