CHAPTER-18

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
ச‌ந்ரா, "இவ‌ந்தா என்னோட‌ ஆதி." என்று கூறிய‌ப‌டியே அவ‌னை க‌ட‌ந்து சென்றாள்.

அப்போது அவ‌ளை விய‌ப்புட‌ன் பார்த்துக்கொண்டிருந்த‌ அபிக்கும் அதே உண‌ர்வுதான். அவ‌ள் த‌ன்னை க‌ட‌ந்து செல்லும் நொடி ஏனோ இத‌ய‌த்தின் வேக‌ம் அதிக‌ரிப்ப‌தாக‌ உண‌ர்ந்தான்.

இங்கு வீடு வ‌ந்த‌டைந்த‌ ச‌ந்ராவும் அர்ஜுன் நேராக‌ த‌ங்க‌ள் அறை நோக்கி செல்ல‌, த‌ன் அறைக்குள் நுழையும் முன் ச‌ந்ரா ஏதோ யோச‌னையில் இருப்ப‌தை க‌வ‌னித்த‌ அர்ஜுன், "ச‌ந்ரா!" என்று அழைக்க‌,

அவ‌ளும் திடுக்கிட்டு, "ஹா?" என்று அவ‌னை பார்க்க‌,

அத‌ற்கு அர்ஜுன், "என்ன‌ ஆச்சு? ஏ எதோ யோச‌னையில‌யே இருக்க‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா, "இல்ல‌ அதெல்லா ஒன்னும் இல்ல‌ அர்ஜுன்." என்றாள்.

ஆனாலும் அவ‌ள் முக‌த்தில் உள்ள‌ குழ‌ப்ப‌த்தை பார்த்த‌வ‌ன், அவ‌ளை நெருங்கி அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளை ப‌ற்ற, அதில் திடுக்கிட்ட‌வ‌ள் கேள்வியுட‌ன் அவ‌னை பார்க்க‌, அத‌ற்கு அர்ஜுன், "இன்னும் அத‌ நென‌ச்சு டென்ஷ‌னா இருக்கியா?" என்று கேட்க‌, அத‌ற்கு அவ‌ள் இல்லை என்று த‌லையாட்ட‌, ஆனாலும் அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளை தாங்கிய‌வ‌ன், "ப்ளீஸ் ச‌ந்ரா. எத‌ ப‌த்தியும் யோசிச்சு டென்ஷ‌ன் ஆகாத‌. உங்க‌ அப்பாவுக்கு குடுத்த‌ ச‌த்திய‌த்த‌ நாம‌ க‌ண்டிப்பா காப்பாத்துவோம். அதுல‌ எந்த‌ மாற்றமும் இல்ல‌." என்று கூற‌, அதை கேட்ட‌வ‌ளுக்கோ ப‌கீரென்றுதான் இருந்த‌து.

மேலும் அர்ஜுன், "அதோட‌ இன்னிக்குதா அதுக்கான‌ வேலைய‌ ஆர‌ம்பிச்சுட்டோமில்ல‌? சோ ரிலேக்ஸ். ந‌ம்ப‌ க‌ல்யாண‌த்துல‌ எந்த‌ பிர‌ச்ச‌னையும் வ‌ராது. நா வ‌ர‌வும் விட‌மாட்டேன்." என்றான்.

அதை கேட்ட‌ ச‌ந்ரா ம‌ன‌திற்குள், "பிர‌ச்ச‌னையே நாதா அர்ஜுன். எத்த‌ன‌ ஜென்ம‌ம் எடுத்தாலும் நா உன‌க்கு சொந்த‌மாக‌வே மாட்டேன்." என்று கூறிக்கொண்டாள்.

அத‌ற்கு அர்ஜுன், "செரி நீ போய் ரூமுல‌ ரெஸ்ட் எடு. நா இன்னிக்கு ஆப்பிஸ் போலான்னு இருக்கேன். ஃப‌ர்ஸ்ட் டைம் என் அப்பாவோட‌ ஆப்பிஸ்கு எம்.டியா போக‌ போறேன், சோ ஐய‌ம் சோ ந‌ர்வஸ்." என்றான்.

