தன் அப்பாவும் பிரியாவும் பேசிக் கொண்டே இருப்பதை கவனித்துக் கொண்டிருந்த இசை அவர் பிரியாவிடம்,
“அப்ப நீதான் Queen groups of companiesஓட அடுத்த வாரிசா?” என்று ஷாக்காகி கேட்க,
தன் குடும்பத்தினருக்கு நடந்த மோசமான விஷயங்களை எல்லாம் நினைத்து பார்த்த பிரியா வருத்தத்துடன் ஆமாம் என்று தலையாட்டினாள்.
இவர்கள் சொல்லும் அந்த Queen groups of companies பற்றி எல்லாம் நம் இசைக்கு எதுவும் தெரியாது.
ஆனால் ஏதோ ஒரு கம்பெனிக்கு பிரியா தான் வாரிசு என்று மட்டும் புரிந்து கொண்டவன்,
இப்போது பிரியாவை நம்ப முடியாமல் ஆச்சரியமாக பார்த்தான்.
பிரியாவின் உண்மையான அடையாளத்தை பற்றி தெரிந்து கொண்ட பிறகு நடேசன் அவளை பார்க்கும் விதமே மாறிவிட்டது.
இப்போது அவர் மரியாதையுடன் “என்னமா ஆச்சு உங்க குடும்பத்துக்கு?
எத்தனை ஆயிரம் பேருக்கு உங்க கம்பெனில நீங்க வேலை போட்டு கொடுத்துட்டீங்க..
அவ்ளோ பெரிய பணக்கார குடும்பத்துல பிறந்து ராணியாட்டம் வளர்ந்து இங்க வந்து எதுக்கு இப்படி கஷ்டப்பட்டு இருக்க?
உங்க அப்பா எப்படி திடீர்னு இறந்தாரு?
அவர் ரொம்ப நல்ல மனுஷன்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன்.” என்று அக்கறையுடன் விசாரிக்க,
“அவர் ரொம்ப நல்லவரா இருந்தது தான் தப்பு சார்.
கூட இருக்கிறவங்க எல்லாரையும் கண்மூடித்தனமா நம்பி ஏமாந்துட்டாரு.
உங்களுக்கு தான் எங்க ஃபேமிலிய பத்தி ஒரு அளவுக்கு தெரிஞ்சிருக்கே..
எங்க பாட்டிக்கு அப்புறம் எங்க அம்மா தான் எங்களோட பிசினஸ் எல்லாத்தையும் பாத்துக்கிட்டாங்க.
எங்க அப்பா அவங்களுக்கு சப்போர்ட்டிவா இருந்தாரு.
எல்லா குடும்பத்திலயும் அவங்களுக்கு அப்புறம் அவங்களுக்கு பொறந்த பசங்கள தான் வாரிசா பாப்பாங்க.
பட் எங்க அம்மா அவங்க கூட பிறந்த அண்ணன விட எல்லா விதத்திலும் பெஸ்ட்டா இருந்ததுனால,
எங்க பாட்டி சாகறதுக்கு முன்னாடி Queen groups of companiesஓட அடுத்த சேர்மனா இருந்து எங்க அம்மா தான் எல்லாத்தையும் பாத்துக்கணும்.
அவங்களுக்கு அப்புறமும், எனக்கு தான் வரணும்னு உயில் எழுதி வச்சுட்டாங்க.
அத பத்தி கூட எங்களுக்கு எதுவும் தெரியாது.
அம்மா பாட்டி இறந்ததுக்கு அப்புறம் எப்பயும் போலத்தான் ஆபீஸ்க்கு போயிட்டு வந்துட்டு இருந்தாங்க.
ஆனா இத எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட எங்க மாமா ஃபேமிலி பிளான் பண்ணி எங்கள மொத்தமா அழிச்சிட்டா,
வாரிசு யாருமே இல்லாத சொத்துக்கு அவங்க உரிமை கொண்டாடலாம்னு நினைக்கிறாங்க.
