Chapter-18

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
இசையின் அப்பா நடேசன் பிரியாவிடம் பேச வேண்டும் என்று சொல்ல,

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டால் ஏதேனும் பிரச்சினை வந்துவிடுமோ? என்று நினைத்து பயந்த இசை,

“நீங்க அவ கூட பேசுறதுக்கு என்ன இருக்கு அப்பா? நான்தான் இவ்ளோ தூரம் சொல்றேன்ல்ல.. நீங்க என்ன நம்ப மாட்டீங்களா?” என்று அவசரமான குரலில் கேட்டான்.

“யாரை நம்பனும் நம்ப கூடாதுன்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்.

நீ இப்ப போய் அந்த பொண்ண இங்க வர சொல்றியா, இல்ல நானே கீழ போய் அவ கிட்ட பேசிக்கட்டுமா?” என்ற நடேசன் படிக்கட்டை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைக்க,

“ஐயோ.. அப்பா.. அப்பா.. ப்ளீஸ் நில்லுங்க வெயிட் பண்ணுங்க..!!

நானே போய் அவளை கூட்டிட்டு வரேன்.” என்று அவசரமான குரலில் சொன்ன இசை பிரியாவை அழைத்து வருவதற்காக வேகமாக படிகளில் இறங்கி கீழே சென்றான்.

அங்கே பிரியா healthy உணவுகள் அடங்கிய ஸ்டாலில் மேற்பார்வை பார்த்தபடி இருக்க,

தயக்கத்துடன் அவள் அருகில் சென்று நின்ற இசை, “பிரியா.. ஒரு நிமிஷம் என் கூட வரியா?

எங்க அப்பா உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொல்றாரு." என்று இழுக்க,

அவனை அலட்சியமாக திரும்பிப் பார்த்த ப்ரியா, “உங்க அப்பா ஏன் என்னை யாழினின்னு நினைச்சு அவ மேல இருக்கிற கோபத்தை என் மேல கட்டுறாரு?

நீயே அவர்கிட்ட நான் யாழினி இல்லைன்னு சொல்லி புரிய வைக்க வேண்டியதுதானே!

இப்ப எதுக்கு என்ன வந்து கூப்பிடுற?

அவர் இருக்கிற டென்ஷன்ல நான் போய் அவர் கிட்ட திட்டு வாங்கணுமா?” என்று கேட்க,

“ஐயோ பிரியா.. அந்த ஆளு மாதிரி நீயும் ஏண்டி நான் சொல்றத புரிஞ்சிக்காமயே பேசுற?

எங்க அப்பா எஜுகேஷன் ‌மினிஸ்டர் பிரியா. நான் இப்படி ஒரு பொண்ண இங்க புதுசா கூட்டிட்டு வந்து வச்சிருக்கேன்.

அவ பாக்குறதுக்கு வேற யாழினி மாதிரி இருந்தா, அவர் உன்னை கூப்பிட்டு எதுவும் பேச மாட்டாரா?

அவர்தான் படிக்காத ஆளு. எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகுறாரு.

நீயும் இப்படி பேசுனா நான் என்ன பண்றது சொல்லு?” என்று ஆற்றாமையுடன் கேட்டான் இசை.

அங்கே அதிகமான வாடிக்கையாளர்கள் வந்திருந்ததால் அவர்களை சமாளித்துக் கொண்டிருந்த டென்ஷனில் தான் இசையிடம் ஓவராக பேசிவிட்டதை உணர்ந்த பிரியா,

“ஓகே ஓகே புரியுது. அழுகாத வரேன்.

உங்க அப்பா அப்படி என்னதான் சொல்றாருன்னு பாக்கலாம்.” என்று சொல்லி அவனுடன் நடேசனைக் கான சென்றாள்.

