CHAPTER-19

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
அவ‌ள் முக‌ம் நெருங்கி அவ‌ள் விழிக‌ளுள் த‌ன் விழியை உட் செலுத்தி, "உன் உண்மையான‌ அப்பா அம்மாவ‌ கொன்ன‌தும் நாந்தா." என்றான் ருத‌ன்.

அதில் இவ‌ள் இத‌ய‌மே நின்று உறைய‌, ந‌க்க‌லாய் இத‌ழ் வ‌ளைத்த‌வ‌ன், "ப‌ட் அந்த‌ போலிங்க‌ள‌க்கூட‌ நா போனா போகுதுன்னு விட்டிருப்பேன். எங்க தெரியுமா?" என்று அவ‌ன் கேட்க‌, அவ‌ளோ விழிக‌ளில் நீரையும் கேள்வியையும் ஒன்றாய் ஏந்தி அவ‌ன் விழி பார்க்க‌, "உன்ன‌ போன்னு சொல்லும்போது ட‌க்குன்னு என்ன‌ க‌ட்டி புடிச்சியே அப்போ." என்றான்.

அதில் ச‌ட்டென்று இவ‌ள் இத‌ய‌ம் நின்று துடிக்க‌, த‌ன் விழி க‌ருக்க‌ளை மாற்றி மாற்றி அவ‌ன் இரு விழிக‌ளோடு க‌ல‌க்க‌விட்டு வின‌வ‌, அவ்விழிக‌ளோடு அத்த‌னை கூலாய் த‌ன் விழிக‌ளை க‌ல‌ந்து, "அப்ப‌ ம‌ட்டும் நீ என்கூட‌வே வ‌ர்ற‌ன்னு சொல்லிருந்தா, இந்நேர‌ம் அவ‌ங்க‌ உயிரோட‌ இருந்திருப்பாங்க‌." என்றான்.

அதில் ச‌ட்டென்று உறைந்த‌ அவ‌ளின் க‌ருத்த‌ விழிக்க‌ரு முழுதாய் நீருக்குள் மூழ்க‌, வேத‌னையோடு கீழ் இமை நுனியில் வ‌ந்து நின்ற‌து ஒரு துளி. அதை த‌ன் க‌ட்டை விர‌ல் நுனியில் உர‌சி எடுத்து சுண்டிவிட்ட‌வ‌ன், "உன்ன‌ ஏமாத்துற‌வ‌ங்க,‌ துரோக‌ம் ப‌ண்ற‌வ‌ங்க‌ல்லா என் லிஸ்ட்டுலையே கெடையாது. என‌க்கு தேவையான‌தெல்லா.." என்ற‌ப‌டி அந்த‌ ஒற்றை விர‌லை அவ‌ள் இத‌ய‌த்தில் வைத்து அழுத்தி, "இங்க‌ நா ம‌ட்டுந்தா இருக்க‌ணும் அவ்ளோதா." என்றான் அத்த‌னை அழுத்த‌மாக‌.

அதில் வ‌லியோடு அவ‌ள் விழிக‌ள் மீண்டும் நீரில் மூழ்க‌, "மீறி எவ‌னாவ‌து இதுக்குள்ள‌ நொழ‌ஞ்சான்.." என்று ப‌ல்லை க‌டித்து அழுத்த‌ம் கொடுத்த‌வ‌ன், "அது எவ‌னா இருந்தாலும் விட‌மாட்டேன்." என்றான் அத்த‌னை அழுத்த‌மாக‌.

அவ‌ன் க‌ண்ணில் தெரிந்த‌ வெறி, இவ‌ள் வ‌லியை அதிக‌ரிக்க‌, அவ‌ள் க‌ண்ணீர் வ‌ழிந்து க‌ன்ன‌ம் தொட்ட‌ நொடி, அந்த‌ க‌ன்ன‌த்தை மெல்ல‌மாய் த‌ட்டிய‌ப‌டி, "உன் புருஷ‌ன் ந‌ல்ல‌வ‌ன்னு ம‌ட்டும் க‌ற்ப‌ன‌ ப‌ண்ணிராத‌." என்றான்.

