Chapter 2

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
“நீங்க செஞ்ச இந்த உதவியை என் வாழ்நாள் முழுக்க நான் மறக்கவே மாட்டேன் தம்பி, உங்களுக்கு எந்த உதவி வேணும்னாலும் என்கிட்ட தயங்காம கேளுங்க நான் கண்டிப்பா செய்யறேன்” என்று சந்திரசேகர் கூறவும், “எனக்கு ஒரு கோரிக்கை இருக்கு சார் நீங்க செய்வீங்களா” என்று விக்ரம் கேட்டான்.

“என் தங்கச்சி என் கிட்ட தான் கடைசியா பேசினா சார்… ஆக்சிடென்ட் ஆனதுக்கு அப்புறம் அவளுக்கு இருந்த அந்த கொஞ்சம் உசுர வெச்சு தான் என்கிட்ட பேசினா நான் ஃபோன் பண்ணப்போ… அப்ப அவ சொன்னது ஒன்னு தான், “நான் இருப்பேனான்னு எனக்கு தெரியல… அந்த நம்பிக்கை எனக்கு இல்ல…. ஆனா, என் கூட இருக்கிற அவங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டதுன்னா என்னுடைய உறுப்பு எடுத்து குடுத்துடுங்கன்னு” சொன்னா… அந்த ஒரு காரணத்துனால தான் சார்…. அவளோட கடைசி ஆசை அது….. அதுக்காக மட்டுமே தான் நான் ஒத்துக்கிட்டேன்…. இல்லன்னா, ஒரு கொலைகாரிக்கு நான் ஏன் சார் இதெல்லாம் பண்ணனும்” என்று விக்ரம் ஆவேசத்துடன் கேட்க, சந்திரசேகரும் பிரகாஷும் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தனர்.

“உங்க கோபம் ரொம்ப நியாயமானது தம்பி… நீங்க எவ்ளோ கேள்வி கேட்டாலும் அதை நான் வாய மூடிட்டு கேக்குற இடத்துல தான் தம்பி நான் இருக்கேன்” என்று சந்திரசேகர் குற்ற உணர்ச்சியுடன் நின்று கொண்டிருக்க, “விக்ரம் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதப்பா…. நிறைய குழப்பங்கள் இருக்குன்னு நினைக்கிறேன் இது எல்லாத்தையும் நான் விசாரிக்க சொல்லி இருக்கேன் அந்த விசாரணை நடந்ததும் உனக்கு தெரியவரும் உண்மை எதுன்னு” என்று பிரகாஷ் கூறினார்.

“இப்ப எங்க கூட எங்க அபர்ணா இல்ல சார் இதுக்கு அப்புறம் உண்மை தெரிஞ்சா என்ன தெரியலன்னா என்ன சார்” என்று விக்ரம் விரக்தியுடன் கேட்க, “உன் நிலைமை புரியாம இல்ல விக்ரம் எங்கள மன்னிச்சிரு… உண்மை தெரிஞ்சா மனசு கொஞ்சம் ஆறுதல் படும்னு தான் சொன்னேன்” என்று பிரகாஷும் கையெடுத்து கும்பிட, “இதெல்லாம் எனக்கு வேணாம் சார் எங்களோட கிராமம் ரொம்ப நிம்மதியாவும் சந்தோஷமாகவும் இருந்துது இப்ப அங்க சந்தோஷமே இல்ல… ஏன்னா எங்க சந்தோஷத்தோட பின்னணியே எங்க அப்பு தான்…. இப்ப அப்பு இல்ல ரொம்ப கலை இழுந்து போய் இருக்கு எங்க கிராமமும் சரி நாங்களும் சரி…. எங்களை சுத்தி இருக்கிற எல்லாவுமே அப்படி தான் இருக்கு…. அதனால எங்களுக்கு எங்க அப்பு இருக்க வேண்டிய இடத்துல ஒரு ஆள் கண்டிப்பா தேவை” என்று விக்ரம் கூறினான்.

