CHAPTER-2

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
இங்கே அமீராவை தேடி புற‌ப்ப‌ட்ட‌ விராஜ், ம‌ண்ட‌ப‌த்தில் அவனை பார்த்த‌வ‌ர்க‌ள் கூறிய‌ த‌க‌வ‌லின்ப‌டி ஒரு பாதையில் வேக‌மாய் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

அப்போதே திடீரென்று யாரோ ரோட்டில் விழுந்து கிட‌க்க‌, ச‌ட்டென்று ச‌ட‌ன் ப்ரேக் அடித்து நிறுத்தியிருந்த‌ான். அப்போதே ச‌ரியாக‌ க‌வ‌னிக்க‌ அது த‌ன் மீரா என்று தெரிந்த‌தும் வேக‌மாய் இற‌ங்கி அவ‌ளிட‌ம் ஓடினான் விராஜ்.

பதறியபடி அவளருகே அமர்ந்து, "மீரா என்ன‌ ஆச்சு உன‌க்கு?" என்று அவ‌ள் க‌ன்ன‌ம் ப‌ற்ற‌ வ‌ந்த‌ நொடி, ப‌ட்டென்று அவ‌ன் த‌லையில் இரத்தம் தெரிக்க பொத்தென்று கீழே விழுந்தான். அந்த‌ இர‌த்த‌ம் அமீராவின் முக‌த்தில் தெளிக்க‌, அதை அதிர்வாய் தொட்டு பார்த்த‌வ‌ளின் விர‌ல்க‌ள் ந‌டுங்க‌, மெதுவாய் பார்வையை நிமிர்த்தினாள் அவள்.

அங்கே கையில் நீண்ட பெரிய சுத்தியலுடன் நின்றிருந்த‌வ‌னின் உருவம் கருப்பாய் தெரிய, திடீரென்று அடித்த‌ மின்ன‌லில் இர‌த்த‌ கிள‌றியாய் தெரிந்த‌து அவ‌ன் உருவ‌ம்.

அப்படியே மின்னல் வந்து வந்து போக, அவனின் க‌ருப்பு சட்டையில் ப‌ல‌ பேருடைய‌ இர‌த்த‌ம் தெளித்து அப்பியிருக்க‌, முழுதாய் தெரியாத அவ‌ன் முக‌த்திலும் அந்த‌ இர‌த்த‌ம் ம‌ட்டுமே நிறைந்திருக்க‌, அதை பார்த்து அப்படியே மயங்கி தரையில் சாய்ந்தாள் அமீரா.

அடுத்த நொடி ப‌ட‌ப‌ட‌வென்று ம‌ழை வ‌ந்து அவ‌ன் மீதிருந்த‌ இர‌த்த‌தை க‌ழுவி செல்ல‌, அதற்குள் இருள் சூழ்ந்து அவன் உருவத்தை மறைத்தது. அந்த உருவம் மழையில் நனைய நனைய கழுவி சென்ற அந்த‌ இர‌த்த‌ தண்ணீர் அப்படியே த‌ரையில் ஊர்ந்து அமீராவை நோக்கி செல்ல‌, அது அவ‌ளை நெருங்கி தொடும் முன்பே அவ‌ளை அள்ளி தூக்கியிருந்தான் அவ‌ன். அதில் அவள் அவனின் இரு கரங்களுக்குள் வந்திருக்க, அவ‌ளை அப்படியே தூக்கி தோளில் போட்டுக் கொண்டு திரும்பி, அந்த‌ ம‌ழை இருட்டில் ந‌ட‌ந்து சென்றான் அவ‌ன்.

செல்லும் அவர்களின் பின் புறம் மீண்டும் மின்னல் அடிக்க, அக்காட்சி இங்கே அசைவின்றி கிட‌ந்த‌ விராஜின் விழிக‌ளில் தெளிவாய் விழுந்தது. ஆனாலும் அவ‌ன‌ால் இமையைக்கூட‌ அசைக்க‌ முடியாதிருக்க‌, அவ‌ன் விர‌ல்க‌ள் மெதுவாய் அந்த‌ ஈர‌ ம‌ண்ணை இறுக்கி பிடித்த‌து.