அதில் க‌ண்ணீர் பெருகி அவ‌ள் உள்ம‌ன‌ம் குமுற‌ ஆர‌ம்பிக்க‌, "நா எவ‌னுக்கும் ந‌ல்ல‌வ‌ன் இல்ல‌. உன‌க்கும் சேத்து." என்று அழுத்தி கூறிவிட்டு எழுந்து சென்றான்.

அவ‌ன் வில‌கிய‌ நொடியே அவ‌ள் க‌ண்ணீர் பொழ‌பொழ‌வென்று வெளியில் வ‌ந்திருக்க‌, அப்படியே தன் கால்களை மடக்கி கட்டிக்கொண்டு க‌த‌றி அழ‌ ஆர‌ம்பித்தாள். இப்போதுதான் அவ‌ன் செய்யும் அர‌க்க‌த்த‌ன‌த்திற்கு பின்னாலும் ஒரு நியாய‌ம் இருக்குமென்று மெல்ல‌ மெல்ல‌ த‌ன் ம‌ன‌தை ச‌மாதான‌ம் செய்ய‌ ஆர‌ம்பித்திருந்தாள். ஆனால் அத‌ற்குள் அதை மிதித்து உடைத்துவிட்டு செல்வ‌னை பார்த்து அழ‌ ம‌ட்டுமே முடிந்த‌து அவ‌ளால்.

"அப்ப‌ ம‌ட்டும் நீ என்கூட‌வே வ‌ர்ற‌ன்னு சொல்லிருந்தா, இந்நேர‌ம் அவ‌ங்க‌ உயிரோட‌ இருந்திருப்பாங்க‌." என்ற‌ அவ‌னின் வார்த்தைக‌ள் அவ‌ள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க‌, த‌ன்னால்தான் அந்த‌ இரு உயிர்க‌ளும் போன‌து என்று எண்ணும்போது இத‌ய‌ம் எரிந்த‌து. பொய்யாக‌வே இருந்தாலும் அவ‌ர்க‌ளைதானே அப்பா அம்மா என்று இத‌ய‌த்தில் சும‌ந்தாள். அவ‌ர்க‌ளின் பாச‌ம் பொய்யானாலும், த‌ன் பாச‌ம் உண்மையாயிற்றே. அதுவே இப்போது அவ‌ர்க‌ளின் உயிரையே குடித்திருக்க‌, அன்பு வைத்த‌ அவ‌ள் ம‌ன‌ம் வேத‌னையில் க‌த‌றிய‌து.

இங்கே காலி பாத்திர‌ங்க‌ளோடு கிச்ச‌னுக்குள் நுழைந்த‌வ‌ன், அதை சிங்க்கில் போட்டு அவ‌னே சுத்த‌மாய் க‌ழுவி வைத்துவிட்டு, அப்ப‌டியே திரும்பி த‌ன‌க்காக‌ எடுத்து வைத்திருந்த‌ பால் க்ளாஸை கையில் எடுத்தான்.

அவ‌னும் காலையிலிருந்தே ஒன்றும் சாப்பிடாம‌ல்தான் இருக்கிறான். தீவில் க‌டைசியாய் வெறும் வ‌யிற்றோடு குடித்த‌தும் இதைதான், இப்போதும் வெறும் வ‌யிற்றை நிர‌ப்ப‌ எடுத்த‌தும் இதைதான். இவ‌ன் சரியாக‌ சாப்பிடுகிறானா என்று பார்க்க‌வும் யாருமில்லை, சாப்பிட்டாயா என்று கேட்க‌வும் யாருமில்லை. அந்த‌ தைரிய‌த்தில் மாத்திரை எடுக்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ ம‌ட்டும்தான் இதைக்கூட‌ குடிக்கிறான் போல‌. அந்த‌ மாத்திரைக‌ளும் அவ‌ன் முன்தான் த‌யாராக‌ இருக்க‌, அதை பார்த்த‌ப‌டியே கையிலிருந்த‌ பாலை வேக‌மாய் குடிக்க‌ போகும் நேர‌ம் ச‌ட்டென்று அதை பிடித்து த‌டுத்த‌து ஒரு க‌ர‌ம்.

