சனந்தா, இரவு விக்ரம் கோபத்தில் பேசியதால் மிகவும் வருத்தத்துடன் இருந்தாள். அதனால், காலையில் சீக்கிரமாகவே எழுந்து அவளுக்கு உணவு தயார் செய்து, அதை கொண்டு போய் வள்ளியிடம் கொடுத்துவிட்டு சிறிது நேரம் கோயிலில் இருந்து அதற்கு பின் பிள்ளைகளுக்கு பாடம் எடுப்பதாக கூறி, ஒரு முறை வழியையும் உறுதி செய்து கொண்டு புறப்பட்டாள்.
சனந்தா, கோயிலுக்கு செல்ல அங்கே பாட்டி அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்து அவர் அருகில் சென்று அமர்ந்து கொண்டு, “குட் மார்னிங் பாட்டி… என்ன காலையிலேயே வந்து இருக்கீங்க” என்று சனந்தா கேட்க, பாட்டி புன்னகையுடன், “என்னமோ எனக்கு இன்னிக்கு நீ இங்க வருவேன்னு தோணுச்சு… அதான் வந்தேன்” என்று பாட்டி கூறினார்.
“என்ன சொல்றீங்க பாட்டி…. எப்படி தெரியும் உங்களுக்கு… சும்மா என்னை பார்த்ததும் எனக்காக வந்தேன்னு சொல்லுறீங்களா?” என்று சனந்தா கேட்க, “அதெல்லாம் இருக்கட்டும் என்ன இன்னிக்கு கோயிலுக்கு எல்லாம் வந்திருக்க… ஏதாவது பிரச்சனையா?” என்று பாட்டி கேட்க, சனந்தா அவரை ஆச்சிரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உனக்கு சொல்ல விருப்பம் இருந்தா சொல்லலாம், இல்லன்னா பரவாயில்ல” என்று பாட்டி பேசவும, “சொல்ல விருப்பம் இருக்கு இல்ல அதெல்லாம் இல்ல பாட்டி…. என்ன நடக்குதுன்னு நிறைய புரியாம இருக்கு…. அந்த குழப்பம் ஒரு பக்கம் இருக்குன்னா இன்னொரு பக்கம் ஏன் எதுக்குனே தெரியல ஒருத்தரோட கோபத்துக்கு நான் ஆளாகிட்டே இருக்கேன்…. அந்த கோபத்துக்கான காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கறதை விட எனக்கு அந்த கோபத்த பார்க்கும் போதெல்லாம் என்னையே அறியாமலேயே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சனந்தா கூறினாள்.
“அந்த கோபம் அதிகரிச்சிட்டும் இருக்கும், குறையும், திடீர்னு அன்பு காட்டும், அந்த மாதிரி என்ன வேணா பண்ணும்…. அதே போல உன்னை சுத்தி நடக்குற விஷயங்கள் இந்த குழப்பம் இது எல்லாமே தீரும்…. உன்னை இங்க எல்லோரும் தூக்கி வெச்சி கொண்டாடுவாங்க…. கீழேயும் தூக்கிப் போடுவாங்க….. இதெல்லாம் இயல்பா நடக்கும்…. ஆனா, இது எல்லாத்துக்கும் சேர்ந்து ஒரு நாள் உண்மை வெளியில வரும்…. உன்னோட குழப்பம் தீரும், அந்த கோபமும் குறைஞ்சிடும்…. எல்லாமே சரியாகிடும், கவலைப்படாதே!!!” என்று பாட்டி கூறினார்.
சனந்தா புன்னகைத்து, “நீங்க சொன்னதுல எனக்கு பாதி புரியுது பாதி புரியல…. இருந்தாலும் உங்க கிட்ட பேசும் போது எனக்கு மனசு நிம்மதியா இருக்கு” என்று சனந்தா கூற, “நடக்கும் போது புரியும்” என்று பாட்டி கூறினார்.