அப்போது திடீரென்று அவன் மீது வெளிச்ச‌ம் அடிக்க‌, அத‌ற்குள் அவ‌ன் விழிக‌ள் மூடியிருந்த‌து. "விராஜ்!" என்ற‌ த‌ன் த‌ந்தையின் ப‌த‌றிய‌ குர‌ல் ம‌ட்டுமே அவ‌ன் காதில் க‌டைசியாக‌ ஒலித்திருக்க‌, முழுதாய் ம‌ய‌ங்கியிருந்தான் விராஜ்.

அப்படியே மொத்த‌மாய் இருண்ட‌ அவ‌ன் விழிக‌ள் மெதுவாய் பிரிய‌, மருத்துவமனையில் க‌ண்ணீருட‌ன் த‌ன் தாய் தந்தையின் முக‌ம். ஆனால் அவ‌ன் க‌ண்க‌ளோ அமீரைவையே தேட‌, "மீ..ரா!" என்றான் சோர்ந்த‌ குர‌லில்.

அதில் வேக‌மாய் அவ‌ன் க‌ர‌ம் ப‌ற்றி, "அத‌ அப்பா பாத்துக்குறேன்டா. நீ க‌வ‌ல‌ப்ப‌டாத‌." என்று க‌ண்ணீருட‌ன் கூறினார் விக்ரமன்.

"அ..வ‌ன் மீராவ‌.." என்று அவ‌ன் கூற‌ வ‌ர‌, "அவ‌னையும் சும்மா விட‌ மாட்டேன்." என்றார் அழுத்த‌மாக‌.

"ஐயா!" என்றப‌டி ஒருவ‌ன் ஓடி வ‌ந்தான்.

அதில் அவ‌ர் திரும்பி பாக்க‌, "அவ‌ன் போன கார‌ க‌ண்டுபுடிச்சுட்டோம்." என்றான் அவ‌ன் மூச்சு வாங்கிய‌ப‌டி.

அதில் ச‌ட்டென்று புருவ‌ம் விரித்த‌வ‌ர், "என் ம‌ரும‌க‌ எங்க‌? அவ‌ன புடிச்சீங்க‌ளா?" என்று வேக‌மாய் கேட்க‌, இங்கே த‌லை முழுக்க‌ க‌ட்டுட‌ன் கிட‌ந்த‌ விராஜுமே சிறிதும் அசைய‌ முடியா நிலையில், அவனை அழுத்தி பார்த்தான்.

ஆனால் அவ‌னின் விழிக‌ளோ த‌ய‌க்க‌மாய் விராஜை தொட்டு மீண்டும் அவ‌னின் த‌ந்தையை தொட‌, "என்ன‌டா?" என்று வேக‌மாய் கேட்டார் விக்ரமன்.

"அது வ‌ந்துங்கைய்யா.. கார் ம‌ட்டுந்தா அங்க‌ நிக்குது." என்றான் த‌ய‌க்க‌மாக‌.

"வாட்?" என்று அவ‌ர் கேட்க‌, "ஆனா ந‌ம்ப‌ ஆளுங்க‌ அத‌ சுத்தி தேடிட்டுதா இருக்காங்கைய்யா. எப்பிடியும் ரொம்ப தூரம் போயிருக்க முடியாது க‌ண்டுபுடிச்ச‌ர‌லாம்." என்று கூற‌, ப‌ளாரென்று அவ‌ன் க‌ன்ன‌த்தில் அறைந்தார் விக்ரமன்.