அதில் புருவ‌த்தை குறுக்கிய‌வ‌ன் நிமிர்ந்து பார்க்க‌, ப‌டுக்கென்று க்ளாஸை பிடுங்கினாள் அமீரா.

அதில் அவ‌ன் முக‌ம் இறுக, "உன்ன‌ யாரு ரூம‌ விட்டு வெளிய‌ வ‌ர‌ சொன்னா?" என்று கோப‌மாய் கேட்டான். அதில் க்ளாஸை ஓர‌மாய் வைத்துவிட்டு அவ‌னை கெஞ்ச‌லாய் பார்த்த‌வ‌ள், "இதையே குடிச்சுட்டிருந்தா போதுமா? ஒடும்புல‌ எப்பிடி ஒட்டும்?" என்று சிறு த‌விப்பாய் கேட்டாள்.

அதில் அல‌ட்சிய‌மாய் விழியை உருட்டிய‌வ‌ன், "அதெல்லா நா பாத்துக்குறேன், நீ ரூமுக்கு போ." என்ற‌ப‌டி மீண்டும் க்ளாஸை எடுக்க‌ போக‌, அவ‌ன் க‌ர‌த்தை பிடித்து த‌டுத்தாள்.

அதில் அவ‌ன் க‌டுப்பாய் நிமிர்ந்து அவ‌ளை பார்க்க‌, "இது வ‌ரைக்கும் நீங்க‌ சாப்புட்டு நா பாக்க‌வே இல்ல‌. ப்ளீஸ் இப்ப‌வாவ‌து சாப்பிடுங்க‌." என்று கெஞ்ச‌லாய் கூற‌, அவ‌னோ குழ‌ப்ப‌மாய் அவ‌ள் விழிக‌ளை பார்த்தான்.

அதில் இவ‌ளும் அவ‌ன் க‌ர‌த்தைவிட்டு திரும்பி என்ன‌ இருக்கிற‌தென்று பாத்திரங்களை திற‌ந்து பார்க்க‌, ச‌ப்பாத்தியும் குருமாவும் இருந்த‌து. இதைதான் யோகி இவ‌ளிட‌ம் உண்ணும்ப‌டி கெஞ்சிக்கொண்டிருந்தான். இவ‌ள் ம‌றுத்திருக்க‌, ருத‌ன் வ‌ந்த‌தும் கும‌ட்டுகிற‌தா என்று கேட்டு மீண்டும் ஜீர‌க‌ சூப்பையே செய்து ஊட்டியிருந்தான்.

அத‌னால் உண‌வு அப்ப‌டியே இருக்க‌, வேக‌ வேக‌மாய் அவ‌ற்றை த‌ட்டில் எடுத்து வைத்த‌வ‌ள், திரும்பி அவ‌னிடம் நீட்டினாள். அவ‌னோ கடுப்பாய் அதை வில‌க்கிவிட்டு, "என‌க்கு இதெல்லா தேவ‌ல்ல‌." என்ற‌ப‌டி மீண்டும் அந்த‌ பால் க்ளாஸையே எடுக்க‌ போக‌, வேக‌மாய் அதை ம‌றைத்து நின்றாள். அதில் அவ‌ன் பொறுமையை இழுத்து பிடித்து அவ‌ளை முறைக்க‌, "ப்ளீஸ்" என்று கெஞ்ச‌லாக‌ அந்த உண‌வையே அவன் முன் நீட்டினாள்.

