மாறன் நங்கையின் கையின் பிடியை தளர்த்தி I am மாறன் நீங்க என்றான்....?

அவள் எந்த பதிலும் சொல்லாமல் ஒரு வெற்று புன்னகை ஒன்றை பரிசளித்தாள் அங்கிருந்து மெல்ல நடந்து செல்ல சிறிது தூரம் நடந்து திரும்பி மாறனை பார்த்தாள், அவனும் நங்கையை தான் பார்த்துக் கொண்டு நின்றான்......😊

மாறன் தலையை உலுக்கியபடி முடிகளை அழுந்த கோதினான் ...🧚🏻‍♀️
யார் இவள் சித்தம் கலங்குதே என்ற வாரே...

அவளோ எப்போதோ அங்கிருந்து சென்றிருந்தால் மூச்சை ஆழ உள் இழுக்க பெருமூச்சு விட்டான் மாறன். ம்ம் நம்ம கிளம்புவோம் என்றபடி சற்று தொலைவில் நின்று இருந்த தனது காரை எடுத்து அந்த சோலையின் சிறிது தொலைவில் அமைந்திருக்கும் தன்னுடைய வீட்டுக்கு சென்றான்.....




வீட்டின் முன் கேட்டை வலுவாக தள்ள அது கீச் ....... என்ற சத்தம் எழுப்ப வாட்ச்மேன் எங்கிருந்தோ ஓடி வந்தவர்

ஐயோ ,சார் மன்னிச்சிடுங்க இப்போ தான் சாப்பிட போனேன் வாங்க சார் என்று அழைத்து கேட்டை நன்றாக திறந்து விட்டார் இந்தாங்க சாவி காரை பார்க் பண்ணிடுங்க சோமு அண்ணா .....

அப்புறம் அந்த சார் மோர் எல்லாம்
வேண்டாம் நீங்க என்ன முதல்ல எப்படி கூப்பிடுவீங்களோ அப்படியே கூப்பிடுங்க என்றான் மாறன்.....


ஆகட்டும் தம்பி.... நீங்க உள்ள போங்க மாறன் தம்பி என்று கூறி அவர் காரை நிறுத்த சென்று விட்டார்.மனதிற்குள் தம்பி இன்னும் மாறவே இல்லே என்று எண்ணி கொண்டார்

அப்பொழுது திடீரென உள்ளிருந்து ஒரு குறள் யய்யா என்றவரே ஓடி வந்தார் சரண்யா

பார்த்து 12 வருசம்...ஆச்சு ஒரு ஃபோன் ...கூட பண்றது இல்ல எல்லாரையும் மறந்துட்டீங்களா...🤧🤧 இல்ல வேலைக்காரி தானே அப்படின்னு விட்டுட்டீங்களா?🤧🤧

என்றதும் அப்படி எல்லாம் சொல்லாதீங்க சரண்யா அம்மா....

சீதா....அம்மா என்னைக்கு உங்களை அப்படி நடத்தி இருக்காங்க நீங்க எல்லாரும் எனக்கு சொந்தம் போல தான் என்று தோள் மீது கையை போட்டுக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.....


நில்லுங்க தம்பி ஆலாத்தி கரட்சி வச்சிருக்கேன் நீங்க வெள்ளன வந்துடுவீங்கன்னு சொன்னாங்க உங்களுக்காக எல்லாரும் காத்துகிட்டு இருந்தாங்க இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எல்லாரும் போனாக..... என்றார்....

பின் ஆளாதி எடுக்க...



ஏன் தம்பி இத்தனை நேரம்?
அதெல்லாம் நான் அப்புறம் சொல்றேன் ரொம்ப பெரிய கதை வாங்க சரண்யா அம்மா என்று அழைத்து வீட்டுக்கு சென்றான் மாறன்

வீடு என்று சொன்னால் மிகையாகாது அரண்மனை என்று தான் சொல்ல வேண்டும்...


வீட்டுக்கு உள்ளே நுழைந்த மாறனுக்கு பழைய நினைவுகள் அலைகளாய் வந்து போக கண்கள் கண்ணீர் திவலையால் மறைத்துக் கொண்டது...