“நான் வேணும்னா ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்றேன்….. அதே மாறி அங்க படிப்பு சொல்லிக் குடுக்குறதுக்கு டீச்சர் எல்லாமே நான் ஏற்பாடு பண்ணி தரேன் தம்பி” என்று சந்திரசேகர் கூற, “எதுக்கு சார் இன்னொரு ஆளு உங்க பொண்ணு இருக்காங்கல்ல அவங்க வந்து எங்களுக்கு செய்ய வேண்டியத செய்யட்டும் சார்… அவங்கள எங்க அப்பு இருக்கிற இடத்துல எல்லாம் வெச்சுக்க முடியுமான்னு எங்களுக்கு தெரியல…. ஆனா, நல்லாவே பார்த்துப்போம் சார் நாங்க… உங்க பொண்ணு மாறி கொன்னுட மாட்டோம் ஆளுங்கள” என்று விக்ரம் கோபத்தில் பேச, “விக்ரம்!!….” என்று பிரகாஷ் கத்த சந்திரசேகர் பிரகாஷின் கையை பிடித்து கொண்டு கண் ஜாடையில் மறுப்பாக தலையை அசைத்தார். இதற்கு மேல் என்ன பேசுவது என்று அறியாமல் பிரகாஷும் சந்திரசேகரும் அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.

“நீங்க தானே சார் என்ன உதவினாலும் செய்றேன்னு சொன்னீங்க… நாங்க இப்போ எங்க வீட்டு பொண்ண இழந்துட்டு நிற்கிறோம்…. அதை யாராலும் ஈடு கட்டவே முடியாத ஒரு இழப்பு தான் அது உங்களுக்கு தெரியாம ஒன்னும் இல்ல…. ஒரு வேளை உங்க பொண்ணு போயிருந்தா கூட அந்த இடத்தில் வேற யாரையாவது நிப்பாட்டி விட முடியுமா…. முடியாதில்ல…. ஆனா, ஓரளவுக்காவது அந்த இடத்தை நிரப்புரதுக்கு எங்களுக்கு ஆள் தேவைப்படுது…. எங்க கிராமம் எதுவுமே இல்லாம ரொம்ப செயலிழந்து நிக்குற மாறி இருக்கு…. அதுக்காகவாது எனக்கு வேணும்….. அதுவும் எனக்கு உங்க பொண்ணு தான் வந்து எங்களுக்கு செய்யணும்” என்று விக்ரம் கூறினான்.

பிரகாஷும் சந்திரசேகரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு, “நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத பா நீங்க அங்கேயே வளர்ந்ததுனால உங்களுக்கு எல்லாம் பழகிருக்கும்…. அவ்வளவு ஏன் எனக்கும் கூட உங்க ஊர்ல டியூட்டி போட்டப்போ கொஞ்சம் நாள் ஆச்சு செட் ஆக… ஆனா சனா அப்படி இல்ல சின்ன வயசுல இருந்தே அவ…” என்று பிரகாஷ் பேச ஆரம்பிக்கவும், “அதெல்லாம் எனக்கு தெரியாது சார் நாங்க எங்களோட பெருந்தன்மையை காட்டிட்டோம்…. நீங்களும் காட்டணும்னு நினைச்சீங்கன்னா எங்கள எப்படி காண்டாக்ட் பண்ணனும்னு உங்களுக்கு தெரியும்…. நீங்க அப்படி கூப்பிடுங்க நாங்களே வந்து உங்க பொண்ண கூட்டிட்டு போறோம்… எங்களுக்கும் தெரியும் அவங்களுக்கு ஆப்ரேஷன் நடந்து இருபது நாள் தான் ஆகுதுன்னு எங்களுக்கும் தெரியும்…. எல்லாமே முடிச்சுட்டு மூணு மாசம் கழிச்சு அனுப்புங்க நாங்க ரொம்ப பத்திரமா பார்த்துக்குறோம்” என்று விக்ரம் திமிருடன் கூறி சென்றான்.