அதில் அவ‌ன் ப‌ட்டென்று த‌லையை திரும்பி க‌ன்ன‌த்தை ப‌ற்ற, "ந‌ம்ப‌ வீட்டு பொண்ண தூக்க, நம்ப வீட்டு காரயே எடுத்துட்டு போயிருக்கான். அவன தப்பிக்க விட்டுட்டு.. நீ கண்டுபுடிக்குற வரைக்கும் அங்கயே உக்காந்திட்டிருப்பானா?" என்று கோபமாய் கத்தினார்.

அதில் அவனோ தயக்கமாய் நிமிர்ந்து, "இல்லங்கய்யா. அந்த கார் கெடச்சது ஒரு காட்டு பகுதி. அதுக்குமேல எந்த வண்டியும் போக முடியாது. நடந்து ரொம்ப தூரம் போயிருக்க முடியாது. எப்படியும் கண்டுபுடிச்சரலாம்." என்று அவர் கூற

"என்ன? அப்ப ஏ இன்னும் கெடைக்கல?" என்று அவர் கத்த, அவனோ தயக்கமாய் தலையை தாழ்த்தினான்.

"நடந்து போனவனயாடா இன்னும் புடிக்காம இருக்கீங்க?" என்று கோப‌மாய் கத்தினார் விக்ரமன்.

இங்கே நடந்தல்ல ஓடிக் கொண்டிருந்த‌து கால்க‌ள். அந்த‌ கால்க‌ள் ஒரு அழ‌கிய‌ க‌ருப்பு குதிரையின் கால்க‌ள். அப்படி வேகமாய் ஓடிக் கொண்டிருந்த அந்த‌ குதிரையின் மீது அமர்ந்திருந்தவனின் கருப்பு ஆடை காலர் காற்றுக்கு வேகமாய் ஆட, அதன் நடுவே "R" என்ற கருப்பு டாலரில் ஒரு செயின் தொங்கி கிடக்க, அப்படியே மேலே அவன் காதில் கருப்பாய் ஒரு கடுக்கனும், அதன் அருகே அவனின் நீண்ட‌ சிகைகள் காற்றில் ப‌ற‌க்க‌, அவன் பின்னே அந்த‌ அக‌ண்ட‌ வானில் மெதுவாய் உதித்துக் கொண்டிருந்த அந்த உதய சூரியனுக்கு நிகராய் தெரிந்தது அவன் முகம்.

அந்த சிவந்த சூரியனுக்கு நடுவே கரும் புயலாய் வந்துக் கொண்டிருந்த அந்த கருப்பு குதிரையின் மீது, கருப்பு உள்பனியன் மேல் திறந்துவிட்டிருந்த அவனின் கருப்பு மேற்சட்டை காற்றில் அனலாய் பின்னால் பறக்க, அவன் மார்புக்குள் ப‌த்திர‌மாய் தன்னவளை அணைத்திருந்த‌வ‌னின் ம‌று க‌ர‌ம், அந்த‌ குதிரையின் க‌யிறை வேகமாய் உத‌ற, காற்றையே கிழித்துக் கொண்டு பறந்தது அந்த‌ குதிரை.

அப்ப‌டியே நேர‌ம் ந‌க‌ர‌ இங்கு ம‌ருத்துவ‌ம‌னையில் வெகு நேர‌ம் ஆகியும் அமீராவை பற்றிய‌ த‌க‌வ‌ல் வாராத‌தால் அனைவ‌ரும் பதற்றமாய் இருக்க‌, த‌லை முழுக்க‌ க‌ட்டுட‌ன் அரை ம‌ய‌க்க‌த்தில் இருந்த‌ விராஜின் இத‌ழ்க‌ள், "மீரா! மீரா!" என்று அவ‌ள் பெய‌ரையே முன‌ங்கிக் கொண்டிருந்த‌து.