அதில் அவ‌ளின் குண்டு விழிக‌ள் சுருங்கி விரிந்து கெஞ்சும் அழ‌கில் இவ‌ன் இறுக்க‌ம் மெல்ல‌ த‌ள‌ர்ந்து இத‌ழ்க‌ள் வ‌ளைய‌, அப்ப‌டியே பார்வையை அந்த‌ உண‌வில் ப‌தித்துவிட்டு அவ‌ள் விழியில் ப‌தித்த‌வ‌ன், "இப்ப‌ என்ன‌? இத‌ சாப்புட்டு நா சுருண்டு விழுந்த‌தும், திரும்பி த‌ப்பிச்சு ஓட‌லான்னு ஐடியா ப‌ண்றியா?" என்று கேட்டான்.

அதில் திடுக்கிட்டு விழித்த‌வ‌ளின் குண்டு விழிக‌ள் மெதுவாய் க‌ல‌ங்க‌, இன்னுமா நான் ஓடிவிடுவேன் என்ற‌ நினைப்பில் இருக்கிறாய் என்ற‌ கேள்வியோடு அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, அவ‌னோ அல‌ட்சிய‌ புன்ன‌கை சிந்திய‌ப‌டி அவ‌ளை ந‌க‌ர்த்திவிட்டு அந்த‌ க்ளாஸை எடுக்க‌ போக‌, "நா எங்க‌ போவேன்?" என்று க‌ம‌றிய‌ குர‌லில் கேட்டாள்.

அதில் அவ‌ன் க‌ர‌ம் அப்ப‌டியே நிறுத்த‌, "யாரு இருக்கா என‌க்கு இனி?" என்று கேட்டாள்.

அதில் அவ‌ன் திரும்பி அவ‌ளை பார்த்து புருவ‌ம் சுழிக்க‌, அவ‌ளோ விழிக‌ளில் ஆத‌ங்க‌ நீரை ஏந்தி, "அதா எல்லாரையும் கொன்னுட்டீங்க‌ளே. இனியும் எங்க‌ போவ‌ன்னு நெனைக்குறீங்க‌?" என்று கேட்டாள்.

அதில் ந‌க்க‌லாய் இத‌ழ் வ‌ளைத்த‌ப‌டியே அந்த‌ க்ளாஸை கையில் எடுத்த‌வ‌ன், "ஏ அந்த‌ விராஜ் இல்ல‌?" என்றப‌டி அதை குடிக்க‌ துவ‌ங்க‌, வேக‌மாய் அதை பிடுங்கி வீசினாள்.

அடுத்த‌ நொடி சடாரென்று த‌ரையில் விழுந்த அந்த க்ளாஸும் பாலும் சித‌றி தெறிக்க‌, அவ‌னோ அச‌ரா இத‌ழ் வ‌ளைவுட‌ன் அவ‌ளையேதான் பார்த்திருந்தான். அவ‌ள் முக‌ம் முத‌ல் முறையாய் கோவ‌த்தில் சிவ‌ந்திருக்க‌, விழியில் பெருகிய‌ ஆத‌ங்க‌ க‌ண்ணீரை அழுத்தி துடைத்துக்கொண்ட‌வ‌ள், "இப்ப‌ என்ன‌? இதுல‌ வெஷ‌ம் இருக்கும்னுதான‌ உங்க‌ ச‌ந்தேக‌ம்? நானே மொத‌ல்ல‌ சாப்புடுறேன்." என்ற‌ப‌டி வேக‌மாய் ஒரு வாய் பிய்த்து உண்ண‌ போக‌, அவ‌ள் க‌ர‌த்தை பிடித்தான் அவ‌ன்.