“என்ன பிரகாஷ் இப்படி கேட்குறான் இந்த பையன்… என்ன பண்றது… நான் இதை சனா கிட்ட எப்படி சொல்லுவேன்… அதை விட லக்ஷ்மி கிட்ட இத எப்படி நான் சொல்லுவேன்” என்று சந்திரசேகர் குழப்பத்தில் இருக்க, “கொஞ்சம் பொறுமையா யோசி டா நம்ம பொண்ணு உயிரோட திரும்பி வந்ததே பெருசுடா… அப்படி இருக்கும் போது அங்க வாலன்டியரா அனுப்பனும்னா ஆறு மாசம் தான் காண்ட்ராக்ட்…. அதுக்கப்புறம் அங்க வேலை பண்றது அவங்க அவங்களுடைய விருப்பத்த பொருத்துது சோ, ஆறு மாசம் அனுப்பிவிட்டு அதுக்கு அப்புறமா நம்ம அந்த காண்ட்ராக்ட் முடிஞ்சிடுச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வந்துடலாம்…. ஏன்னா இப்போதைக்கு இதை இப்படித் தான் கட்டுப்படுத்த முடியும்னு நினைக்கிறேன்… ஏன்னா இப்ப இருக்குற எவிடென்ஸ் எல்லாம் வெச்சு பார்க்கும் போது தப்பு நம்ம பக்கம் தான் இருக்கு” என்று பிரகாஷ் கூறவும் சந்திரசேகர் யோசனையில் இருந்தார்.

“எனக்கு என்ன பண்றதுனே தெரியல…. எப்படி இந்த ஆக்சிடென்ட் நடந்தது ஒண்ணுமே புரியல… அதுவும் அந்த பொண்ணு அபர்ணாவும் சனாவும் எப்படி எங்க மீட் பண்ணாங்கனு எதுவுமே தெரியாம குழப்பத்திலேயே இருக்கு எனக்கு… சனாவே இப்ப தான் கண்ணு முழிச்சு இருக்கா… அவளுக்கு எதுவும் ஞாபகம் வேற இல்ல…” என்று சந்திரசேகர் கூற, “இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், நான் எல்லாம் விசாரிக்க சொல்லி இருக்கேன்…. என்ன கொஞ்சம் லேட்டா தான் வரும்… அது நம்ம பதவியில இருக்கும் போது எல்லாம் சீக்கிரமா செய்ய சொல்லி கொஞ்சம் பிரஷர் குடுக்கலாம்.. ரிட்டயர்டு ஆயிட்டேன்றதுனால கொஞ்சம் லேட் ஆகும் தான்…. ஆனா, எல்லாம் உண்மையும் நம்ம வாங்கிடலாம் நீ கவலைப்படாத…. அப்புறம் கார் என்ன ஆச்சு??” என்று பிரகாஷ் கேட்டார்.

“கார் சுத்தமா போச்சு டா… அதுல உள்ள இருக்குற திங்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு ஸ்கிராப் பண்ண சொல்லிட்டேன் டா…” என்று சந்திரசேகர் கூற, “நல்லது பண்ண இல்லன்னா நமக்கு தான் அப்புறம் பிரச்சனையாகும்… என்ன தான் ஆக்ஸிடென்ட் ஆனாலும் அபர்ணாவோட குடும்பம் பிரச்சனை பண்ணா அவங்களுக்கு கார் கூட எவிடென்ஸ் தான்” என்று பிரகாஷ் கூறினார்.

“என்னமோ டா… நான் கார் கன்டிஷன் பார்த்து தான் ஸ்கிராப் பண்ண ஒத்துக்கிட்டேன்… மத்தபடி எதுவும் யோசிக்கல டா… அப்புறம் சனா குடிக்க மாட்டா… ஆனா, அன்னிக்கு டாக்டர் வந்து அவங்க குடிச்சிருக்காங்கன்னு சொன்னதும் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல… அதனாலயே ஆப்ரேஷன் எல்லாம் டிலே ஆயிடுச்சு…. அவளும் கோமா ஸ்டேஜ் போயிட்டா” என்று சந்திரசேகர் கூற, “எனக்கும் அது தான் புரியல அவ படிச்சதெல்லாம் ஃபுட் பத்தி தான் படிச்சா…. உன்னையும் திட்டுவா என்னையும் திட்டுவா நம்ம சரக்கு அடிச்சாலே அப்படி இருக்கும் போது அவ குடிச்சி இருப்பான்னு நம்பவே முடியலை… எங்க தான் போனா அவ கடைசியா?” என்று பிரகாஷ் கேட்டார்.

