CHAPTER-2

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
இங்கு அர்ஜுன் த‌ன் பாஸ் த‌ன‌க்கு கொடுத்த‌ வேலையை முடிக்க‌ க‌ட‌த்த‌ல் ம‌ன்ன‌ன் தாகூரை பார்க்க‌ அவ‌ன் சாம்ராஜ்ய‌த்திற்குள் த‌னியாக‌ நுழைந்தான். அங்கு அவ‌னை நிற்க‌ வைத்து கேள்வி கேட்ட‌ தாகூர், அவ‌ன் ப‌திலில் விய‌ந்த‌ப‌டி, அப்போது ஆழ‌ம் தெரியாம‌ல் காலை விடாத நீ, என்னை ப‌ற்றியும் அறிந்துக்கொண்டுதானே இங்கு வ‌ந்திருப்பாய் என்று கேட்க‌,

அத‌ற்கும் அர்ஜுன், "இங்க‌ உள்ள‌ வ‌ர்ற‌துக்கு உங்க‌ அனும‌தி வேணும், ஆனா வெளிய‌ போற‌துக்கு உங்க‌ க‌ருண‌ வேணும். அது என் பாஸ்க்கே தெரியாது. அத‌னால‌தா தைரிய‌மா என்ன‌ இங்க‌ அனுப்பியிருக்காரு." என்றான்.

தாகூர், "வாரே வா. ந‌ல்லாதா தெரிஞ்சு வெச்சிருக்க‌. இப்போ உன‌க்கு உள்ள‌ வ‌ர‌ அனும‌தி கெட‌ச்சிருச்சு. ஆனா வெளிய‌ போக‌ க‌ருண‌? அது கெடைக்கும்னு நெனைக்கிறியா?" என்று கேட்க‌,

அத‌ற்கும் சிரித்துக்கொண்ட‌ அர்ஜுன், "க‌ண்டிப்பா இல்ல‌ பாஸ். ஏன்னா வ‌ல‌து கையில‌ செய்யிற‌து இட‌து கைக்கே தெரிய‌ கூடாதிங்குற‌து உங்க‌ பாலிசி. சோ வெளி ஆள் என்ன‌ க‌ண்டிப்பா உயிரோட‌ விட‌ மாட்டீங்க‌." என்றான்.

தாகூர், "தெரிஞ்சும் உன் க‌ண்ணுல‌ ப‌ய‌மே தெரிய‌ல‌ன்னா, உன‌க்கு சாவ‌ க‌ண்டு ப‌ய‌மே இல்ல‌ன்னுதான அர்த்த‌ம்?" என்று கேட்ட‌ப‌டி த‌ன் துப்பாக்கியை லோட் செய்தார்.

அப்போது மெல்ல‌ த‌ன் இடுப்பில் சொருகி வைத்திருந்த‌ த‌ன்னுடைய‌ துப்பாக்கியை எடுக்க‌ முய‌ன்றான் அர்ஜுன். ஆனால் அவ‌னுடைய‌ துப்பாக்கியோ, அந்த‌ ட்ரக்கிலிருந்து குதிக்கும்போதே கீழே விழுந்திருந்த‌து. அதை க‌வ‌னிக்காத‌வ‌ன் இங்கு வரை வந்து த‌ன் இடையில் கை வைக்க‌, அங்கு த‌ன் துப்ப‌ாக்கி இல்லை என்ப‌தை உண‌ர்ந்த‌தும் அதிர்ந்து நின்றான்.

அப்போது அவ‌ன் க‌ண்க‌ளில் தெரிந்த‌ திடீர் ப‌த‌ற்ற‌த்தை க‌ண்ட‌ தாகூர், "எல்லாம் தெரிஞ்சும், த‌னியா வ‌ந்து இங்க‌ மாட்டிருக்க‌ன்னா, நீ எதோ பிளானோட‌தா இங்க‌ வ‌ந்திருப்ப‌. செரிதான‌?" என்று கூறிய‌ப‌டி அவ‌ன் த‌லையை த‌ன் துப்ப‌க்கியால் குறி பார்த்தான்.