அதில் அவ‌ள் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌ளையே பார்த்த‌ப‌டி மெதுவாய் குனிந்து அந்த‌ வாயை அவ‌னே வாங்கினான். அதில் அவ‌னித‌ழ்க‌ள் அந்த‌ உண‌வோடு அவ‌ள் விர‌லையும் சேர்த்து க‌வ்வ‌, ஜில்லென்று பாய்ந்த‌ குளிரில் சிலிர்த்து அவ‌ன் விழிக‌ளை நோக்கினாள். அவ‌னுமே அவ‌ள் விழி ம‌ட்டுமே பார்த்த‌ப‌டி மெதுவாய் அவ‌ள் விர‌ல்க‌ளை இதழிலிருந்து விடுவிக்க‌, ஈர‌மாய் வெளி வ‌ந்த‌ அவ‌ள் விர‌ல்க‌ளில் ஜில்லென்ற‌ வெளி காற்று ப‌ட்டு உட‌ல் ஜில்லிட‌, பார்வையை இற‌க்கி அவ‌னித‌ழ் பார்த்தாள். அதுவோ அழ‌காய் வ‌ளைந்து உண‌வை மென்று விழுங்க‌, அதில் இரசனையாய் இவ‌ளித‌ழ் வ‌ளைய‌ முய‌ல‌ அவ‌ச‌ர‌மாய் த‌லையை தாழ்த்தி ம‌றைத்தாள். அடுத்த‌ நொடியே அதிக‌ம் வ‌ளைந்த‌ இத‌ழை வெட்க‌த்தோடு ம‌றைக்க‌ முய‌ன்ற‌வ‌ள், இப்போதே அவன் எண்ணம் புரிந்து அடுத்த‌ வாயை அவ‌ளே பிய்த்து அவ‌னிட‌ம் நீட்டினாள். அவ‌னும் மெல்ல‌ இத‌ழ் வ‌ளைத்து அதேப்போல் அதை வாங்க‌, கூச்ச‌த்தில் தோள்க‌ளை குறுக்கி விர‌ல்க‌ளை மெல்ல‌ விடுவித்தாள். அப்போதும் முழுதாய் சுவைத்துவிட்டே விடுவித்த‌வ‌ன், பார்வையால் அவ‌ளை மென்ற‌ப‌டியே உண‌வை மெல்ல‌ விழுங்கினான். அதில் ச‌ட்டென்று இமைக‌ளை தாழ்த்திக்கொண்டவ‌ளின் உள்ம‌ன‌ம் அதை இர‌சிக்க‌வே செய்ய‌, அடுத்த‌ வாயை பிய்க்கும்போது திடீரென்று இரும‌ ஆர‌ம்பித்தான் அவ‌ன்.

அதில் ப‌த‌றி நிமிர்ந்த‌வ‌ள், வேக‌மாய் த‌ண்ணீரை எடுத்து அவ‌னுக்கு புகட்ட‌, அவ‌னும் வேக‌மாய் அதை குடிக்க ஆரம்பிக்க‌, க்ளாஸிலிருந்த மிச்ச த‌ண்ணீர் மொத்த‌மும் இர‌த்த‌மாய் மாறிய‌து.

அதில் அதிர்ந்தவ‌ள் வேக‌மாய் அந்த‌ க்ளாஸை வில‌க்கி அவ‌ன் முக‌த்தை நிமிர்த்த‌, அவ‌ன் மூக்கிலிருந்து வ‌ழிந்த‌து இர‌த்த‌ம். அதில் அதிர்ந்து விழி விரித்த‌வ‌ளின் கையிலிருந்த‌ உண‌வு த‌ட்டு த‌ரையில் விழுந்து சித‌ற‌, ச‌ட்டென்று பின்னால் ந‌க‌ர்ந்த ருதன், த‌ன் வ‌யிற்றை இறுக்கி பிடித்து இரும‌, அவ‌ன் வாயிலிருந்தும் தெறித்த‌து இர‌த்த‌ம். அது எதிரிலிருந்த‌ அவ‌ள் முக‌த்தில் பட்டு தெளிக்க‌, அதிர்வில் மொத்த‌ உட‌லும் விரைத்து உயிர் உறைந்த‌து அவ‌ளுக்கு.

