அத்தியாயம் 2: துப்பாக்கி முனையில்
தங்களது பாஸுற்க்கு சொந்தமான பிரைவேட் ஹெலிபோர்டிற்க்கு விரைந்து சென்ற கிளாரா வானத்தில் பறந்து கொண்டிருந்த பிரைவேட் ஜெட் விமானத்தில் பிரிட்டோ சொன்னதைப் போல மயக்கத்தில் கிடந்த அந்த இளம் பெண்ணை ஏற்றிக் கொண்டு, தானும் தனது ஆட்களுடன் ஏறி அமர்ந்தாள்.
வந்தவர்கள் அனைவரும் வானத்தில் வட்டமிட்டு கொண்டிருந்த ஜெட் விமானத்தில் ஏறிய பிறகு, கீழே வரிசையாக அந்த ஆள் அரவமற்ற காட்டுப்பகுதியில் நின்று கொண்டு இருந்த நான்கு சொகுசு கார்களையும் தன்னிடம் இருந்த ரிமோட் கண்ட்ரோல் மூலமாக பாமை ஆக்டிவேட் செய்து வெடித்து சிதற வைத்தாள் கிளாரா.
அதை அவள் செய்வதற்கு முன்பாகவே அவர்களது ஜெட் விமனம் அங்கே இருந்து பறக்க தொடங்கி இருக்க, தூரத்தில் இருந்து அந்த காரில் இருந்து வந்த தீ பிழம்புகள் வானம் வரை சீறிக் கொண்டிருந்ததை பார்த்த கிளாரா அவளால் கடத்தி வரப்பட்டவள் இப்போது இருந்த அறையை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு “இதோட எல்லாம் முடிஞ்சுது.” என்று நினைத்து உள்ளே சென்றாள்.
அந்த ஜெட் விமானம் ஒரு செவன் ஸ்டார் ஹோட்டலை விட, பிரம்மாண்டமாக அத்தனை ஆடம்பரங்களை தனக்குள் அடக்கி வைத்திருந்தது.
அங்கே இருந்த air hostess பெண்மணி ஒருத்தி கிளாராவின் அருகே வந்து “மேம்.. நீங்க சொன்ன மாதிரி அந்த பொண்ணு கிட்ட இருந்த திங்ஸ் எல்லாத்தையும் நாங்க டிஸ்போஸ் பண்ணிட்டோம். அவங்க டிரஸ் தான் கொஞ்சம் நீட்டா இல்லை. அத சேஞ்ச் பண்ணிடவா?” என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.
அவளை திரும்பிப் பார்த்த கிளாரா “ம்ம்.. பண்ணிடுங்க. அவங்களுக்கு மயக்கம் தெளிய எப்படியும் 6, 7 மணி நேரம் ஆகும். அதுக்குள்ள நம்ம லொகேஷனுக்கு ரீச் ஆகிடலாம். நடுவுல அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சு அவங்க ஏதாவது கேட்டாங்கன்னா, நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.
பாஸ் ஓட ஆர்டர் இல்லாம நம்ம எதுவும் பண்ண கூடாது. உங்களுக்கு அது ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்..!!” என்று ஆங்கிலத்தில் சொல்ல,
“எஸ் மேம். நீங்க என்ன சொல்றீங்களோ அதை மட்டும் தான் நான் செய்வேன். பட் அவங்க கண் முழிச்சு, நான் ஏன் இங்க இருக்கேன்னு கேட்டா என்ன சொல்றது? திடீர்னு இப்படி எல்லாம் நடந்தா, அவங்க பயப்பட மாட்டாங்களா?” என்று அக்கறையுடன் கேட்டாள் அந்த பணிப்பெண்.
“அத பத்தி கவலைப்படுறது எல்லாம் உங்க வேலை இல்லை. நான் சொன்னதை மட்டும் செய்யுங்க. நம்ம பாஸ் அவங்கள பார்க்கும்போது அவங்க ரொம்ப அழகா presentableஆ இருக்கணும். நான் ஆல்ரெடி அரேஞ்ச் பண்ணி வச்சிருக்கிற டிரஸ்சை அவங்களுக்கு போட்டுவிட்டு ரெடி பண்ணுங்க. மயக்கம் தெளிஞ்சு அவங்க ஏதாவது கேட்டா, உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லுங்க. புரிஞ்சுதா?” என்று கிளாரா அதட்டி கேட்க, “Yes ma'am, I understand.” என்ற அந்த air hostess அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
8 மணி நேரத்திற்கு பிறகு..
25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருத்தி கடலோரமாக இருந்த பெரிய அரண்மனை போன்ற வெள்ளை நிற வில்லாவில் உள்ள ஒரு கிங் சைஸ் சொகுசு அறையில் உள்ள மிதமான பஞ்சு மெத்தையில் திருமண கோலத்தில் சிகப்பு நிற பட்டுப்புடவை அணிந்து, தலை முதல் கால் வரை தங்க வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு அளவான ஒப்பனையுடன் மயக்கத்தில் கிடந்தாள்.