அவங்க நினைச்ச மாதிரியே பக்காவா பிளான் பண்ணி ஆக்சிடென்ட் மாதிரி செட்டப் பண்ணி எங்க அப்பாவை கொன்னுட்டாங்க.
அவர் இறந்த உடனே அம்மா இப்படி மாறிட்டாங்க.
எனக்கு அதுலயும் கூட அவங்க யாருக்கும் தெரியாம ஏதோ பண்ணி இருப்பாங்களோன்னு எனக்கு டவுட் இருக்கு.
எங்க அப்பா இறந்து போய் இரண்டாவது நாள் எங்க அம்மாவ நான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கும்போதுதான்,
நாங்க யாரை இத்தனை வருஷமா எங்க சொந்த ஃபேமிலின்னு நெனச்சிட்டு இருந்தோமோ,
அவங்க எங்களையும் சேர்த்து எங்க ஃபேமில இருக்கிற எல்லாரையும் அழிக்க பார்த்தாங்கன்னு எனக்கு தெரிஞ்சது.
அதான் இனிமே இங்க இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணி யாருக்கும் தெரியாம ஹாஸ்பிடல்ல இருந்த எங்க அம்மாவை டிஸ்டார்ஜ் கூட பண்ணாம பின் வாசல் வழியா என் தம்பியோட கூட்டிகிட்டு தப்பிச்சு வந்துட்டேன்.
நீங்க சொன்ன மாதிரி நான் பல கோடிகளுக்கு சொந்தக்காரியா இருக்கலாம்.
ஆனா இப்போ என் பேங்க் அக்கவுண்ட்ல இருக்கிற காசு கூட யூஸ் பண்ண முடியாத நிலைமைல நான் இருக்கேன்.
அம்மாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணதுனால, செலவுக்கு ஆகுமேன்று நினைத்து சும்மா கிளம்பும்போது என் லாக்கர்ல இருந்து 5 lakhs எடுத்துட்டு கிளம்பினேன்.
அதுல மீதி இருந்த இரண்டு லட்சம் மட்டும்தான் என் கையில இருக்கு.
என் நிலைமை பார்த்தீங்களா சார்?” என்று கேட்டுவிட்டு விரக்தி புன்னகை சிந்தினாள் பிரியா.
அவள் அதை சொன்ன விதத்தைப் பார்த்தவுடன் இசை, நடேசன் இருவருக்குமே அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.
இசை பிரியாவிடம் ஆறுதல் சொல்வதற்காக ஏதோ பேச தன் வாயை திறக்க,
அதற்குள் முந்தி கொண்ட நடேசன், “இப்படி எல்லாம் வருத்தப்பட்டு பேசாதமா.
உனக்கு சேர வேண்டியது எல்லாமே கண்டிப்பா உன் கைக்கு கிடைக்கும்.
அதுக்கு என்னால முடிஞ்ச எல்லா உதவியும் நான் உனக்கு பண்றேன்.
என்னதான் இப்ப உங்க மாமா குடும்பத்தில இருக்கிறவங்க அவங்க கண்ட்ரோல்ல எல்லாத்தையும் வச்சிருந்தாலும்,
உண்மையான வாரிசு நீயம், உன் தம்பியும் இருக்கும்போது அவங்களால எதுவும் பண்ண முடியாது.
உனக்கு என்ன உதவி வேணும்னாலும் தயங்காம என்கிட்ட கேளு.
ஒரு அப்பா ஸ்தானத்துல இருந்து உன்னை என் பொண்ணா நெனச்சு உனக்கு நான் செய்றேன்.” என்று சொல்ல,
நன்றி உணர்வுடன் அவரைப் பார்த்த ப்ரியா,
“ரொம்ப நன்றி சார். இப்ப நீங்க சொன்னது ரொம்ப பெரிய வார்த்தை.