அத‌ற்கு அர்ஜுன் த‌ன் ப‌த‌ற்ற‌த்தை த‌ன‌க்குள் ம‌றைத்த‌ப‌டி, "என்ன‌ பொறுத்த‌வ‌ரைக்கும் என் பாஸ் சொல்ற‌துக்கு நோ சொல்லி என‌க்கு ப‌ழ‌க்க‌ம் இல்ல‌ பாஸ். அத‌னால‌தா இவ்ளோ தூர‌ம் வ‌ந்தேன். அதோட‌ இங்க‌ இருந்து வெளிய‌ போயிருவ‌ன்னு என‌க்கு ந‌ம்பிக்க‌ இருக்கு. வித்த‌வுட் யுவ‌ர் க‌ருண‌." என்று க‌டைசி வ‌ரியை அழுத்த‌மாக‌ கூறினான்.

ஏனோ அவ‌ன் ம‌ன‌தில் இருந்த‌ ப‌த‌ட்ட‌ம் அவ‌ன் வார்த்தைக‌ளில் தெரிய‌வில்லை. அவ‌ன் க‌ண்க‌ளிலும் ந‌க்க‌ல் ம‌ட்டுமே நிறைந்திருக்க‌, அது தாகூரை மேலும் எரிச்ச‌ல‌டைய‌ செய்ய‌, "செரி அதையும் பாக்க‌லாம்." என்ற‌ப‌டி த‌ன் துப்பாக்கியின் ட்ரிக‌ரில் கை வைத்தான்.

அதை பார்த்து ஒரு நிமிட‌ம் திடுக்கிட்ட‌ அர்ஜுன், அபொழுதும் த‌ன் ப‌ய‌த்தில் வெளியில் காட்டாம‌ல் நிற்க‌, அவ‌ன் ம‌ன‌மோ அடுத்த‌ என்ன‌ செய்வ‌து என்று தெரியாம‌ல் அவ‌ச‌ர‌மாக‌ யோசித்துக்கொண்டே இருந்த‌து.

அப்போது தாகூர், "குட் பை!" என்று கூறிவிட்டு துப்ப‌ாக்கியின் ட்ரிக்க‌ரை அழுத்தும் ச‌ம‌ய‌ம், அர்ஜுனின் க‌ண்க‌ள் இறுக்க‌ மூடிக்கொள்ள‌, திடீரென‌ ஒரு ச‌த்த‌ம் கேட்ட‌து. அதை கேட்ட‌ அங்கிருந்த‌ அனைவ‌ரும் அதிர்ந்து உட‌னே திரும்பி பார்க்க‌, அதை உண‌ர்ந்து க‌ண்க‌ளை திற‌ந்த‌ அர்ஜுனும் திரும்பி பார்த்தான். அடுத்த‌ நொடி அந்த‌ இட‌ம் முழுக்க‌ புகைமூட்ட‌மான‌து. அனைவ‌ரின் பார்வையிலும் புகை ம‌ட்டுமே தெரிய‌, அனைவ‌ரும் ஒரு சேர‌ இரும‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். அந்த‌ புகையில் க‌ண்க‌ள்க்கூட‌ தெரிய‌வில்லை. பிற‌கு சில‌ நொடிக‌ளில் மெதுவாக‌ மெதுவாக‌ அந்த‌ புகை க‌லைய‌ ஆர‌ம்பிக்க‌, தெளிந்த‌ பின் புகையும் இல்லை, அங்கிருந்த‌ அர்ஜுனையும் காண‌வில்லை.

அதை பார்த்து கோப‌ம‌டைந்த‌ தாகூர், "அவ‌ன் எங்க‌ போனான்?" என்று க‌ர்ஜிக்க‌,

அடியாள் ஒருவ‌ன், "அதுதா பாஸ் என‌க்கும் புரிய‌ல‌." என்று அவ‌னை அங்கும் இங்கும் தேட‌ ஆர‌ம்பிக்க‌, ம‌ற்ற‌ அனைவ‌ரும் கூட‌ சேர்ந்து தேட‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.