“அவ ரிசர்ச்காக போகும் போது ஃபிரண்ட் ஆன ஒரு பொண்ணுக்கு நிச்சயம் ஆச்சு அதுக்கு யாரையும் கூப்பிடலன்னு ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்காங்கனு சொல்லிட்டு போனா டா அது மட்டும் தான் எனக்கு தெரியும்” என்று சந்திரசேகர் கூற, “ம்ம்… சரி…. அவளோட ஃபிரண்ட்ஸ்னு ரெண்டு பேர் சுத்திட்டு இருப்பாங்கல அவங்க ரெண்டு பேரும் எங்க?” என்று பிரகாஷ் கேட்க, “அவங்க ஹாஸ்பிடல்ல ஒரு ரெண்டு வாட்டி வந்து பார்த்தாங்க… அவங்களும் வேலைக்கு போறாங்கல அதனால தான் அடிக்கடி வர முடியல” என்று சந்திரசேகர் கூற, “சரி ஓகே… சரி நான் எல்லாமே விசாரிக்க சொல்றேன் நீ ரொம்ப மனச போட்டு குழப்பிக்காத…. பொறுமையா சனாவுக்கு எடுத்து சொல்லு அவ இத புரிஞ்சுப்பா…. ஆனா, அவ தான் ஆக்சிடென்ட் பண்ணிட்டா அதுவும் ஒரு ஆளு இறந்துட்டாங்க என்றதெல்லாம் மறச்சிடலாம் கொஞ்ச நாளைக்கு… ஏன்னா இப்போதைக்கு அவளுக்கு எதுவும் ஞாபகம் கூட இல்ல” என்று பிரகாஷ் கூறினார்.

“ஆமா!!! இந்த ஆக்சிடென்ட்னால ஒரு ஷாக்ல கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்தது எதுவும் ஞாபகம் இல்லன்னு டாக்டர் சொன்னாரு…. ஆனா, அவள கேட்டா நார்மலா தான் இருக்கேன்னு சொல்றா…. கடைசியா அவ ஊட்டில ஒரு ஸ்கூல்ல போய் அங்க ஃபுட் இன்ஸ்பெக்ஷன் அண்ட் ரீசர்ச் போயிட்டு வந்தா… அது தான் ஞாபகம் இருக்கு சோ, அங்க போயிட்டு வந்து தான் ஆக்சிடென்ட் ஆச்சு எனக்கு அப்படின்னு உறுதியா நினைச்சுட்டு இருக்கா… நாங்களும் ஆமான்னு தான் சொல்லி வெச்சிருக்கோம் இப்போதைக்கு” என்று சந்திரசேகர் கூறவும் “சரி அப்படியே இருக்கட்டும்… இப்போதைக்கு எதுவும் சொல்ல வேணாம் அதெல்லாம் சரியாக்கிட்டு வருவா பார்த்துக்கலாம்… ஒரு ரெண்டு மாசம் கழிச்சு பொறுமையா சொல்லு சனா கிட்ட…. இந்த மாதிரி அங்க வாலன்டியரா போகணும்னு” என்று பிரகாஷ் கூறவும் சரி என்றார் சந்திரசேகர்.

“சரி எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் அந்த தம்பி கிட்ட கேளு… ஊட்டில நம்ம ஹோட்டல் இருக்குல்ல அங்க தங்குறதுக்கு மட்டும் அனுமதி கேட்டு குடுடா…. அவளுக்கு ஏற்கனவே ஹார்ட் ப்ராப்ளம் இருந்து இப்போ ஆக்ஸிடென்ட் வேற அதனால ஆப்ரேஷன் எல்லாம் ஆகி இருக்குற பொண்ணு அங்க எப்படி எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் ஆக முடியும்…. சாப்பாடு கூட அவ பார்த்துக்குவா அது எனக்கு பிரச்சனை இல்ல… என்ன இருந்தாலும் சாப்பிட்டுக்குவா… ஆனா, அவ தங்குறத நினைச்சா தான் எனக்கு கொஞ்சம் கவலையா இருக்கு” என்று சந்திரசேகர் கூற, “ம்ம்…. சரி ரெண்டு மாசம் ஆகட்டும் அதுக்குள்ள நான் இதெல்லாம் பேசி வெக்குறேன் விக்ரம் கிட்ட” என்று பிரகாஷ் கூறவும், “சரி டா, நான் போய் என்னோட பிசினஸ் வேலையும் இனிமே தான் பார்க்கனும், வரேன் டா” என்று புறப்பட்டார் சந்திரசேகர்.