அப்ப‌டியே பொத்தென்று அவ‌ன் த‌ரையில் விழ‌, "பாஸ்!" என்று க‌த்திய‌ப‌டி உள்ளே வ‌ந்தான் யோகி.

அதைக்கூட‌ உண‌ராது த‌ன் முக‌த்திலிருந்த‌ இர‌த்த‌த்தை தொட்டு எடுத்து பார்த்த‌வ‌ளின் விரல்க‌ள் ந‌டுங்க‌, உறைந்த தன் விழிகளை மெதுவாய் நகர்த்தி கீழே பார்தாள். அங்கே வ‌யிற்றை பிடித்து குறுகி வ‌லியில் துடித்துக் கொண்டிருந்த‌வ‌னை தூக்கி த‌ன் மீது சாய்த்த யோகி, "பாஸ்! என்ன‌ ஆச்சு?" என்று அவ‌ன் க‌ன்ன‌ம் உலுக்க‌, அவ‌னோ வெகுவாய் மூச்சு திண‌றி அப்ப‌டியே ம‌ய‌க்க‌த்திற்கு சென்றிருந்தான்.

"பாஸ்!" என்று ப‌த‌றி உலுக்கிய‌வ‌ன், அப்போதே த‌ரையில் சித‌றி கிட‌ந்த‌ உண‌வை க‌வ‌னித்து விழி விரித்து, "பாஸ் இதையா சாப்புட்டாரு?" என்று ப‌த‌றி அவ‌ளை பார்க்க‌, அதில் அவ‌ளின் உறைந்த‌ விழிக‌ள் க‌ண்ணீரை பெருக்க‌, ஆம் என்று மெல்ல‌ த‌லை அசைத்தாள்.

"மை காட்!" என்று விழி விரிய‌ நெற்றியில் கை வைத்த‌வ‌ன், "நா ஒட‌னே டாக்ட‌ர‌ வ‌ர‌ சொல்றேன்." என்று கூறி த‌ன் மொபைலை எடுத்தான்.

அடுத்த‌ ப‌த்தாவ‌து நிமிட‌ம் ம‌ருத்துவ‌ரும் அவ‌ரின் உத‌வி குழுவும் அங்கு வ‌ந்திருக்க‌, ருத‌னை தூக்கி மெத்தையில் ப‌டுக்க‌ வைத்து க‌ருவிக‌ளை மாட்டி அவசரமாய் சிகிச்சையை ஆர‌ம்பித்த‌ன‌ர்.

"என்ன‌ ப‌ண்றீங்க‌ விடுங்க‌." என்று அழுத‌ப‌டி க‌ர‌த்தை உத‌ற‌ முயன்ற‌ அமீராவை வெளியே இழுத்து சென்றான் யோகி.

"ப்ளீஸ் நானும் அவ‌ருக்கூட‌ இருக்கேன்." என்று அழுது கெஞ்சிய‌ப‌டி திரும்பி பார்த்த‌வ‌ளின் முக‌த்தின் முன்பே அடைக்க‌ப்ப‌ட்ட‌து க‌த‌வு. அதில் வேக‌மாய் அவ‌னை உத‌றி த‌ள்ளிவிட்டு க‌த‌வை த‌ட்டிய‌வ‌ள், "ப்ளீஸ் தெற‌ங்க‌. அவ‌ர‌ என்ன‌ ப‌ண்றீங்க‌? என்னையும் விடுங்க‌." என்று க‌த‌ற‌, "அவ‌ங்க‌ள‌ ட்ரீட்ம‌ண்ட் ப‌ண்ண‌ விடுங்க‌ மேட‌ம் ப்ளீஸ்." என்று கெஞ்ச‌லாய் கூறினான் யோகி.