இங்கு ஒரு பைக்கில் அர்ஜுனும் ஹெல்மெட் அணிந்த‌ ம‌ற்றொருவ‌னும் சென்றுக்கொண்டிருந்த‌ன‌ர். அர்ஜுனுக்கு ஒரு நிமிட‌ம் என்ன‌ ந‌ட‌ந்த‌தென்றே தெரிய‌வில்லை.

அதே குழ‌ப்ப‌த்துட‌ன் த‌ன் முன் அம‌ர்ந்து பைக் ஓட்டிக்கொண்டிருப்ப‌வ‌னை பார்த்த‌ அர்ஜுன், அடுத்த‌ நொடி நிம்ம‌தி ம‌ட்டுமே முக‌த்தில் சூழ‌, "நீ என்ன‌ ப‌ண்ண‌ன்னே தெரிய‌ல‌. ஆனா க‌ரைக்ட‌ நேர‌த்துல‌ என்ன‌மோ ப‌ண்ணி என்ன‌ காப்பாத்திட்ட‌. இல்ல‌ன்னா நா என்ன‌ ப‌ண்ணி த‌ப்பிச்சிருப்ப‌ன்னு என‌க்கே தெரிய‌ல‌." என்று நிம்ம‌தியுட‌ன் பெருமூச்சுவிட்ட‌ப‌டி த‌ன் நெற்றி விய‌ர்வை துடைத்துக்கொண்டான்.

ஆனால் அத‌ற்கு அவ‌னிட‌ம் எந்த‌ ப‌திலும் வ‌ராம‌ல் இருக்க‌, உட‌னே அவ‌ன் இடையை இறுக‌ க‌ட்டி முதுகில் த‌ன் த‌லையை சாய்த்த‌வ‌ன், "தேங்க் யூ சோ ம‌ச் ப்ரோ." என்று ம‌கிழ்ச்சியுட‌ன் கூறினான்.

ஆனா அத‌ற்கும் அவ‌ன் அசைவே காட்டாம‌ல் பைக்கை ஓட்டிக்கொண்டிருக்க‌, அப்போதுதான் அவ‌னை ப‌ற்றி யோசித்த‌ அர்ஜுன், "ஆமா யாரு நீ? எங்க‌ ஆளுங்க‌தா அனுப்பி வெச்சாங்க‌ளா?" என்று கேட்க‌,

அத‌ற்கும் அவ‌ன் ஒன்றுமே பேசாம‌ல் பைக்கை ஓட்டிக்கொண்டிருந்தான்.

அர்ஜுன், "ப‌தில் சொல்லு யாரு நீ?" என்று கேட்க‌,

அத‌ற்கும் அவ‌ன் ப‌தில் எதுவும் பேசாம‌ல் அமைதியாக‌ இருக்க‌, மேலும் அர்ஜுன், "என்ன‌ எதுவும் பேச‌மாட்டியா?" என்று கேட்க‌, அடுத்த‌ நொடி பைக்கை நிறுத்தியிருந்தான் அவ‌ன்.

அதை உண‌ர்ந்த‌ அர்ஜுன், "என்ன‌ ஆச்சு? ஏ வ‌ண்டிய‌ நிப்பாட்டுன‌?" என்று கேட்க‌,

அவ‌ன் எதுவும் பேசாம‌ல் வ‌ண்டியைவிட்டு இற‌ங்க‌, அர்ஜுனும் கேள்வியுட‌ன் கீழே இற‌ங்கி, "என்ன‌ நா கேக்க‌ற‌ கேள்விக்கு எதுவுமே பேசாம‌ இருக்க‌? வாய‌ தெற‌க்க‌ மாட்டியா?" என்று மீண்டும் மீண்டும் கேட்க, அப்போது அர்ஜுனின் ம‌ற்ற‌ கூட்டாளிக‌ள் அங்கு வ‌ந்து சேர்ந்த‌ன‌ர்.

