அத்தியாயம் 2
தன் அம்மாவின் கடுமையான சொற்களை எல்லாம் கேட்டு கண்கலங்கிய ரதி, எழுந்து குளித்துவிட்டு வந்து கிளம்ப மனமின்றி கண்ணாடியின் முன்னே நின்று தன் முகத்தை பார்த்தாள். அவளது கொழு கொழுவென உருண்டையாக இருந்த முகத்தை பார்க்க அவளுக்கே பிடிக்கவில்லை அதனால், “இந்த மூஞ்சிய வர... வர... எனக்கே பாக்க புடிக்க மாட்டேங்குது. இதுல இன்னைக்கு வர்றவன் மட்டும் எனக்கு ஓகே சொல்ல போறானா?" என்று நினைத்து சலித்துக் கொண்டு புடவை கட்டி தயாரானாள்.
சில நிமிடங்களுக்கு பின்..
நன்றாக கருகருவென இருந்த 33 வயது மதிக்கத்தக்க ஒரு வழுக்கை விழுந்த ஆண் தனது குடும்பத்தினருடன் நமது ரதியை பெண் பார்க்க வந்திருந்தான். அவனைப் பார்த்தவுடனே ரதிக்கு கோபம் கோபமாக வந்தது. இருப்பினும் அவர்கள் முன் எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்து தன் அம்மாவை முறைத்து பார்த்த ரதி ஃபார்மாலிட்டிக்காக அவர்களுக்கு டீ, ஸ்னாக்ஸ் எல்லாம் கொடுத்துவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
அவள் கொடுத்துவிட்டு சென்ற அனைத்தையும் அவனும் அவனுடன் வந்தவர்களும் நன்றாக தின்று தீர்த்துவிட்டு, ஏதோ சிதம்பர ரகசியம் பேசுவதைப் போல தங்களுக்குள் குசு..குசு.. என்று பேசிக் கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளையை நேரில் பார்த்த உடனேயே அன்னலட்சுமிக்கு ஏதோ போல் ஆகிவிட்டது. இருப்பினும் தன் மகளுக்கு வேறு திருமணமே நடக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இவன் அரசு வேலையில் இருக்கிறான். அதனால் கொஞ்சம் கருப்பாகவும் சொட்டையாகவும் இருந்தால் என்ன? ரதிக்கு திருமணம் ஆனால் போதும் என்று நினைத்து, “இந்த மாப்பிள்ளையையே எப்படியாவது என் பொண்ணுக்கு நல்லபடியா முடிஞ்சிடனும் சாமி." என்று தங்களது குல தெய்வத்தை நினைத்து வேண்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது மாப்பிள்ளையின் அப்பா வாயில் ஒரு பஜ்ஜியை மென்றபடி, “பொண்ணு ஏதோ கொஞ்சம் பூசின மாதிரி இருக்கும்னு தரகர் சொல்லி தான் எங்களை இங்க கூட்டிட்டு வந்தாரு. ஆனா இங்க வந்து பார்த்தா… பெண்ணு நல்லா கோயில் தெரு கணக்கால இருக்கு...!!!" என்று இழுக்க, “ஆமாங்க கவர்மெண்ட் வேலைல இருக்கிற நம்ம பையனுக்கு என்ன குறைச்சல்? இதைவிட இன்னும் அழகான பொண்ணா அவனுக்குகிடைக்காம போயிடுமா?" என்று தன் பங்கிற்கு மாப்பிள்ளையின் அம்மா சொன்னாள்.
அந்த மாப்பிள்ளையோ உள்ளே சென்ற ரதி மீண்டும் வருவாளா என்று அவளது அறையையே எட்டிப் பார்த்தபடி, “அந்த பொண்ணு நல்லா செக்க செவேர்னு இருக்குல்ல..!!" என்று பட்டிக்காட்டான் பஞ்சுமிட்டாயை பார்த்தது போல தன் வாயை பிளந்து கொண்டு செல்ல, “டேய் வாய மூடுடா." என்று சொல்லி அவனை அதட்டிய அவனது அம்மா அன்னலட்சுமியை பார்த்து, “எங்களுக்கு உங்க பொண்ண புடிக்கலங்க." என்று நேரடியாகவே சொல்லிவிட்டாள்.
அதனால் மனமுடைந்த அன்னலட்சுமி கண்களில் கண்ணீருடன் மாப்பிள்ளையின் அம்மாவை பார்த்து, “அதான் உங்க பையனுக்கு என் பொண்ண புடிச்சிருக்குல்ல அப்புறம் என்னங்க..??" என்று ஆற்றாமையுடன் கேட்க, தன் மகனை பார்த்து முறைத்த அந்த குண்டம்மா, “ஏண்டா உனக்கு அந்த குண்டச்சிய புடிச்சிருக்கா? அவளை கட்டிக்கிட்டு போய் யானைக்கு தீனி போட்டு வளர்க்கிற மாதிரி நம்மளால வளர்க்க முடியுமா?" என்று அதட்டலாக கேட்க, “ஆமாமா... எனக்கு உங்க பொண்ண புடிக்கல. அவ நல்லா குண்டா வெள்ளை பன்னி மாதிரி இருக்கா. அவளை எல்லாம் கூட்டிட்டு போய் வச்சு எங்களால சோறு போட்டு பாத்துக்க முடியாது." என்று தன் அம்மாவின் மீது இருக்கும் பயத்தில் அவசரமான குரலில் சொன்னான் அந்த மாப்பிள்ளை.