அந்த கட்டிலுக்கு எதிரில் இருந்த பெரிய சோபாவில் ஒரு குடும்பமே அமர்ந்து அவள் கண் விழிப்பதற்காக காத்திருந்தது.
அப்போது காதில் ear pods அணிந்து கருப்பு நிற கோட் சூட்டில் டிப் டாப்பாக ஹன்ட்சமாக இருந்த ஆறடி ஆண் மகன் ஒருவன் அந்த அறையை நோக்கி யாரிடமோ ஃபோனில் பேசியபடி வந்து கொண்டிருந்தான்.
அவன் அருகில் சென்ற கிளாரா “பாஸ் மேடம் இங்க தான் இருக்காங்க. வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் அவங்களுக்கு மயக்கம் தெளியறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. மத்த அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் ரெடியா இருக்கு.” என்றாள்.
மற்றொரு பகுதியில் இருந்து அவர்களை நோக்கி வந்த பிரிட்டோ “Cheif-ம் ரெடியா இருக்காரு பாஸ். நீங்க அவரை எப்ப கூட்டிட்டு வர சொல்றீங்களோ, நான் கரெக்டா அப்போ கூட்டிட்டு வந்துருவேன்.” என்று சொல்ல, “ம்ம்.. நான் போய் அண்ணிய முதல்ல பார்த்துட்டு வரேன்.” என்று சொன்ன அந்த ஆறடி அம்சமான இளைஞன் நேராக ஒரு அறைக்குள் நுழைந்தான்.
அங்கே மஞ்சத்தில் புதிதாக பூத்த மலர் போல திருமண அலங்காரத்தில் இருந்தவளை கண்டவுடன் அதுவரை இறுக்கமாக இருந்த அவனது முகம் தளர்ந்து லேசான புன்னகையை சிந்த, திடீரென அவனது என்ன ஓட்டங்களில் தோன்றிய கடந்த கால நினைவுகள் அவன் இதயத்தை கசக்கியதால் கண் கலங்கி அவளைப் பார்த்தான் அவன்.
அப்போது பளிச்சென்று பால் நிறத்தில் பார்ப்பதற்கு வெளி நாட்டவளை போல இருந்தாலும், அழகாக சேலை உடுத்தி இருந்த ஒரு இளம் பெண் அவன் அருகில் சென்று அவனது தோள்களை பிடித்துக் கொண்டு “Come on baby.. don't worry. எல்லா ப்ராப்ளமையும் சரி பண்றதுக்காக தானே நாம இவங்கள இங்க வர வச்சுருக்கோம்.. இனி எல்லாம் நார்மல் ஆயிடும்.” என்றாள் ஆறுதலாக.
அங்கே சோபாவில் அமர்ந்திருந்த வயதான தம்பதிகள் தங்களுக்குள் மயக்கத்தில் கிடந்தவளை பார்த்து “உங்களுக்கு இந்த பொண்ணு மேல நம்பிக்கை இருக்கா? இவ அவனுக்கு சரியா இருப்பாளா? நம்ம எடுத்த முடிவு கரெக்டா இருக்கும் தானே!” என்று பேசிக் கொண்டு இருக்க, அதை கவனித்த அமிர்தவல்லி பாட்டி “என் பேரனுக்கு இந்த பொண்ணு தான் சரியா இருப்பா. நீங்க எதை பத்தியும் யோசிச்சு கவலைப்படாம ஆக வேண்டிய வேலையை பாருங்க. எனக்கு என் பேரன் தான் முக்கியம்.” என்றார் உறுதியாக.
அந்த வீட்டில் பாட்டியின் பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேச மாட்டார்கள் என்பதால் அனைவரும் திருமணத்திற்கு தயாராகி எழுந்து நிற்க, அதுவரை தன் அருகில் இருந்த லிண்டாவிடம் சோகமாக பேசிக் கொண்டிருந்த ஆகாஷ் ஒரு வீல்சரை வரவழைத்து மஞ்சத்தில் மயங்கி கிடந்தவளை தூக்கி அதில் அமர வைத்தான்.
அப்போது மயக்க மருந்தின் வீரியம் குறைந்து அவள் தன் கண்களை திறந்து பார்க்க, அவள் முன்னை ஏதோ பங்ஷனுக்கு செல்பவர்களை போல கிராண்டாக ஆடைகள் உடுத்தி அதற்கு ஏற்ப அணிகலன்களை அணிந்து பார்த்தவுடனேயே பணக்காரர்கள் என்று சொல்லிவிடும் அளவிற்கு ஒரு கும்பலாக ஏராளமானவர்கள் நிற்க, ஒரு நொடி பயத்தில் அவளுக்கு பேச்சே வரவில்லை.
அவள் முகத்தில் தெரிந்த கலக்கத்தை பார்த்து அவளுக்காக வருத்தப்பட்ட லிண்டா “தயவு செஞ்சு எங்களையெல்லாம் பார்த்து பயப்படாதீங்க சிஸ்டர். இனிமே உங்க லைஃப் நல்லா இருக்கும். நாங்க எல்லாரும் உங்களுக்கு சப்போர்ட்டிவா உங்க கூடயே இருப்போம்.” என்றாள்.