அவ‌ர்க‌ளை பார்த்த‌ பிற‌கு தான் த‌ங்க‌ள் பாஸுடைய‌ வீட்டிற்கே வ‌ந்துவிட்ட‌தை உண‌ர்ந்து சுற்றி முற்றி பார்த்தான் அர்ஜுன்.

பிற‌கு அவ‌ன் கூட்டாளிக‌ள், "டேய் அர்ஜுன், என்ன‌ ஆச்சுடா?நீ ஏதோ ஆப‌த்தான‌ எட‌த்துக்கு போயிருக்குற‌தா பாஸ் சொன்னாரு?" என்று கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன் ஆம் என்று கூறி அங்கு ந‌ட‌ந்த‌வ‌ற்றை ஐந்தே நிமிட‌த்தில் சுருக்க‌மாக‌ கூறி முடித்து பெருமூச்சுவிட்டுக்கொண்டான்.

அதை கேட்டு ப‌த‌றிய‌ அவ‌ன் கூட்டாளிக‌ள்,"என்ன‌டா சொல்ற‌? உன‌க்கு ஒன்னும் ஆக‌ல‌ல்ல?" என்று ப‌த‌ற்ற‌மாக‌ கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன், "இல்ல‌டா ஒன்னும் ஆக‌ல‌." என்றான்.

அவ‌ர்க‌ள், "ந‌ல்ல‌வேளடா." என்று நிம்ம‌திய‌டைந்த‌ன‌ர்.

அர்ஜுன், "அது செரி, இது யாரு? என்ன‌ க‌ரைக்ட் நேர‌த்துல‌ வ‌ந்து காப்பாத்துன‌து? நீங்க‌தா அனுப்புனீங்க‌ளா?" என்று கேள்வியுட‌ன் மீண்டும் அவ‌னையே பார்த்தான்.

அத‌ற்கு அவ‌ர்க‌ள், "இல்ல‌. பாஸ்தா அனுப்புனாரு. அந்த‌ தாகூர் ரொம்ப‌ மோச‌மான‌வ‌ன், அத‌னால‌ சேஃப்டிக்கு இந்த‌ பிளானையும் ப‌ண்ணியிருந்தாரு ந‌ம்ப‌ பாஸ்." என்றான்.

அர்ஜுன், "யாரு இது? பேச‌வே மாட்டிங்குறான்?" என்று கேட்க‌,

அத‌ற்கு ஒருவ‌ன், "இவ‌ பேரு ச‌ந்ரா." என்று புன்ன‌கையுட‌ன் அவ‌ளை பார்த்து கூற‌,

அதை கேட்டு அதிர்ச்ச்சிய‌டைந்த‌ அர்ஜுன், "என்ன‌? பொண்ணா?" என்று அவ‌ளை மேலும் கீழுமாக‌ பார்க்க‌, அப்போதுதான் த‌ன் கையில் இருந்த‌ க‌ருப்பு நிற‌ கிள‌வ்சை க‌ழ‌ற்றினாள் அவ‌ள்.

அப்போது அவ‌ளின் நீண்ட‌ நீண்ட‌ வெண்ணிற‌ பிஞ்சு விர‌ல்க‌ளும், அத‌ற்கு எடுப்ப‌க‌ அவ‌ள் பூசியிருந்த‌ க‌ருப்பு நிற சாய‌மும் அவ‌ள் பெண் என்று கூற‌, அதை பார்த்து அதிர்ச்சிய‌டைந்த‌ அர்ஜுனின் ம‌ன‌தில் ச‌ற்று முன்பு பைக்கில், அவ‌ளை இறுக‌ க‌ட்டிக்கொண்டு ந‌ன்றி கூறிய‌து நினைவிற்கு வ‌ர‌, த‌ன் க‌ண்க‌ளை ஈறுக‌ மூடி ச‌ங்கோஜ‌ப்ப‌ட்ட‌வ‌ன், "இது தெரியாம‌ வ‌ர்ற‌ வ‌ழில‌ இவ‌மேல‌ கையெல்லா போட்டு, க‌ட்டியெல்லா புடிச்சு, ஏண்டா அர்ஜுன்" என்று த‌ன்னை தானே ம‌ன‌திற்குள் திட்டிக்கொண்டான்.