அவள் வந்தவுடன் அவளை மேலும் கீழும் பார்த்த நடேசன், “உன் பேர் என்ன?” என்று கேட்க, “பிரியா!” என்றாள் அவள்.‌

தொடர்ந்து தன் பார்வையால் அவளை எடை போட்டபடி இருந்த நடேசன்,

“எங்க இருந்து வந்திருக்க இங்க?

உங்க அப்பா, அம்மா எங்க? அவங்க என்ன பண்றாங்க?

உன்னையும் உன் தம்பியையும் இங்க தனியா அனுப்பி வச்சிட்டு அவங்க எங்க இருக்காங்க?” என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க,

அவள் குடும்பத்தை பற்றி நடேசன் வரிசையாக கேள்விகள் கேட்பதால் பிரியா வருத்தப்படுவாள் என்று நினைத்த இசை அவள் பதில் சொல்ல வருவதற்குள் முந்திக் கொண்டு,

“அவளுக்கு அவங்க அம்மாவையும், தம்பியையும் தவிர வேறு யாரும் இல்லைப்பா.‌

அவங்க அம்மாவ இங்க பக்கத்துல இருக்கிற சுவாமிநாதன் ஹாஸ்பிடல்ல தான் அட்மிட் பண்ணிருக்காங்க.‌

பிரியா இங்க சாப்பிட வரும்போது இத பத்தி என்கிட்ட சொன்னா.‌

நானும் போய் அவங்கள ஹாஸ்பிடல்ல பார்த்துட்டு தான் வந்தேன்.” என்றான்.

அதனால் பிரியா எதுவும் பேசாமல் அவர்கள் இருவரையும் அமைதியாக பார்க்க,

“நான் அந்த பொண்ணு கிட்ட தானே பேசிட்டு இருக்கேன்! நீ என்ன அவளுக்கு வாயா?

இல்ல உன் பேரு பிரியாவா? ஏன் அந்த பொண்ணுக்கு பேச தெரியாதா?

அவள வாய தொறந்து நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லச் சொல்லு டா.” என்றார் நடேசன்.

அப்போதும் இசை ஏதோ பேச வர, தன் ஒற்றை கையை அவன் முன்னே நீட்டிய பிரியா,

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்.” என்று சொல்லிவிட்டு நடேசனை நேருக்கு நேராக பார்த்தாள்.

அவள் பார்வையில் கொஞ்சம் கூட பயமில்லை. முதலில் தன் இரு கைகளையும் கூப்பி அவரை வணங்கிய பிரியா,

“நீங்க நான் யாழினி மாதிரி இருக்கறதுனால என்ன அவங்கன்னு தப்பா நினைச்சுக்கிட்டீங்க.

அதுல ஒன்னும் தப்பில்ல. பட் உங்களோட கன்ஃபியூஷனை தீர்க்க வேண்டியது என் கடமை.

உங்களுக்கு என்கிட்ட என்ன கேட்கணும்னு தோணுச்சுனாலும் நீங்க கேளுங்க சார்.

உங்களுக்கு ஆன்சர் பண்ண நான் ரெடியா இருக்கேன்.

But one thing, என் குடும்பத்துல இப்ப உயிரோட இருக்கிறது நான், என் அம்மா, என் தம்பி மூணு பேர் மட்டும்தான்.

‌ எங்க அப்பா இப்பதான் ரீசண்டா இறந்து போனாரு. அதனால எங்க அம்மா ஷாக்காகி அவங்களுக்கு paralysis வந்துருச்சு.

And அவங்க psychologically affect ஆகியிருக்காங்கன்னு இங்க வந்ததுக்கு அப்புறம் டாக்டர் அவங்களா செக் பண்ணிட்டு சொன்னாரு.

இப்ப அவங்களுக்கு ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு.

எங்க அம்மாவ நான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கும்போது, நானும் இங்க தங்க வேண்டியதா இருந்துச்சு.

அதான் இங்க வேலை கிடைச்சதும், நான் இங்க இசையேட வீட்ல தங்க ஒத்துக்கிட்டேன்.