அதில் வேக‌மாய் திரும்பி அவ‌ன் ச‌ட்டையை பிடித்து, "அவ‌ருக்கு என்ன‌ ஆச்சு? எங்கிட்ட‌ என்ன‌ ம‌றைக்குறீங்க‌?" என்று ப‌த‌றி கேட்க‌, அவ‌னோ வாட‌லாய் பார்வையை தாழ்த்தி, "ம‌ற‌ைக்க‌ணுன்னெல்லா இல்ல‌ மேட‌ம்." என்றான்.

"அப்ப‌ சொல்லுங்க‌. அவ‌ரு ஒட‌ம்புல‌ என்ன‌ பிர‌ச்ச‌ன‌?" என்று க‌த‌றி கேட்க‌, அவ‌னோ வாட‌ல் பெருமூச்சாய் அவ‌ள் க‌ர‌ங்க‌ளை பிடித்து வில‌க்கிவிட்டு, "எந்த‌ பிர‌ச்ச‌னைய‌ மொத‌ல்ல‌ சொல்ற‌து?" என்ற‌ப‌டி த‌ன் ச‌ட்டையை ச‌ரி செய்தான்.

அதில் அதிர்வாய் புருவ‌ம் விரித்த‌வ‌ள், "அப்பிடின்னா?" என்று கேட்க‌, அவ‌னோ மெதுவாய் நிமிர்ந்து அவ‌ளை பார்த்து, "இந்த‌ ரெண்டு வ‌ருஷ‌ம்.. பொய்யாவே இருந்தாலும் நீங்க‌ ஒரு புது வாழ்க்கைக்குள்ள‌ ச‌ந்தோஷ‌மாதா இருந்தீங்க‌. ப‌ட் அவ‌ரு எங்க‌ இருந்தாருன்னு தெரியுமா?" என்று கேட்க‌, அவ‌ளோ அதிர்வாய் அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, "சாவோட விளிம்புல." என்றான் யோகி.

அதில் சட்டென்று அவ‌ள் இத‌ய‌ம் பலமாய் அடித்துக்கொள்ள, விழிகளில் அதிர்வும் கண்ணீரும் ஒன்றாய் நின்றது.

அதே நேரம் உள்ளே அவனுக்கு தீவிரமாய் சிகிச்சை நடந்துக்கொண்டிருக்க, இங்கே இவளிடம் அனைத்தையும் கூற ஆரம்பித்தான் யோகி.

அடுத்த‌ சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளில் அனைத்து சிகிச்சைக‌ளும் முடிந்து, அந்த‌ மெத்தையில் அமைதியாய் ப‌டுத்திருந்தான் ருத‌ன். அவ‌ன் க‌ர‌த்தில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க‌, இன்னுமே ம‌ய‌க்க‌த்தில்தான் இருந்தான் அவ‌ன்.

அமைதியாய் இருந்த‌ அந்த‌ அறையில், சொட்டு சொட்டாய் ட்ரிப்ஸ் விழும் ச‌த்த‌ம் அவ‌ன் காதில் ஒலிக்க‌, அவ‌ன் புருவ‌ங்க‌ள் குறுகி வில‌கிய‌து. அப்போதே அவ‌ன் உட‌லில் ஏதோ பாராமாய் உண‌ர‌, நெற்றியை குறுக்கி விழிக‌ளை அசைத்தான். அசைந்த‌ அவ்விழிக‌ளின் மீது நீர் துளிக‌ள் விழ‌, முக‌த்தை சுழித்து இமைக‌ளை பிரித்தான். ம‌ங்கிய‌ அவ‌ன் இமைக‌ளின் ந‌டுவே க‌ண்ணீருட‌ன் அவ‌ள் முக‌ம்.

அதில் சோர்வாய் மீண்டும் இமை மூடி திற‌க்க‌, இப்போதே ம‌ங்கிய‌ முக‌ம் தெளிவாக‌, க‌ண்ணீருட‌ன் முறைத்துக்கொண்டிருந்தாள் அவ‌ள்.