அப்போது த‌ன் த‌லையில் இருந்த‌ ஹெல் மெட்டை க‌ழ‌ற்றிய‌வ‌ள், த‌ன் சிறித‌ள‌வு நீண்ட‌ கூந்த‌லை த‌லையை இட‌வ‌ல‌மாக‌ உலுக்கிய‌ப‌டி ச‌ரி செய்ய‌, அந்த‌ கார் கூந்த‌லின் ந‌டுவே ஒளிர்ந்த‌ அவ‌ள் முக‌ம் க‌ண்டு உறைந்து நின்றான் அர்ஜுன்.

பிற‌கு அங்கிருந்த‌ அவ‌ன் ந‌ண்ப‌ன், "இவ‌ ந‌ம்ப‌ பாஸோட‌ பொண்ணு. ஃபாரின்ல‌ இருந்து இன்னிக்குதா வ‌ந்தா." என்று கூற‌,

அதை கேட்ட‌ அர்ஜுனின் காதுக‌ளோ திற‌ந்துதான் இருந்த‌து. ஆனால் அத‌ற்கு இத‌ழ்க‌ள் ம‌ட்டும் எந்த‌ ஒரு அசைவையும் காட்டாம‌ல் இருக்க‌, க‌ண்க‌ளோ அவ‌ள் அழ‌கில் மெய் ம‌றந்துவிட‌, அவ‌ன் உட‌லோ இவ்வுல‌கிலேயே இல்லை. அவ‌ள் ஏனோ வானிலிருந்து நேராக‌ பூமியில் குதித்த‌ ச‌ந்திர‌னாக‌வே அவ‌ன் க‌ண்க‌ளில் ப‌திய‌, அத‌ற்கு ஏற்றாற்போள் வைக்க‌ப்ப‌ட்ட‌ அவ‌ளின் பெய‌ரும் அவ‌ன் ம‌ன‌தில் ஆழ‌மாக‌ ப‌திந்த‌து.

அப்போது ச‌ந்ரா புன்ன‌கையுட‌ன் அவ‌ன் முன்பு த‌ன் கையை நீட்டி, "ஹாய்! ஐய‌ம் ச‌ந்ரா" என்றாள்.

ஆனால் வேறு உல‌கில் ப‌ய‌ணித்துக்கொண்டிருந்த‌ அர்ஜுனோ அத‌ற்கு அசைவே காட்டாம‌ல் சிலையாக‌ நிற்க‌, அவ‌ன் தோழ‌ன் அவ‌னை உலுக்கிய‌ப‌டி, "டேய் அர்ஜுன்!" என்று அழைக்க‌,

அப்போதுதான் த‌ன்னிலைய‌டைந்த‌வ‌ன், த‌ன் பார்வையை த‌ன் முன் நீட்டிக்கொண்டிருக்கும் அவ‌ள் க‌ர‌த்தில் ப‌தித்த‌வ‌ன், உட‌னே த‌ன் கையையும் அவ‌ளுட‌ன் குலுக்கி, "ஹாய்! ஐய‌ம் அர்ஜுன். நைஸ் டு மீட் யூ." என்றான். ஆனால் அவ‌ள் க‌ர‌ம் ப‌ற்றிய‌ அடுத்த‌ நொடியே அவ‌ன் கையில் மின்சார‌ம் பாய‌, ச‌ட்டென‌ த‌ன் கையை எடுத்துக்கொண்ட‌வ‌ன், த‌ன் உள்ள‌ங்கையை உற்று பார்க்க‌, அதை பார்த்த‌ அனைவ‌ரும், "டேய் என்ன‌ ஆச்சு?" என்று கேட்க‌,