அதை கேட்ட‌ ச‌ந்ரா எதுவும் கூறாம‌ல் மீண்டும் யோச‌னையில் ஆழ‌, தான் பார்த்த‌து த‌ன்னுடைய‌ ஆதிதானா என்று மீண்டும் யோசிக்க‌ ஆர‌ம்பித்தாள். அவ‌ள் யோச‌னையை பார்த்த‌ அர்ஜுன், "ஹேய் ச‌ந்ரா!" என்று அழைக்க‌, அவ‌ளும் திடுக்கிட்டு அவ‌னை பார்க்க‌, "என்ன‌ என‌க்கு ஒரு ஆல் தி பெஸ்ட் கூட‌ சொல்ல‌ மாட்டியா?" என்று கேட்க‌,

அத‌ற்கு அவ‌ளும் "இது ஒன்னுதா கொற‌ச்ச‌ல்." என்று எண்ணிய‌ப‌டி போலியான‌ புன்ன‌கையுட‌ன், "ஆல் தி வெரி பெஸ்ட் அர்ஜுன்." என்றாள்.

அதை கேட்டு புன்ன‌கைத்து ம‌கிழ்ந்த‌வ‌ன், "தேங்க் யூ சோ ம‌ச். செரி நீ போய் ரெஸ்ட் எடு. நா ஆப்பிஸ் கெள‌ம்புறேன்." என்று கூற‌,

அவ‌ளும், "ம்ம்" என்று கூறி த‌ன் அறைக்கு சென்றுவிட்டாள்.

பிற‌கு த‌ன் அறைக்குள் நுழைந்த‌ அர்ஜுன், த‌ன்னுடைய‌ முத‌ல் நாள் வேலைக்காக‌ த‌யாராகி ச‌ந்ராவிட‌ம் கூறிவிட்டு, த‌ன் த‌ந்தையுடைய‌ வி.கே க‌ன்ஸ்ட்ர‌க்ஷ‌ன் ஆப்பிஸ்க்கு சென்றான். உள்ளே நுழைந்த‌வ‌னுக்கு வ‌ர‌வேற்ப்பு ஏற்பாடுக‌ள் முத‌ல், வ‌ண‌க்க‌ங்க‌ள் வ‌ரை குறியில்லாம‌ல் இருந்த‌து. ஏனென்றால் அங்கு உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ந‌ன்கு தெரியும், லிங்கேஷ்வ‌ர‌ன் என்றுமே அர்ஜுனைதான் இங்கு முத‌லாளியாக்க‌ நினைத்திருந்தார் என்று.

இங்கு ச‌ந்ராவோ அதே யோச‌னையில் அம‌ர்ந்திருந்தாள். "நா பாத்த‌து நெஜ‌மாவே என்னோட‌ ஆதிதானா? அப்பிடின்னா என் ம‌ன‌சு சொல்ற‌து உண்ம‌தான்னா, நா திரும்ப‌ என் ஆதிய‌ எப்பிடி ச‌ந்திக்கிற‌து? எப்பிடியாவ‌து இந்த‌ அர்ஜுன்கிட்ட‌ இருந்து நா த‌ப்பிச்சாக‌ணும். ஆனா எப்பிடி? எங்க‌ போனாலும் இவ‌ன் என்ன‌ விட‌மாட்டான். வேற‌ எதாவ‌து பிளான் ப‌ண்ணிதா த‌ப்பிக்க‌ணும்." என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

அடுத்த‌ நாள் அர்ஜுன் அப்பிஸிற்கு செல்லும் முன்பு, ச‌ந்ரா அவ‌னிட‌ம் ஷாப்பிங் சென்று வ‌ருகிறேன் என்று கூற‌, அவ‌னும் திரும‌ண‌த்திற்கு ம‌ற்றும் அவ‌ளுக்கான‌ போதுமான‌ உடைக‌ளும் இங்கு இல்லாத‌தால் ச‌ரியென்று ச‌ம்ம‌தித்தான். ஆனால் அவ‌னும் அவ‌ளுட‌ன் செல்ல‌ முய‌ற்சிக்கும்போதுதான், முக்கிய‌மான‌ வேலை வ‌ந்துவிட‌, அவ‌னும் ஆப்பிஸ் செல்ல‌ வேண்டும் என்ற‌ க‌ட்டாய‌த்தில் இருந்தான்.