சத்தம் வெளிவராமல் அடக்கப்பட்ட குரலில் ""மா. "" என்று கூறியவன் சற்றே தடுமாற

சரண்யா தோலை மெதுவாக பற்றி அழுத்தி என்ன தம்பி அம்மா ஞாபகம் வந்துடுச்சா ஏதும் நினைக்காதீங்க சீதா மா எங்கேயும் போகல இந்த வீட்டிலேயே தெய்வமாக இருக்கிறார்கள்... என்றார்....



வாயா தம்பி....
சாப்பிட என்றதும் தன் நிலைக்கு உணர்ந்தவன் கண்களை அழுந்த துடைத்தபடி மேலே அவன் அறைக்கு சென்றான் ...அவன் அறைக்கு..
அருகில் தான் சீதா மாறன் அன்னை அறையும்
உள்ளது அதை கடக்க துணிவில்லை அவனுக்கு ,ஆனாலும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு அந்த அறையை அடக்க முயல




""மாறா ""...என்ற அன்னையின் குரல் அவன் காதுகளில் ஒலிக்க "மா" என்று அலறியபடி
அந்த அறை முழுவதும் அங்கே இங்கே என்று ஆர்ப்பரிக்க ,தேடினான் அங்கு யாரும் இல்லை
இருக்கப் போவதுமில்லை......😭😭🤰🏼🤰🏼🤰🏼

குழந்தை போல, "மா "நீ வாமா நீ வேணுமா மா.....என அழும் மாறனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது இனி அவர் வரப்போவதில்லை என்று👩🏼‍🍼🤱🏼😭


அங்கே அழுகுரல் கேட்ட சரண்யா ஓடி வந்தார்
அங்கே மண்டியிட்டு அழுது கொண்டிருக்கும் மாறனை பார்த்து கலங்கினார் ......
தம்பி வாப்பா போகலாம்... வாயா..வா...
என்று மெதுவாக அழைத்து மாறனின் அறைக்கு கூட்டிச் சென்றார்
மெதுவாக நடந்து கொண்டே திரும்பிப் பார்க்க அந்த அறை முழுவதும் அவன் அன்னையின் நினைவுகள் ,🤰🏼👩🏼‍🍼பிம்பங்களாக தோன்ற எதுவும் பேசாமல் சென்று விட்டான் மாறன்

சரண்யா அவனது அறையில் சமாதானப்படுத்தி 4 இட்லி சாம்பார் தட்டில் வைத்து கொடுத்தவள் சாப்பிடுப்பா என்று கட்டாயபடுத்தி...சாப்பிடவைத்து..
உறங்க வைத்துவிட்டு வெளியே வந்தார் சரண்யா.....

கீதாவின் வீட்டில் வேலை பார்ப்பவர் சரண்யா இன்று நேற்று இல்லை 20 வருடங்களாக சீதாவிற்கு சகோதரியைப் போன்றவர் மாறனை சிறு குழந்தையிலிருந்து தூக்கி வளர்த்தவர்

சிறு வயதிலேயே கணவனை இழந்த சரண்யாவிற்கு, சீதா தான் தம் வீட்டில் இடம் கொடுத்து, வேலை கொடுத்து சரண்யாவின் ஒற்றை மகளையும் பார்த்துக் கொண்டார் அந்த நன்றி கடனை எப்பொழுது அடைக்கப் போறேன் என்று அடிக்கடி கூறுவார் சரண்யா.....

தன் தாய் விட்டு சென்ற பொறுப்பை இப்பொழுது மாறன் ஏற்றுக்கொண்டு சீதா சென்றதிலிருந்து இப்பொழுது வரை சங்கவியை தன் சொந்த தங்கையாக நினைத்து படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான்.
சங்கவி இறுதி ஆண்டு கல்லூரி சென்னையில் படிக்கிறார்....

அமைதியாக மாறன் துயில் கொள்ள அந்த அமைதியான இரவு வேளையில் அவன் மனமும் எந்தவித பாரமும் இன்றி துயில் கொள்ளட்டும்......🌕





தொடரும்........
அன்புடன் shahiabi.writter ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -2
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.