அதை பார்த்த‌ விராஜின் த‌ந்தை விக்ர‌ம‌னுக்கோ வேதனையாக இருக்க‌, சிறு வ‌ய‌திலிருந்து அவ‌ன் ஆசைப்ப‌ட்ட‌து எதுவாகினும் அவ‌ன் வாய் திற‌ந்து கேட்கும் முன்பே அவ‌னுக்கு வாங்கிக் கொடுத்து ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌வ‌ர். முத‌ல் முறையாக‌ அவ‌னாக‌வே கேட்ட‌ ஒரு விஷ‌ய‌ம் என்றால், "என‌க்கு மீரா வேணும் டேட்" என்றுதான்.

அது இன்னுமே அவ‌ரின் காதுக‌ளில் ஒலித்த‌ப‌டியே இருக்க‌, அவ‌ன் க‌ர‌த்தை அழுத்தி பிடித்தவ‌ர், "என்ன‌ ஆனாலும் மீரா உன‌க்குதான்டா. இது உன் அப்பாவோட‌ ப்ராமிஸ்." என்றார் அழுத்த‌மாக‌. அதில் அவன் அப்படியே அமைதியாகி முழுதாய் விழிமூட, அவன் சிகையை கண்ணீருடன் வருடினார் விக்ரமன். இவனை இந்நிலையில் பார்க்க பார்க்க அவரின் வேதனை அதிகரிக்க, அதைவிட தன் மகனை இந்நிலைக்கு ஆளாக்கிய‌வ‌னின் மீது கொலைவெறியே உருவாக‌, வேக‌மாய் எழுந்து வெளியில் சென்றார்.

அவ‌ரின் ஆட்க‌ள் சில‌ரும் அவ‌ரின் பின்னாலே சென்றுவிட‌, வார்டின் க‌த‌வு அடைக்க‌ப்ப‌ட்ட‌ நொடி, "என்ன‌ ப‌ண்ணுவீங்க‌ளோ என‌க்கு தெரியாது. அவ‌ன் இன்னும் கொஞ்ச‌ நேர‌த்துல‌ என் க‌ண்ணு முன்னாடி இருக்க‌ணும்." என்றார் விக்ர‌ம‌ன்.

அத‌ற்கு அவ‌ர்க‌ளும் வேக‌மாய் த‌லைய‌சைத்துவிட்டு ந‌க‌ர்ந்துவிட‌, அப்ப‌டியே திரும்பிய‌ விக்ர‌ம‌னின் கண்கள் கோவத்தில் சிவ‌ந்த‌து. "விராஜ் விக்ர‌ம‌ன்மேல‌ கைய வெச்சிருக்க‌. இந்த‌ உல‌க‌த்துல‌ எந்த‌ மூலையில‌ இருந்தாலும் உன்ன விட‌மாட்ட‌ன்டா." என்று குரோதமாய் கூறினார் விக்ர‌ம‌ன்.

அதே நேர‌ம் இங்கே ஒரு பிர‌மாண்ட‌ க‌த‌வு திற‌க்க‌ப்ப‌ட‌, அத‌னுள்ளே அவ‌ளை ஏந்திய‌ப‌டி உள்ளே ந‌ட‌ந்தான் அவ‌ன். உள்ளே நுழைந்த‌துமே ஏசி காற்று அவ‌ன் முக‌த்தை த‌ழுவ‌, அதில் அழ‌காய் ப‌ற‌ந்த‌ சிகையோடு மெதுவாய் உள்ளே ந‌ட‌ந்தான் அவ‌ன். சுற்றியும் ப‌ட‌ர்ந்து விரிந்து அழ‌கான‌ ஹால், அத‌ன் ந‌டுவே க‌ண்ணாடி ப‌டிக‌ட்டுக‌ள், அத‌னுள்ளே வ‌ண்ண‌ வ‌ண்ண‌ மீன்க‌ள் அழகாய் நீந்திக் கொண்டிருக்க‌, படிகளின் மேல் முடிவு வ‌ரையிலும் அத‌ன் கடல்தான். அதாவ‌து படியும் அதுவே அழ‌கிய‌ மீன் தொட்டியும் அதுவே என்று பார்ப்ப‌த‌ற்கே அத்த‌னை அழ‌காய் புதிதான‌ ஒரு க‌லைந‌ய‌ம்.