“ஆமா, உங்க பேர் என்ன பாட்டி” என்று சனந்தா கேட்க, திலோத்தமா!! என்று பாட்டி கூறினார். “பார்ரா!!! பேர் ரொம்ப அழகா இருக்கே….. அப்புறம் ஏன் உங்களை வெறும் பாட்டி பாட்டின்னு மட்டும் கூப்பிடுறாங்க இங்கே எல்லாருமே…. அதுக்கு அழகா திலோ பாட்டின்னு கூப்பிடலாம்ல” என்று சனந்தா கூற, “உனக்கு எப்படி விருப்பமோ அப்படி கூப்பிடு” என்று பாட்டி கூறி, சிறிது நேரம் சனந்தாவுடன் நேரத்தை செலவழித்தி விட்டு சென்றார்.
“இந்த பாட்டி இந்த வயசுலயும் ஏதோ ஒரு சின்ன சின்ன வேலை பார்த்துட்டு அவங்க தனியா எவ்ளோ தைரியமா இருக்காங்க…. எனக்கு பாரேன் சின்ன சின்ன விஷயம் வந்தாலே மனசு ரொம்ப சோர்வா ஆகிறுது…. எல்லாத்தையும் தாண்டி நானும் அந்த பாட்டி மாதிரி தைரியமா இருக்கணும்” என்று சனந்தா அவளுக்குள் கூறிக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் கிராமத்தில் இருக்கும் சிறுவர்கள் வர ஆரம்பித்தனர். நான்கு குழந்தைகள் மட்டும் சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் வந்தனர். பின், மூன்று குழந்தைகள் ஏதோ வர வேண்டுமே என்பது போல் அவர்களது பெற்றோர்கள் அழைத்து வந்து விட்டனர். மீதி மூன்று குழந்தைகளை ஆரவாரத்துடன் அவர்களின் பெற்றோர் அழைத்து வந்து சேர்ந்தனர்.
அவர்களை பார்க்கவும் சனந்தாவிற்கு ஒரு பக்கம் பயமும் மற்றொரு பக்கம் குழந்தைகளே எப்படி கையாளுவது என்றும் யோசித்துக் கொண்டு இருந்தாள். உற்சாகத்துடன் வந்த குழந்தைகள் நால்வரும் அமைதியாக அமர்ந்து கொண்டு இருக்க, மற்ற மூன்று குழந்தைகள் விதியே என்று அமர்ந்திருக்க, மீதி மூன்று குழந்தைகள் ஓடி ஆடி இடத்தை கலாட்டா செய்து கொண்டு இருந்தனர்.
முதலில் சனந்தா அவளை அறிமுகப்படுத்தி கொண்டாள். அனைவரிடமும் அவளை சனா அக்கா என்றே அழைக்குமாறு கூறினாள். சிறிது நேரத்தில் அவர்களை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர பல யுக்திகளை கையாண்டும் அனைத்தும் தோற்று தான் போனது… என்ன செய்யலாம் என்று ஏதோ யோசனையில் அவளது கை அங்கே இருக்கும் ஒரு மரப்பட்டையில் கிழித்துக் கொண்டு ரத்தம் வரவும் அனைவரும் அமைதியாக அமர்ந்து கொண்டனர்.
அங்கே ஒரு சிறுமி வந்து, “எங்களுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ண தெரியும் நாங்க வேணா உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா??” என்று கேட்க, சனந்தாவும், “ஓகே!!! வாங்க பண்ணுங்க” என்று அவளது கையை கொடுக்க, குழந்தைகளுக்கு தெரிந்தது போல் காயத்தை சுத்தம் செய்து கட்டு கட்டி விட்டனர்.
சனந்தாவிற்கு ஒரு யோசனை தோன்றவும், “இன்னிக்கு நம்ம எல்லாரும் என்ன பண்ணலாம்ன்னா இப்ப எனக்கு இந்த மாதிரி காயம் வந்தப்ப நீங்க எல்லாம் எப்படி சுத்தம் பண்ணீங்க…. அதே மாதிரி எனக்கு நீங்க எல்லாரும் சேர்ந்து ஒரு டிராமா ஒண்ணு பண்ணனும் இப்ப…. நீங்க எல்லாரும் ஒரு கடைக்கு போறீங்க சரியா…. கடை அக்கா இல்ல கடை அண்ணாவா யார் நடிக்க போறீங்க?” என்று சனந்தா கேட்க, இரு குழந்தைகள் நான் நான்!!! என்று வந்தனர்.
ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு கடை வெச்சிருக்கீங்க… நீங்க ஒரு பூக்கடை வெச்சிருக்கீங்க நீங்க ஒரு காய்கறி கடை வெச்சிருக்கீங்க சரியா…. மீதி இருக்கிறவங்க எல்லாரும் அவங்க கடைக்கு போய் பொருட்கள் வாங்குற ஆட்கள் நீங்க…. இப்போ திடீர்னு அந்த இடத்துல ஒரு வயசான ஒருத்தர் வராரு, அப்போ அவருக்கு கையிலையே இல்ல கால்லையோ காயம் ஏற்ப்பட்டா என்ன பண்ணுவீங்க??? இல்ல திடீர்னு கீழ விழுந்து கை, கால் எல்லாம் கீரிட்டு ரத்தம் வந்துச்சுன்னா அப்ப என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு செஞ்சு காட்டுறீங்களா??” என்று சனந்தா கேட்டாள்.
அனைவரும் உற்சாகத்துடன் செய்கிறோம் செய்கிறோம்!! என்று கத்தினர்., “சரி அப்போ இங்க வயசானவரா யார் நடிக்க போறது?” என்று சனந்தா கேட்க, “அய்யோ தாத்தாவா எல்லாம் நாங்க நடிக்க முடியாது அக்கா” என்று ஒரு சிறுவன் கூறவும், “அப்படி யாரு சொன்னா…. நடிக்கிறது நம்ம யாரு வேணாலும் நடிக்கலாம்…. நீங்க முயற்சி பண்ணாமலேயே முடியாதுன்னு எப்படி சொல்ல முடியும்?” என்று சனந்தா கேட்க, “ஆமால… சரி அப்ப நானே நடிக்கிறேன் அக்கா” என்று ஒரு சிறுவன் முன் வந்தான்.
“சூப்பர் இப்போ இந்த பொண்ணு, பூக்கடை, அந்த பையன் காய்கறி கடை, நீங்க எல்லாரும் வந்து வரிசையா உங்களுக்கு என்னென்ன வேணும்னு கேட்டு வாங்கிட்டு போகணும்” என்று சனந்தா கூறவும், அதன்படி குழந்தைகள் செய்தனர்.
சிறிது கலாட்டாவும் நகைச்சுவையும் கலந்து செய்ய சனந்தா அவர்களை ரசித்து கொண்டிருந்தாள். “இங்க பாரு ஒரு பெரியவர் வராரு அவருக்கு வழி விடுங்க” என்று ஒருவன் கூற, “அவரால ரொம்ப நேரம் நிக்க முடியாது போல இருக்கே” என்று மற்றொறுவன் கேலி செய்ய, “அப்ப அவர் எதுக்கு மார்க்கெட்டுக்கு வரணும் என்று மற்றொருவன் கேட்கவும் அனைவரும் சிரித்து விட்டனர்.
“என்ன தான் இருந்தாலும் யார் உதவியும் இல்லாம தாத்தா வந்து அவருக்கு தேவையானத வாங்கிட்டு போறாருல அப்ப நம்மளால என்ன உதவி பண்ண முடியுமோ அத பண்ணனும்… இப்படி கேலி பேச கூடாது சரியா” என்று சனந்தா கூற, அனைவரும் சரிங்க அக்கா என்றனர்.
இப்படி கலகலப்பாக சென்று கொண்டு இருந்த போது பெரியவர் போல் நடித்துக் கொண்டிருக்கும் சிறுவன், “அக்கா என் கையில ரெட் கலர் ஸ்கெட்ச்ல ரத்தம் மாதிரி பண்ணுங்க அப்ப தானே அது பார்க்க நல்லா இருக்கும்” என்று கேட்க, “ஸ்கெட்ச் எல்லாம் வேண்டாம் என்கிட்ட பெயிண்ட் இருக்கு… உன் கையில உண்மையிலேயே ரத்தம் வர மாதிரி நான் அந்த பெயிண்ட்ட கைல ஊத்தி விடறேன்…. ரத்தம் சொட்டுற மாதிரி செய்யலாம்” என்று சனந்தா கூறி, அச்சிறுவன் கையில் சிகப்பு பெயிண்ட்டை ஊற்றினாள். அச்சிறுவன் கீழே விழுவது போல் நடித்து கொண்டே கையில் பெயிண்ட் சொட்டவும் விக்ரம் ஓடி வரவும் சரியாக இருந்தது.