ஆனா எங்கள இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவங்கள நானே பழி வாங்கணும்னு நினைக்கிறேன்.
எங்க அப்பாவ கொன்னதுக்கு அவங்க கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்.
அவங்களுக்கு என் கையாலதான் தண்டனை கிடைக்கணும்.
அப்பதான் எங்க அப்பாவோட ஆத்மா சாந்தியடையும்.
சோ எல்லாத்தையும் நானே செய்யணும்னு ஆசைப்படுறேன்.
அதுக்கு தான் மெண்டலி, financially நான் stable ஆகுற வரைக்கும் இங்கயே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
நீங்க அதுக்கு மட்டும் எனக்கு பர்மிஷன் குடுத்தா போதும்.
மத்தது எல்லாத்தையும் நானே பாத்துக்குவேன்.” என்றாள்.
“உனக்கு ஹெல்ப் பண்ண நான் இருக்கும்போது, நீ ஏன்மா தனியா எல்லாத்தையும் பண்ணி கஷ்டப்படணும்?
உனக்கு விருப்பம் இருந்தா சொல்லு. உன்னையும் உன் தம்பியையும் எங்க வீட்டிலேயே தங்க வச்சு நான் பத்திரமா பாத்துக்கறேன்.
எவனாலயும் உங்கள நெருங்க முடியாது.
நான் இதையெல்லாம் உனக்கு சும்மா செய்றதா நினைச்சு என் உதவிய ஏத்துக்கிறதுக்கு தயங்காத.
உன் குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு நான் ரொம்ப கடன் பட்டு இருக்கேன்.
ஒரு ஏழு எட்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு பிளட் கேன்சர் இருந்துச்சு.
ஸ்டார்டிங் ஸ்டேஜிலேயே கண்டுபிடிச்சிட்டேன்.
இருந்தாலும் அலோபதி மெடிசன் எனக்கு செட் ஆகல.
என் குடும்பத்தில இருக்கிறவர்களுக்கு கூட அதை பத்தி தெரியாம நான் ரகசியமா வச்சிருந்தேன்.
அப்ப என்கிட்ட வேலை பாக்குற ராமசாமினு ஒருத்தன் உங்க பாட்டி எவ்ளோ மோசமான நோயா இருந்தாலும் சுலபமா குணப்படுத்திருவாங்கன்னு சொல்லி என்ன அவங்க கிட்ட கூட்டிட்டு போனான்.
நானும் யாருக்கும் தெரியாம அவங்கள கிட்ட போய் ஒரு வருஷமா ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன்.
அப்ப கூட ட்ரீட்மென்ட்க்கு நியாயமா தான் அவங்க காசு வாங்கினாங்க.
அவங்க மருத்துவத்தை ஒரு சேவையா பண்ணிட்டு இருந்தாங்க.
உங்க பாட்டியோட அந்த ட்ரீட்மென்ட்னால தான் இத்தனை வருஷமா எந்த பிரச்சனையும் இல்லாம நான் உயிரோட இருக்கேன்.
மறுபடியும் எந்த தொந்தரவும் இல்லாம நான் நார்மலா இருக்கேன்னா,
அதுக்கு உங்க பாட்டி தான் காரணம்.
அவங்க எத்தனை கோடி கேட்டிருந்தாலும் நான் கொடுத்திருப்பேன்.
நான் அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.
ஆனா அவங்க பெரிய மனசோட எனக்கு எதுவும் வேண்டாம்.
நீங்க எப்பயும் உங்க குடும்பத்தோட சந்தோஷமா வாழனும். என்னை உங்க ஞாபகத்துல வச்சுக்கோங்க.
உங்களுக்காக நீங்க சாமி கும்பிடும்போது, நானும் என் குடும்பத்துல இருக்கிறவங்களும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கோங்க அது போதும்னு சொல்லி அனுப்பிட்டாங்க.