என‌வே ச‌ந்ராவை போக‌ வேண்டாம், நாம் நாளை போக‌லாம் என்று கூறியும், அவ‌ள் கேட்காம‌ல் வ‌ழ‌க்க‌ம்போல் அட‌ம்பிடிக்க‌, அத‌ற்கு மேல் த‌டுக்க‌ முடியாத‌ அர்ஜுனும் அரை ம‌ன‌துட‌ன் ச‌ரி என்று கூறி, ஜாக்கிர‌தையாக‌ சென்று வ‌ரும்ப‌டி வேண்டுகோள் விடுத்தான். அதோடு த‌ன்னுடைய‌ ட்ரைவ‌ரையும் அவ‌ளுட‌ன் ப‌துகாப்பிற்காக‌ அனுப்பி வைத்துவிட்டுதான் ஆப்பிஸிற்கே சென்றான் அர்ஜுன்.

ஆனால் அவ‌னுடைய‌ இந்த‌ அக்க‌றையும் அனுதாப‌மும்கூட‌ ச‌ந்ராவிற்கு எரிச்ச‌லைதான் கூட்டிய‌து. இவ‌னை ச‌மாளிக‌ எத்த‌னை த‌டைக‌ளை க‌ட‌க்க‌ வேண்டியிருக்கிற‌தோ என்று அலுத்துக்கொண்ட‌படி ட்ரைவ‌ருட‌ன் அங்கிருந்து புற‌ப்பட்டாள்.

பிற‌கு ம‌திய‌வேளை அள‌வில் அவ‌ளுடைய‌ அனைத்தும் ஷாப்பிங்கும் முடிந்திருக்க‌, அவ‌ளும் அவ‌னுட‌ன் வ‌ந்த‌ ட்ரைவ‌ரும் வீடு திரும்பும்போது, செல்லும் வ‌ழியில் திடீரென‌ அவ‌ளுடைய‌ கார் ரிப்பேர் ஆகி ந‌டுவ‌ழியில் நின்ற‌து.

அப்போது ட்ரைவ‌ர் இற‌ங்கி என்ன‌வென்று பார்த்துக்கொண்டிருக்க‌, வெகுநேர‌ம் சென்றுவிட்ட‌தால் ச‌ந்ரா காரில் இருந்து இற‌ங்கி, "என்ன‌ ஆச்சுண்னா? இன்னும் எவ்ளோ நேர‌ம் ஆகும்?" என்று கேட்க‌,

அத‌ற்கு அவ‌னோ, "பாத்தா பெரிய‌ பிராப்ள‌ம் மாதிரி தெரியுது. மெக்கேனிக் கிட்ட‌தாம்மா கொண்டு போக‌ணும்." என்று கூற‌,

அதை கேட்ட‌ அவ‌ளும், "செரி நா அர்ஜுனுக்கு கால் ப‌ண்ணி வ‌ர‌ சொல்றேன். நீங்க‌ என்ன‌ன்னு பாருங்க‌." என்று கூறி காருக்கு சென்று, த‌ன் மொபைலை எடுத்து அர்ஜுனுக்கு அழைத்தாள்.