மத்தபடி எனக்கும், இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.

நானும் என் தம்பியும் ஹாஸ்பிடல் பக்கத்துல இந்த ரெஸ்டாரன்ட் இருந்ததுனால சும்மா இங்க சாப்பிட தான் வந்தோம்.

அப்பதான் நான் ஃபர்ஸ்ட் டைம் இசையை மீட் பண்ணேன்.

இதுக்கு மேல உங்க கிட்ட நான் என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல சார்.” என்று நிதானமாகவும், தெளிவாகவும் சொன்னாள்.

யாழினியை பற்றி ஏற்கனவே நன்றாக அறிந்திருந்த நடேசனுக்கு இசை சொன்னதைப் போலவே இவளிடம் ஏராளமான வித்யாசங்கள் இருப்பதாகவே தோன்றியது.

இருப்பினும் அவரது அரசியல்வாதி மூளை எதையும் உடனே நம்பாதே என்று தொடர்ந்து ஆராய்ந்து பார் என்று அவருக்கு அறிவுரை வழங்கியதால்,

“ஆனா நீ சொல்றத நான் எதுக்கு நம்பனும்?

இங்க ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகி இருக்கிறவங்க உங்க அம்மா தான்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?

உங்க அப்பா இறந்துட்டாரு. சரி அது பரவால்ல.‌

நீ எப்படியும் அவர் கூட எடுத்த ஃபோட்டோ ஏதாவது உன்கிட்ட இருக்கும்ல்ல!

உன் ஃபேமிலி ஃபோட்டோ இருந்தா காமி, நான் பாக்கணும்.

நான் அப்புறம் இதோட விட்டுவிடுவேன்னு மட்டும் நினைக்காத.

நீ சொன்ன மாதிரியே அங்க ஹாஸ்பிடல்ல யாராவது அட்மிட்டாகி இருக்காங்களான்னு அங்கயும் என் ஆளுங்களை அனுப்பி செக் பண்ணுவேன்.” என்று நடேசன் காராராக சொல்லிவிட,

“அட கடவுளே.. இவருக்கு என் லைஃப்ல கும்மி அடிக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும் போல!

நான் யாழினியை லவ் பண்ணும்போதும், எப்ப பார்த்தாலும் இந்த மனுஷன் அவளை குறை சொல்லிட்டு இருப்பாரு.

இப்ப பிரியா கிட்டயும் அந்த வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாரு.

யாழினியாவது கொஞ்சம் பொறுமைசாலி. பெரியவங்க ஏதோ சொல்றாங்க பரவாயில்லைன்னு நினைச்சு இவர் ஏதாவது ராங்கா பேசினாலும்,

போயிட்டு போகுதுன்னு பொறுத்துக்கிட்டு அமைதியா இருந்திடுவா. ஆனா பிரியா அப்படி இருக்க மாட்டாளே!

இங்க என்ன நடக்கப்போகுதோ தெரியல!” என்று நினைத்த இசை திக் திக் இதயத்துடன் வாயை திறந்து கூட எதையும் பேச முடியாமல் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அனைத்தையும் பார்த்தபடி இருந்தான்.

“நாங்க எங்க ஊர்ல இருந்து இங்க பஸ்ல வந்துட்டு இருக்கும்போது, என் ஃபோன் தொலைஞ்சு போயிருச்சு.

சோ இப்போதைக்கு என் ஃபேமிலி ஃபோட்டோ என்கிட்ட எதுவும் இல்ல சார், சாரி!” என்று தன்மையுடன் பிரியா முதலில் இசையிடம் சுத்திய அதே ரீலை இவரிடமும் சுத்த,

இசையை போல அவள் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பும் ஆள் நடேசன் இல்லையே..!!