அந்த‌ ப‌டிக‌ளில் கால் வைத்து ஏறி மேலே ந‌ட‌ந்தான் அவ‌ன். அவ‌ளை ஏந்திக்கொண்டு முத‌ல் த‌ள‌த்திலேயே வ‌ளைந்து ஒரு க‌த‌வை திற‌க்க‌, ஏதோ க‌ட‌லுக்குள் செல்வ‌துப்போல் த‌ரை முழுக்க‌ க‌ட‌லை போன்ற‌ ஃப்ளோரிங்தான்.

அதைவிட‌ பிர‌மாண்ட‌மாய் அந்த‌ அறையின் ந‌டுவே ஒரு அக‌ண்ட‌ அழ‌கான‌ பிங்க் தாம‌ரை வ‌டிவ‌ மெத்தை. அதில் சென்று அவ‌ளை மெல்ல‌ ப‌டுக்க‌ வைத்த‌வ‌ன், அப்ப‌டியே விலகாம‌ல் நிமிர்ந்து அவ‌ளின் முக‌ம் பார்த்தான். அத்தனை நெருக்கத்தில் இன்னுமே மூடியிருந்த‌ அவ‌ளின் விழிக‌ள், அத‌ற்கு மெல்லிய‌தாய் முத்த‌மிட்ட‌வ‌ன், க‌ல‌வ‌ர‌த்தில் கோண‌லாகியிருந்த‌ அவளின் குட்டி பொட்டில் மூக்கை வைத்து அழுத்தி மெதுவாய் அதை சரி செய்து மையத்தில் வைத்தவன், அங்கு மீசை உர‌ச‌ மெல்லிய‌தாய் முத்த‌மிட்டான். அதில் அவ‌ள் புருவ‌ங்க‌ள் குறுக‌, அத‌ற்கும் ஒரு மென்மையான‌ முத்த‌ம் வைத்தான்.

அப்போதே இடையூராய் அவ‌ளின் சிறு சிறு கூந்த‌ல் நெற்றியில் படர்ந்து கிட‌க்க‌, மெதுவாய் ஊதி அதை வில‌க்கிவிட்ட‌வ‌ன், அந்த‌ நெற்றியில் மென்மையாய் இத‌ழ் ப‌தித்தான். அதில் அவ‌ள் புருவ‌ முடிச்சுக‌ள் மெதுவாய் த‌ள‌ர‌, அப்ப‌டியே அவ‌ள் நாசியில் த‌ன் இத‌ழுர‌ச‌ வில‌கி அவ‌ள் முக‌ம் பார்த்தான்.

என்றும் வாடாத‌ வெண்தாம‌ரை ம‌ல‌ர் அவ‌ள் முக‌ம். அதில் ஒரு துளி நீர் வ‌ந்து விழ‌, அதை த‌ன் நாசி நுனியாலேயே மெதுவாய் துடைத்துவிட்ட‌வ‌னின் விழிக‌ளிலிருந்து அடுத்த‌டுத்து துளிக‌ள் அவ‌ள் முக‌த்தில் விழுந்த‌து. அதை அப்ப‌டியே த‌ன் இத‌ழ்க‌ளால் துடைத்து சுத்த‌ம் செய்த‌வ‌னின் விழிக‌ள் இப்போது க‌ண்ணீருட‌ன் அவ‌ள் முக‌மெங்கும் ஏக்க‌மாய் த‌ழுவ‌, மெதுவாய் அவ‌ளின் க‌ன்ன‌ம் ப‌ற்றினான்.