ஆனால் அர்ஜுனோ இங்கு இன்வெஸ்ட‌ர்க‌ளுட‌ன் ஒரு முக்கிய‌ மீட்டிங்கில் இருந்த‌தால், அவ‌னுடைய‌ மொபைலும் சைல‌ன்ட்டில் இருக்க‌, அவ‌னால் அட்ட‌ன் செய்ய‌ முடிய‌வில்லை. இங்கு ச‌ந்ராவோ திரும்ப‌ திரும்ப‌ கால் செய்து பார்த்து சோர்வ‌டைந்து, "இவ‌னோட‌ அக்க‌றையெல்லாம் பேருக்கு ம‌ட்டுந்தா. ச்செ." என்று கூறி ஆட்டோ கிடைக்கிற‌தா என்று பார்த்துக்கொண்டிருக்க‌, ஒரு ஆட்டோவும் வ‌ராத‌தால் மேலும் க‌டுப்பான‌வ‌ள், "ஆட்டோவும் கெடைக்க‌லையா? சுத்த‌ம்." என்று ச‌லித்த‌ப‌டி கூறி பிற‌கு, "செரி லிஃப்ட் கேட்டு போய‌ரலாம். அதுதா ஒரே வ‌லி." என்று கூறி த‌ன் கையை நீட்டி லிப்ட் கேட்டாள்.

அப்போது ஒரு காரும் அவ‌ளுக்காக‌ நின்ற‌து. அதை பார்த்த‌ ச‌ந்ரா அந்த‌ காரின் அருகில் செல்ல‌, அந்த‌ காரின் ஓட்டுந‌ர் இருக்கையின் க‌ண்ணாடி கீழே இற‌ங்கிய‌து. அதை பார்த்த அடுத்த‌ நொடியே ச‌ந்ரா திகைத்து நின்றாள்.

அப்போது அவ‌ளை பார்த்து புன்ன‌கையுட‌ன் கை அசைத்த‌ அபி, "ஹாய் ! எப்பிடி இருக்கீங்க‌?" என்று ப‌ல‌ நாள் ப‌ழ‌கிய‌வ‌ன் போல‌ கேட்க‌,

அதை கேட்டு மேலும் விய‌ந்த‌ ச‌ந்ரா, "என்ன‌ உங்க‌ளுக்கு ஞாப‌க‌ம் இருக்கா?" என்று ஆச்ச‌ரிய‌த்துட‌ன் கேட்க‌,

அபி, "யா அன்னிக்கு கோவில்ல‌ ப‌த்த‌மே. செரி மொத‌ல்ல‌ வ‌ண்டில‌ ஏறுங்க‌ ப்ளீஸ்." என்று கூற‌,

ச‌ந்ரா, "ஓ தேங்க் யூ." என்று கூறி காரில் ஏறி அவ‌ன் அருகில் அம‌ர்ந்துக்கொண்டாள்.

அப்போது அபி, "இங்க‌ எங்க‌?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "நா ஷாப்பிங் வ‌ந்தேன், ப‌ட் வ‌ர்ற‌ வ‌ழியில‌ கார் ரிப்பேர் ஆயிரிச்சு." என்றாள்.

அபி, "ஓ ஒகே. செரி எங்க‌ போக‌ணுன்னு சொல்லுங்க‌. நானே உங்க‌ள‌ ட்ராப் ப‌ண்றேன்" என்றான்.

அதை கேட்ட‌ ச‌ந்ரா, "தேங்க் யூ சோ ம‌ச்." என்று கூறி த‌ன் வீட்டிற்கு செல்லும் வ‌ழியை அவ‌னிட‌ம் கூற, அவ‌னும் அத‌ன்ப‌டி காரை ஓட்டினான்.

பிற‌கு ச‌ந்ராவின் வீடு வ‌ந்துவிட‌, ச‌ந்ரா காரைவிட்டு இற‌ங்கி, "தேங்க் யூ சோ ம‌ச்." என்று புன்ன‌கையுட‌ன் கூற‌,

அத‌ற்கு ப‌தில் புன்ன‌கைவிடுத்த‌ அபி, "திரும்ப‌ எப்ப‌ மீட் ப‌ண்ண‌லாம்?" என்று கேட்க‌,

அதில் ச‌ற்று திடுக்கிட்ட‌வ‌ள் பிற‌கு புன்ன‌கையுட‌ன், "சீக்கிர‌மாவே." என்றாள்.