இப்போதும் அவர் இவளை சந்தேக கண்களுடன் பார்த்தபடி, “அது எப்படி உங்க அப்பா இறந்து போறது, உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போறது, உன் ஃபோன் காணாம போறதுன்னு எல்லாமே ஒரே நேரத்துல நடக்கும்?

நீ ப்ரியாவா, யாழினியான்னு நான் நெனச்சா என்னால 24 மணி நேரத்துல கண்டுபிடிக்க முடியும்.

ஆனா நானா உன்ன பத்தி கண்டுபிடிச்சேன்னா, நீ சொன்னதுல ஏதாவது ஒரு விஷயம் பொய்யா இருந்தாலும், அதுக்கப்புறம் ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்க முடியாது.

என் பையன ஏமாத்தினதுக்கு நான் உன்ன சும்மா விடவே மாட்டேன்.

இதுதான் நான் உனக்கு குடுக்குற லாஸ்ட் chance.

ஒழுங்கு மரியாதையா நீ யாரு, எங்க இருந்து வந்திருக்கன்னு எல்லா உண்மையையும் சொல்லிடு.” என்று நடேசன் கேட்க,

அவரைப் பார்த்து பெருமூச்சு விட்ட பிரியா “இவர் சொல்ற மாதிரி என்ன பத்தி ஈஸியா இவரால ஒரே நாள்ல எல்லாத்தையும் கண்டுபிடிக்க முடியும்.

இசையோட அப்பா இவ்வளவு பவர்ஃபுல்லான பொலிட்டீசியனா இருப்பாருன்னு தெரிஞ்சிருந்தா,

நான் இங்க ஸ்டே பண்ண அவன்கிட்ட ஓகே சொல்லி இருக்கவே மாட்டேன்.

ஆனா இப்ப அத பத்தி எல்லாம் யோசிச்சு என்ன பண்றது? எல்லாம் நம்ம கையை மீறி போயிடுச்சு.

இப்போ நான் என்ன பண்ணியும் இவர்கிட்ட இருந்து என்னால உண்மையை மறைக்க முடியாது.

ஒருவேளை இவர் சொல்ற மாதிரி இவரா என்ன பத்தி கண்டுபிடிச்சாருன்னா,

கண்டிப்பா இவர் என்ன தேடுறது அந்த ஃபேமிலில இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சிரும்.

அப்புறம் அவங்க இவரை brain wash பண்ணி எனக்கு எதிரா திருப்பி விட்டுட்டாங்கனா, என்னையும் ராகுலையும் கடவுளே நினைச்சாலும் காப்பாத்த முடியாம போயிடும்.

இவர்கிட்ட இப்ப சரண்டர் ஆகி எல்லா உண்மையும் சொல்றத விட்டா வேற வழியில்லை.” என்று நினைத்து,

“ஓகே சார் எனக்கு புரியுது. உங்ககிட்ட நான் எதையும் மறைக்கிறது வேஸ்ட் தான்.

நீங்க நெனச்சா இப்போ என்னையும் என் தம்பியையும் என்ன வேணாலும் பண்ண முடியும்.

பட் உங்கள பார்த்தா ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுது.

உங்ககிட்ட இருக்கிற நல்ல குணம் தான் இசை கிட்டயும் வந்திருக்கும்ன்னு நான் நம்புகிறேன்.

நான் எதுக்காக இங்க வந்தேன்னு ஆல்ரெடி இசை கிட்ட சொல்லிட்டேன்.

ஆனா முழுசா என் ஃபேமிலிய பத்தி நான் அவர்கிட்ட கூட சொல்லல.

பட் இப்ப உங்க ரெண்டு பேரையும் நம்பரத விட்டா எனக்கு வேற வழியில்லை.

எல்லா உண்மையும் தெரிஞ்சதுக்கு அப்புறம், கண்டிப்பா நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு.‌

என் ஹேண்ட்பேக்ல ‌ என் ஃபேமிலி ஃபோட்டோ இருக்கு. வெயிட் பண்ணுங்க!