“என்ன மச்சான் மீட்டிங்லாம் முடிஞ்சுதா??” என்று அபிலாஷ் கேட்க, “ம்ம்!!” என்று தலை அசைத்தான் விக்ரம். “என்ன விக்கி ஒரு மாதிரி இருக்க?” என்று அபிலாஷ் கேட்க, ஒன்னும் இல்ல என்பதை போல் தலையை அசைத்து, “நம்ம கிராமத்துக்கு ஒரு வாலன்டியர் கேட்டு வந்து இருக்கேன்” என்று விக்ரம் கூற, “அப்படியா!!! யாரு எப்போ வராங்க?” என்று அபிலாஷ் கேட்டான்.

“அதான் நம்ம அப்பு ஆர்கன்ஸ் டொனேட் பண்ணோம்ல அந்த பொண்ணு தான்” என்று விக்ரம் கூற, “அறிவில்லையா உனக்கு… யாரை கூட்டிட்டு வரணும்னு தெரியாதா….. அவளை போய் நம்ம ஊருக்கு கூட்டிட்டு வரேன்னு சொல்லுற… அதுவும் நம்ம அப்பு இருந்த இடத்துக்கு ஏன் வர வெக்குற… அவ எல்லாம் ஒரு ஆளா….. குடிச்சிட்டு வண்டி ஓட்டி…. அப்பு” என்று அபிலாஷ் பேசவும் அவனுடைய வார்த்தைகள் அதற்கு மேல் வரவில்லை.

“அதெல்லாம் எனக்கு தெரியாது… இப்ப நம்ம சோகத்துக்கு காரணமான அவளை கண்டிப்பா நம்ம இடத்துக்கு கூட்டிட்டு வந்து ஏதாவது பண்ணனும்” என்று விக்ரம் கோபத்துடன் கூறினான்.

“ஓஓஓ!!! அப்படி சொல்றியா…. நீ சொல்லிட்டல மச்சான் விடு சிறப்பா செஞ்சிடலாம்…. அந்த பொண்ணு எப்போ வரான்னு மட்டும் சொல்லு… அவ பேஷண்ட் வேற, மருந்து மாத்திரை எல்லாம் மாத்தி வெச்சு கூட முடிச்சிடலாம்” என்று அபிலாஷ் கூற, “ஏன் டா…. என்ன பேசுற நீ??” என்று விக்ரம் கேட்க, “நீதானடா சொன்ன ஏதாவது பண்ணனும்னு” என்று குழப்பத்துடன் அபிலாஷ் கேட்டான்.

“ஏதாவது பண்ணனும்னா… அவளுக்கு நம்முடைய வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கும் என்ன ஏதுன்னு தெரியணும்…. ஒரு ஆள கொன்னுட்டோம்ன்ற கிள்ட் கூட இல்லாம அவங்க எல்லாம் எப்படித் தான் உயிர் வாழ்றாங்களோன்னு எனக்கு தெரியல” என்று விக்ரம் கூறவும், “அப்படி சொன்னியா…. வரட்டும் மச்சான் சிறப்பா வெச்சு செஞ்சிடலாம்” என்று அபிலாஷ் கூறவும், ம்ம்…. சரி என்று அமோதித்தான் விக்ரம்.

“ஆமா நீ மருந்து வாங்க தான போன என்ன இவ்ளோ சகதியோட வந்து இருக்க?” என்று விக்ரம் கேட்க, “அது ஒன்னும் இல்ல மச்சான் அங்க தடுக்கி விழுந்துட்டேன்டா… தண்ணி லாரி வேற போயிருந்திச்சு அதான் சகதியா இருந்தது… கால் தடுக்கி விழுந்திட்டேன் அதனால இப்படி அழுக்காயிட்டு என்னோட ஷர்ட் பேன்ட் எல்லாம்” என்று அபிலாஷ் கூறவும், ம்ம்…. என்று இருவரும் பேசிக் கொண்டே அவர்களின் கிராமத்திற்கு சென்றனர்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 2
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.