அதை கேட்ட‌ அவ‌னும் புன்ன‌கையை ம‌ட்டும் அளித்துவிட்டு காரை திருப்பிக்கொண்டு செல்ல‌, அதை பார்த்த‌ ச‌ந்ரா ம‌ன‌திற்குள், "நீ க‌ண்டிப்பா என்னோட‌ ஆதிதான்னு என் ம‌ன‌சு சொல்லுது. ஆனா அத‌ நா உன‌க்கு எப்பிடி புரிய‌ வெக்க‌ போறேன்?" என்று யோசித்த‌ப‌டி வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

இங்கு அர்ஜுன் மீட்டிங் முடிந்து த‌ன் மொபைலை எடுத்து பார்க்க‌, ச‌ந்ராவின் 5 மிஸ்டு கால்ஸ் வ‌ந்திருப்ப‌தை பார்த்து அதிர்ந்தான்.

அர்ஜுன், "ச‌ந்ராகிட்ட‌யிருந்து 5 மிஸ்டு கால்ஸா? அவ‌ எதாவ‌து பிர‌ச்ச‌னைல‌ இருக்காளா?" என்று ப‌த‌றி மீண்டும் அவ‌ளுக்கு கால் செய்ய‌, இம்முறை ச‌ந்ராவின் மொபைல் சார்ஜ் இல்லாம‌ல் சுவிட்ச்டு ஆப் ஆகியிருக்க‌, அதில் மேலும் ப‌த‌றிய‌ அர்ஜுன், ச‌ற்றும் தாம‌திக்காம‌ல் வேக‌மாக‌ அங்கிருந்து கிளம்பினான்.

அப்போது ஒரு எம்ப்லாயீ குறுக்க வந்து, "சார் இன்னைக்கு இன்னொரு மீட்டிங் இருக்கு." என்று கூற‌,

அர்ஜுன், "கேன்ச‌ல் எவ்விரிதிங்" என்று கூறி வேக‌மாக‌ கிள‌ம்பிவிட்டான். அதை பார்த்த‌ அந்த‌ எம்ப்லாயியோ த‌லையை சிரிந்த‌ப‌டி சென்றுவிட்டான்.

பிற‌கு அர்ஜுனின் கார் வீடு வ‌ந்த‌டைய‌, வேக‌மாக‌ வீடிற்குள் சென்ற‌வ‌ன், "ச‌ந்ரா! ச‌ந்ரா!" என்று க‌த்தி அழைக்க‌,

அவ‌ன் குர‌ல் கேட்டு ஹாலுக்கு வ‌ந்த‌ ச‌ந்ரா, "என்ன‌ அர்ஜுன், என்ன‌ ஆச்சு? ஏ டென்ஷ‌னா இருக்க‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு வேக‌மாக‌ அவ‌ள் அருகில் வ‌ந்து தோள் ம‌ற்றும் க‌ன்ன‌ங்க‌ளை தொட்டு பார்த்து, "நீ ந‌ல்லா இருக்க‌ல்ல‌?" என்று ப‌த‌ற்ற‌த்துட‌ன் கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா புரியாம‌ல், "என‌க்கு என்ன‌ ஆச்சு? நா ந‌ல்லாதா இருக்கேன். உன‌க்கு என்ன‌ ஆச்சு?" என்று கேட்க‌,

அர்ஜுன், "ஐயம் சோ சாரி. நா மீட்டிங்ல‌ இருந்த‌தால‌, போன் சைல‌ன்ட்டுல‌ இருந்துச்சு. அதா எடுக்க‌ முடிய‌ல‌. நீ எதுக்கு கால் பண்ண?" என்று கேட்க‌,

அத‌ற்கு மீண்டும் அவ‌ன் அக்க‌றையை எண்ணி உள்ளுக்குள் ச‌லித்துக்கொண்ட‌வ‌ள், பிற‌கு அவ‌னை பார்த்து, "கார் வ‌ர்ற‌ வ‌ழில‌ ரிப்பேர் ஆய் நின்னிருச்சு. ட்ரைவ‌ரும் மெக்கேனிக்க‌ கூப்புட‌ போற‌ன்னு சொன்னாரு. அதா உன‌க்கு கால் ப‌ண்ணேன்." என்றாள்.