அதில் புரியாது புருவ‌த்தை குறுக்கிய‌வ‌ன், "எதுக்கு இப்பிடி உத்து பாக்குற‌? உயிரோட‌தா இருக்கேன்." என்று சோர்வாய் கூற‌, ச‌ப்பென்று அவ‌ன் க‌ன்ன‌த்தில் அடித்தாள். அதில் ப‌ட்டென்று க‌ன்ன‌த்தை திருப்பிய‌வ‌னின் இத‌ழ்க‌ள் மெதுவாய் வ‌ளைய‌, அவ‌ன் ச‌ட்டையை பிடித்து, "எங்கிட்ட‌ சொல்ல‌ வேண்டிய‌துதான‌?" என்று ஆதங்கமாய் கேட்டாள்.

அதில் மெல்ல‌ அவ‌ள் ப‌க்க‌ம் திரும்பி, "நாந்தா சொன்ன‌னே. இத‌ சாப்புட்டா சுருண்டு விழுந்திருவ‌ன்னு. நீதா கேக்கல." என்றான் சோர்வாக‌.

"முழுசா சொல்லிருக்க‌லால்ல‌?" என்று அவ‌ள் கண்ணீருடன் கேட்க‌, அவ‌னோ அத்த‌னை சோர்வாய் மெல்ல‌ அசைந்து ப‌டுத்து, "என‌க்கு எதையும் எக்ஸ்ப்ளைன் ப‌ண்ணி ப‌ழ‌க்க‌ம் இல்ல‌. ஒன்லி ப்ரேக்டிக்க‌ல்." என்றான் சோம்ப‌லுட‌ன்.

அதில் இவ‌ள் க‌ண்ணீர் பெருக‌, "பைத்திய‌மா உங்க‌ளுக்கு?" என்று கேட்க‌, ச‌ட்டென்று அவ‌ள் பின்த‌லையை த‌ன் ப‌க்க‌ம் இழுத்து, "உன்மேல‌." என்றான் மெல்லிய‌ குர‌லில். அதில் இரு முக‌ங்க‌ளும் உர‌சுகின்ற‌ நெருக்க‌த்தில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, இர‌ச‌னையாய் அவ்விழிக‌ளை சில நொடி ஆராய்ந்தவ‌ன், ப‌ட்டென்று அவ‌ள் இதழ்க‌ளை க‌வ்வியிருந்தான்.

அதில் திடுக்கிட்டு விழி மூடிய‌வ‌ளின் மிச்ச‌ மீதி க‌ண்ணீரும் வெளியேறியிருக்க‌, அவ‌ள் கூந்த‌லுள் விர‌ல்க‌ளை நுழைத்து மேலும் இழுத்து வைத்து மொத்த‌மாய் சுவைத்தான். அவன் வன்மையில் அழுத்தி விழி மூடிய‌வ‌ளின் க‌ர‌ம் அவ‌ன் ச‌ட்டையை இறுக்கி பிடிக்க‌, அவள் மனதிலோ யோகியின் வார்த்தைக‌ள் மட்டுமே வந்து நின்றது.

"இத்த‌னையும் தாங்குன‌துக்கு அப்ற‌மும், அந்த‌ ஒட‌ம்புல‌ உயிர் இருக்குன்னா.. அது உங்க‌ ஒருத்திக்காக‌ ம‌ட்டுந்தா மேடம்." என்ற‌ அவ‌னின் வார்த்தைக‌ள் காதில் ஒலிக்க‌, இறுக்கி பிடித்திருந்த‌ அவ‌ன் ச‌ட்டையை இழுத்து அவன் கழுத்தை கட்டிக்கொண்டு வேக‌மாய் அவ‌ளும் அவ‌னித‌ழை சுவைத்தாள்.

- நொடிக‌ள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-19
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.