“இங்க பாரு இந்த குழந்தைக்கு ரத்தமா போய்கிட்டு இருக்கு…. நின்னு சிரிச்சிட்டு இருக்க…. கொஞ்சம் கூட அறிவே இல்லையா உனக்கு… இப்படித் தான் பண்ணுவியா…. யாரு செத்தாலும் பரவாயில்லன்னு நீ நின்னுட்டு சிரிச்சிட்டே இருப்பியா…..ச்சே… மச்சான்!! மச்சான்!!! நீ அபிக்கு ஃபோன் பண்ணு… அவன சீக்கிரம் வர சொல்லு” என்று விக்ரம் கத்தவும், சரவணனும் என்ன செய்வது என்று தெரியாமல் முதலில் அபிலாஷுக்கு ஃபோன் செய்து வருமாறு கூறினான்.
சனந்தா குறுக்கிட்டு, “என்ன ஆச்சுன்னு…” என்று பேசுவதற்குள், “உனக்கு இது என்ன புதுசா… உன்னால ஒரு ஆள ஈஸியா கொல்ல கூட முடியும்…” என்று விக்ரம் பேசுவதற்குள் சரவணன் வந்து விக்ரம் வாயை மூடினான். “சாரி சனா, அவன் வேற ஏதோ யோசனைல இருக்கான்…. அதான் என்ன என்னவோ பேசுறேன் அவன்” என்று சரவணன் கூறவும், சனந்தா கண்கலங்கி நின்றாள்.
“ஐயோ அண்ணா!!! நாங்க இங்க எல்லாரும் டிராமா விளையாடிட்டு இருக்கோம்… இப்ப நீங்க தான் வந்து கெடுத்து விட்டீங்க… இங்க பாருங்க அவன் தான் இப்போ தாத்தா… கீழ விழுந்துட்டான் கைல ரத்தம் வந்திருக்கு…. இப்ப அதையெல்லாம் தான் நாங்க கிளீன் பண்ணி ஃபர்ஸ்ட் எயிட் பண்ண போறோம்…. நீங்க இப்போ உள்ள வந்து எல்லாம் பிளானையும் சொதப்பிட்டீங்க…. உண்மையிலேயே ரத்தம் வந்தது அக்காக்கு தான்… அங்க பாருங்க அவங்களுக்கு தான் நாங்க ஃபர்ஸ்ட் எயிட் பண்ணிருக்கோம்…. நீங்க என்னடான்னா வந்து அக்காவை திட்டிட்டு இருக்கீங்க” என்று ஒரு சிறுமி கூறினாள்.
விக்ரம், கண் கலங்கி நின்று கொண்டிருக்கும் சனந்தாவை பார்த்தான். “இதுக்கு தான் என்ன நடக்குதுன்னு முதல்ல கேட்கணும்… கேட்காம கத்தக்கூடாது” என்று சரவணன் பல்லை கடித்துக் கொண்ட மெல்லிய குரலில் விக்ரம் காதில் கூறினான்.
இவ்வளவு நேரம் இருந்த கோபம் அனைத்தும் அவள் கையில் கட்டு கட்டி இருப்பதை பார்த்ததும் உடைந்து போனது. “இங்க பாருங்க சரவணன் அண்ணா, இவங்க எல்லாம் ஸ்கூலுக்கு வரவே எவ்ளோ அடம் பிடிப்பாங்க… அவங்க எல்லாரும் கூட இன்னிக்கு வந்து சனா அக்கா கூட சேர்ந்து நாங்க இத ஜாலியா பண்ணிட்டு இருந்தோம்…. நீங்க வந்து இப்படி கெடுத்துட்டீங்க” என்று மற்றொரு சிறுவன் கூறினான்.