அதை கேட்டு மேலும் ப‌த‌றிய‌ அர்ஜுன், "அப்பிடியா? சோ சாரி ச‌ந்ரா. செரி நீ எப்பிடி வீட்டுக்கு வ‌ந்த?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "லிப்ட் கேட்டு வ‌ந்தேன்." என்றாள்.

அதை கேட்டு அதிர்ச்சியுன், "லிப்டா? ஏ? ஆட்டோல‌ வ‌ந்திருக்க‌லால்ல‌?" என்று க‌ண்டிப்புட‌ன் கேட்க‌,

ச‌ந்ரா, "ஆட்டோ கெடைக்கல‌ அதா..." என்று த‌ய‌ங்கி கூற‌,

அர்ஜுன், "செரி ஓகே. நீ சேஃபா வ‌ந்துட்ட‌ல்ல‌ அது போதும். இனிமே இப்பிடி ஸ்ட்ரேஞ்ச‌ர்கிட்ட‌ லிப்ட் கேட்டு வ‌ராத‌. புரியுதா?" என்று கேட்க‌,

அத‌ற்கு அவ‌ள், "அப்பிடின்னா நீயும் என‌க்கு ஸ்ட்ரேஞ்ச‌ர்தா அர்ஜுன்." என்று எண்ணிக்கொண்ட‌வ‌ள், "ம்ம்" என்று அவ‌னிட‌ம் த‌லைய‌சைத்தாள்.

அர்ஜுன், "செரி நீ போய் ரெஸ்ட் எடு." என்று கூற‌,

அவ‌ளும் "ம்ம்" என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டாள்.

பிற‌கு அறைக்கு வ‌ந்து குழ‌ப்ப‌த்துட‌ன் அம‌ர்ந்த‌ அர்ஜுன், "நா ஏ அவளோட விஷயத்துல இவ்ளோ ரியேக்ட் ஆகுற? இது நா பாஸ்க்கு ப‌ண்ண‌ ச‌த்திய‌துனால‌ வ‌ந்த‌ பொறுப்பு உண‌ர்ச்சியா... இல்ல‌ இப்ப‌வே இவ‌ள‌ காத‌லிக்க‌ ஆர‌ம்பிச்சுட்ட‌னா?" என்று த‌ன‌க்குத்தானே கேட்டுக்கொண்டான் அர்ஜுன்.

அதே நேர‌ம் இங்கு குழ‌ப்ப‌த்தில் அம‌ர்ந்திருந்த‌ ச‌ந்ரா, "உதயா எவ்ளோ பெரிய‌ அய்யோக்கிய‌ன்னு என‌க்கு தெரியும். ப‌ட் இந்த‌ அர்ஜுன்கிட்ட‌ அவ‌னோட‌ எந்த‌ குண‌மும் தெரிய‌லையே. உத‌யாவுக்கு அப்பிடியே அப்போசிட்டுல‌ ந‌ட‌ந்துக்குறான். இதுக்கு என்ன‌ அர்த்த‌ம்?" என்று குழ‌ப்ப‌த்துட‌ன் யோசித்துக்கொண்டிருந்தாள்.

"ஆத்மா ஒன்றுதான் ஆனால் வ‌டிவ‌ம் மாறும். அதோடு க‌தையும் மாறும். அடுத்த‌ ஜென்ம‌த்தில் உன் காத‌ல் நிச்ச‌ய‌ம் நிறைவேறும். ஆனால், க‌தை மாறும். இது அந்த‌ ப‌ர‌ம‌சிவ‌னின் வாக்கு." என்ற‌ கோவில் காவ‌ல‌ரின் வார்த்தைக‌ள் நினைவிற்கு வ‌ர‌,