எனக்கு இப்பதான் உங்க குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வாய்ப்பு கிடைச்சிருக்கு.
அந்த மாதிரி ஒரு குடும்பத்துல பிறந்த நீ, என் கண்ணு முன்னாடியே கஷ்டப்பட்டு இருக்கும்போது என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியாது பிரியா.
நீ நேரடியா அவங்கள பழிவாங்கணும்னு ஆசைப்படுற எனக்கு புரியுது.
அதுக்கு மறைமுகமா நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்றேன் அவ்ளோதான்.
நம்ம சேர்ந்து ஏதாவது பண்ணலாம். உங்க மாமா குடும்பம் என்னென்ன பண்றாங்கன்னு நான் எல்லாத்தையும் என் ஆளுகளை வைத்து விசாரிச்சு உனக்கு சொல்றேன்.
சரியான டைம் வர்ற வரைக்கும் நம்ம வெயிட் பண்ணலாம்.
இந்த பாட்டி எழுதி வெச்ச உயில் மட்டும் நம்ம கைக்கு கிடைச்சிருச்சுனா போதும்.
மச்சான் எல்லாத்தையும் கோர்ட்டில ப்ரூவ் பண்ணி லீகலா பாத்துக்கலாம்.
உங்க அப்பாவ அவங்க தான் கொன்னாங்கன்னு கோர்ட்டுல சொல்றதுக்கு நமக்கு ஒரே ஒரு எவிடன்ஸ் கிடைச்சா போதும்.
நம்மகிட்ட நிறைய நல்ல லாயர்ஸ் இருக்காங்க. அவங்கள வச்சு ஈசியா இந்த கேஸ்ல ஜெயிச்சிடலாம்.
உனக்கு எல்லா ஆதாரத்தையும் ரெடி பண்ண நான் ஹெல்ப் பண்றேன்.
அதுவரைக்கும் நீ எங்க விருப்பப்படுறியோ அங்க பாதுகாப்பா இருக்கலாம்." என்று நடேசன் சொல்ல,
கலங்கிய கண்களுடன் தன் அப்பாவை பார்த்த இசை,
“அப்பா.. உங்களுக்கு பிளட் கேன்சர் இருந்துச்சா?
ஏன் அப்பா அத பத்தி நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல?” என்று கேட்டுவிட்டு அவரை அணைத்துக் கொண்டு அழுகிறான்.
“டேய் அதெல்லாம் முன்னாடி இருந்துச்சு இப்ப சரியா போச்சு.
ராணி அம்மா உயிரோடு இருக்கும்போது எனக்கு ஒரு diet chart போட்டு குடுத்தாங்க.
அத இப்ப வரைக்கும் நான் ஸ்கிரிக்ட்டா ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்.
கடைசி வரைக்கும் நான் அதை மட்டும் சாப்பிட்டா போதும்.
உங்க அப்பனுக்கு எதுவும் ஆகாது பயப்படாத டா.” என்று சொல்லி நடேசன் அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்ய,
“இப்பயாவது உண்மைய சொல்றீங்களா? இல்ல எனக்காக இப்போ நல்லா இருக்குன்னு பொய் சொல்றீங்களா?
எதுவா இருந்தாலும் நான் டாக்டர் சொன்னா தான் நம்புவேன்.
நீங்க இப்பவே என் கூட ஹாஸ்பிடல் வாங்க நம்ம ஒரு தடவை செக் பண்ணி பார்த்துடலாம்.” என்ற இசை அவர் கையைப் பிடித்து இழுக்க,
“டேய் சொன்னா கேளுடா.. உன் வாழ்க்கையை செட்டில் பண்ணாம, நீ நல்லா வாழ்றதை பார்க்காம, அப்படியெல்லாம் உங்க அப்பன் உன்னை விட்டு போயிட மாட்டேன்.
எனக்கு இருந்து செஞ்சு முடிக்க வேண்டிய கடமை நிறைய இருக்கு.