சனந்தா தன்னை சமன்படுத்திக் கொண்டு, “சரி வாங்க உட்காருங்க நான் உங்களுக்கு இன்னோன்னு சொல்லிக் குடுக்கிறேன்” என்று கூறி, சரவணனை பார்த்து, “நீங்க கொஞ்சம் ஓரமா இருந்தீங்கன்னா நான் கிளாஸ் எடுக்க வசதியா இருக்கும்” என்று கண்களை துடைத்துக் கொண்டு கூறினாள் சனந்தா.
சரவணன் விக்ரமை இழுத்துக் கொண்டு ஒரு ஓரமாக சென்று அமர்ந்து கொண்டனர். சனந்தா அனைவருக்கும் ஒரு ஏ ஃபோர் பேப்பர் மற்றும் பெயிண்ட் டப்பாவை கொடுத்து அனைவரையும் அவர்களுக்கு பிடித்த ஓவியத்தை வரையுமாறு கூறினாள்.
அனைவரும் வரைய ஆரம்பித்த பிறகு அவர்களுக்கு சிறு சிறு அறிவுரைகளையும் கொடுத்து வழிகாட்டினாள்.
“ஏன்டா இப்படி பண்ற நீ” என்று சரவணன் ஆதங்கத்துடன் கேட்க, “எனக்கு தெரியல மச்சான்…. சின்ன பையன் கைல ரத்தம் வருது அவளும் சிரிச்சுட்டு இருக்கான்ன உடனே…. எனக்கு ஆக்சிடென்ட், அபர்ணா தான் ஞாபகம் வந்துது…. அதனால அப்படி பேசிட்டேன்டா” என்று விக்ரம் கூறவும், “நீ என்ன வேணாலும் உன் பக்கம் நியாயம் சொல்லலாம் மச்சான்…. ஆனா, என்ன ஏதுன்னு கூட விசாரிக்காம உன் இஷ்டத்துக்கு கத்துற…. ஆனா ஒன்னு, நீ எவ்வளவு கோபப்பட்டாலும் அவளும் ஏன் அமைதியா இருக்கான்னே எனக்கு தெரியல…. அமைதியா இருக்கான்றதாலயே நீ எல்லா வாட்டியும் கத்துறியோன்னு தோணுது… எனக்கு ஒன்னுமே புரியல மச்சான்” என்று சரவணன் கூறினான்.
விக்ரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அபிலாஷ் பதற்றத்துடன் வந்து சேர்ந்தான். “டேய் யாருக்கு என்ன ஆச்சு??” என்று அபிலாஷ் பதற்றமாக கேட்க, சரவணன் அவனை இழித்து, “வா என் பக்கத்துல உட்காரு… யாருக்கும் ஒன்னும் ஆகல… இவன் கத்தினான்னு நானும் உனக்கு ஃபோன் பண்ணேன்… யாருக்கு எதுவும் ஆகல, பசங்க எல்லாரும் சேர்ந்து ஏதோ டிராமா மாறி பண்ணிட்டு இருந்தாங்க… கையில பெயிண்ட் உத்தி இருந்ததை பார்த்து ரத்தம்னு நினைச்சு இவனும் பதற்றத்தில கத்தினான் நானும் உனக்கு ஃபோன் பண்ணிட்டேன் அதான்.., ஒன்னும் இல்ல வந்து உட்காரு” என்று கூறினான் சரவணன்.
“அட லூசு பசங்களா…. நீங்க சொன்னீங்கன்னு நம்பி நானும் வந்தேன் பாரு என்னை சொல்லணும்… சரி அப்ப நான் கிளம்புறேன்” என்று அபிலாஷ் கூறவும், “எங்க போற வெயிட் பண்ணு… சனாவோட கைல அடிபட்டு இருக்கு அது என்னன்னு பார்த்துட்டு போ” என்று சரவணன் கூறவும், அபிலாஷ் அமைதியாக அவர்களுடன் அமர்ந்துக் கொண்டான்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 18
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.