அவளைப் பார்த்து திருதிருவென விழித்த அந்த பெண் “யாரு டி நீ? ரோட்ல சிவனேன்னு போயிட்டு இருந்த என்னை கடத்திட்டு வந்து என்ன டி பண்ண பாக்கறீங்க?” என்று நினைக்க, அவளுக்கு பயமாகவும் தன் முன்னே இருந்தவர்களின் மீது கோபமாகவும் வர, உடனே எழுந்து நின்று உச்ச ஸ்வதியில் “யார் நீங்க எல்லாம்? நான் எப்படி இங்க வந்தேன்? என்னை எதுக்காக கடத்திட்டு வந்தீங்க?
மரியாதையா என்னை எங்க வீட்ல கொண்டு போய் விட்டுடுங்க. எங்க வீட்ல இருக்குறவங்க எல்லாரும் பயந்து போய் இந்நேரம் என்ன தேடிட்டு இருப்பாங்க.” என்று கத்தினாள்.
தன் மகன்தான் இப்போது எல்லாவற்றையும் விட முக்கியம் என்று நினைத்தாலும், ஒரு பெண்ணாக அவளது நிலையை நினைத்து வருத்தப்பட்ட நடுத்தர வயது பெண்மணியான ஜானகி அவள் அருகில் சென்று “இங்க பாரு மா தேன்மொழி.. இப்போ நாங்க என்ன சொன்னாலும் உனக்கு புரியாது. ஆனா நாங்க யாரும் கெட்டவங்க இல்ல. உனக்கு கெட்டது பண்ணனும்னு நினைக்கல. நீ இப்போதைக்கு அதை மட்டும் புரிஞ்சுகிட்டா போதும்.” என்று பரிவுடன் சொன்னாள்.
தன் மீது இருந்த அவள் கையைத் தட்டி விட்டு தன் ஆள்காட்டி விரலை அந்த பெண்மணியை நோக்கி நீட்டி “எனக்கு நல்லது செய்ய நீங்க யாருங்க? இந்த வீட்ல இத்தனை பொண்ணுங்க இருக்கீங்களே.. ஒரு பொண்ணை கடத்தி கூட்டிட்டு வந்து நீங்க இப்படி பேசுறதெல்லாம் நல்லா இருக்கா?” என்று கேட்ட தேன்மொழி அப்போதுதான் தான் அணிந்திருந்த ஆடையை கவனித்தாள்.
அவள் கை நீட்டி பேசும் போது அவள் கைகளை தூக்க முடியாத அளவிற்கு வெயிட் ஆக இருந்த நான்கு ஐந்து தங்க வளையல்கள் அவள் கைகளில் ஆடிக் கொண்டு இருக்க, குனிந்து தன்னை பார்த்துவிட்டு எதிரில் இருந்த பெரிய டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து பயந்து “இது நிஜமா நான் தானா? நானா இவ்ளோ அழகா இருக்கேன்?
உண்மையாவே இவங்க என்ன கடத்திட்டு வந்துட்டாங்களா? இல்ல சினிமாவில எல்லாம் காட்டுற மாதிரி கூடுவிட்டு கூடு பாயுற மாதிரி ஏதாவது நடந்துருச்சா? இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு ஒன்னும் புரியலையே..!!” என்று நினைத்த தேன்மொழிக்கு தன் தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.
அப்போது பாட்டி “அம்மாடி தேன்மொழி கல்யாணத்துக்கு நேரம் ஆகுது. நீ வா மா... நம்ம மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்..!!” என்று சொல்ல, இருந்த கோபத்திலும், பதட்டத்திலும், பயத்திலும், என்ன செய்வது என்று தெரியாமல் தனது இரு காதுகளையும் பொத்திக் கொண்டு “ஆஆஆ... என்னை விட்ருங்க. நான் இப்பவே என் வீட்டுக்கு போகணும்..!!” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்தினாள் தேன்மொழி.
அதனால் ஜானகி அவளை சமாதான படுத்தும் நோக்கில் அவள் அருகில் செல்ல “எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் ரெடியா இருக்கு. இனிமே இவங்க கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க முடியாது. நீங்க இவங்கள என் கிட்ட விட்ருங்க மாம். நான் பாத்துக்குறேன்.” என்ற ஆகாஷ் தேன்மொழியின் தோள்களில் தன் கையை வைத்து அழுத்தி அவளை இழுத்துக் கொண்டு வந்து அங்கே இருந்த வில் சாரில் அமர வைத்து அவளது பயந்த முகத்தை பார்த்து சிவந்த கண்களுடன் “எந்திரிச்சிங்கனா, யோசிக்காம போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்.” என்று தனது கோட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவள் ஏற்றி பொட்டில் வைத்தான்.
- மீண்டும் வருவாள்..
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-2
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.