நீ என்ன பத்தி யோசிக்கிறதை விட்டுட்டு இப்ப இந்த பொண்ண பத்தி யோசி.
இவ உன்ன நம்பி இங்க உன் கூட வந்து தங்கி இருக்கா.
இவளை பத்திரமா வச்சிக்கிறது உன் பொறுப்பு.
இந்த பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா, நானே உன்ன சும்மா விடமாட்டேன் பாத்துக்கோ!" என்ற நடேசன் பிரியாவை பார்த்து,
“எனக்கு இப்பவே உங்க அம்மாவை போய் பாக்கணும் போல இருக்கு.
வா மா நம்ம ஹாஸ்பிடல் போய் அவங்க எப்படி இருக்காங்கன்னு பாத்துட்டு வந்துருவோம்.” என்றார்.
“எங்க பாட்டியும் தாத்தாவும் எங்களுக்கு சொத்து சேர்த்து வச்சதை விட அதிகமா நிறைய புண்ணியத்தை சேர்த்து வச்சிருக்காங்க.
தர்மம் தலைகாக்கும்னு சொல்லுவாங்களே... அந்த மாதிரி இவரை மாதிரி பெரிய ஆளுங்க கிட்ட காசு புடுங்கனும்னு நினைக்காம அப்போ எங்க பாட்டி நியாயமா இவருக்கு ட்ரீட்மென்ட் பண்ணதனால..
இப்ப இவர் கியர் ஆகி நல்லா இருக்காரு. பாட்டிக்காக எனக்கும் ஹெல்ப் பண்றதா சொல்றாரு.
எல்லாமே ஒரு காரணத்தோட தான் நடக்குது போல...
நான் மட்டும் இங்க சாப்பிட வராம இருந்திருந்தா, இவங்கள மாதிரி நல்ல மனுஷங்க கூட இந்த உலகத்தில இருக்காங்கன்னு எனக்கு தெரியாமயே போயிருக்கும்." என்று நினைத்த பிரியா அவர்கள் இருவருடன் கீழே சென்றாள்.
பயத்துடன் அவர்களை எதிர்பார்த்து கீழே ராகுலுடன் பேசியபடி நின்று கொண்டிருந்த ஜீவா அவர்கள் வருவதை பார்த்தவுடன் வேகமாக இசையின் அருகே சென்று,
“டேய் என்னடா ஆச்சு? பிரியா யாழினி இல்லைன்னு சொன்னது உங்க அப்பா நம்பிட்டாரா?” என்று அவசரமாக கேட்க,
“டேய் அத பத்தி எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.
நீ இங்க இருந்து எல்லாத்தையும் பாத்துக்கோ.
நானும் பிரியாவும் அப்பா கூட வெளிய போறோம்.” என்று சொல்லிவிட்டு அவர்களுடன் சென்றான் இசை.
அவர்கள் மூவரும் நடேசனின் காரில் ஏறி ரேணுகாவை காண ஹாஸ்பிடலுக்கு சென்றார்கள்.
ரேணுகாவை பார்க்கவே நடேசனுக்கு பரிதாபமாக இருந்தது.
அதனால் அங்கே இருந்த டாக்டர் சுவாமிநாதனை அழைத்து ரேணுகாவின் ட்ரீட்மென்ட் இருக்கு ஆகும் மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக சொல்லிவிட்டு வந்தார்.
அப்போதும் பிரியா அத
ற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் இது மாதிரி அவளுக்கு இசை ஹெல்ப் செய்யும்போது அவன் மீது கோபப்பட்டு அவனை அதை செய்யவிடாமல் தடுப்பதை போல,
அவளால் நடேசன் மீது கோபப்பட முடியாமல் போய்விட்டது.
அதனால் வேறு வழி இயில்லாமல் அமைதியாக இருந்து விட்டாள்.
- தொடரும்..

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-19
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.