அதை உண‌ர்ந்த‌ ச‌ந்ரா, "அப்போ... இதெல்லா வெச்சு பாக்கும்போது, இந்த‌ ஜென்ம‌த்துல‌ எங்க‌ க‌த‌ மாற‌ போகுது. ஆனா எப்பிடி மாற‌ப்போகுது? அந்த‌ மாற்ற‌ம் எந்த‌ மாதிரி இருக்கும்? இதெல்லா எதுக்காக‌ ந‌ட‌க்குது? எதுக்காக‌ இந்த‌ மாற்ற‌ம்?" என்று ஆழ‌மாக‌ குழ‌ம்பி யோசித்த‌வ‌ள், "இதுக்கெல்லா ப‌தில் ஒரு எட‌த்துல‌தா கெடைக்கும்." என்று கூறி எழுந்த‌வ‌ள், "இத தெரிஞ்சுக்க நா திரும்ப‌ அந்த‌ சிவ‌ன் கோவிலுக்குதா போயாக‌னும்." என்று முடிவெடுத்தாள்.

முடிவெடுத்த‌ நொடியே அங்கிருந்து புற‌ப்ப‌ட்ட‌வ‌ள், யாரிட‌மும் கூறாம‌ல் அந்த‌ சிவ‌ன் கோவிலை நோக்கி புற‌ப்ப‌ட்டாள்.
பிற‌கு அங்கு கோவிலை சென்றடைந்த‌வ‌ள், அங்கு பிர‌மாண்ட‌ உருவாய் நிற்கும் சிவ‌னிட‌ம் த‌ன் கேள்விக‌ளை கேட்க‌ ஆர‌ம்பித்தாள்.

"ஈஷ்வ‌ரா! உங்க‌ வெளையாட்டுதா என்ன‌? க‌த‌ மாற‌ப்போகுதுன்னு போன‌ ஜென்ம‌த்துல‌ நீங்க‌ சொன்ன‌து என‌க்கு ஞாப‌க‌ம் இருக்கு. ஆனா அது எத‌னால‌ மாறுது? அது மாற‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌? அந்த மாற்றம் என்ன? என‌க்கு ப‌தில் சொல்லுங்க‌." என்று குழ‌ப்ப‌த்துட‌ன் ஆத‌ங்க‌மாக‌ கேட்க‌,

மேலும் அவ‌ரிடமிருந்து ப‌தில் வ‌ராத‌தால், "என்னோட‌ காத‌லுக்காக‌தான‌ நா ம‌றுஜென்ம‌ம் வேணுன்னு கேட்டேன். நீங்க‌ எதுக்காக‌ என் காத‌லோட‌ எதிரியையும் சேத்தே பொற‌க்க‌ வெச்சிருக்கீங்க‌? இப்ப‌ வ‌ரைக்கும் நா அவ‌ங்கூட‌வே இருக்குற‌ சூழ்நிலைய‌ எதுக்காக‌ உருவாக்கியிருக்கீங்க‌? போன‌ ஜென்ம‌த்துல‌ நீங்க‌ மாறும்னு சொன்ன‌ அந்த‌ க‌த‌தா என்ன‌? அது எதுக்காக‌ மாற‌ணும்? என‌க்கு ப‌தில் வேணும் ஈஷ்வ‌ரா." என்று ஆத‌ங்க‌மாக‌ க‌த்த‌,

"அமிர்த்தா!" என்ற‌ ஒரு குர‌ல் ஒலித்த‌து.

அது அமைதியான‌ அந்த‌ கோவிலின் அனைத்து மூலைக‌ளிலும் ஒலிக்க‌, அதை கேட்டு அதிர்ந்து திரும்பினாள் ச‌ந்ரா. திரும்பிய‌ அடுத்த‌ நொடியே அவ‌ள் அதிர்ந்து நிற்க‌,

"நீ கேக்குற‌ எல்லா கேள்விக்கும் என‌க்கு ப‌தில் தெரியும்." என்று கூறியப‌டி அவ‌ளை நோக்கி வ‌ந்தான் அபி.

- ஜென்ம‌ம் தொட‌ரும்....
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-18
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.