நான் போய் எடுத்துட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றாள்.‌

‌ அவள் திரும்பி வரும்போது அவள் கையில் ஒரு சிறிய ஃபோட்டோ frame இருந்தது.

அதை அவள் நடேசனிடம் கொடுக்க, அந்த ஃபோட்டோவில் இருந்த பிரியாவின், அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி முதலானவர்களை குறுகுறுவென்று பார்த்தார் அவர்.

அவர்கள் அனைவரின் முகமும் கொஞ்சம் ஒரே போல இருந்தது. அதைப் பார்த்தால் கண்டிப்பாக அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று சுலபமாக சொல்லிவிடலாம்.

இருப்பினும் அதை உறுதி செய்து கொள்வதற்காக அந்த ஃபோட்டோவை இசையிடம் காட்டிய நடேசன்,

“நீதான் ஹாஸ்பிடலுக்கு போய் இந்த பொண்ணோட அம்மாவை பார்த்ததா சொன்னியே..

அந்த அம்மா இந்த ஃபோட்டோல இருக்காங்களான்னு பாரு.” என்று சொல்ல,

அதை வாங்கி உற்றுப் பார்த்த இசையின் முகம் ஆச்சரியத்தில் விரிந்தது.‌

“இவங்க தான்ப்பா ரேணுகா ஆன்ட்டி! பிரியாவோட அம்மா.‌

ராகுல் சொன்ன மாதிரி முன்னாடி அவங்க அம்மா இவங்க அப்பா கூட இருக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்திருக்காங்க போல!

இவ்ளோ வயசுலையும் அந்த டைம்ல பார்க்கவே ரொம்ப அழகா இருந்திருக்காங்க.

பாவம் இப்ப அவங்க ஹஸ்பண்ட் இறந்துப்போன சோகத்தை தாங்க முடியாம ஆளே ரொம்ப வயசானவங்க மாதிரி ஆயிட்டாங்க.

எனக்கு அவங்களை பத்தி நினைச்சாலே கஷ்டமா இருக்கு.

நல்லா வாழ்ந்த குடும்பம். ஒரே நாள்ல எல்லாம் தலைகீழா மாறிடுச்சு.” என்று இசை சொல்ல, உடனே பிரியாவின் முகம் சோகத்தை தத்தெடுத்துக் கொண்டது.

யாழினியை எப்போதும் வெறுக்கும் நடேசனுக்கு என்னவோ இந்த பிரியாவை பார்த்தவுடன் அவள் மீது ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது.

அவரது இத்தனை வருடகால அனுபவத்தில், ஒருவரை பார்க்கும்போது அவர்களைப்பற்றி எடை போட்டு தெரிந்துகொள்ளும் அறிவு அவருக்கு இருந்தது.

‌ யாழினி எப்போதும் தன்னை ஒரு அப்பாவியை போன்றும், பயந்த சுபாவம் கொண்டவளை போலவும் வெளியில் காட்டிக் கொள்வாள்.

ஆனால் பிரியாவிடம் அவருக்கு தெரிந்ததெல்லாம் தைரியமும், தன்னம்பிக்கையும் மட்டுமே!

யாழினியை போன்றவர்களுக்கு ஆளுமை நிறைந்தவர்களிடம் மட்டுமே காணப்படும் அது மாதிரியான குணங்கள் இருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்த நடேசன் பிரியாவை பற்றி மேலும் தெரிந்துக்‌ கொள்ள நினைத்து மீண்டும் இசையிடம் இருந்து அந்த ஃபோட்டோவை வாங்கி பார்த்தார்.

அதில் இருக்கும் குடும்பத்தை அவருக்கு எங்கேயோ பார்த்ததைப்போல ஒரு உணர்வு தோன்ற,

அந்த ஃபோட்டோவில் இருந்த பிரியாவின் பாட்டி ராணியை அடையாளம் கண்டு கொண்ட நடேசன்,

“இவங்க ராணியம்மா தானே! நீ இவங்களோட பேத்தியா?” என்று கேட்டுவிட்டு அதிர்ச்சியுடன் பிரியாவின் முகத்தை பார்த்தார்.