அவர்கள் பேசியதைக் கேட்டவுடன் அன்னலட்சுமிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வர, அவர்களது முன்னே சிறிய எவர்சில்வர் தட்டில் இருந்த ஸ்னாக்ஸ் ஐட்டம்களை எல்லாம் தூக்கி எதிரில் இருந்த சுவரில் அடிக்க, அந்த தட்டுகள் பலத்த சத்தத்துடன் தரையில் விழுந்தது. அதனால் கோபப்பட்டு அந்த மாப்பிள்ளையின் வீட்டார்கள் எழுந்து நின்றுவிட, “மரியாதையா என் வீட்டை விட்டு வெளியே போய்டுங்க எல்லாரும். என் வீடு தேடி வந்து என் பொண்ணயே கேலி பேசுறீங்களா? என்னடி சொன்ன? என் பொண்ணுக்கு உங்களால சோறு போட்டு வளர்க்க முடியாதா? அவ தான்டி ராப்பகலா கண்ணு முழிச்சு வேலை செஞ்சு சாமி மாதிரி இருந்து என் குடும்பத்தை காப்பாத்துறா...!! நீங்க என்ன என் பொண்ண வேணாம்னு சொல்றது? நான் சொல்றேன், இப்படி ஒரு ஈத்தர குடும்பத்துல என் பொண்ண என்னால கட்டி கொடுக்க முடியாது." என்று கோபம் கலந்த வருத்தத்துடன் சொன்னாள்.
அதனால் “இந்த குடும்பம் சரியான பஜாரி குடும்பமா இருக்கும் போல. நல்லவேளை முன்னாடியே தெரிஞ்சிருச்சு. வாங்க போலாம்..!!" என்ற மாப்பிள்ளையின் அம்மா தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டாள். தனது அறையில் இருந்தபடி வெளியே நடப்பவை அனைத்தையும் உடைந்த இதயத்துடன் எட்டிப் பார்த்து கண்கலங்கிய ரதி, “இப்ப உங்களுக்கெல்லாம் சந்தோஷமா இருக்கா? நான் தான் எனக்கு கல்யாணம் வேண்டாம்.. நான் இப்படியே இருந்துட்டு போயிடுறேன்னு சொல்றேன்ல..!! ஏன் நான் இந்த வீட்ல இருக்கிறது உங்க யாருக்கும் பிடிக்கலையா? புடிக்கலைன்னா சொல்லிடுங்க. நான் கிளம்பி எங்கேயாவது போயிடுறேன். இனிமே இப்படி எவனயாவது வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்கன்னா, அப்புறம் இந்த வீட்டிலேயே நான் இருக்க மாட்டேன்." என்று துக்கம் தொண்டை அடைக்க சொன்னவள், தனது அறையின் கதவை அடிந்து சாற்றி விட்டு தரையில் அமர்ந்து கதறி அழுதாள்.
அப்போது அனிச்சையாக அவளது கண்கள் எதிரில் உள்ள சுவரில் மாற்றப்பட்டிருந்த கடிகாரத்தை பார்க்க அதில் நேரம் 8:45 என்று காட்டியது. அதை பார்த்தவுடன், “அய்யோ.. ஆஃபீஸ்குள்ள ஒன்பது பதினஞ்சுக்கு எல்லாம் இருக்கணுமே..!! இல்லைனா, அந்த மேனேஜர் சின்ன புள்ளைங்க ஸ்கூலுக்கு லேட்டா வந்தா நிக்க வச்சு திட்டுற மாதிரி கொஸ்டின் கேட்டு திட்டுவானே..!!" என்று நினைத்து நிம்மதியாக அழக்கூட நேரம் இல்லாமல் தன் மீது இருந்த புடவையை கழட்டி எறிந்துவிட்டு அவசர அவசரமாக சுடிதாரை மாட்டிக் கொண்டு கையில் ஹேண்ட் பேக் உடன் வெளியில் வந்தாள்.
வெளியில் அவளைப்போலவே அவளது அம்மா அன்னலட்சுமியும் “வேதனைப்பட்டுட்டு சும்மா ஒக்காந்து இருந்தா வயிறு நிறைந்திடுமா? ஏழைங்க பிழைக்கணும்னா தினமும் அதுக்கு சம்பாதிக்கணும்." என்று நினைத்து வழக்கம்போல தன் வீட்டு வாசலில் இட்லி கடை போடுவதற்காக அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்.