அதை பார்த்த‌ ச‌ந்ராவும் ப‌த‌றிய‌ப‌டி என்ன‌வென்று கேட்க‌, அத‌ற்கு அதிர்ச்சியிலிருந்த‌ அர்ஜுன் மெல்ல‌மாக‌ "ஒன்னும் இல்ல‌." என்று த‌ன் உள்ள‌ கையை பார்த்த‌ப‌டியே ப‌தில் கூறினான்.

ச‌ந்ரா, "செரி ஓகே. வாங்க‌ டேட‌ பாக்க‌ போலாம்." என்றாள்.

அத‌ற்கு அதே அதிர்ச்சியிலிருந்த‌ அர்ஜுன், "நீங்க‌ போங்க‌, நா வ‌ர்றேன்." என்று கூற‌,

அத‌ற்கு ச‌ந்ரா, "செரி ஓகே." என்று கூறி த‌ன் வீட்டிற்குள் செல்ல‌, அவ‌ளையே அதிர்ச்சியும் விய‌ப்புமாக‌ பார்த்துக்கொண்டிருந்தான் அர்ஜுன்.

அப்போது அர்ஜுனின் தோள்க‌ளை உலுக்கிய அவ‌னின் கூட்ட‌ளிக‌ள், "டேய் அர்ஜுன்!" என்று அழைக்க‌, அடுத்த‌ நொடி திடுக்கிட்டு த‌ன்னிலைய‌டைந்த‌வ‌ன், "ஹா?" என்று அவ‌ர்க‌ளை பார்த்தான்.

அத‌ற்கு ஒருவ‌ன், "என்னடா ஆச்சு? ஏ பேர‌ஞ்ச‌ மாதிரி நிக்கிற‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு மீண்டும் அவ‌ள் சென்ற‌ திசையையே விய‌ப்புட‌ன் பார்த்த‌வ‌ன், "அவ‌கிட்ட‌ என்ன‌மோ இருக்கு." என்று த‌ன் இத‌ழை மெல்ல‌ அசைத்து கூறினான்.

அதை கேட்ட‌ அவ‌ன் ந‌ண்ப‌ன், "என்ன‌ இருக்கு?" என்று புரியாம‌ல் கேட்க‌,

அர்ஜுன் அதே அதிர்ச்சி முக‌ம் மாறாம‌ல், "அவ‌ளுக்கும் என‌க்கும் ஏதோ ஒரு ச‌ம்ம‌ந்த‌ம் இருக்கு." என்றான்.

அத‌ற்கு அவ‌ன், "என்ன‌ ச‌ம்ம‌ந்த‌ம்?" என்று புரியாம‌ல் கேட்க‌,



அர்ஜுன், "தெரிய‌ல‌. ஆனா ஏதோ ஒரு ச‌ம்ம‌ந்த‌ம் இருக்கு." என்றான். அதை கேட்ட‌ ம‌ற்ற‌ நால்வ‌ரும் குழ‌ப்ப‌த்துட‌ன் அவ‌னை பார்த்த‌ன‌ர். ஆனால் அவ‌ன் பார்வையோ அவ‌ள் சென்ற‌ திசையிலேயே இருக்க‌, மெல்ல‌ த‌ன் பார்வையை ந‌க‌ர்த்தி த‌ன் உள்ளங்கையை உற்று பார்த்தான்.

அவ‌ர்க‌ள் இடையிலான‌ அந்த‌ ச‌ம்ம‌ந்த‌ம் பூர்வ‌ ஜென்ம‌ ப‌ந்த‌ம் என்ப‌தை கால‌ம் தான் அவ‌ர்க‌ளுக்கு உண‌ர்த்த‌ வேண்டும்.

- ஜென்மம் தொட‌ரும்....
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-2
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.