அந்த பாட்டியின் முகத்தோடு அவள் முகம் ஓரளவிற்கு ஒன்றிப்போய் இருந்தது.

அந்த ஃபோட்டோவில் இருந்த ராகுலையும், வரும்போது அவர் பிரியாவுடன் இருந்த இளைஞனையும் ஒப்பிட்டு பார்த்து உண்மையில் அவன் இவளுடைய தம்பியாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவிற்கு வந்த நடேசன்,

“நான் உன்னை தானே கேட்கிறேன் சொல்லு ப்ரியா..

நீ நிஜமாகவே ராணி அம்மாவோட பேத்தியா? எப்படி நீ அவங்கள மாதிரியே இருக்க?” என்று கேட்க,

தானும் மிகுந்த அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்த ப்ரியா “உங்களுக்கு எங்க பாட்டிய தெரியுமா சார்? அவங்க பேரு ராணி தான்.

உண்மைய சொல்லனும்னா, எங்க குடும்பத்துல பிறக்குற எல்லா பொண்ணுங்களுக்கும் நாங்க ராணின்ற பெயரை சேர்த்து வைப்போம்.‌

எங்க அம்மா பேரு ரேணுகா ராணி. என் பேரு பிரியா ராணி.‌

இது எல்லாமே எங்களுக்கு எங்க பாட்டி மேல ‌ இருக்கிற மரியாதையை வெளிப்படுத்துவதற்காக நாங்க செய்கிற விஷயம்.

ஆனா அவங்க இப்ப உயிரோட இல்ல.” என்றாள்.

“ஆமா அவங்க இறந்துட்டாங்கன்னு எனக்கு தெரியும்.‌

அவங்களுக்கு இறுதி மரியாதை செலுத்துறதுக்கு நான் குயின் பேலசுக்கு வந்தேன்.” என்ற நடேசன் பிரியாவின் ரைட் ஹேண்டை இழுத்து பார்த்தார்.‌

அவளது கை மணிக்கட்டில் ராணி என்று தமிழில் எழுதப்பட்டு அதற்கு மேலே கிரீடம் போன்ற டாட்டூ போடப்பட்டிருந்தது.‌

அதைப் பார்த்த நடேசனுக்கு இதே மாதிரியான டாட்டூவை ராணி அம்மாவின் கையில் பார்த்ததும்,

தன் குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த டாட்டூவை போட்டிருப்பார்கள் இதை நாங்கள் எங்கள் குடும்பத்தின் பெருமையாகவும், அடையாளமாகவும் கருதுகிறோம் என்று ராணியம்மா சொன்னதும் இப்போது அவருக்கு ஞாபகம் வந்தது.

கூடவே தன்னுடைய பேத்தி பிரியாவை பற்றியும் ஓரிரு வார்த்தைகள் அவளுடைய பாட்டி இவரிடம் சொன்னதும் அவருக்கு ஞாபகம் வர,

தன் கண்களை நம்ப முடியாமல் பிரியாவை பார்த்த நடேசன் “நீ.. நீதான் அந்த பிரியாவா?

அப்ப நீதான் குயின் groups of companiesஓட அடுத்த வாரிசா?” என்று குரல் தழுதழுக்க கேட்டார்.

அவருக்கு தன் குடும்பத்தைப் பற்றி தெரிந்திருக்கிறது என்று உணர்ந்த பிரியாவிற்கு அவளுக்கு நடந்த அநியாயத்தை பற்றி எல்லாம் ஞாபகம் வர,

கலங்கிய கண்களுடன் ஆமாம் என்று தலையாட்டினாள்.

- தொடரும்...
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-18
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.