வெளியில் வந்த ரதி தனது பழைய ஸ்கூட்டியின் kickerஜ போட்டு மிதி மிதி என்று மிதித்து அதை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க, அது ஸ்டார்ட் ஆவேனா என்று அடம் பிடித்தது. அதனால் கடுப்பான ரதி “சனியனே ஸ்டார்ட் ஆகி தோல...!!" என்றுவிட்டு வேகமாக கிக்கரை எட்டி ஒரு உதை உதைக்க, அவளது ஸ்கூட்டி சட்டென ஸ்டார்ட் ஆனது. அதனால் அதில் ஏறி அமர்ந்து புறப்பட்டாள் அவள். சாப்பிடாமல் செல்லும் ரதியை சோகமாக பார்த்துவிட்டு உள்ளே சென்ற பாட்டி அன்னலட்சுமியிடம், “அவளை சாப்பிட்டு போக சொல்லி இருக்கலாம்ல்ல?" என்று கேட்க, “நான் கேட்டிருந்தாலும் அவ வீம்புக்கு வேணாம்னு சொல்லிட்டு தான் போயிருப்பா அத்தை. விடுங்க, அவளுக்கு பசிச்சா அவளே ஏதாவது வாங்கி சாப்பிட்டுப்பா. இட்லி சூடா இருக்கு நீங்க வந்து சாப்பிடுங்க" என்றாள் அன்னம்.
“வழுக்க மண்டையன்...!! அவன் ஆளும்.. மூஞ்சியும்..!! அவன் நல்லா கரிசட்டி கலர்ல இருந்துகிட்டு என்ன வேணாம்னு சொல்றானா? அவனுக்கு எல்லாம் கடைசி வரைக்கும் பொண்னே கிடைக்காது. அரவேக்காடு மண்ட...!!! சாகுற வரைக்கும் இப்படியே இருந்து இந்த ரதிக்கு நோ சொல்லிட்டோமே என்று நினைத்து நொந்து நொந்து நீ சாவ டா." என்று தனக்குள் முனகியபடி தன்னால் முடிந்த ஒரு சில சாபங்களை அவனுக்கு வாரி வழங்கிய ரதி, தன் வீட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவளது ஆபீஸ்சுக்கு ஸ்கூட்டியில் வேகமாக சென்று கொண்டு இருந்தாள். அப்போது புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஆள் அரவமற்ற சாலையை அவள் கடக்கும்போது எவனோ ஒருவன் வலியில் ஆ...ஆ..ஆ..!!! என்று சத்தமாக அலறுவது அவளுக்கு கேட்டது. அதனால் சடன் பிரேக் போட்டு தன் ஸ்கூட்டியை அவள் நிறுத்த, க்கிரீட்ச் என்ற சத்தத்துடன் நின்றது அவளது ஸ்கூட்டி. அவள் அந்த இடம் முழுவதும் சுற்றி முற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தாள்.
அந்த சாலையின் இரு புறத்திலும் முற்பூதர்களும் மரங்களும் மட்டுமே இருக்க, அவளால் யாரையும் அங்கே காண முடியவில்லை. அதனால் அவள் மீண்டும் தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய போக, “ப்ளீஸ் ஹெல்ப் மீ..!!" என்று ஒரு இளைஞன் வலி நிறைந்த குரலில் சத்தமாக கத்துவது அவளுக்கு தெளிவாக கேட்டது. அதனால் கிளம்ப மனம் வராமல், “இறங்கி போய் எங்க இருந்து சத்தம் வருதுன்னு பாக்கலாமா?" என்று யோசித்தவள், “வேண்டாம், வழிப்பறி கும்பல் ஏதாவது ஒளிஞ்சிருந்து வந்து கூட்டமா அட்டாக் பண்ணுச்சுன்னா என்ன பண்றது?" என்று நினைத்த ரதி தயங்கினாள். அதனால் மீண்டும் அவள் கிளம்ப முடிவு எடுத்து ஆக்சிலேரேட்டரின் மீது கை வைக்க போக, மீண்டும் அவளுக்கு யாரோ ஒரு இளைஞன் “ப்ளீஸ் யாராவது எனக்கு ஹெல்ப் பண்ணுங்க." என்று மெல்லிய குரலில் உதவி கேட்பது போல இருக்க, அவனது குரல் அவளை முன்னோக்கி செல்ல விடாமல் தடுத்தது.
அதனால் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்த ரதி ஓரமாக தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ஹேண்ட் பேக்கில் அவள் வைத்திருந்த பெப்பர் sprayஜ கையில் எடுத்துக் கொண்டு எங்கிருந்து சத்தம் வருகிறது என்று கவனித்துவிட்டு ஒ
ரு புதருக்கு பின்னே சென்று பார்த்தாள்.
அமேசானில் படிக்க..

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-2
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.