"இதுக்குமேல‌ ஒரு நிமிஷ‌ங்கூட‌ உன்ன‌விட்டு இருக்க‌ மாட்டேன்." என்று அவ‌ன் க‌ண்ணீருட‌ன் கூற‌, அவ‌ளோ அசைவின்றி கிட‌ந்தாள். அதில் அப்ப‌டியே த‌ன் க‌ர‌த்தை அவ‌ள் க‌ன்ன‌த்திற்கு கீழ் ந‌க‌ர்த்திய‌வ‌ன், "நீயும் என்ன‌விட்டு எங்க‌யும் போக‌ கூடாது." என்ற‌ப‌டி க‌ண்ணீருட‌ன் பார்வையை இற‌க்கி, "நா போக‌ விட‌மாட்டேன்." என்ற‌ப‌டி அவ‌ள் இத‌ழ்க‌ளை மெல்ல சிறை செய்தான்.

அப்ப‌டியே விழி மூடி க‌ண்ணீருட‌ன் மிக‌ மென்மையாய் அவ‌ள் இத‌ழ்க‌ளை சுவைத்த‌வ‌ன், ப‌ல‌நாள் பார்க்காத‌ ஏக்க‌ம் மொத்த‌த்தையும் அவ‌ள் இத‌ழ்க‌ளில் குவிக்க‌ ஆரம்பிக்க, அந்த மென் முத்தம் மெல்ல வன்மையாய் மாறி, அப்ப‌டியே வெறியாய் மாற, அவ‌ளின் க‌ன்ன‌த்திலிருந்த‌ க‌ர‌த்தை அப்படியே இற‌க்கி அவ‌ள் தோளை அழுத்தி பிடித்து அசுர‌ வேக‌த்தில் அவ‌ள் இத‌ழ்க‌ளை சுவைத்தான் அவன்.

அந்த‌ வேக‌த்தில் அவ‌ளுக்கு மூச்சுமுட்ட‌ ஆர‌ம்பிக்க‌, அதில் முனங்கலாய் புருவம் குறுகியவளின் ம‌ய‌க்க‌ம் மெல்ல க‌லைந்து விழிகள் திற‌க்க‌, அடுத்த‌ நொடி அகல விழி விரித்து வேக‌மாய் அவனை பிரித்து த‌ள்ளிவிட்டாள் அமீரா.

அதில் அவ‌ன் மெத்தைக்கு கீழே சென்று விழ‌, அவ‌ளோ ப‌ய‌த்துட‌ன் எழுந்து அம‌ர்ந்து சுற்றியும் பார்த்தாள். இங்கே மெதுவாய் எழுந்து நின்ற‌வ‌னின் க‌ல‌ங்கிய‌ க‌ண்க‌ள் கோவ‌த்தில் சிவ‌ந்திருக்க‌, த‌ன் தோள் ப‌ட்டையில் முக‌த்தை தேய்த்து க‌ண்ணீரை முழுதாய் துடைத்து வீசியவ‌ன், முழு அனலாய் அவ‌ள் ப‌க்க‌ம் திரும்பினான்.

அதில் திடுக்கிட்ட‌ அவ‌ளும் ப‌ய‌ந்து கால்க‌ளை குறுக்கி பிடித்து அப்ப‌டியே பின்னால் ந‌க‌ர‌, அவ‌ன் கண்களில் அப்படியொரு அனல், அவ‌ளையே அழுத்த‌மாய் பார்த்த‌ப‌டி நெருங்கி வ‌ந்தான் அவ‌ன்.

அதில் மேலும் நடுங்கிய‌ப‌டி பின்னால் ந‌க‌ர்ந்த‌வ‌ள், "ய‌..யாரு நீ.." என்று கேட்டு முடிக்கும் முன், அவ‌ளின் சேலையை உருவி வீசியிருந்தான் அவ‌ன்.

- நொடிக‌ள் தொட‌ரும்...

இந்த கதையின் காட்சிகள் விஷ்வலாக எனது இன்ஸ்டா பேஜ் : oviya_blessy ல் பார்க்கலாம்.
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-2
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.